Just for fun - டுண்டுண்டுண்

52 views
Skip to first unread message

Siva Siva

unread,
Feb 22, 2026, 7:24:17 PM (4 days ago) Feb 22
to santhavasantham
Just for the fun of it I wanted to a write a veNbA where the string
    டுண்டுண்டுண்
occurs somewhere in the song.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 7:47:59 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
பெண்ணாள்  இடுபுபு[ப் பெரியகுடம் கீழ்வீழ
டுண்டுண்டுண் டுண்டுண்டுண் டுண்

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMTFbbMYhWxD8sS1uvCsipAq7FMD1nXz3BROD_HT%2B8QPA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 8:03:45 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com

வெங்கலப் பானையிலே மேல்வரை நீர்நிரப்பித்
தங்க மயிற்பெண்ணாள் தான்நடக்க- அங்கேயோர்
திண்டுப் படிதடுக்கத் திண்டாட்டம் ஆனதுவே

டுண்டுண்டுண் டுண்டுண்டுண் டுண்

இதே போலக் குளுகுக் குளுகுக் குளு     என்ற ஈற்றடிகொண்ட பாடலும் உண்டு

Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 8:14:44 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com

பண்டைநாள் பாட்டில் பறையடிக்கப் பாரதிரும்;

கொண்டல்  முழங்கிக் குவலயத்தில் - விண்பிளக்கும்;

தோன்றும் துடியொலி டுண்டுண்ணுண் என்றோங்க,

மூன்றன் ஒலியும் முருகு


முருகு - அழகு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2026, at 19:24, Siva Siva <naya...@gmail.com> wrote:


--

Subbaier Ramasami

unread,
Feb 22, 2026, 8:20:02 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
மூன்றடுக்கி வந்த முருகுத் தமிழ்க்கவியில்
ஆன்ற திறமை அறி

இலந்தை


Ram Ramakrishnan

unread,
Feb 22, 2026, 8:27:41 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 22, 2026, at 20:20, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Feb 22, 2026, 8:39:16 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
Nice.
I think there is some Sanskrit verse where some sang along similar lines for a given challenge.

V. Subramanian

Siva Siva

unread,
Feb 22, 2026, 8:40:15 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
குவலயத்தில் - விண்பிளக்கும்; / 

Interesting phrase.

V. Subramanian

Siva Siva

unread,
Feb 22, 2026, 8:43:00 PM (4 days ago) Feb 22
to santhavasantham
Here is what I wrote.

2026-02-22

டுண்டுண்டுண்

----------------

(வெண்பா)


புவிதனில் உள்ளோர் புகழ்ந்து தமிழில்

கவிபாட எம்மங் கணற்குச் - செவிதனில்

நற்குழைதோ டுண்டுண்டுண் ணஞ்சு மிடற்றினில்

விற்குண்டு மேருவெனும் வெற்பு.


V. Subramanian

Parthasarathy S

unread,
Feb 22, 2026, 9:33:22 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
அடியேன் அமைத்தது! சரிபார்க்கவும்

பெண்ணே அணிகலன் பேறறிந்த நல்மனத்தார்
எண்ணம் சிறக்க எடுத்துரைத்துக் - கண்ணெதிரே
மண்ணெடுத்துப் பொன்னுக்கு மாற்றென வைத்தாலே
டுண்டுண்டுண் டுண்டுண்டுண் டுண்

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி,பெங்களூர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Siva Siva

unread,
Feb 22, 2026, 9:48:15 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
இந்தப் பாட்டில் கூறவரும் கருத்து என்ன?

வி. சுப்பிரமணியன்

Sai Ganesan H

unread,
Feb 22, 2026, 10:33:30 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
எனது முயற்சி! 

பெண்ணிற் குகந்த பேரழகும் நற்பண்பும்

மண்ணின் பொறையும்கொள் மங்கையவள்- கண்களை

அண்ணலவன் நோக்க அடுத்தநொடி கேட்டதே

டுண்டுண்டுண் டுண்டுண்டுண் டுண். 


— சத்யவேழன் H Sai Ganesan 
23-02-2026


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Feb 22, 2026, 10:43:28 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
ஒரு திருத்தமுடன்! 

எனது முயற்சி! 

பெண்ணிற் குகந்ததொரு பேரழகும் நற்பண்பும்

Parthasarathy S

unread,
Feb 22, 2026, 11:06:59 PM (4 days ago) Feb 22
to santhav...@googlegroups.com
இப்பாவை இவ்வாறு மாற்றியமைக்கிறேன். பொருள் தருகிறதா என்று பார்க்கவும்.

பெண்ணே அணிகலன் பேறறிந்த நல்மனத்தார்
எண்ணம் சிறக்க எடுத்துரைத்து - மணமுடிக்க

மண்ணெடுத்துப் பொன்னுக்கு மாற்றென வைத்தாலே
டுண்டுண்டுண் டுண்டுண்டுண் டுண்
புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி,பெங்களூர்

Govindaraju Arunachalam

unread,
Feb 23, 2026, 6:03:47 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com

தண்டமிழ் வேலவன் தங்கி அருள்செய்யும்

வண்டமிழ் நூற்கடல்போல் வன்ன வயல்சூழ்ந்த

செண்பக னூர்கோவில் செல்வார்க்கு நெய்சோறுண்

டுண்டுண்டுண் டுண்டுண் டுபார்.

 

-கருவூர் இனியன்.




--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 6:55:53 AM (3 days ago) Feb 23
to சந்தவசந்தம்
அருமை. நெய்ச்சோறு?

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 6:56:44 AM (3 days ago) Feb 23
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

Arasi Palaniappan

unread,
Feb 23, 2026, 6:59:28 AM (3 days ago) Feb 23
to சந்தவசந்தம்
என் முயற்சி 

செண்டையெனும் மேளம் ; திருவிழாக் காலத்தில்
பண்டு திகழ்தவில், 
பார்போற்றும் -தண்ணுமையில்
கொண்டாட்ட மங்கலங்கள் கூட்டும் இசைதொடக்கம்
டுண்டுண்டுண் டுண்டுண்டுண் டுண்

அரசி. பழனியப்பன்

--

Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 7:35:16 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 06:56, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Feb 23, 2026, 9:56:03 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
Nice verse Sri Govindaraju.

நெய்சோறு - 
தேவாரத்தில் இச்சொல் கண்டுள்ளேன்.
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு

குறிப்புரையில் காண்பது: "நெய் விரவு கறி சோறு" என்க

V. Subramanian

Siva Siva

unread,
Feb 23, 2026, 9:58:56 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
நள்ளிரவில் எழுதிய பாடலா?! படிக்கக் கஷ்டமாக இருளில் மூழ்கியுள்ளதே! Accidental dark background for the text?

Here it is in plain text:

செண்டையெனும் மேளம் ; திருவிழாக் காலத்தில்
பண்டு திகழ்தவில், பார்போற்றும் -தண்ணுமையில்
கொண்டாட்ட மங்கலங்கள் கூட்டும் இசைதொடக்கம்
டுண்டுண்டுண் டுண்டுண்டுண் டுண்

Drumbeats reverberating!

V. Subramanian


Siva Siva

unread,
Feb 23, 2026, 10:03:54 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
/ இந்தப் பாட்டில் கூறவரும் கருத்து என்ன? /

==> / இப்பாவை இவ்வாறு மாற்றியமைக்கிறேன். பொருள் தருகிறதா என்று பார்க்கவும். /

When I ask for meaning, I mean it - because it was not clear to me.

When one writes phrase by phrase meaning, it will be easier for the writer and others to see the meaning and how well the verse flows.

V. Subramanian


Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 10:07:44 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
மேலும் இது இன்னிசை வெண்பா என்றால், இரண்டாம் அடியின் நான்காம் சீரைத் தனச்சொல் போல் காட்ட வேண்டாம் என்பதென் கருத்து.
 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 23, 2026, 10:11:40 AM (3 days ago) Feb 23
to santhavasantham
Wirth word separation now.

On Sun, Feb 22, 2026 at 8:42 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Here is what I wrote.

2026-02-22

டுண்டுண்டுண்

----------------

(வெண்பா)


புவிதனில் உள்ளோர் புகழ்ந்து தமிழில்

கவிபாட எம்மங் கணற்குச் - செவிதனில்

நற்குழைதோ டுண்டுண்டுண் ணஞ்சு மிடற்றினில்

விற்குண்டு மேருவெனும் வெற்பு.


புவிதனில் உள்ளோர் புகழ்ந்து தமிழில் கவி பாட எம்ங்கணற்குச்

செவிதனில் நற்குழை தோடு உண்டு

உண்டு உண் நஞ்சு மிடற்றினில்

விற்கு உண்டு மேரு எனும் வெற்பு


Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 11:38:43 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
நண்பன் ஒருவனின் திருமண நாளாம் இன்று,

வாழைமரம் என்று தொடங்கி, ஈற்றடி டும்டும்டும் டும்டும்டும் டும் என வருமாறு வெண்பா அமைக்கச் சொல்ல, விறைந்த பாடல் இதோ:

எடுத்த அடியுடன் முடிக்கும் ஈற்றடிக்கு விடுத்த வெண்பா:
எடுத்த அடி: வாழைமரம்
ஈற்றடி: டும்டும்டும் டும்டும்டும் டும்

விடுத்த வெண்பா:

வாழைமர வாசலில் மாவிலையில் தோரணமாம்
தோழருடன் தோழியரின் சோபையாம்- வாழுமட்டும்
தம்பதிகள் சூழுநலம் தானமைய வாழ்த்துமொலி
டும்டும்டும் டும்டும்டும் டும்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 10:11, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Feb 23, 2026, 11:39:53 AM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
விளைந்த என்று திருத்திப் படிக்கவும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 23, 2026, at 11:38, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

நண்பன் ஒருவனின் திருமண நாளாம் இன்று,

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 23, 2026, 8:02:49 PM (3 days ago) Feb 23
to சந்தவசந்தம்

ஊரமுதை யுண்டுண்டுண் டுண்டொழியா தின்றினிய
வாரமுதை யுண்ண வறி.

பதம் பிரித்து 

ஊரமுதை உண்டு உண்டு உண்டு உண்டு ஒழியாது இன்று இனிய
ஆரமுதை உண்ண அறி.

பொருள் 
புழுக்கின்ற உணவுகளைத் தினமும் பல முறை 
உண்டு அதனால் மரணம் அடையாது, இன்று முதல் இனிமையான ஆரமுதத்தை உண்ண அறிய வேண்டும்.


பிற்குறிப்பு :  *ஊரமுது ஆரமுது என்றால் என்ன??
அறிவோம் இன்று....

திருவருட்பா  - ஆறாம் திருமுறையில் 

ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
    என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
    கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
    ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
     அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து

என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார்கள் .

நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாமே, "ஊர் அமுது'' ,அதாவது புழுக்கின்ற உணவு அதாவதுமலமாகவும்,சிறுநீராகவும்,வியர்வையாகவும், வந்து கொண்டே இருக்கும்  உணவாகும் ,
ஊர் அமுது உண்ணுகின்ற வரையில் மரணம் வந்தே தீரும் .இந்த உணவு வகைகள் யாவும் ''அருள்'' கிடைப்பதற்கு தடையாக இருக்கின்றது. இந்த உணவு முறைகளை உண்ணாமல் இருந்தாலும்,உட்கொண்டு இருந்தாலும் மரணம் வந்து கொண்டே இருக்கும்.   ஆதலால் உணவு முறைகளை மாற்ற வேண்டும் என்கின்றார்.


மேலும் 
வள்ளலார் பெருமான் உபதேசக் குறிப்பிலிருந்து....
உபதேசக் குறிப்புகள்

115. சுத்த சன்மார்க்க ஆகாரம்

சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துவைக் கொள்ளல் வேண்டும். புழுக்காத வஸ்துக்கள் யாவெனில்:- சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிர முதலிய பஸ்பம். ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை பரியாயத்தில் சர்க்கரையென்று லவணத்தைச் சொல்லுவதுமுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதன்றி, சத்வ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளவுங் கூடும்.

சன்மார்க்க ஆகாரம்

நெய் பால் தயிர் மோர் - இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம். மனிதர்களுக்கு எல்லாத் தாதுக்களிலும் முதல் தாது கொழுப்பு. அதன் சத்து நெய். அதை எடுத்தால் தேக நஷ்டம். இதுபோல் பசுக்களினது முதற்றாது நெய். ஆதலால் அதையெடுப்பது சுத்த சன்மார்க்க மரபல்ல. சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்து கொள்வதற்காவது புறப்புறவமுதம். ஆதலால், ஊற்றுநீர் பொற்றலைக் கரிசலாங்கண்ணி வாழை தென்னை முதலியவற்றின்மேல் பெய்கிற பனிசலம் மழைச்சலம் - இவைகள்தான் சுத்தசலம் அல்லது அமுதம். அல்லது சாதாரண ஜலமுங் கொள்ளலாம். அதாவது மேற்குறித்த ஜலத்தை 5-ல் 3, 5-ல் 2 பாகம் நிற்கக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் இவைகளைச் சேர்த்துக் குடிக்கலாம். இவைகள் தேகவிருத்தி செய்யும். சுத்த சன்மார்க்க மரபிற் குரியது இனிப்புத்தான். ஆதலால் தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைகளை ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது உத்தமம்.

உப்பு

தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.

சர்க்கரை

சர்க்கரை எந்தக் காலத்திலும் புழுத்தலின்றாகலி னுத்தமவாகாரமாம். மற்ற வஸ்துக்கள் எல்லாம் புழுக்கும்.

சன்மார்க்க ஆகார விலக்கு

சுத்த சன்மார்க்க சாத்தியர்கள் நெய் முதலிய வஸ்துக்கள் கொள்ளப்படாது. அதுபோல் சாதகர்களும்....ஒருவாறு கொள்ளப்படும். ஏனெனில், ஓர் தேகத்திலுள்ள தாதுக்களில் முதல்தாது கொழுப்பு, அதின் அம்சமே பால், அதின் அம்சம் நெய், மேற்படி ஆபாசம் மோர் தயிர். ஆதலால், மேற்படி கொழுப்பு வெளிப்பட்டால், மேற்படி பசுவின்கண் கெடுதியும் நேரும். ஆதலால் கொலை. கன்றுக்கு ஒருவாறு விட்டு பாலை கிரகிக்கலாம். ஆதலால், இஃதால் ஜீவ இம்சை நேருதலால், மேற்படி வஸ்துக்கள் கொள்ளலாகாது; நேராத பக்ஷத்தில் கொள்ளலாம்.

சாதம்

சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா, பொங்கிச் சாப்பிடுதல் நலமா எனில்:- வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது; தாமச குணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்துக்களின் எண்ணெய் போகச்சுட வைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல... மேலும் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.

116. வெந்நீர்

அண்டத்தையும் பிண்டத்தையும் ஓருங்கே வளர்ப்பது புறப்புற அமுதம். ஆதலால் அஃதே கொள்ளல் வேண்டும். யாதெனில்:- ஊற்றுநீர், பொற்றலை, வாழை, தென்னை முதலியவற்றின் பேரிலுள்ள பனிஜலம், மழைஜலம் - இவைகள் கொள்ளலாம்; சாதாரண ஜலங்கொள்ளுவது கெடுதி. ஏனெனில் மேற்படி ஜலத்தில் மூன்று குணமுண்டு. எனைஎனில்: விஷம், பூதம், அமுதம். இம்மூன்று மொன்றாகவே இருக்கும். எப்படியெனில்: மேல்பாகத்தில் சிலிர்ப்பாகிய விஷமும், அதனடியில் ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் கூடி ஒன்றாயிருக்கும். மேற்படி ஜலத்தினது குணங்கள் ஆவன: பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும்; அமுதஜலம் பிராணசக்தி செய்யும்; விஷஜலம் தத்துவத்துரிசைப் போக்கும். ஆதலால் இடபேதத்தால் மேற்படி நீர்கள் தனித்தனியாகவுமுள்ளன; ஒவ்வொன்றில் மும்மூன்றாகவும் விரியும். ஆதலால், மேற்படி சுத்தாமுதங்கிடையாத பக்ஷத்தில் இதர ஜலங்களைப் பச்சையாகக் கொள்ளப்படாது; வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும். அந்நீரும் ஐந்து மூன்றும் ஐந்து இரண்டுமாகக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் கற்கண்டு - இவைகள் சேர்த்துக் கொள்ளவும். நேராத பக்ஷத்தில், தென்னை நாயுருவி வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது, சூரிய கிரணத்தில் வைத்தாவது, சூரியசரத்தால் பார்த்தாவது, சிகரத்தை உன்னியாவது கொள்ளல் வேண்டுமேயல்லது பச்சையாய்க் கொள்ளப்படாது. சநிநீராடென்று சொல்வது சநி போன்ற கருமையான கருகியநீராலாடென்று சொன்னது. யாதெனில் வெந்நீர், ஒருவாறு ஊற்றுநீர். இதன்றி - மற்றப்படி - சொல்வது தெரியாமை.

வெந்நீர்

சுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல் வெந்நீராதலால். எக்காலத்தும் சுத்தஜலம் சேர்க்கக்கூடாது. பச்சை ஜலத்தினிடத்தில் மூன்று குணமுண்டு: விஷஜலம், பூதஜலம், அமுதஜலம். இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கும். ஜலத்தின் மேல் பாகத்தில் விஷமாகிய சிலிர்ப்பும், அதனடியில் கொஞ்சம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷம் சுடுகையுள்ள அமுதமுமாக இருக்கும். பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும். அமுதஜலம் பிராணவாயுவை விருத்தி செய்யும். விஷஜலம் ஆபாசநீர்களாகப் பற்றும். ஆதலால் பச்சைஜலம் கொள்ளப்படாது. வெந்நீர் நேரிடாத பக்ஷத்தில், சர்க்கரை நாயுருவி தென்னை வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது கொள்ள வேண்டும்.

குளிர்ந்த ஜலம்

காலங்கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக்கெடுதி. குளிக்க வேண்டுமானால் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்

கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.

கரிசலாங்கண்ணியும் தூதுளையும்

கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்......


வள்ளலார் பெருமான் உபதேச குறிப்பை முழுவதும் படிக்க 

https://www.vallalar.org/Tamil/VORG000000047B

Sai Ganesan H

unread,
Feb 23, 2026, 8:39:26 PM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
அருமை ஐயா! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 23, 2026, 9:31:27 PM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com
Thanks for the background info.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Feb 23, 2026, 10:35:39 PM (3 days ago) Feb 23
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
என் முயற்சி:

புருவ நடுவில் புரையிலொளி யேற்றி

அருளாம் அருங்கடலில் ஆழ்ந்து - பரமாம் 

ஒருதேன் திரட்டுண்டுண் டுண்மையென் றோர்ந்தால்

இருள்தீர்ந் தொழியாதோ இன்று.  


(தேன் திரட்டு உண்டு, “உண்டு உண்மை” என்று ஓர்ந்தால் = உண்மைப்பொருள் ஒன்று உண்டு என்று ஆய்ந்து தெளிந்தால்)


On Feb 23, 2026, at 9:31 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 24, 2026, 9:08:46 AM (2 days ago) Feb 24
to santhav...@googlegroups.com
Nice Anand.

Arasi Palaniappan

unread,
Feb 24, 2026, 9:22:13 AM (2 days ago) Feb 24
to சந்தவசந்தம்
Thanks for having thrown some lights on my venbaa🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Feb 25, 2026, 4:05:46 PM (19 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com
arumai.
ilanthai

On Mon, Feb 23, 2026 at 9:35 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
என் முயற்சி:

Subbaier Ramasami

unread,
Feb 25, 2026, 4:10:41 PM (19 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com
போஜராஜன் கேட்டுக் கவி காளிதாஸ் பாடிய ஒரு ஈற்றடிப் பாடல் வடமொழியில் உண்டு.

நதியின் கரையில் இருந்த நாவல் மரத்தில் உள்ள பழங்களை குரங்கு உலுக்கக் கீழே நீரில் விழுந்த பழங்கள் எழுப்பிய ஓசை
குளுகுக் குளுகுக் குளு  என அமையும். அதற்கு  வேகு காலத்திற்கு முன் நான் தமிழில் எழுதியது
குரங்குலுக்க நாவல் குளத்தில்வீழ் ஓசை
குளுகுக் குளுகுக் குளு



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 25, 2026, 4:14:19 PM (19 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you, Sri SivaSiva.

இமயவரம்பன்

unread,
Feb 25, 2026, 4:14:45 PM (19 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தலைவருக்கு மிக்க நன்றி

> On Feb 25, 2026, at 4:05 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
>
> arumai.
> ilanthai

இமயவரம்பன்

unread,
Feb 25, 2026, 4:30:24 PM (19 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை, இலந்தையாரே!

காளிதாசர் எழுதிய அந்தக் கவிதை:

जन्बूफलानि पक्वानि पतन्ति विमले जले
कपि कंपित शाखाभ्यो गुलुगुग्गुलुगुग्गुलु

janbūphalāni pakvāni patanti vimalē jalē
kapi kaṁpita śākhābhyō gulugugguluguggulu

ஜன்பூபலானி பக்வானி பதந்தி விமலே ஜலே
கபி கம்பித ஷாகாப்யோ குலுகுக்குலுகுக்குலு

M. Viswanathan

unread,
Feb 25, 2026, 4:36:50 PM (19 hours ago) Feb 25
to Santhavasantham
அற்புதம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 25, 2026, 6:06:14 PM (17 hours ago) Feb 25
to santhav...@googlegroups.com, Santhavasantham
மிக்க நன்றி, திரு. மீவி.

> On Feb 25, 2026, at 4:36 PM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
>
> அற்புதம்
Reply all
Reply to author
Forward
0 new messages