கொடுத்த கருத்திற்கு விடுத்த
வெண்பா- 6
நண்பரின் கருத்தும் வேண்டுகோளும்:
கொடுத்த கருத்து:
" என்னில் இருப்பவன் உன்னில் இருக்கையில் (அத்வைத வேதாந்தத்தின் சாரம்), யார்நல்லோன்,யார் தீயோன், யார் குற்றம், யார்செய்தார் யாரறிவார், யாமொன்றும் அறியோம்பராபரமே." இது எந்தன் கூற்று.
(கடவுளின் இயக்கத்தில் குற்றம் புரிந்தவனும், குற்றமற்றவனும், பகைவனும்,நண்பனும்பங்காளிகள் ஆகி விடுகின்றோம்)
இரண்டாவது
மெய் என்றால் உண்மை என்றும்,உடல் என்றும் கூறுவர். அவ்வாறு இருக்கையில்,
"காயமே இது பொய்யடா,வெறும் காற்றடைத்த பையடா" என்று பாடிச் சென்றிருக்கிறார் ஒருஞானி.
இங்கே மெய், பொய்யாகிறது அல்லது இரண்டிற்கும் வித்தியாசமின்றி போகிறது. ஆகவேமெய்யும், பொய்யும் ஒன்றே என்று எடுத்துக் கொள்ளலாமோ? இது மனிதன் ஏற்படுத்திக்கொண்ட பாகுபாடு or concept என்பது என் தாழ்மையான கருத்து.
ஒன்று வேதாந்தம், இன்னொன்று தத்துவம், இது பற்றி
பஃறொடை வெண்பா செய்தால் நன்றாக
இருக்கும்.
விடுத்த வெண்பா:
பலவிகற்பப் பஃறொடை வெண்பா
ஒன்றாகும் மெய்ப்பொருள் உண்மை
உணருங்கால்
புன்மனத்தார் நன்மனத்தார் என்றாமோ -
ஒன்றாம்
அவனமைத்த அண்டத்தில் யாவரும்
என்னில்
தவறாமோ., மெய்யாம் தகைமை -
பவந்தன்னில்
காயமும் காற்றடைத்த பொய்ப்பையாய்க் கண்டக்கால்
மாயுலகில் பொய்ம்மெயெனும் மாற்றமிலை - ஏய
உணர்த்திட ஈசன் உதவிடமுன் தோன்றக்
கணநேரத்(து) உள்ளில் களிப்பு.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
14/02/2026