புத்தகம்

11 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 11, 2025, 11:09:49 PM8/11/25
to santhavasantham

புத்தகம்

(ஆண்டுக்கணக்கு நினைவில்லை. 40 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் ஒரு கவியரங்கில் , கவியரங்கம் நடந்துகொண்டிருக்கும் போதே பாரதி கலைக்கழகத் தலைவர் சுராஜ் . புத்தகத்தின் பெருமை பற்றி  ஒரு கவிதை இன்னும் அரை மணி நேரத்தில் எழுதி இங்கே கவிஞர்கள் படிக்கவேண்டும். எத்தனை பேர் எழுதுகிறார்கள் பார்க்கலாம் என்றார். . 10 நிமிடங்களுக்குள் எழுதி வழங்கிய கவிதை இது.

துடிப்பு மிக்க என்மகன்
     துள்ளித் துள்ளி வந்தவன்
கிடைத்த தாள்கள் யாவையும்
     கிழித்துக் கிழித்துத் தள்ளினான்
அடிப்ப தற்கு வந்த என்
     அகமு டையாள் தன்னையே
தடுத்துச் சொன்னேன் “கண்மணி
     தண்டனையார் கொடுப்பது?

எடுத்துத் தாளைக் கிழித்துநீ
     என்ன என்ன செய்கிறாய்?
துடைக்கிறாய்நீ அழுக்கினைத்
     தொடர்ந்து குழந்தை மலத்தினை
எடுக்கப் புத்த கத்திலே
     இருந்தும் தாளைக் கிழிக்கிறாய்
படிப்ப தற்குப் புத்தகம்
     பையனுக்கும் உணர்த்துவாய்

உன்னை முன்னே திருத்துநீ
     உன்கு ழந்தை கண்முனே
என்றும் காலை மாலையும்
     இனிய புத்த கத்தினை
நன்று நீயும் படித்திட
     நமது மகனும் படிக்கிறேன்
என்று சொல்வான் என்றனன்
     ஏற்றுக்கொண்டாள் என் துணை.

படிப்பதற்கே புத்தகம்
 பண்பளிக்கும் புத்தகம்
அடுத்துச் சேரும் நாள்களில்
  ஆக்கம் சேர்க்கும் புத்தகம்
கொடுப்ப வற்றுள் நன்மைகள்
  கூட்டும் பரிசு புத்தகம்
எடுத்துச் செல்லும் செல்வமாய்
  இருக்கும் செல்வம் புத்தகம்.

இலந்தை

இமயவரம்பன்

unread,
Aug 12, 2025, 6:13:37 AM8/12/25
to santhav...@googlegroups.com, santhavasantham
புத்தகத்தின் புனிதத்தை உணர்த்தும் கவிதைகள் மிகச் சிறப்பு, தலைவரே!

On Aug 11, 2025, at 11:09 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

படிப்பதற்கே புத்தகம்
 பண்பளிக்கும் புத்தகம்
அடுத்துச் சேரும் நாள்களில்
  ஆக்கம் சேர்க்கும் புத்தகம்
கொடுப்ப வற்றுள் நன்மைகள்
  கூட்டும் பரிசு புத்தகம்
எடுத்துச் செல்லும் செல்வமாய்
  இருக்கும் செல்வம் புத்தகம்.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAJKhu6PDQbhxp%3Dcoznv%3DD0RXaniuce0JvR4Jt52x6W6w%40mail.gmail.com.

Siva Siva

unread,
Aug 12, 2025, 9:22:35 AM8/12/25
to santhav...@googlegroups.com
Nice.

2025-08-12
புத்தகம்
----------------
(வெண்பா)

வந்தபணம் எஞ்சாமல் வாங்கினேன் புத்தகங்கள்
எந்த அறையிலும் இல்லையிடம் - நொந்துரைத்தாள்
கட்டுகளைக் கண்டு கமழ்குழலாள் கட்டுக
எட்டடுக்குப் புத்தகம் என்று.

V. Subramanian

On Mon, Aug 11, 2025 at 11:09 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

புத்தகம்

(ஆண்டுக்கணக்கு நினைவில்லை. 40 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் ஒரு கவியரங்கில் , கவியரங்கம் நடந்துகொண்டிருக்கும் போதே பாரதி கலைக்கழகத் தலைவர் சுராஜ் . புத்தகத்தின் பெருமை பற்றி  ஒரு கவிதை இன்னும் அரை மணி நேரத்தில் எழுதி இங்கே கவிஞர்கள் படிக்கவேண்டும். எத்தனை பேர் எழுதுகிறார்கள் பார்க்கலாம் என்றார். . 10 நிமிடங்களுக்குள் எழுதி வழங்கிய கவிதை இது.

 ...

Ram Ramakrishnan

unread,
Aug 12, 2025, 3:57:10 PM8/12/25
to santhav...@googlegroups.com
கமழ்குழலாள் - அருமையான சொற்பிரயோகம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 12, 2025, at 09:22, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 12, 2025, 4:32:40 PM8/12/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நகைச்சுவை வெண்பா மிக நன்று! 

On Aug 12, 2025, at 9:22 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Aug 12, 2025, 9:58:33 PM8/12/25
to santhav...@googlegroups.com
Thanks Ram & Anand.

V. Subramanian

Kaviyogi Vedham

unread,
Aug 13, 2025, 10:46:23 AM8/13/25
to santhav...@googlegroups.com
abaaram. karuththu  mikkathu,
 yogiyar

On Mon, Aug 11, 2025 at 11:09 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages