நம்பிக்கை

6 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Feb 1, 2026, 6:30:58 PM (5 days ago) Feb 1
to Santhavasantham
நம்பிக்கை
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

நம்பிக்கை ஒன்றாலே உருளும் ஞாலம்
… நடப்பதெலாம் நன்றெனவே நகரும் காலம்
நம்பிக்கை ஒன்றால்நம் துயரம் போகும்
… நஞ்(சு)அனைய வெம்பகைஅன்(பு) அமுதம் ஆகும்
நம்பிக்கை ஒன்றால்நற் றெளிவு பாயும்
… நாள்தோறும் நலித்திடு(ம்)உள் ளிருளைக் காயும்
நம்பிக்கை ஒன்றாலே நாவில் என்றும்
… நயமிகுநற் கவிதைநடை போடும் அன்றோ!  (1)

நம்பிக்கை ஒன்றால்நம் வாழ்வு மாறும்
… நதிபோலத் தடைதாண்டித் தான்முன் னேறும்
நம்பிக்கை ஒன்றாலே நசியும் பொய்யும்
… நலந்தருமெய்ப் பொருளருளில் நனையும் வையம்
நம்பிக்கை ஒன்றால்நம் புண்கள் ஆறும்
… நாளெல்லாம் பொன்னார்ந்த நன்னாள் ஆகும்
நம்பிக்கை ஒன்றாலோர் நட்பில் ஓங்கி
… நாடெல்லாம் நனிசிறக்க வாழும் அன்றோ! (2)

நம்பிக்கை ஒன்றால்மெய்ந் நாடும் உள்ளம்
… நானென்னும் தளையகன்(று)ஓர் ஞானம் கொள்ளும்
நம்பிக்கை ஒன்றாலே வளரும் இன்பம்
… நலங்கடல்போல் அளவற்ற அன்பும் பொங்கும்
நம்பிக்கை ஒன்றால்நம் மயக்கம் நீங்கும்
… நவமெனவே சுடர்தருமோர் உயிர்ப்பும் தோன்றும்
நம்பிக்கை ஒன்றால்வெஞ் சுரமும் கூட
… நளிரின்பச் சோலையென மலரும் அன்றோ! (3)

(சுரம் = பாலைவனம்)

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Feb 1, 2026, 8:26:21 PM (5 days ago) Feb 1
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.


நம்பிக்கை கொண்டோர் நலத்துடன் வாழ்வதும்

அம்புலி கொண்டா னருள்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 1, 2026, at 18:30, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9BF17E78-2AC3-4F4E-88CF-20EA3AE0159C%40gmail.com.

Parthasarathy S

unread,
Feb 1, 2026, 8:39:04 PM (5 days ago) Feb 1
to santhav...@googlegroups.com
வைத்தவொரு நம்பிக்கை வாகா யிருத்துவதைத்
தைத்தவிதம் தான்தருமே தேன்

அன்பன்
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்



--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

இமயவரம்பன்

unread,
Feb 1, 2026, 9:04:43 PM (5 days ago) Feb 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அழகிய குறட்பாக்களுடன் வாழ்த்துரைத்த திரு. ராம்கிராம், திரு. பார்த்தசாரதி ஆகியோருக்கு மிக்க நன்றி !

GOPAL Vis

unread,
Feb 1, 2026, 9:44:31 PM (5 days ago) Feb 1
to santhav...@googlegroups.com
மிக நன்று!
கொபால். 

On Mon, Feb 2, 2026 at 5:00 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
நம்பிக்கை
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

நம்பிக்கை ஒன்றாலே உருளும் ஞாலம்
… நடப்பதெலாம் நன்றெனவே நகரும் காலம்

. . . . . . . . 
- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Feb 1, 2026, 9:52:29 PM (5 days ago) Feb 1
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கோபால்!

Sai Ganesan H

unread,
Feb 2, 2026, 1:51:41 AM (5 days ago) Feb 2
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை! 
சத்ய வேழன். 

இமயவரம்பன்

unread,
Feb 2, 2026, 5:56:32 AM (5 days ago) Feb 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு சத்யவேழன்

Arasi Palaniappan

unread,
Feb 2, 2026, 1:47:17 PM (5 days ago) Feb 2
to சந்தவசந்தம்
அற்புதம் இமயமே!

இமயவரம்பன்

unread,
Feb 2, 2026, 1:52:50 PM (5 days ago) Feb 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி 🙏

Kaviyogi Vedham

unread,
Feb 2, 2026, 8:44:45 PM (4 days ago) Feb 2
to santhav...@googlegroups.com

இமயவரம்பன்

unread,
Feb 2, 2026, 8:57:46 PM (4 days ago) Feb 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி

> On Feb 2, 2026, at 8:44 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
>
> nalla kavithai. vazga, yogiyar
Reply all
Reply to author
Forward
0 new messages