“ஈயென இரத்தல் இழித்தன்று; ஈயேன் என்றல் அதனினும் இழித்தன்று” - வெண்கலிப்பா

2 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 6, 2026, 7:06:52 PM (6 days ago) Jun 6
to santhavasantham

“ஈயென இரத்தல் இழித்தன்று; ஈயேன் என்றல் அதனினும் இழித்தன்று” (புறதானூறு)


 வெண்கலிப்பா


07625ED6-A9CC-4ED9-875F-D273A58E6FC2

“இறத்தலினும் துயரமுயிர்க் 

 கெதுவுமிலை”வள்ளுவன்சொல்

“வறியோர்க்குப் பொருளீயும் வழியிலையேல் இறத்தல்மேல்”

உரைத்தவன்தன் சொல்லேற்றே 

உலகியலில் நடமிடுவோம் 

இரப்போர்க்கண் வழிநீரை இயன்றளவும் 

துடைத்திடுவோம்

பொருள்பெற்றோர் அறம்விரும்பின் 

பொருள்தன்னைப் பதுக்காதே

அருங்குணத்தால் அற்றாரின் அழிபசியை 

ஒழித்திடுவர்.

உற்றாரும் உறவுமிலா உணர்வதனைப் 

பலர்கொள்வர்

நற்றாயாய்ப் பசிபோக்கும் நற்பணியில் 

நிலைகொள்வோம்

இரத்தலென்ப திலாதாயின் ஈதலினும் 

நன்றதுவாம்

தரலேற்காத் தகைமையது தருதலினும் 

சிறப்புடைத்தாம்

புறநானூ றுறைத்திடுமிப் பொன்னொத்த 

கருத்துகளும்

உறுதலுமே கடினந்தாம் உலகினிலித் 

தருணமதில்

ஈத்துவத்தல் அறியாதோர் இருநிலத்தில் 

மிகவாகிச்

சேர்த்திடுமப் பொருள்யாவும் திரமிலதாய் 

அழிவுறுமே

இரத்தலினைச் சாடினதால் இதயங்கள் 

குளிர்ந்திடுமோ

விருப்பமுடன் இதைநீக்க  விளம்புகுறள் 

வழிச்செல்வோம்

தனக்கெனவே  வாழ்பவரைத்  தரணியினிற்சாடிடுவோம்

இனஞ்செழிக்க ஈதல் இனிது


தரலேற்கா- ஒருவர் கொடுத்ததனை ஏற்காத.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
Reply all
Reply to author
Forward
0 new messages