தமிழின் ஒரே லோகாயத நூல் - கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார்

237 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Feb 20, 2010, 6:13:19 PM2/20/10
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, panb...@googlegroups.com, anb...@googlegroups.com, thami...@googlegroups.com, pira...@googlegroups.com

தமிழின் ஒரே லோகாயத நூல் - கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார்

மரபணு மாற்றிய பயிர்கள் கடவுளின் பங்கையே
விஞ்ஞானத்தின் பக்கம் கொண்டுசெல்கிறது.
தமிழமுதம், தமிழ்மன்றம் போன்ற குழுக்களில்
பெரியாரின் சமூகப் பங்களிப்பு, நாத்திக வாதம்,
அறிவியல் கடவுளை ஏற்கிறதா? என்றெல்லாம்
சூடான விவாதங்கள் நடக்கின்றன. எ-டு:
http://groups.google.com/group/tamizhamutham/msg/77bfd14f156dc7e0
http://groups.google.com/group/tamilmanram/msg/b32e5395045109c8

-----

காயாரோஹணம் காராணை என்றும்
ஆகும். தமிழின் ஒரே உலகாயத நூல்
கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார்
பாடிய காராணை விழுப்பரையன்
வளமடல் அதிஅழகுடைய பிரபந்தம்.
கலியன் வேதமரபில் பாடிய மடல்களை
மீண்டும் தமிழ் அகமரபுக்குக் கொண்டுவரும்
இலக்கியம் அது:
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

காராணையான் வளமடலுக்கு ஓர் அறிமுகம்:
http://iniyathu.blogspot.com/2007_08_01_archive.html

ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழன்னையின்
மணிமுடிகளில் ஒன்றனைக் கவிச்சக்கிரவத்தி செயங்கொண்டார்
படைத்திருக்கிறார்.

விஞ்ஞான நோக்கில் உயிர்வாழ்க்கை அமைவதைச் சொல்லி,
காமம் இன்றேல் உலகம் இல்லை, சாமியார் ஆகிவிடாதீர்கள்.
என்று பாடி எல்லாச் சமயங்களையும் சாடியிருக்கிறார்.

பொருட்சுவை, சொற்சுவை பொதிந்த இந்நூலை
வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன்.

ஆதிநாதன் விழுப்புரம் அருகுள்ள காராணை என்னும்
ஊர்க்காரன். காயாரோகணம் என்னும் வடசொல் காரானை/காராணை
என்று தமிழில் மறுவடிவம் தாங்குகிறது. இலகுளீசர் பிறந்த
கார்வான் நகர் கூர்ச்சரத்தில் உள்ளது.

ஆதிநாதன் குடிப்பெயர் விழுப்பரையர். இதனாலேயே விழுப்புரம்
என்று ஊர்ப்பெயர் விழுந்தது. ஊர் காராணை. அவனூர்க்காரர்
செயங்கொண்டார். ஆதிநாதனே கவிதாசக்தியை இனங்கண்டு
செயங்கொண்டாரை சோழச்சக்கிரவர்த்திக்கு அறிமுகம் செய்திருக்க
வேண்டும். ஆதிநாதனின் கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிலும்,
திருவரங்கத்திலும் உண்டு. சோழ சாம்ராஜ்யம் அழியும்நிலையில்
குலைகலங்கி நின்ற நாளில் மகள் வழிப்பேரனான குலோத்துங்கனை
மன்னன் ஆக்கியிருக்கின்றனர். திருத்தணி மீட்ட ம. பொ. சி அவர்கள்
தெலுங்கரான குலோத்துங்கனை அரசனாக்கி, அவனை அழியாது
கலிங்கத்துப் பரணியில் பொறித்துவைத்த செயங்கொண்டார்
மீது குற்றம் காண்பார். ஆனால், அந்நாள் ஆட்சிநிலைமை எப்படியோ?
ஆனால். ஒன்று மட்டும் உறுதி: குலோத்துங்கன் அரசுகட்டில்
ஏறியதால் சோழப் பேரரசு மேலும் 250 ஆண்டுகள்
பொலிந்து விளங்கியது வரலாற்றுண்மை.

லகுலீசர் (2-ம் நூற்.) பிறந்த ஊர் காயாரோஹணம், குஜராத்.
இது தமிழில் காரோணம் (குடந்தை, நாகை, கச்சியில் காரோணம் என்ற
சிவன் கோயில்கள் உள்ளன, தேவாரம்). காரோணம் இன்று கார்வான் நகர்.
காரோணம்/கார்வான் தமிழில் காராணை. விழுப்புரம் அருகே
காராணை (அண்ணமங்கலம்) என்ற ஊரில் விழுப்பரையர்கள்,
இவர்கள் சீகருணீகர் மரபு, சோழர்களுக்குக் கணிகள், அணுக்கத் தொண்டர்கள்,
சேனாபதிகள். காராணை விழுப்பரையன் மடல் பாட்டுடைத் தலைவன்
காராணை ஆதிநாததன் மதுரையில் இருந்து சோழ இளவரசர்களை (சோழபாண்டியர்
என்று கல்வெட்டுகளில்) அரசத் தொழிலில் பழக்கியிருக்கிறான்.

இந்த வளமடலின் எதுகை மிகமிகச் சிறந்தது.
550 அடிகளிலும் ஒரே எதுகை
(வளமடலின் இலக்கணம் - நூல் முழுதும்
பாட்டுடைத் தலைவன் பெயரின் எதுகை
வரவேண்டும். இங்கே (காராணை) ஆதிநாதன்
- எனவே 550 அடியும் நெடில் கீழ் தகர எதுகை).
இiதுபோலும் அமைந்த நூல் தமிழில் இல்லை.
திருமங்கையாழ்வார் மடல்களின் எதுகையை
இந்நூல் விஞ்சிவிடுகிறது.

முக்கியமாக, தமிழமுதக் குழு நண்பர்கள் மகிழ்நன், வேந்தன் அரசு,
புகாரி, மணிவண்ணன், ஜெயபாரதன், இ. ருத்ரா, செல்வன், ....
படிக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தமிழ்க் கருவூலத்தை
ப்ராஜக்ட் மதுரைக்கு அளித்தேன், அவ்வமயம் எழுதினதைச்
இங்கே சேர்த்துள்ளேன்.

காரானை விழுப்பரையன் மடல்
-------------------------------------------------

தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே

தமிழன்பர்களே,

கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் இயற்றிய காரானை விழுப்பரையன் மடல்
என்னும் சீரிய நூல் மதுரைத் திட்டத்திற்கு என்னால் இன்னும் ஒரு
மாதத்திற்குள்
அளிக்கப்பட உள்ளது. சிறந்த இந்நூல் இதுவரை அச்சாகவில்லை. கணினி வலையில்
உலகத்திற்கு முதன்முதலாக வெளிவரப்போகும் பழந்தமிழ் நூல்
என்ற பெருமையும் கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டாரின் படைப்புக்கே
என்னும்போது உள்ளம் பூரிக்கிறது.

காரானை, காராணை எனவும் கல்வெட்டுகளில் வழங்கும். தென்னார்க்காடு
மாவட்டம் விழுப்புரத்திற்கு அருகில், அண்ணமங்கலம், தீபங்குடிக்கு
அருகில்
உள்ள சிற்றூர். சோழ சாம்ராச்சியம் புகழ்விரித்துக் கொண்டிருந்த
காலத்தில்
முதற் குலோத்துங்கனின் அவைக்களப் புலவர் செயங்கொண்டார். இவர் பரணி
இலக்கியம் படைத்துப் புதுப்பாட்டை போட்டவர். இளமைக் காலத்தில் இந்நூல்
செய்ததாதல் வேண்டும். காரானைக்காரரான ஆதிநாதன் சோழருக்குச்
சேனாபதி. பாண்டிநாட்டு மதுரையம் பதியில் சோழர் பிரதிநிதியாக
ஆதிநாதன் பணிபுரிந்திருக்கிறான். இவன் செய்த தருமங்கள் திருவரங்கம்
போன்ற கோயில்களில் முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டாய் உள.
இந்த நூலில் மதுரையும், தீபங்குடியும் சொல்லப்படுகின்றன. ஆதிநாதன்
விழுப்பரையன் என்னும் குடியைச் சேர்ந்தவன். இவர்கள் விழுப்பாதராயர்,
விழுப்பதரையர் என்றும் பெயருண்டு. இக்குடிப் பேராலேயே விழுப்புரம்
அமைந்துள்ளது.

ஆதிநாதன் என்னும் பெயரைப் பாருங்கள். அதில் நெடில்கீழ்த் தகர
எதுகை உள்ளது. எனவே இந்த நூல் முழுக்க 550 அடிகளும்
நெடிலடியின் தகர எதுகை இயைந்தது.

தொல்காப்பியம், குறள் இரண்டும் பெண்டிருக்கு மடலேறும் உரிமை இல்லை
என்று பேசும். பக்தி இலக்கிய காலத்தில் திருமங்கைமன்னர்
நாராயணன், கண்ணன் என்னும் தெய்வதங்களை பாட்டுடைத் தலைவராய்க்
கொண்டு பெரிய, சிறிய திருமடல்களைப் பாடியிருக்கிறார். இவை
"மன்னும் வட நெறியே வேண்டிப்" ஆழ்வார் நாயகி மடல் ஊர்வதாம்.
மீண்டும் மடலிலக்கியத்தைத் தமிழ் மரபுக்குத் திருப்பி ஆண்
பெண்மேல் மையலுற்றுப்பின் மடலூர்வதாகச் செயங்கொண்டார்
விழுப்பரையன் மடலைச் சமைத்துள்ளார். செயங்கொண்டார் கவிச்சக்கரவர்த்தி
அவரைப் பயபக்தியாக ஒட்டக்கூத்தர் பாடியுள்ளார். இந்த நூலில்
உள்ள எதுகையும், கருத்துச் செறிவும், அகப்பொருட் பகுதியில்
மெல்லோசையும், போர்பற்றிப் பாடும்போது வீரமும் தோன்றுவதாலும்,
இன்ன பல காரணங்களாலும் ஆசிரியர் புலமை அறியலாகும்.
எதுகை அமைப்பில் ஆழ்வாரையும் விஞ்சுகிறார் என்றே சொல்ல
வேண்டும்.

நூலின் பாடுபொருள் இந்தியாவில் தோன்றி, இப்பொழுது கிடைக்கும்
இலக்கியங்களிலேயே மாறுபட்டது. உலோகாயத மதம் பற்றியது.
உலோகாயதக் கொள்கை "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்"
என்னும் பழமொழி எழக் காரணம். இச்சமயம் காட்சி அளவை ஒன்றையே
ஒப்புக் கொள்வது. அனுமானம், ஆப்த வசனம் என்னும் பிரமாணங்களை
ஏற்பதில்லை. காட்சி ஒன்றே உலகாயதருக்குப் பிரமாணம் ஆகையால்,
கண்ணுக்குத் தெரியாத ஆகாயத்தை அவர்கள் ஒரு பூதமாகக் கொள்ளார்.
நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு பூதங்கள் தான்
உண்டென்பர்.
இந்நான்கின் பொருத்தமான கலப்பால் உடலில் உருவாகும் உணர்வு தான்
உயிர் என்பர். பூதங்களின் விகிதாசாரம் கலையும்போது உயிராகிய உணர்வு
மறையும், அதுவே இறப்பு என்பர். காதலியருடன் சேர்ந்திருத்தலே
சொர்க்கம், அவளைப் பிரிந்தால் நரகம் என்பதும், சொர்க்கம், நரகம்
இவ்வுலகில், இப்பிறப்பில் அமையும் என்பதும் உலகாயதர் கொள்கை.
கடவுள், கன்மா, ஆத்மா, மறுமை இல்லை என்பர் இந்த நிரீசுவரவாதிகள்.
கடவுளுக்கு மோட்ச அதிகாரம் இல்லை. பிறமதங்களில் சேர்ந்து உழல்வதே பந்தம்
என்பர். வியாழபகவான் இந்திரன் பொருட்டுக் கற்பித்த மதம் இது.
பெரியார் ஈ.வே.ராவும், பாரதிதாசனும் இந்த நூலைக் கண்டிருந்தால்
அசந்திருப்பர்.

காரானை விழுப்பரையன் மடல் பலமதத் துறவியரை முன்னிறுத்திப்
பேசுவது. துறவை வெறுப்பது. பல புராணக் கதைகளைக் காட்டி கதைமாந்தரெல்லாம்
காமவழிச் செல்வன என்று நிறுவுவது. எல்லா மதங்களையும் வன்மையாக
மறுத்து, உலகாயதம் ஒன்றே உண்மைச் சமயம் என்பது. பொருள் தேடுவதெல்லாம்
மாதர் பின்செல்லத்தான் என்று அழகாக விளக்கி, அவரைப் பிரியுங்காலே
துன்பேறி
மடல் ஊர்வதை வர்ணிப்பது. மணிமேகலையிலும், மாதவ வித்யாரண்யரின் சர்வதரிசன
சங்கிரகத்திலும், சிவஞான சித்தியாரிலும் உலோகாயதம் முதலில்
மறுக்கப்படும்.

உலோகாயதத்தை முதலாகக் கொண்ட நூல் தமிழில் இது ஒன்றே. ஆசிரியர்
இவ்வளவு தத்துவத்தையும் உள்ளடக்கி, நூலை வெகுசுவையாகப்
படைத்திருக்கிறார்.
வடமொழியில் உள்ள ஒரே உலோகாயத நூலாம் செயராசியின் தத்துவ உபப்ளவசிம்மம்
விழுப்பரையன் மடலைவிட வறட்சியான நடைகொண்டது.

இந்தியாவில் எழுந்த பழைய நூல்களில் காரானை விழுப்பரையன் மடல்
பொருட்சிறப்பாலும், கவியழகாலும் ஓர் உயர்தனி இடம் பெறும்.
தமிழின் சிறந்த கருவூலம் இது.

இந்தப் பதிப்புக்கு பஞ்ச மரபு, தந்திவனப் புராணம், குறளின் பரிதி,
பரிப்பெருமாள்,
நச்சர், மல்லர் உரைகள், திருமுருகின் பரிமேலழகர் உரை போன்ற அரிய
நூல்களைக் கண்டளித்த பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்
தொகுப்புச்
சுவடியும், சென்னை அரசு கீழ்த்திசை ஆய்வு நூலகச் சுவடியும் ஆதாரம்
ஆகும்.
இதற்கெல்லாம் உதவிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
இரா. செங்கோட்டுவேலன் ஐயா, கம்பராமன் ச. கி. இராமராசன் ஐயா இருவருக்கும்
என்றும் நன்றிக் கடப்பாடுடையேன்.

ஐரோப்பியாவில் சுமார் 3000 தமிழ்ச் சுவடிகள் ஓலையில் உள; அவற்றில்
இன்னும் நமக்குத்
தெரியாத இலக்கியங்கள் நிச்சயம் இருக்கும். இன்னும் நல்ல அட்டவணை கூட
இல்லை.
அங்குவாழும் தமிழர் முயன்று அட்டவணை செய்தால் நாம் அறியாத பல அரிய
செல்வங்கள் கிடைக்கும். காலப்போக்கில் தமிழர் இதைச் செய்யவேண்டும்.

அன்புடன்,
நா. கணேசன்

ஆடிப் பிம்பமாக ஆண்பிள்ளை!!
http://www.treasurehouseofagathiyar.net/13000/13006.htm

In a medieval Tamil text, some 16 stories are told of
men doing different things for the sake of 'kaamam'. Each
story is briefly narrated in a few lines. Is there a Sanskrit
or any other Indian language text giving such a list
in a few pages?

Thanks,
N. Ganesan

Stories:

1) Agni takes the fire sparks coming out of Shiva's forehead
and leaves it in the river, Ganga. She can't bear Shiva
Viiryam. The fire ends up in sharavana pond and Karttikeya is
born.

2) Upon the sight of Urvasi, Brahma does something
thinking of something else. From the pot (kalasham),
Agastya and VasiStha are born.

3) Mahavishnu, leaving Bhu and Sri, comes down to the
poor Yadava huts to enjoy 16000 Gopikas,

4) Siva's troubles in marrying two girls is wellknown.

5) Karttikeya begs a girl of KuRavar hill tribe
even when he has Devasena,

6) MahiSasura's name is Vikraman. He has a crush
for Devi. Taking the form of Kama, he fights with her.

7) Indra runs away in the form of a cat when Gotama
sees him. He is cursed with 1000 yonis. Is it really
a curse?

8) Chandra enjoys Tara, the wife of his revered Guru.
The planet, Budha is born. Even when the truth is known,
Brhaspati retains Tara and becomes Guru of Indra.

9) Svaha was enjoyed by Agni. She was also enjoyed by Yama.
Each of them eat her after transforming her into a lemon.

10) Arjuna discards the saffron dress and marries
Krishna's sister.

11) Udayana marries Vasavadatta after teaching her
music. A good Guru Dakshina to have.

12) A street theater performer was
given the ultimate teaching by a Guru while the guru's
disciple was away on a tour. Upon return, the student
drinks the spitting of the street dancer to learn
the ultimate mantra.

13) Nala is sent as a messenger by Devas. Ultimately,
he manages to get Damayanti for himself.

14) Parashara marries a fisherwoman. Maccagandhi becomes
Parimalagandhi.

15) TilOttama becomes a parrot. Viyasa enjoys her.
Their son's name (Shuka brahmam) is the proof.

16) How can Draupadi be the wife of five men?

Hari Krishnan

unread,
Feb 20, 2010, 10:25:21 PM2/20/10
to santhavasantham


தமிழின் ஒரே லோகாயத நூல் - கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார்



நாசாவில் வேலைபார்த்துக் கொண்டு இவ்வளவு நீளமாக, திரும்பத் திரும்ப எழுத அசாத்திய பொறுமையும் அளவற்ற கால நிர்வாகத் திறனும் வேண்டும்.  எப்படி இவ்வளவுமுறை, இதை உங்களால் எழுத முடிகிறது, அதுவும் படிக்கிறவனுக்கு மூச்சுத் திணறும்படியான நீளத்தில்!  கடந்த பத்து வருடங்களில் நானே இதை நூறுமுறை படித்தாகிவிட்டது.  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.   

காயாரோஹணம் காராணை என்றும்
ஆகும்.

நல்ல வேளையா நான் இதைச் சொல்லவில்லை!  நான் சொல்லியிருந்தால் இவ்வளவு நேரத்துக்கு என்னென்னவோ அகராதிகள் எங்கெங்கோ புரட்டப்பட்டு, தேடிக் கண்டடைவதற்குள் களைத்துப்போய் விட்டுவிடப்பட்டிருக்கும்.  அல்லது, கிரந்த திணிப்பு என்றொரு பேச்சு நடந்துகொண்டிருக்கிறதே. அதைப் போல இங்கேயும் கிளம்பியிருந்திருக்கும்.  நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.  ரொம்ப சந்தோஷம்.  காராணைதான் காயரோஹணம் ஆனது என்று நிரூபிக்கத்தான் போகிறார்கள்.  

உங்களுக்குப் பரிசாக காயாரோஹணேசம் பாடல்.  உங்க பேர்லயே பாடியிருக்காங்க.  இந்தப் பெயர் தெரியாத குழந்தை பாடுவதைக் கேட்டு சந்தோஷப் படுங்க.  


அப்படியே, தொலஞ்சுபோ முன்னாள் சிலம்பாட்டக்காரர் ரகு எங்கியோ நாதா நாதான்னு நிக்கறாராம்.  காதுல விழுதான்னு பாருங்க. :-)

--
அன்புடன்,
ஹரிகி.



--
அன்புடன்,
ஹரிகி.

வினோத் ராஜன்

unread,
Feb 21, 2010, 4:18:29 AM2/21/10
to சந்தவசந்தம்
//நாசாவில் வேலைபார்த்துக் கொண்டு இவ்வளவு நீளமாக, திரும்பத் திரும்ப

எழுத
அசாத்திய பொறுமையும் அளவற்ற கால நிர்வாகத் திறனும் வேண்டும். எப்படி
இவ்வளவுமுறை, இதை உங்களால் எழுத முடிகிறது, அதுவும் படிக்கிறவனுக்கு
மூச்சுத்
திணறும்படியான நீளத்தில்! கடந்த பத்து வருடங்களில் நானே இதை நூறுமுறை
படித்தாகிவிட்டது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. //

:-)

V

On Feb 21, 8:25 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/21 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>

Parthasarathy Krishnan

unread,
Feb 21, 2010, 7:50:46 AM2/21/10
to santhav...@googlegroups.com
நல்லூர் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும், நண்பர்கள் வேதம், இலந்தை உள்ளிட்டவர்களுக்கும்....
மார்க்சிஸ்ட் தோழர் உ.ர. வரதராஜன் சில நாள்களுக்கு முன் காணமல் போயிருந்தார். தற்போது அவரது அழுகிய நிலையில் உடல் போரூர் ஏரியில் கண்டெடுக்கப் பட்டதாகப் போலீஸ் கூறுகிறது.
மிகவும் மனம் கனக்கிறது. எக்ஸ்பிரஸ் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தியபோது, அதில் பங்காற்ற நினைவு வருகிறது. நங்கநல்லூரில் அறிவு சார்ந்த நண்பர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கிறார். பம்மாத்து என்ற சொல்லை மட்டும் குறிப்பிட்டு (சற்று கொச்சையாக ) அவரைப் பற்றி சிலர் கூறுவார். வரதராஜன் களத்தில் இறங்கிய போராளி. நல்ல இலக்கியவாதி. தமிழ் படித்தவர். நல்ல பேச்சாளர். உளியனள்ளுறை பூர்விகமாகக் கொண்டவர்கள் மீது தனி அன்பு காட்டியவர் என்பது எனது அனுபவம்.
பாகி

 
2010/2/21 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Paaki

naa.g...@gmail.com

unread,
Feb 21, 2010, 8:38:08 AM2/21/10
to சந்தவசந்தம்
On Feb 20, 9:25 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/21 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>
>
> > தமிழின் ஒரே லோகாயத நூல் - கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார்
>
> நாசாவில் வேலைபார்த்துக் கொண்டு இவ்வளவு நீளமாக, திரும்பத் திரும்ப எழுத
> அசாத்திய பொறுமையும் அளவற்ற கால நிர்வாகத் திறனும் வேண்டும்.  எப்படி
> இவ்வளவுமுறை, இதை உங்களால் எழுத முடிகிறது, அதுவும் படிக்கிறவனுக்கு மூச்சுத்
> திணறும்படியான நீளத்தில்!  கடந்த பத்து வருடங்களில் நானே இதை நூறுமுறை
> படித்தாகிவிட்டது.  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
>

டெக்சாசும், ஃப்லாரிடாவும் ஒபாமுவுக்கு ஓட்டுப்போடாத மாநிலங்கள்.
எனவே, நாசாவே (முக்கியமாக, மனிதர்கள் ஸ்பேஸுக்கு செல்வது) போதும்
என்கிறார் ஒபாமா! கான்ஸ்டெல்லேசன் எல்லாம் கேன்சல்.
அதற்கு Acoustics Experts Panel-ல் என்னைப் போட்டிருந்தார்கள். எல்லாம்
கார், வங்கிகள்,
ரியல் எஸ்டேட், ... இவைகளை மீட்பதில் ட்ரி்ல்லியன்கள் ($) அவருக்கு
வேண்டுமாம்.
நிலாவில் கால்வைப்பது இனி சீனனாக இருக்கலாம்.
அமெரிக்க காங்கிரஸ் விடுமா? பார்ப்போம்.

20 ஆண்டுகள் ஒரு 30 ஸ்பேஸ் ஷட்டில் மிஷன்ஸ்-ல் வேலைபார்த்தாயிற்று.
இண்டெர்னேஷனல் ஸ்டேஷன் கட்டினோம். ஓர் அரிய வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது. இனிவரும் தலைமுறையினர் (அதுவும், தமிழன் ஒருவனுக்கு
இவ்வளவு செலவாகிச் செய்யும் ஸ்பேஸ் மிஷன்ஸ்-ல் பங்காற்ற வாய்ப்புக்
கிட்டுமா? என்பது சந்தேகமே. இந்தியா செய்யும் மிஷன்ஸ் எல்லாம்
அளவில் சிறியவை.) மயில்சாமி அண்ணதுரையை ஹூஸ்டனுக்கு
அழைத்து நாசா ஜான்சனில் நல்ல மரியாதை தர ஏற்பாடு செய்ய முடிந்தது
வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. விக்ரம் சாராபாய் முன்பு
இங்கே வந்துதான் கையெழுத்திட்டு இந்திய-அமெரிக்க விண்வெளி
நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்திட்டார் என்று தெரிந்தது!

பிற பின்,
நா. கணேசன்

naa.g...@gmail.com

unread,
Feb 21, 2010, 8:41:13 AM2/21/10
to சந்தவசந்தம்

அன்பு ஹரிகி,

சொல்ல நினைத்ததை விட்டுவிட்டேன். தமிழமுதம் என்ற புதுக்குழுவில்
பல புதிய இளைஞர்கள் மடலாடுகின்றனர். பழைய வளமடல்
இ-மெயில்களைச் சேர்த்து அவர்களுக்காக இட்டேன்.
இலக்கியச் செய்தி ஆனதால் இங்கேயும் முற்செலுத்தினேன்.

அன்புடன்,
நா. கணேசன்

srirangammohanarangan v

unread,
Feb 21, 2010, 10:34:08 AM2/21/10
to santhav...@googlegroups.com
நா  கணேசனாரே!   மிக்க நன்றி.   இதனுடைய   காலச்சூழல்   பின்னணி  முதலிய விவரங்கள்   இருந்தால்  உதவ முடியுமா?    விழுப்பரையன்  பற்றிய மடல்  விழுப்பமான  மடல்.:--))))

naa.g...@gmail.com

unread,
Feb 21, 2010, 11:21:43 AM2/21/10
to சந்தவசந்தம்

On Feb 21, 9:34 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> நா  கணேசனாரே!   மிக்க நன்றி.   இதனுடைய   காலச்சூழல்   பின்னணி  முதலிய
> விவரங்கள்   இருந்தால்  உதவ முடியுமா?    விழுப்பரையன்  பற்றிய மடல்
> விழுப்பமான  மடல்.:--))))
>

இன்னும் கொஞ்சம் ஒழுங்குபடுத்தி ஒரு பதிவாகப் பதியணும்.
இணையத் தேடுவார்களுக்கோ, புதிதாக அறிமுகம் ஆகும்
இலக்கிய ஆர்வலர்களுக்கோ கொடுக்க ஒருசுட்டி வேண்டுமல்லவா?

கலிங்கத்துப்பரணி ஆசிரியர் ஜெயங்கொண்டாரின் காராணை விழுப்பரையன் மடல்
இது.
ஜெயங்கொண்டார் ஆசிரியர் என்று ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார்
(காராணை என்பது இப்போது விழுப்புரம் அருகே அண்ணமங்கலம்
என்று மு. ரா. சுவாமி எழுத்தால் அறிந்தேன்), உவேசா
குறிப்பிட்டிருக்கிறார்கள்.

காராணை விழுப்பரையன் ஆதிநாதன் குலோத்துங்க சோழனின்
சேனாபதியாய் இருந்தவன். பாண்டிநாட்டை சோழர்கள் அடக்கியாண்ட
காலத்தில் சோழபாண்டியர் என்று சோழ இளவரசர்களுக்கு மாளிகை
மதுரையில் இருந்தது. அதில் இருந்தவன் ஆதிநாதன். இந்நூலின்
பாட்டுடைத் தலைவன். அவன் சீரங்கத்தில் செய்த தருமங்கள்
பற்றிக் கல்வெட்டுக்கள் உள்ளன (குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்களில்
காண்க). அவனது மாளுவநாட்டுப் போர் (மாளவநாடு - பாண்டிநாட்டில் ஓர்
உள்நாடு)
பாராட்டப்படுகிறது. எனவே, இந்நூல் 11-ஆம் நூற்றாண்டின் மத்தியில்
ஆனது. சமணம் துறவைப் போற்றுவதால் மிகுதியும் கண்டிக்கிறார்.
பௌத்தம், அத்வைதம், ... எல்லாம் சாடுகிறார்.

மாவிரதிகளைப் பற்றிச் சொல்கிறார். சீதரன் செய்ய திருமகளுடன்
இருப்பதைப் போல் தலைவன் என்று போற்றுகிறார்.

நா. கணேசன்

naa.g...@gmail.com

unread,
Feb 21, 2010, 11:29:34 AM2/21/10
to சந்தவசந்தம்

தமிழில் உள்ளது ஐந்தே ஐந்து வளமடல்கள்:

(அ) சிறிய திருமடல்
(ஆ) பெரிய திருமடல் (அ, ஆ - இரண்டும் திருமங்கை ஆழ்வார்)
(இ) காராணை விழுப்பரையன் வளமடல் ( செயங்கொண்டார் -
முதற் குலோத்துங்கனின் சேனாபதி ஆதிநாதன் மீது பாடப்பட்டது.
வடமொழிக்கு ஒரே நூலாம் ஜெயராசி செய்த தத்வ-உபப்லவ- சிம்ஹம் போல,
தென்மொழியின் ஒரே லோகாயத நூல் இம்மடல் (11-ஆம் நூற்.).
(ஈ) தத்துவராயர் செய்த வளமடல் (இது நெல்லை சங்கராச்சாரியார் மீது பாடிய
14-ஆம் நூற்றாண்டு பிரபந்தம்)
(உ) கன்னிவாடி நாயக்கன் வளமடல், சுப்பிரதீபக் கவிராயர் (17-ஆம் நூற்.)
பெ. தூரன் ஓலைச்சுவடி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்
அச்சுப் போட்டுள்ளது.

(இ), (உ) - இரண்டும் கொங்குநாட்டுச் சுவடிகள்.

நா. கணேசன்

srirangammohanarangan v

unread,
Feb 21, 2010, 11:36:52 AM2/21/10
to santhav...@googlegroups.com
நன்றி  ஐயா !   வாழிய  நீவிர். 

Soundar

unread,
Feb 21, 2010, 11:40:50 AM2/21/10
to santhav...@googlegroups.com
கம்பருக்கு 'கவிச்சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் சோழமன்னன் அளித்தான் என்றி தமிழ் விக்கியின் மூலம் அறிந்தேன்.
http://ta.wikipedia.org/wiki/கம்பர்
இதுவரை  கம்பர் ஒருவரே  கவிச்சக்கரவர்த்தி என்று நினைத்திருந்தேன்.  செயங்கொண்டாரும் இந்தப் பட்டப்பெயர் பெற்றவர் என்பது நான் அறிந்திராத செய்தி. இவருக்கு இந்தப் பட்டப்பெயர் கொடுத்தவர் யார்?

சௌந்தர்


naa.g...@gmail.com

unread,
Feb 21, 2010, 12:21:17 PM2/21/10
to சந்தவசந்தம்

On Feb 21, 10:40 am, Soundar <rsoun...@gmail.com> wrote:
> கம்பருக்கு 'கவிச்சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் சோழமன்னன் அளித்தான் என்றி

> தமிழ் விக்கியின் மூலம் அறிந்தேன்.http://ta.wikipedia.org/wiki/கம்பர்


> இதுவரை  கம்பர் ஒருவரே  கவிச்சக்கரவர்த்தி என்று நினைத்திருந்தேன்.
> செயங்கொண்டாரும் இந்தப் பட்டப்பெயர் பெற்றவர் என்பது நான் அறிந்திராத செய்தி.
> இவருக்கு இந்தப் பட்டப்பெயர் கொடுத்தவர் யார்?
>
> சௌந்தர்

கம்பருக்குக் கவிச்சக்க்ரவர்த்தி என்ற பட்டம் சோழ அரசன் கொடுத்தான்
என்பது செவிவழிச் செய்தியே. கல்வெட்டிலோ, மற்ற ஆதாரங்களோ இல்லை.
இருந்தால் தர வேண்டுகிறேன்.

-------

ஆனால், ஜெயங்கொண்டார் சோழப் பேரரசன் குலோத்துங்கனிடம்
கவிச்சக்கிரவர்த்தி பட்டம் வாங்கியவர். அவருக்கு 100 ஆண்டுகள்
பின்வாழ்ந்த ஒட்டக்கூத்தர் மூன்று சோழப் பேரரசர்களுக்கு
உலா பாடியவர். மூவர் உலாவில் காராணை விழுப்பரையர்கள்
குறிப்பிடப்படுகின்றனர்.

ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணிக்கு நூறு வருடம் முன்பு அமைந்த
கலிங்கத்துப் பரணி மாதிரியாய் அமைந்தது. ஒட்டக்கூத்தர் மிக
மரியாதையுடன் கவிச்சகிரவர்த்தி ஜெயங்கொண்டாரைப் போற்றுகிறார்.

இதற்கெல்லாம் விரிவை மு. அருணாசலம் பிள்ளையவர்களின்
தமிழ் இலக்கிய வரலாறு நூல்களிலும், பிறவற்றிலும் காண்க.

---------

ஒட்டக்கூத்தர் திருமடம் வீரசைவமடம் கும்பகோணத்தில் உள்ளது.
சமாதியும் உண்டு. [இப்போது கன்னடநாட்டில் இருந்துவந்த மடாதிபதி.
ஜெயலலிதா முதல்வராய் இருக்கையில் சில உரசல்கள் நினைவிருக்கலாம்.]

ஒட்டக்கூத்த முதலியார் கவிச்சக்கிரவர்த்தி பட்டம்
சோழப் பேரவையில் பெற்ற போது பாடிய விருத்தங்கள்
புகழ் பெற்றவை:

இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன்
றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களம்
திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன்
திருக்கைப் பங்கயம் சிறக்கத் தந்தன
படுக்கக் கம்பளம் பரக்கக் குங்குமம்
பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம்
கடுக்கக் குண்டலம் கலிக்கச் சங்கினம்
கவிக்குப் பஞ்சரம் கவிக்கத் தொங்கலே

பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போய்முடியப்
பைம்பொற்றா ரகைசிந்தப் பகிரண்டத் திடையே
மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால்
வடிவாகிப் புவிகைக்கொண் டருண்மானா பரணா
முத்துப்பந் தரினிற்குந் குருளைக்கும் சினவேல்
முருகற்கும் பொதியக்கோ முனிவற்கும் பதுமக்
கொத்தற்கும் சடிலக்குந் தளருக்கும் அல்லாற்
கூழைத்தண் டமிழற்கேன் கொடியுங் காளமுமே.

கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் குறிப்பிடும்
பதுமக்கொத்தன் யார்? அவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?
என்று விரிவாகப் பேசும் என் கட்டுரை:
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf

நா. கணேசன்

http://www.poetryinstone.in/lang/en/2009/02/01/dhakshinamurthy-worship-a-guest-post-by-dr-n-ganesan.html
http://www.poetryinstone.in/lang/ta/2009/02/01/dhakshinamurthy-worship-a-guest-post-by-dr-n-ganesan.html

devoo

unread,
Feb 22, 2010, 5:02:35 AM2/22/10
to சந்தவசந்தம்
லோகாயதம் – தமிழ் என்ன ?

தேவ்

Parthasarathy Krishnan

unread,
Feb 22, 2010, 6:56:16 AM2/22/10
to santhav...@googlegroups.com
Can we say ULAGIYAL?
 
(sorry Tamil font does not co operate)

 
On 2/22/10, devoo <rde...@gmail.com> wrote:
லோகாயதம் – தமிழ் என்ன ?

தேவ்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Paaki

naa.g...@gmail.com

unread,
Feb 22, 2010, 7:11:28 AM2/22/10
to சந்தவசந்தம், tamil...@googlegroups.com

On Feb 22, 4:02 am, devoo <rde...@gmail.com> wrote:
> லோகாயதம் – தமிழ் என்ன ?
>
> தேவ்

உலகாயதம் என்ற சொல்லைத் திருவாசகத்தில் தற்சமமாக
மாணிக்கவாசக சுவாமிகள் ஆள்கிறார்.

உலகாயதம் வட, தென் மொழிகளின் இலக்கியங்களில்
சில வரிகளிலோ, ஓரிரு பக்கங்களிலோ மறுக்கப்படும்.
ஆனால், உலகாயத மதத்தைப் போற்றும் நூல்கள்
இரண்டே: ஜெயராசி (வடமொழி), ஜெயங்கொண்டார் (தமிழ்)
செய்தவை அவை.

உலகாயதக் கோட்பாடுகளை விளங்க, மணிமேகலை,
சிவஞான சித்தியார் (பரபக்கம்), நீலகேசி உரை இவற்றில் காணலாம்.
[சிவஞான சித்தியார் (உமாபதி சிவாச்சாரியார், சிதம்பரம்)
- மாதவ வித்யாரண்யரின் சர்வ தர்சன சங்கிரகத்தின்
மொழிபெயர்ப்பு என்று கேட்டிருக்கிறேன்.]

ஆசீவகம், உலகாயதம் பழந்தமிழ்ச் சமுதாயத்தில்
வலுப்பெற்றிருந்த கோட்பாடுகள் (உ-ம்: பக்குடுக்கை
நன்கணியார், கணியன் பூங்குன்றனார், ... சங்கச்
செய்யுள்கள்) முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னைப்
பல்கலை) நிறைய நூல்கள் எழுதியுள்ளார். சில
பார்த்திருக்கிறேன். அவருக்கு காராணை வளமடல்
அனுப்பவேண்டும்.

நா. கணேசன்

devoo

unread,
Feb 22, 2010, 11:23:09 AM2/22/10
to சந்தவசந்தம்
Feb 20, 9:25 pm, Hari Krishnan
> நாசாவில் வேலைபார்த்துக் கொண்டு இவ்வளவு நீளமாக, திரும்பத் திரும்ப எழுத அசாத்திய >பொறுமையும் அளவற்ற கால நிர்வாகத் திறனும் வேண்டும். எப்படி இவ்வளவுமுறை, இதை >உங்களால் எழுத முடிகிறது, அதுவும் படிக்கிறவனுக்கு மூச்சுத் திணறும்படியான நீளத்தில்! கடந்த >பத்து வருடங்களில் நானே இதை நூறுமுறை படித்தாகிவிட்டது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Feb 21, 7:41 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
> சொல்ல நினைத்ததை விட்டுவிட்டேன். தமிழமுதம் என்ற புதுக்குழுவில் பல புதிய இளைஞர்கள்


> மடலாடுகின்றனர். பழைய வளமடல் இ-மெயில்களைச் சேர்த்து அவர்களுக்காக இட்டேன்.

> இலக்கியச் செய்தி ஆனதால்………

“ஆசிரியர் பெயர் அறியமுடியாது இருந்த பாடல்களின் பட்டியலைத் தந்து 15
பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியமுடியவில்லை என்பதையும்
உ.வே.சா புறநானூறு முதற்பதிப்பில் குறித்துள்ளார். இதுநாள் வரை நம்மால்
அப்பெயர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நினைக்கும் பொழுது
உ.வே.சா. அவர்களால் ஒருவேளை புறநானூறு வெளிப்படுத்தப் படாமல் போயி
ருந்தால் தமிழர்களின் வீர வரலாறு அறியப்படாமல் போயிருக்கும் என்று
கருதுவதில் தவறில்லை.“

(உ வே சா அவர்களின் புறநானூறு - முதற்பதிப்பு குறித்த ஆய்வுரையில்
முனைவர் மு இளங்கோவன் கூறியிருப்பது)

தற்போதைய சூழலில் இளம் பருவத்தினரை லோகாயதத்தில் ஈடுபடுத்த ‘விழுப்பரையன்
வளமடல்’தான் வேண்டும் என்றில்லை; அருமையான இலக்கியச் செய்திகள் ஆயிரம்
இருக்க,குழுமத்து இளைஞர்களின் மத்தியில் இலக்கியச் செய்தி என்னும்
பெயரில் விழுப்பரையன் வளமடலுக்கு விளம்பரம் தேடுவதோடு நில்லாமல் முன்னோர்
முயன்று முடிக்காமல் போன செயல்களையும் முன்னிறுத்தி அவற்றில் முனையுமாறு
அவர்களை ஊக்கப்படுத்துவது பன்னூற் பயிற்சி மிக்க மரபுச் செல்வர் கணேசனார்
ஆற்றும் அருந்தொண்டாக இருக்கும் என்பது தாழ்மையான கருத்து


தேவ்


srirangammohanarangan v

unread,
Feb 22, 2010, 12:28:42 PM2/22/10
to santhav...@googlegroups.com
ஐயா   கணேசன்!     நீர்   இலக்கிய  வழக்கு   அறியாதவர்  அல்லவே!    பன்னிரு  பாட்டியல்,    இலக்கண  விளக்கம்    போன்ற  நூல்கள்    காமம்   என்ற  உறுதிப்பொருளை     ஒரு  தலைவன்   அறம்,  பொருள்,    வீடு  என்ற  மற்ற   உறுதிப்பொருள்களை   துச்சமாக   இகழ்ந்து     காமத்தையே    மிகுத்துப் பாடுவதாகக் கலிவெண்பாவால்   இயற்றப்படும்    பிரபந்த வகைக்கு   வளமடல்  என்று  பெயர்    என  இலக்கணம்    வகுத்திருக்கிறதே.    அந்த  வகைப் பிரபந்தமாக  அன்றோ  இருக்கிறது  நீர்   காட்டிய   இந்த    காரணை    விழுப்பரையன்  மடல்.     இதுபோல்     ஏகப்பட்ட   மடல்  இலக்கியங்கள்     இருந்ததாக  அன்றோ  சிற்றிலக்கிய  ஆராய்ச்சி    இரண்டு  தொகுதிகள்   எழுதிய   டாக்டர்   இரா கண்ணன்   கூறுகிறார்.    
 
மேலும்  டாக்டர்    கண்ணன்    இந்த  காரணை  விழுப்பரையன்  மடல்   13ஆம் நூற்றாண்டைச்   சேர்ந்ததாக  அன்றோ   கூறுகிறார்.    ஆசிரியரும்   ஜெயங்கொண்டார்    அன்று.     டாக்டர் கண்ணன்    ஆய்வின்படி.  
 
மேலும்   இந்த   இலக்கிய   உத்தி    நூல்களை   வைத்துக்கொண்டு    எல்லாம்   ஏப்ரல்   1ஆம் தேதி    கொண்டாடுகிறீரே!  நல்ல   தமாஷய்யா:--)))))  
 
நான்  ஏதோ  மெய்யாலுமே    உலகாயத  நூலாக்கும்   என்று   ஏமாந்துவிட்டேன்.     இதில் ஜெயராசியின்   நூலோடு   ஒப்புமை  வேறு.    A   good  joke :--)))))     

 

naa.g...@gmail.com

unread,
Feb 22, 2010, 8:19:31 PM2/22/10
to சந்தவசந்தம்

On Feb 22, 11:28 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> ஐயா   கணேசன்!     நீர்   இலக்கிய  வழக்கு   அறியாதவர்  அல்லவே!    பன்னிரு
> பாட்டியல்,    இலக்கண  விளக்கம்    போன்ற  நூல்கள்    காமம்   என்ற
> உறுதிப்பொருளை     ஒரு  தலைவன்   அறம்,  பொருள்,    வீடு  என்ற  மற்ற
> உறுதிப்பொருள்களை   துச்சமாக   இகழ்ந்து     காமத்தையே    மிகுத்துப்
> பாடுவதாகக் கலிவெண்பாவால்   இயற்றப்படும்    பிரபந்த வகைக்கு   வளமடல்  என்று
> பெயர்    என  இலக்கணம்    வகுத்திருக்கிறதே.    அந்த  வகைப் பிரபந்தமாக  அன்றோ
> இருக்கிறது  நீர்   காட்டிய   இந்த    காரணை    விழுப்பரையன்  மடல்.
> இதுபோல்     ஏகப்பட்ட   மடல்  இலக்கியங்கள்     இருந்ததாக  அன்றோ
> சிற்றிலக்கிய  ஆராய்ச்சி    இரண்டு  தொகுதிகள்   எழுதிய   டாக்டர்   இரா
> கண்ணன்   கூறுகிறார்.
>

முனைவர் ஐயா! யார் இரா. கண்ணன் என்று எனக்குத் தெரியாது. அவருக்கு இந்த
நூலைப்
பற்றித் தெரியாது என்று உணர முடிகிறது. அவர் என்ன எழுதியிருக்கிறார்,
அவரது நூல்கள் பிரபந்தங்களின் அறிமுக நூலா? நூலை வாங்கிப் படித்துப்
பார்க்கிறேன்.

வளமடல் வேறு. உலாமடல் வேறு. வளமடல்கள் தமிழில் ஐந்தே ஐந்துதான்:

(பலரும் வளமடல் 2 தான் (ஆழ்வார் திருமடல்கள்) என்றே எழுதிச் செல்வர்.)
5-க்கு மேல் எந்த வளமடலை கண்ணன் சொல்கிறார்?

> மேலும்  டாக்டர்    கண்ணன்    இந்த  காரணை  விழுப்பரையன்  மடல்   13ஆம்
> நூற்றாண்டைச்   சேர்ந்ததாக  அன்றோ   கூறுகிறார்.    ஆசிரியரும்
> ஜெயங்கொண்டார்    அன்று.     டாக்டர் கண்ணன்    ஆய்வின்படி.
>

13-ஆம் நூற்றாண்டில் எந்தச் சோழன் ஆண்டான்? என்று கண்ணன் சொல்கிறார்.
ஆதிநாதனின் கல்வெட்டுக்கள் 13-ஆம் நூற்றாண்டிலா இருக்கின்றன?

‘சீததுங்கன் மேக தியாகதுங்கன் தேன்பிலிற்றும்
தாதகிப் பூந்தொங்கல் தங்கோன் புலியையிம
சேதுபரி யந்தம் செலுத்துதற்குத் தான்செலுத்தும்
சாதுரங்க முந்நீர்’ ...

கண்ணன் நூலையே பார்க்காமல் எப்படி ஆராய்ச்சி செய்தார் என்று தெரியவில்லை.

பாண்டி நாடு பாண்டியர்களிடம் திரும்பியபின் காராணை விழுப்பரையர்கள்
புலவராக வாழ்ந்துள்ளனர். ஒரு கிடைக்காத பிள்ளைத்தமிழ் ஆசிரியர் உண்டு.
ஆனால் இந்நூல் பாட்டுடைத்தலைவன் ஆதிநாதன். நூல் யாத்தவன் அல்லன்.
ராகைவயங்கார், உவேசா போன்றோர் செயங்கொண்டாரின் இந்நூலைக்
குறிப்பிட்டுள்ளனர்.

> மேலும்   இந்த   இலக்கிய   உத்தி    நூல்களை   வைத்துக்கொண்டு
> எல்லாம்   ஏப்ரல்   1ஆம் தேதி    கொண்டாடுகிறீரே!  நல்ல   தமாஷய்யா:--)))))
>
> நான்  ஏதோ  மெய்யாலுமே    உலகாயத  நூலாக்கும்   என்று   ஏமாந்துவிட்டேன்.
> இதில் ஜெயராசியின்   நூலோடு   ஒப்புமை  வேறு.    A   good  joke :--)))))
>

மெய்யாலுமே வளமடல்கள் 5க்கு மேல் உள்ளனவா? கண்ணன் தருவதும், நீங்கள்
தருவதும் பார்க்க ஆசை.

நா. கணேசன்

naa.g...@gmail.com

unread,
Feb 22, 2010, 8:25:52 PM2/22/10
to சந்தவசந்தம்
> On Feb 22, 11:28 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
> wrote:
>
> > ஐயா   கணேசன்!     நீர்   இலக்கிய  வழக்கு   அறியாதவர்  அல்லவே!    பன்னிரு
> > பாட்டியல்,    இலக்கண  விளக்கம்    போன்ற  நூல்கள்    காமம்   என்ற
> > உறுதிப்பொருளை     ஒரு  தலைவன்   அறம்,  பொருள்,    வீடு  என்ற  மற்ற
> > உறுதிப்பொருள்களை   துச்சமாக   இகழ்ந்து     காமத்தையே    மிகுத்துப்
> > பாடுவதாகக் கலிவெண்பாவால்   இயற்றப்படும்    பிரபந்த வகைக்கு   வளமடல்  என்று
> > பெயர்    என  இலக்கணம்    வகுத்திருக்கிறதே.    அந்த  வகைப் பிரபந்தமாக  அன்றோ
> > இருக்கிறது  நீர்   காட்டிய   இந்த    காரணை    விழுப்பரையன்  மடல்.
> > இதுபோல்     ஏகப்பட்ட   மடல்  இலக்கியங்கள்     இருந்ததாக  அன்றோ
> > சிற்றிலக்கிய  ஆராய்ச்சி    இரண்டு  தொகுதிகள்   எழுதிய   டாக்டர்   இரா
> > கண்ணன்   கூறுகிறார்.
>
> முனைவர் ஐயா! யார் இரா. கண்ணன் என்று எனக்குத் தெரியாது. அவருக்கு இந்த
> நூலைப்
> பற்றித் தெரியாது என்று உணர முடிகிறது. அவர் என்ன எழுதியிருக்கிறார்,
> அவரது நூல்கள் பிரபந்தங்களின் அறிமுக நூலா? நூலை வாங்கிப் படித்துப்
> பார்க்கிறேன்.
>
> வளமடல் வேறு. உலாமடல் வேறு. வளமடல்கள் தமிழில் ஐந்தே ஐந்துதான்:
>

http://groups.google.com/group/santhavasantham/msg/e37e297273b9843f

> > > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Feb 23, 2010, 8:26:02 AM2/23/10
to மின்தமிழ், Santhavasantham

On Feb 23, 12:11 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> வளமடல் வரட்டும்.  


> --
> அன்புடன்,
> ஹரிகி.

Hariki wrote:
" I am reminded of the usage நெச்சு by Arunagiri.

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கற்று அறன்மேவி.....
It took me a long and laboured search to understand that what
Arunagiri
actually intends to convey by நெச்சு is நெய்த்து. நெய் தடவப்பட்டு. "

I think another meaning - look at the word, aRal.
This struck me while reading kaaraaNai vaLamaTal.

will write on this after a few hours, now have to rush.

N. Ganesan

naa.g...@gmail.com

unread,
Feb 23, 2010, 10:11:38 PM2/23/10
to சந்தவசந்தம், thami...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

ஹரிகி எழுதினார்:

" I am reminded of the usage நெச்சு by  Arunagiri.
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கற்று அறன்மேவி.....
It took me a long and laboured search to understand that what
Arunagiri
actually intends to convey by  நெச்சு is நெய்த்து.  நெய் தடவப்பட்டு.
"

’நெச்சு’ என்பது ’nessu' என்று பேச்சில் வழங்குவதை,
அதாவது - நெச்சு = ’பின்னல் சடையிட்டு’ என்ற
பொருளில் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நெச்சு = நெஸ்ஸு, கொய்சகம் = கொஸ்ஸகம் > கொச்சகம்,
வய்தான்/வைதான் = வஸ்ஸான், சச்சரி = சஸ்ஸரி
என்றும் சிலர் உச்சரிப்பதைக் கேட்கிறோம் அல்லவா?
பெரி. சந்திரா 2002-ல் இப் பேச்சு வழக்கைக் குறித்துள்ளார் [1].

இந்தப் பேச்சுத் தமிழ் ஒலிப்பை அருணகிரியார் ஆவணப்படுத்தியதாலே,
நெய்த்து என்று பயிலும் சில இடங்களுக்குச் ’சடைபின்னிய’ என்ற
பொருள் விளங்குகிறது.

கைத் தரும் கவரி வீசிய காலால்,
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில்
தத்தி வீழ் அருவியின் திரள் சால,
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ - கம்பர்

[உரை: இருண்ட பெரிய மலையில் சடைபோல்
ஒன்றையொன்று பின்னி அறுதிகளைக்
கொண்டுள்ள அருவிகளின் திரள்போல,
உத்தரீயம் காற்றில் அலைந்தது.]

இனி, திருப்புகழில் நெய்த்து எனப் பயிலும்
இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

-------

முதலில் ஒரு சொல்லின் பொருள்: ”அறல்”
’நெய்த்து’ என்று பயிலும் திருப்புகழ்களில்
‘அறல்’ என்று வந்தால் உடனே ‘கரு மணல்’
என்று பொருள் எழுதி விடுகின்றனர்.
இது, பொருந்தாது. கருமணலுக்கும்
கூந்தலுக்கும் என்ன தொடர்பு?
மதறாஸ் லெக்ஸிகன் அறலுக்குக் கொடுக்கும்
பல பொருள்களில் ஒன்றுதான் ‘கரு மணல்’

MTL:
அறல் aṟal
, n. < அறு¹-. 1. Becoming detached by cutting; அறுகை. 2. Flowing
water; அறுத்துச் செல்லும் நீர். எக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29). 3.
Laving;

அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177). 4. Water; நீர். (மாறன.
மேற்கோ. 723.) 5. Wave, ripple; நீர்த்திரை. (திவா.) 6. Black sand found
on the sea-

shore; கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி. 20, 41). 7. Curl;
மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.) 8. Low jungle; சிறுதூறு.
(திவா.)

9. Happiness, prosperity; கலியாணம். (மாறன. பக். 438.)

இதில் (6) கரு மணல் என்பதை விட ’தண்ணீரால் பலவகை வளைவுகள் தோன்றச்
செய்த மணல்குவியல்’ என்றால் பொருந்தும். (7) Curl; மயிர்நெறிப்பு.
(பெரும்பாண். 162, உரை.)
அதற்குப் பொருந்தும். (2), (3), (4),(5), (7), (8) எல்லாம் இந்த வளைவுப்
பொருள் உள்ளதால்
(6) தண்ணறல் தண்ணீரின் அடியில் தெரியும் அறுதியையுடைய வளைவுகள். வெறும்
‘கரு மணல்’
என்று எழுதினால் வளைவு, பின்னல், திருகுதல் பொருள் மறைந்துவிடுகிறது.

கலித்தொகையில் ‘தண்ணறல்’ உண்டு. அதையும், நச்சினார்க்கினியர்
உரையும் படித்தால், தண்ணறல் (மணிமேகலை) கருமணல் அல்ல என்று விளங்கும்.
[மணிமேகலைக்குப் பழைய உரை இல்லை.]

பாலைக் கலி 26:
“காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப்போல் கழல்குபு
தாதொடுந் தளிரொடுந் தண்ணறல் தகைபெற”

கூடிய காதலரின் முடி போல வளைந்து நெளிந்து
அழகுற்றது என்று பொருளுரைக்கிறார் நச்சினார்க்கினியர்:
“தண்ணிதாகிய அறுதியினையுடைய மணல்
கழன்று வீழ்ந்த தாதாலுந் தளிராலுங் காதலரைக்
கூடினவருடைய மயிர்போல அழகு பெற” என்கிறார்.

அதனால், திருகித் திருகி சுருளாய், வளைந்து
அறுதியுடன் இருக்கும் எந்த ஒரு பொருளுக்கும் ‘அறல்’
என்று சொல்லலாம். முசு என்னும் கருங்
குரங்கின் வளைந்த கைகள் போல இருப்பதும்
அறல் தான். இதனை அருணகிரியாரே
திருப்புகழில் பாடியுள்ளார். ‘அறல்’ என்னும் சொல்
வரும் இடங்களை எல்லாம் ஆய்ந்தால்
இன்னும் நன்கு விளங்கும்.

-------------

இனி ‘நெய்த்து’ என்றால் கூந்தலை
பல பகுதிகளாக அறுதியிட்டுப் பிரித்து,
பின்னல் சடையிட்டு முடிதல் என்னும்
பொருளைத் திருப்புகழ்ப் பாக்களுக்குச்
சொல்லலாம் என்று எண்ணுகிறேன்.
நெய்த்தை அடுத்து வரும் அறலுக்கு
’கருமணல்’ என்று சொல்லத் தேவையில்லை.
[மணிமேகலையில் வரும் தண்ணறல்
என்பதற்கு நச்சினார்க்கினியர் பொருள்
பொருந்தும் எனப் பார்த்தோம்.]

கலி. 55
மின்னொளிர் அவிர் அறல் இடைபோழும் பெயலேபோல்
‘ஒளிர்கின்ற மின்னினது விளங்குகின்ற அறுதிகள்
இடையே பிளந்தோடும் மேகங்கள் போலே’ (நச். உரை)

பெரும்பாண். 162 உரை: ‘குறிதாகிய அறலைத் தன்னிடத்தே
கொண்ட மயிரினையுமுடைய’ (நச்.)

அறல் குழல் பாணி தூங்கியவரொடு (சிறு. 162)
இங்கே வரையறுத்த (அறுதியிட்ட) தாள அறுதி - மகளிர் ஆடல்
குறிப்பிடப்படுகிறது.

விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் - சிலம்பு

அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ்
நிறை நறுந் தாமரை முகமும், - கம்பன்

‘உண்தேன் அறற்கூந்தல்’ - நளவெண்பா.
ஐம்பால் போல் பகுத்துப் பின்னிய கூந்தல்.
ஆப்பிரிக்க பெண்கள் தம் நாடுகளிலும்,
அமெரிக்காவிலும் மயிரைப் பகுத்துப்
பல்சடையாகத் திரித்து அதன்மேல் பல்வண்ண
(செயற்கை) முத்துக்களால் அலங்கரிப்பதைக் காணலாம்.

அதேபோல்,
ஐம்பால் என்று பல்சடைகளாகப் பிரிந்துப் பின்னி
அழகூட்டுவது பழந்தமிழர் வழக்கம். சங்க இலக்கியத்தில்
ஐம்பால் என்று பார்க்கலாம். காராணை விழுப்பரையன் வளமடலிலும்
இச்செய்தி உண்டு: "ஓதி வலம்புரி முத்து ஊசலும்ஆட முகச்
சீத நகைத் தரளத் திங்கள் வியர்ப்ப" (கண்ணி 188).
கஜபுரி என்னும் எலிபண்டா குகைகளில்
ஈசன் அருகே நிற்கும் பார்வதி சிற்பத்தில் கொண்டையில்
இருந்து முத்துச் சரங்கள் தூங்கும்.

இரும்புச் சீப்பால் சுருட்டை முடியை ஐந்தாகப் பகுப்பது:
’எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால்’ -கலி.
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு -கலி. 59
மணி கட்டிய ஐம்பால்:
வரை வளர் முழவு விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால் - சீவ.

-----

திருப்புகழ் உதாரணங்கள்

(அ) நெச்சு - nessu எனும் நாட்டார்வழக்கு என்று கொள்வோம்.

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்

     கச்சிக்கச் சுற்று அறல் மேவி - திருப்புகழ்

சுருள்கள் சுற்றிய கற்றைச் சடைகளாக
நெய்யப்பட்டு (நெச்சு),  குளிர்ந்த பிச்சிப்பூக் கச்சிதமாய்ச் சூடி,

http://www.kaumaram.com/thiru_uni/tpun0526.html
(ஆ)

நிறத்து மதர்த்து *நெய்த்த அறல் ஓதி* நிழற்குள் அளி குலத்துடன்
ஒன்றி ...

பொருள்: ஒளிவிட்டு, செழிப்புற்று,
*பின்னி நெய்யப்பட்ட சுருள்சடைகள் நிரம்பிய கூந்தல்* நிழலில் மொய்க்கும்
வண்டுகளின் கூட்டத்துடன் பொருந்தி,

(ஓலை தரித்த குழைக்கும் - திருப்புகழ்)

(இ) இதமுறு விரைபுனல் முழுகி .... திருப்புகழில்

வளர் கொண்டல் என,  அறல் என,  இசை அளி என, நள் இருள் என நிறம் அது கருகி,
நெடுகி
நெறிவு பட நெய்த்து முசுவின் திரி கை ஒத்த சுருள் குந்தளமும் ..

(கரும்) குரங்காகிய முசுவின் கைகள் போல், பின்னப்பட்ட (நெய்த்து) சுருள்
கூந்தல் அறல்
விளங்கியது.

(ஈ) நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ - திருப்புகழ்

பின்னிய சடைச்சுருள்கள் ஆற்றுத் தரையில் பார்க்க முடிகிற அறல்களோ? மேகமோ?

நா. கணேசன்

Reference 1"http://www.treasurehouseofagathiyar.net/15400/15450.htm
பெரி. சந்திரா 2002-ல் காட்டியுள்ளார்:
"> நெய்த்து என்பதை நெச்சு என்று சொல்ல முடியும் என்றால்,

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
யகரம் சகரமாவது இயல்பான திராவிட ஒலியியல்.
நெயவு > நெசவு.
இங்கே நெச்சு என்பது நெய்த்து என்பதன் சிதைவுதான் என்று
கருதவேண்டியில்லை.
நெய்/நெசு வினை; நெச்சு > வினையெச்சம்.
புகு > புக்கு; தொகு > தொக்கு என்பதுபோல்.
எங்கள் வட்டாரமாகிய வடகொங்குநாட்டில்
"வேலையை செஸ்ஸு..." என்று சொல்வதைக் கேட்கலாம்.
அது செய் > செசு என்ற மாற்றம்.
அதேபோல் "நெஸ்ஸு" (நெய்து) என்றும் சொல்வார்கள்.

இல்லாவிட்டாலுமே யகர/தகரங்கள் சகரமாவது இயல்பு. "

N. Ganesan

unread,
Mar 1, 2010, 10:39:55 PM3/1/10
to மின்தமிழ், Santhavasantham

On Mar 1, 9:17 pm, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> நான் விக்கிரமனில்லை; அதனால் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். :-)

கவிஞர்கள் கோபிப்பதும், பின்னர் நிலைமை திரும்புவதும்
தமிழ் 2000 ஆண்டுகளாய்ப் பார்த்துக்கொண்டிருப்பது.
‘வளநாடும் உன்னதோ?’ என்று சோழனிடம் சினமுற்றுப்
போனார் கம்பர்.

இதேபோல், தனக்குக் கவிச்சக்கிரவர்த்தி என்று பட்டம்
கொடுத்த முதலாம் குலோத்துங்கனிடம் சண்டை போட்டிருக்கிறார்


செயங்கொண்டார்.

தமிழின் முதற் புலவர் வரலாறு, “தமிழ் நாவலர் சரிதை”.
மிக அழகாக ஆய்ந்து பழைய பதிப்புகளை விடச் சிறந்ததாக
வெளியிட்டவர் உரைவேந்தர் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்கள்.
அந்த நூல் என் நூலகத்தில் உண்டு. (அமெரிக்காவில் உள்ள
ஒரே படி அதுவாகலாம். ) தமிழ் நாவலர் சரிதைக்கு வருவோம்
- இதைப் 17-ஆம் நூற். நூல் என்று கணிக்கிறார் மாயூரம்
மு. அருணாசலம் ஐயா. அனேகமாக, படிக்காசுப் புலவர்
எழுதிய ’நோட்ஸ்’ போன்றது என்பார். இல்லாவிட்டால்,
பல புலவர் வரலாறுகளும், தனிப்பாக்களும், கர்ணபரம்பரைச்
செய்திகளும் நாம் பெற்று இன்றும் துய்க்க முடியாது.

அபிதான சிந்தாமணி தமிழ் நாவலர் சரிதையில் இருந்து
2 வெண்பாக்களை செயங்கொண்டார் சொல்லியது என்று
தருகிறது. அவை பார்க்க:

[Begin Quote]
“இவர் அபயனிடம் கோபங்கொண்டபோது

காவல ரீகை கருதுங்காற் காவலர்க்கும்
பாவலர் நல்கும் பரிசொவ்வா - பூவினிலை
ஆகாப் பொருளை யபயனளித்தான் புகழாம்
ஏகாப் பொருளளித்தேன் யான்.

இவர் செட்டிகள் மீது இசையாயிரம் பாடியபோது
வாணியர் புகார் தங்களுக்கு ஊர் எனப் பாடக் கூறப்
புலவர்

ஆடுவதுஞ் செக்கே யளப்பதுவு மெண்ணெயே
கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே - நீடுபுகழ்க்
கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்கால் செக்கார்தாம்
உச்சிக்குப்பின் புகா ரூர்.

எனப் புகார்வரப் பாடித்தந்தனர்.”
[End Quote]

(தமிழ்நாவலர் சரிதை. அபிதான சிந்தாமணி).


நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages