அற்புதன் ஆனந்தன் அருளாளன் - அத்திகிரி வரதன் துதி

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
12:33 PM (7 hours ago) 12:33 PM
to santhavasantham

அற்புதன் ஆனந்தன் அருளாளன்  -  காஞ்சிபுரம் ஶ்ரீ அத்திகிரி வரதன் துதி 


(பல்லவி)

அற்புதன் ஆனந்தன் அருளாளன்  - எங்கள் 

… அச்சுதன் கேசவன் அத்தி கிரிவரதன்


(சரணம்)

மாசில் பெருந்தேவி மங்கை மணவாளன்

நேசம் உடையவரை நீங்கா நிலையாளன் .1 . (அற்புதன்)


சோதிச் சுடர்வேள்வித் தோன்றும் எழிலாளன்

தீதில் மறைவாழ்த்தும் சீரார் அரசாளன் 2. (அற்புதன்)


அல்லற் பிறவி அகற்றும் கழலாளன்

தொல்லை வினைகள் துடைக்கும் விழியாளன். 3. (அற்புதன்)


கார்முகில் வண்ணத்தைக் காட்டும் வடிவாளன்

வாரண மாமலைமேல் வாழும் திருவாளன் 4. (அற்புதன்)


(அத்தி கிரி = யானை வடிவ மலை; வாரண மாமலை = அத்திகிரி; பெருந்தேவி = தாயார் திருநாமம்; வரதன் = பெருமாள் திருநாமம்; அருளாளன் = வரதர் பேரருளாளன் என்றும் அழைக்கப்படுகிறார்; உடையவரை = இராமானுசரைப் பற்றியும் மறைமுகமாகக் குறிக்கும்; சோதிச் சுடர் வேள்வி = பிரமனின் யாகத்தில் வரதர் தோன்றி அருள்புரிந்ததாகத் தல வரலாறு; கார்முகில் வண்ணம் = யாககுண்டத்தில் தோன்றியமையால் நிறம் கருத்தவனாகவும் கொள்ளலாம்)


- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
3:03 PM (4 hours ago) 3:03 PM
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 6 Jul 2026, at 12:33 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/072E974C-30B2-4F5E-8B0F-155C8831F050%40gmail.com.

Rajagopalan Soundararajan

unread,
3:46 PM (3 hours ago) 3:46 PM
to சந்தவசந்தம்
"அற்புதன் ஆனந்தன் அருளாளன்" என்பதில், 
यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह ।
आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कदाचन ॥
ஆனந்தவல்லியின் திரண்ட பொருள் அடங்கியிருப்பதாகக் காண்கிறேன்.
  • பிரம்மம் என்பது மிக அதிகமான ஆனந்தம் மட்டுமல்ல.
  • பிரம்மமே ஆனந்த ஸ்வரூபம்.
  • அந்த ஆனந்தத்தை மனத்தாலும், சொல்லாலும் அளவிட முடியாது. இருப்பினும் சொல்லில் வடித்துக் காட்டியுள்ளீர்.

Siva Siva

unread,
3:58 PM (3 hours ago) 3:58 PM
to santhav...@googlegroups.com
Nice.
Thanks for the footnotes.

/  நிறம்  கருத்தவனாகவும்   /
Typo. 
நிறம் கறுத்த....

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages