விநாயகர் அனுபூதி (கோபால்)

8 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Dec 22, 2025, 8:35:46 PM (5 days ago) Dec 22
to santhav...@googlegroups.com
அன்பான சந்தவசந்த அறிஞர்களுக்கு அடியேனின் பணிவான விண்ணப்பம்.
நங்கநல்லூர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் துதியாக, அவனருளால் விநாயகர் அனுபூதி என்ற தலைப்பில் 100 பாடல்கள் அந்தாதி வடிவில் கலிவிருத்த்த்தில் முயன்றிருக்கிறேன். இன்று முதல் அவற்றைப் பத்துப் பத்தாக இவண் பகிர விழைகிறேன். அன்பர்கள் பிழைகளைச் சுட்டி/திருத்தி அருளுமாறு வேண்டுகிறேன்.

விநாயகர் அனுபூதி! (0-10)

நங்கநல்லூர் ஶ்ரீ வரசித்தி விநாயகர் துதி
[கலிவிருத்தம்; அந்தாதி]

காப்பு
———
அஞ்(சு)அக் கரனார் அகிலத்(து) அனையோ(டு)
அஞ்(சு)அங் கரனாய் அளிவா ரணனே!
கஞ்சக் கழலைக் கருதித் தமிழால்
கொஞ்சம் பரவக் கொடுநற் சொலையே! ..(0)


[வாரணன் = யானைமுகன்; கஞ்சம் = தாமரை; பரவ = துதி பாட/புகழ]
[பஞ்சாட்சரத் தெய்வமான சிவபிரானும், ஜகத்தின் அன்னையாகிய சக்திதேவியும் அளித்த யானைமுகனே! உன்னுடைய கமல பாதங்களை எண்ணிப் புகழந்து தமிழ்த் துதியாய்ச் சிறிது பாட நல்ல சொற்களைக் கொடுத்தருள்க!] ..(0)

அனுபூதி
————-
ஓம்அந் தணர்வாய் ஒலிசெய் பவனே!
நாமஞ் சொலுவார் நலிவட் டவனே!
சோமம் புனைவான் சுதனே பரிவாய்ச்
சேமந் தருவாய் திருவார் களிறே! ..(1)


[அடுதல் = அழித்தல்; சோமம் = சந்திரன்; சேமம் = நன்மை]
[ஓம் என்னும் மந்திரத்தை அந்தணர் வாய் மூலம் ஒலிப்பவனே! உன் நாமத்தைச் சொல்வார்க்கு நலிவு இல்லாமல் செய்பவனே! நிலாவை அணிந்த சிவபெருமானின் மகனே! பரிவோடு நன்மைகளைத் தருக! செல்வமிக்க ஆனைமுகனே!] ..(1)

களிறே அறிவாங் கடலே நினநா
பிளிறுந் தொனியே பிழையா மறையாம்!
எளியோர் அடியார்க்(கு) இடையூ(று) எனிலோ
விளியா முனமே விரையுந் துணையே! ..(2)

[நின = உன்னுடைய; பிளிறுதல் = யானை எழுப்பும் குரல்]
[ஆனைமுகனே! ஞானக் கடலே! உன் நாக்கு (வாய்) எழுப்பும் ஒலியே பிழையற்ற வேதங்களாகும்! எளிய அடியார்க்குத் துன்பம் வந்தால், அழைக்கும் முன்னரே துணையாக உதவ விரைந்து செல்லுபவனே!] ..(2)

துணிவுந் தெளிவுந் தொழுவார்க் கருளும்
பணிபூ ணழகா படையேந் தியவா!
விணில்ஆர் அமரர் விரைசூழ் நினதாள்
பணிவார் நிதமும் பணிசெய் முனமே! ..(3)


[பணி = பாம்பு; படை = ஆயுதம்; ஆர் = விளங்குகிற; விரை = நறுமணம்]
[உன்னைத் தொழுபவர்களுக்குத் துணிவையும் தெளிவையும் அருள்கின்றவனே, பாம்பை அணிந்தவனே, ஆயுதங்களை ஏந்தியவனே! விண்ணில் வாழும் தேவர்கள் தம் பணிகளைத் தொடங்கும் முன்னர் தினமும் உன்னுடைய நறுமணம் மிக்க திருவடிகளை வணங்குவார்கள்!] ..(3)

முனமே மலைதான் முடியா தவினை!
இனமும் தொடர்தான் எனிலென் கதியென்?
உனதன் பிலையேல் உதவப் பிறரார்?
கனலோ புனலோ கதிநின் பதமே! ..(4)


[ஏற்கனவே முடிவில்லாத வினைப் பயன்கள் (பாவங்கள்) மலையாகப் பெருகி உள்ளன. இன்னும் அவை தொடருமென்றால் என் கதி என்ன? உன்னுடைய அன்பு இல்லையானால் உதவி செய்ய வேறு யார் இருக்கவியலும்? அக்கினியாய்ச் சுட்டாலும், நீர்போல் குளிர்ந்தாலும் உன் திருவடி மட்டுமே எனக்குக் கதி!] ..(4)

பதிநீ! உழலும் பலநூ றுலகின்
விதிநீ! அசைவின் விசையும் நினதே!
புதிதென் பதுநின் புனைவின் பொலிவே!
மதியும் மனமும் மருளா தருளே! ..(5)


[புனைவு = உருவாக்குதல்]
[நீயே தலைவன்! உலகங்களின் சுழற்சிக்கான விதியும் நீதான். அசைவை உண்டாக்கும் ஆற்றல் உன்னுடையதே! புதிதாகக் காண்பவை எல்லாம் உன் படைப்பின் அழகே! என் மனமும் புத்தியும் குழம்பாதிருக்க அருள் புரிக!] ..(5)

அருவாய் உருவாய் அணுவாய் உலகாய்
இருளாய் ஒளியாய் இசைவாய் முரணாய்த்
தெருளாய் மருளாய்த் திரிபற் றபரம்
பொருளே நினையே புலனுற் றிடுமே! ..(6)


[இசைவு = ஒப்புதல்; தெருள் = தெளிவு]
[எந்த மாறுதலும் அற்ற பரம்பொருளான உன்னைத்தான் அருவாயும் உருவாயும் அணுவாகவும் உலகமாகவும் இருளாகவும் ஒளியாகவும் ஒப்புதலாகவும் மறுத்தலாகவும் தெளிவாகவும் மயக்கமாகவும் புலன்கள் உணர்கின்றன!] ..(6)

இடபத் தினிலே எழிலாய் அமர்வான்
நடனத்(து) அயரான் நயனம் சிவைகண்
உடனுற் றகணத்(து) உருவா னவனே!
குடமொத்(து) உதரத் தொடுவந் தவனே! ..(7)


[இடபம் = காளை; நயனம் = கண்; உதரம் = வயிறு]
[காளை மீது எழிலாக அமர்பவனும் சலியாமல் நடனம் ஆடுபவனுமாகிய சிவபெருமானின் கண்கள், சிவையாகிய சக்தியின் கண்களுடன் உற்று நோக்கிய கணத்தில் உருவானவனே! குடத்தை ஒத்த வயிற்றோடு பிறந்தவனே!] ..(7)

தவமாற் றஇறை தருமத் தனையும்
திவலைத் துதியால் திருவாய்த் தருவோய்!
பவளக் கனல்போற் பயில்மே னியனே!
சிவலக் கணமே திகழுத் தமனே! ..(8)


[தவங்கள் செய்வதன் பயனாக இறைமை தரக் கூடிய அத்தனை நலன்களையும், துளி அளவு துதி செய்வதால் செல்வமாகத் தருபவனே! பவள நிற நெருப்பைப் போலச் சிவந்திருக்கும் மேனியை உடையவனே! சிவத்தின் இலக்கணம் (அழகு) திகழும் உத்தமனே!] ..(8)

தமையே நினதாச் சரணத் திடவே
குமையக் குவியும் கொடிதா னவினைச்
சுமையற் றிடுமே! சுடர்வே லவனின்
தமையா உமையின் தலைமா மகனே! ..(9)

[நினதா = உன்னுடையதாக; குமைதல் = அழிதல்]
[தம்மையே உன்னுடையதென்று முழுமையாக உன் சரணத்தில் அர்ப்பணித்தவர்களுக்கு, அழிவைத் தரவே குவிகின்ற கொடுமையான பாவச் சுமைகள் அற்று விடும்! சொலிக்கும் வேலைக் கொண்ட முருகனின் தமையனே! உமா தேவியின் மூத்த மகனே!] ..(9)

மகரம் செவியில் மணிகுண் டலமாய்த்
திகழும் பெருமான் திருமால் மருகா!
புகலுக்(கு) உனதாள் புரவுக்(கு) உனகை!
இகமெற்(று) எனிலென் இவைஆம் எனிலே! ..(10)


[புரவு = பாதுக்காத்தல்; எற்று = எத்தகையது?]
[முதலை வடிவிலான மணி மிகுந்த குண்டலங்கள் (மகரகுண்டலம்) செவிகளில் திகழ்கின்ற திருமால் பெருமானின் மருமகனே! அடைக்கலத்திற்கு உனது திருவடிகளும், காப்பாற்றுவதற்கு உனது திருக்கைகளும் உண்டு என்றால், இந்த இக உலகம் எப்படி இருந்தால்தான் என்ன (கவலை)?] ..(10)

நல்வாழ்த்துகள்
கோபால். 
[23/12/2025]

सर्वे जना: सुखिनो भवन्तु ।

Kaviyogi Vedham

unread,
Dec 22, 2025, 8:40:18 PM (5 days ago) Dec 22
to santhav...@googlegroups.com
super  venbas.. vazga,
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCts2sK2PNCLsFjzT5tDmOd0WSRtiNZ%2BVhnyoENdLxSjW8w%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Dec 22, 2025, 8:52:35 PM (5 days ago) Dec 22
to santhav...@googlegroups.com
ஆகா! அற்புதம். திரு. கோபால்.

அனைத்தும் (100 கலிவிருத்தங்களும்) அந்தாதி யெனில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Dec 22, 2025, at 20:40, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:



Saranya Gurumurthy

unread,
Dec 22, 2025, 9:22:41 PM (5 days ago) Dec 22
to சந்தவசந்தம்
மிகவும் அருமை ஐயா. தெய்விகமாய் உள்ளன.

Regards,
Saranya

GOPAL Vis

unread,
Dec 22, 2025, 9:32:54 PM (5 days ago) Dec 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு யோகியார்.
கோபால்.

GOPAL Vis

unread,
Dec 22, 2025, 9:34:42 PM (5 days ago) Dec 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம்
கோபால்.

GOPAL Vis

unread,
Dec 22, 2025, 9:35:44 PM (5 days ago) Dec 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திருமதி சரண்யா.
கோபால்

Subbaier Ramasami

unread,
Dec 23, 2025, 12:26:10 PM (4 days ago) Dec 23
to santhav...@googlegroups.com
மிக அருமையாக இருக்கிறது. முதற்பாடலிலே
கொடுநற்  எனும் முரண்  அமைப்பைக் கண்டேன்

இலந்தை

On Mon, Dec 22, 2025 at 7:35 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Dec 23, 2025, 3:02:23 PM (4 days ago) Dec 23
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“ விளியா முனமே விரையுந் துணையே!”

“ பவளக் கனல்போற் பயில்மே னியனே!
சிவலக் கணமே திகழுத் தமனே!”

மிக மிக அருமையான பாடல்கள், திரு. கோபால்!!!

சில ஐயங்கள்:
இரண்டாம் பாடலில் “ நினநா பிளிறும்” - இங்கே நா என்பது ஓரெழுத்து ஒருமொழி ஆதலின் அதனை அடுத்து வலிமிகும் என்று நினைக்கிறேன்.

5 ஆம் பாடலின் ஈற்றடியில் “மதியும் மனமும்” என்னும் இடத்தில் புணர்ச்சியில் மகர மெய்கள் கெடுவதால் தனனா என்னும் சந்தம் தனன என்று குறுகுவது போல் தோன்றுகிறது. இங்கே விரித்தல் விகாரமாக அம்மகர மெய்களைக் கருதலாமா ?

- இமயவரம்பன்

hemalatha hemalatha

unread,
Dec 24, 2025, 1:17:23 AM (4 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
நான் நங்கநல்லூரில் 
தான் 27 வருடங்கள் இருந்தேன்
இப்போது பெங்களூரில் 
இருக்கிறேன்
வரசித்தி விநாயகர் துதி பார்த்த போது அவரையே பார்த்த மாதிரி இருக்கிறது
மீண்டும் நன்றி
அன்புடன்
வாழ்த்துக்கள்

On Wed, 24 Dec, 2025, 1:32 am இமயவரம்பன், <anandbl...@gmail.com> wrote:
“ விளியா முனமே விரையுந் துணையே!”
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 4:38:04 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு கவிவேழம் அவர்களே.
கொடுநற்  எனும் முரண் 
சிலவிடங்களில் முரண் போலத் தொனிக்கும் சொற்களை நான் அறிந்தே இட்டிக்கிறேன். இந்த முரண் அமைப்பை நான் நீங்கள் சொன்ன பின் தான் காண்கிறேன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 4:53:07 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு இமயவரம்பன்.

சில ஐயங்கள்:
இரண்டாம் பாடலில் “ நினநா பிளிறும்” - இங்கே நா என்பது ஓரெழுத்து ஒருமொழி ஆதலின் அதனை அடுத்து வலிமிகும் என்று நினைக்கிறேன்.

ஆம். திருத்திக் கொள்கிறேன். நன்றி.


5 ஆம் பாடலின் ஈற்றடியில் “மதியும் மனமும்” என்னும் இடத்தில் புணர்ச்சியில் மகர மெய்கள் கெடுவதால் தனனா என்னும் சந்தம் தனன என்று குறுகுவது போல் தோன்றுகிறது. இங்கே விரித்தல் விகாரமாக அம்மகர மெய்களைக் கருதலாமா ?
இது போன்ற சொற்றொடர்களைப் பெரும்பாலும் விலக்க முயன்றிருக்கிறேன். சிலவிடங்களில் அந்தச் சொற்களை மாற்ற விரும்பவில்லை. தமிழ் யாப்பிலக்கணம் ஏதோ ஒரு விகாரம்/ மயக்கம்/ அளபெடை அருளி ஏற்றுக் கொள்ளும் என்று நம்பி விட்டிருக்கிறேன். இக்காரணத்தினால், பெரும்பாலும் சந்தக் கலிவிருத்தமாக அமைந்திருந்த போதும், நான் பொதுவாக அவ்வாறு குறிப்பிடவில்லை.

கோபால்.


On Wed, Dec 24, 2025 at 1:32 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
“ விளியா முனமே விரையுந் துணையே!”

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 4:57:27 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திருமதி ஹேமலதா.
நீங்கள் நங்கநல்லூரில் எங்கு எந்த வருடங்களில் இருந்தீர்க்ள்?
கோபால்.

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 5:05:56 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
விநாயகர் அனுபூதி! (11-20)

எனதென் பதையின்(று) எரியிட் டிலையேல்
தனதென்(று) எனையுண் தழலா கிவிடும்!
மனமூ திடவெம் மலைபோற் கனலும்!
சினமும் பெருகும்! சிதைஇப் பொழுதே! ..(11)


[‘எனது’ என்னும் மமதையை இன்றே நீ எரித்து அழிக்கவில்லை என்றால், அது தனது என்று கொண்டு என்னை எரிக்கும் தழலாகி விடும்! (அலையும்) மனம் அதை ஊதிவிட, வெம்மையான மலைபோலத் தகிக்கலாகும்! அத்தோடு சினமும் அதிகரிக்கும். ஆகவே, இப்போதே (என் மமதையை) நீக்கிவிடுக!] ..(11)

தேடித் தெளியத் திறனற் றிலனே
பாடிப் புகழப் பணறிந் திலனே!
கூடித் துதிசெய் குழுகண் டிலனே!
சாடிப் பயனென் சடமென் றனையே? ..(12)

[நானாகவே தேடித் தெளிவடையும் திறன் அற்றவனாகவும், உன்னைப் பாடிப் புகழ்வதற்குப் பண்கள் அறியாதவனாகவும், பலரோடு கூடித் துதி செய்வதற்கும் சரியான சற்சங்கத்தை அடையாளம் காணாதவனாகவும் இருக்கிறேனே! சடமான என்னைக் குறைசொல்லி வைதாலும் பயனேது?] ..(12)

என்னோர் துணையே! இறவின் பிறகிங்(கு)
இன்னோர் பிறவிக்(கு) எறிவாய் எனிலும்
உன்னீர் அடிமீ(து) உளமொன் றுபடற்(கு)
என்னா வதுசெய் எளியேற்(கு) இறையே! ..(13)


[இறவு = இறப்பு]
[என்னுடைய ஒரே துணையானவனே! எனது இறப்புக்குப் பின், மீண்டும் ஒரு பிறவி கொடுத்து இங்கே எறியப் போகிறாய் என்றாலும், உன் இரு திருவடிகளில் என் மனம் ஒன்று படுவதற்கு ஏதாவது செய்க இறைவனே!] ..(13)

இறைவா இபநீ இதயத்(து) அலராம்
அறையின் நறையில் அழகாய் அமரப்
பறைபெற் றிலனே! பழகும் கலியின்
கறைபட் டபினே கரைகாண்(பு) அரிதே! ..(14)


[இபம் = யானை; அலர் = மலர்; நறை = நறுமணம்; பறை = இறையருள்/வரம்]
[யானை முகனாகிய இறைவனே! நீ என் இதயமாகிய மலராலான (கரு)அறையின் நறுமணத்தில் அமர்ந்திருக்க நான் பாக்கியம் பெறாதவன் ஆனேனே! என்னோடு பழகிக் கொண்டிருக்கும் கலியின் கறை பட்டபின்பு, கரையைக் காண இயலாதே!] ..(14)

அரியுண் பணியை அணியா அணியும்
பரிபூ ரணனே! பணியா ரமுடன்
பொரியும் பழமும் புசியைங் கரனே
கரியே சகமாள் கணநா யகனே! ..(15)


[அரி = காற்று; பணி = பாம்பு; கரி = யானை]
[காற்றை உண்ணும் பாம்பை அணியாக அணிகின்றவனே! பரிபூரணமானவனே! பணியாரங்களும் பொரியும் பழங்களும் உண்ணுகிற ஐங்கரனே! யானைமுகனே! இந்தச் சகத்தை ஆளும் கணநாயகப் பெருமானே!] ..(15)

கனிவென்(று) அடையக் கயிலா யமலைப்
பனியில் தனியாய்ப் படிபெற் றவரை
நனிசுற் றியவா! நசையற் றமகா
முனிசத் துவரின் முதலாம் குருவே! ..(16)


[படி = உலகம்; பெற்றவர் = தாய் தந்தை; நனி = நன்கு; நசை = ஆசை; சத்துவர் = ஸத்குணம் மட்டுமே உடையவர்]
[ஒரு கனியை வென்று அடைவதற்காகக் கயிலாய மலைப் பனியில் வீற்றிருந்த உலகின் தாய் தந்தையரைத் தனியாக நன்கு சுற்றியவனே! ஆசை அற்ற, நற்குணங்கள் மட்டுமே கொண்ட மாமுனிகளுக்கு முதலாம் குருவானவனே!] ..(16)

குருவின் குருவாம் குகசண் முகனாம்
முருகன் குமரன் முதல்வா அணலே!
ஒருகொம் புடையோய் உரகக் கடியோய்!
தருவாய் அமரர் தருவாய் வளலே! ..(17)


[உரகம் = பாம்பு; கடி = இடுப்பு]
[குருவுக்கும் குருவான குகன், சண்முகன், முருகன், குமரனுக்கு முன்னவனான அண்ணனே! ஒற்றைக் கொம்பு உடையவனே! பாம்பை இடுப்பில் (கச்சையாக) அணிந்தவனே! தேவலோக கற்பக தருவைப்போன்ற வள்ளலே! அருள் தருக!] ..(17)

வளமத் தனையும் வரமாய்த் தருவோய்!
களபச் சிரனே கருணைக் கணனே!
முளரிப் பதனே முறமாஞ் செவியோய்
அளவற் றகொடை அளிஐங் கரனே! ..(18)


[களபம் = ஆண்யானை; முளரி = தாமரை]
[எல்லா வளங்களையும் வரமாகத் தருபவனே! யானைத் தலை கொண்டவனே! கருணைமிகும் கண்களை உடையவனே! தாமரைப் பாதங்களை உடையவனே! முறம் போன்ற செவிகளைக் கொண்டவனே! அளவில்லாமல் கொடுக்கும் ஐங்கரனே!] ..(18)

கரணக் கருவிற் கருமேந் திரியப்
புரணந் தனிலும் புலனைந் தினிலும்
மரணஞ் சயனம் மருளிற் கனவில்
சரணப் பரிசம் சதமா குகவே! ..(19)


[கரணக் கரு = அந்தக்கரணம்/உள்ளுணர்வு; கருமேந்திரியம் = வேலை செய்யும் உடல் உறுப்புகள்; புரணம் = அசைவு/துடிப்பு; பரிசம் = தொடுதல்; சதம் = நிலைப்பு]
[என் உள்ளுணர்விலும், உடல் உறுப்புகளின் அசைவுகளிலும்; ஐம்புலன்களிலும், மயக்கநிலை, கனவுநிலை, உறக்கநிலை, ஆகியவற்றிலும், இறப்புநிலையிலும், உன்னுடைய திருவடிகளின் இணைப்பு நிலைத்திருக்கட்டும்] ..(19)

கவியாத் துமலர்க் கழலோ துவதும்
திவியம் கமழும் திருநா மமதைச்
செவியாற் பருகிச் சிவமாங் கனலுக்(கு)
அவியா வதுமே அடியேன் பணியே! ..(20)


[யாத்து = இயற்றி; திவியம் = தெய்விகம்/இறைமை; அவி = வேள்வியில் ஆகுதியாக இடப்படும் பொருள்]
[கவிதைகள் இயற்றி உன் திருவடிகளைத் தோத்திரம் செய்வதும், இறைமணம் கமழும் உன் திருநாமத்தைக் காதுகளால் சுவைத்தபடியே சிவம் என்னும் அக்கினியில் ஆகுதி ஆகிவிடுவதே அடியேனுடைய பணியாகும்.] ..(20)

நல்வாழ்த்துகள்
கோபால்.
[24/12/2025]

On Tue, Dec 23, 2025 at 7:07 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
. . . . . . .
விநாயகர் அனுபூதி! (0-10)

நங்கநல்லூர் ஶ்ரீ வரசித்தி விநாயகர் துதி
[கலிவிருத்தம்; அந்தாதி]

. . . . . . . . . . . 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 24, 2025, 5:41:53 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
அருமையான துதி. 
>>  புகலுக்(கு) உனதாள் புரவுக்(கு) உனகை!
இகமெற்(று) எனிலென் இவைஆம் எனிலே! ..(10)
அழகிய முத்தாய்ப்பு. 
..அனந்த்



On Wed, Dec 24, 2025 at 3:35 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
விநாயகர் அனுபூதி! (11-20)

எனதென் பதையின்(று) எரியிட் டிலையேல்
தனதென்(று) எனையுண் தழலா கிவிடும்!
மனமூ திடவெம் மலைபோற் கனலும்!
சினமும் பெருகும்! சிதைஇப் பொழுதே! ..(11)


[‘எனது’ என்னும் மமதையை இன்றே நீ எரித்து அழிக்கவில்லை என்றால், அது தனது என்று கொண்டு என்னை எரிக்கும் தழலாகி விடும்! (அலையும்) மனம் அதை ஊதிவிட, வெம்மையான மலைபோலத் தகிக்கலாகும்! அத்தோடு சினமும் அதிகரிக்கும். ஆகவே, இப்போதே (என் மமதையை) நீக்கிவிடுக!] ..(11)

தேடித் தெளியத் திறனற் றிலனே
பாடிப் புகழப் பணறிந் திலனே!
கூடித் துதிசெய் குழுகண் டிலனே!
சாடிப் பயனென் சடமென் றனையே? ..(12)

[நானாகவே தேடித் தெளிவடையும் திறன் அற்றவனாகவும், உன்னைப் பாடிப் புகழ்வதற்குப் பண்கள் அறியாதவனாகவும், பலரோடு கூடித் துதி செய்வதற்கும் சரியான சற்சங்கத்தை அடையாளம் காணாதவனாகவும் இருக்கிறேனே! சடமான என்னைக் குறைசொல்லி வைதாலும் பயனேது?] ..(12)

என்னோர் துணையே! இறவின் பிறகிங்(கு)
இன்னோர் பிறவிக்(கு) எறிவாய் எனிலும்
உன்னீர் அடிமீ(து) உளமொன் றுபடற்(கு)
என்னா வதுசெய் எளியேற்(கு) இறையே! ..(13)


[இறவு = இறப்பு]
[என்னுடைய ஒரே துணையானவனே! எனது இறப்புக்குப் பின், மீண்டும் ஒரு பிறவி கொடுத்து இங்கே எறியப் போகிறாய் என்றாலும், உன் இரு திருவடிகளில் என் மனம் ஒன்று படுவதற்கு ஏதாவது செய்க இறைவனே!] ..(13)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Dec 24, 2025, 6:58:47 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தெளிவுபட விளக்கியதற்கு மிக்க நன்றி, திரு. கோபால். 

Ram Ramakrishnan

unread,
Dec 24, 2025, 9:02:17 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
இரண்டாம் பதிகமும் வழக்கம் போல் மிக அருமை, திரு. கோபால்.

வளர்க உங்கள் அருமையான தொண்டு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Dec 24, 2025, at 06:58, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


தெளிவுபட விளக்கியதற்கு மிக்க நன்றி, திரு. கோபால். 

On Dec 24, 2025, at 4:53 AM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:

இது போன்ற சொற்றொடர்களைப் பெரும்பாலும் விலக்க முயன்றிருக்கிறேன். சிலவிடங்களில் அந்தச் சொற்களை மாற்ற விரும்பவில்லை. தமிழ் யாப்பிலக்கணம் ஏதோ ஒரு விகாரம்/ மயக்கம்/ அளபெடை அருளி ஏற்றுக் கொள்ளும் என்று நம்பி விட்டிருக்கிறேன். இக்காரணத்தினால், பெரும்பாலும் சந்தக் கலிவிருத்தமாக அமைந்திருந்த போதும், நான் பொதுவாக அவ்வாறு குறிப்பிடவில்லை.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 9:22:13 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு அனந்த்.
கோபால்.

On Wed, Dec 24, 2025 at 4:11 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
அருமையான துதி. 
>>  புகலுக்(கு) உனதாள் புரவுக்(கு) உனகை!
இகமெற்(று) எனிலென் இவைஆம் எனிலே! ..(10)
அழகிய முத்தாய்ப்பு. 
..அனந்த்



On Wed, Dec 24, 2025 at 3:35 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
விநாயகர் அனுபூதி! (11-20)

எனதென் பதையின்(று) எரியிட் டிலையேல்
தனதென்(று) எனையுண் தழலா கிவிடும்!
மனமூ திடவெம் மலைபோற் கனலும்!
சினமும் பெருகும்! சிதைஇப் பொழுதே! ..(11)

. . . . .

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 9:24:30 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம்.
கோபால்.

M. Viswanathan

unread,
Dec 24, 2025, 11:59:50 AM (3 days ago) Dec 24
to Santhavasantham
மிக அருமையான துதி.
அன்பன்,
மீ.விசுவநாதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Dec 24, 2025, 9:40:36 PM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு மீவி.
கோபால்.
Reply all
Reply to author
Forward
0 new messages