கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா- மூன்று

3 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jun 14, 2026, 2:35:40 AM (2 days ago) Jun 14
to சந்தவசந்தம்
 ஈற்றடி: அடிமூன் றளந்தா னடி

அடியளந் தான்படி வாழும் நமக்கு
அடிகொளும் இல்லம் அவனே - அடியார்
அடியே அழகாய் அமர்த்தும் அமுதாம்
அடிமூன் றளந்தா னடி   
                           1

அடியார் மனமதை ஆளும் அடியே
அடியார் நலமெலாம் நல்கும் - அடியே
அடியார்க் கரணே அமுதே அதுவே
அடிமூன் றளந்தான் அடி                         2

ஓங்கி வளருமே உன்னத மானதே
வாங்கி மனதில் இருத்தவே - வீங்கும்
செடிவினை தீர்க்கும் உயர்பதம் ஈயும்
அடிமூன் றளந்தான் அடி                           3

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

இமயவரம்பன்

unread,
Jun 14, 2026, 9:26:33 AM (2 days ago) Jun 14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான பொருள் மிகுந்த வெண்பாக்கள்!

“அடியளந் தான்படி வாழும் நமக்கு
அடிகொளும் இல்லம் அவனே”

இங்கே, நமக்கு + அடிகொளும் புணர்ச்சியால் தளை மாறுபடும் என்று நினைக்கிறேன்.

Parthasarathy S

unread,
Jun 14, 2026, 10:29:40 AM (2 days ago) Jun 14
to சந்தவசந்தம்
நன்றி இமயவரம்பரே! அடியளந் தான்படி வாழும் நமக்கும் என்று மாற்றி தளை தட்டாதவாறு அமைக்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages