தும்பி (Carpenterbee and Dragonfly)

46 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 7, 2022, 7:58:27 AM6/7/22
to Santhavasantham
*தும்பி (Carpenterbee and Dragonfly)*
------------------------------------------------------------

(1) செயலால் “தும்பி” என்ற பெயர்:
மரத்தைத் துளைக்கும் செயலால் பெயர் பெறுவது தும்பி:
https://en.wikipedia.org/wiki/Carpenter_bee
Carpenter bees are species in the genus Xylocopa of the subfamily Xylocopinae. The genus includes some 500 bees in 31 subgenera.

(2) வடிவத்தால் “தும்பி” என்ற பெயர்:
துமர்/தமர் (Carpenter's gimlet) போல உடல் இருப்பதால் ஊசித் தும்பி (damselfly), தும்பித் தட்டான் (dragonfly) பெயர் பெற்றுள்ளது.

(2a) ஊசித் தும்பி (damselfly)
https://ta.wikipedia.org/wiki/ஊசித்தட்டான்
https://www.flickr.com/photos/jeevansworld/4926850902

(2b) தும்பி (தட்டான் பூச்சி)
கனகத்தும்பி, பொன்னந்தட்டான், பக்கித்தட்டான் என்ற பெயர்களையும் சென்னைப் பேரகராதி தருகிறது.
https://www.youtube.com/watch?v=yV1w20HeDxw
https://en.wikipedia.org/wiki/Dragonfly
http://www.walkthroughindia.com/wildlife/top-20-most-common-dragonflies-found-in-india/
https://www.science.org/content/article/video-reveals-secret-dragonfly-s-backward-flight (இது போல, பலவகையான நகர்தலைச் செய்து விளையாடும் விளையாட்டு தும்பிபறத்தல்).

தும்பி! (A children's rhyme on Dragonfly)
 - குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

    அதோ பாராய் தம்பி!
     அதன் பெயரே தும்பி!
தோட்டம் தன்னில் அங்கு மிங்கும்
     சுற்றிச் சுற்றிப் பறக்குது.
வேட்டை யாடும் துப்பாக் கிபோல்
    மெலிந்து நீண்டு இருக்குது.
    அதோ பாராய் தம்பி!
    அதன் பெயரே தும்பி!
கண்ணா டிபோல் சிறகு மின்னிக்
    காற்றில் மெல்ல அசையுது
கண்ணி ரண்டும் முன்னால் நின்றே
    என்னை, உன்னைப் பார்க்குது
    அதோ பாராய் தம்பி!
    அதன் பெயரே தும்பி!
குட்டிப் பறவைக் கப்பல் போலே
     கீழும் மேலும் செல்லுது!
எட்டிப் பிடிக்கப் போனால் என்னை
    ஏய்த்துப் பறந்து போகுது
     அதோ பாராய் தம்பி!
      அதன் பெயரே தும்பி!

தமிழ்ப் பாடல்களில் தும்பி வரும்போது, அது carpenterbee-ஆ, அல்லது dragonfly-ஆ என அறிதல் கடினம். ஏதாவது சிலபாடல்களில் சொல்லக்கூடிய செய்திகள் இருக்கும். உ-ம்: தும்பி குழல் ஊதும் என்கிறபோது, carpenterbee எனலாம்.

"தமிழே, நீயோர் பூக்காடு நானோர் தும்பி" - பாரதிதாசன்

---------------

தும்பி ‘carpenter bee'; துமர் ‘’ ; துமராணி/தமராணி, துமரூசி/தமரூசிCarpenter's drill, gimlet'
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சங்க காலத்தில், இந்தியச் செம்மொழிகள் இரண்டிலும், சமணர்கள் மட்டும் பயன்படுத்தும் சொல் படிமை. இதனைத்தான் பனம்பாரனார் மகுடமாகத் தொல்காப்பியருக்கு வைத்தார்: படிமையோனே என்பது தொல்காப்பியப் பாயிரம். சமணர்களின் பெரிய தத்துவம், ஓரறிவு, ஈரறிவு, ... ஆறறிவு என உயிரிகளைப் பகுப்பது. இதனையும் தமிழில் தந்தவர் தொல்காப்பியர். புள்ளிக் கோட்பாடு கி.பி. 2-ம் நூற்றாண்டு எனத் தொல்லியல் அறிவிக்கிறது. அதனை வடநாட்டு பிராமி இலிபிக்கு வகுத்து, 18 மெய்களுடன் இலக்கணம் வகுத்தவர் அவர். அவர் கூறும் ஓர் அளியினம்: தும்பி. இதற்கு நான்கறிவு என்கிறார்.
     “நண்டுந் தும்பியும் நான்கு அறிவினவே,
      பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே“ (தொல்.)


தும்பி என்ற பெயர்க்காரணம் பல ஆண்டு முன்னர் சொல்லியுள்ளேன். துமர் > தமர் = துளைத்தல். தும்முதல் - நாசியில் துளைத்து ஏற்படும். தும்முச் செறுப்ப - குறள். அளி இனங்களில் தும்பி ஓர் ஞிமிறு (ஞிமிர்தல் - buzzing, ஞிமிறு = buzzing bee).
தும்பி - காரணப்பெயர். Carpenterbee-கு. https://en.wikipedia.org/wiki/Carpenter_bee
Carpenter bees are species in the genus Xylocopa of the subfamily Xylocopinae. The genus includes some 500 bees in 31 subgenera.[1] The common name "carpenter bee" derives from their nesting behavior; nearly all species burrow into hard plant material such as dead wood or bamboo.

தை என்னும் வினைச்சொல் மிகப் பழையது. பெயர்ச்சொல் ஆகவும் வரும். உ-ம்: தை மாதம். தை தய்ப்பது தையல். தந்தை, முந்தை, நுந்தை, ... என்ற உறவுப்பெயர்கள், சாத்தந்தை, கொற்றந்தை, ஆந்தை, பூந்தை, கண்ணந்தை, ... குலப்பெயர்களிலும் விரவி வரும் பெயர் ‘தை’. தை என்ற வினைச்சொல் தருவது தைக்கன் (தக்கன்/தக்‌ஷன், தச்சன்) என ஐராவதம் விளக்கியுள்ளார் தனது ஹார்வர்ட் நூலில். சென்னை வெளியீட்டுவிழா: http://nganesan.blogspot.com/2022/03/tamil-epigraphy-iravatham-harvard-2003.html
தட்டான் ‘smith' மிகப் பழைய இரும்புப் பொருள்களை உருவாக்கினோர், எஃகு கண்டுபிடித்தோர். ‘தட்டான் புறப்பட்ட வேடிக்கையே’ கவி காளமேகம். அதுபோல், தச்சன் தை எனும் வினையில் வரும் சிந்துவெளித் தொழில் பெயர். த(ய்)க்கன் > தக்‌ஷன் என ஆகிற்று.

துமர் > தமர்:
tamar   n. [M. tamar.] 1. Hole, as in a plank, commonly bored or cut; கருவியால் அமைத்த துளை. தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க. 61).
2. Gimlet, spring awl, boring instrument; துளையிடுங் கருவி
(Note that Indus people invented minute gemstone drilling tools for making bead in jewelry. This is an old technology valued all over the world including the then Sumeria.)

துமராணி > தமராணி, a spring awl, a gimlet.
துமரூசி > தமரூசி, a drill.

tumar 'hole' is even now existing in languages like Marathi.
See the beautiful Dumar Lena caves in Ellora.

துமர்/தமர், துமரூசி, துமராணி

NG

Virus-free. www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages