ஒற்றையடிப் பாதை!

5 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 8, 2025, 11:29:52 PM8/8/25
to santhav...@googlegroups.com

.                  ஒற்றையடிப் பாதை!

ஒற்றையடிப் பாதையிலே இருபுறமும் மரங்கள்
  உரையாடும் கிளிகளென்னும் பச்சைநிற வரங்கள்
கற்றைமுகில் அதைக்கேட்கச் செவிசாய்த்து வருமே
  காமரத்தின் உயர்கிளைகள் உரசிமழை தருமே
உற்றமழைத் துளிகளெல்லாம் இலைநுனியில் தூங்கும்
  ஒண்கதிரும் தூங்குதுளி நீரையங்கு வாங்கும்
முற்றுமங்கு மொழிகடந்த பேரழகு பிறக்கும்
  மோனமெனும் அமைதிநிலை மனத்தில்தேன் நிறைக்கும்

                     (தூங்கும்- தொங்கும்)

                                      —தில்லைவேந்தன்.


Reply all
Reply to author
Forward
0 new messages