மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம்

169 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 18, 2009, 9:35:10 AM6/18/09
to santhavasantham
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 26-Jun-09 (India 27th?)

சிவனே குருவாக வந்து அருள்புரிந்த அன்பர்.

திருவாசகத்தில் போற்றித் திருவகவலில் சில அடிகள்:

"........................
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா(து)
அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
..........................................."


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

ananth

unread,
Jun 18, 2009, 9:06:04 PM6/18/09
to சந்தவசந்தம்
இறைவன் அடியாரின் மெய்ப்பாடுகளைச் சித்தரிக்கும் அற்புதமான
படம்பிடிப்பு.
திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்!

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jun 19, 2009, 6:44:48 AM6/19/09
to santhavasantham

2008-03-26
தக்ஷிணாமூர்த்தி போற்றி - 2
---------------------------------
(
கலி விருத்தம் - "மா மா மா மா" என்ற வாய்பாடு)

1)
பாலில் நெய்போல் பயில்வாய் போற்றி
ஆலின் அடியில் அமர்வாய் போற்றி
நூலின் பொருளை நுவல்வாய் போற்றி
மாலின் இருள்தீர் மதியே போற்றி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/6/18 Siva Siva <naya...@gmail.com>
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 26-Jun-09 (India 27th?)

சிவனே குருவாக வந்து அருள்புரிந்த அன்பர்.

திருவாசகத்தில் போற்றித் திருவகவலில் சில அடிகள்:

"................
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
..............................
............."


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jun 20, 2009, 6:39:51 AM6/20/09
to santhavasantham

2)
வேலை விடம்சேர் மிடறா போற்றி
மேலை வினைதீர் விமலா போற்றி
காலை உதிக்கும் கதிரே போற்றி
மாலை நீக்கும் மருந்தே போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/19 Siva Siva <naya...@gmail.com>

2008-03-26
தக்ஷிணாமூர்த்தி போற்றி - 2
---------------------------------
(
கலி விருத்தம் - "மா மா மா மா" என்ற வாய்பாடு)

1)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jun 21, 2009, 10:36:57 AM6/21/09
to santhavasantham

3)
சின்முத் திரைசேர் கையா போற்றி
சன்மத் தொடரைத் தடுப்பாய் போற்றி
புன்மை தீர்க்கும் புனிதா போற்றி
நன்மை நல்கும் நாதா போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/20 Siva Siva <naya...@gmail.com>

2)



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jun 21, 2009, 1:44:46 PM6/21/09
to சந்தவசந்தம்
நானும் எழுதலாமா?

அங்கை அனலோய் அரனே போற்றி!
மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
கங்கைச் சடையோய் கழலே போற்றி!
சங்கைத் தீர்க்கும் சதுரா போற்றி!


அன்புடன்,
தங்கமணி.


On Jun 21, 7:36 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> சின்முத் திரைசேர் கையா போற்றி
> சன்மத் தொடரைத் தடுப்பாய் போற்றி
> புன்மை தீர்க்கும் புனிதா போற்றி
> நன்மை நல்கும் நாதா போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/6/20 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jun 22, 2009, 8:41:55 AM6/22/09
to santhav...@googlegroups.com


2009/6/21 thangamani <tvthan...@gmail.com>

நானும் எழுதலாமா?
வரவேற்கிறேன்.
 

அங்கை அனலோய்  அரனே போற்றி!
மங்கை இடமாய்  வகுத்தாய் போற்றி!
கங்கைச்  சடையோய்  கழலே போற்றி!
சங்கைத் தீர்க்கும்  சதுரா போற்றி!

'த்' மிகாமல் 'சங்கை தீர்க்கும்' என்றிருக்கவேண்டும்.



அன்புடன்,
தங்கமணி.
On Jun 21, 7:36 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> சின்முத் திரைசேர் கையா போற்றி
> சன்மத் தொடரைத் தடுப்பாய் போற்றி
> புன்மை தீர்க்கும் புனிதா போற்றி
> நன்மை நல்கும் நாதா போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/6/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jun 22, 2009, 8:43:10 AM6/22/09
to santhavasantham

4)
ஆசான் ஆகி அமர்வாய் போற்றி
பேசா துரைக்கும் பிரானே போற்றி
ஆசா பாசம் அறுப்பாய் போற்றி
நேசா கல்லால் நிழலா போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/21 Siva Siva <naya...@gmail.com>

3)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jun 22, 2009, 10:04:50 AM6/22/09
to சந்தவசந்தம்
அங்கை அனலோய் அரனே போற்றி!
> மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
> கங்கைச் சடையோய் கழலே போற்றி!
> சங்கை தீர்க்கும் சதுரா போற்றி!

//'த்' மிகாமல் 'சங்கை தீர்க்கும்' என்றிருக்கவேண்டும்.//

அன்புள்ள சிவசிவா!மிக்கநன்றி!'த்'எடுத்து விட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Jun 22, 5:41 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009/6/21 thangamani <tvthangam...@gmail.com>

> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Jun 23, 2009, 7:58:32 AM6/23/09
to santhavasantham

5)
கறையை உடைய கண்டா போற்றி
பிறையை அணிபூ ரணனே போற்றி
குறைகள் தீர்க்கும் கோவே போற்றி
மறைகள் சொல்லும் மணியே போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/22 Siva Siva <naya...@gmail.com>

4)



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jun 23, 2009, 8:50:11 AM6/23/09
to சந்தவசந்தம்
மோன நிலையில் மொழிந்தாய் போற்றி!
ஞான ஒளியே நாதா போற்றி!
தீன தயாள சிவனே போற்றி!
கான நடத்தில் களிப்பாய் போற்றி!

அன்புடன்,
தங்கமணி.


On Jun 23, 4:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> கறையை உடைய கண்டா போற்றி
> பிறையை அணிபூ ரணனே போற்றி
> குறைகள் தீர்க்கும் கோவே போற்றி
> மறைகள் சொல்லும் மணியே போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/6/22 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 4)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

thangamani

unread,
Jun 24, 2009, 2:03:16 AM6/24/09
to சந்தவசந்தம்
நீறு புனைந்த நிமலா போற்றி!
கீறு பிறையோன் கீர்த்தி போற்றி!
ஏறு டையவன் ஏற்றம் போற்றி!
மாறு முலகின் மன்னே போற்றி!

அன்புடன்,
தங்கமணி.

Siva Siva

unread,
Jun 24, 2009, 8:12:22 AM6/24/09
to santhavasantham

6)
உறவில் லாதார்க்(கு) உறவே போற்றி
இறவில் லாத ஈசா போற்றி
பிறவிப் பிணிக்கு மருந்தே போற்றி
அறவ ஆல மர்ந்தாய் போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/23 Siva Siva <naya...@gmail.com>

5)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jun 25, 2009, 6:49:24 AM6/25/09
to சந்தவசந்தம்
பேயம் மையினோர் பிள்ளாய்! போற்றி!
வேயின் தோளி மணவா போற்றி!
தோயும் அன்பின் துணையே போற்றி!
தேயும் வாழ்வின் தெளிவே போற்றி!

ஆரா அமுதே அரனே போற்றி!
பேரா யிரமும் பெற்றாய் போற்றி!
வாரா துவந்த மணியே போற்றி!
தீரா வினையைத் தீர்ப்பாய் போற்றி!

அன்புடன்,
தங்கமணி.


On Jun 24, 5:12 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> உறவில் லாதார்க்(கு) உறவே போற்றி
> இறவில் லாத ஈசா போற்றி
> பிறவிப் பிணிக்கு மருந்தே போற்றி
> அறவ ஆல மர்ந்தாய் போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/6/23 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 5)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jun 25, 2009, 8:55:38 AM6/25/09
to santhavasantham

7)
உழையின் உரியை உகந்தாய் போற்றி
பழைய வினைதீர் பரமா போற்றி
குழைய ணிந்த குழகா போற்றி
அழக ஆல மர்ந்தாய் போற்றி.

8)
மானை ஏந்தெம் மானே போற்றி
வானைக் கடந்து வளர்வாய் போற்றி
மோனத் தாலே மொழிவாய் போற்றி
ஞானச் சுடரே போற்றி போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/24 Siva Siva <naya...@gmail.com>

6)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jun 25, 2009, 3:04:28 PM6/25/09
to சந்தவசந்தம்
பேயம் மையினோர் பிள்ளாய்! போற்றி!
வேயன் நதோளி மணாளா போற்றி!

தோயும் அன்பின் துணையே போற்றி!
தாயும் ஆகும் தலைவா போற்றி!

நான்காம் அடியை மாற்றியுள்ளேன்.

அன்புடன்,
தங்கமணி.

thangamani

unread,
Jun 25, 2009, 3:19:32 PM6/25/09
to சந்தவசந்தம்
மன்றுள் ஆடும் மகேசா போற்றி!
கன்றின் ஆவாய் காப்பாய் போற்றி!
என்றும் இலங்கும் இன்னருள் போற்றி!
என்றன் தேவே இறையே போற்றி!

அன்புடன்,
தங்க்மணி.

On Jun 25, 5:55 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> உழையின் உரியை உகந்தாய் போற்றி
> பழைய வினைதீர் பரமா போற்றி
> குழைய ணிந்த குழகா போற்றி
> அழக ஆல மர்ந்தாய் போற்றி.
>
> 8)
> மானை ஏந்தெம் மானே போற்றி
> வானைக் கடந்து வளர்வாய் போற்றி
> மோனத் தாலே மொழிவாய் போற்றி
> ஞானச் சுடரே போற்றி போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/6/24 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 6)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jun 26, 2009, 9:50:26 AM6/26/09
to santhavasantham

9)
தன்போல் இல்லாத் தனியா போற்றி
இன்பால் ஆடும் இறைவா போற்றி
தென்பால் நோக்கும் தேவே போற்றி.
அன்பர்க் கறங்கள் அருள்வாய் போற்றி.

10)
சத்தி இணையும் சத்தே போற்றி
அத்தி முகத்தன் அத்தா போற்றி
சித்தி அளிக்கும் சித்தே போற்றி
முத்தி அளிக்கும் முத்தே போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/25 Siva Siva <naya...@gmail.com>

7)

8)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jun 26, 2009, 1:26:30 PM6/26/09
to சந்தவசந்தம்
செஞ்சொல் பரவும் சிவமே போற்றி!
விஞ்சும் நடம்செய் வேதா போற்றி!
அஞ்சல் அருளும் ஐயா போற்றி!
நஞ்சம் உண்டோன் நற்றாள் போற்றி!

அன்புடன்,
தங்கமணி.

On Jun 26, 6:50 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> தன்போல் இல்லாத் தனியா போற்றி
> இன்பால் ஆடும் இறைவா போற்றி
> தென்பால் நோக்கும் தேவே போற்றி.
> அன்பர்க் கறங்கள் அருள்வாய் போற்றி.
>
> 10)
> சத்தி இணையும் சத்தே போற்றி
> அத்தி முகத்தன் அத்தா போற்றி
> சித்தி அளிக்கும் சித்தே போற்றி
> முத்தி அளிக்கும் முத்தே போற்றி.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/6/25 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 7)
>
> > 8)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jun 26, 2009, 9:02:52 PM6/26/09
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்கள்.

11)
முன்பின் இல்லா முதல்வா போற்றி
இன்பின் வடிவாய் இருப்பாய் போற்றி
அன்பி னால்ஆல் அமர்வாய் போற்றி
துன்பின் கருவைத் துடைப்பாய் போற்றி
.

12)
கோதி லாத குணத்தாய் போற்றி
நீதி வழுவார் நேசா போற்றி
போதிக் கின்ற பொருளே போற்றி
ஆதி குருவே போற்றி போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/26 Siva Siva <naya...@gmail.com>

9)

10)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jun 26, 2009, 10:26:03 PM6/26/09
to santhavasantham

2009-06-26
(
இன்று மாணிக்க வாசகரின் குருபூஜை - ஆனி மகம்)

1) -- (
கலிவிருத்தம் - 'புளிமா புளிமா புளிமா தேமா' என்ற வாய்பாடு) --
பணியா பரணன் பணியே என்றும்
பணியா உருகிப் பலபா மாலை
அணிவித் தரனார் அடிசேர் அன்பர்
மணிவா சகர்தா மரைத்தாள் போற்றி.

பணி ஆபரணன் - நாகாபரணன்;

2) -- (
கலித்துறை ? - 'மா மா மா மா காய்' என்ற வாய்பாடு) --
ஆலம் உண்ட அரனே அன்போ டன்றொருநாள்
ஞாலம் உய்யக் குருவாய் நணுகிக் குருந்தின்கீழ்க்
காலைக் காட்டி ஆட்கொள் அடியார், கழல்மறவாச்
சீலர், திருவா தவூரர் செய்ய தாள்போற்றி

3) --
வெண்பா --
உறங்குவோர் எல்லாம் உணர்வெய்தி இந்தப்
பிறப்பிறப் பில்லாப் பெருவாழ் - வுறநெஞ்சே
எம்பாவை பாடிய எம்மணி வாசகன்
செம்பொற் கழல்சிந்தை செய்.

பதம் பிரித்து:
உறங்குவோர் எல்லாம் உணர்(வு) எய்தி, இந்தப்
பிறப்(பு) இறப்(பு) இல்லாப் பெருவாழ்(வு) - உற, நெஞ்சே,
எம்பாவை பாடிய எம் மணிவாசகன்
செம்பொற்கழல் சிந்தை செய்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/18 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jul 14, 2010, 8:27:21 PM7/14/10
to santhavasantham

மாணிக்கவாசகர் குருபூஜை


2010-07-14
----------------
(
வெண்டளையால் வந்த ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)

அம்மானை சிந்தைய ராய்வணங்கத் தீயாய்நீள்
அம்மானை, ஆலமுண்ட அண்ணலை, ஓர்கையில்
அம்மானை ஏந்தும் அழகனை, வாயார
அம்மானை பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை எம்மொழியால் எப்படி ஏத்துவேன்
அம்மாநை கின்றேன் அவர்பொற்றாள் சிந்தித்தே.

பதம் பிரித்து:

அம் மால் நை சிந்தையராய் வணங்கத் தீயாய் நீள்
அம்மானை, ஆலம் உண்ட அண்ணலை, ஓர் கையில்
அம் மானை ஏந்தும் அழகனை, வாயார
அம்மானை பாடி அடிபணிந்த வாதவூர்
எம்மானை எம்மொழியால் எப்படி ஏத்துவேன்;
அம்மா; நைகின்றேன் அவர் பொற்றாள் சிந்தித்தே.

அம்மான் - கடவுள்;
எம்மான் - எம் சுவாமி;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/26 Siva Siva <naya...@gmail.com>



--
http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Jul 14, 2010, 11:15:12 PM7/14/10
to santhavasantham

2) -- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

வெம்பாவம் சேராவே வெற்புவில்லில் திருமாலை
அம்பாவைத் தன்றுபுரம் அட்டானே வந்தெழுதத்
தம்பாவைச் சொல்மணிவா சகனாரின் விழிப்பூட்டும்
எம்பாவை இருபதையும் இசைபாடும் அடியார்க்கே.

வெற்பு - மலை;
அம்பா - அம்பாக;

மேருமலையே வில்லாக அதில் திருமாலைக் கணையாகச் சேர்த்து, முப்புரங்களையும் எரித்த சிவபெருமானே வந்து எழுதிக்கொள்ள அப்பெருமானுக்குத் தம் திருவாசகத்தைச் சொன்ன மாணிக்கவாசகரின், விழிப்பைத் தரும் திருவெம்பாவைப் பாடல்கள் இருபதையும் இசையோடு பாடும் அடியவர்களைக் கொடிய பாவங்கள் நெருங்கமாட்டா.

==================

http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=4


இறைவன் திருவாசகம் கேட்டு எழுதியது:

இவ்வாறு சிதம்பரத்தில் மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள் களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக்காகச் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் வியந்து கூறி மணிவாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக` என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங்கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட இனிய கோவையார் என்ற நூலை அருளிச் செய்தார். கேட்ட அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தான். அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.



2010/7/14 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jun 24, 2012, 1:24:22 AM6/24/12
to santhavasantham

2012-06-24
மாணிக்கவாசகர் குருபூஜை - 2012 (ஆனி மகம் - 2012-06-24)
-----------------------------------------------
1) --
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --
கள்ளாரும் கடிமலர்மேல் உறைவானும் கரியானும்
புள்ளேன மாய்ப்பறந்தும் புவியிடந்தும் காண்பரிய
வெள்ளேற்றன் விரைகழலை விழைமனத்தால் மிகவுருகித்
தெள்ளேணம் பாடுமணி வாசகர்சே வடிபோற்றி.

கள் ஆரும் கடி மலர் - தேன் மலிந்த வாசம் மிகுந்த பூ - தாமரை;
கரியான் - திருமால்;
புள் ஏனம் - பறவையும் பன்றியும்;
புவி இடந்து - நிலத்தை அகழ்ந்து;
வெள் ஏற்றன் - வெள்ளை இடபத்தின்மேல் வரும் சிவபெருமான்;
விரைகழல் - மணக்கும் திருவடி;
தெள்ளேணம் - திருத்தெள்ளேணம் - திருவாசகத்தில் ஒரு பகுதி;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/7/14 Siva Siva <naya...@gmail.com>

2) -- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

Subbaier Ramasami

unread,
Jun 24, 2012, 7:20:26 AM6/24/12
to santhav...@googlegroups.com
காண்பரிய -------காணறிய?

உறைவானும் கரியானும்
புள்ளேன மாய்ப்பறந்தும் 

பூள்ளேனமென்ற சொல்லில் சுருக்கமாக    இரண்டையும்       இணைத்தது அருமை.
இலந்தை

2012/6/24 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Siva Siva

unread,
Jun 24, 2012, 9:34:03 AM6/24/12
to santhav...@googlegroups.com
ஆம். காண்டற்கு அரிய.

காண்பு = காட்சி;

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40800&padhi=080&startLimit=3&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

அப்பர் தேவாரம் - 4.80.3
தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.


2012/6/24 Subbaier Ramasami <elan...@gmail.com>

Siva Siva

unread,
Jun 24, 2012, 12:13:02 PM6/24/12
to santhavasantham


2012/6/24 Siva Siva <naya...@gmail.com>

2012-06-24
மாணிக்கவாசகர் குருபூஜை - 2012 (ஆனி மகம் - 2012-06-24)
-----------------------------------------------
1) --
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --
கள்ளாரும் கடிமலர்மேல் உறைவானும் கரியானும்
புள்ளேன மாய்ப்பறந்தும் புவியிடந்தும் காண்பரிய
வெள்ளேற்றன் விரைகழலை விழைமனத்தால் மிகவுருகித்
தெள்ளேணம் பாடுமணி வாசகர்சே வடிபோற்றி.

2) -- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

ஆத்தங்கொள் மனத்தாலே அரிவையொரு பாகத்தன்
பூத்துன்று சடையான்றன் பொன்னடிக்கே சென்றூதாய்
கோத்தும்பி என்றென்று கோதில்லாத் தமிழ்மாலை
கோத்தீந்த வாதவூர்க் கோமான்றன் தாள்போற்றி

ஆத்தம் - ஆப்தம் - அன்பு;
பூத் துன்று சடையான் - பூக்கள் செறிந்திருக்கும் சடையினன்;
கோத்தும்பி - அரசவண்டு; (திருக்கோத்தும்பி - திருவாசகத்தில் ஒரு பகுதி);
கோத்து ஈந்த - தொடுத்து அளித்த;
கோமான் - பெருமையிற் சிறந்தோன்; குரு;

Siva Siva

unread,
Jul 10, 2013, 9:46:23 PM7/10/13
to santhavasantham

மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் (2013-07-11)
2013-07-10

மாணிக்கவாசகர் வாழ்த்து
----------------------------------
(
அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு)

சாற்றிய அச்சப் பத்தில்
.. சழக்கரைச் சாடி எந்தை
நீற்றினைப் புனைந்து வம்மின்
.. நீர்களெல் லாமென் றோதிப்
பேற்றினை அடையும் மார்க்கம்
.. பெரிதுவந் தெமக்கிங் கீந்தார்
மாற்றிலாச் செம்பொன் எங்கள்
.. வாதவூர் அடிகள் தாமே
.

பெரிதுவந் தெமக்கிங் கீந்தார் - பெரிது உவந்து எமக்கு இங்கு ஈந்தார்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/6/24 Siva Siva <naya...@gmail.com>



2012/6/24 Siva Siva <naya...@gmail.com>

2012-06-24
மாணிக்கவாசகர் குருபூஜை - 2012 (ஆனி மகம் - 2012-06-24)
-----------------------------------------------
1) --
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா --

Siva Siva

unread,
Jun 30, 2014, 4:47:58 PM6/30/14
to santhavasantham

2014-06-28 (மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2014-07-01 USA / 2014-07-02 India)

--------------------

"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.

(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);

"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")


1)

குருந்தடி அமர்ந்தகு ரவன்றன பதந்தனை நினைந்துரு குநெஞ்சின ருரம்

பொருந்திய பெரும்புர வியின்றொகை தொடர்ந்திட இவர்ந்தடை அரன்சசி தரன்

கருந்திரை விடந்தனை அருந்திய பரன்சிறு பிரம்படி கொளும்படி வரும்

பெருந்தவ ரிருந்தமிதன்பொருறிந்தனு தினஞ்சொல விடும்பவ பயம்.


பதம் பிரித்து:

குருந்து அடி அமர்ந்த குரவன்தன பதந்தனை நினைந்து உருகு நெஞ்சினர்; உரம்

பொருந்திய பெரும் புரவியின் தொகை தொடர்ந்திட இவர்ந்து அடை அரன், சசிதரன்,

கரும் திரை விடந்தனை அருந்திய பரன் சிறு பிரம்படி கொளும்படி வரும்

பெரும் தவர் இரும் தமிழ் அதன் பொருள் அறிந்து அனுதினம் சொல விடும் பவபயம்.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2013-07-10 21:46 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் (2013-07-11)
2013-07-10




Siva Siva

unread,
Jul 1, 2014, 7:26:10 PM7/1/14
to santhavasantham
2014-06-30 16:47 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-06-28 (மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2014-07-01 USA / 2014-07-02 India)

--------------------

"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.

(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);

"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")


1)

குருந்தடி அமர்ந்தகு ரவன்றன பதந்தனை நினைந்துரு குநெஞ்சின ருரம்

பொருந்திய பெரும்புர வியின்றொகை தொடர்ந்திட இவர்ந்தடை அரன்சசி தரன்

கருந்திரை விடந்தனை அருந்திய பரன்சிறு பிரம்படி கொளும்படி வரும்

பெருந்தவ ரிருந்தமிதன்பொருறிந்தனு தினஞ்சொல விடும்பவ பயம்.


பதம் பிரித்து:

குருந்து அடி அமர்ந்த குரவன்தன பதந்தனை நினைந்து உருகு நெஞ்சினர்; உரம்

பொருந்திய பெரும் புரவியின் தொகை தொடர்ந்திட இவர்ந்து அடை அரன், சசிதரன்,

கரும் திரை விடந்தனை அருந்திய பரன் சிறு பிரம்படி கொளும்படி வரும்

பெரும் தவர் இரும் தமிழ் அதன் பொருள் அறிந்து அனுதினம் சொல விடும் பவபயம்.



குருந்து அடி அமர்ந்த குரவன்தன பதந்தனை நினைந்து உருகு நெஞ்சினர் - (திருப்பெருந்துறையில்) குருந்தமரத்தின்கீழ் அமர்ந்து அருளிய சற்குருவின் திருவடியை எண்ணி உருகிய நெஞ்சை உடையவர்;

உரம் பொருந்திய பெரும் புரவியின் தொகை தொடர்ந்திட இவர்ந்து அடை அரன் - வலிய பெரிய குதிரைகளின் கூட்டம் பின் தொடர, ஒரு குதிரையின்மீது ஏறிச் செலுத்தி வந்த ஹரன்;

சசிதரன், கரும் திரை விடந்தனை அருந்திய பரன் - பிறைசூடி, கரிய கடல்விடத்தை உண்ட பரமன்;

சிறு பிரம்படி கொளும்படி வரும் பெருந்தவர் - அச்சிவபெருமான் மதுரையில் பாண்டியன் கைப்பிரம்பால் அடி ஏற்குமாறு வருவான்; (அப்படி அவனை வரவழைத்த) அத்தகைய பெரும் தவத்தை உடையவர்;

இரும் தமிழ் அதன் பொருள் அறிந்து அனுதினம் சொல விடும் பவபயம் - அந்த மாணிக்கவாசகர் அருளிய பெருமைமிக்க தமிழாகிய திருவாசகத்தைப் பொருள் உணர்ந்து தினந்தோறும் சொன்னால், பிறவிச்சுழல் அச்சம் நீங்கும்.

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்




Venkatachalam Subramanian

unread,
Jul 2, 2014, 10:29:17 AM7/2/14
to santhav...@googlegroups.com

senthilvayal.com

புலவர் கோவில்!

  • by Vayal 
  •  July 2, 2014 
  •  1 min read 
  •  original

ஜூலை 2 – மாணிக்கவாசகர் குருபூஜை

‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்பார் ராமலிங்க அடிகளார். தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தன்று நடைபெற உள்ளது. இந்நாளில், தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலுக்குச் சென்று வரலாம். தெய்வப்புலவர் ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த கோவில் இது. 
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்று, பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தன் படைக்கு, குதிரைகள் வாங்கி வரும்படி அனுப்பினான். அவர், திருப்பெருந்துறையை (ஆவுடையார் கோவில்) அடைந்த போது, குருந்த மரத்தின் அடியில், சிவபெரு மான், குருவாக இருந்து, சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட மாணிக்கவாசகர், தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, அவரது திருவடியில் விழுந்து, தன்னையும் ஆட்கொண்டு அருளும்படி வேண்டினார். 
சிவனும் அவருக்கு திருவடி தீட்சை வழங்கினார். குதிரை வாங்க வைத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவிட்டார். பின், மன்னன் உத்தரவுபடி நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை, குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை, மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும், அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரை தண்டித்தான் மன்னன். அவரை விடுவிக்க திருவிளையாடல் செய்து, தன் பக்தரின் பெருமையை ஊரறியச் செய்தார் சிவன். 
சிதம்பரம் சென்ற மாணிக்கவாசகர், சிவனை புகழ்ந்து பாடினார். அந்த பதிகங்களின் சொற்கள் ஒவ்வொன்றும், மாணிக்கம் போல இருந்ததால், அவருக்கு, மாணிக்கவாசகர் என, பெயர் வந்தது. ஏனெனில், இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வாதவூரான். தன்னுடைய பாடல்களால் மாணிக்கவாசகர் என, பெயர் பெற்ற இவருக்கு, சின்னமனூரில் கோவில் எழுப்பப்பட்டது. 
ஆனி மகம் மட்டுமன்றி, ஒவ்வொரு தமிழ் மாத மகம் நட்சத்திரத்தன்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சிலை, நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னிதி முன், சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடுடன் அருளுகிறார். இங்கு ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். மாணிக்கவாசகர் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். 
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, மாணிக்கவாசகருக்கு அர்ச்சனை செய்கின்றனர். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால், இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. விழாக்களின் போது, இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழி மாத உத்திர நட்சத்திர நாட்களில், மாணிக்கவாசகரும், நடராஜரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். ஆனி மகம் குருபூஜையன்று, தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளோர், பேச்சுத்திறமை வேண்டுவோர் திருவாசகத்தில் உள்ள, ‘திருச்சாழல்’ பதிகத்தை பாடி, வேண்டுகின்றனர். 
குருபூஜையன்று மதிய பூஜையில், மாகேஸ்வர பூஜை நடக்கும். அன்று, சிவனடியார்களை, சிவனாகக் கருதி திருநீறு, சந்தனம் பூசி, மலர் தூவி தீபாராதனை செய்து, விருந்து கொடுக்கின்றனர். தேனியிலிருந்து, 24 கி.மீ., தூரத்தில் சின்னமனூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரிலும், அவருக்கு தனிக்கோவில் உள்ளது. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் விழாக்காலங்களில், மாணிக்கவாசகர் வீதியுலா வருவார்.

​ஓம்
வெ.சுப்பிரமணியன்​

Siva Siva

unread,
Jul 2, 2014, 1:15:17 PM7/2/14
to santhavasantham
Thanks. Link to this article in Dinamalar: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20932&ncat=2 

Link to this temple info on Dinamalar site: http://temple.dinamalar.com/New.php?id=721



2014-07-02 7:50 GMT-04:00 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:
ஜூலை 2 – மாணிக்கவாசகர் குருபூஜை

N. Ganesan

unread,
Jul 6, 2014, 9:04:09 AM7/6/14
to santhav...@googlegroups.com
பொருளை உணர சித்பவானந்த அடிகள் உரை பலருக்கும் உதவுகிறது. அவ்வுரை ஏற்பட்ட வரலாற்றை 
தமிழ்ஹிந்து தளத்தில் இன்று படித்தேன்.


நா. கணேசன்

Siva Siva

unread,
Jul 6, 2014, 2:26:48 PM7/6/14
to santhavasantham
Thanks for the link.

Siva Siva

unread,
Jun 19, 2015, 8:25:04 AM6/19/15
to santhavasantham

2015-06-09
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - (2015-06-21)
--------------------------------------
1) --- நேரிசை வெண்பா ---
பெருந்துறை தன்னிற் குருந்தமர்ந் தானை
அருந்துணை அண்ணலை அன்பால் - இருந்தமிழால்
ஏத்திய வாதவூர் ஏந்தல் இணையடியை
வாழ்த்தல் மயல்தீர் மருந்து.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2014-07-01 19:26 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:



--

Ramamoorthy Ramachandran

unread,
Jun 19, 2015, 10:29:55 PM6/19/15
to santhav...@googlegroups.com
புலவர்  திருக்கோயில்  பொற்பாய்  அமைத்தே 
நலமும்  வளம்பலவும்  நண்ண - இலந்தோரும் 
திருவா  சகத்தினைச்  சின்னமனூர்  மக்கள் 
உருவேற்றி  வாழ்ந்தா  ருவந்து.!

நெஞ்சுருகிக்  கண்ணீர்  நிரம்பி நிலைமறந்தே 
பஞ்சிட்ட  தீப்போலப்   பாவமெலாம் - எஞ்சாமல்  
அஞ்சி  விலக  அருளுமணி  வாசகர்தம் 
செஞ்சொல் லுரைத்துமுத்தி  சேர்!

சின்னமனூர்  திருக்கோயில் பற்றிய இடுகை அளித்த 
வெங்கடாசலம் சுப்பிரமணியனுக்கும், சிவசிவாவுக்கும் 
கணேசனுக்கும்  நன்றி! 
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 19, 2015, 10:34:23 PM6/19/15
to santhav...@googlegroups.com
திருத்தம் ஏற்றருள்க.
புலவர் திருக்கோயில்  பொற்பா  யமைத்தே 
நலமும்  வளம்பலவும்  நண்ணி - இலத்தில் 
திருவா  சகத்தினைச்  சின்னமனூர்  அன்பர் 
உருவேற்றி  வாழ்ந்தா  ருவந்து!

Siva Siva

unread,
Jun 20, 2015, 8:40:36 AM6/20/15
to santhavasantham

2)
அரியன் பெரியன் அடியார்க் கெளியன்
நரியைப் பரிசெய்த நம்பன் - கரியமணி
கண்டன் கழற்கே கசிந்தமணி வாசகர்சொல்
மண்டுவினை நோய்க்கு மருந்து.




அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2015-06-19 8:25 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2015-06-09
மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - (2015-06-21)
--------------------------------------
1) --- நேரிசை வெண்பா ---


Siva Siva

unread,
Jun 20, 2015, 10:37:01 PM6/20/15
to santhavasantham

3)
திருவா சகமென்ற தேறலைத் தந்த
அருளாளர் வாதவூர் அண்ணல் - இருதாள்
பெருவாதை நல்கநமைப் பின்னே தொடர்ந்து
வருதீ வினைதீர் மருந்து.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2015-06-20 8:40 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2)

Siva Siva

unread,
Jun 21, 2015, 9:31:36 AM6/21/15
to santhavasantham

மாணிக்கவாசகர் குருபூஜை ஆனி மகம் - (2015-06-21)

Final song.

4) --- இன்னிசை வெண்பா ---
கொல்விடமுண் டானைக் குருவெனப் பெற்றவர்
செல்வழி காட்டும் திருவா சகமுரைத்த
செல்வரணி வாதவூர்ச் செம்மல் திருவடிகள்
வல்வினைக்கு நல்ல மருந்து.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2015-06-20 22:37 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

3)

விவேக் பாரதி

unread,
Jun 21, 2015, 11:20:48 AM6/21/15
to santhav...@googlegroups.com
மாசில் சிவபுராணம் மாதமிழிலில் தந்துமனப்
பூசை புரிந்துநின்ற புண்ணியவான் ! - ஆசையெலாம் 
அப்பனடி சேர அழுதுக் கவிசெய்தான் 
செப்புக வாசகனைச் சேர்த்து !

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

--

Siva Siva

unread,
Jul 6, 2016, 7:31:39 PM7/6/16
to santhavasantham

2016-07-03

மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் ( 07-July-2016 (USA) / 08-July-2016 (India))

----------------

(வெண்பா)

1)

குருந்தடியில் ஞான குருவின் வடிவில்

பெருந்துறையில் வந்த பெருமான் திருந்தடிக்கே

கோத்தும்பி சென்றூதக் கூறியவர் தீந்தமிழை

நாத்தழுவி வாழ்தல் நலம்.




அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2015-06-19 8:25 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:





--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
Jul 7, 2016, 6:21:06 PM7/7/16
to santhavasantham

மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் ( 07-July-2016 (USA) / 08-July-2016 (India))

----------------

2)

உத்தர கோசமங்கை உத்தமன்தாள் தம்மனத்தே

வைத்தமணி வாசகர் மண்ணோர்க்கு முத்தி

வழிகாட்டிச் சொன்னதமிழ் மாலைமொழி நாவே

பழிபாவம் தீரும் படி.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-07-06 19:31 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2016-07-03

மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் ( 07-July-2016 (USA) / 08-July-2016 (India))

----------------

(வெண்பா)

1)



Siva Siva

unread,
Jun 27, 2017, 9:17:24 AM6/27/17
to santhavasantham

2017-06-10
மாணிக்கவாசகர் குருபூஜை - 2017 (ஆனி மகம் - 2017-06-28)
--------
(
ஷட்பதி அமைப்பில் -
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம் மா விளங்காய்)

சுட்ட நீறணி சொக்கன் மதுரையில்
பிட்டை உண்டருள் பித்தன் மலரடி
பட்ட உச்சியர் பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார்
கட்டு வல்வினைக் கயிற றுத்திடும்
மட்டு வார்திரு வாத வூரர்சொல்
இட்ட மாய்நிதம் எண்ணி அவர்கழல் இணையை ஏத்திடுவோம்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்.

Subbaraman NV

unread,
Jun 27, 2017, 9:24:44 AM6/27/17
to santhav...@googlegroups.com

Very great on the holy day.
N V Subbaraman

On Jun 27, 2017 6:50 PM, "Siva Siva" <naya...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naya...@gmail.com) Add cleanup rule | More info

2017-06-10
மாணிக்கவாசகர் குருபூஜை - 2017 (ஆனி மகம் - 2017-06-28)
--------
(
ஷட்பதி அமைப்பில் -
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம் மா விளங்காய்)

சுட்ட நீறணி சொக்கன் மதுரையில்
பிட்டை உண்டருள் பித்தன் மலரடி
பட்ட உச்சியர் பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார்
கட்டு வல்வினைக் கயிற றுத்திடும்
மட்டு வார்திரு வாத வூரர்சொல்

இட்ட மாய்நிதம் எண்ணி அவர்கழல் இணையை ஏத்திடுவோம்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்.


2016-07-07 18:21 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 28, 2017, 8:28:46 AM6/28/17
to santhavasantham
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81130&padhi=13&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

-- திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.1
இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனல்-தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.


2017-06-27 9:17 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2017-06-10
மாணிக்கவாசகர் குருபூஜை - 2017 (ஆனி மகம் - 2017-06-28)
--------
(
ஷட்பதி அமைப்பில் -
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம் மா விளங்காய்)

சுட்ட நீறணி சொக்கன் மதுரையில்
பிட்டை உண்டருள் பித்தன் மலரடி
பட்ட உச்சியர் பரமன் மெச்சிய பாக்கள் பாடவலார்
கட்டு வல்வினைக் கயிற றுத்திடும்
மட்டு வார்திரு வாத வூரர்சொல்
இட்ட மாய்நிதம் எண்ணி அவர்கழல் இணையை ஏத்திடுவோம்.


கட்டு வல்வினைக் கயிறு அறுத்திடும் மட்டு வார் திரு வாதவூரர் சொல் - உயிர்களைப் கட்டியிருக்கும் வலிய வினை என்ற கயிற்றை அறுப்பது, மாணிக்கவாசகர் அருளிய, தேன் சொரியும் திருவாசகம்; 


அன்பொடு,
வி. சுப்பிரமணியன்.


Siva Siva

unread,
Jul 16, 2018, 5:24:22 PM7/16/18
to santhavasantham

2018-07-16

மாணிக்கவாசகர் குருபூஜை - 2018 (ஆனி மகம் - 2018-07-16 India)

----------------------------------------

வரம்பில் கருணையன் வந்தியின்பிட் டுண்டு

பிரம்படி பெற்றபெரும் பித்தன் - பரம்பரன்

சீர்பாடு வாதவூர்த் தேசிகனார் செங்கமலம்

நேர்பாதம் நெஞ்சே நினை.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2017-06-27 9:17 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2017-06-10-- 

Siva Siva

unread,
Jul 4, 2019, 10:37:17 PM7/4/19
to santhavasantham

2019-07-04

மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் (2019-07-06)

-------------

("கந்த பத்யம்" - அமைப்பில்)


குருவாய் நால்வர்க் கருளும்

பெருமான் கையா லெழுதிய பீடுடை நூலாம்

திருவா சகமது பாடிய

அருமணி வாசக ரிருமல ரடிகள் போற்றி.


குருவாய் நால்வர்க்கு அருளும்

பெருமான் கையால் எழுதிய பீடுடை நூலாம்

திருவாசகம்-அது பாடிய

அரு மணிவாசகர் இரு மலரடிகள் போற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


On Mon, Jul 16, 2018 at 5:24 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2018-07-16

-- 

Umaiyal Ramanathan

unread,
Jul 5, 2019, 11:26:34 AM7/5/19
to santhav...@googlegroups.com
திருச்சிற்றம்பலம்

வாதவூரருக்கு நன்றிக்கடன்

விருப்போ டனுபவித்தால் மென்மையாய் நெஞ்சை      
உருக்கிக் கருத்தில் ஒருவன் இருத்திக்
குருவைப் புலப்படுத்திக் கொள்ளை பலன்கள்
தருநூல் திருவா சகம்

உமைபங்கன் கையொப்பம்  உண்டிந்த நூலில்;
சுமையாக நம்வாழ்க்கை தோன்றும் சமயம்
மணிவா சகரிட்ட மண்ணுயிர்க் கையேடு
பிணி விரட்டும்நற் பேறு

Sent from my iPhone

Siva Siva

unread,
Jul 5, 2019, 11:30:53 AM7/5/19
to santhavasantham
மண்ணுயிர்க் கையேடு
பிணி விரட்டும்நற் பேறு  /
"மண்ணுயிர்க்கை யேடு"

/பிணி விரட்டும்நற்/
பிணியை?


On Fri, Jul 5, 2019 at 11:26 AM Umaiyal Ramanathan <ruma...@hotmail.com> wrote:
திருச்சிற்றம்பலம்

...

Umaiyal Ramanathan

unread,
Jul 5, 2019, 11:42:10 AM7/5/19
to santhav...@googlegroups.com
திருச்சிற்றம்பலம்

திருத்தத்திற்கு நன்றி ஐயா.....

விருப்போ டனுபவித்தால் மென்மையாய் நெஞ்சை      
உருக்கிக் கருத்தில் ஒருவன் இருத்திக்
குருவைப் புலப்படுத்திக் கொள்ளை பலன்கள்
தருநூல் திருவா சகம்

உமைபங்கன் கையொப்பம்  உண்டிந்த நூலில்;
சுமையாக நம்வாழ்க்கை தோன்றும் சமயம்
மணிவா சகரிட்ட மண்ணுயிர்க்கை யேடு
பிணியை விரட்டும்நற் பேறு


Sent from my iPhone
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNi%3D1Gm5KwXq5UOgrQspX59i1tDz0YJjc%3DsnL-3-omwkg%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 5, 2019, 8:24:07 PM7/5/19
to santhavasantham

 2019-07-05

மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் (2019-07-06)

--------------

2) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) -----


குருந்தடியில் வீற்றிருந்த குருபரன்முன் மதுரைநின்று

வருந்தமிழ்நாட் டமைச்சரென வணங்கிநின்று மறைப்பொருள்கேட்

டருந்தமிழை நாமுய்ய அளித்ததிரு வாதவூர்ப்

பெருந்தகையார் மலரனைய திருந்துகழல் இணைபோற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

On Thu, Jul 4, 2019 at 10:37 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2019-07-04

மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் (2019-07-06)

-------------

("கந்த பத்யம்" - அமைப்பில்)


குருவாய் நால்வர்க் கருளும்

பெருமான் கையா லெழுதிய பீடுடை நூலாம்

திருவா சகமது பாடிய

அருமணி வாசக ரிருமல ரடிகள் போற்றி.


குருவாய் நால்வர்க்கு அருளும்

பெருமான் கையால் எழுதிய பீடுடை நூலாம்

திருவாசகம்-அது பாடிய

அரு மணிவாசகர் இரு மலரடிகள் போற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


-- 

Siva Siva

unread,
Jun 24, 2020, 12:17:10 PM6/24/20
to santhavasantham

2020-06-22

மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)

-------------------------

1) --- (சந்தக் கலிவிருத்தம் - “தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்) ---


கடைபாற் கடலின் விடமுண் மிடறன்

சடையிற் புனலன் தனையே குருவா

அடையும் புகழார் அருள்வா சகம்நற்

படைநம் பழவல் வினைபாற் றிடுமே.


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Jun 25, 2020, 11:52:03 AM6/25/20
to santhavasantham

2020-06-22

மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)

-------------------------

2) --- (சந்த வஞ்சித்துறை - “தனாதனா தனாதனா" என்ற சந்தம்) ---

பெருந்துறைக் குருந்தடி

இருந்தரன் புரிந்தருள்

அருந்தவர் மொழிந்தன

மருந்துயிர்க் கருந்துமே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Jun 24, 2020 at 12:16 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-06-22

மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)

-------------------------

1) --- (சந்தக் கலிவிருத்தம் - “தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்) ---


கடைபாற் கடலின் விடமுண் மிடறன்

சடையிற் புனலன் தனையே குருவா

அடையும் புகழார் அருள்வா சகம்நற்

படைநம் பழவல் வினைபாற் றிடுமே.


வி. சுப்பிரமணியன்



Siva Siva

unread,
Jun 25, 2020, 10:18:51 PM6/25/20
to santhavasantham
With audio now - in 2 different ragams!


On Wed, Jun 24, 2020 at 12:16 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-06-22

மாணிக்கவாசகர் குருபூஜை - 2020 (ஆனி மகம் - 2020-06-25 USA / 2020-06-26 India)

-------------------------

1) --- (சந்தக் கலிவிருத்தம் - “தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்) ---


கடைபாற் கடலின் விடமுண் மிடறன்

சடையிற் புனலன் தனையே குருவா

அடையும் புகழார் அருள்வா சகம்நற்

படைநம் பழவல் வினைபாற் றிடுமே.


வி. சுப்பிரமணியன்



kadai pARkadalin - version-2.m4a
kadai pARkadalin - version-1.m4a

Siva Siva

unread,
Jul 10, 2021, 10:26:50 AM7/10/21
to santhavasantham

2021-07-02

மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)

------------------------

1) --- சந்தக் கலிவிருத்தம் - "தானன தனதானா தானன தனதானா" ----

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்")


கூடலில் நரியெல்லாம் குதிரைகள் எனநல்கும்

ஆடலை மகிழ்வானை ஆரணப் பொருளானை

தோடணி பெருமானைத் துதிமணி மொழிபாடி

வீடடை திருவாத வூரர தடிபோற்றி.


வி. சுப்பிரமணியன்

Vis Gop

unread,
Jul 10, 2021, 12:53:28 PM7/10/21
to santhav...@googlegroups.com
நரியைப் பரியாக்கி நாடகம் செய்தான்
கரியின்றோல் போர்த்துக் கரந்து!
கோபால். 
Sent from my iPhone

Siva Siva

unread,
Jul 12, 2021, 8:10:29 AM7/12/21
to santhavasantham

2021-07-02

மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)

------------------------

2) --- சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானாதன தானாதன தானா") ----

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா")


கருமாலொடு மலரானிவர் காணற்கரி தானான்

தருநீழலில் அவனேயொரு குருவாயடை சீரார்

திருவாசகம் உரைசெய்தவர் சிவனும்படி எழுத

வருநோயறு மணிவாசகர் மலராரடி போற்றி.


வி. சுப்பிரமணியன்

Ramamoorthy Ramachandran

unread,
Jul 17, 2021, 12:25:15 AM7/17/21
to Santhavasantham
மகத்தில் மற்றாரும் காணாப் பெருவாழ்வில்

இகத்தில் பரத்தின் எழிலைச் - சகம்போற்றக்

கண்டார் மணிவாக்கர் காண்போம் அவர்வாக்கில்

மண்டுந்தே னுண்டு மகிழ்ந்து!
- புலவர் இராமமூர்த்தி 

On Mon, Jul 12, 2021, 17:40 Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-07-02

மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)

------------------------

2) --- சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானாதன தானாதன தானா") ----

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா")


கருமாலொடு மலரானிவர் காணற்கரி தானான்

தருநீழலில் அவனேயொரு குருவாயடை சீரார்

திருவாசகம் உரைசெய்தவர் சிவனும்படி எழுத

வருநோயறு மணிவாசகர் மலராரடி போற்றி.


வி. சுப்பிரமணியன்


On Sat, Jul 10, 2021 at 10:26 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-07-02

மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)

------------------------

1) --- சந்தக் கலிவிருத்தம் - "தானன தனதானா தானன தனதானா" ----

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்")


கூடலில் நரியெல்லாம் குதிரைகள் எனநல்கும்

ஆடலை மகிழ்வானை ஆரணப் பொருளானை

தோடணி பெருமானைத் துதிமணி மொழிபாடி

வீடடை திருவாத வூரர தடிபோற்றி.


வி. சுப்பிரமணியன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 17, 2021, 2:51:44 PM7/17/21
to சந்தவசந்தம்
>வீடடை திருவாத வூரர தடிபோற்றி. -  வூரா ரடிபோற்றி ? 

On Mon, Jul 12, 2021 at 8:10 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-07-02

மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)

------------------------


On Sat, Jul 10, 2021 at 10:26 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-07-02

மாணிக்கவாசகர் குருபூஜை - 2021 (ஆனி மகம் - 2021-07-13)

------------------------

1) --- சந்தக் கலிவிருத்தம் - "தானன தனதானா தானன தனதானா" ----

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்துப்")


கூடலில் நரியெல்லாம் குதிரைகள் எனநல்கும்

ஆடலை மகிழ்வானை ஆரணப் பொருளானை

தோடணி பெருமானைத் துதிமணி மொழிபாடி

வீடடை திருவாத வூரர தடிபோற்றி.


வி. சுப்பிரமணியன்

--

Siva Siva

unread,
Jul 17, 2021, 6:57:31 PM7/17/21
to santhavasantham
"திருவாதவூரரது அடிபோற்றி" என்பது ஓசையிலோ இலக்கணத்திலோ சரியாக இல்லையா?

3.94.5

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய

அக்கினொ டரவசைத் தீரே

அக்கினொ டரவசைத் தீரும தடியிணை

தக்கவ ருறுவது தவமே.


வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 17, 2021, 9:06:46 PM7/17/21
to சந்தவசந்தம்
உடனடியாக என் கண்ணாடியை மாற்ற வேண்டும்! வூரர தடிபோற்றி”. -என்பதை வூரா தடிபோற்றி  என்று நான் படித்ததன் விளைவு  இது.  மன்னிக்கவும்.

அனந்த்

On Sat, Jul 17, 2021 at 6:57 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
"திருவாதவூரரது அடிபோற்றி" என்பது ஓசையிலோ இலக்கணத்திலோ சரியாக இல்லையா?

3.94.5

Siva Siva

unread,
Jul 18, 2021, 8:08:46 AM7/18/21
to santhavasantham
No problem. It was Siva's wish that I should re-read this verse!

Siva Siva

unread,
Jul 2, 2022, 8:38:21 AM7/2/22
to santhavasantham

மாணிக்கவாசகர் குருபூஜை - (ஆனி மகம் - 2022-07-03 USA / India )

----------------

(வண்ணவிருத்தம்;

தனதனதனத் .. தனதான )

(பகலிரவினில் - திருப்புகழ் - சென்னிமலை)


தருநிழலினிற் .. குருவாகிச்

.. சடையிடைநதிப் .. பெருமானே

வருமொருசிறப் .. புடைநேயர்

.. மணிமொழியுரைத் .. துலகோர்கள்

இருவினையறுத் .. திடுமாறே

.. இனிதருளுநற் .. றவர்தூய

திருவடிகளைப் .. பணிவோமே

.. சிவனுலகினைப் .. பெறுவோமே.


V. Subramanian


Siva Siva

unread,
Jun 22, 2023, 6:01:02 PM6/22/23
to santhavasantham

மாணிக்கவாசகர் குருபூஜை - (ஆனி மகம் - 2023-06-23 USA)

------------------------

(ருபாயி அமைப்பில்)

(சந்தக் கலிவிருத்தம் - தானா தனனா தானதனா தானதனா )

(1,2,4-ஆம் அடிகளின் ஈற்றில் இயைபு)


தீரா வினையால் சேர்வதுநாம் காண்மிடியே

ஓராய் மனமே உம்பரிலேற் றும்படியே

வாரார் முலையாள் கோன்குருவாய் வந்தருளும்

சீரார் மணியார் வாசகரின் சேவடியே.


தீரா வினையால் சேர்வது நாம் காண்-மிடியே - தீராத வினையால் வந்தடைவது நாம் அனுபவிக்கும் துன்பம்/வறுமை; (மிடி - தரித்திரம்; துன்பம்);

ஓராய் மனமே உம்பரில் ஏற்றும்படியே - மனமே எண்ணுவாயாக, நம்மைச் சிவலோகத்திற்கு ஏற்றுமாறு / ஏற்றும் படியை; (ஓர்தல் - எண்ணுதல்); (உம்பர் - வானம்); (ஏற்றும்படி - 1. ஏற்றுமாறு; 2. ஏற்றும் படி - ஏற்றுகின்ற படியை);

வார் ஆர் முலையாள் கோன் குருவாய் வந்தருளும் - கச்சு அணிந்த முலையையுடைய உமைக்குக் கணவன் குருவாகி வந்து அருள்செய்த;

சீர் ஆர் மணி ஆர் வாசகரின் சேவடியே - பெருமை மிக்க, மணி போன்ற வாசகங்களைப் பாடியருளிய, மாணிக்கவாசகரது சிவந்த திருவடியை;


V. Subramanian


On Sat, Jul 2, 2022 at 8:38 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Anand Ramanujam

unread,
Jun 22, 2023, 6:24:01 PM6/22/23
to santhav...@googlegroups.com
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி அந்தமிலா ஆனந்தம் தந்தவராகிய மணிவாசகப் பெருமானின் சேவடியைப் போற்றும் திருப்பாடல் மிக அருமை!

 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 23, 2023, 9:40:38 AM6/23/23
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Jul 8, 2024, 8:31:49 PM7/8/24
to santhav...@googlegroups.com

2024-05-04

மாணிக்கவாசகர் துதி - ஆனி மகம் - 2024 (July 9)

----------------

(வஞ்சித்துறை - தனனா தனதான - சந்தம்)


1)

பணியே ஒருதாரா

அணிவான் குருவாய்ச்சேர்

மணிவா சகர்பாடல்

பிணிதீர் அமுதாமே.


பணியே ஒரு தாரா அணிவான் குருவாய்ச் சேர் - பாம்பையே ஒரு மாலையாக அணிந்த பெருமானே குருவாகி அடைந்த; (பணி - பாம்பு); (தார் - மாலை);

மணிவாசகர் பாடல் பிணி தீர் அமுது ஆமே - மாணிக்கவாசகரது பாடல்கள் நம் பிறவிப்பிணியைத் தீர்க்கும் அமுதம் ஆகும்;


2024-08-13

2)

குருவாய் அரனாரே

வருமோர் சிவஞானி

அருள்வா சகமோதில்

மருவா வினைதானே.


குருவாகிச் சிவபெருமானே வரப்பெற்ற ஒப்பற்ற சிவஞானியான மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகத்தை ஓதினால் வினையெல்லாம் நீங்கும்.


V. Subramanian

Ramamoorthy Ramachandran

unread,
Jul 9, 2024, 2:38:05 AM7/9/24
to santhav...@googlegroups.com

வழியில் குருவாகி
மொழியில் பொருளாகும்
எழிலன் திறமோதில்
பழியும் ஒழிவானே!


புலவர் இராமமூர்த்தி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 9, 2024, 10:05:30 AM7/9/24
to santhav...@googlegroups.com
Nice.

ஒருவன் ஓதினால் அவன் பழிகள் நீங்கும் என்ற பொருள் என்று கொள்கின்றேன்.

V. Subramanian

Siva Siva

unread,
Jun 29, 2025, 12:13:51 AM6/29/25
to santhav...@googlegroups.com

2025-04-18

மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2025

----------------

(ஈரடிமேல் வைப்பு ;

தானான தானான தானா - தான

.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)

(அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்)

(mārgabandhu stotram - https://sanskritdocuments.org/doc_shiva/maargabandhu.html?lang=iast

A clip on YouTube: https://www.youtube.com/watch?v=1n1BxKU2cJg )


முற்குறிப்பு: இப்பாடலில், ஓர் அடியில் தானா என்ற சந்தம் அமையும் இடங்களில் நிறுத்திப் பாடப்பெறும். ஒவ்வோர் அடியிலும் அந்த இடங்களிடையே இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.


ஆடும்பி ரான்தன்னை ஏரார் - சொற்கள்

.. ஆர்வாச கம்கொண்டு நைந்தேத்து சீரார்

பாடும்தொ ழும்பர்க்கு வானம் - தந்து

.. பற்றோடு பாவங்கள் தீர்க்கின்ற கானம்

அல்நெஞ்சை விட்டோடு மன்றே - தாழும்

.. அவ்வாத வூரர்க்கு நம்சென்னி இன்றே.


ஆடும் பிரான்தன்னை ஏர் ஆர் சொற்கள் ஆர் வாசகம்கொண்டு நைந்து ஏத்து சீரார் - கூத்தப்பெருமானை அழகும் நன்மையும் மிகுந்த சொற்கள் நிறைந்த திருவாசகத்தால் உருகித் துதித்த புகழினர்;

பாடும் தொழும்பர்க்கு வானம் தந்து பற்றோடு பாவங்கள் தீர்க்கின்ற கானம் - பாடுகின்ற தொண்டர்களுக்குச் சிவலோகத்தை அளித்து, அவர்களது பற்றுகளையும் பாவங்களையும் தீர்க்கின்ற பாட்டு;

அல் நெஞ்சை விட்டு ஓடுமன்றே - மனத்தில் இருந்த இருள் நீங்கும்;

தாழும் அவ்-வாதவூரர்க்கு நம் சென்னி இன்றே - (அத்தகைய திருவாசகத்தை நமக்கு அளித்த) அந்தத் திருவாதவூர் அடிகளுக்கு நம் தலை இன்று வணங்கும்;

இமயவரம்பன்

unread,
Jun 29, 2025, 5:12:44 AM6/29/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான கானம்! 

On Jun 29, 2025, at 12:13 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 29, 2025, 8:47:47 AM6/29/25
to santhav...@googlegroups.com
மிக அருமை.

ஆனந்தக் களிப்பில் மனம் துள்ளச் செய்யும் ராகதாள வடிவம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 29, 2025, at 00:13, Siva Siva <naya...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Jun 29, 2025, 8:50:37 AM6/29/25
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான மாணிக்கவாசகர் துதி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 29, 2025, at 08:47, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

மிக அருமை.

Siva Siva

unread,
Jun 18, 2026, 10:35:05 PM (6 days ago) Jun 18
to santhav...@googlegroups.com

2026-05-10 (ஆனி மகம் - 19-Jun-2026)

மாணிக்க வாசகர் துதி - மாணிக்க வாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2026

-------------

(வண்ணவிருத்தம்;

தானத்த தானன .. தனதான)


மோனத்தில் நான்மறை .. விரியாலன்

.. மூவர்க்கு(ம்) நாதனொர் .. குருவாகி

ஞானத்தை ஓதிட .. வரவாரா

.. நாருற்று வார்கழல் .. அடைநேயர்

கானத்தில் ஆடிய .. பெருமானைக்

.. காதற்சொல் மாலைகள் .. அவைபாடி

வானத்து வாழ்வினை .. அடைதூயர்

.. மாணிக்க வாசகர் .. அடிவாழ்க.


பதம் பிரித்து:

மோனத்தில் நான்மறை விரி-ஆலன்,

.. மூவர்க்கு(ம்) நாதன், ஒர் குரு ஆகி

ஞானத்தை ஓதிட வர, ஆரா

.. நார்-உற்று வார்கழல் அடை-நேயர்;

கானத்தில் ஆடிய பெருமானைக்

.. காதற்-சொல்-மாலைகள் அவை பாடி,

வானத்து வாழ்வினை அடை-தூயர்;

.. மாணிக்க வாசகர் அடி வாழ்க.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மோனத்தில் நான்மறை விரி-ஆலன் - (மோனம் - மௌனம்); (விரித்தல் - உபதேசித்தல்); (ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் இருப்பவன்);

மூவர்க்கு(ம்) நாதன்

ஒர் குரு ஆகி ஞானத்தை ஓதிட வர, ஆரா நார்-உற்று வார்கழல் அடை-நேயர் - (நார் - அன்பு; ஆரா நார் - போதும் என்று அமையாத அன்பு); (வார்தல் - நீள்தல்); (அடைதல் - சரண்புகுதல்);

கானத்தில் ஆடிய பெருமானைக் காதற்-சொல்-மாலைகள் அவை பாடி வானத்து வாழ்வினை அடை-தூயர் - (கானம் - காடு - சுடுகாடு); (வானம் - இங்கே, சிவலோகம்);

மாணிக்க வாசகர் அடி வாழ்க


V. Subramanian 


VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 18, 2026, 10:50:30 PM (6 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
அற்புதமான மணிவாசகர் துதி. நன்றி.

அனந்த்

Siva Siva

unread,
Jun 19, 2026, 10:18:38 AM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com
Thanks.
Reply all
Reply to author
Forward
0 new messages