Hot off the keyboard!
2026-01-31
நாகூர்
-------------
(வண்ணவிருத்தம்;
தானா தான தானா தான
தானா தான .. தனதான)
வீடா வாதை ஆர்பூ வாழ்வில்
.. .. வீணே நாள்கள் .. கழியாது
.. வேறோர் யோனி மீளா வாறு
.. .. வீறார் வீடும் .. அருளாயே
நேடா ஓடு பூமே லானு(ம்)
.. .. நீர்மே லானு(ம்) .. மிகவாட
.. நீள்மா தேவ நூலோ டாமை
.. .. நீறார் மார்பில் .. அணிவோனே
வாடா மாலை நாவார் மாணி
.. .. மாளா வாறு .. தருவோனே
.. வாலார் ஏற தேறீ கோல
.. .. மாதோர் பாக(ம்) .. மகிழ்வோனே
நாடா மூடர் சேரா ஈச
.. .. நாணா நாகம் .. உடையானே
.. நாதா ஓசை ஓவா வேலை
.. .. நாகூர் மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
வீடா வாதை ஆர்-பூ வாழ்வில்
.. .. வீணே நாள்கள் .. கழியாது,
.. வேறு ஓர் யோனி மீளாவாறு
.. .. வீறு ஆர் வீடும் .. அருளாயே;
நேடா ஓடு பூமேலானு(ம்)
.. .. நீர்மேலானு(ம்) .. மிக வாட
.. நீள்-மாதேவ; நூலோடு ஆமை
.. .. நீறு ஆர் மார்பில் .. அணிவோனே;
வாடா மாலை நாவார் மாணி
.. .. மாளாவாறு .. தருவோனே;
.. வால் ஆர் ஏறது ஏறீ; கோல
.. .. மாது ஓர் பாக(ம்) .. மகிழ்வோனே;
நாடா மூடர் சேரா ஈச;
.. .. நாணா நாகம் .. உடையானே;
.. நாதா; ஓசை ஓவா வேலை
.. .. நாகூர் மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(வீடுதல் - ஒழிதல்; நீங்குதல்); (வாதை - துன்பம்); (ஆர்தல் - நிறைதல்); (பூ - பூமி);
(வீறு - தனிப்பட்ட சிறப்பு);
(நேடா - நேடி - தேடி; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);
(ஆமை - இங்கே, ஆமையோடு);
(மாணி - மார்க்கண்டேயர்);
(வால் - வெண்மை);
(நாணா - நாணாக);
(ஓவுதல் - ஒழிதல்); (வேலை - கடல்);
வி. சுப்பிரமணியன்
Hot off the keyboard!
2026-01-31
நாகூர்
-------------
(வண்ணவிருத்தம்;
தானா தான தானா தான
தானா தான .. தனதான)
வீடா வாதை ஆர்பூ வாழ்வில்
.. .. வீணே நாள்கள் .. கழியாது
.. வேறோர் யோனி மீளா வாறு
.. .. வீறார் வீடும் .. அருளாயே
நேடா ஓடு பூமே லானு(ம்)
.. .. நீர்மே லானு(ம்) .. மிகவாட
.. நீள்மா தேவ நூலோ டாமை
.. .. நீறார் மார்பில் .. அணிவோனே
வாடா மாலை நாவார் மாணி
.. .. மாளா வாறு .. தருவோனே
.. வாலார் ஏற தேறீ கோல
.. .. மாதோர் பாக(ம்) .. மகிழ்வோனே
நாடா மூடர் சேரா ஈச
.. .. நாணா நாகம் .. உடையானே
.. நாதா ஓசை ஓவா வேலை
.. .. நாகூர் மேய .. பெருமானே.
. . . . . . .
Another fresh song.
2026-02-02
தருமபுரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான)
(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)
குயிலின்நிற ஓதி மனைவிபெரு வீடு
.. .. குவிநிதிய(ம்) நாடி .. வினைமேவிக்
.. குழியில்விழ ஓடும் அவலமறு மாறு
.. .. குரைகழலில் வாச .. மலர்தூவி
எயில்களவை வேவ மலையைவளை வீர
.. .. எனமொழியின் மாலை .. இடுவேனே
.. இமையவர்கள் வாழ அரியமணி போல
.. .. எரிவிடம தாரு(ம்) .. மிடறானே
கயிலைமலை வீசு தசமுகனின் வாய்கள்
.. .. கதறியழு மாறு .. நெரிபாதா
.. கமலமலர் போல நயனமது தூவு
.. .. கரியன்விழை ஆழி .. அருள்வோனே
சயிலமட மாது முலையமுது வாயர்
.. .. தவமுதல்வர் யாழின் .. வலிதான
.. தமிழ்மறையை ஓது கவுணியர்ப ராவு
.. .. தருமபுர(ம்) மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
குயிலின்-நிற ஓதி மனைவி, பெருவீடு,
.. .. குவி-நிதிய(ம்) நாடி .. வினை மேவிக்,
.. குழியில் விழ ஓடும் அவலம் அறுமாறு
.. .. குரைகழலில் வாச .. மலர் தூவி,
"எயில்களவை வேவ மலையை வளை- வீர"
.. .. என மொழியின் மாலை .. இடுவேனே;
.. இமையவர்கள் வாழ அரிய மணி போல
.. .. எரி-விடமது ஆரு(ம்) .. மிடறானே;
கயிலைமலை வீசு தசமுகனின் வாய்கள்
.. .. கதறி அழுமாறு .. நெரி-பாதா;
.. கமலமலர் போல நயனமது தூவு
.. .. கரியன் விழை- ஆழி .. அருள்வோனே;
சயில-மடமாது முலை-அமுது வாயர்,
.. .. தவமுதல்வர், யாழின் .. வலிது ஆன
.. தமிழ்மறையை ஓது கவுணியர் பராவு
.. .. தருமபுர(ம்) மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(ஓதி - கூந்தல்);
(எயில் - மதில்; அவை - பகுதிப்பொருள்விகுதி);
(ஆர்தல் - பொருந்துதல்; உண்தல்; அணிதல்); (மிடறு - கண்டம்);
(நெரித்தல் - நசுக்குதல்);
(கரியன் - கரியநிறம் உடையவன் - திருமால்; கரியான் என்பதன் குறுக்கல் விகாரம் என்றும் கொள்ளல் ஆம்); (ஆழி - சக்கரம்);
(சயிலம் - சைலம் - மலை); (மடம் - அழகு; மென்மை);
(யாழின் - யாழைவிட; இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);
வி. சுப்பிரமணியன்
.. .. .. .. .. .. ..
வி. சுப்பிரமணியன்-
இனிய சந்தம், சொல்லாட்சி.கோபால்.
On Mon, Feb 2, 2026 at 10:03 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Another fresh song.
2026-02-02
தருமபுரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான)
(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)
...
On Feb 2, 2026, at 19:52, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtuMLzAk7mUpcpQVQdqKjFvD0u_3a1x6EKSCLvkVuTL5OA%40mail.gmail.com.
Latest!
2026-02-03
இராமனதீச்சரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனாதன தாத்தன .. தனதான)
பராவிடு வோர்க்குயர் .. நலனீவாய்
.. பராபர பார்ப்பதி .. ஒருபாகா
அராவினை வீக்கிய .. அரையானே
.. அறாவினை தீர்த்தருள் .. புரியாயே
மராமரம் ஏக்கொடு .. தொளைதோளன்
.. வழாதற(ம்) மேற்கொள .. வலவீரன்
இராமன தீச்சரம் .. உறைவோனே
.. எலாவிமை யோர்க்கொரு .. பெருமானே.
பதம் பிரித்து:
பராவிடுவோர்க்கு உயர்- நலன் ஈவாய்;
.. பராபர; பார்ப்பதி ஒருபாகா;
அராவினை வீக்கிய அரையானே;
.. அறா-வினை தீர்த்தருள் புரியாயே;
மராமரம் ஏக்-கொடு தொளை-தோளன்,
.. வழாது அற(ம்) மேற்கொள-வல வீரன்,
இராமனதீச்சரம் உறைவோனே;
.. எலா-இமையோர்க்கு ஒரு பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(மராமரம் - ஆச்சாமரம்); (ஏ - அம்பு);
வி. சுப்பிரமணியன்
On 3 Feb 2026, at 9:30 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOLnX9SM_nXRZ5dzgZaAz0kNJcgaB2R_DJAShFibqMZCQ%40mail.gmail.com.
A slight variation of the earlier pattern - with one more strong consonant.
2026-02-03
இராமனதீச்சரம்
-------------
(வண்ணவிருத்தம்;
தனாதன தாத்தனத் .. தனதான)
பொலாவினை யாற்பிறப் .. பினில்மூழ்கிப்
.. பொறாவிடர் ஆர்த்திடத் .. தவியாமல்
சொலார்தமி ழாற்கழற் .. புணையோதித்
.. தொழாவுயு(ம்) நேர்த்தியைப் .. பெறுவேனோ
நிலாநதி தேக்குபொற் .. சடைமீது
.. நிலாமதி ஏற்றிவைத் .. தருள்வோனே
எலாமறை ஏத்துமெய்ப் .. பொருளானாய்
.. இராமன தீச்சரப் .. பெருமானே.
பதம் பிரித்து:
பொலா-வினையாற் பிறப்பினில் மூழ்கிப்,
.. பொறா-இடர் ஆர்த்திடத் தவியாமல்,
சொலார்-தமிழாற் கழற்புணை ஓதித்
.. தொழா உயு(ம்) நேர்த்தியைப் பெறுவேனோ?
நிலா-நதி தேக்கு-பொற்சடைமீது
.. நிலா-மதி ஏற்றிவைத்து அருள்வோனே;
எலாமறை ஏத்து-மெய்ப்பொருள் ஆனாய்;
.. இராமனதீச்சரப் பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(ஆர்த்தல் - பிணித்தல்);
(சொலார் - சொல் ஆர்; தொகுத்தல் விகாரம்); (கழற்புணை - திருவடித்தெப்பம்); (தொழா - தொழுது; செய்யா என்னும்வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்); (உயும் - உய்யும்; இடைக்குறை விகாரம்);
(நிலா - 1. நில்லா (=பாய்ந்தோடும்); 2. சந்திரிகை; சந்திரனின் ஒளி);
(எலா - எல்லா); (மறை - வேதம்; உம் தொக்கது);
வி. சுப்பிரமணியன்
2026-02-06
கச்சி ஏகம்பம்
-------------
(வண்ணவிருத்தம்;
தத்தனா தந்தத் .. தனதான)
அச்ச(ம்)மா துன்பத் .. தளைமாய
.. அத்தனே வந்தித் .. திடுவேனே
கச்சதார் கொங்கைப் .. பரைபாகா
.. கைத்தவால் உண்பித் .. துடையானே
உச்சிமேல் இண்டைப் .. பிறைநாகம்
.. ஒட்டிவா ழும்பொற் .. சடையானே
கச்சியே கம்பத் .. துறைவோனே
.. கட்டிலா இன்பப் .. பெருமானே.
பதம் பிரித்து:
அச்ச(ம்) மா-துன்பத்-தளை மாய,
.. அத்தனே, வந்தித்திடுவேனே;
கச்சது ஆர் கொங்கைப்-பரை-பாகா;
.. கைத்த ஆல் உண்-பித்து உடையானே;
உச்சிமேல் இண்டைப்-பிறை நாகம்
.. ஒட்டி வாழும் பொற்சடையானே;
கச்சி-ஏகம்பத்து உறைவோனே;
.. கட்டு இலா இன்பப்-பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(தளை - பந்தம்); (அத்தன் - தந்தை); (வந்தித்தல் - வணங்குதல்);
(பரை - உமாதேவி);
(கைத்தல் - கசத்தல்); (ஆல் - ஆலகாலம்);
(இண்டை - தலையில் அணியும் மாலைவகை);
(கட்டு - மும்மலக்கட்டு);
வி. சுப்பிரமணியன்
2026-02-03
Another song in the same pattern.
2026-02-07
கச்சி ஏகம்பம்
-------------
(வண்ணவிருத்தம்;
தத்தனா தந்தத் .. தனதான)
மட்டதார் கொன்றைச் .. சடைமீது
.. மத்தனே துன்பைக் .. களையாயே
சிட்டனே சண்பைப் .. பதிபாலர்
.. செப்புமா சந்தத் .. தமிழ்நேயா
நட்டனே எண்டிக் .. குடையாக
.. நச்சினாய் வெங்கட் .. படநாகம்
கட்டுமா குன்றச் .. சிலைவீரா
.. கச்சியே கம்பப் .. பெருமானே.
பதம் பிரித்து:
மட்டது ஆர் கொன்றைச் சடைமீது
.. மத்தனே; துன்பைக் களையாயே;
சிட்டனே; சண்பைப்- பதி பாலர்
.. செப்பு- மா சந்தத்- தமிழ் நேயா;
நட்டனே; எண்-திக்கு உடையாக
.. நச்சினாய்; வெங்கட்-படநாகம்
கட்டு- மா குன்றச்- சிலை வீரா;
.. கச்சி-ஏகம்பப் பெருமானே.
(மட்டு - தேன்; வாசனை); (ஆர்தல் - நிறைதல்); (மத்தம் - ஊமத்தமலர்);
(சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன்);
(சண்பை - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);
(நட்டம் - நடனம்);
(நச்சுதல் - விரும்புதல்);
(வெங்கட்படநாகம் = வெம் + கண் + படம் + நாகம்);
வி. சுப்பிரமணியன்
I do not think Sivarathri is mentioned in the available thirumuRai songs.
A special song for the upcoming Sivarathri - 15-Feb-2026.
2026-02-11
பொது (சிவராத்திரி)
----------------
(வண்ணவிருத்தம்;
தனதாத்தன தனதாத்தன தனதாத்தன .. தனதான)
புகழ்பாட்டுகள் அணிநாக்கொடு நினைவாழ்த்திடு(ம்) .. நினைவாகிப்
.. புவிமேற்சுழல் நிலைபோய்ப்பர சுகம்வாய்த்திட .. அருளாயே
இகழ்வார்த்தைகள் உரைதூர்த்தனை மலைபேர்த்தெறி .. மதியானை
.. இடராழ்த்திட மலர்போற்கழல் விரலாற்சிறி .. தடர்நாதா
அகழ்மாற்கணி மலராற்கடி முடிபார்த்திட .. இயலாத
.. அழலாய்ச்சுடர் பவஆர்த்திழி நதிதேக்கிய .. சடையானே
திகழ்பூக்கொடு சிவராத்திரி தனிலேத்திடும் .. அடியாரைச்
.. செடிதீர்த்துயர் உலகேற்றிடும் அதள்வீக்கிய .. பெருமானே.
பதம் பிரித்து:
புகழ்-பாட்டுகள் அணி-நாக்கொடு நினை வாழ்த்திடு(ம்) .. நினைவாகிப்,
.. புவிமேற் சுழல்- நிலை போய்ப் பர- சுகம் வாய்த்திட .. அருளாயே;
இகழ்-வார்த்தைகள் உரை-தூர்த்தனை, மலை பேர்த்து எறி .. மதியானை,
.. இடர் ஆழ்த்திட மலர்போற் கழல்- விரலாற் சிறிது .. அடர்-நாதா;
அகழ்-மாற்கு அணி மலராற்கு அடி முடி பார்த்திட .. இயலாத
.. அழலாய்ச் சுடர்- பவ; ஆர்த்து இழி- நதி தேக்கிய .. சடையானே;
திகழ்-பூக்கொடு சிவராத்திரிதனில் ஏத்திடும் .. அடியாரைச்
.. செடி தீர்த்து உயர்- உலகு ஏற்றிடும் அதள்-வீக்கிய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
சிவராத்திரி என்ற சொல் இடம்பெறும் இன்னொரு பாடல்!
Sivarathri - 15-Feb-2026
2026-02-12
திருலோக்கி (திரைலோக்கி) - (சிவராத்திரி)
----------------
(வண்ணவிருத்தம்;
தனனாத் தனதன தனனாத் தனதன
தனனாத் தனதன .. தனதான)
(கடல்போற் கணைவிழி - திருப்புகழ் - வயலூர்)
இவணாக் கைகள்தரு வினைதீர்த் திடுநெறி
.. .. எனநாற் கவிவல .. மகனார்சொல்
.. இருதாட் புகழ்மணம் உலவாத் தமிழ்அடி
.. .. இடுவேற் கினிதருள் .. புரியாயே
நவனாய்ப் பழையனும் எனவாய்ச் செறியிருள்
.. .. நரியார்த் திடுவன(ம்) .. நடமாடீ
.. நளிராற் றினையடை சடைமேற் பிறையின
.. .. நரையேற் றினையமர் .. கயிலாயா
தவறாத் தவமுனி உயிர்காத் தணுகிய
.. .. சமன்மாய்த் தருளிய .. கழலானே
.. தளராத் தனவுமை ஒருகூற் றினமிகு
.. .. தயையாற் கறையணி .. மிடறானே
சிவராத் திரிதனில் அடிபோற் றிடின்நினை
.. .. திருவாய்த் திடவருள் .. தருவோனே
.. திரளாய்ச் சிறையளி ஒலிகாக் களையணி
.. .. திருலோக் கியிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
இவண் ஆக்கைகள் தரு- வினை தீர்த்திடு நெறி
.. .. என நாற்கவி வல .. மகனார் சொல்-
.. இருதாட்-புகழ்- மணம் உலவாத் தமிழ் அடி
.. .. இடுவேற்கு இனிது அருள் .. புரியாயே;
நவனாய்ப், பழையனும் எனவாய்ச், செறி-இருள்
.. .. நரி ஆர்த்திடு வன(ம்) .. நடமாடீ;
.. நளிர்-ஆற்றினை அடை- சடைமேற் பிறையின;
.. .. நரை-ஏற்றினை அமர்- .. கயிலாயா;
தவறாத் தவமுனி உயிர் காத்து, அணுகிய
.. .. சமன் மாய்த்து அருளிய .. கழலானே;
.. தளராத்-தன-உமை ஒரு கூற்றின; மிகு-
.. .. தயையாற் கறை அணி- .. மிடறானே;
சிவராத்திரிதனில் அடிபோற்றிடின் நினை-
.. .. திரு வாய்த்திட அருள் .. தருவோனே;
.. திரளாய்ச் சிறை-அளி ஒலி-காக்களை அணி-
.. .. திருலோக்கியில் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
V. Subramanian
The two songs for Sivarathri 2026 - (with notes) -
https://drive.google.com/file/d/1IPw6dVYpg-6MTcwI-5-XdJ-iCQjACr1X/view
===
.................
A fresh song.
2026-02-19
பொது
----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தனதன தனதன தனதன
தத்தத் .. தனதான )
(Very similar to the pattern of the following thiruppugazh - but with த் instead of ந் in the pattern -
கொலைமத கரியன - திருப்புகழ் - திருச்செந்தூர்)
பொருளினை அடைதர அனுதினம் இடர்தரு
.. .. பொக்கத் .. துழலாமல்
.. புகழ்தமிழ் கொடுமலர் அடியிணை பரவிடு
.. .. பொற்பைப் .. பெறுவேனோ
பருமலை நிகர்புய(ம்) நினைகரு மலையன
.. .. பத்துத் .. தலையானைப்
.. பலதினம் அழநெரி விரலின புரமெரி
.. .. பற்றப் .. பொருவீரா
அருவரை கொடுகடை கடலிடை விடமெழ
.. .. அச்சுற் .. றடைவானோர்
.. அவரமு துணவொரு கறையணி மிடறின
.. .. அக்கைப் .. புனைமார்பா
முருகனை அருளிய இறையவ உடல்மிசை
.. .. முற்றப் .. பொடிபூசீ
.. முன(ம்)மரு மலிகணை தொடுமத னனைமுனி
.. .. முக்கட் .. பெருமானே.
பதம் பிரித்து:
பொருளினை அடைதர அனுதினம் இடர் தரு
.. .. பொக்கத்து உழலாமல்,
.. புகழ்-தமிழ்கொடு மலர்அடியிணை பரவிடு
.. .. பொற்பைப் பெறுவேனோ?
பருமலை நிகர் புய(ம்) நினை கருமலை அன
.. .. பத்துத் தலையானைப்
.. பலதினம் அழ நெரி விரலின; புரம் எரி
.. .. பற்றப் பொரு-வீரா;
அருவரைகொடு கடை கடலிடை விடம் எழ
.. .. அச்சுற்று அடை வானோர்
.. அவர் அமுது உண ஒரு கறை அணி மிடறின;
.. .. அக்கைப் புனை மார்பா;
முருகனை அருளிய இறையவ; உடல்மிசை
.. .. முற்றப் பொடி பூசீ;
.. முன(ம்) மரு மலி கணை தொடு மதனனை முனி
.. .. முக்கட் பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(இடர் - துன்பம்); (பொக்கம் - பொய்; வஞ்சகம்);
(பரவுதல் - துதித்தல்); (பொற்பு - அழகு; தன்மை);
(பருமை - பெருமை); (நெரித்தல் - நசுக்குதல்);
(பொருதல் - போர்செய்தல்);
(வரை - மலை); (மிடறு - கண்டம்);
(அக்கு - எலும்பு);
(முற்ற - முழுதும்);
(முனம் - முன்னம்); (மரு - வாசனை); (மதனன் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்);
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMLotJNAkJyg03jcoVTZmvYPj8A-izeQp07sUNoAMh_eA%40mail.gmail.com.
A fresh song.
2026-02-20
கச்சி ஏகம்பம்
----------------
(வண்ணவிருத்தம்;
தய்ய தனதன தனதத்தத்.. தனதான )
உய்ய மண(ம்)மலி மலரிட்டுப் .. புகழ்நாமம்
.. உள்கி உயர்தமிழ் அவைசெப்பிப் .. பணிவேனே
மையை அணிதட நயனத்துக் .. கனிவாயாள்
.. வைகும் உடலின அரவக்கச் .. சுடையானே
வெய்ய விடமமு தெனநச்சிப் .. பருகீசா
.. வெல்லும் ஒருபடை விசயற்குத் .. தருவேடா
கையில் அயனது தலைபற்றிப் .. பலிதேர்வாய்
.. கல்லை மலரென மகிழ்கச்சிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
உய்ய மண(ம்)மலி மலர் இட்டுப், புகழ் நாமம்
.. உள்கி, உயர்-தமிழ் அவை செப்பிப் பணிவேனே;
மையை அணி-தட- நயனத்துக் கனி-வாயாள்
.. வைகும் உடலின; அரவக்கச்சு உடையானே;
வெய்ய விடம் அமுதென நச்சிப் பருகு-ஈசா;
.. வெல்லும் ஒரு படை விசயற்குத் தரு-வேடா;
கையில் அயனது தலை பற்றிப் பலிதேர்வாய்;
.. கல்லை மலரென மகிழ்-கச்சிப் பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(உள்குதல் - நினைதல்);
(தடம் - பெருமை; அகலம்); (கனி - கொவ்வைக்கனி); (வைகுதல் - தங்குதல்);
(வெய்ய - கொடிய); (நச்சுதல் - விரும்புதல்);
(படை - ஆயுதம்); (விசயற்கு - விஜயனுக்கு);
V. Subramanian
On Feb 20, 2026, at 20:38, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B803337D-93C8-4DED-BFDF-1F02A0CB0B70%40gmail.com.
Another fresh song.
2026-02-22
நள்ளாறு
----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தனதன தனதன தனதன
தய்யான தான .. தனதான )
கரையில தெனவரு பழவினை அலையது
.. .. கவ்வாத வாறு .. மலராரும்
.. கழலிணை தனில்நறு மண(ம்)மலி தமிழ்மலர்
.. .. கள்ளூறு போது .. புனைவேனே
வரைகொடு கடலது கடைசுரர் அமுதுண
.. .. மையேறு கோல .. மிடறானே
.. மதியிலி மலையெறி தசமுகன் ஒருபது
.. .. வைவாயன் வாட .. நெரிபாதா
திரைநதி இளமதி குரவணி சடையின
.. .. செவ்வான மேனி .. தனிலேரார்
.. சிலைநுதல் மலைமகள் தனையிட(ம்) மகிழ்தரு
.. .. செல்வாபி னாகம் .. உடையானே
நரைவிடை தனையணி கொடியின நகைகொடு
.. .. நள்ளார்கள் ஊர்கள் .. எரிவீரா
.. நலிவற நலமுற அனுதின(ம்) நரர்திரள்
.. .. நள்ளாறு மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
கரையிலது என வரு பழவினை அலையது
.. .. கவ்வாதவாறு .. மலர் ஆரும்
.. கழலிணைதனில் நறுமண(ம்) மலி தமிழ்மலர்
.. .. கள்-ஊறு போது .. புனைவேனே;
வரைகொடு கடலது கடை-சுரர் அமுது உண,
.. .. மை ஏறு கோல .. மிடறானே;
.. மதியிலி மலை எறி தசமுகன் ஒருபது
.. .. வை-வாயன் வாட .. நெரி-பாதா;
திரை-நதி இளமதி குரவு அணி சடையின;
.. .. செவ்வான மேனி .. தனில் ஏர் ஆர்
.. சிலை-நுதல் மலைமகள்தனை இட(ம்) மகிழ்தரு
.. .. செல்வா; பினாகம் .. உடையானே;
நரை-விடைதனை அணி கொடியின; நகைகொடு
.. .. நள்ளார்கள் ஊர்கள் .. எரி-வீரா;
.. நலிவு அற, நலம் உற, அனுதின(ம்) நரர் திரள்
.. .. நள்ளாறு மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(ஆர்தல் - ஒத்தல்); (போது - பூ); (புனைதல் - சூட்டுதல்);
(வரை - மலை);
(நெரித்தல் - நசுக்குதல்);
(திரைதல் / திரைத்தல் - அலைமோதுதல்);
(சிலை - வில்); (நுதல் - நெற்றி);
(நள்ளார் - பகைவர்);
(நலிவு - துன்பம்);
V. Subramanian
Hot off the keyboard.
2026-02-25
பூந்துருத்தி
----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தாந்த தத்த .. தனதான)
கழலிணை தாங்கு சித்தம் .. உடையேனாய்க்
.. கடுவினை நீங்கி முத்தி .. பெறுவேனோ
அழலினை ஏந்தி நட்டம் .. இடுவோனே
.. அணிமதி பாம்பு வைத்த .. சடையானே
எழிலுமை சேர்ந்தி ருக்கு(ம்) .. மணிமார்பா
.. இருளது பூண்க ளத்த .. மண(ம்)நாறும்
பொழிலணி பூந்து ருத்தி .. உறைவோனே
.. புரமொரு மூன்றெ ரித்த .. பெருமானே.
பதம் பிரித்து:
கழலிணை தாங்கு சித்தம் .. உடையேனாய்க்,
.. கடுவினை நீங்கி, முத்தி .. பெறுவேனோ?
அழலினை ஏந்தி நட்டம் .. இடுவோனே;
.. அணிமதி பாம்பு வைத்த .. சடையானே;
எழிலுமை சேர்ந்து இருக்கு(ம்) .. மணிமார்பா;
.. இருளது பூண்-களத்த; .. மண(ம்) நாறும்
பொழில் அணி பூந்துருத்தி .. உறைவோனே;
.. புரம் ஒரு மூன்று எரித்த .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
This short pattern can be a difficult one.
2026-02-27
பொது
----------------
(வண்ணவிருத்தம்;
தாத்தாத்தாத் .. தனதான)
மூத்தாற்றாப் .. பிணிசூழ்முன்
.. மூத்தாய்க்காட் .. படுவேனோ
பூத்தூய்ப்போற் .. றிடுவார்பால்
.. போய்க்காப்பாற் .. றிடுவோனே
நீர்த்தீப்போற் .. சடையானே
.. நீற்றாற்பூச் .. சுடையானே
வேய்த்தோட்பார்ப் .. பதிபாகா
.. வீப்போற்றாட் .. பெருமானே.
பதம் பிரித்து:
மூத்து ஆற்றாப் பிணி சூழ்முன்,
.. மூத்தாய்க்கு ஆட்படுவேனோ?
பூத்-தூய்ப் போற்றிடுவார்பால்
.. போய்க் காப்பாற்றிடுவோனே;
நீர்த்-தீப்-போற் சடையானே;
.. நீற்றாற் பூச்சு உடையானே;
வேய்த்-தோட்-பார்ப்பதி பாகா;
.. வீப்-போற்-றாட் பெருமானே.
(தூய் - தூவி);
(வேய் - மூங்கில்); (தோள் - புஜம்); (பார்ப்பதி - பார்வதி);
(வீ - பூ); (வீ + போல் + தாள் + பெருமான் = வீப்-போற்-றாட்-பெருமான்);
V. Subramanian
2026-03-01
தருமபுரம்
----------------
(வண்ணவிருத்தம்;
தனன தனன தந்த
தனன தனன தந்த
தனன தனன தந்த .. தனதான)
கரிய பெரிய குன்றம் .. அனைய எருமை ஒன்று
.. .. கடவு நமனும் வந்து .. மிகுவாதைக்
.. கயிறு தனையெ றிந்து .. கொடுமை புரியு(ம்) முன்பு
.. .. கழலை நினையும் அன்பை .. உடையேனாய்
விரியு(ம்) மலர்சொ ரிந்து .. நினது புகழ்மொ ழிந்து
.. .. விரவும் அடியர் தங்கள் .. உறவாகி
.. வினைகள் அழியும் இன்பம் .. அதனை அடைய வென்றி
.. .. விடையை மகிழ்வி டங்க .. அருளாயே
பெரிய விடம துண்ட .. கறைய திலகு கண்ட
.. .. பிரமன் அரிவ ணங்க .. உயர்சோதீ
.. பிடியின் நடையை வென்ற .. மலையின் மகளொர் பங்க
.. .. பிணையல் அரவு திங்கள் .. அணிவோனே
சரியை கிரியை என்ற .. வழியில் இருவர் நின்று
.. .. தமிழின் மலர்பு னைந்த .. ஒருநாதா
.. தடமு(ம்) முகில டைந்த .. பொழிலும் அணிவி ளங்கு
.. .. தரும புரம மர்ந்த .. பெருமானே.
பதம் பிரித்து:
கரிய பெரிய குன்றம் .. அனைய எருமை ஒன்று
.. .. கடவு நமனும் வந்து, .. மிகு-வாதைக்
.. கயிறுதனை எறிந்து .. கொடுமை புரியு(ம்) முன்பு,
.. .. கழலை நினையும் அன்பை .. உடையேனாய்,
விரியு(ம்) மலர் சொரிந்து .. நினது புகழ் மொழிந்து
.. .. விரவும் அடியர் தங்கள் .. உறவாகி,
.. வினைகள் அழியும் இன்பம் .. அதனை அடைய, வென்றி
.. .. விடையை மகிழ்-விடங்க .. அருளாயே;
பெரிய விடமது உண்ட .. கறையது இலகு கண்ட;
.. .. பிரமன் அரி வணங்க .. உயர்-சோதீ;
.. பிடியின் நடையை வென்ற .. மலையின்மகள் ஒர் பங்க;
.. .. பிணையல் அரவு திங்கள் .. அணிவோனே;
சரியை கிரியை என்ற .. வழியில் இருவர் நின்று
.. .. தமிழ்-இன்-மலர் புனைந்த .. ஒரு நாதா;
.. தடமு(ம்) முகில் அடைந்த .. பொழிலும் அணி விளங்கு
.. .. தருமபுரம் அமர்ந்த .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(கடவுதல் - ஏறிச்செலுத்துதல்);
(வாதை - துன்பம்);
(வென்றி - வெற்றி); (விடங்கன் - அழகன்);
(இலகுதல் - ஒளிவீசுதல்);
(பிடி - பெண்யானை); (வெல்தல் - ஒத்தல்);
(பிணையல் - மலர்மாலை);
(தடம் - குளம்); (அணி - பக்கத்தில்; சமீபத்தில்); (அணிதல் - பூண்தல்); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);
V. Subramanian
On Mar 1, 2026, at 20:53, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOKO50r5TM1Vx0YcHeGM%2Bvvmv1xQ6g-p%3Dtzc3O0hGVcOg%40mail.gmail.com.
2026-03-02
ஆரூர் அரனெறி (அசலேஸ்வரர் கோயில்)
----------------
(வண்ணவிருத்தம்;
தானா தனதனத் .. தனதான)
சேறார் பவமறத் .. தமிழ்பாடிச்
.. சேடா உனைவழுத் .. திடுவேனே
நீறாய் எயில்விழப் .. பொருதோனே
.. நேயா அயனரிக் .. கரியானே
ஈறாய் முதலெனத் .. திகழ்வோனே
.. ஏறே றியமழுப் .. படையானே
ஆறார் சடைமிசைப் .. பிறைசூடீ
.. ஆரூர் அரனெறிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
சேறு ஆர் பவம் அறத் தமிழ் பாடிச்,
.. சேடா, உனை வழுத்திடுவேனே;
நீறாய் எயில் விழப் பொருதோனே;
.. நேயா; அயன் அரிக்கு அரியானே;
ஈறாய் முதல் எனத் திகழ்வோனே;
.. ஏறு ஏறிய மழுப்படையானே;
ஆறு ஆர் சடைமிசைப் பிறைசூடீ;
.. ஆரூர் அரனெறிப் பெருமானே.
(ஆர்தல் - ஒத்தல்); (பவம் - பிறவி); (சேடன் - பெரியோன்; கடவுள்);
(எயில் - மதில்); (பொருதல் - போர்செய்தல்);
(ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்);
V. Subramanian
Thanks.
சரியை கிரியை என்ற வழியில் இருவர் நின்று தமிழ்-இன்-மலர் புனைந்த ஒரு நாதா - சரியை கிரியை மார்க்கங்களைக் காட்டிய திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் இனிய தமிழ்ப்பாமாலைகள் பாடிப் போற்றிய ஒப்பற்ற தலைவனே; (சரியை கிரியை - சைவசமயம் கூறும் நால்வகை வழிகளில் இரண்டு; அப்பர் காட்டிய வழி சரியை என்றும் சம்பந்தர் காட்டிய வழி கிரியை என்றும் சொல்வர்); (தமிழ்-இன்-மலர் - இன்-தமிழ்-மலர் - இனிய பாமாலை);
V. Subramanian
2026-03-04
நள்ளாறு
----------------
(வண்ணவிருத்தம்;
தய்யான தான தய்யான தான
தய்யான தான .. தனதான)
இல்லாசை யோடு பல்லாசை கூடி
.. .. இவ்வாறு நாளும் .. உழலாமல்
.. எள்காது நேயம் உள்ளூறி ஓதி
.. .. எய்யாத வாழ்வு .. பெறுவேனோ
அல்லாரு(ம்) மேனி மெய்பேசி டானை
.. .. ஐயோவெ னாத .. எனுமாறே
.. அல்காத வாதை செய்பாத ஆறும்
.. .. ஐவாய ராவும் .. அணிவோனே
மெல்லோதி மீது செவ்வீயு(ம்) நாறு
.. .. வெள்வீயும் ஆரும் .. உமையோடும்
.. வில்வேட னாகி வல்லேன(ம்) மாய
.. .. வெல்பாணம் ஈய .. வருவோனே
நல்லோசை மாலை சொல்வாயர் நாளு(ம்)
.. .. நையாத வாறு .. தருவோனே
.. நள்ளார்தம் ஊர்கள் எய்வீர ஏர்கொள்
.. .. நள்ளாறு மேய .. பெருமானே.
பதம் பிரித்து:
இல்-ஆசையோடு பல்லாசை கூடி
.. .. இவ்வாறு நாளும் .. உழலாமல்,
.. எள்காது, நேயம் உள்-ஊறி, ஓதி,
.. .. எய்யாத வாழ்வு .. பெறுவேனோ?
அல்-ஆரு(ம்) மேனி மெய் பேசிடானை,
.. .. "ஐயோ! என் நாத" .. எனுமாறே
.. அல்காத வாதை செய்-பாத; ஆறும்
.. .. ஐவாய்-அராவும் .. அணிவோனே;
மெல்-ஓதி மீது செவ்-வீயு(ம்) நாறு
.. .. வெள்-வீயும் ஆரும் உமையோடும்
.. வில்-வேடன் ஆகி, வல்-ஏன(ம்) மாய,
.. .. வெல்-பாணம் ஈய .. வருவோனே;
நல்-ஓசை மாலை சொல்-வாயர் நாளு(ம்)
.. .. நையாதவாறு .. தருவோனே;
.. நள்ளார்தம் ஊர்கள் எய்-வீர; ஏர்கொள்
.. .. நள்ளாறு மேய .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(இல் - வீடு; மனைவி);
(எள்குதல் - இகழ்தல்; மறத்தல்); (எய்த்தல் - வருந்துதல்);
(அல் - இருள்); (அல்குதல் - குறைதல்; அழிதல்); (வாதை - துன்பம்);
(ஓதி - கூந்தல்); (வீ - பூ);
(ஏனம் - பன்றி);
(நைதல் - தளர்தல்; வாடுதல்; மனம்வருந்துதல்); (தருதல் - அருள்செய்தல்);
(நள்ளார் - பகைவர்); (எய்தல் - பாணம் பிரயோகித்தல்);
(ஏர் - அழகு);
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPww4aHQiXhQ6%2BKwagcoXaNEiFfp%3DWmesqiQ7Y0Hgn-LQ%40mail.gmail.com.
On Mar 5, 2026, at 21:41, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vQskduBsPX-%3DdUbhbyezwp%3DhVA0%3DdJ0pF12KETuUH3hA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNv%3DE_LxvTziWLC%2B7yBaSsQ_34uHcmieDWG0XMbHdrzvQ%40mail.gmail.com.
2026-03-06
பயற்றூர் (திருப்பயத்தங்குடி)
----------------
(வண்ணவிருத்தம்;
தனத்தா தனதன .. தனதான)
மடத்தால் உழல்வது .. கெடநாளும்
.. மணப்பா மலரடி .. இடுவேனே
விடத்தால் மணியணி .. மிடறானே
.. விசைத்தேர் இழிதர .. மலைவீச
எடுத்தான் முடிபுய(ம்) .. அடர்பாதா
.. இடப்பால் அரிவையை .. அமர்நாதா
படத்தார் தனையணி .. மணிமார்பா
.. பயற்றூர் தனிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
மடத்தால் உழல்வது .. கெட, நாளும்
.. மணப்பா மலரடி .. இடுவேனே;
விடத்தால் மணி அணி .. மிடறானே;
.. விசைத்தேர் இழிதர .. மலை வீச
எடுத்தான் முடி புய(ம்) .. அடர்-பாதா;
.. இடப்பால் அரிவையை .. அமர்-நாதா;
படத்-தார்தனை அணி .. மணிமார்பா;
.. பயற்றூர்தனில் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(மடம் - அறியாமை); (கெடுதல் - அழிதல்; தீர்தல்); (பா - பாடல்; பாமலர் - சொல்மலர்); (மலர் - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்க நின்றது. பாமலரடி = பாமலர் & மலரடி);
(மிடறு - கண்டம்);
(விசை - எந்திரம்; பொறி); (புயம் - புஜம் - தோள்); (அடர்த்தல் - நசுக்குதல்);
(பால் - பக்கம்); (அரிவை - பெண்); (அமர்தல் - விரும்புதல்);
படத்-தார்தனை அணி மணிமார்பா - படமுடைய மாலையை (= பாம்பையே மாலையாக) அணிந்த (படம் - பாம்பின் படம்; ஆகுபெயராகப் பாம்பு என்றும் கொள்ளல் ஆம்); (தார் - மாலை); (மணி - அழகு; பவளம்);
V. Subramanian
2026-03-09
கோளிலி
----------------
(வண்ணவிருத்தம்;
தானன தனதன தானன தனதன
தானன தனதன .. தனதான)
வேதனை தருவினை யாலலை கடலணி
.. .. மேதினி மிசைவரு .. பவ(ம்)மாய
.. மேதகு தமிழ்மறை நாவணி நலமருள்
.. .. வேயன புயவுமை .. ஒருபாகா
நீதயை புரியென நான்மறை கொடுபணி
.. .. நேயரின் உயிர்கொல .. வருகாலன்
.. நீணிலம் விழவுதை தாளின சடைமிசை
.. .. நீர்பட அரவிள .. மதிசூடீ
சீதரன் மலர்மிசை யானிவர் தொழவுயர்
.. .. தீயெனும் வடிவினில் .. வருநாதா
.. சீறிய தசமுகன் ஆவென அழநெரி
.. .. சேவடி விரலின .. திரிசூலா
கோதறு தமிழுரை நாவலர் இறையவர்
.. .. கோரிய வண(ம்)நெலை .. அருள்வோனே
.. கோகிலம் இசைபயில் ஏர்மலி பொழிலணி
.. .. கோளிலி தனிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
வேதனை தரு-வினையால் அலைகடல் அணி
.. .. மேதினிமிசை வரு- .. பவ(ம்) மாய,
.. மேதகு தமிழ்மறை நா அணி நலம் அருள்,
.. .. வேய் அன புய-உமை .. ஒரு பாகா;
"நீ தயை புரி" என நான்மறைகொடு பணி
.. .. நேயரின் உயிர் கொல .. வரு-காலன்
.. நீள்நிலம் விழ உதை தாளின; சடைமிசை
.. .. நீர் பட-அரவு இள- .. மதி சூடீ;
சீதரன் மலர்மிசையான் இவர் தொழ உயர்-
.. .. தீ எனும் வடிவினில் .. வரு-நாதா;
.. சீறிய தசமுகன் "ஆ" என அழ நெரி
.. .. சேவடி விரலின; .. திரிசூலா;
கோது-அறு தமிழ் உரை நாவலர்-இறையவர்
.. .. கோரிய வண(ம்) நெலை .. அருள்வோனே;
.. கோகிலம் இசை பயில் ஏர் மலி பொழில் அணி
.. .. கோளிலிதனில் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(மேதினி - பூமி); (பவம் - பிறவி);
(மேதகுதல் - மேன்மையாதல்; சிறத்தல்);
(வேய் - மூங்கில்); (புயம் - புஜம் - தோள்);
(தயை - அருள்); (நீள்நிலம் - நீண்ட இவ்வுலகம் - தரை);
(நீர் - கங்கை); (படம் - பாம்பின் படம்);
(சீதரன் - ஸ்ரீதரன் - திருமால்);
(தசமுகன் - இராவணன்); (நெரித்தல் - நசுக்குதல்);
(கோது - குற்றம்); (நாவலர்இறை - நாவலர்கோன் - சுந்தரமூர்த்தி நாயனார்; அவர் - பகுதிப்பொருள்விகுதி); (வணம் - வண்ணம்); (நெலை - நெல்லை);
(கோகிலம் - குயில்); (பயில்தல் - ஒலித்தல்); (ஏர் - அழகு);
V. Subramanian
2026-03-10
திருத்துறைப்பூண்டி
----------------
(வண்ணவிருத்தம்;
தனத்தனத் தாந்தத் .. தனதான)
குரைப்புடைப் பூம்பொற் .. கழல்பேணிக்
.. குளிர்த்தமிழ்ப் பூங்கொத் .. திடுவேனே
சிரக்கலத் தூண்பெற் .. றுழல்வோனே
.. சிவைக்குவப் போங்கத் .. தருபாகா
அரைத்தநற் சாந்தொத் .. தொளிநீறார்
.. அருத்தவெற் பேந்திப் .. பொருவீரா
திரைச்சடைப் பாம்பைப் .. புனைவோனே
.. திருத்துறைப் பூண்டிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
குரைப்பு-உடைப் பூம்பொற் கழல் பேணிக்
.. குளிர்த்-தமிழ்ப் பூங்கொத்து இடுவேனே;
சிரக்-கலத்து ஊண் பெற்று உழல்வோனே;
.. சிவைக்கு உவப்பு ஓங்கத் தரு-பாகா;
அரைத்த நற்- சாந்து ஒத்து ஒளி-நீறு ஆர்
.. அருத்த; வெற்பு ஏந்திப் பொரு-வீரா;
திரைச்-சடைப் பாம்பைப் புனைவோனே;
.. திருத்துறைப்பூண்டிப் பெருமானே.
(குரைப்பு - ஓசை; ஒலி); (பூ - மென்மை; அழகு; மலர்);
(சிரம் - மண்டையோடு); (கலம் - உண்கலன்); (ஊண் - உணவு; பிச்சை);
(சிவை - பார்வதி);
(சாந்து - சந்தனம்); (அருத்தன் - மெய்ப்பொருளானவன்);
(வெற்பு - மலை); (பொருதல் - போர்செய்தல்);
(திரை - அலை; நதி);
V. Subramanian
2026-03-09
2026-03-11
கன்றாப்பூர்
----------------
(வண்ணவிருத்தம்;
தந்தாத் தானன தனதனத் .. தனதான)
பண்டேத் தேனையு(ம்) நினையவைத் .. தொலிமாலை
.. பண்பாற் பாடிட அருள்தனைத் .. தருவோனே
திண்டோட் கோனழ விரலைவைத் .. தடர்பாதா
.. செந்தீப் போலொளிர் சடைமிசைப் .. பிறைசூடீ
விண்டாட் பூவினை வழிபடச் .. சுதையீவாய்
.. மென்றோட் பாவையை உடலிடத் .. துடையானே
கண்டேத் தூவிய மதனனைச் .. சுடுதீரா
.. கன்றாப் பூருறை நடுதறிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
பண்டு ஏத்தேனையு(ம்) நினையவைத்து ஒலிமாலை
.. பண்பாற் பாடிட அருள்தனைத் தருவோனே;
திண்-தோட்-கோன் அழ விரலை வைத்து அடர்-பாதா;
.. செந்தீப் போல் ஒளிர் சடைமிசைப் பிறைசூடீ;
விண்-தாட்பூவினை வழிபடச் சுதை ஈவாய்;
.. மென்-தோட்-பாவையை உடல்-இடத்து உடையானே;
கண்டு ஏத் தூவிய மதனனைச் சுடு-தீரா;
.. கன்றாப்பூர் உறை நடுதறிப் பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(பண்டு - முன்பு); (ஒலிமாலை - பாமாலை; ஒலி - சொல்); (பண்பு - அழகு; நற்குணம்);
(திண்டோட்கோன் - திண் + தோள் + கோன்); (அடர்த்தல் - நசுக்குதல்);
(விண்டாட்பூ - விண் + தாள் + பூ); (தாட்பூ - தாள்மலர் - திருவடித்தாமரை); (சுதை - அமுதம்);
(மென்றோட்பாவை - மென் + தோள் + பாவை);
(ஏ - அம்பு); (மதனன் - காமன்);
(* நடுதறியப்பர் - இத்தலத்து ஈசன் திருநாமம்);
வி. சுப்பிரமணியன்
2026-03-12
கோட்டூர்
----------------
(வண்ணவிருத்தம்;
தாத்தாத் தனந்தா .. தனதான)
மூத்தீற் றெழுந்தீ .. முழுகாமுன்
.. மூத்தாய்க் கரும்பா .. இடுவேனே
ஏத்தார்க் கிரங்கா .. தவர்கூறும்
.. ஏச்சேற் றிரந்தாய் .. மடவார்பால்
வீத்தூய்ப் பணிந்தார் .. துணையானாய்
.. வேட்டாட் கிடங்கூ .. றுடையானே
கூத்தாட் டுகந்தாய் .. வயலாரும்
.. கோட்டூர்க் கொழுந்தே .. பெருமானே.
பதம் பிரித்து:
மூத்து ஈற்று எழுந்-தீ முழுகாமுன்,
.. மூத்தாய்க்கு அரும்-பா இடுவேனே;
ஏத்தார்க்கு இரங்காது அவர் கூறும்
.. ஏச்சு ஏற்று, இரந்தாய் மடவார்பால்;
வீத் தூய்ப் பணிந்தார் துணை ஆனாய்;
.. வேட்டாட்கு இடங்-கூறு உடையானே;
கூத்தாட்டு உகந்தாய்; வயல் ஆரும்
.. கோட்டூர்க் கொழுந்தே; பெருமானே.
(ஈற்று - ஈற்றில் - கடைசியில்);
(ஏத்துதல் - துதித்தல்); (ஏச்சு - பழிப்பு; நிந்தை); (இரத்தல் - பிச்சையெடுத்தல்); (மடவார் - பெண்கள்);
(வீ - பூ); (தூய் - தூவி);
(வேட்டாள் - மனைவி);
(* கொழுந்தீசர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);
வி. சுப்பிரமணியன்
2026-03-11
2026-03-16
ஓமாம்புலியூர்
----------------
(வண்ணவிருத்தம்;
தானாந் தனனா .. தனதான)
தீமாந் திடவூன் .. அழியாமுன்
.. சீரோங் கியதாள் .. தொழுவேனோ
பூமாங் கழல்ஓர் .. அடியார்வான்
.. போய்வாழ்ந் திடுமா .. றருள்வோனே
ஓர்மான் புரைமா .. திடமானாய்
.. ஊர்பாம் பிளமா .. மதிசூடீ
ஓமாம் புலியூர் .. உறைவோனே
.. ஓடேந் தியவோர் .. பெருமானே.
பதம் பிரித்து:
தீ மாந்திட ஊன் அழியாமுன்,
.. சீர் ஓங்கிய தாள் தொழுவேனோ?
பூ-மாங்-கழல் ஓர் அடியார் வான்
.. போய் வாழ்ந்திடுமாறு அருள்வோனே;
ஓர் மான் புரை-மாது இடம் ஆனாய்;
.. ஊர்-பாம்பு இள-மா- மதி சூடீ;
ஓமாம்புலியூர் உறைவோனே;
.. ஓடு ஏந்திய ஓர் பெருமானே.
2026-03-12
2026-03-18
காளத்தி
----------------
(வண்ணவிருத்தம்;
தானத்த தான தந்த
தானத்த தான தந்த
தானத்த தான தந்த .. தனதான)
(வாசித்த நூல்ம தங்கள் - திருப்புகழ் - கோடைநகர்)
யானத்தை வான டைந்த .. மாடத்தை மாம டந்தை
.. .. ஆகத்தை நாடி நொந்து .. மடியாமுன்
.. ஆர்வத்தி னாலி ரண்டு .. பாதத்தை நான்வ ணங்கி
.. .. ஆர்கட்டி லாத இன்பம் .. அடைவேனோ
வானத்து ளோரெ ழுந்த .. ஆலத்தி னால்வெ ருண்டு
.. .. வாடிப்ப ராவ உண்ட .. மிடறானே
.. வாதிட்ட மால்வி ரிஞ்சி .. கீழுச்சி தேடி அஞ்சி
.. .. மாணுற்ற தாளி றைஞ்ச .. உயர்சோதீ
ஈனத்தை யேநி னைந்த .. மாதுட்ட னார்பு யங்கள்
.. .. ஈரெட்டும் ஈரி ரண்டு(ம்) .. நெரிபாதா
.. ஏர்மிக்க பூவில் ஐந்தை .. ஏவைத்த வேளை வென்றும்
.. .. ஏழைக்கு(ம்) நாடு பங்கு .. தருவோனே
கானத்து வேடர் தங்க .. ணேயப்பு வீரம் அன்று
.. .. காணப்பொ றாமல் அங்கை .. பிடிநாதா
.. காலத்தின் நீளும் அந்த .. நாமத்தை யேவ ழங்கு
.. .. காளத்தி மேய எந்தை .. பெருமானே.
பதம் பிரித்து:
யானத்தை, வான் அடைந்த .. மாடத்தை, மா-மடந்தை
.. .. ஆகத்தை, நாடி நொந்து .. மடியாமுன்,
.. ஆர்வத்தினால் இரண்டு .. பாதத்தை நான் வணங்கி,
.. .. ஆர்-கட்டு இலாத இன்பம் .. அடைவேனோ?
வானத்துளோர், எழுந்த .. ஆலத்தினால் வெருண்டு,
.. .. வாடிப் பராவ உண்ட .. மிடறானே;
.. வாதிட்ட மால் விரிஞ்சி .. கீழ் உச்சி தேடி, அஞ்சி,
.. .. மாண்-உற்ற தாள் இறைஞ்ச .. உயர்-சோதீ;
ஈனத்தையே நினைந்த .. மா-துட்டனார் புயங்கள்
.. .. ஈரெட்டும் ஈரிரண்டு(ம்) .. நெரி-பாதா;
.. ஏர் மிக்க பூவில் ஐந்தை .. ஏ-வைத்த வேளை வென்றும்,
.. .. ஏழைக்கு(ம்) நாடு பங்கு .. தருவோனே;
கானத்து வேடர் தங்கணே அப்பு வீரம் அன்று
.. .. காணப்-பொறாமல் அங்கை .. பிடி-நாதா;
.. காலத்தின் நீளும் அந்த .. நாமத்தையே வழங்கு
.. .. காளத்தி மேய எந்தை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
On Mar 19, 2026, at 07:01, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPbH6hMLQvuPky6%2BUqVOiJ9dAxya_8gPn6qiWqccL_biw%40mail.gmail.com.
Gopal posted a song yesterday using the syllabic pattern "தனதன தாத்தத் x3 தனதான".
I wrote the following song today using a slight variation of that syllabic pattern - (with தாத்த instead of தாத்தத்).
2026-03-29
பொது
----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தாத்த தனதன தாத்த
தனதன தாத்த .. தனதான)
உலகினர் போற்ற நிதியது சேர்க்க
.. .. உளவழி நோக்கி .. மயலாலே
.. உடலினில் மீட்டும் வருநிலை ஆர்க்கும்
.. .. உறுவினை ஈட்டி .. உழலாமல்
இலகிடு வார்த்தை பிணையணி பாக்கள்
.. .. எழிலுறு பூக்கள் .. இருதாளில்
.. இடுநினை வாக்கி அடியர்கு ழாத்தின்
.. .. இடையுறு பேற்றை .. அருளாயே
பலகர(ம்) நீட்டி உயர்வரை பேர்த்த
.. .. பரிவிலி மூர்க்கன் .. நெரிபாதா
.. பணியிமை யோர்க்கு விழையமு தீத்த
.. .. பரிசின காட்டில் .. நடமாடீ
மலைசிலை ஆக்கு விறலின வேற்கண்
.. .. வனமுலை யாட்கு .. மணவாளா
.. மருமலி வீக்கள் அவைகொடு தாக்கு
.. .. மதனுடல் வீட்ட .. பெருமானே.
பதம் பிரித்து:
உலகினர் போற்ற நிதியது சேர்க்க
.. .. உள வழி நோக்கி, .. மயலாலே,
.. உடலினில் மீட்டும் வரு-நிலை ஆர்க்கும்
.. .. உறு-வினை ஈட்டி .. உழலாமல்,
இலகிடு வார்த்தை பிணை-அணி பாக்கள்,
.. .. எழிலுறு பூக்கள் .. இருதாளில்
.. இடு-நினைவு ஆக்கி, அடியர்-குழாத்தின்
.. .. இடை உறு பேற்றை .. அருளாயே;
பலகர(ம்) நீட்டி உயர்-வரை பேர்த்த
.. .. பரிவிலி, மூர்க்கன் .. நெரி-பாதா;
.. பணி-இமையோர்க்கு விழை-அமுது ஈத்த
.. .. பரிசின; காட்டில் .. நடம் ஆடீ;
மலை சிலை ஆக்கு விறலின; வேற்கண்
.. .. வனமுலையாட்கு .. மணவாளா;
.. மரு மலி வீக்கள் அவைகொடு தாக்கு
.. .. மதன்-உடல் வீட்ட .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(மயல் - அறியாமை; மயக்கம்);
(ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்);
(பிணைதல் - சேர்தல்; பிணைத்தல் - கட்டுதல்; தொடுத்தல்);
(வரை - மலை); (பரிவு - அன்பு; பக்தி); (நெரித்தல் - நசுக்குதல்);
(சிலை - வில்); (விறல் - வெற்றி; வீரம்; வலிமை);
(வனம் - அழகு);
(மரு - வாசனை); (வீ - பூ); (வீட்டுதல் - அழித்தல்);
V. Subramanian
Hot off the keyboard!
2026-03-31
கடம்பூர்
----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தாந்த தனதன தாந்த
தனதன தாந்த .. தனதான)
எலும்பு தசைதோல் இணைந்த உடல்வாய்
.. .. இருந்த உயிர்போய் .. இனிநாறும்
.. எடுங்கள் உடனே சுடுங்கள் எனவே
.. .. இரங்கி உறுகேள் .. உரையாமுன்
புலம்பி மடவாள் வருந்த மிகவே
.. .. புரந்த மகனால் .. எரியாமுன்
.. பொருந்து வினைபோய் நலங்கள் உறவே
.. .. புகழ்ந்து நினையே .. பணிவேனே
அலம்பு புனலார் சுருண்ட சடைமேல்
.. .. அலந்த நிலைதீர் .. மதிசூடீ
.. அகழ்ந்த திருமால் உயர்ந்த மலரான்
.. .. அயர்ந்து தொழுமா .. றுயர்சோதீ
சிலம்பு கழலார் பதங்கள் உடையாய்
.. .. சிறந்த கறையார் .. மிடறானே
.. செறிந்த பொழிலார் கடம்பை அமுதே
.. .. சினங்கொள் விடையூர் .. பெருமானே.
பதம் பிரித்து:
எலும்பு தசை தோல் இணைந்த உடல்வாய்
.. .. இருந்த உயிர் போய், .. "இனி நாறும்;
.. எடுங்கள் உடனே, சுடுங்கள்" எனவே
.. .. இரங்கி உறு-கேள் .. உரையாமுன்,
புலம்பி மடவாள் வருந்த மிகவே
.. .. புரந்த மகனால் .. எரியாமுன்,
.. பொருந்து வினை போய் நலங்கள் உறவே
.. .. புகழ்ந்து நினையே .. பணிவேனே;
அலம்பு புனல் ஆர் சுருண்ட சடைமேல்
.. .. அலந்த நிலை தீர் .. மதிசூடீ;
.. அகழ்ந்த திருமால் உயர்ந்த மலரான்
.. .. அயர்ந்து தொழுமாறு .. உயர்-சோதீ;
சிலம்பு கழல் ஆர் பதங்கள் உடையாய்;
.. .. சிறந்த கறை ஆர் .. மிடறானே;
.. செறிந்த பொழில் ஆர் கடம்பை அமுதே;
.. .. சினங்கொள் விடை ஊர்- .. பெருமானே.
(வாய் - ஏழாம்வேற்றுமை உருபு);
(கேள் - உறவினர்);
(புரத்தல் - காத்தல்);
(நினையே - நின்னையே - உன்னையே);
(அலம்புதல் - ஒலித்தல்); (அலத்தல் - துன்புறுதல்);
(ஆர்த்தல் - ஒலித்தல்); (பதம் - பாதம்);
(கடம்பை - கடம்பூர்); (* அமிர்தகடேஸ்வரர் - இத்தல இறைவன் திருநாமம்);
V. Subramanian
தனந்த தனனா தனந்த தனனா
தனந்த தனனா .. தனதான
Hot off the keyboard!
2026-03-31
கடம்பூர்
----------------
(வண்ணவிருத்தம்;
தனந்த தனனா தனந்த தனனா
தனந்த தனனா .. தனதான )
.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNJj5RFr7pHHwxP37uR7XaC3%2BuprMtccBz%2BJNCwNchoeA%40mail.gmail.com.
Fresh off the keyboard!
2026-04-01
மழபாடி
----------------
(வண்ணவிருத்தம்;
தந்தத்தா தந்தத்தா தனதன தனதன .. தனதான)
முற்குறிப்பு: இது பாம்பன் சுவாமிகள் அருளிய "கங்கைக்கோர் இன்பச்சேய்" என்ற பாடலின் சந்தத்தைப் பெரும்பாலும் ஒத்தது.
அப்பாடலில் ஈற்றுச்சீரான "தன்னத்தா" என்ற இடத்தில் இங்கே "தனதான".
உண்டிக்கே வண்டிக்கே மிகுபொருள் வருவழி .. உழலாமல்
.. ஒன்றித்தாள் சிந்தித்தியான் இருவினை அறுசுகம் .. உறுவேனோ
தொண்டர்க்கா அந்திப்போ திருமுறை அவர்மொழி .. உரைதூதா
.. துன்பத்தால் உன்பொற்றாள் அடைமதி தனையணி .. சடையானே
மிண்டுற்றே குன்றைத்தோள் இருபது கொடுபெயர் .. படுமூடன்
.. வெஞ்சொற்போய் வந்தித்தே அழுதிட முடிபுய(ம்) .. நெரிபாதா
வண்டுக்கூண் இன்பத்தேன் தருமலர் மலிபொழில் .. மழபாடி
.. வண்கைச்சீர் வெங்கட்சே இவையுடை அழகிய .. பெருமானே.
பதம் பிரித்து:
உண்டிக்கே வண்டிக்கே மிகு-பொருள் வரு-வழி .. உழலாமல்,
.. ஒன்றித் தாள் சிந்தித்து-யான் இருவினை அறு-சுகம் .. உறுவேனோ?
தொண்டர்க்கா அந்திப்போது இருமுறை அவர்மொழி .. உரை-தூதா;
.. துன்பத்தால் உன் பொற்றாள் அடை-மதிதனை அணி .. சடையானே;
மிண்டுற்றே குன்றைத் தோள் இருபது-கொடு பெயர்- .. படுமூடன்,
.. வெஞ்சொற்போய் வந்தித்தே அழுதிட, முடிபுய(ம்) .. நெரி-பாதா;
வண்டுக்கு ஊண் இன்பத்தேன் தரு-மலர் மலி-பொழில் .. மழபாடி
.. வண்கைச்சீர் வெங்கட்சே இவையுடை அழகிய .. பெருமானே.
(உண்டி - உணவு); (ஏ - எண்ணேகாரம்);
(சிந்தித்தியான் - சிந்தித்து யான்; குற்றியலிகரம்);
(மிண்டு - கல்நெஞ்சம்);
(வண்மை - ஈகை); (வெங்கண் - அழலெழ விழிக்கும் கண்); (சே - எருது);
To get a feel for this rhythm:
கங்கைக்கோர் இன்பச்சேய் - https://youtu.be/ZzQkI0Nxtqo?t=7606
V. Subramanian
2026-04-02
இடைமருதூர்
----------------
(வண்ணவிருத்தம்;
தனதத்தா தனதத்தா தனதன தனதன .. தனதான)
முற்குறிப்பு: இது பாம்பன் சுவாமிகள் அருளிய "அடியைக்கா முறன்மிக்கார்" என்ற பாடலின் சந்தத்தைப் பெரும்பாலும் ஒத்தது. அப்பாடலில் ஈற்றுச்சீரான "தன்னத்தா" என்ற இடத்தில் இங்கே "தனதான".
அதனைப்பார் இதனைக்கேள் எனவிழு புலனசை .. மயலால்நாள்
.. அழிவுற்றே தனுவக்கான் அடைவதன் முனமடி .. பணிவேனோ
மதனைத்தீ நயனத்தால் அவனுடல் எரியுண .. முனியோகீ
.. மதுரைக்கோன் அடிபெற்றாய் கயிறெறி மறலியை .. உதைபாதா
சுதனைத்தா எனவுற்றார் இடரற முருகனை .. அருள்தாதாய்
.. துகிலைப்போல் உழுவைத்தோல் உடையென அரையினில் .. அசைதேவா
வதனத்தால் மதியொத்தாள் கொடியன இடையினள் .. ஒருபாகா
.. வழிபட்டார் வினையைத்தீர் இடைமரு தினிலுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
"அதனைப் பார்; இதனைக் கேள்" என இழு- புலன்-நசை .. மயலால் நாள்
.. அழிவுற்றே தனு அக்-கான் அடைவதன் முனம் அடி .. பணிவேனோ?
மதனைத் தீ- நயனத்தால் அவன்-உடல் எரி-உண .. முனி-யோகீ;
.. மதுரைக்கோன் அடி பெற்றாய்; கயிறு எறி மறலியை .. உதை-பாதா;
"சுதனைத் தா" என உற்றார் இடர் அற முருகனை .. அருள்-தாதாய்;
.. துகிலைப் போல் உழுவைத்தோல் உடை என அரையினில் .. அசை-தேவா;
வதனத்தால் மதி ஒத்தாள், கொடி அன இடையினள் .. ஒருபாகா;
.. வழிபட்டார் வினையைத் தீர் இடைமருதினில் உறை .. பெருமானே.
(நசை - ஆசை); (மயல் - மயக்கம்); (தனு - உடல்);
(மதன் - காமன்); (முனிதல் - கோபித்தல்);
(மறலி - இயமன்);
(சுதன் - மகன்); (உறுதல் - அடைதல்); (தாதை - தந்தை);
(துகில் - நல்லாடை); (உழுவை - புலி); (அசைத்தல் - கட்டுதல்);
(வதனம் - முகம்);
To get a feel for this rhythm:
கங்கைக்கோர் இன்பச்சேய் - https://youtu.be/ZzQkI0Nxtqo?t=7606
V. Subramanian
2026-04-02
இடைமருதூர்
----------------
(வண்ணவிருத்தம்;
தனதத்தா தனதத்தா தனதன தனதன .. தனதான)
முற்குறிப்பு: இது பாம்பன் சுவாமிகள் அருளிய "அடியைக்கா முறன்மிக்கார்" என்ற பாடலின் சந்தத்தைப் பெரும்பாலும் ஒத்தது. அப்பாடலில் ஈற்றுச்சீரான "தன்னத்தா" என்ற இடத்தில் இங்கே "தனதான".
அதனைப்பார் இதனைக்கேள் எனவிழு புலனசை .. மயலால்நாள்
.. அழிவுற்றே தனுவக்கான் அடைவதன் முனமடி .. பணிவேனோ
மதனைத்தீ நயனத்தால் அவனுடல் எரியுண .. முனியோகீ
.. மதுரைக்கோன் அடிபெற்றாய் கயிறெறி மறலியை .. உதைபாதா
சுதனைத்தா எனவுற்றார் இடரற முருகனை .. அருள்தாதாய்
.. துகிலைப்போல் உழுவைத்தோல் உடையென அரையினில் .. அசைதேவா
வதனத்தால் மதியொத்தாள் கொடியன இடையினள் .. ஒருபாகா
.. வழிபட்டார் வினையைத்தீர் இடைமரு தினிலுறை .. பெருமானே.
V. Subramanian
This is a short pattern but can be a bit challenging.
2026-04-03
பொது
----------------
(வண்ணவிருத்தம்;
தத்தந் தத்தந் .. தனதான)
துக்கங் கட்டங் .. கெடநாளும்
.. சொற்சந் தத்தண் .. தமிழாலே
மைக்கண் டத்தின் .. புகழ்பாட
.. வைக்கும் பொற்பென் .. றுறுவேனோ
நக்கன் பித்தன் .. பவனாமம்
.. நச்சும் பொற்குன் .. றனையானே
பைக்கம் புக்குண் .. திருவாளா
.. பட்டுங் கட்டும் .. பெருமானே.
பதம் பிரித்து:
துக்கம் கட்டம் கெட, நாளும்
.. சொற்-சந்தத்-தண் தமிழாலே
மைக்-கண்டத்தின் புகழ் பாட
.. வைக்கும் பொற்பு என்று உறுவேனோ?
நக்கன் பித்தன் பவன் நாமம்
.. நச்சும் பொற்குன்று அனையானே;
பைக்கம் புக்கு உண் திருவாளா;
.. பட்டும் கட்டும் பெருமானே.
(நச்சுதல் - விரும்புதல்);
(பைக்கம் - பயிக்கம் - பிச்சை; भैक्षम् bhaikṣam - 1 Begging);
(பட்டும் - உம் - எச்சவும்மை);
V. Subramanian
2026-04-05
எண்கண்
----------------
(வண்ணவிருத்தம்;
தனன தந்தன தனன தந்தன
தனன தந்தன .. தனதான)
தடநி லந்தனில் அனுதி னந்துயர்
.. .. தரவ ரும்பழ .. வினைதீரச்
.. சரண பங்கய இணையில் அன்பொடு
.. .. தமிழ்ந றுந்தொடை .. இடுவேனே
கடலை அன்றொரு பெரிய குன்றொடு
.. .. கடைய வந்தவர் .. மிகவாடக்
.. கரிய நஞ்செழ அடிய டைந்தவர்
.. .. கதற இன்கனி .. அதுபோல
விடமும் உண்டிருள் மணிதி கழ்ந்திடு
.. .. மிடற வெண்பொடி .. புனைதோளா
.. விமலை பங்கினில் உறைய நின்சடை
.. .. மிசையி ரும்புனல் .. அணிவோனே
மடலி லங்கிய நெடிய தெங்கவை
.. .. வளரும் எண்கணில் .. உறைவோனே
.. மயில மர்ந்திடு குமர னுந்தரு
.. .. வரத அந்தரர் .. பெருமானே.
பதம் பிரித்து:
தட-நிலந்தனில் அனுதினம் துயர்
.. .. தர வரும் பழ-வினை தீரச்,
.. சரண-பங்கய இணையில் அன்பொடு
.. .. தமிழ்-நறுந்தொடை இடுவேனே;
கடலை அன்று ஒரு பெரிய குன்றொடு
.. .. கடைய வந்தவர் மிக வாடக்
.. கரிய நஞ்சு எழ, அடி அடைந்து அவர்
.. .. கதற, இன்கனி அது போல
விடமும் உண்டு இருள்- மணி திகழ்ந்திடு
.. .. மிடற; வெண்பொடி புனை-தோளா;
.. விமலை பங்கினில் உறைய, நின் சடை
.. .. மிசை இரும்-புனல் அணிவோனே;
மடல் இலங்கிய நெடிய தெங்கவை
.. .. வளரும் எண்கணில் உறைவோனே;
.. மயில் அமர்ந்திடு குமரனும் தரு
.. .. வரத; அந்தரர் பெருமானே.
(தடம் - பெருமை);
(சரணம் - திருவடி);
(இருமை - பெருமை);
(நெடுமை - உயரம்); (தெங்கு - தென்னைமரம்);
(அமர்தல் - விரும்புதல்); (உம் - அசை; எச்சவும்மை என்றும் கொள்ளலாம்);
(அந்தரர் - தேவர்);
V. Subramanian
Another fresh song.
2026-04-06
பொது
----------------
(வண்ணவிருத்தம்;
தனத்தத் தனதன தனத்தத் தனதன
தனத்தத் தனதன .. தனதான)
படிப்பைத் தரு(ம்)நினை இடத்தைத் தரு(ம்)மிகு
.. .. பணத்தைத் தரு(ம்)நலி .. படைபோலப்
.. பகைத்துத் தொடர்வினை அழித்துச் சுக(ம்)மலி
.. .. பரத்தைத் தரும்அவன் .. ஒருநாமம்
பிடித்துத் தினமடி வழுத்திப் புகழ்மொழி
.. .. பிதற்றித் தொழுதெழு .. மனமேநீ
.. பிறைக்குக் கெடுநிலை தடுத்துப் புனையிறை
.. .. பிறப்பற் றிடுநலம் .. அருள்வானே
துடிக்கைத் தல(ம்)மறி தரித்துப் புரமவை
.. .. சுடக்கற் சிலையது .. தொடுவீரன்
.. துணைப்பொற் கழலணி மலர்க்கொத் தொடுபணி
.. .. சுரர்க்குக் கருதிய .. அமுதீவான்
தொடிக்கைப் பிறைநுதல் உமைக்குப் பதிபசு
.. .. சுமக்கப் பலிதிரி .. திருவாளன்
.. துளக்கக் கடிகணை தொடுத்துப் பொருமதற்
.. .. சுடற்குக் கணைவிழி .. பெருமானே.
பதம் பிரித்து:
படிப்பைத் தரு(ம்), நினை இடத்தைத் தரு(ம்), மிகு
.. .. பணத்தைத் தரு(ம்), நலி .. படை போலப்
.. பகைத்துத் தொடர்-வினை அழித்துச் சுக(ம்) மலி
.. .. பரத்தைத் தரும், அவன் .. ஒரு-நாமம்
பிடித்துத், தினம் அடி வழுத்திப், புகழ்மொழி
.. .. பிதற்றித் தொழுதெழு .. மனமே நீ;
.. பிறைக்குக் கெடு-நிலை தடுத்துப் புனை-இறை
.. .. பிறப்பு-அற்றிடு நலம் .. அருள்வானே;
துடிக்-கைத்தல(ம்) மறி தரித்துப், புரமவை
.. .. சுடக் கற்சிலையது .. தொடு-வீரன்;
.. துணைப்-பொற்கழல் அணி மலர்க்கொத்தொடு பணி
.. .. சுரர்க்குக் கருதிய .. அமுது ஈவான்;
தொடிக்-கைப் பிறைநுதல் உமைக்குப் பதி; பசு
.. .. சுமக்கப் பலிதிரி .. திருவாளன்;
.. துளக்கக் கடி-கணை தொடுத்துப் பொரு-மதற்
.. .. சுடற்குக் கணை விழி .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
* மனத்துக்கு உபதேசமாக அமைந்த பாடல் இது;
(துடி - உடுக்கை); (கைத்தலம் - கை); (மறி - மான்கன்று); (தரித்தல் - தாங்குதல்); (கல் - மலை); (சிலை - வில்);
(தொடி - கைவளை); (நுதல் - நெற்றி); (பதி - கணவன்);
(துளக்குதல் - அசைத்தல்); (கடி - வாசனை); (கணை - அம்பு); (பொருதல் - போர்செய்தல்);
V. Subramanian
2026-04-05
Another fresh song.
2026-04-08
ஆலவாய் (மதுரை)
----------------
(வண்ணவிருத்தம்;
தனதன தாத்த தனதன தாத்த
தனதன தாத்த .. தனதான)
நிதிமிக வாக்கி இடர்துயர் போக்கி
.. .. நெரிவினை நீக்கி .. உனைநாளும்
.. நினைவது கூட்டி உயர்வழி காட்டி
.. .. நிருபம வீட்டை .. அருளாயே
விதிதனை ஏட்டில் எழுதயன் நாற்ற(ம்)
.. .. மிகுமலர் நோக்கம் .. உடைமாயன்
.. மிகையுரை நாட்கண் வெருவொடு நோக்கி
.. .. விரிபுகழ் ஏத்த .. உயர்சோதீ
அதிர்கழல் ஆர்க்க உடலெரி காட்டில்
.. .. அணியுமை பார்க்க .. நடமாடீ
.. அரணவை மாய்க்க வரைசிலை யாக்கி
.. .. அரவினை வீக்கி .. அமராடீ
மதிபுனை தீர்த்த தமிழ்வளர் கீர்த்தி
.. .. மதுரையில் ஆட்சி .. புரிநாதா
.. வழுதியை மாற்று கவுணியர் போற்று
.. .. மணிமொழி ஏற்ற .. பெருமானே.
பதம் பிரித்து:
நிதி மிக ஆக்கி, இடர் துயர் போக்கி,
.. .. நெரி-வினை நீக்கி, .. உனை நாளும்
.. நினைவது கூட்டி, உயர்-வழி காட்டி,
.. .. நிருபம, வீட்டை .. அருளாயே;
விதிதனை ஏட்டில் எழுது-அயன் நாற்ற(ம்)
.. .. மிகு-மலர் நோக்கம் .. உடை-மாயன்
.. மிகை-உரை நாட்கண், வெருவொடு நோக்கி
.. .. விரி-புகழ் ஏத்த .. உயர்-சோதீ;
அதிர்-கழல் ஆர்க்க உடல் எரி-காட்டில்
.. .. அணி-உமை பார்க்க .. நடம் ஆடீ;
.. அரணவை மாய்க்க, வரை சிலை ஆக்கி
.. .. அரவினை வீக்கி, .. அமர்-ஆடீ;
மதி புனை தீர்த்த; தமிழ் வளர்- கீர்த்தி
.. .. மதுரையில் ஆட்சி .. புரி-நாதா;
.. வழுதியை மாற்று கவுணியர் போற்று
.. .. மணிமொழி ஏற்ற .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(இடர்துயர் - ஒருபொருட்பன்மொழி); (நெரித்தல் - வருத்துதல்);
(நிருபமன் - ஒப்பில்லாதவன்);
(நோக்கம் - கண்); (மிகை - செருக்கு); (கண் - ஏழாம்வேற்றுமை உருபு);
(வெரு - அச்சம்);
(அதிர்தல் - முழங்குதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);
(வரை - மலை); (சிலை - வில்); (வீக்குதல் - கட்டுதல்); (அமர் - போர்);
V. Subramanian
2026-04-06
Hot off the keyboard.
2026-04-10
கொடுமுடி
(தேவாரத்தில் - பாண்டிக் கொடுமுடி)
----------------
(வண்ணவிருத்தம்;
தாந்த தனதன தாந்த தனதன
தாந்த தனதன .. தனதான)
யாண்டு(ம்) மலரிணை போன்ற திருவடி
.. .. ஆய்ந்து வழிபடும் .. அடியார்கள்
.. ஆர்ந்த குழுவது சேர்ந்து துயரெனும்
.. .. ஆழ்ந்த கடலினில் .. அமிழாமல்
நீண்ட நிதிதினம் ஓங்கு புகழிவை
.. .. நேர்ந்து நிலமிசை .. இனிமீள்தல்
.. நீங்கி உயர்சுக(ம்) மாந்த அருளுக
.. .. கோங்கு குரவொடு(ம்) .. மதிசூடீ
பாண்டு குமரன்வி லேந்தி அவனொடு
.. .. பாய்ந்து பொருதருள் .. தருவேடா
.. பாந்தள் அணைமிசை ஏந்தல் அயனிவர்
.. .. பாங்கில் மொழிசொலி .. இகல்நாள்தாம்
வேண்ட அழலென ஆங்கு வருமொரு
.. .. வேந்த அணியுமை .. மணவாளா
.. மீன்கள் உகள்நதி சூழ்ந்த கொடுமுடி
.. .. வேங்கை அதளசை .. பெருமானே.
பதம் பிரித்து:
யாண்டு(ம்) மலர்-இணை போன்ற திருவடி
.. .. ஆய்ந்து வழிபடும் .. அடியார்கள்
.. ஆர்ந்த குழுவது சேர்ந்து, துயர்-எனும்
.. .. ஆழ்ந்த கடலினில் .. அமிழாமல்,
நீண்ட நிதி தினம் ஓங்கு புகழ் இவை
.. .. நேர்ந்து, நிலமிசை .. இனி மீள்தல்
.. நீங்கி, உயர்-சுக(ம்) மாந்த அருளுக,
.. .. கோங்கு குரவொடு(ம்) .. மதிசூடீ;
பாண்டு குமரன் வில்-ஏந்தி அவனொடு
.. .. பாய்ந்து பொருது அருள் .. தரு வேடா;
.. பாந்தள் அணைமிசை ஏந்தல் அயன் இவர்
.. .. பாங்கு-இல் மொழி சொலி .. இகல்-நாள், தாம்
வேண்ட அழலென ஆங்கு வரும் ஒரு
.. .. வேந்த; அணி-உமை .. மணவாளா;
.. மீன்கள் உகள்-நதி சூழ்ந்த கொடுமுடி,
.. .. வேங்கை அதள் அசை- .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
(யாண்டும் - எப்பொழுதும்); (ஆய்தல் - ஆராய்தல்; சிந்தித்தல்); (ஆர்தல் - நிறைதல்);
(நேர்தல் - கொடுத்தல்; நிகழ்தல்);
(மாந்துதல் - அனுபவித்தல்);
(கோங்கு - கோங்கமலர்); (குரவு - குராமலர்);
(ஏந்தி - ஏந்தியவன்); (பொருதல் - போர்செய்தல்);
(பாந்தள் - பாம்பு); (அணை - மெத்தை; படுக்கை); (பாங்கு - தகுதி; தோழமை; இணக்கம்); (இகல்தல் - பகைத்தல்; மாறுபடுதல்); (தாம் - அவர்கள்; அசை);
(உகள்தல் - பாய்தல்; தாவுதல்); (வேங்கை - புலி); (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்);
V. Subramanian