எந்தவகை வினைத்தொகையிலும் வலிமிகுதல் இல்லை.
- தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை
i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.
சான்று:
நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.
சுடு + காடு = சுடுகாடு
நடு + கல் = நடுகல்
குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
மூடு + பனி = மூடுபனி
சுடு + சோறு = சுடுசோறு
விடு + கதை = விடுகதை
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
திருவளர் + செல்வி = திருவளர் செல்விii) இரண்டு சொற்களோ, இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது, அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.
ஆகுபெயரின் வகைகளுக்கு நன்னூல் சூத்திரம் இருக்கிறது.அதுபோல, வினைத்தொகையின் வகைகளுக்கு கவிஞர் இரமணிபோன்றோர் சூத்திரம் அமைக்க இயலும். அதற்கு அச்சாரமாகவினைத்தொகை வகைகளும், ஒவ்வொரு பகுப்புக்கும் பலஎடுத்துக்காட்டுகளும் பார்க்கலாம்.
{Entry: F06__119}
நெடுநல் அடுகளிறு - இன்று அடு களிறு - நாளை அடுகளிறு - வேல், களம், தொழில், பொழுது கந்து - எனவரும். இவை விரியுமிடத்து, நெடுநல் அட்ட களிறு - இன்று அடாநின்ற களிறு - நாளை அடும் களிறு என விரியும் . இவை முறையே இறந்தகால வினைத்தொகை, நிகழ்கால வினைத் தொகை, எதிர்கால வினைத்தொகை எனப்படும். இஃது ஒவ்வொரு காலத்தையே பற்றாது முக்காலமும் பற்றி நெருநலும் அட்ட களிறு - இன்றும் அடாநின்ற களிறு - நாளையும் அடும் களிறு - என விரியவரின் முக்கால வினைத் தொகையாம். (நன். 364 சங்.)
{Entry: F06__376}
வினைச்சொல்லாவது தொழிலும் காலமும் பாலும் உணர்த் தலின் பால் உணர்த்தும் சொல் முற்றுச்சொல்லாகி நின்று தொகைநிலை ஆகாமையானும், பால் காட்டாத வினை யெச்சம் பெயரெச்சம் என்னும் இரண்டனுள்ளும் வினை யெச்சம் முற்றுவினைச்சொல்லோடல்லது முடியாமையானும், வினைத்தொகையில் தொகுவதும் விரிவதும் பெயரெச்சமே. அது தொகுங் காலத்துக் காலப்பொருளை உணர்த்தும் சொல்லே தொகுவதும் விரிவதும் கொள்க. தொழிலும் பொருளும் விட்டிசைத்து நில்லாது ஒற்றுமைப்பட்டதனை வினைத்தொகை என்றார்.
எ-டு : கொல்யானை, அரிவாள். (தொ. சொ. 410 தெய். உரை)
காலம் பற்றிப் புடைபெயர் வினையுருபாகிய தம் இறுதிகள் தொக்குநிற்பச் செய்வது ஆதி அறுபொருட்பெயராகிய தம் எச்சம் கொண்ட பெயரெச்சங்கள் வினைத்தொகையாம். புடைபெயர்ச்சி வினைகளை முதனிலை ஒழிந்த இறுதிகள் காட்டி நிற்றலின் அவ்வினைக்கு அவை உருபாயின.
நெடுநல் அடுகளிறு, இன்று அடுகளிறு, நாளை அடுகளிறு - வேல் - களம் - தொழில் - பொழுது - கந்து - என வரும்.
அடுகளிறு : முக்கால வினைத்தொகை. இங்ஙனம் கால விகற்பம் பற்றிப் புடைபெயர் வினையைக் கருதாது ‘இத் தொழிற்கு உரியது இஃது’ என்னும் பொருள்பட வருவன வினைத்தொகைக் குறிப்பு எனப்படும். எ-டு : அரிவாள், ஆவுரிஞ்சுதறி. (நன். 364 சங்.)
--------
The correct line is:
நெருநல் அடுகளிறு, இன்று அடுகளிறு, நாளை அடுகளிறு - வேல் - களம் - தொழில் - பொழுது - கந்து - என வரும்.
---------------
’நெடுநல்’ எனுஞ் சொல்லே பழைய இலக்கியங்களில் பார்க்க முடியாது. அதாவது, தனிச்சொல்லாக நெடுநல் என வாராது.பெயரடையாக வரும் (உ-ம்: நெடுநல்வாடை). கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி அச்சாகி இருக்கிறது. அதிலும் நெடுநல் என்று அச்சிட்டிருக்கிறார்களா?நூல் பார்த்தோர் தெரிவித்தால் நன்றி.
