On Sep 11, 6:00 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Sep 11, 4:12 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
>
> > வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?
>
> > அதுபோல்
>
> > வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
>
> > ஜெயபாரதன்.
>
> செல்வா,
>
> பொள்ளாச்சியில் தோன்றிய 'வாழ்க வளமுடன்' இயக்கம் பெரிய
> பக்தி யோக இயக்கமாக தமிழர் வாழும் இடங்களில் எல்லாம்
> வளர்கிறது.
>
> இருந்த வளமுடையார், சிற்றம்பலமுடையான், ...
> இவையெல்லாம் அத்துச் சாரியை பெறுதல் இல்லை.
>
> சிவந்த பொன்மேனி மணி திருச்சிற்றம்பலமுடையான்
> - திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
>
> நா. கணேசன்
>
A sangam example. From Paripadal 18,
valluppōr vallāy! malaimēl maram.
vaṭṭu uruṭṭu vallāy! malaiya--neṭṭuruṭṭuc
cīrtatumpum *aravamuṭaṉ* ciṟantu,
pōr tatumpum aravam pōl,
karuvi ārppa, karuvi niṉṟaṉa--kuṉṟam. 45
Many more throughout Tamil literature can be given.
N. Ganesan
>
>
> > ++++++++++++++++++++++++++++++
>
> > 2011/9/11 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> > > தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?
> > > "வாழ்க வளமுடன்" என்பது தவறான
> > > சொல்லாட்சி அல்லவா?
> > > மரம் -> மரத்துடன்
> > > அறம் - >அறத்துடன்
> > > வளம் -> வளத்துடன்
> > > இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?
>
> > > நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!
>
> > > [திருச்செல்வம் ஐயா அவர்கள், "வளத்துடன்" என்னும் தொல்காப்பியச்
> > > சொல்லாட்சியை முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாகவே
> > > இக்கேள்வியும்]
>
> > > நன்றி!
>
> > > அன்புடன்
> > > செல்வா
>
> > > --
> > > You received this message because you are subscribed to the Google Groups
> > > "தமிழ் மன்றம்" group.
> > > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > > To unsubscribe from this group, send email to
> > > tamilmanram...@googlegroups.com.
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -
Many more throughout Tamil literature can be given.
N. Ganesan
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
> 2011/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > Many more throughout Tamil literature can be given.
> தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
> அரவு என்பது வேறு.
?
காட்டப்பட்ட பரிபாடல் வரி:
சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து
நா. கணேசன்
தமிழில் உறழ்ச்சி என்றும் புறநடை என்றும் உள்ளதாகப் பேரா. பசுபதியவர்கள்
தம்முடைய தொடக்கத்தமிழ் இலக்கணக் கட்டுரைகளில் குறிப்பிட்டது என் நினைவுக்கு
வருகின்றது. உறழ்ச்சி என்றால் ஒரு சொல்லாட்சி இருவகையாகவும் பயனாகும். எ-கா
கோயில் அல்லது கோவில். நன்னூலிலக்கணப்படி ஒன்றுதான் சரியென்றாலும் மற்றொன்று
வழக்கில் வந்துவிட்டமையாலும், பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டமையாலும், உறழ்ச்சியாக
வளமுடன்/ வளத்துடன் என்ற ஒரு சொல்லை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்றே
தோன்றுகிறது. அதற்காக எல்லா மகரவீற்று சொற்களுக்குப் பின்னரும் அத்துச் சாரியை
இல்லாமல் எழுதுவதும் சரியில்லை என்றே தோன்றுகிறது. இலக்கணச்சுடர் எடுத்துக்
காட்டுகின்ற சங்க இலக்கிய எடுத்துக் காட்டுகளும் சரியாகவே இருக்கின்றன. பேரா.
பசுபதியவர்களின் கட்டுரையின் மீள்பதிவு கீழே:-
பேரா. பசுபதி அவர்களின் தொடக்கத் தமிழிலக்கணக் கட்டுரை பகிர்வுகளில் வாழ்க
வளமுடன்/ வளமொடு.
3) வளமோடு - வளமுடன்:
தமிழண்ணல்
'அளவோடு பெற்று வளமோடு வாழ்க' என்பது அரசு விளம்பரம். 'வாழ்க வளமுடன்' என்று
பெரியவர்களும் வாழ்த்த முற்படுகின்றனர். இவை வளத்தோடு வாழ்க, வாழ்க வளத்துடன்
என்றுதான் அமைய வேண்டும். மகர ஈற்றுச் சொற்களுக்குப் பிறகு, வேற்றுமை உருபு
வரும்போது அத்துச் சாரியை அவசியம் வரும். நிலம், நிலத்தை, நிலத்தால்,
நிலத்திற்கு, நிலத்தின், நிலத்தின்கண் - நிலமை, நிலமால் என வருவதுண்டோ? வடம் -
வடத்தை வடத்தால்தானே தவிர வடமை, வடமால் என வருமா? சில சமயங்களில் மூன்றாம்
வேற்றுமை உருபு சிலவற்றில் மட்டும் (ஓடு, உடன்) வளமோடு, நலமுடன், வளமுடன் என
எழுதி விடுகிறோம். பொது அமைப்பை விட்டு இது விலகிச் செல்கிறது. மொழி அனைவரும்
விளங்கிக்கொள்ள அமைந்த கருவி. சாதாரண மக்கள் இயல்பாகப் பேசிக்கொள்ளும்பொழுது
அத்துச் சாரியையில்லாமல் இச் சொற்களைச் சொல்ல மாட்டார்கள். ஒரு பெண் குடத்துடன்
வருவாளே தவிரக் குடமுடன் வர மாட்டாள். நாம் தடத்திலேயே போக வேண்டுமே தவிர,
தடமிலேயே போகக்கூடாது. நன்றாக எண்ணிப் பாருங்கள்:
குடம் + உடன் = குடத்துடன்.
தடம் + -ல் = தடத்தில்.
வளம் + உடன் = வளத்துடன்.
வளம் + ஓடு = வளத்தோடு.
வளத்துடன் வாழ நலத்துடன் செயற்படும்மனத்துடன் யாவரும் திகழ்ந்தால், இனத்துடன்
ஒற்றுமைப்படலாம்.
அப்படியென்றால் ....தமிழண்ணலின் இந்தக் கருத்துத்தானா கடைசி வார்த்தை? வளமுடன்,
ஔவை எழுதிய 'இட்டமுடன்' இவையெல்லாம் விதிவிலக்குத் தானா? வேறு விளக்கம் உண்டா?
3-1) வளமோடு..வளமுடன்:
இலக்கணச்சுடர் இரா.திருமுருகன் (நல்ல தமிழறிஞர், புதுச்சேரியில் வாழ்ந்தவர்.
சிந்துப் பாவியல் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். புல்லாங்குழல்
வாசிப்பார். கம்பன் பாடியபாவகைகளைப் பற்றியும், 4பாரதி-பாரதிதாசன் இருவரும்
பயன்படுத்திய யாப்புவகைகளை ஒப்பிட்டும்ஆய்வுகள் செய்துள்ளார்)
'வளமோடு வாழ்க' என்பது பொது அமைப்பை விட்டு விலகிச் செல்வதாகத்தமிழண்ணல்
குறித்துள்ளார். இவ் விலகல் விலக்கலுக்கு உரியதன்று. காரணம்,அதைத் தொடங்கி
வைத்தவர் தொல்காப்பியரே. ஆக்கமொடு, காலமொடு என்பனபோல் பல இடங்களில்# அவர்
எழுதியிருக்கிறார். இலக்கியங்களிலும் இவ்வழக்கு எப்போதும் இருந்து வருகிறது.
வட்டமொடு (திருமுருகு 110), மாடமொடு (மதுரைக்355), உலகமொடு (புறம் 72), இரவமொடு
(புறம் 281), கயமொடு, அயமுடன் (பெரியபுராண புகழ்ச்சோழர் 20) என்பன சான்றுகள்.
இம் முடிவினை, ' உடைமையும்இன்மையும் ஒடுவயின் ஒக்கும்' ( தொல் எழுத்து 133)
என்பதில் அடக்கலாம்.அல்லது உடம்பொடு புணர்த்தலாக இதனைத் தொல்காப்பியர்
உணர்த்தியதாகக்கொள்ளலாம்.
என் கருத்து (பசுபதி):
அத்து- இருக்கவேண்டிய இடத்தில் (மூன்றாவது வேற்றுமை இடத்தில்), அது வராமலும்
இருக்கலாம் என்பதைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கும் சில சொற்களுக்குப்
பின் (முக்கியமாக நெடில்+ம்) அத்துச் சாரியை வரவே கூடாது என்று எனக்குத்
தோன்றுகிறது.இதைப் பற்றி இந்த அறிஞர்கள் எழுதவில்லை. கீழ்க்கண்டவற்றைப்
பாருங்கள்:
1) இனாமைக் கேட்டான்.. ஹல்வாவில் பாதாமைக் காணோம்... ரொட்டியில் ஜாமைத்
தடவினேன்...
2) கவிஞர் நிஜாமை... கலாமுடன் இலந்தை பேசினார்... ஸதாமின் அறிக்கை ... ஆதாமின்
பின் ஏவாள் சென்றாள்... இத்யாதி. (உயர் திணை; அத்து வந்தால் பெயரே அல்லவா
மாறிவிடுகிறது?) இஸ்லாம் ..
இஸ்லாத்தை ..பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.)
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
தமிழில் உறழ்ச்சி என்றும் புறநடை என்றும் உள்ளதாகப் பேரா. பசுபதியவர்கள் தம்முடைய தொடக்கத்தமிழ் இலக்கணக் கட்டுரைகளில் குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகின்றது. உறழ்ச்சி என்றால் ஒரு சொல்லாட்சி இருவகையாகவும் பயனாகும். எ-கா கோயில் அல்லது கோவில். நன்னூலிலக்கணப்படி ஒன்றுதான் சரியென்றாலும் மற்றொன்று வழக்கில் வந்துவிட்டமையாலும், பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டமையாலும், உறழ்ச்சியாக வளமுடன்/ வளத்துடன் என்ற ஒரு சொல்லை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்றே தோன்றுகிறது. அதற்காக எல்லா மகரவீற்று சொற்களுக்குப் பின்னரும் அத்துச் சாரியை இல்லாமல் எழுதுவதும் சரியில்லை என்றே தோன்றுகிறது. இலக்கணச்சுடர் எடுத்துக் காட்டுகின்ற சங்க இலக்கிய எடுத்துக் காட்டுகளும் சரியாகவே இருக்கின்றன. பேரா. பசுபதியவர்களின் கட்டுரையின் மீள்பதிவு கீழே:-
பேரா. பசுபதி அவர்களின் தொடக்கத் தமிழிலக்கணக் கட்டுரை பகிர்வுகளில் வாழ்க வளமுடன்/ வளமொடு.
3) வளமோடு - வளமுடன்:
தமிழண்ணல்
'அளவோடு பெற்று வளமோடு வாழ்க' என்பது அரசு விளம்பரம். 'வாழ்க வளமுடன்' என்று பெரியவர்களும் வாழ்த்த முற்படுகின்றனர். இவை வளத்தோடு வாழ்க, வாழ்க வளத்துடன் என்றுதான் அமைய வேண்டும். மகர ஈற்றுச் சொற்களுக்குப் பிறகு, வேற்றுமை உருபு வரும்போது அத்துச் சாரியை அவசியம் வரும். நிலம், நிலத்தை, நிலத்தால், நிலத்திற்கு, நிலத்தின், நிலத்தின்கண் - நிலமை, நிலமால் என வருவதுண்டோ? வடம் - வடத்தை வடத்தால்தானே தவிர வடமை, வடமால் என வருமா? சில சமயங்களில் மூன்றாம் வேற்றுமை உருபு சிலவற்றில் மட்டும் (ஓடு, உடன்) வளமோடு, நலமுடன், வளமுடன் என எழுதி விடுகிறோம். பொது அமைப்பை விட்டு இது விலகிச் செல்கிறது. மொழி அனைவரும் விளங்கிக்கொள்ள அமைந்த கருவி. சாதாரண மக்கள் இயல்பாகப் பேசிக்கொள்ளும்பொழுது அத்துச் சாரியையில்லாமல் இச் சொற்களைச் சொல்ல மாட்டார்கள். ஒரு பெண் குடத்துடன் வருவாளே தவிரக் குடமுடன் வர மாட்டாள். நாம் தடத்திலேயே போக வேண்டுமே தவிர, தடமிலேயே போகக்கூடாது. நன்றாக எண்ணிப் பாருங்கள்:
குடம் + உடன் = குடத்துடன்.
தடம் + -ல் = தடத்தில்.
வளம் + உடன் = வளத்துடன்.
வளம் + ஓடு = வளத்தோடு.
வளத்துடன் வாழ நலத்துடன் செயற்படும்மனத்துடன் யாவரும் திகழ்ந்தால், இனத்துடன் ஒற்றுமைப்படலாம்.
அப்படியென்றால் ....தமிழண்ணலின் இந்தக் கருத்துத்தானா கடைசி வார்த்தை? வளமுடன், ஔவை எழுதிய 'இட்டமுடன்' இவையெல்லாம் விதிவிலக்குத் தானா? வேறு விளக்கம் உண்டா?
3-1) வளமோடு..வளமுடன்:
இலக்கணச்சுடர் இரா.திருமுருகன் (நல்ல தமிழறிஞர், புதுச்சேரியில் வாழ்ந்தவர். சிந்துப் பாவியல் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். புல்லாங்குழல் வாசிப்பார். கம்பன் பாடியபாவகைகளைப் பற்றியும், 4பாரதி-பாரதிதாசன் இருவரும் பயன்படுத்திய யாப்புவகைகளை ஒப்பிட்டும்ஆய்வுகள் செய்துள்ளார்)
'வளமோடு வாழ்க' என்பது பொது அமைப்பை விட்டு விலகிச் செல்வதாகத்தமிழண்ணல் குறித்துள்ளார். இவ் விலகல் விலக்கலுக்கு உரியதன்று. காரணம்,அதைத் தொடங்கி வைத்தவர் தொல்காப்பியரே. ஆக்கமொடு, காலமொடு என்பனபோல் பல இடங்களில்# அவர் எழுதியிருக்கிறார். இலக்கியங்களிலும் இவ்வழக்கு எப்போதும் இருந்து வருகிறது. வட்டமொடு (திருமுருகு 110), மாடமொடு (மதுரைக்355), உலகமொடு (புறம் 72), இரவமொடு (புறம் 281), கயமொடு, அயமுடன் (பெரியபுராண புகழ்ச்சோழர் 20) என்பன சான்றுகள். இம் முடிவினை, ' உடைமையும்இன்மையும் ஒடுவயின் ஒக்கும்' ( தொல் எழுத்து 133) என்பதில் அடக்கலாம்.அல்லது உடம்பொடு புணர்த்தலாக இதனைத் தொல்காப்பியர் உணர்த்தியதாகக்கொள்ளலாம்.
என் கருத்து (பசுபதி):
அத்து- இருக்கவேண்டிய இடத்தில் (மூன்றாவது வேற்றுமை இடத்தில்), அது வராமலும் இருக்கலாம் என்பதைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கும் சில சொற்களுக்குப் பின் (முக்கியமாக நெடில்+ம்) அத்துச் சாரியை வரவே கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.இதைப் பற்றி இந்த அறிஞர்கள் எழுதவில்லை. கீழ்க்கண்டவற்றைப் பாருங்கள்:
1) இனாமைக் கேட்டான்.. ஹல்வாவில் பாதாமைக் காணோம்... ரொட்டியில் ஜாமைத் தடவினேன்...
2) கவிஞர் நிஜாமை... கலாமுடன் இலந்தை பேசினார்... ஸதாமின் அறிக்கை ... ஆதாமின் பின் ஏவாள் சென்றாள்... இத்யாதி. (உயர் திணை; அத்து வந்தால் பெயரே அல்லவா மாறிவிடுகிறது?) இஸ்லாம் ..
இஸ்லாத்தை ..பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.)
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
---- Original Message ----- From: <naa.g...@gmail.com>
To: "சந்தவசந்தம்" <santhavasantham@googlegroups.com>
Sent: Monday, September 12, 2011 9:48 PM
Subject: Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
On Sep 12, 3:15 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
2011/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
> Many more throughout Tamil literature can be given.
தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
அரவு என்பது வேறு.
?
காட்டப்பட்ட பரிபாடல் வரி:
சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து
நா. கணேசன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasantham-unsubscribe@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Sep 12, 5:33 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> என் பழைய கட்டுரையைத் தூசி தட்டி, எழுத்துரு மாற்றி இங்கே இட்ட
> நண்பர் தியாகுவுக்கு நன்றி.
>
> இந்தக் கேள்வியின் ‘வரலாற்றை’ ..எனக்குத் தெரிந்தவரை..பதிவு செய்கிறேன்.
>
> *80-களில்* தினமணியின் ஆசிரியராக *ஐராவதம் மகாதேவன்* பொறுப்பேற்றார். தமிழ்
> வளர்ந்தது! ‘வளர்தமிழ்ப்’ பகுதியில்
> *தமிழண்ணல்* ‘உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற தொடரை வாரந்தோறும்
> எழுதினார். அந்தத் தொடரில்தான் முதலில்
> தமிழண்ணல் ‘வளமுடன்’ என்பது தவறு என்று எழுதினார். ( தியாகு இட்ட கட்டுரையில்
> இது உள்ளது) . இதற்கு மறுப்புத் தெரிவித்தார் *இரா.திருமுருகன்*. ‘தினமணி’
> அதைப் பிரசுரித்தது. (அது்வும் தியாகு
> இட்ட கட்டுரையில் உள்ளது.) பிறகு, தமிழண்ணல் இந்தக் கட்டுரைகளில் சிலவற்றை *
> 2002*-இல் ஒரு சிறு நூலாக வெளியிட்டார்.
> ( அவருடைய பவழ விழா வெளியீடு) “தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்”
> என்ற நூலில் தன்னுடை கட்டுரையையும், திருமுருகனின் மறுப்பையும் சுருக்கி
> வெளியிட்டார்.
> (இதன் ஒரு பகுதியை நான் ழான் மடலுக்கு எழுதிய பதிலில் குறித்துள்ளேன்.).
>
> *2000*-களில் இணைய இதழ் “*ஆறாம்திணை”* தமிழண்ணலின் சில
> கட்டுரைகளை வெளியிட்டது. அவற்றில் இருந்து சிலவற்றைத் தொகுத்து நான் “சந்த
> வசந்த”யாஹூ குழுமத்தில் “இலக்கண நேசன்” என்ற தலைப்பில் வெளியிட்டு வந்தேன். (
> இந்தக் கட்டுரைகளில் என் பங்கோ கருத்தோ மிக மிகச் சிறிதே) தியாகு இட்ட என்
> கட்டுரை நான் *2003*-வாக்கில் எழுதியது என்று நினைக்கிறேன்.
>
> இரா.திருமுருகன் நடத்திய ‘தெளிதமிழ்’ இதழிலும்
> இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததாகத் தெரிகிறது. அவற்றுள்
> ஒரு கேள்வி/பதில் “ இலக்கணம்இனிக்கிறது” (2006 ) என்ற அவர்
> நூலில் உள்ளன. (இதைத் தான் ழான் இணைப்பாகக் கொடுத்திருந்தார்.)
>
> இன்னொரு சந்தர்ப்பத்தில் திருமுருகன் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.
>
> *வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?
> *- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16.
>
> *விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை
> பெறுவதும் பெறாமையும் மரபே.
> தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும்
> திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார்.
> உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (132) என்று இலக்கணமும் கூறுகிறார். உலக
> மோடு (பதிற்றுப்பத்து 14, புறும் 56) என இலக்கியங்களிலும் வருகின்றன. ஒடுவுக்கு
> கூறப்பட்டது
> அப்பொருளுடைய உடன் என்ற சொல்லுருபுக்கும் பொருந்தும்.
>
இரா. திருமுருகனார் விளக்குவதுபோல்,
உடன் என்னும் சொல்லுருபு அத்துச் சாரியை பெறாமலும்
இயங்கும் என்பதற்குப் பரிபாடலில் இருந்து பாரதி
வரை சில சான்றுகளைக் காண்போம்.
(1) வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் *அரவமுடன்* சிறந்து,
- பரிபாடல் 18
(2) பொங்கரவர் *அங்கமுடன்* மேலணிவர் ஞாலமிடு பிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய் துலங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவிற்
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.
- சம்பந்தர்
(3) சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
*ஓகார முடனே* ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே
- திருமந்திரம்
(4) 202. மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் 1467-1
*சுற்றமுடன்* களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் 1467-2
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் 1467-3
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் 1467-4
- சேக்கிழார்
(5) *வஞ்ச முடன்*ஒருவன் வைத்த நிதிகவரத்
துஞ்சினனோ போயினனோ சொல்.
- திருவருட்பயன்
(6) திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி
உருவ வரிக்க ணொழுக வொழுகப்
*புருவ முடன்*போதப் போத - வெருவி
வனமுலை விம்மி வளர வளரப்
புனைத்தோள் புடைபோதப் போத - வினைவர்
அருங்கலை யல்கு லகல வகல
மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
வரவர வாற்றாத மங்கை - பொரவரு
- ஒட்டக்கூத்தர் (குலோத்துங்கசோழனுலா)
(7) வேலியென எண்டிசையில் வாழும் உரகன் தளர
வே அழல் எனும் *சினமுடன்* படருமே
- மயில்வகுப்பு (அருணகிரி)
(8) வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங்
கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்
அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்தமன *வீரமுடன்* யுகாந்திரத்தின்
நிலையினிது காட்டி நின்றான்.
- பாரதியார்.
அன்புடன்
நா. கணேசன்
On Sep 12, 12:58 pm, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> ’உடன்’ மற்றொன்டுடன் உள்ள இணைப்பினைக் குறிப்பது போல் உளது.
>
> //சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து //
>
> இதற்கு முந்தைய வரியில் இருக்கும் யாதோ ஒன்று, சீர்ததும்பும் அரவமுடன்
> சிறந்து எனப் பொருள் பொதிந்து வருகிறது.
>
அன்பு பழமைபேசி,
பரிபாடலில் முந்தையவரிகளைப் பார்த்தபின் தான் இந்தச் சங்க இலக்கிய
உதாரணம் பரிபாடலில் இருந்து தந்தேன். உறவினர்கள்
நிலமும் பொருளும் வழங்க பொள்ளாச்சியில்
வாழ்ந்த வேதாத்திரி மஹரிஷி தமிழ் நன்கறிந்தவர்.
’வளமுடன்’ என்பது பழைய தமிழ் மரபு, அதனால் குண்டலினி
யோகத்தை பொதுமக்களிடையே நல்ல தமிழில்
கொண்டுசெல்லும் இயக்கத்தை நிறுவி நடத்தினார்கள்.
’வாழ்க வளமுடன்’ பழந்தமிழ் யோகியர் மரபாகும்.
தமிழ் இலக்கணத்தை பேரா. பசுபதி, ஃழான், ... போன்றோர்
இவ்விழையில் காணலாம்.
http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/7593b9c82dcd73f4?scoring=d&
சில குறிப்புகளும் பார்க்கவும், உதவக்கூடும்.
http://groups.google.com/group/santhavasantham/msg/29ab5efda812b77d
வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
> நல்ல மனநிலையில் நலமுடன் இருக்கிறான் எனும் போது, நல்ல மனநிலையோடு நலமும்
> உடன் இருக்கிறது என ஆகிறது.
> வெறுமனே நலமுடன் இருக்கிறான் எனக் கூறும் போது, உடன் இருப்பது யாது எனும்
> வினா பிறக்கிறது. நலத்தோடு இருக்கிறான் எனும் போது எனக்கு அவ்வினா
> பிறக்கவில்லை.
>
> நல்ல உள்ளமுடன் பழகினான்.
> விருந்தோம்பல் அளித்து நல்ல உள்ளமுடன் பழகினான் எனும் போது,
> விருந்தோம்பலும் நல்ல உள்ளமும் ஒட்டி இருக்கின்றன என ஆகிறது.
> நல்ல உள்ளத்தோடு பழகினான். உடன் இருப்பது எதையும் நாம் சுட்டவில்லை.
>
> ஆகவே, இனிமேற்கொண்டு நான் இப்படிப் பாவிக்க முயலுகிறேன்.
>
> செல்வம் மிகுந்து, தமிழ்ப்பற்று பெருகி, உளம் கனிந்த உடல் நலமுடன்
> இருக்கிறார்.
>
> அவருக்கு செல்வம் இருக்கா, தமிழ்ப்பற்று இருக்கா, உளம் கனிந்து
> இருக்கான்னு எல்லாம் தெரியாது. ஆனால், உடல் நலத்தோடு இருக்கிறார்.
>
> #பழமை, நீயும் ஏரணம் கட்டுறே?!
>
> On Sep 12, 12:34 pm, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > நாட்டாமை, தீர்ப்பை கால தாமதமின்றி உடனே கூறவும்.
>
> > ந்லமுடன், வளமுடன், முகமுடன், வரமுடன் எனப் பாவித்தே பழகிவிட்டேன்.
>
> > கள்ளமுடன்,
> > பழமைபேசி.
>
> > On Sep 12, 12:23 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
> > wrote:
>
> > > 2011/9/12 Deiva Sundaram <ndsunda...@hotmail.com>
>
> > > > அன்புள்ள பேராசிரியருக்கு,
> > > > தங்களது இலக்கண அறிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
>
> > > மிக்க நன்றி ஐயா!
>
> > > அன்புடன்
> > > செல்வா
>
> > > > அன்புடன்
>
> > > ந. தெய்வ சுந்தரம்
>
> > > > ------------------------------
> > > > Date: Mon, 12 Sep 2011 09:20:43 -0400
> > > > Subject: Re: [தமிழ் மன்றம்] Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி
> > > > அல்லவா?
> > > > From: c.r.selvaku...@gmail.com
> > > > To: tamil...@googlegroups.com
> > > > CC: tamizh...@googlegroups.com; anb...@googlegroups.com
>
> > > > அங்கு அது "அத்து" சாரியை அல்ல. பெயரெச்ச வடிவம்.
> > > > "படித்த பையன்", "குடித்த குவளையை வீசினான்" ,
> > > > "படித்து முடித்த நூல்" என்பது போல.
>
> > > > அப்பர் பாட்டில் வருவது
> > > > "பால்வெண்ணீறும்" என்று இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.
> > > > "வளத்தோடு" என்று பிழையின்றி எழுதுவோம்! வளத்தை
> > > > ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!
>
> > > > அன்புடன்
> > > > செல்வா
> > > > 2011/9/12 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > > > தமிழ்ப் புலவர் தமது பாக்களில் எதுகை, மோனை, தளைக்குத் ஏற்றபடி, வளமொடு,
> > > > வளமோடு, வளமுடன், வளத்தோடு, இனமொடு, இனமோடு, இனமுடன், இனத்தோடு என்று
> > > > உரிமையாகப் பல இடங்களில் எழுதி வந்துள்ளார்.
>
> > > > குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
> > > > பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால்வெந்நீறும்,
> > > > இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
> > > > மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே !
>
> > > > அப்பர் இப்பாவில் உரிமையாய்ப் புகுத்திய " குனித்த, பனித்த, இனித்த,
> > > > மனித்த" இவற்றில் வரும் "அத்த" ஏன் வந்தது என்று விளக்க முடியுமா ?
>
> > > > சி. ஜெயபாரதன்
>
> > > > +++++++++++++++++++++++
>
> > > > 2011/9/12 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> > > > 2011/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > > > Many more throughout Tamil literature can be given.
>
> > > > தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
> > > > அரவு என்பது வேறு.
>
> > > > மரம், அறம், வளம் முதலான சொற்கள் அத்து என்னும் சாரியையுடன்
> > > > சேர்ந்து *மரத்துடன், அறத்துடன், வளத்துடன்* என்று வரும்.
>
> > > > *மரத்தில் செய்த நாற்காலி* என்பீர்களா *மரமில் செய்த நாற்காலி*
> > > > என்பீர்களா?
>
> > > > *செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!*
>
> > > > *செல்வத்தில் மிதந்தார்* என்பீரா *செல்வமில் மிதந்தார்* என்பீரா?
> > > > *வளத்தில் நல்லது அறிவு வளம்* என்பீரா *வளமில் நல்லது*
> > > > *அறிவு வளம்* என்பீரா?
>
> > > > *வாழ்க வளத்துடன்!* என்பது சரியான சொல்லாட்சி!
>
> > > > மிகப்பலரும் "முயற்சித்தல்" என்று பிழைபட எழுதுவது போல
> > > > இதுவும் பெருகி வரும் வழு!!
>
> > > > (இரமண மகரிசி போன்றவர்கள் கூட நல்ல தமிழறிஞர்களிடம்
> > > > கேட்டு திருத்திக்கொண்டார் என்பர். எ.கா: கண்ண முருகனார்)
>
> > > > இந்த "முயற்சித்தல்", "வளமுடன்" ஆகிய இரண்டையும் தவிர்த்து
> > > > முயல்தல், முயற்சி செய்தல் என்றும் வளத்துடன் என்று எழுதப்
> > > > பரிந்துரையுங்கள்.
>
> > > > அன்புடன்
> > > > செல்வா
>
> > > > N. Ganesan
>
> > > > --
> > > > You received this message because you are subscribed to the Google
> > > > Groups "தமிழ் மன்றம்" group.
> > > > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > > > To unsubscribe from this group, send email to
> > > > tamilmanram...@googlegroups.com.
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
> > > > --
> > > > You received this message because you are subscribed to the Google Groups
> > > > "தமிழ் மன்றம்" group.
> > > > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > > > To unsubscribe from this group, send email to
> > > > tamilmanram...@googlegroups.com.
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
> > > > --
> > > > Regards
> > > > Selva
> > > > ___________________
> > > > C.R.(Selva) Selvakumar
>
> > > > --
> > > > You received this message because you are subscribed to the Google Groups
> > > > "தமிழ் மன்றம்" group.
> > > > To post to this group, send
>
> ...
>
> read more »
>“மகரவீற்றுப் பெயர்களோடு ஒடு, ஓடு உருபுகள் புணரும்போது
> அத்துச்சாரியை இன்றி எழுதுவதும் மரபே. உலகமோடு (பதிற். 14-22,
> புறம். 56-25), சீற்றமொடு (பதிற். 15-2) என்பன காண்க.
> அதன்படித் தொல்காப்பியரும் அகரமோடு (17),
> அகரமொடு (46), உகரமொடு (162), காலமொடு (683),
> உள்ளமொடு (1096), சுற்றமொடு (1138), என்ற்ய் அத்துச் சாரியை
> இன்றியும், திறத்தோடு (984) என்று அத்துச் சாரியையுடனும்
> இரு வகையாக எழுதுகிறார். இந்த மரபினை
> உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (புணரியல் 133)
> என்று கூறுகிறார். அதனால் ‘வளமோடு’ என்பதும் சரியே.
> அதனைத் தவறாகக் கொண்டு நீங்கள் திருத்தியிருக்க
> வேண்டியதில்லை.”
சந்தவசந்தத்தினருக்கு,
உடு-/ஒடு- என்ற உருபுகள் “சேரும், இணையும்” என்ற பொருளுடைய
அடிப்படையான வேர்ச்சொல். உடல் = உடு + அல் (சதை என்புடன் சேர்வது
உடல். என்பு தோல் போர்த்த உடம்பு.) உடு- வேர் தரும் சொற்களில்
சில, உடல், உடன், உடுப்பு, உடும்பு, உடை (= உடு + ஐ), ...
முசு- மொசு (முசல்.மொசல்), முய்/மொய், குயவன்/கொசவன்,
குடு/கொடு, புள்/பொள் (புள்ளாங்குழல்), பொள்ளாப்பிள்ளையார்)), ....
என்பதுபோல் எண்ணற்ற சொற்றொகுதி போல உடு-/ஒடு-
அடிப்படையான ஒரு சோடி. ஒடு- உருபின் நீட்சியாய்
ஓடு- வரும். தமிழ் ஓலைகளில்
எழுதப்பட்ட முறையும் ஓடு- உருபு ஆக ஒரு காரணம்.
ஓலைச் சுவடிகளில் ஒடு-, ஓடு- என்பதற்கு வேறுபாடு
கண்டுபிடித்தல் அரிது. ஏனெனில் குறிலை வேறுபடுத்தப்
புள்ளி இருக்காது.
கேள்வி: (1) யாப்பால், செய்யுள் ஓசையால் -ஒடு இந்தச்
செய்யுளில், -ஓடு அந்தச் செய்யுளில் என்று உறுதிப்பாட்டுடன்
சொல்லத்தக்க இடங்கள் உள்ளனவா?
(2) -ஒடு (குறில்), -ஓடு (நெடில்) என்று உறுதியுடன்
சொல்லவியலா இடங்கள் செய்யுள்களில் உள்ளனவா?
(1), (2) க்கு உதாரணங்கள் தாருங்களேன். மேலும்,
இந்த உதாரணங்கள் மூலம் இலக்கணவிதி ஒன்று
இயற்கையாகவே தெரிகிறதா?
நன்றி,
நா. கணேசன்
------------
இன்னொரு சந்தர்ப்பத்தில் திருமுருகன் கீழ்க்கண்டவாறு
சொல்லியிருக்கிறார்.
*வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?
*- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16.
*விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது
அத்துச்சாரியை
பெறுவதும் பெறாமையும் மரபே.
தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும்
திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார்.
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (132) என்று இலக்கணமும்
கூறுகிறார். உலக
மோடு (பதிற்றுப்பத்து 14, புறும் 56) என இலக்கியங்களிலும் வருகின்றன.
ஒடுவுக்கு
கூறப்பட்டது
அப்பொருளுடைய உடன் என்ற சொல்லுருபுக்கும் பொருந்தும்.
சில இலக்கியச் சான்றுகள்:
http://groups.google.com/group/santhavasantham/msg/29ab5efda812b77d
--------------
பேரா. பசுபதி அவர்களின் தொடக்கத் தமிழிலக்கணக் கட்டுரை பகிர்வுகளில்
வாழ்க
வளமுடன்/ வளமொடு.
3) வளமோடு - வளமுடன்:
தமிழண்ணல்
'அளவோடு பெற்று வளமோடு வாழ்க' என்பது அரசு விளம்பரம். 'வாழ்க வளமுடன்'
என்று
பெரியவர்களும் வாழ்த்த முற்படுகின்றனர். இவை வளத்தோடு வாழ்க, வாழ்க
வளத்துடன்
என்றுதான் அமைய வேண்டும். மகர ஈற்றுச் சொற்களுக்குப் பிறகு, வேற்றுமை
உருபு
வரும்போது அத்துச் சாரியை அவசியம் வரும். நிலம், நிலத்தை, நிலத்தால்,
நிலத்திற்கு, நிலத்தின், நிலத்தின்கண் - நிலமை, நிலமால் என வருவதுண்டோ?
வடம் -
வடத்தை வடத்தால்தானே தவிர வடமை, வடமால் என வருமா? சில சமயங்களில்
மூன்றாம்
வேற்றுமை உருபு சிலவற்றில் மட்டும் (ஓடு, உடன்) வளமோடு, நலமுடன், வளமுடன்
என
எழுதி விடுகிறோம். பொது அமைப்பை விட்டு இது விலகிச் செல்கிறது. மொழி
அனைவரும்
விளங்கிக்கொள்ள அமைந்த கருவி. சாதாரண மக்கள் இயல்பாகப்
பேசிக்கொள்ளும்பொழுது
அத்துச் சாரியையில்லாமல் இச் சொற்களைச் சொல்ல மாட்டார்கள். ஒரு பெண்
குடத்துடன்
வருவாளே தவிரக் குடமுடன் வர மாட்டாள். நாம் தடத்திலேயே போக வேண்டுமே
தவிர,
தடமிலேயே போகக்கூடாது. நன்றாக எண்ணிப் பாருங்கள்:
குடம் + உடன் = குடத்துடன்.
தடம் + -ல் = தடத்தில்.
வளம் + உடன் = வளத்துடன்.
வளம் + ஓடு = வளத்தோடு.
வளத்துடன் வாழ நலத்துடன் செயற்படும்மனத்துடன் யாவரும் திகழ்ந்தால்,
இனத்துடன்
ஒற்றுமைப்படலாம்.
அப்படியென்றால் ....தமிழண்ணலின் இந்தக் கருத்துத்தானா கடைசி வார்த்தை?
வளமுடன்,
ஔவை எழுதிய 'இட்டமுடன்' இவையெல்லாம் விதிவிலக்குத் தானா? வேறு விளக்கம்
உண்டா?
3-1) வளமோடு..வளமுடன்:
இலக்கணச்சுடர் இரா.திருமுருகன் (நல்ல தமிழறிஞர், புதுச்சேரியில்
வாழ்ந்தவர்.
சிந்துப் பாவியல் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
புல்லாங்குழல்
வாசிப்பார். கம்பன் பாடியபாவகைகளைப் பற்றியும், 4பாரதி-பாரதிதாசன்
இருவரும்
பயன்படுத்திய யாப்புவகைகளை ஒப்பிட்டும்ஆய்வுகள் செய்துள்ளார்)
'வளமோடு வாழ்க' என்பது பொது அமைப்பை விட்டு விலகிச் செல்வதாகத்தமிழண்ணல்
குறித்துள்ளார். இவ் விலகல் விலக்கலுக்கு உரியதன்று. காரணம்,அதைத்
தொடங்கி
வைத்தவர் தொல்காப்பியரே. ஆக்கமொடு, காலமொடு என்பனபோல் பல இடங்களில்# அவர்
எழுதியிருக்கிறார். இலக்கியங்களிலும் இவ்வழக்கு எப்போதும் இருந்து
வருகிறது.
வட்டமொடு (திருமுருகு 110), மாடமொடு (மதுரைக்355), உலகமொடு (புறம் 72),
இரவமொடு
(புறம் 281), கயமொடு, அயமுடன் (பெரியபுராண புகழ்ச்சோழர் 20) என்பன
சான்றுகள்.
இம் முடிவினை, ' உடைமையும்இன்மையும் ஒடுவயின் ஒக்கும்' ( தொல் எழுத்து
133)
என்பதில் அடக்கலாம்.அல்லது உடம்பொடு புணர்த்தலாக இதனைத் தொல்காப்பியர்
உணர்த்தியதாகக்கொள்ளலாம்.
என் கருத்து (பசுபதி):
அத்து- இருக்கவேண்டிய இடத்தில் (மூன்றாவது வேற்றுமை இடத்தில்), அது
வராமலும்
இருக்கலாம் என்பதைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கும் சில
சொற்களுக்குப்
பின் (முக்கியமாக நெடில்+ம்) அத்துச் சாரியை வரவே கூடாது என்று எனக்குத்
தோன்றுகிறது.இதைப் பற்றி இந்த அறிஞர்கள் எழுதவில்லை. கீழ்க்கண்டவற்றைப்
பாருங்கள்:
1) இனாமைக் கேட்டான்.. ஹல்வாவில் பாதாமைக் காணோம்... ரொட்டியில் ஜாமைத்
தடவினேன்...
2) கவிஞர் நிஜாமை... கலாமுடன் இலந்தை பேசினார்... ஸதாமின் அறிக்கை ...
ஆதாமின்
பின் ஏவாள் சென்றாள்... இத்யாதி. (உயர் திணை; அத்து வந்தால் பெயரே அல்லவா
மாறிவிடுகிறது?) இஸ்லாம் ..
இஸ்லாத்தை ..பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
வேந்தரே,
அவ்வாறு செய்தால் தமிழின் இலக்கிய, இலக்கண மரபுகளுக்கு
மாறானதாகிவிடும். பேரா. பசுபதியின் பதிலை சந்தவசந்தத்தில்
படிக்கவும். அதற்கு மறுமொழியாக மேலும் சில குறிப்புகள்
தருகிறேன். பாருங்கள்.
நா. கணேசன்
பழமைபேசி அவர்களுக்கு,
> மிக்க நன்றிங்க அண்ணா. மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது.
உங்கள் அன்புக்கு நன்றி,
நா. கணேசன்
ஈரசைக் காட்டுகள் நிறைய உள்ளன:அவசமுடன் ( “ துகிலு”), சையமுடன் ( “ பையரவு”) , வாரமுடன் ( “ஆரமுலை”), பெருக்கமுடன், கோலமுடன், மூலமுடன், கொற்றமுடன், மோகமுடன், .... என்று பல .
On Sep 16, 4:48 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அன்புள்ள செல்வா,
>
> ஓர் இலக்கண மாணவன் என்ற முறையில் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன். மேலும்,
> சுமார் எட்டு வருடங்களுக்கு முன்
> இரா.திருமுருகனின் இந்தக் கருத்தை இங்கே எழுதினேன் என்பதால், இதை மேலும்
> விளக்கும் கடமையும் எனக்கு உள்ளது என்று நினைக்கிறேன்.
>
> ழான், தியாகராசன் உங்கள் கேள்விகளைப் புதுச்சேரித் தமிழறிஞர்களிடம் கொடுத்து,
> அவர்களுடைய கருத்துகளை இங்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
>
> என் இந்தப் பதிலை ‘தமிழ் மன்ற’த்தில் வெளியிடுவது
> உங்கள் விருப்பம்.
>
> 1) *இரா. திருமுருகனின் கருத்து மட்டுமன்று இது*. முதலில்
> மறுப்புத் தெரிவித்த *முனைவர், தமிழறிஞர் தமிழண்ணலும்* இதை
> ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
>
> அவருடைய “*தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்*”
> என்ற 2002 நூலில் இருந்து ஒரு பகுதி:
>
> ” சில போது மூன்றாம் வேற்றுமை உருபுகள் (ஒடு, ஓடு, உடன் )
> வரும்போது ‘அத்துச்’ சேர்த்தும், சேராமலும் வருகின்றன.
> வளமொடு, வளமோடு, வளமுடன்
> வளத்தொடு, வளத்தோடு, வளத்துடன்
> ’தாங்கள் நலமுடன் இருப்பதறிய அவா’ என மடல் எழுதுகிறோம்.
> இவ்வாறு இரண்டுவிதமாகவும் வருவதை ‘உறழ்ந்து வரும்” என்பது இலக்கணம்.
> புதுச்சேரித் தமிழறிஞர் இரா.திருமுருகன் தக்க சான்றுகள் காட்டி ‘உறழ்ந்து
> வரும்’ என்று எழுதியுள்ளார். ஆக்கமொடு, காலமோடு எனத் தொல்காப்பியத்திலும்
> உலகமொடு, நயமுடன் என் இலக்கியங்களில் வருகின்றமை காட்டப் பெற்றுளது
>
> வளத்துடன் வாழ, நலத்துடன் செயற்படும் மனத்துடன் யாவரும் திகழ்ந்தால் ,
> இனத்துடன் ஒற்றுமைப்படலாம்.
>
> இதையே, “வளமுடன் வாழ, நலமுடன் செயற்படும் மனத்துடன் யாவரும் திகழ்ந்தால் ,
> இனத்துடன் ஒற்றுமைப்படலாம்” என்றும்
> எழுதலாம். *இடம் நோக்கி - ஓசையினிமையும் பொருளுணர்ச்சியும் கெடாமல் கருத்துப்
> பரிமாற்றத்திற்கு உதவுவது மொழி. அதன் இயல்பு அறிந்தவர்கள், தம்மை மறந்தும் தவறு
> செய்ய மாட்டார்கள்* !
>
> எனவே, வாழ்க நலமுடன் என யாவரும் நலமுடன் வாழ வாழ்த்துவோம். .....”
>
> மேலும், *‘க்ரியா’ அகராதியில்* ‘வளம் ‘ என்ற சொல்லின் கீழ் “வாழ்க வளமுடன்”
> என்ற எடுத்துக்காட்டு வாக்கியம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால், அகராதிக்
> குழுவில் உள்ள முனைவர் அண்ணாமலை போன்றோரும் இந்தக் கருத்தை ஒப்புக்
> கொண்டுள்ளனர் என்றும் நான் பொருள் கொள்கிறேன்.
>
> 2) ”ஓரசைச் சொல்லுக்கு கணேசன் ஓர் உதாரணம் தான் கொடுத்தார்.
> ஈரசைச் சொற்களுக்கும் அதிக காட்டுகள் இல்லை” என்று கூறியிருக்கிறீர்கள்.
>
> அவ்வளவு தானே? :-)) மேலும் பல காட்டுகள்
> கொடுக்க முடியும். *ஒரே ஒரு* கவிஞரின் காட்டுகளை மட்டும் இங்குக்
> கொடுக்கிறேன். அருணகிரியின் திருப்புகழிலிருந்து :
>
> ஓரசைச் சொற்கள்:
>
> *தவமுடன் ( “உருக்கம் “ என்று தொடங்கும் திருப்புகழ்), சினமுடன் ( “புனமடந்தை
> ”), புரமுடன் ( “ சகுடமுந்துங்”),*
> *வசமுடன் (” குருதி கிருமிகள்”) , கரமுடன் ( “ இலகியிரு குழை”),*
> *புயமுடன் ( “ முருகு செறி குழலவிழ்”) , இடமுடன் (” குடமென வொத்த”), சிரமுடன்
> (” கலகமதன் “) , இதமுடன் ( “ வரிபரந்திரண்டு* )
>
> அப்படியென்றால் , அருணகிரி ‘அத்து’ச் சாரியையைப் பயன்படுத்த வில்லையா? அப்படி
> அன்று.:
>
> *தனத்துடன் ( ”பொருப்புறுங்”) , மனத்துடன் ( “ மருவுலாவிடு”), *
> *சிரத்துடன் ( “வினைத்திரளுக் “)* ..என்றும் பாடி இருக்கிறார்.
>
(1) மிக ஆழமான இலக்கண, இலக்கிய ஆட்சிகள் கொண்ட
மகர ஈறுபெற்ற ஓரசைச் சொற்களுடன் உடன் என்னும்
உருபு சேர்ந்து வருவதை இன்றும் பார்க்கலாம்.
(2) இன்னும் சில இலக்கியச் சான்றுகள்:
931. அகார வுகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
*சிகாரமுடனே* சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே. (திருமந்திரம்)
2934. சிவன்வந்து தேவர் *குழாமுடன்* கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவனெந்தை யாண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே யகப்பட்ட வாறே. (திருமந்திரம்)
2594 அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் *பரமுடன்*
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே (திருமந்திரம்)
77. மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் *உழவாரமுடன்* கைக் கொண்டு கலந்து கசிந்தனரே
- பெரிய புராணம்
தம்பெருமான் பணிகேட்ட தவமறையோ ரெல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு *அச்சமுடன்* ஈண்டி
"யெம்பெருமா னருள்செய்த பணிசெய்வோ" மென்றேத்தித்
தம்பரிவு பெருகவருந் திருத்தொண்டர் பாற்சார்ந்தார்."
- பெரிய புராணம்
11. அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்
- பெரிய புராணம்
202. மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
*சுற்றமுடன்* களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார்
- பெரிய புராணம்
நா. கணேசன்
> ஈரசைக் காட்டுகள் நிறைய உள்ளன:
> அவசமுடன் ( “ துகிலு”), சையமுடன் ( “ பையரவு”) , வாரமுடன் ( “ஆரமுலை”),
> பெருக்கமுடன், கோலமுடன், மூலமுடன், கொற்றமுடன், மோகமுடன், .... என்று பல .
>
> 3) ‘உறழ்சி’ என்றால் என்ன? தமிழண்ணல் சொல்கிறார்.
>
> “ பெரும்பான்மையான விதிக்கு மாறாகச் சில இடங்களில் மாறியும் வரும். அங்ஙனம்
> சிறிய அளவில் மட்டும் மாறி வருவதைப் ‘புறனடை’ என்பர்.* சில சொற்கள் இரண்டு
> விதமாகவும் எழுதப் பட்டு, இரண்டும் தவறல்ல என ஏற்கப்பட்டால் அதற்கு உறழ்ச்சி
> என்று பெயர்*. அப்படியும் வரலாம், அல்லாவிட்டால் இப்படியும் வரலாம் என ஏற்பது
> அது. .... அதற்காக எல்லா இடத்திலும் புறனடை வரலாம், உறழ்ச்சி வரலாம் என்று நம்
> விருப்பம்போல் மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. *பொருள் சிதையாமல்
> இருக்குமிடங்களிலும், ஒலி இனிமை தருமிடங்களிலும் மட்டும் இவை ஏற்கப்படும்*.
ஆகவே, வாழ்க வளமுடன் என்ற பயன்பாடு வழக்குக்கு வந்துவிட்டது; மாற்ற முடியாத நிலையில் புழக்கத்திலிருக்கிறது என்றால், அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ‘கணிபொறி’ என்றெழுதப்பட வேண்டிய வினைத் தொகையை, ‘கணிப்பொறி’ என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். திருத்த முடிகிறதா? பழகிக் கொண்டும் சீரணித்துக் கொண்டும்தானே இருக்கிறோம்? நம்பிக்கை சார்ந்த விஷயங்களோடு விளையாடாமல் இருப்பது நல்லது.
இது என் தனிப்பட்ட கருத்து. விருப்பமுடன் ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். விருப்பத்துடன் நிற்பவர்கள் நிற்கலாம். எனக்கு மனத்தடை ஏதும் இல்லை. :)--
அன்புடன்,
ஹரிகி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கணிபொறி ...கணிப்பொறி...உம்...இசைகவி இசைக்கவி ஆனமாதிரியா? :-))
On Sep 17, 8:03 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> **
>
> 2011/9/16 Hari Krishnan hari.harikrish...@gmail.com
>
> ///>>இந்த மடலை எழுதும்போது அன்புமணியின் தேடு .முகப்பைப் பயன்படுத்தி, ‘முடன்’
> என்ற பயன்பாட்டைத் தமிழிலக்கியம் முழுமைபிலும் தேடினேன். 139 இடங்கள்
> கிடைத்தன. ஆனால், கிடைத்த விடைகளில் ‘எம்முடன்’ ‘தம்முடன்’ போன்ற
> பயன்பாடுகளும் கலந்திருப்பதால், இவற்றைத் தனியாகக் கணக்கிட்டுப் பிரித்த பிறகே,
> அத்துச் சாரியை பயிலாத இடங்கள் >>இவ்வளவு என்று சொல்ல முடியும். ///
>
> ஆம், நானும் பார்த்தேன்; 75% தனிக் கணக்கும் போட்டேன்.
> பிறகு, இட வேண்டாம் ; ஒரு கவிஞரை மட்டும்
> மேற்கோள் காட்டினால் போதும் என்று விட்டுவிட்டேன்.
>
ஹரிகி, பசுபதி,
அன்புமணியின் மதுரை முனையத்தின் இடுமுகப்பின் (இண்டெர்ஃபேஸ்) வலைவரி
(யுஆர்எல்)
என்ன? தர முடியுமா?
நண்பர்கள் ஸ்ரீகணேஷ் (வ. சு. செங்கல்வராயபிள்ளை பேரன்), அன்புமணி
- இருவரும் ஹ்யூலெட் பேக்கர்ட் (வெங்காலூரில்) 2 ஆண்டு முன்னர்
இருந்தனர். இப்போதும் இருப்பர் என நினைக்கிறேன். ஹரிகி அன்புமணியை
சந்திக்கலாமே.
நா. கணேசன்
அன்புமணியின் மதுரை முனையத்தின் இடுமுகப்பின் (இண்டெர்ஃபேஸ்) வலைவரி
(யுஆர்எல்)
என்ன? தர முடியுமா?
நண்பர்கள் ஸ்ரீகணேஷ் (வ. சு. செங்கல்வராயபிள்ளை பேரன்), அன்புமணி
- இருவரும் ஹ்யூலெட் பேக்கர்ட் (வெங்காலூரில்) 2 ஆண்டு முன்னர்
இருந்தனர். இப்போதும் இருப்பர் என நினைக்கிறேன். ஹரிகி அன்புமணியை
சந்திக்கலாமே.
-என்ற மின்னஞ்சலுக்கு --
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பாடல்களில் யாப்பிற்காகவும், இசைக்காகவும் சில இடங்களில் மாறிவரக்கூடும். அதற்காக உரைநடையிலும் அவ்வாறே வரலாம் என்று கொள்ளவேண்டுமா என்று அறியேன்.
சுற்றம் - சுற்றமொடு (கூவிளங்காய்) / சுற்றத்தொடு (தேமாங்கனி).
வேதம் - வேதமொடு (கூவிளங்காய்) / வேதத்தொடு (தேமாங்கனி).
கனிச்சீர் சிலவகைப் பாடல்களிலேயே வருவதால், இவ்வாறு 'அத்து'ச் சாரியை இல்லாத பிரயோகங்கள் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றனவோ? ஆனால், உரைநடையில் அத்தகைய தேவை இல்லாததால், விதிகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.
இலந்தை
>>> **
>>> என்பதில் அடக்கலாம்.*அல்லது உடம்பொடு புணர்த்தலாக இதனைத் தொல்காப்பியர்
>>> உணர்த்தியதாகக்கொள்ளலாம். “*
>>>
>>> இந்த இரண்டாம் வாக்கியத்திற்கு என்ன பொருள்?
>>>
>>> தெரிந்தவர்கள் சொல்லவும்.
>>>
>>>
>>> பசுபதி
>>>
>>>
>>>
>>>
>>>>
>>>> இது என் தனிப்பட்ட கருத்து. விருப்பமுடன் ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்
>>>> கொள்ளலாம். விருப்பத்துடன் நிற்பவர்கள் நிற்கலாம். எனக்கு மனத்தடை ஏதும்
>>>> இல்லை. :)
>>>>
>>>> --
>>>> அன்புடன்,
>>>> ஹரிகி.
>>>>
>>>>
>>>>
>>
>> --
>> http://nayanmars.netne.net/
>> 12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
>>
>
>
>
> --
> http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
>
ஒரு கருத்தை முன்வைக்க அனுமதி வேண்டுகிறேன்.
இன்னும் நாம் உரைநடை நூல்களைப் பார்க்கவில்ல.
இறையனார் களவியல் உரை, நாலாயிரத்தின் ஈடுகள்,
நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார், இளம்பூரண அடிகள்,
சேனாவரையர், ... போன்றோர் உரைகள், வள்ளலார்,
ஆறுமுக நாவலர், 19-ஆம்
நூற். தமிழ்ப் பத்திரிகைகள், ...
பார்த்தல் வேண்டும்.
நா. கணேசன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---------- Forwarded message ----------
From: Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
Date: Sep 16, 5:48 pm
Subject: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
To: சந்தவசந்தம்
அன்புள்ள செல்வா,...
read more »
ஓர் இலக்கண மாணவன் என்ற முறையில் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.
மேலும்,
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்
இரா.திருமுருகனின் இந்தக் கருத்தை இங்கே எழுதினேன் என்பதால், இதை மேலும்
விளக்கும் கடமையும் எனக்கு உள்ளது என்று நினைக்கிறேன்.
ழான், தியாகராசன் உங்கள் கேள்விகளைப் புதுச்சேரித் தமிழறிஞர்களிடம்
கொடுத்து,
அவர்களுடைய கருத்துகளை இங்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
என் இந்தப் பதிலை ‘தமிழ் மன்ற’த்தில் வெளியிடுவது
உங்கள் விருப்பம்.
1) *இரா. திருமுருகனின் கருத்து மட்டுமன்று இது*. முதலில்
மறுப்புத் தெரிவித்த *முனைவர், தமிழறிஞர் தமிழண்ணலும்* இதை
ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அவருடைய “*தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்*”
என்ற 2002 நூலில் இருந்து ஒரு பகுதி:
” சில போது மூன்றாம் வேற்றுமை உருபுகள் (ஒடு, ஓடு, உடன் )
வரும்போது ‘அத்துச்’ சேர்த்தும், சேராமலும் வருகின்றன.
வளமொடு, வளமோடு, வளமுடன்வளத்தொடு, வளத்தோடு, வளத்துடன்
’தாங்கள் நலமுடன் இருப்பதறிய அவா’ என மடல் எழுதுகிறோம்.
இவ்வாறு இரண்டுவிதமாகவும் வருவதை ‘உறழ்ந்து வரும்” என்பது இலக்கணம்.
புதுச்சேரித் தமிழறிஞர் இரா.திருமுருகன் தக்க சான்றுகள் காட்டி ‘உறழ்ந்து
வரும்’ என்று எழுதியுள்ளார். ஆக்கமொடு, காலமோடு எனத் தொல்காப்பியத்திலும்
உலகமொடு, நயமுடன் என் இலக்கியங்களில் வருகின்றமை காட்டப் பெற்றுளது
வளத்துடன் வாழ, நலத்துடன் செயற்படும் மனத்துடன் யாவரும் திகழ்ந்தால் ,
இனத்துடன் ஒற்றுமைப்படலாம்.
இதையே, “வளமுடன் வாழ, நலமுடன் செயற்படும் மனத்துடன் யாவரும்
திகழ்ந்தால் ,
இனத்துடன் ஒற்றுமைப்படலாம்” என்றும்
எழுதலாம். *இடம் நோக்கி - ஓசையினிமையும் பொருளுணர்ச்சியும் கெடாமல்
கருத்துப்
பரிமாற்றத்திற்கு உதவுவது மொழி. அதன் இயல்பு அறிந்தவர்கள், தம்மை
மறந்தும் தவறு
செய்ய மாட்டார்கள்* !
எனவே, வாழ்க நலமுடன் என யாவரும் நலமுடன் வாழ வாழ்த்துவோம். .....”
மேலும், *‘க்ரியா’ அகராதியில்* ‘வளம் ‘ என்ற சொல்லின் கீழ் “வாழ்க
வளமுடன்”
என்ற எடுத்துக்காட்டு வாக்கியம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால், அகராதிக்
குழுவில் உள்ள முனைவர் அண்ணாமலை போன்றோரும் இந்தக் கருத்தை ஒப்புக்
கொண்டுள்ளனர் என்றும் நான் பொருள் கொள்கிறேன்.
2) ”ஓரசைச் சொல்லுக்கு கணேசன் ஓர் உதாரணம் தான் கொடுத்தார்.
ஈரசைச் சொற்களுக்கும் அதிக காட்டுகள் இல்லை” என்று கூறியிருக்கிறீர்கள்.
அவ்வளவு தானே? :-)) மேலும் பல காட்டுகள்
கொடுக்க முடியும். *ஒரே ஒரு* கவிஞரின் காட்டுகளை மட்டும் இங்குக்
கொடுக்கிறேன். அருணகிரியின் திருப்புகழிலிருந்து :
ஓரசைச் சொற்கள்:
*தவமுடன் ( “உருக்கம் “ என்று தொடங்கும் திருப்புகழ்), சினமுடன்
( “புனமடந்தை
”), புரமுடன் ( “ சகுடமுந்துங்”),*
*வசமுடன் (” குருதி கிருமிகள்”) , கரமுடன் ( “ இலகியிரு குழை”),*
*புயமுடன் ( “ முருகு செறி குழலவிழ்”) , இடமுடன் (” குடமென வொத்த”),
சிரமுடன்
(” கலகமதன் “) , இதமுடன் ( “ வரிபரந்திரண்டு* )
அப்படியென்றால் , அருணகிரி ‘அத்து’ச் சாரியையைப் பயன்படுத்த வில்லையா?
அப்படி
அன்று.:
*தனத்துடன் ( ”பொருப்புறுங்”) , மனத்துடன் ( “ மருவுலாவிடு”), *
*சிரத்துடன் ( “வினைத்திரளுக் “)* ..என்றும் பாடி இருக்கிறார்.
3) ‘உறழ்சி’ என்றால் என்ன? தமிழண்ணல் சொல்கிறார்.
ஈரசைக் காட்டுகள் நிறைய உள்ளன:
அவசமுடன் ( “ துகிலு”), சையமுடன் ( “ பையரவு”) , வாரமுடன் ( “ஆரமுலை”),
பெருக்கமுடன், கோலமுடன், மூலமுடன், கொற்றமுடன், மோகமுடன், .... என்று
பல .
“ பெரும்பான்மையான விதிக்கு மாறாகச் சில இடங்களில் மாறியும் வரும்.
அங்ஙனம்
சிறிய அளவில் மட்டும் மாறி வருவதைப் ‘புறனடை’ என்பர்.* சில சொற்கள்
இரண்டு
விதமாகவும் எழுதப் பட்டு, இரண்டும் தவறல்ல என ஏற்கப்பட்டால் அதற்கு
உறழ்ச்சி
என்று பெயர்*. அப்படியும் வரலாம், அல்லாவிட்டால் இப்படியும் வரலாம் என
ஏற்பது
அது. .... அதற்காக எல்லா இடத்திலும் புறனடை வரலாம், உறழ்ச்சி வரலாம்
என்று நம்
விருப்பம்போல் மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. *பொருள் சிதையாமல்
இருக்குமிடங்களிலும், ஒலி இனிமை தருமிடங்களிலும் மட்டும் இவை
ஏற்கப்படும்*.
அதனால், ‘வாழ்க வளமுடன்’ ‘வாழ்க வளத்துடன்’ இரண்டு சரியே .
அன்புடன்,
பசுபதி
2011/9/16 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
> அன்புள்ள தமிழ் மன்றம், சந்தவசந்தம் குழும நண்பர்களே,
> வணக்கம்.
> நான் தமிழ் மன்றத்தில் இட்ட ஒரு மடலின் கருத்தை
> திரு கணேசன் சந்தவசந்தத்தில் இட்டு உரையாடினார் என்றும்
> பேராசிரியர் பசுபதி அவர்களும், நண்பர் இராச தியாகராசன் அவர்களும்- Hide quoted text -
- Show quoted text -
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
நிலம்
திரிவன ஊர்வனகள்" (பாரதி)
கவிதையில் வருவதைக் கொண்டு எடுத்துக் கொள்ளக் கூடாது.
வளமுடன் சரியன்று. வளத்துடன் என்பதே சரி.
முனைவர் பா கிருஷ்ணன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தவிர, வேறு எதையும் அல்ல.
வேதாத்திரி மகரிஷி நிறுவனத்திடம் நாம் எதிர்பார்ப்பது நல்ல யோகப் பயிற்ச்சியையும் தியானப் பயிற்ச்சியையும் தான். (அதை முழுமையாகச் செய்துள்ளேன்).
பாகி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Sep 19, 4:59 am, Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
wrote:
> புலவர்கள் கவிஞர்களுக்கு லைசென்ஸ் உண்டு.
> உதரணத்துக்கு
> கள் என்ற விகுதியை பன்மைக்கும் சேர்த்திருக்கிறார்கள் கம்பனும், பாரதியும்
> "ஆர்த்தனர்கள் தானவர்கள், வானவர் அழுங்க.." (கம்பன்)
>
> "நிலம்
> திரிவன ஊர்வனகள்" (பாரதி)
> கவிதையில் வருவதைக் கொண்டு எடுத்துக் கொள்ளக் கூடாது.
> வளமுடன் சரியன்று. வளத்துடன் என்பதே சரி.
>
> முனைவர் பா கிருஷ்ணன்
>
அன்பின் திரு. கிருஷ்ணன்,
நலம், வளம், பலம் போன்ற தமிழ்ச் சொற்கள்
உடன் என்ற உருபை ஏற்று உரைநடையில் உள்ளன.
ஏராளமான தமிழ் வசனப் பக்கங்கள் இருக்கின்றன.
உதாரணங்கள் (19.9.2011 கூகுளில்):
நலமுடன் (105,000 examples)
http://tinyurl.com/nalamudan
வளமுடன் (157,000 examples)
http://tinyurl.com/valamudan
பலமுடன் (2400 examples)
http://preview.tinyurl.com/palamudan
எனவே, உடன் என்ற உருபும் அத்துச் சாரிய இன்றியும்
இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அன்புடன்,
நா. கணேசன்
On Sep 19, 1:48 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> Google only shows how prevalent something is in web pages. It does not imply
> correctness.
>
> As per a Google search on 19-Sep-2011:
>
> கோர்த்து - About 73,500 results
> நேத்து - About 126,000 results
>
correct. It only shows the current practice.
It can be right or wrong.
It is not shown how nalamutan, balamutan, vaLamudan
is wrong. At least as yet.
N. Ganesan
> 2011/9/19 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>
> > நா. கணேசன்- Hide quoted text -
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Sep 19, 2:03 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> பழம் சொல்லான 'குழாம்' - 'குழாத்தை', 'குழாத்தொடு' என்று வரும்.
>
> "அன்பர்குழாத் தொடும்செல்வார் ஆனேற்றார் மகிழ்கோயில் ......"
>
Earlier example:
2934. சிவன்வந்து தேவர் *குழாமுடன்* கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவனெந்தை யாண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே யகப்பட்ட வாறே. (திருமந்திரம்)
> 2011/9/19 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> > அன்புள்ள தியாகராஜன்,
>
> > அப்படியே, புதுச்சேரி அறிஞர்களிடம் என் பழைய கேள்வியையும் கேளுங்கள்!
>
> > தற்காலத்தில் தமிழ் உரைநடையில் வரும்..... ‘ம் ‘-இல் முடியும் முகாம், இனாம்,
> > கலாம், ராம், விக்ரம், ...போன்ற பல சொற்களுக்குத் தொல்காப்பிய
> > ’அத்து’ விதி ஒத்து வருமா? ( “’ஏமிரா! இக்கட ‘அத்துச்’ சாரியை ஒத்து! ஒத்து”
> > என்கிறார் என் தெலுங்கு நண்பர்!)
>
> > 2011/9/19 Raja.Tyagarajan <thiaga...@dataone.in>
>
> > **
> >> *From:* Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
> >> *To:* santhav...@googlegroups.com
> >> *Sent:* Monday, September 19, 2011 5:29 PM
> >> *Subject:* Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
--------------
இன்னொன்றையும் பார்க்க வேண்டும் எனக்
கருதலாமா?
இரண்டாம் வேற்றுமைத்தொகை: நலமுடை-
போன்றவை. இதில் அத்து இல்லாமலும் வருகிறது.
உடைய என்ற சொல்லும் ”உடன்”
உடன் தொடர்புண்டு.
குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள் - பெரியாழ்வார்
மிக்க நலமுடைய மரங்கள் - பாரதி.
நலமுடைய = நலத்தையுடைய.
நா. கணேசன்
அது சரி, ஏதோ ஒரு தெரிந்த விஷயத்தைச் சொன்னேன், அதற்கு பொய் பத்திரிகைகளைச் சாடுவது போலவும், தினமணி ஏதோ குற்றம் இழைத்தது போலவும் கருத்துக் கூறுவது, வியப்பை அளிக்கிறது. தேவையற்ற விமர்சனகளைத் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. கடந்த சில தினங்களாவே உலாவிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைய மிக மிக தயங்கிய எனக்கும் ஏதாவது கருத்து சொல்லலாமே என்று தோன்றியதால் கூறினேன்.
வேறு இல்லை.
உள்ளே நுழைய மிக மிக தயங்கிய எனக்கும் ஏதாவது கருத்து சொல்லலாமே என்று தோன்றியதால் கூறினேன்.
நீங்கள் முன்னர் சுட்டிய, இப்பொழுதும் சுட்டும் -ஆம் என முடியும்
சொற்கள் மிகப்பலவும் (அல்லது எல்லாமும்) தமிழல்லா சொற்கள்
என்று நினைக்கின்றேன்.
சிவசிவா கூறியது போல குழாம் போன்ற சொற்கள் சிலவே
தமிழாக இருக்கும்போல் தெரிகின்றது. குழாம் என்பது குழாத்துடன்
என வரும் என்றும் அவரே காட்டியுள்ளார்.
-ஆம் என்று முடியும் தமிழ்ச்சொற்கள் அதிகம் இருக்குமோ?
இல்லை என்றே தோன்றுகின்றது.
அறம்-அறன், திறம்-திறன், மரம்-மரன் போன்று வருவதாலோ
என்னவோ நலமுடன் வாழ்க்கை என்றால் ஏதோ நலம் இல்லாத
நலம் முடமாகிப் போன வாழ்க்கை என்பது போல் ஒலிக்கின்றதோ என்னவோ
தெரியவில்லை. உடல்நலமுடன் என்பதைக் காட்டிலும்
உடல்நலத்துடன் என்பது நன்றாக இருப்பது போன்ற நினைப்பு.
இது சரியான சிந்தனைப் போக்காக இல்லாமல் இருக்கலாம், எனினும்
என் எண்ணக்கீற்றைப் பகிர்கின்றேன்.
அன்புடன்
செல்வா
On Sep 19, 4:56 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அன்புள்ள தியாகராஜன்,
>
> அப்படியே, புதுச்சேரி அறிஞர்களிடம் என் பழைய கேள்வியையும் கேளுங்கள்!
>
> தற்காலத்தில் தமிழ் உரைநடையில் வரும்..... ‘ம் ‘-இல் முடியும் முகாம், இனாம்,
> கலாம், ராம், விக்ரம், ...போன்ற பல சொற்களுக்குத் தொல்காப்பிய
> ’அத்து’ விதி ஒத்து வருமா? ( “’ஏமிரா! இக்கட ‘அத்துச்’ சாரியை ஒத்து! ஒத்து”
> என்கிறார் என் தெலுங்கு நண்பர்!)
>
> 2011/9/19 Raja.Tyagarajan <thiaga...@dataone.in>
>
>
>
>
>
> > **
> > *From:* Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
> > *To:* santhav...@googlegroups.com
> > *Sent:* Monday, September 19, 2011 5:29 PM
> > *Subject:* Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
>
> > புலவர்கள் கவிஞர்களுக்கு லைசென்ஸ் உண்டு.
> > உதரணத்துக்கு
> > கள் என்ற விகுதியை பன்மைக்கும் சேர்த்திருக்கிறார்கள் கம்பனும், பாரதியும்
> > "ஆர்த்தனர்கள் தானவர்கள், வானவர் அழுங்க.." (கம்பன்)
>
> > "நிலம்
> > திரிவன ஊர்வனகள்" (பாரதி)
> > கவிதையில் வருவதைக் கொண்டு எடுத்துக் கொள்ளக் கூடாது.
> > வளமுடன் சரியன்று. வளத்துடன் என்பதே சரி.
>
> > முனைவர் பா கிருஷ்ணன்
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --
>
> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagamhttp://s-pasupathy.blogspot.com/- Hide quoted text -
வைகாவி ஆண்ட நாடு வையாபுரி நாடு.
அதன் பழைய மன்னர்கள் சேரர்.
(நாதவிந்து கலாதி ... திருப்புகழ்),
வையாபுரி நாட்டின் ஊர்த்தொகையில்
கோதைமங்கலம் உள்ளது. கோதை - சேரர்
குடிப்பெயர்,
“கோதை மங்கலமுடன்” ஆட்சி காண்க.
நா. கணேசன்
வையாபுரிநாடு
விருத்தம்
13.
திருமிகும் பழனியூர் கோதைமங் கலமுடன்
செப்புகலையம் புதூரும்
சேரமா னூரிறைய மங்கல மடத்தூரு திகழ்கடத்
தூரினுடனே
அருமைமிகு கணியூர்கண் ணாடிப்புதூருடன்
அழகுமிகு கோட்டைத்துறை.
ஆகுங்கொழுங் குண்டை மேல்கரைப் பட்டிலூ
ரமர்தேவாதா குடியுமே
பெருமைமிகு மாய்க்குடியி னோடமரர் பூண்டியும்
பிசகாமணிச்சிலம்பு
பீடுறுங் கொழுமம்வாழ் கரையோடீ ரொன்பதூர்
பிறங்குபுக ழோங்குநாடு
முரிமையுட னிரவலர்கள் மனநிலைமை யாய்ந்துள்
ளுவந்துதவு கின்றசெங்கை
உத்தமர்கள் மேவுதிரு வாவினன் குடியென்ன
வுயர்மிகு வளநாடரோ
20 செப்டெம்ப்ர், 2011 3:28 pm அன்று, செல்வா <c.r.sel...@gmail.com> எழுதியது:
அன்புள்ள பேரா. பசுபதி,நீங்கள் முன்னர் சுட்டிய, இப்பொழுதும் சுட்டும் -ஆம் என முடியும்
சொற்கள் மிகப்பலவும் (அல்லது எல்லாமும்) தமிழல்லா சொற்கள்
என்று நினைக்கின்றேன்.
சிவசிவா கூறியது போல குழாம் போன்ற சொற்கள் சிலவே
தமிழாக இருக்கும்போல் தெரிகின்றது. குழாம் என்பது குழாத்துடன்
என வரும் என்றும் அவரே காட்டியுள்ளார்.
-ஆம் என்று முடியும் தமிழ்ச்சொற்கள் அதிகம் இருக்குமோ?
இல்லை என்றே தோன்றுகின்றது.
அறம்-அறன், திறம்-திறன், மரம்-மரன் போன்று வருவதாலோ
என்னவோ நலமுடன் வாழ்க்கை என்றால் ஏதோ நலம் இல்லாத
நலம் முடமாகிப் போன வாழ்க்கை என்பது போல் ஒலிக்கின்றதோ என்னவோ
தெரியவில்லை.
செல்வா
மரன் என்பதே அதன் இடுகுறியாக இருந்திருக்கலாம்
தெலுகு மொழியில் மரனை மான் (மானு) என்பார்கள்
தால மரன்= தாட்டி மானு
(தமிழ் ஆய்வில் பிற திராவிடமொழிகளையும் கருத்தில் கொள்ளணும்)
லகரம் டகரம் ஆகும் மரபு ஆங்கிலத்திலும் (ஐரோப்பிய மொழிகள்) இருக்கு
உருள் என்பது உருட்டு என மாறுது
அதேபோல்
ரோல் என்பது ரோடேட் என மருவுது
அதனால் தமிழ் பால் பாத்தி என ஆனது போல்
ஐரோப்பிய மொழிகளில் பார்ட் ஆகி இருக்குமோ?
கருதவேண்டியவை:
பிள=ஸ்பிளிட்
பிரி = செப்பரேசன்??
ஐரோப்பாவில் எல்லா சொல்லுக்கும் இலத்தீன் மொழியின் மூலம் நாடுவார்கள். நம் பக்கமும் பார்க்கலாம்
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.