*கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா*
*ஈற்றடி:*
தந்தைசொல் கேட்டல் தவறு
விடுத்த வெண்பா
மந்தையில் மேயும் மறியொக்கும் மானிடரே/
சொந்தமாய்ச் சிந்திக்காச் சூனியர் - வந்தவினை/
முந்திவர நிந்தனையில் பந்தமிலார் கூறுவது/
“தந்தைசொல் கேட்டல் தவறு”/
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
15/06/2026