இன்றைய வெண்பா

16 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 17, 2025, 8:37:57 AMAug 17
to santhav...@googlegroups.com
.                    மலர்க்குளத்து மேதி!

கொல்லர்தம் சுத்தியலைக் கொண்டிரும்பின் மேலடிப்பர்
நல்லபொன் மேலடிக்க நாணுவர் - அல்லி
மலர்க்குளத்தில் பூக்கொய்வர் மாண்புடையோர்; மேதி,
கலக்குமே சேற்றினைக் கண்டு!

  17/08/2025                        — தில்லைவேந்தன்.
.
..

Mohanarangan V Srirangam

unread,
Aug 17, 2025, 10:48:19 AMAug 17
to santhav...@googlegroups.com
அருமை. இரும்பு, பொன் இவை இரண்டும் உலோகங்கள். இவற்றை ஒருபுடையாக்கி 
இவற்றிடை மதிப்பு கூடுதல் குறைதல் மற்றும் தன்மை புலப்படும் வண்ணம் உவமானம் 
ஆக்கப்படுகிறது. அடுத்து மலரும், சேறும் வெவ்வேறு வகைபடு பொருட்கள் ஓரிடத்தில் இருப்பன. 
அவற்றைக் கொள்வோர் வேறுபாட்டால் அவற்றுள் தாரதம்மியம் காட்டப் படுகிறது. இதனால் உணர்த்தப்படும் 
உவமேயத்திற்கு இவை இரண்டும் பொருத்தி ஊகிக்கப்படுகிறதோ? 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgHWiHcy6Q4GSF3GDO_vz6Eo2mLOkDwzt6c0gTn03gHyg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 17, 2025, 10:57:09 AMAug 17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி .
தாங்கள் சொல்வது சரிதான்.
        — தில்லைவேந்தன்.
.

Swaminathan Sankaran

unread,
Aug 17, 2025, 11:13:01 AMAug 17
to santhav...@googlegroups.com
அருமையான உவமானங்கள் கொண்ட, ஆழமான கவிதை.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgHWiHcy6Q4GSF3GDO_vz6Eo2mLOkDwzt6c0gTn03gHyg%40mail.gmail.com.

--
 Swaminathan Sankaran

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 17, 2025, 11:17:34 AMAug 17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சங்கரன்
      —தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Aug 17, 2025, 11:52:24 AMAug 17
to santhav...@googlegroups.com
மிக அருமையான உவமையணி கொண்ட வெண்பா வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 17, 2025, at 11:17, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 18, 2025, 12:22:37 AMAug 18
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

      —தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 18, 2025, 1:18:48 AMAug 18
to santhav...@googlegroups.com
.               இன்றைய வெண்பா

                      (18/08/2025)

               .      விந்தையன்றோ?

பொங்குகடல் நீர்முகந்து போய்வானில் சேர்த்துமுகில்
இங்கு மழையாய் இனிதளிக்கும் - தங்கியுள்ள
உப்புச் சுவையை உதறுவ(து) எங்ஙனமோ?
அப்பப்பா விந்தையன்றோ அஃது?

                                   —தில்லைவேந்தன்.
..
.

Arasi Palaniappan

unread,
Aug 18, 2025, 2:19:34 AMAug 18
to சந்தவசந்தம்
அருமை.

உப்பை மழைநீர் உதறுவ(து) இல்லையாம் 
அப்போ மிகத்தூய(து) ஆகுமாம் - உப்பாய்க்
கனிமம்சேர் பாறைகளால் கைக்குமாம், உம்பா 
இனிமையாம் ; ஒ(உ)ப்பில்லை யாம்! 

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 18, 2025, 2:23:27 AMAug 18
to santhav...@googlegroups.com
அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி திரு பழனியப்பன் 

                         —தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Aug 18, 2025, 8:37:42 AMAug 18
to santhav...@googlegroups.com
அற்புதம் வேந்தரே.

சிந்தைனை வந்தமர்ந்து தந்திடு வெண்பாக்கள்
கந்தனைக் கண்ட களிப்பு

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 18, 2025, at 01:18, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 18, 2025, 10:57:23 AMAug 18
to santhav...@googlegroups.com
அன்புக்கு மிக்க நன்றி திரு ராம்கிராம்

On Mon, Aug 18, 2025 at 6:07 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அற்புதம் வேந்தரே.

சிந்தைனை வந்தமர்ந்து தந்திடு வெண்பாக்கள்
கந்தனைக் கண்ட களிப்பு

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 19, 2025, 9:31:58 PMAug 19
to santhav...@googlegroups.com
.            இன்றைய வெண்பா
                   (20/08/2025)

                 வாழையென வாழு!

இலை,பூவும் காய்,கனியும் ஈந்துபின் வீழ்ந்த
நிலையிலும் தண்டுதரும் நீண்டு - தலைசிறந்த
வள்ளலெனும் வாழையின் வாழுநெறி மாந்தரும்
கொள்ளல் சிறப்பன்றோ கூறு

                              — தில்லைவேந்தன்.
..

Arasi Palaniappan

unread,
Aug 19, 2025, 9:58:37 PMAug 19
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 20, 2025, 12:26:35 AMAug 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

    —தில்லைவேந்தன்.
.

Ram Ramakrishnan

unread,
Aug 20, 2025, 9:00:00 AMAug 20
to santhav...@googlegroups.com
அருமை, வேந்தரே.

வாழையடி வாழையென வாழைபோல் வாழ்ந்திடில்

பாழ்வினைகள் போமே பறந்து.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 19, 2025, at 21:31, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 20, 2025, 9:29:03 AMAug 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

       —தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 20, 2025, 7:08:08 PMAug 20
to santhav...@googlegroups.com
இன்றைய வெண்பா (பிரதோஷ வெண்பா)
                    (21/08/2025)

              சிக்கல் அறுப்பான் சிவன்!

செக்கர்வான் மீது சிறுசாம்பல் மேகங்கள்
தக்கசிவன் மேல்நீறாய்த் தாம்திகழும் - நெக்குருகிச்
சொக்குமுள்ளம்; ஐந்தெழுத்தைச் சொல்லும்நா; மீள்பிறவிச்
சிக்கல் அறுப்பான் சிவன்!

                                       —தில்லைவேந்தன்.
..
.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 20, 2025, 7:17:43 PMAug 20
to santhav...@googlegroups.com

Arasi Palaniappan

unread,
Aug 20, 2025, 7:54:55 PMAug 20
to சந்தவசந்தம்
Sira

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Aug 20, 2025, 8:28:55 PMAug 20
to சந்தவசந்தம்
சிறப்பு 

On Thu, 21 Aug 2025, 4:38 am NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 20, 2025, 8:31:19 PMAug 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     —தில்லைவேந்தன்

On Thu, Aug 21, 2025 at 5:58 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
சிறப்பு 

Kaviyogi Vedham

unread,
Aug 20, 2025, 9:01:19 PMAug 20
to santhav...@googlegroups.com
arumai
,  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 20, 2025, 9:02:48 PMAug 20
to santhav...@googlegroups.com
நன்றி யோகியார் 

  —தில்லைவேந்தன்

On Thu, Aug 21, 2025 at 6:31 AM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
arumai
,  yogiyar

Ram Ramakrishnan

unread,
Aug 20, 2025, 10:10:51 PMAug 20
to santhav...@googlegroups.com
அருமை, வேந்தரே

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 20, 2025, at 19:08, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

--

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 20, 2025, 10:25:51 PMAug 20
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

    —தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 22, 2025, 10:32:44 PMAug 22
to santhav...@googlegroups.com
.              இன்றைய வெண்பா

                     (23/08/2025)

                வழிபலவும் உண்டு!

பூட்டொன்று செய்தால் பொருந்தும் திறவுகோல்
நாட்டினில் மூன்று நனிசெயவர் - வாட்டுதுயர்
வந்தால் களைய வழிபலவும் வைத்திருப்பான்
அந்த இறைவன் அவன்!

                                  —தில்லைவேந்தன்.
..

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 15, 2025, 8:15:13 AM (5 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
.             புன்னகை பூத்த போது!

கன்னம் சிவக்கும் கயல்கள் விழிதவிக்கும்
மின்னல் தெறிக்குமுன் மென்முகத்தில் - அன்னமே
என்னையே என்மனம் ஏனோ மறக்கும்நீ
புன்னகை பூத்த பொழுது

பூத்தபுது வைகறைதான் பொன்னணங்குன் புன்னகையோ?
பார்த்துத் தொடுகணைதான் பார்வையோ? - வார்த்தெடுத்த
வட்டநிலா வண்ண மலர்முகமோ?மாமழையைக்
கொட்டு முகிலோ குழல்?

                                     —தில்லைவேந்தன்.

.
..

Arasi Palaniappan

unread,
Sep 15, 2025, 8:25:36 AM (5 days ago) Sep 15
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 15, 2025, 8:30:26 AM (5 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
அருமை, வேந்தரே. வெண்பாக்கள் மழையெனக் கொட்டுகின்றனவே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 15, 2025, 8:33:27 AM (5 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

       —தில்லைவேந்தன்.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 15, 2025, 8:34:28 AM (5 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

       —தில்லைவேந்தன்.

Kaviyogi Vedham

unread,
Sep 15, 2025, 1:08:15 PM (5 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
abaaram,
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 15, 2025, 9:07:20 PM (4 days ago) Sep 15
to santhav...@googlegroups.com
Thanks yogiyar

     —தில்லைவேந்தன்.

On Mon, Sep 15, 2025 at 10:38 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
abaaram,
  yogiyar
Reply all
Reply to author
Forward
0 new messages