சக்கரத்தாழ்வார் ஐயந்தி - அருள் வேண்டல்

4 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Jun 24, 2026, 3:35:22 AM (yesterday) Jun 24
to Santhavasanthsm சந்தவசந்தம்
🙏
*சக்கரத்தாழ்வார் ஐயந்தி - அருள் வேண்டல்*

திருவாழி யாழ்வான் திகிரிதிருச் சக்கரத்
துருவாழிச் சோதியே! தூயசுதர் சனவித்தே!
அருளாழி முத்தே! அரிமாற்கைச் சொத்தே!
இருளாழி தீர்த்தெனை எடுத்தாள மாட்டீரோ!

சக்கரமாய்ச் சுற்றிச் சரியறமாய்ச் சுடரிட்ட
புக்கரத்தான் மாலன் பூண்டகரச் சூரணமே!
வக்கரமாஞ் சுமையை வாட்டியுலர்த் திடயிட்ட
தக்கரமாய்க் காத்துந்தன் தயவருள மாட்டீரோ!

வளையவருஞ் சுடரே! வளமருளும் பேரோளியே!
திளையமுதம் பொழியுந் திகிரியரித் திருக்கரமே!
களையவிருள் கழிந்து கட்டவிழ்க்கும் பெட்டகமே!
விளையவருள் தந்தெமக்கு விடிவருள மாட்டீரோ!

மீ. ரா
24-6-2026
Sent from my iPhone

Parthasarathy S

unread,
Jun 24, 2026, 5:59:05 AM (23 hours ago) Jun 24
to சந்தவசந்தம்
*இன்று ஸுதர்ஶநர் என்று போற்றப்படும் சக்கரத்தாழ்வார் அவதார தினம் - ஆனிச் சித்திரை. அடியார்க்கடியான் யூட்யூப் சானலில் இணைந்து சக்கரத்தாழ்வாரைத் துதிப்போம்* ! 

- புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Arasi Palaniappan

unread,
Jun 24, 2026, 6:52:57 AM (23 hours ago) Jun 24
to சந்தவசந்தம்
அருமை 

On Wed, 24 Jun 2026, 1:05 pm Rajja Gopalan, <raj...@gmail.com> wrote:
🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/406A31D8-4D70-47CD-A6ED-A7CC575E85D7%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jun 24, 2026, 10:14:27 AM (19 hours ago) Jun 24
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. மீ. ரா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 24, 2026, at 06:52, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages