விழைநடன வேந்தே! ( பிரதோஷ வெண்பாக்கள்)

3 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 4, 2025, 10:50:26 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
.                           விழைநடன வேந்தே!

                          (நேரிசை வெண்பாக்கள்)

பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போவதுதான் வாழ்க்கையென்றால்
ஐயாவே இப்பிறப்பால் ஆவதென்ன? - மையார் 
எழிலி இனம்கூடி இன்மழைபெய் தில்லை
விழைநடன வேந்தே விளம்பு!


வேந்தே விளம்ப விழைந்தேனுன் மேன்மையினை
போந்தேனுன் கோவில் புகுந்தின்று - பூந்தேன்
மலர்த்தும்பி பாடி மகழ்சோலைத் தில்லைத்
தலத்துறைவாய் நல்வரங்கள் தா!

05/09/2025( பிரதோஷம்)                -- தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Sep 4, 2025, 11:16:07 PM (2 days ago) Sep 4
to சந்தவசந்தம்
அற்புதம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgOaZkpWcwxXb7cdRQA8F8rUFAcy%3DHt6fZnCpiRDqe6Eg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 4, 2025, 11:24:43 PM (2 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 
     — தில்லைவேந்தன்

On Fri, Sep 5, 2025 at 8:46 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அற்புதம் 

GOPAL Vis

unread,
Sep 5, 2025, 1:33:12 AM (yesterday) Sep 5
to santhav...@googlegroups.com
அருமை வெண்பாக்கள்!

பழம்பொம்மை பொய்யோ புதுப்பொம்மை மெய்யோ?
அழவிட்டால் எல்லாம் அழுமே! - விழவிட்டால்
பொத்தென்று வீழும்! பொழிவதும் காய்வதும்
அத்தன் அளந்தபடி ஆம்!

கோபால்.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 5, 2025, 1:48:43 AM (yesterday) Sep 5
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு கோபால்
பொம்மை வெண்பா அருமை 

           — தில்லைவேந்தன் 

Ram Ramakrishnan

unread,
Sep 5, 2025, 8:43:24 AM (yesterday) Sep 5
to santhav...@googlegroups.com
பிரதோஷ வெண்பாக்கள் அருமை, வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 5, 2025, at 01:48, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 5, 2025, 9:10:57 AM (yesterday) Sep 5
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

    — தில்லைவேந்தன் 

Rajagopalan Soundararajan

unread,
6:12 AM (7 hours ago) 6:12 AM
to சந்தவசந்தம்
"அத்தன் அளந்த படி" என்ற ஈற்றடி வாமன ஜயந்தி/ஓணம் பண்டிகையான இந்நாள் அமைந்தது சிறப்பு.
Reply all
Reply to author
Forward
0 new messages