From: "SRKT" <sr...@pacific.net.sg>
Date: 5 September 2013 13:21:42 GMT+08:00
To: "SRKAT_Rama" <rama...@yahoo.com>, <krk...@singnet.com.sg>, <nsa...@yahoo.com>, <ap...@jaygee.com.sg>, <ther...@hotmail.com>, <bal...@live.com>, <retn...@gmail.com>, <bhuva...@hotmail.com>, <raje...@keppelshipyard.com>, <mpe...@nus.edu.sg>, <che...@montreal.com.sg>, <shanth...@lta.gov.sg>, "'Kalaichelvan S/O PONNUSAMY \(JTC\)'" <Kalaich...@jtc.gov.sg>, <kan...@gmail.com>, "G.E.N.G.A ." <godes...@hotmail.com>
Cc: <vr.ala...@gmail.com>, <krish...@gmail.com>, <che...@starhub.net.sg>, <srkt...@gmail.com>, <rajen...@yahoo.com.sg>, <cutedu...@yahoo.com>, <vtham...@gmail.com>
Subject: Mr V Ikshuvanam (Life Member & Former Vice President ) of Sri Ruthra Kaliamman Temple Passes away
Dear SirsRegret to inform you that Mr V Ikshuvanam (Life Member & Former Vice President ) of Sri Ruthra Kaliamman Temple passed away peacefully today morning.Wake will be held at
Blk 201 #02-37 Clementi Avenue 6 Singapore – 120201
Funeral will be held today (Thursday, 5 September 2013) evening at 5.00 pm.
Contact No. of his Sons are as follows :
Mr I Balasubramaniam Hp : 9697 8150 Dr I Swaminathan, Hp : 9770 9300
We've arranged for a wreath to be sent on behalf of our Temple.
Regards
C Vijayakumar
THINK GREEN - Please consider the environment before printing this email
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
For information to those who know Ikkuvanam Ayya
அறிய தகவல்களைத் தெரிய தந்தமைக்கு நன்றி ஐயா...
--
திரு. இக்குவனம் அவர்களைப் பற்றி நான் இக்குழுவில் முன்பிட்ட இடுகைகளை இச்சமயத்தில் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
அனந்த் 5-9-2013
----------------------
பிப்ருவரி 6, 2003
நண்பர்களே:
சிங்கப்பூரில் வாழுகின்ற, வயதிலும் அறிவிலும் முதிர்ந்த பெருங்கவிஞர் திரு. இக்குவனம் அவர்கள் "வெண்பாச்சிற்பி" என்ற பட்டம் பெற்றவர். ஆயிரக்கணக்கில் வெண்பாக்கள் படைத்துள்ள இவர் அவற்றில் சிலவற்றை நூல்களாக வெளியிட்டுள்ளார். இன்னும் ஏராளமானவை பதிக்கப்பெறாமல் அவர் இல்லத்தில் உள்ளன. அறிஞர் அண்ணா அவர்களுக்கு வரவேற்புக் கவிதை வாசித்தளித்து அவரிடம் பாராட்டைப் பெற்றவர். 'வாழும் கவியரசு வைரமுத்து' என்ற தம் நூலில் அக்கவிஞரின் பேரில் 500 வெண்பாக்களை அந்தாதி வடிவில் புனைந்துள்ளார். கவியரசர் அந்நூலின் தமது முன்னுரையில் இக்குவனத்தின் அருஞ்செயல்களை வானளாவப் புகழ்ந்துள்ளார். சிங்கைக் குடியரசின் முன்னாள் பிரதமாரான திரு. லீ குவான்யூ அவர்களைப் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜப்பார் அவர்களைப் பற்றியும் அந்தாதிப் பாடல்கள் வெளியுட்டுள்ளார், வெண்பா வேந்தர் என்று கவியரசு புகழும் இக்குவனம். மேலும், அமரர் ராஜீவ் காந்தி பேரிலும் திருமுருக கிருபானந்த வாரியார் பேரிலும் இரங்கல் அந்தாதிகளும் யாத்துள்ளார். எண்பதுக்கும் மேலான வயதுடைய இப்பெரியார் இன்னும் ஒவ்வொரு நாளிலும் நாற்பதும் ஐம்பதுமாக வெண்பாக்களை இயற்றியவண்ணம் உள்ளார்! எல்லாமே சொல்வளமும் கருத்தாழமும் கொண்டவை.
வெண்பா மட்டுமல்லாது பிற பாவினங்களிலும் இவருக்குள்ள தேர்ச்சியைக் கவிதைக் கனி, கவிதைக் கதம்பம் என்பன போன்ற இவரது நூல்களின் வாயிலாக அறியலாம். (அந்நூல்களிருந்து சில பாடல்களை எடுத்துக்காட்டுகளாகப் பின்னர் இங்கு இடப் பார்க்கிறேன்). இந்தச் சாதனைகளெல்லாம் போதாதென்று, திரு. இக்குவனம் சித்திரக் கவிகள் இயற்றுவதிலும் வல்லவர். இயற்றுவதற்குக் கடினமான இப்பாக்களை, இதுவரை யாருமே செய்திராத அளவிற்கு, நூல்களில் சொல்லப்படும் அத்தனை வடிவங்களிலும் அதற்கும் மேற்பட்ட புது வடிவங்களிலும் நூற்றுக்கணக்கில் சித்திரப் பாடல்களை எழுதியுள்ளார் இவர். அவற்றில் பெரும்பாலானவைகளைச் சிங்கப்பூரில் 2000-ஆம் ஆண்டில் தாமே அழகிய ஓவிய வடிவங்கள் கொடுத்துச் 'சித்திரக் கவிகள்' என்னும் தலைப்பில் பதிப்பித்தும் உள்ளார். சிங்கைப் பல்கலைக் கழகப் பேராசிரியரான திரு. சுப. திண்ணப்பன் தமது 'சிங்கப்பூர்ச் சித்திரக்கவிகள்' என்னும் கட்டுரையில் கவிஞர் இக்குவனத்தின் அருஞ்செயலை விவரித்துள்ளார். அவர் திறனை வியந்து புகழ்ந்துள்ள சாலமன் பாப்பையா, சுகிசிவம், ஆலந்தூர் மோகனரங்கன், நாரா நாச்சியப்பன், சிங்கைக் கவிஞர் முருகதாசன் ஆகிய பல கவிஞர்/அறிஞர்களின் பாராட்டுகளையும் அவர் சுட்டியுள்ளார். வெண்பாவில் தமக்குள்ள தேர்ச்சியின் விளைவாக, கவிஞர் இக்குவனத்தின் சித்திரக் கவிகளில் பெரும்பாலானவை வெண்பா வடிவத்திலேயே அமைந்திருப்பது நம் வியப்பை இன்னும் கூட்டுகிறது. பொதுவாக, மிறைக்கவிகளில் வெண்பாக்களை ஆளல் மிகக் குறைவு. இக்குவனத்தின் நூலில் 38 பட வடிவங்களில் 175 பாடல்கள் வெண்பா யாப்பில் உள்ளன! சித்திரம் அல்லாத மாலை மாற்று வெண்பா, "பிந்துமதி" வெண்பா (உயிரும் ஒற்றும் மாறிமாறி வருமாறு அமைந்த இப் புதுவகையில் இவர் அந்தாதியே படைத்துள்ளார்), வரி மடக்கு வெண்பா, ஒன்றிலிருந்து இரண்டு, மூன்று வெண்பாக்கள் வரும் வெண்பா, திரிபங்கி...என்று பற்பல படைப்புகளும் இக்கவிஞரின் நூலில் காணப்படும்.
(தொடரும்)
~~~~~~~0O0~~~~~~~
இக்குவனம் என்னுமொரு பெருமேதை
வெண்பா:
மேம்பட்ட மங்கலத்து
வித்தகராம் இக்குவனம்
தொட்ட தெல்லாம்
தமிழணங்கின் - பூம்பட்டு
மேனிதனில் வெண்பா
மிறைக்கவியாய் மாறுவதை
நானிலத்தில் கண்டோம்
நயந்து.
<><><>O<><><>
கட்டளைக் கலித்துறை:
பனியார் சடைஇறை
பாலனின் பால்மிகப் பத்திகொண்டோய்!
கனியாய்க் கதம்பமாய்க்
கன்னித் தமிழுன்றன் கைகளிலே
தனியோர் அழகுள
சிற்பமாய் மாறிடும் சாதனையை
இனியாங் கெவர்தம்
மிடத்திலும் காண்டிலம் இஃதுமெய்யே!
<><><>O<><><>
14-சீர் வண்ண விருத்தம்: தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தனதான
இப்புவியி லெத்தனைம கத்துவம்பு
தைத்ததனை அற்புதக வித்திறமொ
…………டிசையோடே
…. இச்சையொடு முத்தமிழில் வித்தகர்கள் பற்பலரும் முற்கொணர வைத்தபெரு …………..மிறையோனின்
செப்பரிய நற்கருணை மிக்கபொழி யப்பெறுமிச்
சொக்குமெழில் மிக்கவுடை
…………பெரியோன்ஓர்
…. தெற்றெதுவு மற்றதமிழ் முற்றிலுமு ணர்த்துவகைச் சொற்றிறமுங் கற்பனையும் …………திரளாக
முற்பிறவி யிற்புரியு நற்செயலொர்
தக்கவகை முற்றியதெ னெனத்திகழு
…………மறிவோடு
…. மொட்டுவிரி சொற்சுவைக ளத்தனையு மிக்கவொளி முத்தெனக்க விச்சொரியு …………முதல்வோனிங்(கு)
எப்பொழுதும் சித்ரகவி இட்டிடுவி
சித்ரகவி இக்குவன(ம்) மிக்கதொரு
…………பெருமேதை
….. எக்குறையு மற்றுலகில் வெற்றிபெறச் சுப்ரமணி பொற்பதம தைத்தொழுவ …………மிதுநாளே.
அனந்த்
12-4-2006
நான் சிங்கப்பூரில் இருந்தபோது, வெண்பாச் சிற்பி கவிஞர் இக்குவனம் அவர்கள் தமது 'சிலேடை வெண்பாக்கள்-108' என்னும் நூலுக்கு என்னையும் கவியோகியாரையும் அணிந்துரை தரச் சொன்னார். என் உரையின் இறுதியில் நான் அவரையும் சிவபெருமானையும் ஒப்பிட்டு எழுதிய இரு சிலேடை வெண்பாக்கள்:
வெள்ளை விருப்பால் விடையில் உவப்பதால்
வெள்ளம் தலைகொண்ட மேனியினால் - எள்ளளவும்
ஓய்விலா துள்ள நடையால் உமைவிரும்பும்
நாயகனாம் நம்புலவர் காண்
சிவன்: வெண்ணீறு, வெண்மதி, வெள்ளெருக்கு ஆகிய வெண்நிறப் பொருள்களில் விருப்பமுடையவர்; காளை ஊர்தியில் உலவுவதில் மகிழ்ச்சியடைபவர்; கங்கையைத் தலையில் தாங்கும் உருவம் உடையவர்; எப்போதும் அம்பலத்தில் ஆடிக்கொண்டே இருப்பவர்; உமையை விரும்புபவர்.
புலவர் இக்குவனம்: வெண்பாவில் நாட்டமுடையவர் (வெண்பாவை 'வெள்ளை' என்று அழைப்பது வழக்கு); இலக்கியத் தொடர்பாகப் பிறர்க்குத் தாம் தரும் விளக்கத்தில் (அல்லது பிறரிடமிருந்து தாம் எதிர்பார்த்த விடை கிட்டுவதில்) மகிழ்ச்சி கொள்வார்; வெண்மையான அழகிய தலைமுடி கொண்டவர்; துளியும் ஓய்விலாத மன இயக்கம் கொண்டவர் (அல்லது தடங்கலில்லாத நடையில் செய்யுள் புனைபவர்); நட்புடன் உங்களை (நம்மை) விரும்புபவர்.
மதியுடையார் மங்கலம்சேர் மாடுடையார் ஆக்கும்
விதிபிறழல் தான்சகியார் வேண்டின் - எதிர்வருவார்
சித்திரப் பாவைவிழை சீருடையார் இக்குவனம்
அத்திமுகன் தாதைக்கொப்(பு) ஆம்
சிவன்: திங்களைத் தலையில் அணிந்தவர்; நன்மைதரும் நந்தியை ஊர்தியாக உடையவர்; படைப்புத் தொழில் புரியும் பிரமன் (விதி) தமது முடியைக் கண்டதாகக் கூறி உண்மை தவறியதைப் பொறுக்காதவர்; அன்பர் துதித்து வேண்டுங்கால் நேரில் காட்சி அளிப்பவர்; அழகிய பார்வதியை விரும்பும் நலமுடையவர்.
கவிஞர் இக்குவனம்: நல்ல அறிவுடையவர்; பட்டமங்கலம் என்னும் நல்லூரைச் சேர்ந்த திருவுடையவர்; கல்வி, பொருள் செல்வம் (மாடு) உடையவர்; செய்யுள் விதிகளிலிருந்து பிறர் தவறுவதைப் பொறுக்க மாட்டாதவர்; நாம் அழைத்தால் உடனே வருகை தரும் நற்குணமுடையவர்; சித்திரக் கவிதைகள் எழுதுவதில் மிகுந்த விருப்பமுடையவர் என்ற புகழைப் பெற்றவர்.
... அனந்த்

இக்குவனம் – இரங்கற்பா
இஇ
திக்கு முழுவதும் தேடினும் யாம்காணோம்
இக்கு வனம்போல இன்னொருவர்- மிக்குபுகழ்
பெற்றவரென் றாலும் பெருமையுரை யாதவரை
எற்றைக்குக் காண்போம் இனி? (1)
நிலைபெற்ற நற்புகழில் நின்றார் நிலைத்து
மலையென் றுறைந்திருந்தார் மாண்பில் - கலைமகளின்
உற்றநல் மகனாக ஓங்கி வளர்ந்தாரை
எற்றைக்குக் காண்போம் இனி? (2)
விளங்கினார் வெண்பாவின் வேந்தராய்ச் சிங்கைக்
களந்தன்னில் தம்திறமை காட்டி- வளம்மிகவாய்
உற்ற தமிழ்மொழியை ஓங்கிடச் செய்தாரை
எற்றைக்குக் காண்போம் இனி? (3)
சித்திரப் பாப்பலவும் செம்மையுற யாப்பதில்
முத்திரை வைத்தவராய் முன்னின்றார்-அத்துறையில்
சற்றும் சளைக்காமல் சாதனைகள் செய்தாரை
எற்றைக்குக் காண்போம் இனி? (4)
தேடல் மிகக்கொண்டு தேர்ந்தநல் ஞானமொடு
பாடல் அவர்தந்தார் பல்வகையில் - நாடுபுகழ்
கற்றவரா யிருந்தும் கர்வம் கொளாதாவரை
எற்றைக்குக் காண்போம் இனி? (5)
வில்லினை நீங்குகிற வேகமுறு வாளியெனச்
சொல்லினிக்கப் பாச்சொன்னார் சொக்கிடவே. - நல்லவிதம்
கற்றோரைக் கண்டவுடன் காமுற் றணைவாரை
எற்றைக்குக் காண்போம் இனி? (6)
முப்பால் நெறிதன்னை முற்றுமாய்ப் போற்றிநிதம்
தப்பாமல் செய்தார் தமிழ்பணியை. - ஒப்பிலாப்
பற்றால் தமிழ்ப்பா பரப்பியே வாழ்ந்தாரை
எற்றைக்குக் காண்போம் இனி? (7)
துன்னரும் வேகம் துடிப்புடன் யாத்தவை
கன்னலாய்த் தித்திக்கக் கண்டுவந்தோம்.- அன்னதிறன்,
இற்றுப்போ காமல் இறுதிவரை யாத்தாரை
எற்றைக்குக் காண்போம் இனி? (8)
வீழ்வதே இல்லாமல் வெற்றி இவர்கண்டார்
ஆழ்கடல் என்றான அன்புளத்தால்- வாழ்வினில்
குற்றமே சேராக் குணக்குன்றாய் நின்றாரை
எற்றைக்குக் காண்போம் இனி? (9)
தன்னிரங்கற் பாவைத் தமதுயிர் போவதற்கு
முன்னமிவர் யாத்தார் முழுவதுமாய்- அன்னதோர்
பெற்றியில் வாழ்ந்த பெருமகனார் தம்மை
எற்றைக்குக் காண்போம் இனி? (10)
(சிங்கப்பூர் இலக்கிய வட்டம் – 8-9-2013)
இக்குவனம் – இரங்கற்பா
7ஆம் தேதி சிங்கை தமிழ் முரசில் வெளியிடப்பட்ட இக்குவனம் ஐயாவே எழுதிய இறுதி நிலைப் பாடல்(அந்தாதி வெண்பா வடிவில்) பீடீ எஃப் கோப்பாக அனுப்பியுள்ளேன். (முதல் இரண்டு பக்கங்கள்.).
மூன்றாவது பக்கம் ஒரு சிங்கை கவிஞர் (ந.வீ. சத்திய மூர்த்தி) 8-9-13 ஞாயிறன்று தமிழ் முரசில் வெளியிட்ட கவிதை.அன்புடன்குமார்(சிங்கை)