பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்

377 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Apr 21, 2013, 10:08:34 PM4/21/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
இரண்டாம் வகுப்பின் பதிவுகள் இங்கே:



இம்முறை ஒரு மணி நேரம் பதிவான நிலையில், ஹேண்டிகேமின் நினைவகம் நிரம்பிவிட்டது. அதனால் தொடர்ந்து பதிவு செய்ய முடியவில்லை.  இப்போது ஹேண்டிகேமை முற்றாக ஃபார்மாட் செய்துவிட்டேன்.  அடுத்த வகுப்பிலிருந்து முழுப் பதிவுகளும் கிடைக்கும் ஆனால், பங்குபெறும் ஆர்வலர்கள், வாரம் ஒருமுறைதான் செய்வதனால், இரண்டு மணி நேரத்துக்கு பதிலாக மூன்று மணிநேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.  எட்டு மணிநேரம் என்றாலும் ஒதுக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறேன்.

சுவையை அனுபவித்துவிட்டால், கம்பனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு.  கலந்து கொள்ள முடியாதவர்களுக்காகத்தான் இந்தப் பதிவுகள்.  முதல் வகுப்பின் பதிவுக்குக் கிடைத்திருக்கும் பார்வைகள் திகைப்பை ஏற்படுத்துகின்றன.  எண்ணிக்கை ஏறியவண்ணம் இருக்கிறது.  வகுப்பில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் கம்பராமாயணம் முழுத் தொகுதியும் வாங்குவதற்குச் சென்ற வாரம் முடிவெடுத்திருக்கிறார்கள்.  

வரவேற்பு, நான் எதிர்பாராத அளவுக்கு இருக்கிறது.  ஏதோ ன்னால் இயன்றது.  முளைக்கும் நிலத்தில் விதையைத் தூவிக் கொண்டிருக்கிறேன்.  

யாராலெல்லாம் முடியுமோ அவர்களெல்லாம், அவரவர் வலைப்பூக்களில் இந்த சுட்டிகளுக்குத் தொடுப்பு தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்

(சொக்கன், வகுப்புக்கு வருபவர்களுக்கு இந்தக் கடிதத்தை அனுப்பி உதவவும்.)
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Siva Siva

unread,
Apr 21, 2013, 10:22:41 PM4/21/13
to santhavasantham
Thanks for the links.
I think you can post links for future sessions in this same thread.

If possible, some additional light can be added at the other end of the room so that your face be seen better.


2013/4/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

Dr Subramanian

unread,
Apr 22, 2013, 4:28:27 AM4/22/13
to santhav...@googlegroups.com
அன்பு ஹரி
உன் இதயத்திற்கு நெருக்கமான பணி இது. சுவையோடு தொடரட்டும். பெங்களூரு கொடுத்து வைத்தது  எங்களூரு.. ம் எப்போதுமே அப்படித்தானே.
வவேசு


2013/4/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1

Hari Krishnan

unread,
May 13, 2013, 10:42:30 AM5/13/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
ஐந்தாவது வகுப்பின் பதிவுகள் இங்கே உள்ளன:






வகுப்பில் பங்கேற்பவர்கள் காட்டும் ஆர்வம் (அதுவும் வேற்று மாநிலத்தில்) பிரமிப்பூட்டுகிறது.  சென்ற வாரம் மட்டும், எட்டு பேர் வைமுகோ பதிப்பை வாங்கியிருக்கிறார்கள்.  இரண்டு மணி நேரத்தை, மூன்று மணி நேரமாக மாற்றிக் கொள்ள முடியுமா என்று தயங்கித் தயங்கி வேறு கேட்கிறார்கள்!

இந்த அளவு ஆர்வத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை.  கம்பனுடைய ஆளுமை எப்படிப்பட்டது என்பது நன்றாக விளங்குகிறது.

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

sk natarajan

unread,
May 13, 2013, 10:54:53 PM5/13/13
to tamizhs...@googlegroups.com, santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம்
மிக்க நன்றி ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/13 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
May 14, 2013, 12:03:04 AM5/14/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
பதிவுகளில் முதல் அரை மணிநேரம் விட்டுப் போயிருந்தது.  இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த ஐந்து சுட்டிகள், ஐந்தாம் வகுப்புக்கானவை.

Hari Krishnan

unread,
May 19, 2013, 10:46:20 AM5/19/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், kambara...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

ஆறாம் வகுப்பின் பதிவுகள், ஆறு பகுதிகளாக இங்கே வலையேறியுள்ளது:







எல்லோருடனும் பகிர்ந்து கொண்டும், பதிவுகளைப் பார்த்தும் மகிழ வேண்டுகிறோம்.

பெங்களூரு கம்பன் குழுவினர் சார்பில்,
ஹரிகி


Hari Krishnan

unread,
May 19, 2013, 8:55:20 PM5/19/13
to vallamai, தமிழ் சிறகுகள், santhavasantham, mintamil, தமிழ் மன்றம், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

2013/5/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
யாராவது ஒயினை தேங்காய் சிப்பியில் கொடுத்தால் ரசிப்பார்களா?

கள்ளும் நல்லா இருக்கணும் கலயமும் பொன்னா இருக்கணும்.

கலயம் பொன்னா இருக்கணும்னா என்ன அர்த்தம்னு புரியல.  ஒளி/ஒலிப்பதிவுக் குறைபாடு பற்றியதாக இருந்தால், ஆண்டி கட்டும் மடத்தில் இவ்வளவு வசதிதான் இருக்க முடியும்.  ஆண்டி, ஆர்வத்தால் செய்வது.  ஆண்டியை அரசனாக்கி விடுங்களேன், பொற்கிண்ணத்திலேயே தேறலை வழங்குவான்!

இது ஆர்வலர்கள்  கேட்டுக் கொண்டபடியால் ஒரே நாள் அவகாசத்தில் தொடங்கப்பட்ட செயல்.  இப்போதைக்கு உள்ள வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.  இனிமேல் வசதி ஏற்பட்டால், வேந்தர் வேந்தருக்கு விருப்பமான முறையில் வழங்குகிறோம் இறையே!  :))

Hari Krishnan

unread,
May 19, 2013, 9:12:24 PM5/19/13
to vallamai, தமிழ் சிறகுகள், santhavasantham, mintamil, தமிழ் மன்றம், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

2013/5/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

கலயம் பொன்னா இருக்கணும்னா என்ன அர்த்தம்னு புரியல.  ஒளி/ஒலிப்பதிவுக் குறைபாடு பற்றியதாக இருந்தால்,

அல்லது வகுப்புகளில் நான் பயன்படுத்தும் உரையாடல் மொழியைப் பற்றியதாக இருந்தால், பீஸா, பர்கர் பரிமாறும் உணவுவிடுதிகளிலும், உங்கள் ஊரின் நட்சத்திர விடுதிகளிலும் நல்ல சம்பா அரிசிச் சோறை முத்து முத்தாகப் பரிமாற முடியுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளவும்.  முப்பது வயதுக்குக் கீழ்ப்பட்ட, இன்றைய ஐடி தலைமுறைக்கு எது செரிக்குமோ, எது தன்மயமாகுமோ அதைத்தானே தரமுடியும். :)

வள்ளுவன் என் சமயம் என்ற கோட்பாட்டைக் கொண்ட வேந்தருக்கு ‘அவை அறிதல்’ என்ற அதிகாரம் நினைவுக்கு வரவில்லை போலும்!

Hari Krishnan

unread,
May 19, 2013, 9:37:07 PM5/19/13
to vallamai, தமிழ் சிறகுகள், santhavasantham, mintamil, தமிழ் மன்றம், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

2013/5/20 shylaja <shyl...@gmail.com>
வேந்தன்  என்னசொல்லவரார் என்று புரியவில்லை  ஆனால் எங்களை இயற்கை  ஆசிர்வாதம் செய்கிறது கூடி இருந்து குளிர்ந்தேலோ  என்ற ஆண்டாளின் வாக்கு  மெய்யாகிறது! ஒவ்வொரு சனிகிழமையும்  ராமாயண வகுப்பு முடியும்போது மழை கொட்டித்தள்ளுகிறது..மனமுடன் உடலும் நனைய   வீடு திரும்புகிறோம் என்பது தான் உண்மை!

அதுவும், போன வாரம் திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் ‘இன்று மழை பெய்யும்’ என்று யாஹூ வானிலை அறிக்கை சொல்லும்.  பெங்களூரு வெய்யிலோ, சென்னை வெய்யிலைத் தோற்கடிக்கும்.  வகுப்பைத் தொடங்குவதற்காக வந்தபோது, ஐந்து மணி வரையில் வெளியில் வெய்யில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.  வழக்கமாக மழைக் கோட்டுடன் வரும் ஐயப்பன் கூட, அன்று, ‘இந்த வெய்யிலில் எங்கே மழை பெய்யப் போகிறது’ என்று, மழைக் கோட்டு இல்லாமல்தான் வந்திருந்தான்.  ‘கலைக் கோட்டு முனிவனை அழைத்து வந்தால் மழை பெய்யும்’ என்று உரோமபாதன் சிந்தித்தான்.  அவரையும் அழைத்து வந்தார்கள்; ஊருக்குள் மழை கொட்டு கொட்டென்று கொட்டுவதைப் பார்த்ததும், ‘அவர் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டார்’ என்பதை மன்னன் அறிந்து அவரை வரவேற்க விரைந்தான்.... என்ற பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறோம்.  வெளியே மழை பெய்யும் பேரிரைச்சல்!

வழக்கமாகப் பத்துப் பதினைந்து நிமிடங்களில் ஓய்ந்து போகும் மழை, அன்றிரவு முழுதும் கொட்டியிருக்கிறது.  84 வயதுப் பெரியவர் கல்பட்டு நடராஜன் ஐயா அவர்கள் வந்திருந்தார்.  பெருமழையில், அவர் வீடு திரும்புவதற்கு ஏற்பாட்டை ஒருவழியாகச் செய்தோம்.  நானும் ஐயப்பனும் வீடு திரும்புவதற்குள் தொப்பலாக நனைந்து போனோம்.

நம்பினால் நம்புங்கள்.  இது நடந்தது.  

sk natarajan

unread,
May 19, 2013, 9:51:22 PM5/19/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், santhavasantham, mintamil, தமிழ் மன்றம்
ஒவ்வொரு சனிகிழமையும்  ராமாயண வகுப்பு முடியும்போது மழை கொட்டித்தள்ளுகிறது..மனமுடன் உடலும் நனைய   வீடு திரும்புகிறோம் என்பது தான் உண்மை!

மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா
சிறப்பாக நடைபெறும் இந்த வகுப்பிற்கு கலந்துக் கொள்ளமுடியாதது வருத்தம் தருகின்றது

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
May 19, 2013, 10:32:40 PM5/19/13
to தமிழ் மன்றம், vallamai, தமிழ் சிறகுகள், santhavasantham, mintamil, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
2013/5/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
நான் கம்பனைப்பற்றி பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்து சொன்னேன்

கம்பனை பற்றி பேசும் நீங்கள் பொன் கிண்ணம். நானோ தேங்காய் சிப்பி

அடடா!  அவலத்தை ஒரே வரியில் அவலாஞ்ச் ஆக்கிவிட்டீர்களே!  பனிமழை!  பனிமழை!  

நன்றி வேந்தே.  உங்களுடைய பரிவான சொல்லுக்கு நான் பொருத்தமாக இல்லாவிட்டாலும். 

Hari Krishnan

unread,
May 19, 2013, 10:56:52 PM5/19/13
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் மன்றம், santhavasantham, mintamil, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

2013/5/20 shylaja <shyl...@gmail.com>
வேந்தரே  எங்கள் நகருக்கு  வாரம்   ஒரு மழைபோதும்  மும்மாரியெல்லாம்  வேண்டாம்:):)

தாயாரே!  மாதத்துக்கு நான்கு வாரங்கள் என்பதை மறந்துவிட்டீரோ!  மாத நான்மாரி கேட்கிறீர்களே. :))

Swaminathan Sankaran

unread,
May 20, 2013, 12:48:34 AM5/20/13
to santhav...@googlegroups.com
ஆம். ஆங்காங்கு ஒலிப்பதிவு 'மக்கர்' செய்கிறது. ஆனால் நீங்கள் சொல்கிற படி "ஆண்டி கட்டும் மடத்தில் இவ்வளவு வசதிதான் இருக்க முடியும். ஆண்டி, ஆர்வத்தால் செய்வது." ('One should not look a gift horse in the mouth.')முயற்சி செய்தால் கேட்க முடிகிறது. பெரும்பாலும் சிக்கல் ஒன்றுமில்லை. முழுவதும் கேட்டு, கம்பனையும், கம்ப ராமாயணத்தையும் ரசிக்கவும், புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும்  ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
மிக்க நன்றி.
 
சங்கரன் 
 
 Swaminathan Sankaran

Ramamoorthy Ramachandran

unread,
May 21, 2013, 9:05:26 PM5/21/13
to santhav...@googlegroups.com
ஓரிரு சனிக் கிழமைகளில் அடியேனும் வந்து கேட்பேன் - புலவர் இராமமூர்த்தி 

2013/5/19 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

--

Ramamoorthy Ramachandran

unread,
May 21, 2013, 9:07:41 PM5/21/13
to santhav...@googlegroups.com
ஓரிரு சனிக் கிழமைகளில் அடியேனும் வந்து கேட்பேன்  எனக்குப் பழக்கமான ஒயின் கம்பன் கனிச் சாறுதான் - புலவர் இராமமூர்த்தி 

2013/5/21 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

Hari Krishnan

unread,
May 21, 2013, 11:20:14 PM5/21/13
to santhavasantham, kambara...@googlegroups.com

2013/5/22 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

ஓரிரு சனிக் கிழமைகளில் அடியேனும் வந்து கேட்பேன்  எனக்குப் பழக்கமான ஒயின் கம்பன் கனிச் சாறுதான் - புலவர் இராமமூர்த்தி 

ஆகா!  வாருங்கள்.  பெரியவர்களுடைய பங்கேற்பு பெரிதும் பயன்தரும்.  

(பழக்கமான ஒயின் கம்பன் கனிச்சாறுதானா?  rawmuthee என்ற மின்னஞ்சல் முகவரியைப் பார்த்ததும் rawவாக எதை அருந்தும் மூர்த்தி என்று கேட்கத் தோன்றியது.  பதில் கிடைத்துவிட்டது. :)) )

Hari Krishnan

unread,
May 26, 2013, 9:05:20 AM5/26/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambara...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan


ஏழாம் அமர்வின் பதிவுகள் இங்கே வலையேறியுள்ளன:








ஃபிரான்ஸில் கம்பன் கழகத்தை நடத்தி வரும் அன்பிற்கினிய திரு பெஞ்சமின் லெபோ அவர்கள், வகுப்பிலே கலந்து கொண்டார்.  சுமார் ஒரு மணி நேரம் ஃபிரான்ஸ் கம்பன் கலைக் கழகத்தில் நடந்த முற்றோதலில் பின்பற்றிய முறைகளைப் பற்றியும், பொதுவாகக் கம்பராமாயணத்தோடு தொடர்புள்ள பல செய்திகளையும் கலந்து உரையாற்றினார்.  அவருடைய பேச்சில் பயனுள்ள பல குறிப்புகளும், நாம் இதுவரையில் சென்று கொண்டிருக்கும் பாதை சரியான பாதைதான் என்பதற்கான அடிக்கோடும் கிடைத்தன.  அவருக்கும் அவருடைய துணைவியார் லூஸியாவுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இந்த விழியப் பதிவுகளை அனைவரும் (நேரம் கிடைத்த போதெல்லாம்) பார்த்தும், அந்தப் பக்கத்தில் தங்கள் கருத்துகளை இட்டும் எங்களுக்குப் பயன்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பெங்களூரு கம்பன் கலைக் கழகத்தின் சார்பாக,
ஹரி கிருஷ்ணன்.

Hari Krishnan

unread,
Jun 2, 2013, 10:41:02 AM6/2/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambara...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
எட்டாம் அமர்வு.  விறுவிறுப்பாக திருவவதாரப் படலம் முடிந்து, கையடைப் படலத்தில் திட்டமிட்ட எல்லையைத் தொட்டது.  திரு பெஞ்சமின் லெபோ சுவையைக் கூட்டினார்.  அர்த்தம் பொதிந்த பல வினாக்களை எழுப்பினார்.  உரிய இடங்களில் அவருடைய வினாக்களை நினைவுபடுத்தி விடை சொல்லப்படும் என்று நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  (அவர் நோக்கமும் அதுதானே!) பல்லக்கு சுமப்பதில் பெரிய திருவடி (ஜடாயுவேதான்!) தோள் கொடுத்து உதவினார்.   நல்ல உரையாடலாக அமைந்த இந்த நிகழ்வின் பதிவுகள் இங்கே வலையேறியுள்ளன.






வழக்கம்போல் உங்கள் பார்வைக்காக.

நன்றி.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 2, 2013, 11:26:01 AM6/2/13
to Hari Krishnan, santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambara...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
இதில் ஒரு சிறு மீள்பதிவு :  ( சற்றேறக்குறைய 2 வருடங்களுக்கு முன் கூகிள் பஸ்ஸில் எழுதியது )


அதென்னமோ தெரியலைங்க கம்பர் இராமன் பிறந்த பின் குழந்தை பருவத்தை வர்ணிக்கவே இல்லை. கவிஞர்களுக்கு புகுந்து விளையாடக் கூடிய களமாகிய குழந்தைப் பருவத்தை கம்பர் கண்டுக்கவே இல்லை.


ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை. 101

இப்படி இராமன் பிறந்ததை சொல்றார். அதற்கடுத்துப் பாருங்க அதி வேகமா வளர்ச்சியை காமிச்சுட்டு போய்டறார். நம்ம தமிழ் திரைப்படங்கள்ல ஒரே பாட்டுல ஏழைக் கதாநாயகன் சவால் விட்டு ஜெயிச்சு பெரியாளாகற மாதிரி

அமிர்து உகு குதலையடு அணி நடை பயிலா,
திமிரம் அது அற வரு தினகரன் எனவும்,
தமரமதுடன் வளர் சதுமறை எனவும்,
குமரர்கள் நிலமகள் குறைவு அற வளர் நாள்-

அவ்வளவு தான் தசரதனின் மைந்தர்கள் வளர்ந்துவிட்டார்கள்.

ஆனா இந்தக் குறையை குழந்தைப் பருவத்தைப் பாடாத குறையை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் தீர்த்து வைக்கிறார்.

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டில் இராமனைக் கொண்டுவந்து சீராட்டி இருப்பார்.


எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலைஉண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல
வருமாயன்


என்று பத்து விதமா கோசலை இராமனை பாலுண்ண அழைக்கிறார். என்னப்பா இல்லையா நீ ... வாடா கண்ணா.. ரகு குலம் தழைக்க வந்த நாயகனல்லவா வா ராமா.. என ஆரம்பிச்சுட்டு

மைந்த வருக மகனே இனி வருக

அப்படின்னு போட்டுட்டார். மைந்தனுக்கும் மகனுக்கும் என்னங்க வித்தியாசம் ? இதற்கு வாரியார் ஸ்வாமிகள் அருமையான விளக்கம் குடுத்திருப்பார்.

குழந்தைகளை பாலன்,பிள்ளை, மகன், புத்திரன், குமாரன், புதல்வன், மைந்தன் என பலவகைகளில் அழைப்பார்கள்.

அப்பா என்ன பண்றார்னு தெரியாது. தான் தோன்றித்தனமா அப்படியே இருப்பவன் பாலன். அப்பா வயதாகி ரொம்ப கஸ்டப்பட்டு சம்பாதிச்சும் அதற்கு சற்றும் உதவ எண்ணாமல் அப்படியே இருக்காம் பாருங்க அவன் பிள்ளை. அப்பனுக்கே புத்தி சொல்லும் அறிவு வாய்ந்தவன் குமரன். அப்பனுக்கு கடன் இருந்தா அதையும் ஏற்று குடும்பத்தை குறைவில்லாமல் நடத்துபவன் மகன். பெற்றோர் சொல் கேட்டு, இருக்கும் காலத்தில் அவர்களை பார்த்துக் கொள்பவன் புதல்வன். பெற்றோர்களுக்கு வாழும் காலம் நன்றாக கவனித்து மற்றும் மறைந்த பின்பும அவர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து அவர்கள் புத் என்ற நரகத்தை அடையாமல் செய்பவன் புத்திரன்.

ஆனால் தான் வாழும் குடும்பம், தன்னைச் சார்ந்தவர்கள் நண்பர்கள் சுற்றத்தார்கள் என எல்லாவற்றையும் காத்து உய்விப்பவன் மைந்தன்.

ஆனா பாருங்க அருணகிரி நாதர் எழுதறது எல்லாம் முருகனைப் போற்றி இங்க நடுவில இராமன் எங்க வந்தான் ?

மேலே சொல்லிய அத்தனை குணங்களையும் கொண்ட இராமனின் மருமகனான முருகான்னு அவர் பாட்டு எழுதறார். சைவ வைணவச் சண்டை உச்சத்தில் இருந்த காலத்தில் இரண்டையும் இணைத்து சைவமும் வைணவமும் ஒண்ணு.. அது அறியாதவங்க வாயில மண்ணுன்னு சொல்லாம சொல்லிட்டுப் போனவர்தானே அருணகிரிநாதர். திருவாசகம் மட்டும் இல்லைங்க திருப்புகழுக்கு உருகாதாரும் வையத்தில் உண்டோ எனக் கேட்க வைக்கும் பாடல்கள் திருப்புகழில் கிடைக்கிறது.

Kaviyogi Vedham

unread,
Jun 2, 2013, 9:59:05 PM6/2/13
to santhavasantham
பலே பலே ஐயப்பன்!.. இவ்வளோ பரம ரசிகரா இருப்பீர் என்று தெரியாதே!
 நம்ம அருணகிரிதவிர ஆழ்வார்கள் தாம் ராமனைக்குழந்தையாக ரொம்பக் கொஞ்சியிருக்காங்க..
 நம்ம ஹரியோ இல்லை சவுந்தரோ தம்பிகளா1 அத்தை இங்கே அவுத்து விடுங்களேன்..
ரசிப்போம்மே!
யோகியார்












வாழ்க அனைவரும் வளமுடனே என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar),
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115
cel. no.95000-88528


2013/6/2 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---

Hari Krishnan

unread,
Jun 9, 2013, 9:50:57 AM6/9/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambara...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

ஒன்பதாம் அமர்வு வெகு அமைதியாகவும் நேர்த்தியாகவும் நடந்தேறியது.  கதையம்சத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய குறிப்புகள், ஆயுதங்களின் ஆயத்த-பிரயோக ஸ்தானங்கள், ஸ்ரீராமன் எந்தக் கரத்தில் எப்போதும் வில்லேந்தியிருந்தான், இடது கையால் அம்பைப் பிரயோகிக்கக்கூடிய ஒரே வீரன் யார்... போன்ற பல செய்திகளோடு, தாடகை இராவணனுக்கு எந்த வகையில் பாட்டி முறையாகிறாள் என்ற முடிச்சையும் அவிழ்க்க முடிந்தது.  மூல ராமாயணத்தில் இல்லாத செய்தி இது.  பல பதிப்புகளில் முக்கியமான பகுதியை, இடைச்செருகல் கணக்கில் ஒதுக்கி விட்டார்கள்.  வைமுகோ பதிப்பில் மட்டும் மூலத்தோடு சேர்ந்து இடம் பெற்றுள்ள ஒரு சில பாடல்களின் மூலமாக, தாடகைக்கும், இராவணனுடைய தாய்வழிப் பாட்டனான சுமாலிக்கும் எவ்வாறு உறவு முறை அமைகிறது என்பதை விளங்கிக் கொண்டு, மேலே நகர்ந்தோம்.  திருவவதாரப் படலத்தையும், தாடகை வதைப் படலத்தையும் முடித்தோம்.  பேராசிரியை ராஜம் அவர்கள் கொடுத்த குறிப்புகள், அமர்வைச் செவ்வையாக்க உதவின.  அவருக்குத் தனிப்பட்ட நன்றி.

இராமனுடைய பாத்திரப் படைப்பின் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய குறிப்பும் இந்த அமர்வில் இடம் பெற்றது.  உங்கள் பார்வைக்காக இங்கே சமர்ப்பிக்கிறோம்:







இந்த மடலைப் பலருக்கு அனுப்புகிறோம்.  யாருக்காவது இது எரிதமாகப் பட்டதென்றால் அருள்கூர்ந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அவர்களைப் பட்டியலிலிருந்து விடுவித்து விடுகிறோம்.

கூடிய விரைவில் மிக முக்கியமான நல்ல செய்தியுடன் வருகிறோம். 

Ramamoorthy Ramachandran

unread,
Jun 12, 2013, 5:30:54 AM6/12/13
to santhav...@googlegroups.com
வணக்கம் அடியேன் புலவர் இராமமூர்த்தி . கம்பராமாயண முற்றோதலில் பங்கேற்க விரும்புகிறேன்  இடம் நேரம் நாள் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்  இந்த இழையிலேயே!  

2013/5/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Ramamoorthy Ramachandran

unread,
Jun 12, 2013, 6:32:09 AM6/12/13
to santhav...@googlegroups.com
புலவர் இராமமூர்த்தி செல்பேசி எண் 09444075112

2013/6/12 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 17, 2013, 10:09:11 AM6/17/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

தொடங்கி விளையாட்டுப் போல் பத்து வாரங்கள் முடிந்துவிட்டன.  பத்தாம் அமர்வில் வேள்விப் படலம் முழுமையையும், அகலிகைப் படலத்தின் முதல் முப்பது பாடல்களையும், திட்டமிட்டபடி முடித்தோம்.

விஸ்வாமித்திரர் இராமனுக்கு அஸ்திரங்களை வழங்குவதால், அம்புக்கும் அஸ்திரத்துக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி, பல நுட்பமான யுத்த விவரங்களைப் பேசினோம்.  வலதுகைப் பிரயோகம் உள்ள வில்லாளி,  ஈட்டியும் அம்பும் பெரும்பாலும் தக்கையான மரத்தால் அமைந்த உடலையும், உலோக முனையையும் கொண்டிருப்பதன் அவசியம்; கனமற்ற உலோக அம்புகளை யார்யார் பயன்படுத்தினார்கள்; அம்புகளில் பெயர் எழுதி வைக்கக் காரணம் என்ன போன்ற பல விவரங்களை அலச முடிந்தது.

வழக்கம்போல் நிறைவாக வகுப்பு முடிவடைந்தது.  உங்கள் பார்வைக்காக ஆறு பகுதிகளில் இங்கே:

C.R. Selvakumar

unread,
Jun 17, 2013, 6:15:32 PM6/17/13
to தமிழ் மன்றம், santhavasantham, vallamai, தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
என்ன அருமையாக இலக்கிய வேள்வி நடத்துகின்றீர்கள்!!

வாழ்க!! வாழ்க!!

அன்புடன்
செல்வா


2013/6/17 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Hari Krishnan

unread,
Jun 30, 2013, 11:16:25 PM6/30/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

29.6.2013 அன்று நடந்த பன்னிரண்டாவது அமர்வின் பதிவுகள், ஐந்து பகுதிகளாக.  மிதிலைக் காட்சிப் படலத்தில் முதல் 85 பாடல்கள் என்று எல்லை குறித்த போதே, இதை முடிக்க முடியாது என்ற அச்சம் எனக்குப் பிறந்துவிட்டது.  எவ்வளவு பாடல்கள் என்ற எல்லையைத் தொடுவதைக் காட்டிலும், இதுபோன்ற கனமான பகுதிகளை முழுமையாகப் பார்க்க வேண்டுமல்லவா!  அதுவும் சீதையும் ஸ்ரீராமனும் முதன்முறையாகப் பார்த்துக் கொள்ளும் ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்’ உள்ளிட்ட பகுதியை!

சீதையை வர்ணிப்பது என்று தொடங்கிவிட்டால், கம்பன் ராக்கெட்டில் ஏறிவிடுவான்.  அவனிடம் ஒரு புதிய பரவசம் தொற்றிக் கொள்ளும்.  அந்தப் பரவசம் வாசிப்பவனைத் தொற்றிக் கொள்ளாமல் என்ன செய்யும்!  அதுவும், சீதைக்கு ஒரு entry கொடுக்கிறான் பாருங்கள் கம்பன், நண்பர் சொக்கன் ‘ராமனுக்கே கூட இப்படிப்பட்ட என்ட்ரி இல்லையே’ என்றார்.  ‘அவனா!  அவன் இராமனை ‘எங்கள் நாயகன்‘ என்று குறிப்பிடுவான்.  ‘எம்மை ஆள்பவன்’ என்பான்.  சீதையைப் பேசும்போது?  இந்தப் பதிவுகளில் கம்பனுடை சீதைப் பித்து தொடங்குகிறது.  (வேடிக்கையாக, இராமனிடத்தில்கூட, இராமன் என்பதற்காக இல்லாமல், ‘சீதை கேள்வன்’ என்பதற்காகத்தான் இப்படி உருகுகிறானோ என்று தோன்றுகிறது’ எனக் குறிப்பிட்டேன்.)

மிதிலைக் காட்சிப் படலத்தில், நகர வர்ணனையாக வரும் முதல் நாற்பது பாடல்களில் உள்ள நுட்பங்களை விவரிப்பதற்கே பாதி நேரம் செலவாகி விட்டது.  இவற்றைத் தொடர்ந்து பதினைந்தே பாடல்கள் படிக்கத்தான் நேரமிருந்தது.  ஐம்பத்தைந்து பாடல்கள்--பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலால், முப்பது நிமிடம் தாமதமாகத் தொடங்கி, முதல் அரை மணி நேரத்தை இழந்ததால்) இரண்டரை மணி நேரம்.

கேளுங்கள்.  இது உங்களுக்காக: 

Hari Krishnan

unread,
Jul 7, 2013, 10:38:04 PM7/7/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, sankar Venkatraman
பதின்மூன்றாம் அமர்வின் பதிவுகளை அனுப்புகிறோம்.  சென்ற வாரம் முடிக்காமல் நிறுத்தியிருந்த இராமனைக் கண்ட சீதையின் காதல் நினைவுகளும், அதற்குப்பின் சதாநந்த முனிவர் (இவர் அகலிகை-கோதமர்களின் மகன்; ஜனகரின் குரு) விஸ்வாமித்திரருடைய முன்கதையைச் சொல்லும் பகுதி வரையில் படித்து முடித்தோம்.  நிர்ணயித்த எல்லையான 125ம் பாடல், குளகச் செய்யுளாக இருந்தபடியால், 126ம் பாடலுடன் முடித்தோம். 

முதல் பாதி உணர்ச்சிகரமாகவும் அடுத்த பாதி விஸ்வாமித்திரர், கௌசிகி, ரிசிகன், அம்பரீடன், சுநச்சேபன் என்ற பலரைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.  ஒருவருக்கொருவர் என்ன வகையில் தொடர்பு அல்லது உறவு என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டு இந்த வார அமர்வை முடித்திருக்கிறோம்.  கவித்துவம் ததும்பும் முதலிரண்டு பகுதிகளும், ஆய்வுநோக்கில் அலசப்பட்ட பிற்பகதிகளும், உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளன:

Karuannam Annam

unread,
Jul 8, 2013, 6:49:53 AM7/8/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, sankar Venkatraman
பகுதி மூன்று பார்த்தேன். சிறப்பான நிகழ்வு. திருவாளர்கள் ஹரிகி,ஐயப்பன்,ஷைலஜா,சொக்கன் ஆகியோர் புகைப்படங்களை முன்பு பார்த்துள்ளேன். வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்து பல பாடல்களை நினைவிலிருந்து கூறி ஹரிகி அவர்களுடன் சேர்ந்து நிறைவான விளக்கமளித்தவர் பற்றி விவரம் அறிய ஆவல்.

திரு ஐயப்பனும் பிறரும் உற்சாகமாகப் பங்குகொள்கிறார்கள்.

பேரரசு மறையும்பொழுது சிற்றரசுகள் எழுவது, படுக்கை வெந்து ஆயிரம் ஆயிரம் மாற்றம், நெருப்பைச் சுடும் மலர் என்று அனுபவித்துப் படிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யுடியூப் தரவிறக்கம் நேரமெடுப்பதால் பிற பகுதிகள் பார்க்க இயலவில்லை. நூலகத்தில் சேமிக்கப்பட்ட புத்தகம் போல பதிவுகள் பிற்பாடு எவருக்கும் உதவும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/7/8 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Karuannam Annam

unread,
Jul 8, 2013, 1:33:43 PM7/8/13
to Jataayu, santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, sankar Venkatraman
வணக்கம் திரு ஜடாயு. இடது பக்கத்தில் வேட்டி, ஊதா சட்டையில் மெலிந்த உடல்வாகும் தெளிந்த உரையும் கொண்ட நண்பரைக் குறிப்பிட்டேன். அவர் தாங்களா?

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/7/8 Jataayu <jata...@gmail.com>

வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தவர்  புலவர் ராமமூர்த்தி. கம்பன் குறித்து சில நூல்களும் எழுதியிருக்கிறார். அவரைப் பற்றிய பிற விவரங்களை ஹரிகி தருவார்.

// திரு ஐயப்பனும் பிறரும் உற்சாகமாகப் பங்குகொள்கிறார்கள். // 

அவர்  அன்று வரவே இல்லையே..  நீங்கள் வேறு ஒருவரைச் சொல்கிறீர்கள் என்றூ நினைக்கிறேன்.


2013/7/8 Karuannam Annam <karu...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 14, 2013, 8:24:25 AM7/14/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
கம்பராமாயண முற்றோதல் பதினான்காம் அமர்வின் பதிவை அனுப்பி வைக்கிறோம்.  மிதிலைக் காட்சிப் படலத்தில் மிகுந்திருந்த பாடல்களையும், குலமுறை கிளத்துப் படலம் முற்றிலுமாக முடித்தோம்.  மாந்தாதா போன்ற அரசர்களுடைய பெயர்க்காரணம் இன்னதென்று தெரியவிலலை என்று வைமுகோ குறித்திருக்கும் கதை, பாகவத மகாபுராணத்தில் இருப்பதைச் சுட்டி, மாந்தாதா என்ற பெயரின் காரணம் முதலான சில--வைமுகோ உரையில் இல்லாத--பொருள்களைப் பேசினோம்.

அடுத்த வாரம் கார்முகப்படலம் தொடங்கப் போகிறது.  அதில் முதல் பாடலை மட்டும் படித்து இந்த வாரத்தை முடித்தோம்.  போக்குவரத்து நெரிசலின் காரணமாக, வகுப்பு அரைமணிநேரம் தாமதமாகத் தொடங்கியது.  இந்த அரைமணிநேரம் இருந்திருந்தால், திட்டமிட்டபடி, கார்முகப்படலத்தில் முதல் 20 பாடல்களையும் முடித்திருக்க முடியும்.

However, a pleasure delayed is in fact intensified by its anticipation and the time spent in waiting for it.  :)

அடுத்த வாரம் சந்தி்ப்போம்.  இந்த வாரப் பதிவுகள் இங்கே:

ஜீவ்ஸ்

unread,
Jul 18, 2013, 10:48:29 AM7/18/13
to mint...@googlegroups.com, santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan


On Sunday, July 14, 2013 5:54:25 PM UTC+5:30, Hari wrote:
கம்பராமாயண முற்றோதல் பதினான்காம் அமர்வின் பதிவை அனுப்பி வைக்கிறோம். 

முதல் இரண்டு வாரம் ஏதோ வீட்டுப் பிரச்சினையால் தடைப் பட்டு, கடந்த நான்குவ வாரமாக உடல்நிலைக் காரணமாக வகுப்புக்குச் செல்ல முடியவில்லை. இந்த வாரமேனும் இராமன் அழைப்பானா தெரியவில்லை. ( ஆனால் வழக்கம் போல்  அன்புடன் ஹரியண்ணா அழைப்பார். )

Hari Krishnan

unread,
Jul 21, 2013, 11:00:49 AM7/21/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

பதினைந்தாம் அமர்வில், கார்முகப் படலத்தை முடித்தோம்.  உணர்ச்சிக் கலவை குமிழியிடும் அறுபத்தாறு பாடல்களைப் படித்து முடிக்க மூன்று மணிநேரம் போதவில்லைதான்.  பங்கேற்ற ஒவ்வொருவரும் தன்னை மறந்த நிலையை அடைந்திருப்பதைக் காணலாம்.

இராமன் வில்லை இறுத்த காட்சி; அந்த வினாடிக்கு முன் வினாடி வரையில் ஒவ்வொரு திருகு திருகாக உணர்ச்சிக் கவையைத் திருகிக் கொண்டே வந்து, உச்சகட்டத்தைத் தொட்டு, அடுத்த பாடலிலிருந்து எதிர் திசையில் பாயும் உணர்ச்சிகளில் மனத்தை முழுக்காட்டி....

இத்தனைக்கும் நடுவில், அயோத்தியில் தசரதனுக்கும் கேட்ட வில் முறிந்த ஓசையைக் கூட கேட்க இயலாதவளாகி, தன்னில் தான் லயித்த வண்ணம், தன்னுடைய இராமனுடன் மானசீகமாக உரையாடிய வண்ணம் சீதை பேசும் தானனான தந்தனான தனனான தந்தனா என்ற காய்ச்சீர் அணிவகுப்பில் துள்ளிப் பாயும் கலிவிருத்தங்கள்... அவளிடம் நீலமாலை வந்து வில் இறுபட்ட செய்தியைச் சொல்வது.. அந்தச் சமயத்தில் நீலமாலையின் மெய்ப்பாடுகள்... ‘ஆம் அவனே கொலாம்’ என்று ஐயம் நீங்கியும், (இதற்குப் பின்வரும் காட்சிகளில், அவனா, அவன் இல்லையா என்று தடுமாறிக் கொண்டும்) உள்ள நிலையில் சீதையும்; மகிழ்ச்சியில் திளைக்கும் சனகன், திருமணத்தை இன்றே, இப்போதே நடத்திவிடலாமா அல்லது தசரதனும் வந்து சேர்ந்தபின் நடத்தலாமா என்று துடிக்கத் தொடங்குவதுமாக பொழுது கழிந்ததே தெரியவில்லை.

 தான் இறுத்த வில், தனக்குக் கொண்டுவரப் போகும் மணவாட்டி யாரோ என்பதையும் அறியாமல், தனக்குள் முளைத்திருக்கும் காதலை, இலக்குவனிடம்கூடச் சொல்லாமல், ‘அவள்தான் இவளா’ என்று எண்ணியெண்ணிச் சோரும் இராமனை, அடுத்தடுத்த வாரங்களில் காண இருக்கிறோம்.  அடுத்த வாரம் எழுச்சிப் படலம் தொடங்கி இன்னும் முன்னூறு பாடல்களுக்குப் பிறகுதான் திருமணக் கோலம் தென்படவே போகிறது.  முற்றோதல் என்பதனால், ஒரு பாடலையும் விடாமல் ஓதிய பிறகுதான் அந்த இடத்தை அடையப் போகிறோம்.  (திருமணம் எப்போது என்று இப்போதிலிருந்தே உடன் ஓதுபவர்ள் துடிக்கத் தொடங்கி விட்டார்கள்.)

பதிவுகள், உங்கள் பார்வைக்காக:

Hari Krishnan

unread,
Jul 21, 2013, 11:02:43 AM7/21/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

2013/7/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

அடுத்த வாரம் சந்தி்ப்போம்.  இந்த வாரப் பதிவுகள் இங்கே:


மன்னிக்கவும்.  ஆறு பகுதிகளுக்கான தொடுப்புகள் சரிவர ஒத்தி ஒட்டப்படவில்லை.  முழுமையான வரிசை இங்கே:

Hari Krishnan

unread,
Jul 28, 2013, 4:37:10 AM7/28/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

எழுச்சிப் படலத்தின் 82 பாடல்களையும் ஓதி, பொருள் அறிந்து முடித்தோம்.  தசரதனும், அவன் சேனையும் மக்களும் மிதிலைக்குக் செல்வதாற்காகக் கிளம்பியிருக்கிறார்கள்.  (தசரதன் கிளம்புவதற்கு முன்னாலேயே, சேனையின் முதல் பந்தி (அல்லது வரிசை) மிதிலையை அடைந்துவிட்டது!)  வழியில் அயோத்தி மக்கள் தமக்குள் பேசிக்கொள்வதும், இளைஞர்களின் சீண்டலும், வழிநடைக் காட்சிகளுமாக, கவிதை ரகளை செய்கிறது.

பற்பல சமூக வழக்கங்கள், நடைமுறைகளைப் பற்றியதற்கான--பொதுவாகக் கண்ணில் படாமல் நழுவிவிடக்கூடிய--செய்திகள் நிறைய கிடைத்தன.  சமணர்களில் ஒரு பிரிவினர், தாங்கள் நடக்கும் பாதையை மயிற்பீலியால் பெருக்கிக் கொண்டே போவார்கள்.  ‘மூக்கிலிருந்து கையை எடுக்காத அந்தணர்கள், குதிகால் பூமியில் படாமல், புழு பூச்சிகளை மிதித்துவிடக் கூடாது என்று, நுனி விரல்களால் நடக்கும்’ ஒரு ஆச்சரியமான செய்தியை உள்ளடக்கியிருக்கும் பாடலொன்றும் அகப்பட்டது.  பலவிதமான செய்திகளும், நயம் நிறைந்த கவிதையும் பெருகித் ததும்பும் இடம்.  இனி அடுத்த மூன்று வகுப்புகளுக்கு இந்த வழிநடைச் செலவுதான் பிடித்துக் கொள்ளப் போகிறது.  கம்பன், கவி ராட்சசனாக உருவெடுக்கும் இடம் இது.  

எதிர்கொள் படலத்தை அடைய இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என்று நினைக்கிறோம்.  இந்த வாரத்துப் பதிவுகள் இங்கே, உங்களுக்காக:

Hari Krishnan

unread,
Aug 4, 2013, 10:22:48 PM8/4/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, sankar Venkatraman

பதினேழாம் அமர்வில் வரைக்காட்சிப் படலம் முழுவதையும் முடித்துவிடத் திட்டமிட்டிருந்தோம்.  பெங்களூருவின் சாலை நெரிசலால், வகுப்பு தொடங்க அரைமணி நேரம் தாமதமாகி விட்டது.  எனவே திட்டமிட்ட 77 பாடல்களுக்கு பதிலாக 50 பாடல்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.  மீத 27 பாடல்களை விரைவாகப் பார்த்திருக்க முடியும்தான்.  ஆனால் அவற்றில் ஒன்பது பாடல்கள் யமக வகையைச் சேர்ந்தவை.  பிரித்துப் பிரித்து விளக்க அதிக நேரம் பிடிக்கும் என்பதால், அடுத்த வாரத்துக்கு ஒத்திப் போட்டிருக்கிறோம்.  இன்னுமும் மூன்று அமர்வுகளுக்குள் எதிர்கொள் படலத்தை எட்டிவிட வேண்டும் என்பது அவா.  இறைச் சித்தம்.

இம்முறை இரண்டரை மணிநேரமே நடத்த முடிந்ததால் ஐந்து பகுதிகளாக வழங்கியுள்ளோம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையினர், ஒவ்வொரு பகுதியையும் விடாமல் பார்த்து வருவது உற்சாகமளிக்கிறது.  அவ்வப்போது தங்கள் கருத்துகளையும்--மாற்றுக் கருத்து, மேல்விளக்கம், அல்லது அடுத்த வகுப்பில் விடையளிக்கும் வணணமாகக் கேள்விகள்--எதுவாயினும் அனுப்பினால் இந்த முயற்சி மேலும் பயனுடையதாக அமையும்.

பதினேழாம் அமர்வு, வரைக்காட்சிப் படலத்தில் முதல் ஐம்பது பாடல்கள் வரை இங்கே:







இந்த வைப்பு முறை வைமுகோ பதிப்பை ஒட்டியது.  சில பதிப்புகளில் இந்தப் படலத்தை சந்திர சயிலப் படலம், வரைக்காட்சிப் படலம் என்று இரண்டு படலங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 8, 2013, 7:08:12 AM8/8/13
to vallamai, Jataayu B, Hari Krishnan, santhavasantham, mintamil, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, sankar Venkatraman



2013/8/5 Hari Krishnan <hari.har...@gmail.com>


பதினேழாம் அமர்வு, வரைக்காட்சிப் படலத்தில் முதல் ஐம்பது பாடல்கள் வரை இங்கே:



முதல் பகுதி பார்த்தேன். ஏழிலைப் பாலை, அங்குசம் நிமிரக் கூடாது என்பவை பற்றி திரு ஹரிகி விளக்கம் மூலம் அறிந்தேன்.
கீழ்க்கண்ட பாடலோடு ஐந்து பாடல்களை வாசித்த இளைஞர் சொற்களை ல,ள,ழ உச்சரிப்புடன் அருமையாக வாசித்தார். கம்பனில் இளைஞர்கள் தோய்ந்து படிப்பதைக் காணும்போது வாழையடி வாழையாகத் திருக்கூட்டம் வளரும் என்ற நம்பிக்கை வருகிறது.

 ‘தெருண்ட மேலவர் சிறியவர்ச்
   சேரினும். அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்’
   எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும். பொன் உருள்
   உரைத்து உரைத்து ஓடி.
இருண்ட கல்லையும் தன் நிறம்
   ஆக்கிய - இரதம்.
இரதத்தின் சிறப்பை மட்டும் சொல்லியிருந்தால் கம்பன் பாட்டுச் சிறந்திருக்காது. அதனோடு சேர்த்து கற்றறிந்த மேலவர் உரைத்து மற்றவர் அறியாமையை நீக்குவர் என்பதை இணைத்தபோது கல்வியில் பெரியன் கம்பன் ஆகிறான்.
பெங்களூர் முற்றோதல் உருள்தொறும் இணையத்தில் நிலைபெற்றுக் கண்டவரைச் சிறக்கச் செய்யும் என்பது உறுதி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 

Hari Krishnan

unread,
Aug 8, 2013, 7:46:25 AM8/8/13
to சொ. வினைதீர்த்தான், vallamai, Jataayu B, santhavasantham, mintamil, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, sankar Venkatraman

2013/8/8 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

முதல் பகுதி பார்த்தேன். ஏழிலைப் பாலை, அங்குசம் நிமிரக் கூடாது என்பவை பற்றி திரு ஹரிகி விளக்கம் மூலம் அறிந்தேன்.
கீழ்க்கண்ட பாடலோடு ஐந்து பாடல்களை வாசித்த இளைஞர் சொற்களை ல,ள,ழ உச்சரிப்புடன் அருமையாக வாசித்தார். கம்பனில் இளைஞர்கள் தோய்ந்து படிப்பதைக் காணும்போது வாழையடி வாழையாகத் திருக்கூட்டம் வளரும் என்ற நம்பிக்கை வருகிறது.

உங்களைப் போன்றோர் ஆசி எப்போதும் வேண்டும் ஐயா.  வாய்விட்டுப் படிக்கும் பழக்கத்தைத் திணித்தாவது ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தொடங்கும்போது நினைத்தேன்.  ஆனால் இப்போதெல்லாம், ஒவ்வொருவரும் தன் முறைக்காகக் காத்திருக்கிறார்கள்.  புதிதாக வருபவர்கள் முதல் சுற்றில் தயங்கினாலும், அடுத்த சுற்றுக்கு ‘நான், நான்’ என்று ஆர்வமாக வாங்கிப் படிக்கிறார்கள்.  இதை மட்டும் பரவச் செய்துவிட்டால் போதும்.  விளக்கங்கள் எல்லாம் கொஞ்ச தூரத்துக்குத் துணைவரும்.  பால காண்டம் முடியும் தருவாயில் பல சுய முடுக்கிகளை எதிர்பார்க்கிறேன்.

உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி பலிக்கும்.   கம்பன் துணையிருக்கிறான். 

Hari Krishnan

unread,
Aug 9, 2013, 1:24:58 AM8/9/13
to vallamai, தமிழ் சிறகுகள், சொ. வினைதீர்த்தான், Jataayu B, santhavasantham, mintamil, தமிழ் மன்றம், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, sankar Venkatraman

2013/8/9 Madhu mitha <madhumi...@gmail.com>
நேரில் வந்து நேரடியாக கம்பராமாயண ரசம் சுவைக்க விருப்பம். காலம் அனுமதித்தால் இந்த வாரம் வரலாமென்றிருக்கிறேன். 15 - 18 பெங்களூரு வாசம்.

எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து இங்கே எப்படி வரவேண்டும். எத்தனை மணிக்கு அங்கே இருக்க வேண்டும்.

அங்கிருந்து அருகில்தான்.  ஷைலஜாவைக் கேளுங்கள்.  சரியானபடி வழி சொல்வார்.   மாலை நான்கு மணிக்குத் தொடங்கி ஏழு மணிக்கு முடிகிறது.  வாருங்கள்.  மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம்.

Hari Krishnan

unread,
Aug 11, 2013, 10:46:09 PM8/11/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

கடந்த சனிக்கிழமை பதினெட்டாம் அமர்வு நடந்தேறியது.  Long-weekend எனப்படும் தொடர்ந்துவந்த விடுமுறைகளால் இம்முறை அமர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை குறைந்தே இருந்தது என்றாலும், பங்கேற்றவர்களின் மனம் நிறைந்தே இருந்தது என்பதை ஒவ்வொருவரும் சொன்னார்கள்.  எழுச்சிப் படலத்தில் சென்ற அமர்வில் முடிக்க முடியாமல் நின்ற மிகுதிப் பாடல்களையும், பூக்கொய் படலம் முழுமையையும் முடித்தோம்.

கம்பன் இயற்றிய யமகச் செய்யுள்கள், எளிமையிலும் எளிமையாகப் படைக்கவும் வல்லேன்; சிக்கலுக்குச்  சிக்கலைச் செய்யவும் வல்லேன் என்று கவி சவால் விடுவதைக் காட்டுகின்றன.  முதலிரு பகுதிகளில் இந்த யமகச் செய்யுள்களின் விளக்கங்கள் இடம் பெறுகின்றன.  

பூக்கொய் படலம்.  பூக்களைக் கொய்வதைப் பற்றி எவ்வளவுதான் கற்பனை செய்துவிட முடியும்?  விதவிதமான கற்பனைகளையும் காட்சிகளையும் படைக்கிறான் கவிசக்கரவர்த்தி.  அடுத்த அமர்வில் இரு படலங்களை முடிக்கலாம் என்பது நம்பிக்கை.  ஆக, இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் பால காண்டம் பூர்த்தியாகும்.  முதல்படியைக் கடக்கப் போகின்றோம் என்ற நம்பிக்கையும் பெருமிதமும் தோன்றியுள்ளன.  இணையத்தில் பார்வையிட்டுப் பங்கேற்பவர்களின் ஆசியால், இந்த முற்றோதல், முழுமையாய் நடந்தேற கம்பன் துணையிருப்பான்.

இந்த அமர்வின் பதிவுகள் உங்கள் பார்வைக்காக:

Hari Krishnan

unread,
Aug 18, 2013, 7:47:45 AM8/18/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan
கம்பராமாயண முற்றோதலின் இந்த வார அமர்வு, என் வீட்டில் நடைபெற்றது. புனல் விளையாட்டுப் படலத்தை முடித்தோம். உங்கள் பார்வைக்காகப் பதிவுகள் இங்கே:





sankara dass nagoji

unread,
Aug 23, 2013, 7:28:18 AM8/23/13
to santhav...@googlegroups.com, vallamai, Ramanan Isaikkavi, rugan arya
அருமை ஹரி அவர்களே. என்னிடம் வை மூ கோ வின் உரை உள்ளது. படிக்க சற்றுக் கடமுடா என்று இருக்கிறது. மு வ , கல்கி இவர்களின் நடை போல் மிக எளிதான கம்பன் உரை இருக்கிறதா? சொல்லவும். விரிவாகவும் வேண்டும், எளிதாகவும் வேண்டும்.
-சங்கர தாஸ் 

Hari Krishnan

unread,
Sep 8, 2013, 8:27:21 AM9/8/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

இருபதாம் அமர்வின் பதிவுகளை அனுப்ப மறந்து விட்டேன்.  திரு மகேஷ் இல்லத்தில் நடைபெற்ற இருபதாம் அமர்வில் உண்டாட்டுப் படலம், எதிர்கொள் படலம் ஆகிய இரு படலங்களையும் முடித்து, முதன்முறையாக ஒரு அமர்வில் நூறுக்கு அதிகமான பாடல்களை முடித்தோம்.  ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெற்ற இந்த அமர்வின் சுட்டிகள் இவை:


http://www.youtube.com/watch?v=5hjkM7O0FwI       பகுதி 2

http://www.youtube.com/watch?v=iAr4kOt7lXc         பகுதி 3


இருபத்தோராம் அமர்வு நேற்று நடைபெற்றது.  உலாவியல் படலத்தையும், கோலங்காண் படலத்தின் ஒரு பகுதியையும் முடித்திருக்கிறோம்.  எனவே, அடுத்த வாரம் கடிமணப் படலம் தொடங்குகிறது!

இந்த வாரப் பதிவுகள் இங்கே:





அடுத்த வாரம் கடிமணப் படலம் தொடங்கும்.  முடிவதற்கு அதற்கடுத்த வாரம் தேவைப்படும்.  அதற்கும் அடுத்த வாரத்தில் பரசுராமப் படலமும் பாலகாண்டமும் ஒருங்கே முடிவடையும்.

கம்பராமாயணப் புத்தகத்தோடு அமர்ந்து இந்தப் பதிவுகளைப் பார்த்தால், வகுப்பில் பங்குபெற்ற அனுபவம் கிட்டும்.  உங்கள் கருத்துகள்--விமரிசனங்கள், உரை மாறுபாடுகள், கூடுதல் நயங்கள் எல்லாவற்றையும் வரவேற்கிறோம்.

Hari Krishnan

unread,
Sep 28, 2013, 8:43:24 AM9/28/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

முற்றோதலின் இருபத்திரண்டு, இருபத்து மூன்றாம் அமர்வுகளின் பதிவுகளை வலையேற்றுவது மற்ற பணி நெருக்கடிகளால் தள்ளிப் போய்விட்டது.

இருபத்திரண்டாம் அமர்வில் நான் பங்குபெற முடியவில்லை.  சென்னை சென்றிருந்தேன்.  அன்று செய்யப்பட்ட பதிவுகளில் ஐந்து பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகளும் விடியோ பதிவாகவும், மீத மூன்று பதிவுகளும் ஆடியோ பதிவுகளாகவும் பதியப்பட்டுள்ளன.  கோலங்காண் படலத்தின் மீதப் பகுதியும், கடிமணப் படலத்தில் முதல் நாற்பது பாடல்களும் இதில் அடங்கும்.  விடியோ பதிவுகளை வலையேற்றிவிட்டேன்.  ஆடியோ பதிவுகளை யூட்யூப் முறையில் விடியோவாக மாற்றிய பிறகுதான் வலையேற்ற முடியும்.  அடுத்த வாரத்துக்குள் இந்தப் பகுதிகளை வலையேற்ற முடியும் என்று நம்புகிறேன்.

இருபத்து மூன்றாம் அமர்வில் கடிமணப் படலம்.  சீதா கல்யாண வைபோகம் சிறப்புற நடந்தேறியது.  நான்கு பகுதிகளாக வலையேறியுள்ளன.

இப்போதைக்கு இருபத்திரண்டாம் அமர்வின் முதலிரு பகுதிகள் மட்டுமே வலையேறியுள்ளன.  மீதப் பகுதிகள் வலையேறியதும் சுட்டிகளைத் தருகிறேன்.

இன்று இருபத்து நான்காம் பதிவில் பரசுராமப் படலத்துடன் பாலகாண்டம் முற்றுப் பெற்று, அயோத்தியா காண்டத்தில் மந்திரப் படலத்தின் முதல் இருபத்தோரு பாடல்களுடன் நிறைவேறியது.  மீதம், அடுத்த வாரம் ஓதப் பெறும். 

இருபத்திரண்டு, இருபத்து மூன்றாம் அமர்வுகளின் பதிவுகளுக்கான சுட்டிகளை இங்கே தருகிறோம்.  இருபத்து நான்காம் பதிவு வலையேறுவதற்கான ஆயத்த நிலையில் உள்ளது.  வலையேறியதும் சுட்டிகளைத் தருகிறோம்.




Three parts of audio remain to be uploaded





பதிவுகளில் பார்வையாளர் நடமாட்டம் அதிகரித்தபடி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.  உங்கள் எல்லோருடைய ஆதரவுக்கும் மிக்க நன்றி.

Hari Krishnan

unread,
Sep 29, 2013, 7:27:22 AM9/29/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S


பரசுராமப் படலத்தையும் பாலகாண்டத்தையும் முடித்து, அயோத்தியா காண்டத்தின் மந்திரப் படலத்தில் முதல் இருபத்தோரு பாடல்கள் வரையில் ஓதி முடித்த இருபத்து நான்காம் அமர்வின் (28.09.2013)  சுட்டிகள், நான்கு பகுதிகளாக.  மூன்றாம் பகுதியில் பாலகாண்டம் முடிகிறது; நான்காம் பகுதியில் அயோத்தியா காண்டம் தொடங்குகிறது.

Ram

unread,
Sep 29, 2013, 9:10:11 AM9/29/13
to santhav...@googlegroups.com, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
ஹரி,

நல்ல தொண்டு.    இந்தத் தொண்டு கொடுக்கும் இதத்தால் உடலை வருத்தும் நோயின் கடுமை குறைந்து போகப் போக முற்றிலும் குணமாகிவிடும்

உங்களுக்கு நீண்ட ஆயுளும் தேக வலிமையும் தர இறைவனை இறைஞ்சுகிறேன்

வாழ்க!

இலந்தை

Hari Krishnan

unread,
Sep 29, 2013, 10:41:23 AM9/29/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S

2013/9/29 Ram <elan...@gmail.com>

ஹரி,

நல்ல தொண்டு.    இந்தத் தொண்டு கொடுக்கும் இதத்தால் உடலை வருத்தும் நோயின் கடுமை குறைந்து போகப் போக முற்றிலும் குணமாகிவிடும்


ஆசிக்கு நன்றி கூறுவார்களா?  தெரியாது!  

தலைவரே, ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும்.  ஆறு மாதங்களுக்கு முன்னால் (வருடாந்திர சோதனையின் மூன்று மாதத்துக்கொரு முறை ஃபாலோ அப்)  ‘இப்போதைய நிலையில், இது வரை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்தின் அளவு ஓவர் டோஸ்’ என்று சொல்லி அளவுகளைக் குறைத்தார்கள்.  கடந்த இரு வாரங்களுக்கு முன்னால் இன்னொரு மூன்று மாத ஃபாலோ அப்.  இப்போது, ‘இப்ப அளவுக்கு மீறிய ஓவர் டோஸ்’ என்று சொல்லி, ஒரு இருபது நிமிடங்கள் செலவிட்டு, நான் இனி எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தின் அளவைக் குறைத்துக் கொடுத்துள்ளார்.   வாங்கி வைத்துள்ளேன்.   இந்த மாத கோட்டா முடிந்ததும் அக்டோபர் 1 முதல், குறைந்த அளவு மருந்தை எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

ஒன்று கவனித்தீர்களா?  நடந்து முடிந்தது 24ம் அமர்வு--ஆறாம் மாதம்.  எனக்கு இரண்டாவது முறையாக மருந்தைக் குறைத்திருப்பதும் இப்போது ஆறாம் மாதம்!  தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, ராமன் அருளோ, மீனாட்சி அருளோ, முருகன் அருளோ தெரியாது.  கம்பன் அருள் என்பது மட்டும் வெகு நிச்சயமாகத் தெரியும்.  மனத்தை அந்த அளவுக்கு மூழ்கடிக்கிறான்.


உங்களுக்கு நீண்ட ஆயுளும் தேக வலிமையும் தர இறைவனை இறைஞ்சுகிறேன்

வாழ்க!

இலந்தை

கவிஞன் வாயால் சொல்வது ஒவ்வொன்றும் கட்டாயம் பலிக்கும்.  இந்தத் தொண்டு முடிய, குறைந்தது நான்காண்டுகள் பிடிக்கும்.  நான்காம் ஆண்டில், இதை(யாவது) பூரணமாகச் செய்து முடித்திருப்பேன்.  கவிஞன் வாக்கு தவறாது.  

Hari Krishnan

unread,
Oct 3, 2013, 2:52:32 AM10/3/13
to தமிழ் மன்றம், Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, C. R. Selvakumar, kambaraamayanam, santhavasantham
முற்றோதல் குழுவுக்கு அக்காவின் ஆசிகள் கிடைத்திருக்கின்றன என்ற மகிழ்ச்சியான தகவலை கம்பராமாயணக் குழுவோடும், சந்தவசந்தத்தோடும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அக்கா.. ஏற்கெனவே இலந்தைக்குச் சொன்னதைப் போல், ஆசிக்கு நன்றி என்பது, கிடையாது (சொன்னால், உண்மையில் அவமதிப்பு!) என்பதால் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

தன்யரானோம்.


2013/10/3 rajam <ra...@earthlink.net>
இந்த அமர்வின் பதிவுகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இதுவரை பரசுராமப் படலத்தை முறையாகப் படித்ததில்லை என்ற என் குறை நீங்கியது! 

கதைப்போக்கில் மட்டுமன்றிக் காப்பிய மாந்தரின் மிகையற்ற இயல்பான நடப்புகளிலும் கம்பன் செலுத்தியிருக்கும் கருத்து அருமை; அதை முற்றோதல் குழுவினர் உணர்ந்து பகிர்ந்துகொண்டதும் அருமை. 

முற்றோதல் குழுவில் ஓர் அன்பர் குறிப்பிட்டது போல ... இந்தத் தசரதனுக்குத் தடால் தடால் என்று காலில் விழுவதும் மயக்கம் போடுவதும் எவ்வளவு இயல்பாக இருந்திருக்கிறது! இவ்வளவு வில்லாற்றல் மிக்க தன் மகன் சிவதனுசையும் சரி, நாராயண தனுசையும் சரி ... அப்படியே அலாக்காக எடுத்து வளைத்து ஒடித்தும் தனக்கெனப் பெற்றும் வெற்றி கொண்ட நிலையைக் கண்ணால் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே! முதல் முறை அவர் அந்தப் பக்கமே இல்லை; இரண்டாம் முறை மூர்ச்சை நிலை! பாவம்! 

இப்படி இன்னும் பல சுவையான, புத்தறிவூட்டும் செய்திகள் மிளிர்கின்றன. 


சொல்லாய்வாளருக்காக -- "நினைவாளன்," "தனி நாயகம்," "மூட்டி விட்டார்" என்ற சொற்களைக் கேளுங்கள்! தமிழைப்பற்றி எப்போதும் செல்வா சொல்வதுபோல் ... "இதில் என்ன புரியவில்லை?" என்றுதான் கேட்கத் தோன்றும்! 

'நிமித்திகன்' என்ற சொல்லை மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு "ஒரு நெறி உணர்வான் நினைவாளன்" என்ற சொல் விருந்து! 

"தனி நாயகம்" என்ற சொல்லாட்சி கிறித்துவத் தமிழின் நிலையைக் காட்டுகிறதோ என்றே நானும் நினைத்திருந்தேன்  (தனிநாயக அடிகளார் என்ற பெயரிலிருந்து). இல்லை, இல்லை அது கம்பன் படைப்பு

"மூட்டி விட்டார்" பற்றிச் சொல்லவே வேண்டாம்! 

கொஞ்சமாவது நேரம் ஒதுக்கி இந்த ஒலி/ஒளிப் பதிவுகளைப் பார்த்துக் கேட்டுச் சுவையுங்கள். குழுவினர் அருந்தும் தேநீர் நமக்குக் கிடைக்காது, ஆனால் இலக்கியச் சுவை கிடைப்பது உறுதி! ;-) 

அன்புடன்,
ராஜம்


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Hari Krishnan

unread,
Oct 7, 2013, 8:20:41 PM10/7/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P., V.R Bala Subramaniyan

இருபத்தைந்தாம் அமர்வு என் இல்லத்தில் சிறப்பாக நடைந்தேறியது.  அயோத்தியா காண்டத்தில் மந்திரப் படலம் (சென்ற வாரம் இருபத்தோரு பாடல்கள் முடித்திருந்த போதிலும், இந்த வாரம் படலத்தை முடிக்க முடியவில்லை) செறிவும், உட்குறிப்பும், பல வகையான பழங்காலத்து ஆட்சி முறைகளைப் பற்றிய விவரங்களும், தசரதன் பாத்திரப் படைப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்களும் என ஏராளமான விளக்கங்கள் தேவைப்பட்டதால் இந்த அமர்வில் விருத்தங்களை விட விளக்கங்களே அதிகம் அலசப்பட்டன.

சென்ற வாரம் முதல் அமர்வுகளுக்கு வரத் தொடங்கியிருக்கும் திரு திருமூலநாதன், குழுவுக்குக் கிடைத்துள்ள பெரிய வரம்.  நான்கு வயதில் திருக்குறள் மொத்தத்தையும் மனனமாக மக்கள் முன்னிலையில் சொல்லத் தொடங்கி பின்னர் சேடசோ அவதானி (பதினாறு கவனகர்) அவதாரமும் எடுத்து, தற்போது பெங்களூருவில் பி எச்டி செய்து வருவதால் அவதான நிகழ்ச்சிகளுக்குச் சற்று ஓய்வு கொடுத்திருக்கிறார் இந்த இருபத்து நான்கு வயது இளைஞர்.  நான் ஒரு திருக்குறள் மேற்கோள் சொல்லத் தொடங்குவதன் முன்னர் அவர் குறளைச் சொல்லி முடித்துவிடும்--பல சமயங்களில் எனக்கு உண்டாகும் கணநேர தட்டுக்கிடல்களின் போதெல்லாம் அவர் எடுத்துக் கொடுப்பதும்--என்று இந்த வார வகுப்பு களைகட்டி, நிறைவாக நடந்தேறியது.  பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

Hari Krishnan

unread,
Oct 7, 2013, 8:23:22 PM10/7/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P., V.R Bala Subramaniyan

2013/10/8 Hari Krishnan <hari.har...@gmail.com>

சேடசோ அவதானி (பதினாறு கவனகர்)

சோடசோ அவதானி.  எழுத்துப் பிழைக்கு மன்னிக்க.

Hari Krishnan

unread,
Oct 21, 2013, 1:37:24 AM10/21/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

முற்றோதலின் இருபத்தாறாம் அமர்வின் போது நான் சென்னையில் இருந்தபடியால், சொக்கன் தலைமையேற்று மந்திரப் படலத்தின் மீதப் பகுதியையும், மந்திரை சூழ்ச்சிப் படலத்தில் ஐம்பத்தோரு பாடல்களையும் ஒதி முடித்தனர்.  அந்தப் பதிவுகளை இப்போதுதான் வலையேற்ற முடிந்தது:






இருபத்தேழாம் அமர்வில் (19.10.2013) மந்திரை சூழ்ச்சிப் படலத்தின் மீதப் பகுதியும், கைகேயி சூழ்வினைப் படலத்தில் முப்பது பாடல்களும் முடிந்தன.  உணர்ச்சிகரமான கட்டம்.  மிக அருமையான பகுதி.  பதிவுகள்:


உங்கள் பார்வைக்காகவும், கருத்துகளுக்காகவும்.

நன்றி.

DEV RAJ

unread,
Oct 25, 2013, 12:50:32 PM10/25/13
to tamil...@googlegroups.com, santhavasantham, mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
On Tuesday, 8 October 2013 05:53:22 UTC+5:30, Hariki wrote:
2013/10/8 Hari Krishnan <hari.har...@gmail.com>
சேடசோ அவதானி (பதினாறு கவனகர்)
சோடசோ அவதானி.  எழுத்துப் பிழைக்கு மன்னிக்க


ஷோடச அவதானி
இறைவனுக்கான பதினாறு வகை உபசாரம் - ஷோடச உபசாரம் 
ஸ்ரீவித்யையில்  மஹா ஷோடசி

ஷோடசம்  - பதினாறு


தேவ்

Hari Krishnan

unread,
Oct 26, 2013, 10:56:12 PM10/26/13
to தமிழ் மன்றம், santhavasantham, தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

2013/10/27 rajam <ra...@earthlink.net>

கைகேயியின் கோபத்தில் ஏதோ ஒரு பொய்ம்மை ஊடுருவுகிறது. அதனால்தான் "நாடக மயில்" என்றும் அவளைக் கம்பன் குறிக்கிறானோ? 

கேள்வியின் நாயகியே!  இந்தக் கேள்விக்குப் பதிலேதம்மா!

கைகேயியின் கேரக்டர் ஸ்டடி ஒன்று எழுதியிருக்கிறேனே---



முப்பத்து நான்கு தவணைகளில் எழுதியது அக்கையாரே.  ஒங்கள மாதிரி பெரியவங்க நாலு பேரு படிச்சுப் பாத்து நாலு வசவாவது வஞ்சாத்தான இந்த செம்மம் கடைத்தேறும்.... இதையாவது சாக்கா வச்சிக்கிட்டு கொஞ்சம் பொரட்டிப் பாக்கணுமாம் அக்கச்சியாம்பா..  என்ன?

Nagoji

unread,
Oct 27, 2013, 3:06:01 AM10/27/13
to santhav...@googlegroups.com
நாடக மயில் என்னும் தலைப்பில் புலவர் கீரன் சொன்ன வரிகள் "கம்ப ராமாயணத்தில்
கம்பன் படைத்த பாத்திரங்களில், கம்பனைப் படைத்த பாத்திரம் கைகேயி. படிக்கும் போது,
எந்தப் பாத்திரம், எழுதிய புலவனை மறக்க வைக்கிறதோ,  அந்தப் பாத்திரம்தான் புலவனைப்
படிக்கிறது. " கீரனின் இந்த சொற்பொழிவின் பதிவு தூர்தர்ஷனில் வந்தது.

- சங்கர தாஸ்


2013/10/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Oct 28, 2013, 10:17:32 PM10/28/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan

இருபத்தெட்டாம் அமர்வில் கைகேயி சூழ்வினைப் படலம் முடிந்தது.  இந்த கட்டம் எத்தனை உணர்ச்சிகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நான்கு பகுதிகளுமே சுவையானவையாயிருந்த போதிலும், வெகு முக்கியமான குறிப்புகள் பகுதி மூன்றிலும் நான்கிலும் இடம் பெற்றுள்ளன. ‘மன்னவன் பணியன்றாகின் நும்பணி மறுப்பனோ யான்’ பாடலுக்கு இன்னொரு கோணத்தில் விளக்கி, அந்த விளக்கம் எந்த வகையில் பொருந்தும், அந்த விளக்கத்துக்கு இட்டுச் செல்லும் கம்பராமாயணப் பாடல்கள் எவையெவை என்பதை விளக்கியிருக்கிறேன்.   தவறாமல் பார்த்து, தங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பதிவுகள்:




Nagoji

unread,
Oct 29, 2013, 3:00:28 AM10/29/13
to santhav...@googlegroups.com
ஒரு சிறிய விண்ணப்பம்.
என்னென்ன பாடல்களை அலசுகிறோம் என்பதை, எழுத்து 
வடிவத்தில் (unicode text),  யூடியூப் படத்தின் description அல்லது
comment இல் இட்டு விட்டால், மிகவும் சவுகரியமாக இருக்கும்.

-சங்கர தாஸ்

2013/10/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

இருபத்தெட்டாம் அமர்வில் கைகேயி சூழ்வினைப் படலம் முடிந்தது.  இந்த கட்டம் எத்தனை உணர்ச்சிகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Hari Krishnan

unread,
Nov 2, 2013, 12:00:18 AM11/2/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
தீபாவளியை முன்னிட்டு,இந்த வார அமர்வை நேற்றே (வெள்ளி, 1.11.2013) ஓதி முடித்தோம்.  நகர்நீங்கு படலத்தில் 120 பாடல்கள் முடிப்பதாகத் திட்டம். (மொத்தம் 240 பாடல்கள் கொண்டது நகர்நீங்கு படலம்.)  ஆனால் வழக்கம் போன்ற அதே அளவில்தான் முடித்தோம்.

கௌசலை, தசரதன், கைகேயி, வசிஷ்டன் பங்கேற்கும் உரையாடல் பகுதிகள்.  உங்கள் பார்வைக்கும்:


http://www.youtube.com/watch?v=JXx7oQ-az50       பகுதி 2



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

Hari Krishnan

unread,
Nov 10, 2013, 8:59:35 AM11/10/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
முப்பதாம் அமர்வு. 240 பாடல்கள் கொண்ட நகர்நீங்கு படலத்தின் இரண்டாம் தவணையாய் நடந்து, இராமனும், இலக்குவனனும் மரவுரி தரித்துக் கொள்ளும் பாடலோடு முற்றுப் பெற்றது. மிகுதியாக உள்ள சுமார் 90 பாடல்கள் அடுத்த அமர்வுக்கு. இந்தக் கட்டம் எவ்வளவு உணர்ச்சிமயமானது என்பதை, பதிவுகளில் பார்க்கலாம். 

பதிவுகளின் தொடக்கத்தில், மற்ற பதிப்புகளில் ‘மிகைப் பாடலாக’ ஒதுக்கப்பட்டு, வைமுகோ சேர்த்துக் கொண்டுள்ள இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்/கேட்கலாம். வால்மீகி ராமாயணத்தில், சிரவணன் என்று அறியப்படும், தசரதனுடைய கணைக்கு பலியான முனிகுமாரனுடைய பெயரை சுரோசனன் என்று இந்த இருபாடல்களில் ஒன்று சொல்கிறது. இன்னொன்று அவனுடைய குலத்தைப் பற்றிய குறிப்பைத் தருகிறது. வான்மீகத்திலும் இந்தச் செய்தி அப்படியே இருப்பதால், இவற்றை மிகைப்பாடல்களாகக் கருத முடியவில்லை. இது குறித்த பரிமாற்றங்கள் முதல் பகுதியில் உள்ளன. முக்கியமான குறிப்பு என்பதனால் இங்கேயும் குறிப்பிடுகிறேன்.

பதிவுகளும், ஒவ்வொரு பகுதியிலும் அடங்கியுள்ள பாடற் பகுதிகளையும் பற்றி விவரங்கள் கீழே: 

http://www.youtube.com/watch?v=Umazt9mCclo Part 1

நகர் நீங்கு படலம். பாடல் 74-91: தசரதன் சாப வரலாறு; 92-97: நகர மாந்தர் அடைந்த வருத்தம்.


http://www.youtube.com/watch?v=C291zC_tsAM Part 2

நகர் நீங்கு படலம். பாடல் 98-11: நகரத்தவரின் பலவிதமான கருத்துகள்--ஆளான் பரதன் அரசு என்ற பேச்சு உட்பட. 115-121: இலக்குவன் சீற்றமடைந்து போர்க்கோலம் பூண்டு நிற்றல்.

http://www.youtube.com/watch?v=snFrxpc7pgo Part 3

121-124: இலக்குவன் சீற்றம். 125-140: இராம-இலக்குவ உரையாடல்--இராமன் சமாதானம் செய்யச் செய்ய இலக்குவன் அவனை மறுத்துப் பேசியபடி இருத்தல்.

http://www.youtube.com/watch?v=qNLmZO4T018 Part 4

நகர் நீங்கு படலம். பாடல் 141: இலக்குவன் சொல்லை வைத்தே இராமன் அவனை மடக்கி, சினந் தணிவித்தல். 143-153: இருவரும் சுமித்திரை மாளிகையை அடைய, அங்கே மரவுரி வந்து சேர, இருவரும் மரவுரி அணிதல்.

எப்போதும் போல் உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

Hari Krishnan

unread,
Nov 10, 2013, 9:01:45 AM11/10/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
அமர்வு நடந்துகொண்டிருக்கும் போதே, உடனுக்குடன் குறிப்புகளை வலையேற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நாக. சொக்கன் தொகுத்தளித்த வகுப்புக் குறிப்புகளை இங்கே தருகிறோம்.

இந்த வார வகுப்பு, நாடக வடிவில்:

கோசலையிடம் தசரதன் பழைய கதை சொல்கிறான்: ‘வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை, சென்று திரிவேன், நதியின் கரைவாய்ச் சென்றே நின்றேன்!’

தசரதன்: ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றிலவாய், நயனம் திரு மா மகனே துணை, தவமே புரி போழ்தின், மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு.

தசரதன்: அறியேன், கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள.. கைக்கரியின் குரலே அன்று என்ன வெருவா அயர்வென், மனம் நொந்து அவண் வந்தன்.

தசரதன்: கணையோடு உருள்வோன் காணா, மேல் வீழா, ‘ஐய, நீதான் யாவன்? அந்தோ! அருள்க’ என்று அயர, மைந்தன் புகல்வான்.

அம்பு பட்ட ரிஷி குமாரன் தசரதனிடம் தன் வசம் சொல்வது: காசிபனன் மைந்தன், விருத்தேசனன் மெய்ப் புதல்வன், சலபோசனப் பேர் தரும் சுரோசனன் என் பேர்.

சுரோசனன்: இரு கண் இன்றிய தாய் தந்தைக்குப் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன், பழுது ஆயினதால் உணராது எய்தாய், துயரம் தவிர்.

சுரோசனன்: ’நீர் வேட்கை மிக உயங்கும் எந்தைக்கு நீ தண்ணீர் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன் தொழுதான் எனவும் விளம்பு.’

தசரதன்: (அந்த சுரோசனன்) விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால்... மைந்தன் வரவே நோக்கும் மாதவன்பால் புனல் கொண்டு அணுக...

சுரோசனன் பெற்றோர்: “ஐயா, இதுபோது அளவாய் வந்து அணுகாய்; என்னோ என்றே நொந்தேம்; தழுவிக் கொள வா!’

தசரதன்: (சுரோசனன் பெற்றோரிடம்) : ‘ஐயா, யான் ஓர் அரசன், அயோத்தி நகரத்து உள்ளேன், களபம் துருவி வதிந்தேன்.’

தசரதன்: (சுரோசனன் பெற்றோரிடம்) ‘புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின்மேல் கணை சென்றது, கண்ணின் தெரியக் காணேன்.’

தசரதன்: (சுரோசனன் பெற்றோரிடம்) ‘வேழக்குரல் அன்று எனவே ஓட்டந்து நீ யார் என, எலாம் உரையா, இறந்து ஏகினன் விண்ணிடையே.’

தசரதன்: (கோசலையிடம்) ‘ஐயா! கறுத்தே அருளாய்’ என்னா இரு தாள் சென்னி புனைந்தேன்.

தசரதன்: (கோசலையிடம்) ’வீழ்ந்தார், அயர்ந்தார், புரண்டார், ‘விழி போயிற்று இன்று’ என்றார், ஆழ்ந்தார் துன்பக் கடலுள்.

தசரதன்: (சுரோசனன் பெற்றோரிடம்) ‘யானே இன்று உம் புதல்வன், நீர் ஏவும் பணி செய்திடுவேன், அயரீர்.’

சுரோசனன் பெற்றோர்: (தசரதனிடம்) ‘மகவை இழந்தும் உயிர் காதலியா இருந்தால், உலகோர் என் என்று உரையார்? விண்ணின் தலை சேருதும் யாம்!’

சுரோசனன் பெற்றோர்: (தசரதனிடம்) ’எம்போல் விடலை பிரிய அடைவாய் படர் வான்.’

தசரதன்: (கோசலையிடம்) (சுரோசனன் பெற்றோர்) பொன் நாட்டிடை போயினர்... சிந்தை தளர்வுற்று, ‘இன்சொல் மைந்தன் உளன்’ என்றதனால் மகிழ்வோடு.

தசரதன்: (கோசலையிடம்) ’அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும், எம் உயிர் வீகுதலும் தவறா.’

கோசலை உணர்வு ஓவினள் (மயங்கி விழுந்தாள்)

மற்ற மன்னர்கள்: (வசிஷ்டனிடம்): ‘இடையூறு உண்டா? அழுத குரல்தான் என்ன?

வசிஷ்டன்: (மன்னர்களிடம்) ‘கொண்டாள் வரம் இரண்டு கேகயர்கோன் கொம்பு. தயரதனும் அளித்தான். முகிலை (ராமனை) வனம் போகு என்று.’

வசிஷ்டன்: (மன்னர்களிடம்) ’வேந்தன் பணியினால் கைகேசி புதல்வன் பார் அளிப்பான், இராமன் காடு உறைவான்.’

(எல்லாரும்) தயரதனைப்போல் வீழ்ந்தார்.

எம்மருங்கும் அழுத ஓசை....

‘ஆ! அரசன் அருள் இலனே!’ என்பார். ‘மண் செய்த பாவம்’ என்பார். ‘விதி’ என்பார்.

அயோத்தி மக்கள்: ‘ஆளான் பரதன்!’ ... ‘கேகயன் மகள்மேல் காதல், அரசன் கருத்து அழிந்தான்!’ ... ‘சீதை மணவாளன் தன்னோடும் கானம் போதும்!’

அயோத்தி மக்கள்: ‘கைகேசி உள் ஊறு காதல் இலள்போல்!’... ‘நன்று! வரம் கொடுத்த நாயகற்கு நன்று!’

அயோத்தி மக்கள்: ‘கோவைப் (ராமனைப்) பிரியாது (காட்டில்) உறைதும், காடு எல்லாம் நாடாகிப்போம்!’

அயோத்தி மக்கள்: ‘என்னே நிருபன் இயற்கை! மகற்குத் தாரணியை முன்னே கொடுத்து, தம்பிக்குப் பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்?’

’ஞாலம் வரத்தினாலே மீட்டாள், அளித்தாள் வனம் தம்முனை (அண்ணனை) சிறு தாய்’ என கேட்டான் இளையோன் (லட்சுமணன்). 

தீ என எழுந்தான்.

(லட்சுமணன்) கண்ணின் கடைத் தீ உக, மெய்ந்நீர் விரிப்ப, உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க தனது ஆதியின் மூர்த்தி (ஆதிசேஷ வடிவம்) ஒத்தான்.

லட்சுமணன்: ‘சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின் குட்டனை ஊட்ட விரும்பினளே!’ என்னா கை புடைத்து நக்கான்.

லட்சுமணன்: ‘எனக்கு ஒரு கோவினை(ராமனை)க் கொற்ற மௌலி கவிப்பானும் நின்றேன், இது காக்குநர் காமின்!’

லட்சுமணன்: ‘யாவரும் நிற்க, ஓர் மூவர் (மும்மூர்த்திகள்) வந்தபோதும் பெண் நாட்டம் ஓட்டேன்.’

கதிரோன் வெம்மை காட்டி கோ மகன் (லட்சுமணன்) அந்நகரத்து நாப்பண் திரிகின்ற வேலை... (அப்போது ராமன்) தம்பி தன் வில் புயல் அண்ட, கேளா...

(ராமன்) வந்தான், ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன!

ராமன்: (லட்சுமணனிடம்) ‘என் அத்த! என் நீ? முனிந்திலாதாய் (நீ யார் மீதும் கோபப்படமாட்டாயே), சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது?’

லட்சுமணன்: ‘முறை நீத்த நெஞ்சம் (கைகேயி) எதிர் நின்னை மௌலி சூட்டல் கருதி, தடை செய்குநர் தேவரேனும் சுடுவான் துணிந்தேன்.’

லட்சுமணன்: ‘வானுளோரும் விலக்கார்; வந்த விலக்கினும் என் கை வாளிக்கு இலக்கா; மன்னர் குலக் காவல் இன்று உனக்கு யான் தரக் கோடி.’

ராமன்: ‘வழுவுற்ற சீற்றம் உனக்கு எங்ஙன் விளைந்தது?’

லட்சுமணன் நித்திலம் தோன்ற நக்கு...

லட்சுமணன்: ’மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப... ”வனம் போதி” என்றால் யாண்டோ அடியேற்கு இனிச் சீற்றம் அடுப்பது?’

லட்சுமணன்: ‘என் முன் உனக்கு ஈந்து, இல்லை என்ற மன்னவன்... நின் கண் பரிவு இல்லவர் உன்னை நீக்க, பொறுத்து உயிர் போற்றுகேனோ?’

ராமன்: ’வேலோய் (வேல் ஏந்திய லட்சுமணா) மன்னன் (தசரதன்) “முடி கொள்க” எனக் கொள்ள மூண்டது என் குற்றம், இகல் மன்னவன் குற்றம் யாதோ?’

ராமன்: ‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை, பதியின் பிழை அன்று, நமைப் புரந்தாள் பிழை அன்று, மகன் பிழை அன்று, விதியின் பிழை!’

ராமன்: ’நீ இதற்கு என்னை வெகுண்டது?’

லட்சுமணன்: ’கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில், காண்டி!’

ராமன்: ‘ஐய! வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்? ஈன்ற தாய் தந்தைமேல் சலிக்கின்றது என்னோ?’

லட்சுமணன்: ‘நல் தாதையும் நீ; தனி நாயகம் நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறர் இல்லை; பிறர்க்கு நல்கக் கற்றாய், (நான் அதை மீட்பதை) காணுதி.’

ராமன்: ’வரம் பெற்றவள்தான் வையம் சரதம் உடையாள், தாதை செப்ப பரதன் பெறுவான், இனி யான் படைக்கின்ற செல்வம் விரதம். நல்லது வேறு யாவது?’

ராமன்: ‘ஐய! இனி இக் கதம் (கோபம்) தீர்வது தம்முனைப் (பரதனைப்) போர் தொலைத்தோ? தாதையை வாகை கொண்டோ? ஈன்றாளை வென்றோ?’

லட்சுமணன்: ‘(கைகேயி) சொல்லும் சுமந்தேன்; தோள் என கல்லும் சுமந்தேன்; கணைப் புட்டிலும் வில்லும் சுமக்கப் பிறந்தேன், வெகுண்டு என்னை?’

ராமன் தென் சொல் (தமிழ்) கடந்தான், வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்.

ராமன்: ‘எனை வளர்த்த தாதை சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது? என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஊற்றம்?’

(லட்சுமணன்) சீற்றம் துறந்தான். நம்பி (ராமன்) ஆணையாலே தணிவு எய்தி நின்றான்.

அன்னான்(லட்சுமணன்)தனை ஐயனும் (ராமனும்) சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான்.

(சுமித்திரை) கண்டாள் தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை. படிமேல் புரண்டாள், துன்பக் கடலுக்கு எல்லை உணர்ந்திலாதாள்.

சோர்வாளை (சுமித்திரையை)த் தொழுது ஏந்தினன் (ராமன்). ‘அரசர் பொய்த்தனன் ஆக்ககில்லேன், கான் கண்டு மீள்வென்’ என்றான்.

ராமன்: ‘(சுமித்திரையே) கான் புக்கிடினும், கடல் புக்கிடினும் யான் அயோத்தி புக்கது ஒக்கும். உலையற்க!’

தாய்தனை (சுமித்திரையை) ஆற்றுகின்றார்கள்பால்... மாயாப் பழியாள் (கைகேயி) தர, வற்கலை (மரவுரி) ஏந்தி வந்தார்.

லட்சுமணன்: ‘ஈந்த எல்லாம் பூணப் பிறந்தானும் (ராமன்) நின்றான், அவை போர் விலோடும் காணப் பிறந்தேனும் (நான்) நின்றேன், காட்டும்.’

லட்சுமணன்: ‘உடன் ஏகு என எம்பிராட்டி (சுமித்திரை) சொன்னால் அதுவே துணை ஆம்’ என தூய நங்கை (சுமித்திரை) அடிமேல் பணிந்தான்.

சுமித்திரை: ‘அவ்வனம் அயோத்தி, ராமன் மன்னவன், தாயர் சீதை, இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் (குற்றம்).’

சுமித்திரை: ‘மகனே! இவன் பின் செல், தம்பி என்னும்படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி! நகர்க்கே இவன் வந்திடின் வா, அன்றேல், முன்னம் முடி.’

(ராமன், லட்சுமணன்) இருவரும் தொழுதனர்; தாயும் விம்மினாள், குமரரும் போயினார், சீரை (மரவுரி) சாத்தியே.

Subbaier Ramasami

unread,
Nov 10, 2013, 10:47:42 AM11/10/13
to சந்தவசந்தம்
கம்ப நாடகம் என்பது எவ்வளவு பொருத்தம்.

ஷேக்ஸ்பியரைப் போலக் கம்பன் நாடகம் எழுதியிருந்தால் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்ததாக இருந்திருக்கும்.

இலந்தை


2013/11/10 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Nov 10, 2013, 11:21:05 PM11/10/13
to santhavasantham

2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>

கம்ப நாடகம் என்பது எவ்வளவு பொருத்தம்.

ஷேக்ஸ்பியரைப் போலக் கம்பன் நாடகம் எழுதியிருந்தால் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்ததாக இருந்திருக்கும்.

இலந்தை

ஆமாம் தலைவரே.  இருந்தாலும் ஒரு சில எண்ணங்களை முன்வைக்கிறேன்:

  • தமிழில் நாடகம் என்பது, இசையுடன் கூடிய நடனம் என்பதைக் குறிப்பதாகத்தான் இருந்திருக்கிறது.   கம்பன் குறிக்கும் ‘நாடக மயில்’ கூட நடனமாடும் மயிலைத்தான் சுட்டுகிறதே தவிர, தற்காலச் சொற்பொழிவாளர்கள் சாமர்த்தியமாகத் திரித்து விளக்கமளிப்பதைப் போல், ட்ராமா போடற மயில் என்று சொல்லவில்லை.
  • வசனங்கள் மூலமாகவே கதை சொல்லும் போக்கு என்பதான நாடக வடிவம் மனோன்மணீயத்திலிருந்துதான் தொடங்குகிறது.  ஆனால், மனோன்மணீயம் நாடகத்தை அரங்கேற்ற முடியாது.  சுரங்கப் பாதைதான் கதையின் முக்கியமான களம்.  இதன் மூல நூலான The Secret Wayக்கும் கதைக் களம் சுரங்கப்பாதைதான்.
  • ஆள் அம்பு சைனியத்துடன் மன்னன் வந்து நிற்கும் அளவுக்கு பெரிய சுரங்கப் பாதையை சுந்தர முனிவரும் அவருடைய இரண்டு துணைவர்களும் சேர்த்து--நாடகத்தின் கால எல்லை என்று பேராசிரியர் நாகநந்தி கணக்கிட்டுள்ள--இரண்டு வார காலத்துக்குள், ‘அருங்கை வருந்த அமைத்த சுருங்கை’ என்ற இம்பாஸிபிலிடியை ஒதுக்கிவிட்டால்கூட, நாடக மேடைக் காட்சியமைப்புக்குள் சிக்காத பல காட்சிக் களங்களைக் கொண்டிருக்கிறது மனோன்மணீயம்.
ஷேக்ஸ்பியருடைய கதைக் களங்கள், மிகப் பெரிய அரங்கங்களுக்கு ஏற்றவை.  இப்படிப்பட்ட களங்களுக்காகவே amphitheater, coliseum போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், கம்ப நாடகம் பேசும் கதைக் களம், எந்த நாடக மேடை அரங்கத்துக்குள்ளும் பொருத்த முடியாதது.  திரைப்பட வடிவம் வேண்டுமானால் இதற்கான கொள்ளளவைக் கொண்டிருக்கலாம்.

இருந்தாலும், கதைசொல்லும் விதத்தில் அமைத்துள்ள நாடகப் பாங்கில் கம்பன் தொட முடியாத உயரத்தில் நிற்கிறான் என்பது மறுக்க முடியாத ஒன்று.  கம்பனுடைய ட்ரமாடிக்ஸ் பற்றிதான் பேராசிரியர் நாகநந்தி, தன் பிஎச்டி பட்டத்துக்காக ஆய்வு மேற்கொண்டார்.  அவருடைய ஆய்வு ஆஸ்திரேலியாவில் தாள் வடிவில் இருக்கிறது.  பட்டம் வாங்க அந்தக் காலத்தில் சில நுண்ணரசியல்கள் தடையாக இருந்தன என்று அவர் சொல்லியிருக்கிறார்.  (நண்பர் பா.கி.க்கு இதில் கருத்து மாறுபாடு உண்டு.)

ஆனால் உண்மையிலேயே, படிக்கும் போதே நாம் அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிவிடுகிறோம் என்பது அனுபவத்தில் கண்ட, கண்டு கொண்டிருக்கின்ற உண்மை.

நன்றி தலைவரே. 

Swaminathan Sankaran

unread,
Nov 12, 2013, 12:12:44 AM11/12/13
to santhav...@googlegroups.com
இதைப் பற்றி இன்று தான் Wall Street Journal Theatre Review sectionஇல் வந்த இந்த விமரிசனத்தைப் படித்தேன். ஷேக்ஸ்பியருக்கான  அரங்க அமைப்பு பற்றியும்  (அவர் காலத்து அமைப்பு), இன்றைக்கு ஏற்ற அமைப்பு பற்றியும்  விமரிசகர் எழுதியிருப்பதைப் படிக்கவும். அவர் காலத்தில் பெண் வேடத்தையும் ஆண்கள் தான் ஏற்று நடித்தனர் என்ற குறிப்பையும் காணலாம். இன்றைக்கு  New York - Broadway stageஇலும் அதைப் பின்பற்றி வருவது ஆச்சரியமாக இருக்கிறது. சங்கரதாஸ் ஸ்வாமிகள் காலத்து தமிழ் நாடகங்களை நினைவூட்டுகிறது. இந்தக் கட்டுரையைப் படித்தால் மேலை நாடுகளில் தற்கால நாடக விமரிசங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

சங்கரன் 

பி.கு.: இப்போது நான் மேலை நாடுகளில் நாடகம் பார்க்கச் செல்வதில்லை. (நம் நாட்டில் அதிகம் பார்க்கும் படியாக ஒன்றுமில்லை என்பது என் கணிப்பு - மகாராஷ்டிரா, வங்காளம் தவிர). இங்கு கட்டணம் மிக உயர்வு. ஒரு மாதம் முன்னால் நயாகரா ஆன் தி லேக் (Niagara-on-the-Lake) என்ற ஊரில் நடக்கும் ஷா நாடகத் திருவிழாவில் (annual Shaw festival) ஷாவின் (George Bernard Shaw's)  'Arms and the Man' பார்த்தேன். 65 வயதுக்கு மேர்பட்டவர்களுக்கு சலுகை கட்டணம் 53 டாலர்!   அடிக்கடி Scenes மாற்றாமலேயே நாடகத்தின் கருப் பொருளை மிக அழகாக நடித்துக் காண்பித்தார்கள். ஆகையால் சுரங்கப் பாதையை தத்ரூபமாக அரங்கில் கொண்டு வராமலேயே 'மனோன்மணீயம்' நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் காட்டலாம் என்று நினைக்கிறேன். கொல்கத்தாவில் 1960களில் உத்பல் தத் குழுவினர் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்து தொழிலாளிகள் அவதிப் படுவதை 'கல்லோல்' என்ற நாடகத்தில் நல்ல   உத்திகளால் பார்வையாளர்கள் அனுபவித்து ரசிக்கும்படியாகக் காண்பித்தார்கள்! 

________________________________________________________________________

Ladies Men

By  TERRY TEACHOUT, Wall Street Journal, Nov. 11, 2013 3:51 p.m. ET

Twelfth Night, Through Feb. 2
Richard III, Through Feb. 1

New York

Broadway is one of the worst places in America to see Shakespeare done right—not because nobody there knows how to mount his plays (though I sometimes have my doubts), but because virtually all of the theaters on the Great White Way are conventional proscenium-style houses in which the actors and audience are placed on opposite sides of a rectangular arch that frames the stage. Shakespeare's plays, by contrast, were written for a far more intimate kind of space, the closest contemporary counterpart of which is a thrust stage that allows the audience to sit on three sides of the actors. In addition, they always work best when performed without scenery, whose onstage presence slows down the fast-flowing action that is an essential part of true Elizabethan theatrical style.

In 1997 Shakespeare's Globe, a London theater that duplicates as closely as possible the playhouse where the King's Men, the troupe of which Shakespeare was a member, performed between 1599 and 1613, was opened on the site of the original Globe Theatre. Now the Globe has set up shop in Broadway's Belasco Theatre to present "Richard III" and "Twelfth Night" in repertory, staging them in a manner that is as authentic as can be contrived in a proscenium house. The uncluttered playing area is fitted out with frame-breaking stage boxes and (mostly) lit with candles; the costumes are hand-crafted 17th-century replicas designed with awe-inspiring verisimilitude by Jenny Tiramani; and Claire van Kampen's Elizabethan-style incidental music is played on Renaissance instruments. Above all, the women's roles, as was the custom in Shakespeare's time, are performed by men—among them Mark Rylance, who plays Olivia in "Twelfth Night."

Needless to say, Mr. Rylance, one of the top classical actors of our time, is the draw for this ambitious undertaking. That said, it's the productions themselves, both of which were directed by Tim Carroll, that will likely be the real draw, especially for those New York playgoers who aren't lucky enough to have seen any of the numerous American classical companies that regularly perform Shakespeare on thrust stages.

By far the better of the two is "Twelfth Night," which crackles with the kind of headlong, hurtling comic energy that is only possible when the play is done on an open stage without scene breaks. I wouldn't exactly call it revelatory, since "Twelfth Night" gets performed often and well on the Shakespeare summer circuit, but this staging is identical in quality to any of the finest productions that I've seen in this country in recent seasons.

Mr. Carroll's cast includes a second star, Stephen Fry, who is mainly known on both sides of the Atlantic for his television work (he played Jeeves to Hugh Laurie's Bertie Wooster). His exquisitely well-gauged Malvolio is pompous but not preposterous, which makes his abject humiliation at play's end all the more emotionally credible. Colin Hurley and Angus Wright play Sir Toby Belch and Sir Andrew Aguecheek with rip-snorting relish, and Samuel Barnett is lovely and completely unmannered as Viola, who is forced by circumstances to dress up as a man, in which capacity she inadvertently wins Olivia's heart.

This brings us to Mr. Rylance. Having just seen Taylor Mac's astonishingly creative drag performance in Lear deBessonet's Public Theater production of Bertolt Brecht's "Good Person of Szechwan," I expected something more out of Mr. Rylance than standard-issue camp. On occasion he supplies it, in particular when he wistfully confesses that for a woman of a certain age, "youth is bought more oft than begg'd or borrow'd." For the most part, though, I found his acting to be overobvious, at times blatantly so, especially by contrast with Mr. Barnett's sweet simplicity.

Mine, however, is a minority view—rarely have I seen so comprehensively crowd-pleasing a piece of comic acting—and even if you share my reservations about Mr. Rylance's Olivia, the rest of this "Twelfth Night" is so persuasive that you'll want to see it anyway. Not so "Richard III," in which Mr. Rylance is giving a performance of the title role that makes a sort of sense on paper but none at all in person: He has opted to play Shakespeare's hunchbacked monster of malignity as a milksoppy, simperingly adenoidal clown who hides his "subtle, false and treacherous" purpose behind a mask of ceaseless facetiousness. (Try to imagine Matthew Broderick as Richard III and you'll get the idea, sort of.) What's wrong with this approach is that Mr. Rylance never bothers to pull off the mask and reveal the depth of his interior rage until the very end of the play: He is clownish even when no one is looking.

Perhaps because Mr. Rylance's acting is so thickly crusted with silliness, Mr. Carroll's staging feels somnolently slow, so much so that I found it hard to sit through. Pass it by—but don't miss "Twelfth Night."

Mr. Teachout, the Journal's drama critic, is the author of "Duke: A Life of Duke Ellington, " just out from Gotham Books. Write to him at ttea...@wsj.com.





2013/11/10 Hari Krishnan <hari.har...@gmail.com>


ஆமாம் தலைவரே.  இருந்தாலும் ஒரு சில எண்ணங்களை முன்வைக்கிறேன்:
  • வசனங்கள் மூலமாகவே கதை சொல்லும் போக்கு என்பதான நாடக வடிவம் மனோன்மணீயத்திலிருந்துதான் தொடங்குகிறது.  ஆனால், மனோன்மணீயம் நாடகத்தை அரங்கேற்ற முடியாது.  சுரங்கப் பாதைதான் கதையின் முக்கியமான களம்.  இதன் மூல நூலான The Secret Wayக்கும் கதைக் களம் சுரங்கப்பாதைதான்.
  • ஆள் அம்பு சைனியத்துடன் மன்னன் வந்து நிற்கும் அளவுக்கு பெரிய சுரங்கப் பாதையை சுந்தர முனிவரும் அவருடைய இரண்டு துணைவர்களும் சேர்த்து--நாடகத்தின் கால எல்லை என்று பேராசிரியர் நாகநந்தி கணக்கிட்டுள்ள--இரண்டு வார காலத்துக்குள், ‘அருங்கை வருந்த அமைத்த சுருங்கை’ என்ற இம்பாஸிபிலிடியை ஒதுக்கிவிட்டால்கூட, நாடக மேடைக் காட்சியமைப்புக்குள் சிக்காத பல காட்சிக் களங்களைக் கொண்டிருக்கிறது மனோன்மணீயம்.
ஷேக்ஸ்பியருடைய கதைக் களங்கள், மிகப் பெரிய அரங்கங்களுக்கு ஏற்றவை.  இப்படிப்பட்ட களங்களுக்காகவே amphitheater, coliseum போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.


--
அன்புடன்,
ஹரிகி.


--
 Swaminathan Sankaran

Hari Krishnan

unread,
Nov 17, 2013, 10:21:06 PM11/17/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S

முப்பத்தோறாம் அமர்வில் இராம, இலக்குவ சீதையர் வனம் புகக் கண்டோம்.  இந்தப் பகுதியில், வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்பன் செய்துள்ள பெரிய பெரிய மாற்றங்களில் ஒரு சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.  முக்கியமானது, தசரதனிடம் விடைபெறாமல் இராமன் கான் ஏகுவது.  இது வால்மீகி ராமயணத்தில், நீண்ட வாக்கு வாதங்களுக்குப் பிறகு நடைபெறும் ஒன்று.  தசரதனுக்கும் இராமனுக்கும் இடையே நடைபெறும் அனைத்து வாதங்களையும் தவிர்த்து, எவ்வளவு சாமர்த்தியமாக கவி, தன் நாடகத்தை அழகு கெடாமல் நகர்த்துகிறான் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இலக்குவனைத் தன்னுடன் வரவேண்டாம் என்று இராமன் உரைக்க, இலக்குவன் துடிதுடித்துப் போய், ‘நீர் உள எனில் உள மீனும் ஆம்பலும்’ என்ற உவமையை வால்மீகியிலிருந்து அப்படியே எடுத்துத்தான் கம்பன் பயன்படுத்துகிறான்.  ஆனாலும், வான்மீகத்தில், சீதையைக் காட்டுக்கு வரவேண்டாம் என்று முதலில் தடுத்து, பிறகு சம்மதித்து, இவையெல்லாம் நடந்த பிறகே, இலக்குவன் இந்த வாக்கியத்தைப் பேசுகிறான்.  கம்பனில், இலக்குவன் இந்த வார்த்தையை முதலில் பேசுவதால், 

'நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும் 
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!' என்றான். 

தான் இராமனுடன் வனமேக அனுமதியை வாங்கிய போதே, சீதைக்கும் சேர்த்து வாங்கிவிடுகிறான் என்ற தொனிக்குறிப்பு கம்பனுடைய முன்-பின் மாற்றத்தால் கூடுதலாகச் சேர்கிறது.  இலக்குவனுடைய உரைக்கு ஒரு புதிய பரிமாணம் கிட்டுகிறது.  

அமர்வினிடையே, முடிசூட்டும் நிகழ்வுக்குத் தன்னை உடனழைத்துப் போக வரப்போகிறான் என்று சீதை காத்திருக்க, இராமன் மரவுரி தரித்தும், தாயரும் மற்றவரும் கண்ணில் நீர்சிந்தியவாறும் உடன் வருவதைக் கண்ட சீதை, நிலைமை என்ன என்பதை அறியாதவளாகித் தடுமாற்றமுறும் போது, அவளுடை எண்ணத்தில் கிலேசம் ஏற்படுகிறது.  அவளோ கண்ணெதிரில் தன் கணவனையும் இலக்குவனையும், தாயர் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்; இராம இலக்குவர்கள் மரவுரி தரித்திருக்கக் காண்கின்றாள்.  மகுடம் தரிக்க வேண்டிய இந்தச் சமயத்தில் மரவுரி தரித்திருக்கிறான் என்றால், அரியணை ஏறும் நிகழ்வு தடைபட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறாள்.  நிகழ்வு தடைப்பட்டிருக்க வேண்டுமானால், ஏதோ நடந்திருக்க வேண்டும்.  கண்ணெதிரில் தசரதன் ஒருவனைத்தான் காணவில்லை.  எனவே, இராமனைப் பார்த்து,

'பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ்-
மன்னை உற்றது உண்டோ, மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது? இயம்பு' என்று இயம்பினாள்-
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள். 

என்ற பாடலுக்கு விளக்கமளிக்கையில், நான் புகழ், மன்னை உற்றதுண்டோ என்று பிரித்து, தசரதனுடைய உயிருக்குத் தீங்கு ஏற்படும் அளவுக்கு ஏதேனும் உற்றதுண்டோ என்ற விளக்கம் வாதத்துக்குள்ளானது.  புகழ் மன்னை, உற்றதுண்டோ என்று கமாவை மாற்றிப் போட்டுதான் பிரிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டது.  வகுப்பில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பாததால் அப்போது வாதங்களைத் தவிர்த்தேன் என்றாலும், வகுப்புக்கு இரண்டு நாட்கள் சிந்தித்ததன் பிறகும் நான் அளித்த விளக்கம் சரியே என்றுதான் எனக்குப் படுகிறது.

உரையாசிரியர்கள் சொல்லியிருக்கும்படி, புகழ்மன்னை, உற்றதுண்டோ என்றே கொண்டாலும், கீர்த்தி வாய்ந்த தசரத சக்கரவர்த்திக்கு உற்றது உண்டோ என்ற வடிவத்திலும், பட்டாபிஷேகம் நின்று போகும் அளவுக்கு புகழ் மன்னுக்கு என்ன உற்றிருக்க முடியும்?  பட்டாபிஷேகம் தடைப்பட வேண்டுமானால், யாருக்கேனும் ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்திருந்தால்தான் தடைப்பட்டிருக்க முடியும்.  (இப்போது சீதைக்கு இன்னமும் செய்தி தெரியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)  மற்ற அனைவரையும் கண்ணெதிரில் பார்க்கிறாள்; தசரதனை மட்டும் பார்க்கவில்லை.  ‘புகழ் மன்னை உற்றதுண்டோ’ என்று, மன்னன் பூத உடல் நீங்கி, புகழுடல் அடைந்தானோ என்று நான் அளித்த விளக்கமாயினும், உரையாசிரியர்கள் எழுதியுள்ளபடி, ‘புகழ் வாய்ந்த மன்னனுக்கு உற்றது உண்டோ’ என்று எடுத்துக் கொண்டாலும் சரி; பட்டாபிஷேகம் நின்று போகுமளவுக்கு மன்னனுக்கு என்ன உற்றிருக்கும் என்று சீதை (அந்த நிமிஷத்தில்) கருதியிருக்க முடியும்?  அங்கே  மகுடம் சூட்டும் நிகழ்வைத் தடுக்கும் அளவுக்கு தசரதனுக்கு ஏதோ ஒன்று உற்றிருப்பதாக சீதை கருதியிருந்தால், (இவ்வாறு அவள் நினைத்த அந்த நிமிஷத்தில், நான் அளித்த விளக்கத்தில் உற்றதைத் தவிர, சக்ரவர்த்திக்கு வேறு என்ன உற்றிருந்தால், இராம இலக்குவர்களை இந்தக் கோலத்திலும், தாயரை அழுத கண்களுமாக அவள் பார்க்க நேர்ந்திருக்கும்?  

எனவே, நான் அளித்த விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்பது குறித்து I am abundantly convinced now.  வகுப்பு என்றால் வாதங்களுக்கு இடமில்லை.  இது அமர்வு.  இங்கே வாதங்களுக்கும் மறுப்புக்கும் முழுமையான இடம் இருக்கிறது.  என்னிடம் தவறிருக்குமேயானால், உடனுக்குடன் தவறைத் தவறுதான் என்று சொல்லி வருபவன் நான்.  ஆனால், இந்த சந்தர்ப்பத்தில், இரண்டு நாட்கள் நிதானமாக யோசித்த பிறகும் நான் அளித்த விளக்கம் சரிதான் என்று எனக்குப் படுகிறது.  உரையாசிரியர்கள் இந்த இடத்துக்குப் பூசி மெழுகி விளக்கம் எழுதியிருப்பது இடக்கரடக்கல் என்ற நாகரிகக் குறிப்பைச் சேரும் என்பதை சிந்தனைக்கு வைக்கிறேன்.

இதன் பிறகு, சீதையைக் கானகத்துக்கு உடனழைத்துச் செல்ல இராமனுக்கு மனத்தில் எண்ணம் இருந்ததா இல்லையா?  இருந்தது.  இருந்தும் தன் விழைவுக்கு எதிரான ஒரு கருத்தை சீதையின் முன் வைத்தான்.  இந்தப் பகுதியில் எல்லோரும் ‘எல்லையற்ற இடர் தருவாய்’ என்ற பாடலை மட்டுமே முன்வைத்து, அத்தனைத் துன்பத்துக்கும் சீதைதான் காரணம் என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பாடலுக்கு இரண்டு பாடல்கள் முன்னதாக, இராமன் உள்ளக் குறிப்பாகக் கவி இந்தப் பாடலைச் சொல்கிறான்:

அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,
எண்ணு கின்றனன், 'என்செயல் பாற்று?' எனா.

அவள் கண்ணில் பெருகும் நீரைப் பார்த்து, அவளைத் தனியாக விட்டு வனம்புக அவனுக்குச் சம்மதமில்லை.  இதில் ‘உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்’ என்று கம்பன் ஒற்றை அடியில் குறிப்பிட்டு அவசரமாக நகரும், அந்த, சீதையின் மனத்தினுள்ளே நிறைந்துள்ள கருத்தை உணர்ந்தானே, அதை என்ன வண்ணமாக உணர்ந்தான்?  அப்படி அவன் உணர்ந்த சீதையின் மனக் கருத்துதான் என்ன?

யாருமே மேற்கோள் காட்டி விளக்காத இந்தப் பாடலில், சொல்லப் போனால், கவனத்துக்குரியதாகவே கருதாமல் பெரும்பாலோனோர் நகர்ந்துவிடும் இந்தப் பாடலில் உள்ள அந்த ‘உள் நிவந்த கருத்து’ என்னவாக இருக்கும் என்றால், சம இடத்தில் வால்மீகி என்ன சொல்கிறாரோ அதே கருத்தாகத்தான் இருக்க முடியும்.  ஏனெனில் கம்பன் நடந்த பாதையே வால்மீகிதான்.  இந்தப் பாடலுக்கான வால்மீகி ராமாயண இணை-இடத்தையும் சேர்த்துப் படித்தால்தான் இந்தப் பாடலின் பொருள் சரிவரப் பிடிபடும்.  அதையும் செய்திருக்கிறோம்.

இனி, சுட்டிகள் இங்கே:

பகுதி 1 பாடல் 173 முதல் 178 வரை - இலக்குவன் வனம்புக வேண்டாம் என்று இராமன் சொல்லல்; இராமனுடைய மனத்தை இலக்குவன் மாற்றுதல்; இராமன்-வசிட்டன் உரையாடல்; இராமன், தசரதன் அரண்மனைக்குக் கிளம்புதல்

பகுதி 2 பாடல் 179 முதல் 205 வரை நகர மாந்தர் துயரம்

பகுதி 3 பாடல் 206 முதல் 218 வரை நகர மாந்தர் துயரம்; 219-220 இராமன், சீதையிருந்த இடத்துக்குச் செல்வது

பகுதி 4 221 முதல் 240 வரை - சீதை, தானும் வனம் புகுவேன் என்று வற்புறுத்துதல்; 229வது பாடலில் ‘உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்’ என்று இராமன் உணர்ந்தது எதனை என்பதை வால்மீகி ராமாயணத் துணையோடு விளக்கம்; இருவருக்கும் சிறிய விவாதம்; சீதை மரவுரி தரித்தபடி கிளம்புதல்; தசரதன் அரண்மனையை அடைந்த இராமன், தசரதனைச் சந்திக்காமலேயே வனத்துக்குக் கிளம்புதல்.

நீங்களும் பார்த்து, கருத்துகளைத் தெரிவித்தால், பயனுறுவோம்.   நன்றி.

Hari Krishnan

unread,
Nov 17, 2013, 11:07:38 PM11/17/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
அமர்வு நடந்து கொண்டிருக்கும் போதே, எழுத்தாளர் என் சொக்கன் உடனுக்குடன் ஒவ்வொரு செய்யுளுக்கும் ஒரு சுருக்கக் குறிப்பை வலையேற்றிக் கொண்டிருக்கிறார்.  முப்பத்தோறாம் அமர்வின் சுருக்கக் குறிப்புகளை--சொக்கனுடைய அபார ஆற்றலின் பயனை-- உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


சென்ற வார ராமாயண நாடகம் தொடர்கிறது:

ராமன்: (மர உரி அணியும் லட்சுமணனிடம்) ‘இசையினாய், நீ யான் புகல் ஓர் உறுதி கேள்.’

ராமன்: ‘அன்னையர் அனைவரும், வேந்தனும், துயரில் மூழ்கினார், என்னையும் பிரிந்தினர், இடர் உறாவகை உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்.’

லட்சுமணன்: ‘உனக்கு அடியனேன் பிழைத்தது யாது? நீர் உள எனின் உள மீனும் நீலமும், பாருள எனின் உள யாவும், நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளேம்?’

லட்சுமணன்: ‘ஒருத்தி சொல் கேட்டு பார்மகள் நைந்து நடுங்க, கான் நடத்தி எனா உய்ந்தனன் காவலன் மைந்தன் என்று சொல் வழங்கினாயோ?’

லட்சுமணன்: ‘ஐய (ராமா), நீ வனம் கொள்வாய் என ஏறின வெகுளியை ஆறினை தவிர்க என ஆணையின் கூறிய மொழியினும் கொடியதாம் (இது).’

லட்சுமணன்: ‘(ராமா), எனைக் கை துடைத்து ஏகவும் கடவையோ?’

இராமன் ஒன்று உரைக்க உன்னிலன். (லட்சுமணன்) வதனம் நோக்கினான், கண்ணின் மிக்க நீர் விழ நெடிது நிற்கின்றான்.

முனிவன் (வசிட்டன்) எய்தினான். குமரரும் சென்னி தாழ்ந்தனர்.

வசிட்டன்: (தனக்குள்) ‘மங்கலத்து நாள் சீரை சாத்தினான், ஊழ்வினை ஒழிக்கற்பாலதோ?’

வசிட்டன்: (தனக்குள்) வெவ்வினை அவள் தர விளைந்ததேயும் அன்று, எவ்வினை நிகழ்ந்ததோ, ஏவர் எண்ணமோ, செவ்விதின் ஒருமுறை தெரியும் பின்.’

வசிட்டன்: (ராமனிடம்) ‘ஐய, நீ கல் தடம் காணுதி என்னின், தானையான் (தசரதன்) வாழ்விலான்.’

ராமன்: ‘அன்னவன் (தசரதன்) பணி ஆற்றுதல் என் கடன், அவன் இடரை நீக்குதல் நின் கடன். இது நெறி.’

வசிட்டன்: ‘(தசரதன் உன்னைச்) சுரம் விரவு என்றான் அலன். (கைகேயி)தனக்கு ஆய்கிலாது வரம் தருவென் என்று ஏன்றது உண்டு.’

ராமன்: ‘ஏன்றனன் எந்தை, ஏவினாள் ஈன்றவள், யான் அது சென்னி ஏந்தினேன். சான்று என நின்ற நீ தடுத்தியோ?’

முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன். கணீர் நிலத்து உக (வசிட்டன்) நின்றனன், (ராமன்) போயினான் கொற்றவன் வாயில்.

அந்தணர், அருந்தவர், அவனி காவலர், நகர் உளார், நாட்டு உளார் சிந்தை என் புகல்வது? (ராமன் காட்டுக்குப் போவதால்) தேவரும் உள்ளம் வெந்தனர்.

விழுந்தனர் சிலர், சிலர் விம்மி எழுந்தனர், சிலர் கண்ணீரிடை அழுந்தினர், சிலர் துயரம் கூர்கின்றார்.

(மக்கள்) இரைத்தனர், எழுந்து, ஏங்கி, எங்கணும் தொடர்ந்து பின் செல, (ராமன்) உரைப்பதை உணர்கிலன், தன் மனையை நோக்கினான்.

மக்கள்: ‘(ராமன்) கானகத்து உறைவென் யான் என எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து அழுவதே? அழகு இவ் அன்பு!’

மக்கள்: ‘(ராமன் வனம் சென்றால்) உலகம் யாவையும் கானமே புகும், எனில் காதல் மைந்தனும் (பரதனும்) தானும் (கைகேயியும்) ஆளுங்கொல்?’

வரம்புஇலர் தொடர இராமன் சானகி இருந்துழி சார்ந்தான்.
சீரையின் உடையினன் வரும்படி பாரா எழுது பாவை அன்னாள் (சீதை) துணுக்கமொடு எழுந்தாள்.

மாமியர் தழுவினர். கணீர்ப் புனல் ஆட்டினர். புலம்ப… இன்னது என்று அறியாள் (சீதை) வள்ளலை நோக்கி…

சீதை: ‘கழலோய், துயர் என்னை உற்றது? இயம்பு.’

ராமன்: ‘பொரு இல் எம்பி புவி புரப்பான், இருவர் ஆணையும் ஏந்தினென், இன்று போய், கல் தடம் கண்டு நான் ஈண்டு வருவென், வருந்தலை நீ.’

நாயகன் வனம் நண்ணலுற்றான் என்றும், மண் இழந்தான் என்றும் விம்மலள், ‘நீ வருந்தலை, நீங்குவன் யான்’ என்ற சொல் செவி சுட தேம்புவாள் (சீதை)

சீதை: (மனத்துக்குள்) ‘ஐயனும் அன்னையும் சொன்ன செய்யத் துணிந்தது தூயதே, என்னை என்னை இருத்தி என்றாய்?’

ராமன்: ‘நின் சே அடிப் போது காட்டு அதர் கடுமைய அல்ல.’

சீதை: ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’

அண்ணல் (சீதையின்) கருத்து உணர்ந்தனன். எண்ணுகின்றனன், ‘என்செயல்பாற்று’ எனா.

(சீதை) சீரம் புனைந்தனள். வள்ளல்பின் வந்து நின்றனள், கரம் பற்றிய கையினாள்.

ராமன்: ‘(சீதையே), விளைவு உன்னுவாய் அல்லை, போத அமைந்தனை, ஆதலின் எல்லை அற்ற இடர் தருவாய்.’

சீதை: ‘துயரம் இது ஒன்றுமே, என் துறந்தபின் இன்பம்கொலாம்?’

பிறிதொர் மாற்றம் பெருந்தகை பேசலன். நெடுந்தெருச் சென்றனன்.

திருமகள் முன் செல, இளையவன் பின் செலக் காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்வூர் உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ!

மக்கள்: ‘வீரன் முன் வனம் மேவுதும் யாம்’ எனாப் போயினர்.

ராமன்: (தன் தாய்மார்களிடம்) ’மன்னரை ஆற்றுமின் நீர்’

மாதராரும் விழுந்து மயங்கினார். ஏத்தினார், வழுத்தினார்…

தாய்மார்கள்: (கடவுளிடம்) ‘(ராமன், சீதை, லட்சுமணனைக்) காத்து நல்குமின் தெய்வதங்காள்!’

முனிவனைக் கைதொழாத் தன்னது ஆருயிர்த் தம்பியும் தாமரைப் பொன்ன்னும் தானும் ஒரு தேர்மிசைப் போயினான்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 17, 2013, 11:44:59 PM11/17/13
to தமிழ் மன்றம், santhavasantham, mintamil, vallamai, தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S


2013/11/18 Hari Krishnan <hari.har...@gmail.com>


வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்பன் செய்துள்ள பெரிய பெரிய மாற்றங்களில் ஒரு சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.  முக்கியமானது, தசரதனிடம் விடைபெறாமல் இராமன் கான் ஏகுவது.  இது வால்மீகி ராமயணத்தில், நீண்ட வாக்கு வாதங்களுக்குப் பிறகு நடைபெறும் ஒன்று.  தசரதனுக்கும் இராமனுக்கும் இடையே நடைபெறும் அனைத்து வாதங்களையும் தவிர்த்து, எவ்வளவு சாமர்த்தியமாக கவி, தன் நாடகத்தை அழகு கெடாமல் நகர்த்துகிறான் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
அருமை. 

இலக்குவனைத் தன்னுடன் வரவேண்டாம் என்று இராமன் உரைக்க, இலக்குவன் துடிதுடித்துப் போய், ‘நீர் உள எனில் உள மீனும் ஆம்பலும்’ என்ற உவமையை வால்மீகியிலிருந்து அப்படியே எடுத்துத்தான் கம்பன் பயன்படுத்துகிறான்.  ஆனாலும், வான்மீகத்தில், சீதையைக் காட்டுக்கு வரவேண்டாம் என்று முதலில் தடுத்து, பிறகு சம்மதித்து, இவையெல்லாம் நடந்த பிறகே, இலக்குவன் இந்த வாக்கியத்தைப் பேசுகிறான்.

கம்பச்சித்திரத்தை மூலத்தோடு ஒப்பிட்டுக் காட்டிச் சிறப்பை உணர்த்தியுள்ளீர்கள். இவ்விரு நுணுக்க வேறுபாடுகளை யாரும் முன்பு கூறி நான் கேட்டதில்லை. நன்றி. 
  
இதன் பிறகு, சீதையைக் கானகத்துக்கு உடனழைத்துச் செல்ல இராமனுக்கு மனத்தில் எண்ணம் இருந்ததா இல்லையா?  இருந்தது.  இருந்தும் தன் விழைவுக்கு எதிரான ஒரு கருத்தை சீதையின் முன் வைத்தான்.  இந்தப் பகுதியில் எல்லோரும் ‘எல்லையற்ற இடர் தருவாய்’ என்ற பாடலை மட்டுமே முன்வைத்து, அத்தனைத் துன்பத்துக்கும் சீதைதான் காரணம் என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பாடலுக்கு இரண்டு பாடல்கள் முன்னதாக, இராமன் உள்ளக் குறிப்பாகக் கவி இந்தப் பாடலைச் சொல்கிறான்:

அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,
எண்ணு கின்றனன், 'என்செயல் பாற்று?' எனா.

அவள் கண்ணில் பெருகும் நீரைப் பார்த்து, அவளைத் தனியாக விட்டு வனம்புக அவனுக்குச் சம்மதமில்லை.  இதில் ‘உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்’ என்று கம்பன் ஒற்றை அடியில் குறிப்பிட்டு அவசரமாக நகரும், அந்த, சீதையின் மனத்தினுள்ளே நிறைந்துள்ள கருத்தை உணர்ந்தானே, அதை என்ன வண்ணமாக உணர்ந்தான்?  அப்படி அவன் உணர்ந்த சீதையின் மனக் கருத்துதான் என்ன?

யாருமே மேற்கோள் காட்டி விளக்காத இந்தப் பாடலில், சொல்லப் போனால், கவனத்துக்குரியதாகவே கருதாமல் பெரும்பாலோனோர் நகர்ந்துவிடும் இந்தப் பாடலில் உள்ள அந்த ‘உள் நிவந்த கருத்து’ என்னவாக இருக்கும் என்றால், சம இடத்தில் வால்மீகி என்ன சொல்கிறாரோ அதே கருத்தாகத்தான் இருக்க முடியும்.  ஏனெனில் கம்பன் நடந்த பாதையே வால்மீகிதான்.  இந்தப் பாடலுக்கான வால்மீகி ராமாயண இணை-இடத்தையும் சேர்த்துப் படித்தால்தான் இந்தப் பாடலின் பொருள் சரிவரப் பிடிபடும்.  அதையும் செய்திருக்கிறோம்.

ஆழ்ந்து முற்றோதலிலன் பயன் கவனத்துக்கு வராத பாடலையும் கவனித்துச் சிறப்பு உணரும் வாய்ப்பு என்பதை உணர்கிறேன்.
உள் நிவந்த கருத்தையும் விரித்து ஒரு பதிவாகத் தாருங்கள் திரு ஹரிகி .
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 17, 2013, 11:54:07 PM11/17/13
to தமிழ் மன்றம், santhavasantham, mintamil, vallamai, தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
முற்றோதலின் முடிவில் திரு சொக்கனின் சுருக்கக் குறிப்புகள் நண்பர் திரு ஹரிகி அவர்களின் அணிந்துரையோடு நூலாக மலர்ந்து தமிழில் ஒரு வகைப் புது முயற்சியாகத் திகழ வாழ்த்துகிறேன்.

திரு சொக்கன் அவர்களோடு முகநூலிலும் நண்பராக இருப்பதில் மகிழ்கிறேன். 

எல்லா நண்பர்களும் அங்கும் உலா வருகிறார்கள்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/11/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Nov 17, 2013, 11:56:28 PM11/17/13
to vallamai, isaikkav...@googlegroups.com, தமிழ் மன்றம், santhavasantham, mintamil, தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S

2013/11/18 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

ஆழ்ந்து முற்றோதலிலன் பயன் கவனத்துக்கு வராத பாடலையும் கவனித்துச் சிறப்பு உணரும் வாய்ப்பு என்பதை உணர்கிறேன்.
உள் நிவந்த கருத்தையும் விரித்து ஒரு பதிவாகத் தாருங்கள் திரு ஹரிகி .
அன்புடன்

மிக்க நன்றி திரு வினைதீர்த்தான் ஐயா.  நீங்கள் கேட்டுள்ள அந்த ‘உள் நிவந்த கருத்து’ குறித்து எழுதச் சற்று கால அவகாசம் தேவைப்படும்.  தற்போதைய பதிவுகளில் நான்காம் பகுதியில், 18:15ம் நிமிடத்திலிருந்து இந்த விவரம் தொடங்குகிறது.  தற்போதைக்குக் கேட்டு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Nov 24, 2013, 8:11:29 AM11/24/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S

முப்பத்திரண்டாம் அமர்வில் தைலமாட்டுப் படலத்தின் 87 பாடல்களையும் நேர நெருக்கடிக்கிடையே ஓதி முடித்தோம்.  இராமன் வனம்புகுவது; மக்கள் அவனைத் தொடர்வது; நள்ளிரவில் இராமன் சுமந்திரனைத் திருப்பி அனுப்பி, மூவரும் நடந்தே கானேகுவது; செய்தியை எப்படி, யார் மூலமாகத் தெரியப்படுத்த வேண்டும் என்று மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் குறிப்பிடுவது; தேரோசை கேட்டு, மகன் வந்துவிட்டான் என்று கண்களைப் ‘பொருக்கென’ விழித்த தசரதன், செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிவது; கௌசலை, சுமித்திரை, அறுபதினாயிரவரின் துயரம்; வசிஷ்டர் அவர்களெடுத்த முடிவைக் குறித்துப் பேசுவது (இந்தக் குறிப்பிட்ட பகுதி வான்மீகத்தில் இல்லாத ஒன்று); பரதனுக்கு வசிஷ்டர் ஓலை அனுப்புவது என்று இந்தப் படலம் பூர்த்தியாயிற்று.   பதிவுகளை உங்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கிறோம்.  

பகுதி 1



பாடல் 1-22: இராமன் வனம் புகலும்; மக்கள் தொடர்வதும்; சூரிய அஸ்தமனமும்; மக்கள் உறக்கம் கொள்வதும்.  இராமன் சுமந்திரனைத் தனியே அழைத்து, இரதத்தைத் திருப்பிக் கொண்டு அயோத்திக்குச் செல்லுமாறு பணித்தல்; ‘வெறுந்தேரனாய் நான் அங்கே சென்று என்ன சொல்வேன்’ என்று சுமந்திரன் வெதும்பல்.


பகுதி 2


பாடல் 23-48: சுமந்திரன் வெதும்புவதன் தொடர்ச்சி; இராமன் அவனுக்கு இதவுரை சொல்லல்; தான் வனம் புகுவதே அறம் என்று விளக்குதல்; இராமன், சீதை, இலக்குவன் ஆகியோர் பெரியவர்களுக்குச் செய்தி சொல்லி அனுப்புதல்; ‘என் மைனாவையும் கிளியையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி என் தங்கையரிடம் சொல்லவும்’--சீதையின் செய்தி; இலக்குவனுடைய சீற்றவுரை; இராமன் அவனை ஆற்றல்; சுமந்திரன் தேரேறி அயோத்தி திரும்புதல்; இராமனும் இலக்குவனும் சீதையும் நடந்து வனம் புகல்.

பகுதி 3



பாடல் 48-74: பாடல் 48 விளக்கத்தின் தொடர்ச்சி; சந்திர உதயம்; உதயகாலத்துக்குள் மூவரும் இரண்டு யோசனை தூரம் கடத்தல்; சுமந்திரன், வசிட்டனிடம் செய்தி சொல்லுதல்; இருவரும் தசரதனிடம் செய்தி உரைத்தல்; தசரதன் உயிர் பிரிதல்; கௌசலை, சுமித்திரை, அறுபதினாயிர மனைவியர்களின் துன்பம்; இவற்றை சுமந்திரன் மூலமாகக் கேள்விப்படும் வசிட்டனின் வருத்தம்.

பகுதி 4



பாடல் 75-87: வசிட்டன் வருத்தம் தொடர்ச்சி; தசரதன் உடலைத் தைலத்திலிடுதல்; பரதனை அழைத்து வருமாறு வசிட்டன் ஓலை அனுப்புதல்; சூரியோதயம்; வனத்தில் இருக்கும் மக்கள், இராமனைக் காணாமல் வருந்தல்; தேர்ச்சுவட்டைப் பார்த்து, இராமன் அயோத்தி திரும்பினான் என்ற மகிழ்ச்சியோடு திரும்பல்; திரும்பியதும், இராமனும் திரும்பவில்லை, தசரதனும் மாண்டான் என்று இரட்டைத் துயரால் மக்கள் நெகுதல்; வசிட்டன் மக்களைத் தேற்றுதல்; இனி இராமனுடைய செயலைச் சொல்வோம் என்ற கவிக்கூற்றுடன் படலம் முடிதல்.

உங்கள் கருத்துகளை வழக்கம் போல் வரவேற்கிறோம். 

Hari Krishnan

unread,
Nov 24, 2013, 8:14:25 AM11/24/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S

சொக்கனுடைய வகுப்புக் குறிப்புகளை இந்த மடலில் தருகிறோம்:

இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, நாடக வடிவில்

********************************

ஏவிய குரிசில் (சுமந்திரன் தேரில் ஏறிய ராமன்) பின் (அயோத்தி மக்கள் எல்லாரும் சென்றனர்).

அந்தியில் வெயில் ஒளி அழிய, இருண்டது

(ராமன்) ஓசனை இரண்டு சென்று ஒரு சோலை எய்தினான். இரத நின்று இழிந்தபின் ராமன் இன் துணை உரைசெறி முனிவரோடு உறையும்காலை…

வேந்தர், வேறுளோர் வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் சோலையின் புறத்தைச் சூழ்ந்து… தாம் விட்டிலர் குரிசிலை (ராமனை)

(மக்கள்) பைம்புலில்… அயின்றிலர் (சாப்பிடவில்லை), துயின்றிலர் (தூங்கவில்லை), அழுது விம்மினார்.

(ராமனுடன் தங்கிய பலவகை மக்கள்) நவ்வியர், கன்னியர், மைந்தர் (ஆண்கள்), மகளிர்… துயின்றார்

ஏனையரும் இன்னணம் உறங்க… (அப்போது)

ராமன்: (மந்திரி சுமந்திரனிடம்): ‘உன்னால் மேல் நிகழ்வது உண்டு, கேள்!’

ராமன்: ‘அன்பினாரைப் போக்குவது அரிது, ஈண்டு நின்று ஏகல் பொல்லாது, நீ இரதம் இன்னே தூண்டினை மீள நோக்கி…’

ராமன்: ‘சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே மீண்டனன் என்ன மீள்வர். இது நின்னை வேண்டிற்று.’

சுமந்திரன்: ‘இவ்வயின் நின்னை நீங்கி ஏகி அவ்வயின் (அயோத்தியில்) அனைய காண்டற்கு அமைந்தனன் அடியன்.’

சுமந்திரன்: ‘தேவியும் இளவலும் தொடர செல்வனைக் கானகம் புக உய்த்தேன் என்கோ? கோவினை உடன்கொடு குறுகினென் என்கோ? யாவது கூறுகேன்?’

சுமந்திரன்: ‘மைந்தரைப் பார் இடைச் செலுத்தினேன், தேரிடை வந்தனன் என்கோ? அரசனை(தசரதனை)ச் சொல்லினால் கொலை செய்வேன்கொலோ?’

சுமந்திரன்: ’வேள்வி செய்து பெற்ற நின் சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்தச் செல்கெனோ? என்னின் கேகயன் நங்கையே நல்லள் போலும்’

(சுமந்திரன்) இன்னன மொழிந்தபின்னரும் அடியுறத் தழுவினன், படி உறப் புரண்டனன்.(ராமன் அவனைக்) கையால் எடுத்து, தழுவி, கண்ண நீர் துடைத்து

ராமன்: ‘பிறத்தல் என்று உற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய், அவலம் உண்டெனா அறம் மறத்தியோ?’

ராமன்: ‘இன்பம் வந்து உறும் எனின் இனியது, ஆயிடைத் துன்பம் வந்துறும் எனில் துறக்கலாகுமோ?’

ராமன்: ‘சூரர் ஆவது வன்மை அன்று, இறப்பினும் திருவெலாம் இழப்ப, எய்தினும் துறப்பிலர் அறம் எனல்’

ராமன்: ‘மன்னர் தொல்குலம், யான் பிறந்து அறத்தின் நின்று இழுக்கிற்று என்னவோ?’

ராமன்: ‘புதல்வனை வனத்துள் விட்டனன் மன்னவன் தனக்கு அது அரும் தவம், தலைக்கொண்டு ஏகுதல் எனக்கு அரும் தவம், இரங்கல் எந்தை நீ?’

ராமன்: ‘முனிவனை (வசிஷ்டரை) இறைஞ்சி, வந்தனை கூறு, எந்தையை அவனொடும் எய்தி, என் சிந்தனை உணர்த்துதி.’

ராமன்: ‘எம்பியை (பரதனை) முறையில் நின்று இனியன இழைத்தி என்று இயம்பி, என் பிரி (தசரதனின்) தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி’

ராமன்: (பரதனிடம் சொல்லச் சொல்வது) ‘அன்னையால் விளைந்தது கவ்வை என்று நோக்கலன், என்வயின் வைத்த அவ் அருள் அவ்வயின் அருள்.’

ராமன்: ‘வேந்தனை (தசரதனை) அவலம் மாற்றி, பின், வேண்டினன் இவ்வரம் என்று மேலவன் ஈண்டருள் எம்பி (பரதன்) பால் நிறுவி…’

ராமன்: (தசரதனிடம் சொல்லச் சொல்வது) ‘ஏழிரண்டு ஆண்டு நீத்து வந்து உனைத் தாழ்குவன்’ என ‘மாதவன் சொலால் சொல்லி மனம் தெருட்டுவாய்’

ராமன்: ‘முறைமையால் என் பயந்து எடுத்த மூவர்க்கும் நெடு வணக்கம் கூறிப் பின் இறைமகன் (தசரதன்) துயர் துடைத்து இருத்தி’

வணங்கிய தேர்வலான் (சுமந்திரன்) வாள்வழி நோக்கியை (சீதையை) வணங்கி நோக்கினான்.

சீதை: ‘அரசர்க்கு, அத்தையர்க்கு என் வணக்கம் முன் இயம்பி, யான் உடைப் பொன்னிறப் பூவை, கிளி போற்றுகஎன்று என் தங்கயர்க்கு உணர்த்துவாய்’

(இதைக் கேட்ட சுமந்திரன்) பொருமி விம்மினான், சோர்கின்றான். இளைய மைந்தனை(லட்சுமணனை)க் ‘கூறுவது யாது’ என… இனைய கூறினான்.

லட்சுமணன்: ‘என் கோமகற்கு உதவிப் போக்கிய செல்வத்தைக் குழலிமாட்டு அளித்த மெய்யனை அரசன் என்று இன்னம் ஒன்று அறையற்பாலதோ?’

லட்சுமணன்: ‘கானகம் பற்றி புதல்வன் காய் உண, போனகம் பற்றிய பொய் இல் மன்னர்க்கு… (என்) வலிமை கூறு.’

லட்சுமணன்: ‘பரத வேந்தர்க்கு… என் மன்னுடன் பிறந்திலென், தன்னுடன் பிறந்திலென், தம்பி முன் அலன், என்னுடன் பிறந்தயான் வலியேன்’

ராமன்: (லட்சுமணனிடம்) ‘ஐய நீ சீரிய அல்லன செப்பல்!’

(சுமந்திரன் தேரைப்) போநெறிகாட்டினன், ஒருவரும் உணர்வுறாமலே ஓட்டினன்.
· 1

தையல்(சீதை) தன் கற்பும், தன் தகவும், தம்பியும் கருணையும் உணர்வும் வாய்மையும் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் (ராமன்) போயினான்.

(ராமன், சீதை, லட்சுமணன்) யோசனை இரண்டு சென்றான். தேரில் போனான் (சுமந்திரன்) செய்தது சொல்லலுற்றாம்.

கடிகை இரண்டு மூன்றில் அயோத்தி கண்டான். முனிவனை (வசிட்டன்) அடியினைத் தொழுதான். படியெலாம் கேட்டு உழந்தான், எலாம் உணர்ந்தான்.

வசிஷ்டன்: ‘அந்தோ! முடிந்தனன் மன்னன்!’

விம்மி, பொன் திணி மன்னன் (தசரதன்) கோயில் (வசிஷ்டன்) சுமந்திரனோடும் புக்கான்

தேர் கொண்டு வள்ளல் (ராமன்) வந்தான் என்று (அமைச்சர்கள்) சுற்றி… (ராமனைக்) கண்டிலர், பாகன் (சுமந்திரன்) நிலை கண்டே தீர்ந்தார்.

வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் (தசரதன்) மயக்கம் தீர்ந்தான். விழித்து நோக்கி, ‘வீரன் வந்தனனோ?’ என்றான்.

‘இல்லை’ என்று உரைக்கல் ஆற்றான், ஏங்கி முனிவன் (வசிஷ்டன்) நின்றான். ‘நம்பி நடந்திலன்’ என்னும் மாற்றம் சொல்லலும், அரசன் சோர்ந்தான்.

தசரதன்: (சுமந்திரனிடம்) ‘நம்பி சேயனோ, அணியனோ?’

சுமந்திரன்: ‘கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன்.’

(தசரதன்) ஆவி போனான்.

கோசலை மறுகி வீழ்ந்தாள். அரற்றலுற்றாள். சுமித்திரையும் ஏங்கி உயிர் சோர, மற்ற தேவியரும் வந்து இரைத்தார்.

(தசரதனின் மற்ற மனைவியர்) வஞ்சமில்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் (உடன்கட்டை ஏறுதல்)

சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல, முனிவன் (வசிஷ்டன்) விம்முவான்.

செய்யக் கடவ சிறுவர் ஈண்டையார் அல்லர். தையல் கடலில் கிடந்தானை(தசரதனை)த் தயிலக் கடலின் தலை உய்ர்த்தார்!

வசிட்டன்: (தசரதனின் மனைவியரிடம்) ‘இவற்கு உரிமை செய்யு நாளில் தீயில் ஆவி நீத்திர்’

வசிட்டர்: (தூதர்களிடம்) ‘பரதன் கொண்டு அனைக’ என்று ஏவினான்

(தூதர்கள்) கேகயர் கோன் நகரம் புக போனார்… (அப்போது காட்டில் இருந்த அயோத்தி) மாந்தர்க்கு விளைந்த பரிசு விளம்புவாம்

(காட்டில் அயோத்தி மக்கள்) எழுந்தார், கருமுகிலைக் (ராமனைக்) காணார், புரண்டார், ‘தொடர்தும் தேரின் சுவடு’ என்பார்

தேரின் சுவடு நகரின் மிசைத் திரிய திகிரிக் குறி கண்டார், உயிர் வந்தார், ‘ஆரும் அஞ்சலை, ஐயன் அயோத்தி அடைந்தான்’ என்ன ஆர்த்தார்.

(மக்கள்) உவகையராய் எழில் மா நகரம் (அயோத்தி) எய்தினார். அரசன் பொன்னுலகம் போனான் என்னும் பொருள் கேட்டார். உக்கார்.

’தக்கான் (ராமன்) போனான் வனம்’ என்னும் தகையும் உணர்ந்தார்… இன்னல் சிறையின் இடைப்பட்டார்.

(வசிட்டன்) பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான்…. வரிசிலைக் கை நம்பி (ராமன்) செய்கை நடத்துவாம்.

Hari Krishnan

unread,
Dec 1, 2013, 12:38:23 AM12/1/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
துன்பகரமான சில வாரங்களுக்குப் பிறகு ‘வெய்யோன் ஒளி தன்மேனியின்’ என்று அதி உற்சாகமாக முப்பத்து மூன்றாம் அமர்வு தொடங்கியது.

இதில்தான் குகன் அறிமுகமாகிறான்.  ‘நீ என் நண்பன்’  என்ற தொடங்கும் இராமன், மெல்ல மெல்ல ‘நீ என் உயிரனையன்’ என்பது வரையில் நெருக்கமாவதும், மூவரும் சித்திரகூடம் நோக்கிப் பயணிக்கக் கிளம்புவதுமாக இந்த அமர்வு முடிந்தது.

பதிவுகளுக்கான சுட்டிகள் இங்கே:

குதி 1

பாடல் 1 முதல் 18 வரை: இராம, இலக்குவ, சீதையர் வனம் புகுதல்; கங்கையை அடைதல்; தபோதனர் இராமனைக் காண வந்து, தரிசித்து, போற்றி, தம் இருப்பிடத்துக்கு அழைத்துப் போதல்; இராமன் கங்கையில் நீராடல்.

பகுதி 2 

பாடல் 19 முதல் 27 வரை: இராமன் நீராடல்; சீதை நீராடல்; மாலைக் கடன்களை முடித்த இராமன், முனிவர்களுடன் அமுதுண்ணல்; 28-35: குகன்--வருணனை; 36-41: இராமனைக் காண வந்த குகன், இலக்குவன் மூலமாக அனுமதி பெற்று இராமனைக் காண தவச்சாலையின் உள்ளே வருதல்https://www.youtube.com/watch?v=oG66Dc0vSz8
பகுதி 1

பாடல் 1 முதல் 18 வரை: இராம, இலக்குவ, சீதையர் வனம் புகுதல்; கங்கையை அடைதல்; தபோதனர் இராமனைக் காண வந்து, தரிசித்து, போற்றி, தம் இருப்பிடத்துக்கு அழைத்துப் போதல்; இராமன் கங்கையில் நீராடல்.

பகுதி 2 

பாடல் 19 முதல் 27 வரை: இராமன் நீராடல்; சீதை நீராடல்; மாலைக் கடன்களை முடித்த இராமன், முனிவர்களுடன் அமுதுண்ணல்; 28-35: குகன்--வருணனை; 36-41: இராமனைக் காண வந்த குகன், இலக்குவன் மூலமாக அனுமதி பெற்று இராமனைக் காண தவச்சாலையின் உள்ளே வருதல்.

பகுதி 3

பாடல் 41ன் தொடர்ச்சி. பாடல் 42-46: ‘நீ என் நண்பன்’ என்று குகனிடம் இராமன் சொல்வது; 47-54 குகனும் இலக்குவனும் காவல் நிற்க, சீதையும் இராமனும் துயிலுதல்; 55-56 சூரியோதயம்; 57-66 இராமனுடைய ஆணையின் பேரில் குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையில் செல்லுதல்.


பகுதி 4
பாடல் 67 முதல் 77 வரை: உடன் வருவேன் என்று இறைஞ்சும் குகனைத் தடுத்து விட்டு இராமன், சித்திரகூடத்துக்கு, சீதை, இலக்குவனுடன் கிளம்புதல்

சொக்கனுடைய வகுப்புக் குறிப்புகள் தனியாகத் தொடர்ந்து வருகின்றன.

நன்றி.

பகுதி 3

பாடல் 41ன் தொடர்ச்சி. பாடல் 42-46: ‘நீ என் நண்பன்’ என்று குகனிடம் இராமன் சொல்வது; 47-54 குகனும் இலக்குவனும் காவல் நிற்க, சீதையும் இராமனும் துயிலுதல்; 55-56 சூரியோதயம்; 57-66 இராமனுடைய ஆணையின் பேரில் குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையில் செல்லுதல்.

பகுதி 4
பாடல் 67 முதல் 77 வரை: உடன் வருவேன் என்று இறைஞ்சும் குகனைத் தடுத்து விட்டு இராமன், சித்திரகூடத்துக்கு, சீதை, இலக்குவனுடன் கிளம்புதல்

Hari Krishnan

unread,
Dec 1, 2013, 12:48:25 AM12/1/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S

இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes நாடக வடிவில், கம்பனின் சொற்களிலேயே:

பாகம் 1

(கானகத்தில் ராமன், சீதை, இலக்குவன் நடந்துசெல்லும் காட்சி)

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்,
மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ,
ஐயோ! இவன் வடிவென்பது ஓர் அழியா அழகு உடையான்!

வெளி அன்னதொர் இடையாளொடும் (சீதை) விடை அன்னதொர் நடையான் (ராமன்) களி அன்னமும் மட அன்னமும் உடன் ஆடுவ கண்டான்.

(கோசல) நாடு ஒரீஇ விரி திரைப் புனல் கங்கையை மேவினார்.

கங்கை தங்கி வைகும் தபோதனர் யாவரும் அங்கண் நாயகர் காண வந்து அண்மினார்.

இயம்ப அரும் இன்பத்தை (ராமனை) பசும் கண்ணின் நோக்கினர் (முனிவர்கள்). உள்ளம் களிக்கின்றார்!

வைகலும் நினையும் நெஞ்சினர், கண்டிலர், நேடுவார், அனையர் வந்துற எதிர்ந்தார்கள்போல் (அந்த மூவரையும்) மாதவப் பள்ளி கொண்டு எய்தினார்.

பொழியும் கண்ணில் புதுப் புனல் ஆட்டினர், இன்சொல் மலர் சூட்டினர், அன்பு எனும் ஆரமிழ்து ஊட்டினர், வழியின் வந்த வருத்தம் தணியவே.

காயும் கானில் கிழங்கும் கனிகளும் தூய தேடிக் கொணர்ந்தனர்.

முனிவர்கள்: 'தோன்றல் நீ, புனல் ஆடினை, தீயை ஓம்பினை, செய் அமுது!’

(ராமன்) மங்கையர்க்கு விளக்குஅன்ன மாதையும் (சீதை) கை பற்றினன், தேவரும் கை தொழ, அயன் தன் பாதத்தில் கம் கையில் தரும் கங்கையின் ஆடினான்.

கங்கை: (ராமனிடம்) ‘பார் உளோர் பாதகம் என்னில் நீக்குவர், யானும் இன்று என் தந்த உன்னில் நீக்கினேன், உயந்தனென்.’

இடைக்கு வஞ்சி நாண, நடைக்கு அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன கஞ்சம் நீரில் ஒளிப்ப, பாவையும் (சீதையும்) ஆடினாள் (கங்கையில் நீராடினாள்).

தேவன் (சிவன்) சடையுள் கோவை மாலை எருக்கொடு கொன்றையின் பூவும் நாறு அலள், (சீதை) பூங்குழல் கூந்தலின் நாவி நாள்மலர் கங்கையும் நாறினாள்.

மந்தாகினி (கங்கை) சீதை தனிமையை உன்னுவாள், திரைக் கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள்.

(ராமன்) புனலாடி, இறைவன் கை தொழுது, எரி ஓம்பிப் பின் அறிஞர் காதலுக்கு அமை விருந்து ஆயினான்.


கம்பனின் குக நாடகம் : Notes from our Bangalore Kamba RamayaNam class : Part 2

ஆயிரம் அம்பிக்கு நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான், தூய கங்கைத் துறை விடும் தொன்மையான், காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.

துடியன், (வேட்டை) நாயினன், தோல் செருப்பு ஆர்த்த பேர் அடியன், அல் செறிந்து அன்ன நிறத்தினான், இடி எழுந்தால் அன்ன ஈட்டினான்.

கொம்பு, துந்துபி, கோடு, அதிர் பேரிகை, பம்பை, பம்பு படையினன், பல்லவத்து அம்பன், அம்பிக்கு நாதன், தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான்.

காழம் இட்ட குறங்கினன், கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான், அரைத் தாழ விட்ட செந்தோலன், சூழவிட்ட புலி வாலினான்.

பல் கொடுத்து அன்ன கவடியன், கல் தொடுத்து அன்ன கழலினான், அல் தொடுத்து அன்ன குஞ்சியினான், கதிர் நெல் தொடுத்து நெரித்த புருவத்தான்.

வண்ண வன்மயிர் வார்ந்து உயர் முன்கையான், கண் அகல் தட மார்பு எனும் கல்லினான், எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.

கச்சொடு கறைக்கதிர் வாளினான், நச்சு அராவு நடுக்கு உறு நோக்கினான், பிச்சராம் அன்ன பேச்சினன், இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான்.

ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான், சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான், கூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான்.

சிருங்கி பேரம் எனத் திரைக் கங்கையின் மருங்கு நகர் உறை வாழ்க்கையன், ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், வள்ளலைக் காண வந்து எய்தினான்.

சுற்றம் அப்புறம் நிற்க, சுடு கணை வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து (குகன்) நல் தவப்பள்ளி வாயிலை நண்ணினான்.

குகன்: ‘இறைவா, இன்றே நின் பணி செய்திட நன்றே வந்தனன், நாயடியேன் யான்!’

லட்சுமணன்: ‘நீ யாவன்? யா?’

குகன்: ‘தேவா, நின் கழல் சேவிக்க வந்தனன், நாவாய் வேட்டுவன், நாயடியேன்.’

லட்சுமணன்: (குகனிடம்) ‘நிற்றி ஈண்டு.’

லட்சுமணன்: (ராமனிடம்) ‘கொற்றவ, நின்னைக் காண நிமிர்ந்த கூட்டச் சுற்றமும் தானும் குறுகினன்.’

லட்சுமணன்: (ராமனிடம்) ‘தூயவன், தாயின் நல்லான், எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன் ஒருவன்.’

ராமன்: ‘நீ என் பால் அழைத்தி அவனை.’

லட்சுமணன்: (குகனிடம்) ‘வருக!’

(குகன்) புக்கான், (ராமனை) நோக்கிக் களித்தனன், பணிந்து நின்றான்.

ராமன்: ‘இருத்தி ஈண்டு!’

(குகன்) இருந்திலன்.

குகன்: ‘தேனும் மீனும் திருத்தினன் கொணர்ந்தேன், என் கொல் திருவுளம்?’


ராமன்: ‘அரிய, உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே!’

ராமன்: ‘பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம், எம்மனோர்க்கும் உரியன, இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ!’

ராமன்: ‘யாம் இங்கு உறைந்து கங்கை ஏறுது நாளை, நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் தங்கி, நாவாயொடும் சாருதி விடியல்.’

குகன்: ‘செல்வ, நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான், இருக்கை நோக்கித் தீர்கிலேன், ஐய, ஆனது செய்குவென், அடிமை!’

உவகை தூண்ட, அழைத்தனன், சேனை வெள்ளம் பள்ளியைச் சுற்ற, சிலை பிடித்து, வாளும் வீக்கி, அம்பு பற்றி (ராமன்) இணை அடி ஏத்தி நின்றான்.

குகன்:‘திருநகர் தீர்ந்தவண்ணம் மானவ, தெரித்தி!’

பருவரல் தம்பி கூற...

குகன்:‘பெருநிலக் கிழத்தி (பூமாதேவி) நோற்றும் பெற்றிலள்போலும்.’

அமுது அன்னாளும் (சீதை) வீரனும் (ராமன்) விரித்த நாணல் பாயல் வைகினர். தம்பி (லட்சுமணன்) இமைப்பிலன், வரிவில் ஏந்திக் காத்து நின்றான்.

துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும்...

லட்சுமணன்: ‘நாமே எயில் உடை அயோத்தி மூதூர் எய்துநாள் எய்துக.’

வீரன் (லட்சுமணன்) ஆணையை மறுத்தல் செல்லா, உறக்க மாது பங்கயங்கள் போற்றி, ’அயோத்தி எய்தி இறுக்கும் நாள் பாதம் எய்துவல்’ என்று போனாள்.

பொன் தொடியோடும் ஐயன் துயில் தரும் புன்மை நோக்கி, இற்றதோர் நெஞ்சன் ஆகி, இரு கண் நீர் அருவி சோர ஓவியம் என்ன நின்றான்.

(குகன்) தம்பி நின்றானை (லட்சுமணன்) நோக்கி, தலைமகன் (ராமன்) தன்மை நோக்கி கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்.

(மறுநாள் காலை)

ராமன்: (குகனிடம்) ‘ஐய, கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவில்!’

(குகன்) உலைகின்றான். (ராமனின்) அடியிணை பிரிகல்லான்.

குகன்: ‘பொய்ம்முறை இலரால் வெம் புகலிடம் வனமேயால்!’

குகன்: ‘குறைவிலெம், வலியேமால், செய்ம்முறை குற்றேவல் செய்குதும், அடியோமை இம்முறை உறவு என்னா, இனிது இரு நெடிது எம் ஊர்.’

குகன்: ‘தேன் உள, தினை உண்டாம், ஊன் உள, துணை நாயேம் உயிர் உள, விளையாடக் கான் உள, புனல் ஆடக் கங்கை உளது, நான் உளதனையும் நீ இனிது இரு, நட எம்பால்.’

குகன்: ‘துகில்போலும் தோல் உள, சுவை உள, தொடர்மஞ்சம் போல் உள பரண், வைகப் புரை உள, கடிது ஓடும் கால் உள, சிலை பூணும் கை உள.’

குகன்: ‘வானின் மேலுள பொருள் ஏனும் விரைவொடு கொணர்வேமால்.’

குகன்: ‘ஐ இருபதோடு ஐந்தாயிரர் உளர் (ஐந்து லட்சம் வேடர்கள்), ஆணை செய்குநர், தேவரின் வலியாரால்.’

ராமன்: ‘வீர! நின்னுழை யாம் அப் புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது!’

(குகன்) சென்றனன் விரைவோடும், தந்தனன் நெடுநாவாய்.

தாமரை நயனத்தான் (ராமன்) அந்தணர்தமை ‘அருளிதிர் விடை’ என்னா... (படகில் ஏறினான்)

ராமன்: ‘விடு நதி கடிது!’

(குகன்) குடுகின நெடுநாவாய் கடிதினின் செல, மறையோரும் எரியுறு மெழுகு ஆனார்.

பாலுடை மொழியாளும் (சீதை) பகலவன் அனையானும் (ராமன்) சேல் உடை நெடுநல்நீர் சிந்தினர் விளையாட.

(அக்கரை சென்று சேர்ந்தனர்)

ராமன்: (குகனிடம்) ‘சித்திரகூடத்தில் செல் நெறி பகர்!’

குகன்: ‘உத்தம! நாயேன் ஓதுவது உளது!’

குகன்: ‘நெறி இடு நெறிவல்லேன், நறியன கனியும் காயும் நறவு இவை தர வல்லேன், உறைவிடம் அமைவிப்பேன், நொடி உம்மைப் பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென்.’

குகன்: ‘தீயன திசை திசை செல நூறித் தூயன உறை கானம் துருவினென், வரவல்லேன், மேயின பொருள் நாடித் தருகுவென்.’

குகன்: ‘வினை முற்றும் ஏயின செயவல்லேன், இருளினும் நெறி செல்வேன்.’

குகன்: ‘கவலையின்முதல் யாவும் கல்லுவென், செல்லுவென் நெறி தூரம், செறிபுனல் தரவல்லேன், வெருவலென் ஒருபோதும், (ராமா உன்) மலர் அடி பிரியேன்.’

குகன்: ‘திருவுளம் எனில், என் சேனையும் உடனே கொண்டு ஒருவலென், மருவலர் உளர் ஆனால், முன்னே மாய்குவென், வசை இல்லேன், உடன்போதுவென்.’

ராமன்: ‘என்னுயிர் அனையாய் நீ, இளவல் உன் இளையான், இந்நன்னுதல் நின் கேள், நிலமெல்லாம் உன்னுடையது, நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்.’

ராமன்: ‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது, அது அன்றிப் பின்பு உளது, இடைமன்னும் பிரிவு உளது என உன்னேல்.’

ராமன்: ‘அன்புள, முன்பு உளெம் ஒரு நால்வேம், இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்.’

ராமன்: ‘கான் உறை பகலெல்லாம் படர் உற (துன்பத்தைத் தாங்க) உம்பி (லட்சுமணன்) உளன், இடர் உறு பகை யா?’

ராமன்: ‘சொல்முறை கடவேன் யான், வடதிசை வரும் அந்நாள் நின் உழை வருகின்றேன்.’

ராமன்: ‘அங்கு உள கிளை காவலுக்கு உம்பி (பரதன்) உளன். இங்கு உள கிளை காவலுக்கு யார் உளர்? உன் கிளை எனதன்றோ? உறுதுயர் உறலாமோ?’

ராமன்: ‘என் கிளை இது கா, என் ஏவலின் இனிது!’

பணிமொழி கடவாதான் (குகன்) விடைகொண்டான். அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் கானில் சென்றார்.

வருந்தித் தான் தர வந்த அமுதையும் ‘அருந்து நீர்’ என்று அமரரை ஊட்டினான், விருந்து மெல் அடகு உண்டு...



Hari Krishnan

unread,
Dec 10, 2013, 3:52:59 AM12/10/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மதியம் வரை நடந்த 34ம் அமர்வில் வழக்கத்துக்கு மாறாகக் குறைந்த அளவில்தான் (54 பாடல்கள்) ஓத முடிந்தது.  இடையில் சில விவாதங்கள் எழுந்ததாலும், எனக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டிருந்ததாலும் ஓதியிருக்க வேண்டிய பாடல்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.  ஆனால் விவாதங்கள் சுவையாகத்தான் இருந்தன.  வனம்புகு படலம் முழுவதும் முடித்து, சித்திரகூடப் படலத்தில் முதல் பத்துப் பாடல்களை முடித்திருக்கிறோம்.

சித்திரகூடப் படலம் அடுத்த அமர்வில் முடிந்து விடும்.   நான் இருக்க மாட்டேன்.  பதிவுகள் தொடரும்.   பள்ளிபடைப் படலத்துக்கு (பள்ளிபடை படலமா, பள்ளிப்படை படலமா, பள்ளியடை படலமா என்று ஒரு பெரிய விவாதமே உண்டு) நான் வந்து விடுகிறேன்.  

சனிக்கிழமை இரவே பதிவுகளை ஏற்றிவிட்டாலும், ஞாயிறு காலையிலிருந்து மைசூரில் இருப்பதால் இம்முறை அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.  ‘எங்கே’ என்று கவனித்துக் கேட்டவர்களுக்கு நன்றி.  இதோ உங்கள் பார்வைக்காக 34ம் அமர்வின் பதிவுகள்:

Hari Krishnan

unread,
Dec 10, 2013, 3:56:47 AM12/10/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S

சொக்கனுடைய வகுப்புக் குறிப்புகள்:

இன்றைய ராமாயண வகுப்பு, நாடக வடிவில்:

(ராமன், சீதை, லட்சுமணன் நடந்து செல்லும் பாதையில்) வெயில் இளநிலவே போல் விரிகதிர் இடை வீச... மயில் இனம் நடமாடும் வழி இனியன போனார்.

ராமன்: (சீதையை வர்ணித்தல்) ‘கோதாய், மயில் இயல் மட மானே, நின சாயல் பொலிவது மயில், சேந்து (சிவந்து) ஒளி விரிச் செவ்வாய்ப் பைங்கிளி.’

‘மாந்தளிர் நறுமேனி மங்கை, நெய்ஞ்ஞிறை நெடுவேலின் நிழல் உறு திறம் முற்றி கைஞ்ஞிறை நிமிர் கணாய்.’

‘பல மஞ்ஞையும் மானும் நின் விழி கண்டு வருவன, அருந்ததி அனையாளே, அமுதினும் இனியாளே.’

‘ஏந்து இள முலையாளே, எழுதரும் எழிலாளே, அகில் புனை குழல் மாதே, வில் திரு நுதல் மாதே, அன்ன மெல் நடையாய்.’

‘அணங்கினும் இனியாய், குயிலே, உன் துடி புரை இடை நாணி கொம்பர்கள் துவள்வன.’

‘வாள் புரை விழியாய், தாள் புரை தளிர், குழல் புரை மழை, தோள் புரை இளவேயின் தொகுதிகள் (மூங்கில்).’

.... என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி பொன் திணி திரள் தோணன் போயினன்.

ராமன்: ‘அத் திருமலை (சித்திரகூடம்) இது அன்றோ?’

பரத்துவன் எனும் முனி (ராமனை) எதிர் கொளவந்தான்.

(பரத்துவாசன்) குடையினன், நிமிர்கோலன், குண்டிகையினன், மூரிச் சடையினன், மானின் சருமனன், மர நாரின் உடையினன். மயிர் நாலும் (தொங்குகிற) உருவினன், நெறி பேணும் நடையினன், மறை நாலும் நடம் நவில் தரு நாவான். செந்தழல் புரிசெல்வன், திசைமுக முனி, உயிரெல்லாம் தன் உயிரென நல்கும் அந்தணன். ‘உலகு ஏழும் அமை’ எனின், அமரேசன் உந்தியின் (பிரம்மா) உதவாமே உதவிடு தொழில் வல்லான்...

அம்முனி வரலோடும், அனகனும் (ராமன்) மலர் தூவி மும்முறை தொழுதான். முனிவனும் எதிர்புல்லி...

பரத்துவாசன்: ‘இம்முறை உருவோ நாம் எய்துவது?’ ... விம்மினன், கண்ணீர் விழிவழி உக நின்றான்.

பரத்துவாசன்: ‘இகல் அடு சிலை வீர! ஆளும் அமைதியை, அது தீரு, எமது புகல் இடம் ஆகும் புரையிடை தகவு இல் தவ வேடம் தழுவினை, இளையவனொடும் வருவான் ஏன்?'

உற்றுள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்.

பரத்துவாசன்: ‘அந்தோ! விதி தரு நவை! பெருநிலமகள் தவம் பெற்றிலள்!’

பரத்துவாசன்: ‘ஞாலம் ஆளுதி என்னா, ஒப்ப அறு மக நின்னை வனம் ஏகு என்று எப்பரிசு உய்ந்தான் என் துணை (தசரதன்) அவன்?’

பரத்துவாசன்: ‘அல்லலும் உள, இன்பம் அணுகலும் உள அன்றோ! நல்லவும் உள, செய்யும் நவைகளும் உள அன்றோ!’

பரத்துவாசன்: ‘இடர் உறும் இதின் இல்லை ஒர் பயன்’... புல்லினன், உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான்.

உறைவிடம் நல்கி, பூசனை முறை பேணி, தக்கன கனி காயும் தந்து ... நல்முறை கூறி ... அருள் உற்றான் ... மைந்தரும் மகிழ்வுற்றார். வைகினர்.

பரத்துவாசர்: (தனக்குள்) ‘இவனொடு யாம் உறைதலின், உய்குவெம்’

பரத்துவாசர்: (ராமனிடம்) ‘கொய் குல மலர் மார்ப! கூறுவது உளது!’

பரத்துவாசர்: ‘(எங்கள் இடத்தில்) நீர், மலர், கனி, கிழங்கு, காய் நிறையும், தீயவை குறையும், தூயவை குறைவில!’

பரத்துவாசர்: ‘உயர்தவம் முயல்வார்க்கு இறையும் ஈது அலாது அரிது! இவ்வழி எம்மொடு ஒருங்கினில் உறையும்.’

பரத்துவாசன்: ‘கங்கையாளொடு கரியவள், நாமகள் கலந்த சங்கம், அயனுக்கும் அருபெறல் தீர்த்தம், எங்கள்போலியர் தரத்தது அன்று, ஈண்டு இருத்திர்.’

ராமன்: ‘இது நிறைபுனல் நாட்டுக்கு (கோசலத்துக்கு) நீண்டது அன்று, நடு ஆம், இவ்வழி வைகுவென் என்றால் யாவரும் ஈண்ட நெருங்குவர்.’

பரத்துவாசர்: ‘ஆவது உள்ளதே... ஐயிரண்டு காவதம் பொழிற்கு அப்புறம் கழிந்தபின் சித்திரக்கூடம் என்று உளது.’

(பரத்துவாசரின்) அடி தொழுது ஏத்தி, முல்லை, குறிஞ்சி கடந்துபோய், காளிந்தி (யமுனை) எனும் நதி கண்டார்.

ஆறு (யமுனை) கண்டனர். அகமகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து நீறு தோய் மேனியர் நெடும்புனல் படிந்தார், கனி, கிழங்கினோடு உண்டு நீருண்டார்.

ராமன்: ‘(இந்த ஆற்றை) ஏறி ஏகுவது எங்ஙனம்?’

இளையோன் (லட்சுமணன்) வேய்ங்கழை துணித்தனன், மாணையின் கொடியால் தெப்பமொன்று அமைத்து.. அதின் (அந்தத் தெப்பத்தின்) அண்ணல், தேவியோடு இனிது வீற்றிருப்ப, (லட்சுமணன்) இரு கையால் நீந்தி அந்த நெடுநதி நீங்கினான்.

அனையர் அப்புனல் ஏறினர், அக்கரை அணைந்தார், நிலம் தீய்ந்து நினையும் நெஞ்சமும் சுடும் நெடும் சுரம் (பாலைவனம்) நேர்ந்தார்.

ராமன்: ‘நீங்கல் ஆற்றலள் சனகி’...

வெய்யவன் உடுபதி (சந்திரன்) எனக் கதிர் உகுத்தான். உலவைகள் தழைத்த, கனல் பங்கய வனங்களாய்ப் பரந்த.

பரல்கள் பறித்து வீழ்த்திய மலர் எனக் குளிர்ந்தன, வல்லிகள் இளம் தளிர் ஈன்ற, வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த.

குழுமி மேகங்கள் குமுறின, குளிர்துளி கொணர்ந்த... பசி இல, பகை இல, உழுவை(புலி)யின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட.

வெளிறு நீங்கிய பாலையின் மெல்லெனப் போனார். அச் சித்திரகூடத்தைக் கண்டார்

அமலன் (ராமன்) சனகன் மாமடமயிலுக்கு (சீதைக்கு) அந்தச் சந்தனம் செறிந்த கனகமால்வரை (சித்திரகூடமலை) இயல்பெலாம் தெரிவுறக் காட்டும்

ராமன்: (சீதையை வர்ணித்தல்), ‘வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே, குருதி வாள் என செவ்வரி பரந்த கண் குயிலே!’

‘வடம் கொள் பூண் முலை மடமயிலே, உவரிவாய் அன்றி, பாற்கடல் உதவிய அமுதே!’

‘இழைந்த நூல் இணை மணிக்குடம் சுமக்கின்றது என்னக் குழைந்த நுண் இடைக் குவி இள வன முலைக் கொம்பே!’

ராமன்: ‘மருப்பு யானை, உருகு காதலில் தழை கொண்டு செந்தேனினை பெருகு சூல் இளம்பிடிக்கு பருக வாயினில் அளிப்பது பாராய்.’

Hari Krishnan

unread,
Dec 18, 2013, 4:37:46 AM12/18/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
முப்பத்தைந்தாம் அமர்வில் நானும் இல்லை; .ஜடாயுவும் இல்லை.  எழுத்தாளர் சொக்கன் தலைமையேற்று நடத்தி, சித்திரகூடப் படலத்தின் மீதப் பாடல்களையும் பள்ளிபடைப் படலத்தின் ஆரம்பப் பாடல்களையும் ஓதி முடித்திருக்கிறார்கள்.  இந்தமுறை, சொக்கன் வகுப்பயைம் நடத்தியவாறு, வகுப்புக் குறிப்புகளையம் கூடவே தயாரித்திருக்கிறார்.  அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  மிக அருமையான பகுதி.  நல்ல விளக்கங்கள்.  உங்கள் பார்கைக்காக அனுப்புகிறோம்.

ஜனவரி இரண்டாம் வாரத்துக்குள் அயோத்தியா காண்டத்தை முடித்து, ஆரணிய காண்டத்தைத் தொடங்கிவிடுவோம் என்று நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.  அருமையான குழு. அருமையாக ஆதரவு நல்கும்  பல்வேறு இணையக் குழுமத்தார்.  எல்லாம் கலைமகள் ஆசி; கம்பன் ஆசி.


உங்கள் கருத்துகளை எப்போதும்போல் வரவேற்கிறோம்.

Hari Krishnan

unread,
Dec 18, 2013, 4:42:14 AM12/18/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
இன்றைய வகுப்பு Notes: கம்பனின் சொற்களிலேயே

(சித்திரகூட மலையில் ராமனும் சீதையும் லட்சுமணனும் நடந்து செல்லும் காட்சி.)

ராமன்: (சீதையை வர்ணித்தல்) ‘ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!’

‘வில்லி வாங்கிய சிலை எனப் பொலிநுதல் விளக்கே!

’ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!’

‘வீறு பஞ்சு இன்றி அமுத நெய் மாட்டிய விளக்கே!’

’சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே!’

‘வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர்க் கொழுந்தே!’

‘நான நாள் மலர் நறை அகில் ஆவி தேன் நாறும் சோனை வார் குழல் சுமை பொறாது இடுகு இடைத் தோகாய்!’

‘சுழித்த தண்புனல் சுழி புரை உந்தி இன் துணையே!’

‘நினைந்தபோதினும் அமிழ்து ஒக்கும் நேர் இழை!’

‘இலவும் இந்திர கோபமும் புரை இதழ் இனியாய்!’

‘செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர் கொம்பர் தாங்கியது எனப் பொலி வன முலைக் கொடியே!’

‘மடைந்த மார்களில் திலதமே!’

‘குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே!’

‘வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே!’

‘வடுகின் மாவகிரு இவை எனப் பொலிந்த கண் மயிலே!’

‘பாந்தள், தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்!’

‘அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரு கலமே!’

‘தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே!’

‘நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்ட, மை நிறைந்த வைகொள் வேல் எனக் காலனும் மறுகுறும் கண்ணாய்!’

‘விடம் கொள் நோக்கி!’

(ராமன்) மால்வரை அரும் தவர் எதிர்வர வணங்கி, வேதியர் விருந்தினன் ஆனான்.

(ராமன்) அந்தியை நோக்கினான்.

மருங்கிலாளொடும் (சீதை) மேலவன் (ராமன்) இருந்திட விரும்பியே நல்குணத்து இளம் குரிசில் (இலக்குவன்) ஆங்கு ஒரு சாலையை வகுத்தமை சாற்றுவாம்!

இன்னணம் இளையவன் (லட்சுமணன்) இழைத்த சாலையில், பொன்னிறத் திருவொடும் (ராமன்) குடிபுக்கான்.

ராமன்: (லட்சுமணனிடம்) ‘குன்று போலக் குலவிய தோளினாய், என்று கற்றைனை நீ இதுபோல்?’

ராமன்: (லட்சுமணனிடம்) ‘இடர் உனக்கு இழைத்தேன்!’

லட்சுமணன்: ‘எந்தை, இடர் உனக்கு முந்தி வந்து முளைத்ததன்றோ!’

ராமன்: (தனக்குள்) ‘செய்தக்கது இல்லை, சோக பங்கம் துடைப்பது அரிது!’

ராமன்: (லட்சுமணனிடம்) ‘மன்னும் செல்வத்துக்கு உண்டு வரம்பு, இதற்கு எல்லை இல்.’

(அவர்கள் மனத்தைத் தேற்றிக்கொண்டு அங்கே வசிக்கிறார்கள்.)

*********************

(வசிஷ்டர் கட்டளைப்படி பரதனை நோக்கிச் செல்கிறவர்களின் காட்சி)

இரவு, நன்பகல் கடிது ஏகினார், பரதன் கோயில் உற்றார்.

தூதுவர்கள்: (வாயில்காப்போனிடம்) ‘படிகாரிர், மன்னவர்க்கு எம் வரவு சொல்லுதிர்!’

வாயில்காப்போன்: (பரதனிடம்) ‘தூதர் வந்தனர், உந்தை சொல்லோடு!’

(பரதன்) காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்...

பரதன்: ‘போதுக ஈங்கு!’

பரதன்: (தூதுவர்களிடம்) ‘தீதிலன்கொல் திருமுடியோன்?’

தூதுவர்கள்: ‘வலியன்!’

பரதன்: ‘இலை கொள் பூண் இளம்கோ, எம் பிரானொடும் உலை இல் செல்வத்தனோ?’

தூதுவர்கள்: ‘உண்டு!’

தூதுவர்கள்: ‘கொற்றவன் தன் திருமுகம் கொள்க!’

(பரதன்) காதலில் பொங்கினான், தம்முனைக் (ராமனைக்) காணலாம் எனும் ஆசை கடாவவே.

பரதன்: ‘எழுக சேனை’... 

கேகயர் கோமகன் சொல்லொடும் தம்பியொடு தேர் ஏறினான் (பரதன்).

ஆறும் கானும் மலையும் கடந்து கோசலம் நண்ணினான்

Hari Krishnan

unread,
Dec 22, 2013, 8:37:45 AM12/22/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
முப்பத்தாறாம் அமர்வு, பள்ளிப்படைப் படலத்தின் பதினெட்டாம் பாடலில் தொடங்கி, பரதன் சூளுரை மேற்கொள்ளும் பாடலுக்கு முதற்பாடலான 97ம் பாடலோடு நிறைவு பெற்றது.  

மிக உற்சாகமாக கேகய நாட்டை விட்டுக் கிளம்பும் பரதன், அயோத்திக்குள் புகுகையில், long shotல் அயோத்தி நகரம் களையில்லாமல் இருப்பதைப் பார்ப்பதும்; மெல்ல மெல்ல ஊகிப்பதும்; ‘ஏதோ தீக்குறி இருக்கிறது’ என்று சத்ருக்னனுடன் பேசியவாறு தசரதனைத் தேடிக் கொண்டு செல்வதும்; கைகேயியின் பணிப்பெண் அவளை ‘அன்னை அழைத்தனள்’ என்று உடனழைத்துச் செல்வதும்... கைகேயி மெல்ல மெல்ல ஒவ்வொரு செய்தியாக நழுவவிடுவதும், இறுதியில் பரதன் அவளைக் கேள்விகளால் கசக்கிப் பிழிந்து உண்மை முழுவதையும் வரவழைப்பதும், தீராப்பழி ஏற்பட்டுவிட்டதே என்று பரதன் துடிப்பதும்; கோசலையைத் தேடிக் கொண்டு சென்று அவள் பாதத்தில் விழுந்து கதறுவதும்; ‘இவனிடத்தில் குற்றமில்லை’ என்று தெளிவுபெற்ற கோசலை, ‘பரதா, உனக்கு நிஜமாகவே கைகேயி (கேகயன் மகள்) செய்ததைப் பற்றி ஒன்றுமே தெரியாதா’ என்று மென்மையாகக் கேட்க, துடித்துப் போன பரதன், சூளுரை மேற்கொள்ளத் தொடங்குவதுமாக இந்த அமர்வு நிறைவுற்றது.  தொடர்சியாகப் பார்க்க வேண்டுமென்பதால் இருபது பாடல்களில் (அமர்வில் நினைவுப் பிறழ்ச்சியால் பதினான்கு என்று சொல்லியிருக்கிறேன்.  அது தவறு.) பரதன் மேற்கொள்ளும் சூளுரையை அடுத்த அமர்வில் பார்த்து, ஆறு செல் படலத்தில் ஒரு பகுதியையும் முடிப்பதாகத் திட்டமிட்டிருக்கிறோம்.

கிறிஸ்த்மஸ் விடுமுறை வருவதால் அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்னொரு அமர்வும் ஓதலாம் என்று, அடுத்த அமர்வுக்கு 25ம் தேதி, புதன் கிழமை குறிக்கப்பட்டுள்ளது.  

முப்பத்தாறாம் அமர்வின் பதிவுகள் கீழே:

Part 1
படலத் தலைப்பு பற்றிய முன்னுரை; பாடல் 18-38 வெறிச்சோடிக் கிடக்கும் அயோத்தியைக் கண்டவாறு பரத சத்துருக்கனர்கள் வருவதும், உரையாடிக் கொள்வதும்; 39-40 தசரதனைத் தேடி அவனுடைய அரண்மனைக்குப் போன பரதன், அங்கே அவனைக் காணாமல் திகைத்தல்; 41 ஒரு பணிப்பெண், ‘கைகேயி அழைக்கிறாள்’ என்று பரதனை அழைத்தல்; 42-43 கைகேயி-பரதன் உரையாடல் தொடக்கம்.


Part 2
பாடல் 44-57: தசரதன் இறந்தான் என்று மிகச் சாதாரணமாகக் கூறும் கைகேயி மொழியும்; தசரதன் இறந்ததற்காகக் கலங்கும் பரதன், கைகேயியை கோபிக்கத் தொடங்குவதும்; 58-70: ராமனும் கான் ஏகினான் என்று அடுத்த வெடிகுண்டு விழவும், பரதன் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு, முழு உண்மையையும் கைகேயின் வாய் மூலமாக வரவழைப்பதும், ‘உன்னைக் கொல்லாமலிருக்கிறேன் என்றால், அது நீ எனக்குத் தாய் என்பதனால் அன்று; அப்படிச் செய்தால் இராமன் என்னைக் கடிந்து கொள்வான் என்று அஞ்சி’ என்று பரதன் சீறுவது வரை.

Part 3
பாடல் 71-87 பரதன், கைகேயியை மேலும் மேலும் சினத்தலும்; தனக்கு கைகேயி தேடி வைத்துள்ள பெரிய பழியை எண்ணி எண்ணித் துடிப்பதும்; ‘இராமன் தவம் செய்யச் சென்றானா!  நானே மாதவம் முயல்கின்றேன்’என்று தவம் மேற்கொள்ளப் போவதாக பரதன் சூளுரைத்தல்; 88-94 கைகேயியின் அருகில் இருக்கப் பிடிக்காமல், கௌசலையைத் தேடிப் போகும் பரதன், அவள் கால்களின் விழுந்து புலம்புதல்; 95-96 ‘இவன் குற்றமற்றவன் என்று அறிந்து கொண்ட கௌசலை சினம் நீங்கி, மனத் தளர்ச்சியெய்தி, ‘பரதா, கைகேயியின் சூழ்ச்சியைப் பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதா’என்று வினவலும்; 97 ‘இந்த சூழ்ச்சியில் எனக்கு ஏதும் பங்கிருந்திருக்குமானால் நான் இன்னின்ன நரகங்களுக்குச் செல்வேனாக’ என்று பரதன் சூளுரைக்கத் தொடங்கலும்.  (சூளுரை அடுத்த அமர்வில்)

Hari Krishnan

unread,
Dec 22, 2013, 8:39:22 AM12/22/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
சொக்கனுடைய வகுப்புக் குறிப்புகளை இத்துடன் அனுப்பி வைக்கிறோம்: 

இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களில்.

(பரதனும் சத்ருக்கனனும் கோசல நாட்டினுள் நுழைகிறார்கள்)

நல் வளம் துன்னிய நாடு, ஆவி நீத்த உடல் எனல் ஆயதே.

என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து (பரதன்) உற்றது ஒன்றும் உணர்ந்திலன், ‘சென்று கேட்பது ஓர் தீங்கு உளதாம்’ என உன்னுவான்.

(பரதன்) நகர் நோக்கினன்.

பரதன்: (சத்ருக்கனனிடம்) ‘மன்னன் வைகும் வள்நகர் போலும் ஈது? என்ன தன்மை இளையவனே?’

சத்ருக்கனன்: ‘துயர் ஒருவகைத்து அன்று.’

(பரதன்) தனயனும் தந்தை சார்வு இடம் மேவினான்.

(பரதன்) வேந்தனை எங்கணும் கண்டிலன், ஐயுறவு எய்தினான்.

ஒரு பணிப்பெண்: ‘கூயள் அன்னை, குறுகுதிர் ஈண்டு.’

(பரதன்) வந்து தாயை வணங்கலும் ஆரத் தழுவினள் (கைகேயி).

கைகேயி: ‘எந்தை, என் ஐயர், எங்கையர் தீதிலர்?’

பரதன்: ‘ஆம்.’

பரதன்: ‘மூண்டு எழு காதலால் முளரித் தாள் தொழ வேண்டினென் எய்தினென், கோமகன் யாண்டையான்?’

கைகேயி: ‘(தசரதன்) வானகம் எய்தினான், வருந்தல் நீ.’

(பரதன்) நெடிது வீழ்ந்தனன், அறிந்திலன், உயிர்த்திலன்.

பரதன்: ‘தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல் உரை செய நீ அலது நினைப்பரோ?’

பரதன்: ‘(தசரதனே), புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய்?’

(பரதன்) ஊற்று உறு கண்ணினன், உருகுவான், தேற்றினன் ஒருவகை.

பரதன்: ‘எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும் இராமன். ஆதலால், வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் துயர் தீர்கலாது.’

கைகேயி: ‘தேவி, தம்பி என்று இவ்விருவரோடும் கானத்தான்.’

பரதன்: ‘இன்னமும் எனைத்து உள கேட்பன துன்பம்?’

பரதன்: ‘(ராமன்) வனத்துப் போயது தீங்கு இழைத்ததனினோ? தெய்வம் சீறியோ? ஓங்கிய விதியினோ? யாதினோ?’

பரதன்: ‘ராமன் தீயன செய்யுமேல், அவை தாய் செயல் அல்லவோ?’

பரதன்: ‘(ராமன் காட்டுக்குப்) போயது தாதை விண் புக்க பின்னரோ, ஆயதன் முன்னரோ?’

கைகேயி: ‘செருக்கினால் அன்று, தெய்வத்தாலும் அன்று, கோமகன் இருக்கவே வனத்து அவன் ஏகினான்’

பரதன்: ‘பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக உற்றது என்? உரை செய்வீர்’

கைகேயி: ‘வரம் தரக் கொண்டு மைந்தனை(ராமனை)ப் போக்கினேன் வனத்திடை, பார் உனக்கு ஆக்கினேன், அவன் (தசரதன்) அது பொறுக்கலாமையால் நீக்கினான் உயிர்.’

கூடின மலர்க் கரம் சொல்லின் முன் செவி கூடின, புருவங்கள் குனித்து... உயிர்ப்பிடை அனல்கொழுந்துகள் ஓடின, உமிழ்ந்தன உதிரம் கண்களே.

(பரதன்) கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன், நெடியவன் (ராமன்) முனியும் என்று அஞ்சி நின்றனன்.

பரதன்: ‘மாண்டனன் எந்தை, தம்முன் மாதவம் பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால்... கீண்டிலென் வாய், அது கேட்டு நின்ற யான், ஆண்டனனே அன்றோ!’

பரதன்: ‘ஏய் எனும் மாத்திரத்து (உன்னை) தெற்றுகின்றிலென், ஆயவன் (ராமன்) முனியும் என்று அஞ்சினேன், தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ.’

பரதன்: ‘மாளவும் உளன் ஒரு மன்னன், மீளவும் உளன் ஒரு வீரன், பார் ஆளவும் உளன் ஒரு பரதன்... குறை உண்டாகுமோ?’

பரதன்: ‘சுழி உடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் மரபை மாய்த்து ஒரு பழியுடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும் மொழியுடைத்து.’

பரதன்: ‘இவ்வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ?’

பரதன்: ‘நோயீர் அல்லீர், கணவன் உயிர் உண்டீர், நீர் பேயீரே... வன் பழி தந்தீர், முலை தந்தீர், தாயீரே, இன்னும் எமக்கு என் தருவீரே?’

பரதன்: ‘ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் தின்றும் தீரா வன் பழி கொண்டு என்றும் நீரே வாழ உவந்தீர்.’

பரதன்: ‘அவன் (ராமன்) ஏகக் கன்றும் தாயும் போல்வது கண்டும் கழியீரே!’

பரதன்: ‘ஈந்த வரத்துக்கு இழிவு எண்ணா (தசரதன்) இறந்தான், அவன் மைந்தன் (ராமன்) அரசெல்லாம் துறந்தான்... தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும் பிறந்தான் (பரதன்) ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே.’

பரதன்: ‘உலகெல்லாம் (பரதன்) ஆளும் என்றே (ராமன் காட்டுக்குப்) போயினன் அன்றோ!’

பரதன்: ‘என்முன் உடன் வந்தோன் கை ஆர் கல்லை புல் அடகு உண்ண, கலம் ஏந்தி அமுது நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ?’

பரதன்: ‘(நான் அரசு ஆண்டால்) பாரோர் கொள்ளார், தீராது பழி, ஊரில் திரு நில்லாள், உரை தந்தார் ஆர்? என் விளைவித்தாய்!’

பரதன்: ‘என் துயர் தீர... மாதவம் யானே முயல்கின்றேன்...'

பரதன்: ‘(கைகேயியே) உயிர்தன்னைத் துறந்தாய் ஆகில் தூயையும் ஆதி!’

பரதன்: ‘இப் பன்னரும் கொடுமனப் பாவி (கைகேயி) பாடு இரேன், துன்ன அரும் துயர் கெடத் தூய கோசலை பொன் அடி தொழுவேன்.’

... எழுந்து போயினான்

(பரதன்) கோசலை அருகர் எய்தினன், புலம்பினான்...

பரதன்: ‘எந்தை எவ்வுலகுளான்? எம்முன் யாண்டையான்? வந்தது இம்மறுக்கம் காணவோ?’

பரதன்: ‘கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வன்... தொல்குலம் பரதன் என்று ஒரு பழி படைத்தது...’

புலம்புறு குரிசில் (பரதன்) தன் புலர்வு நோக்கினாள் கோசலை. மனம் தளர்ந்து கூறுவாள்.

(பரதன்) மை அறு மனத்து மாசு அலன், செய்யனே என்பது தேரும் சிந்தையாள்...

கோசலை: ‘கைகயர் கோன் மகள் இழைத்த கைதவம் ஐய, நீ அறிந்திலைபோலும்’

(பரதன்) குமுறி விம்முவான், சூள் உறு கட்டுரை சொல்லல் மேயினான்...

Hari Krishnan

unread,
Dec 27, 2013, 9:49:44 AM12/27/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
முப்பத்தாறாம் அமர்வை இன்னும் பார்க்காதவர்களுக்கு ஒரு நற்செய்தி.  முப்பத்தேழாம் அமர்வு, டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் நாளில் நடந்து முடிந்தது.  முழு விவரங்களும், சுட்டிகளும் கீழே காண்க:

Part 1

பாடல் 98-112: இராமன் கானேக நடந்த சூழ்ச்சியில் எனக்குப் பங்கிருந்தால், நான் இன்னின்ன நரகங்களுக்குப் போகக் கடவேன் என்று பரதன் உரைத்த சூளுரையின் ஒரு பகுதி.

Part 2

பாடல் 113-119: இராமன் கானேக நடந்த சூழ்ச்சியில் எனக்குப் பங்கிருந்தால், நான் இன்னின்ன நரகங்களுக்குப் போகக் கடவேன் என்று பரதன் உரைத்த சூளுரையின் மறு பகுதி.  பாடல் 120-132: பரதனைக் கோசலை போற்றுதல்; வசிட்டன் வருகை; தசரதன் உடலைக் கண்டு பரதன் மயங்கி வீழ்தல்; மக்களும் மற்றவரும் தசரதன் உடலை எண்ணெயக் கொப்பறையிலிருந்து பொன் விமானத்திலேற்றி, யானையின் மீது வைத்து சரயு நதிக்கரைக்குக் கொண்டு செல்லல்; ஈமக்கிரியையைச் செய்ய வரும் பரதனை, தசரத ஆணையைச் சொல்லி வசிஷ்டன் தடுத்தல்


Part 3

வால்மீகி இராமயணத்தின் சம இடத்தோடு ஒப்பீடு; பாடல் 133-138: பரதனின் துயரம்; 139: சத்துருக்கனன், தசரதன் உடலுக்கு எரியூட்டல்; 140-141: அறுபதினாயிரவர் உடன்கட்டை ஏறல்; 142-143: பரதன் அரண்மனை திரும்பல்; பத்துநாள் சடங்குகளைச் செய்தல்; 144-145: பரதனே ஆள வேண்டும் என்று வசிட்டன் சொல்லத் தொடங்குதல் (பள்ளிப்படைப் படலம் முடிவு), ஆறுசெல் படலம் பாடல் 1-10: ஏன் அரசேற்க வேண்டும் என்று பரதனுக்கு வசிட்டன் அளிக்கும் விளக்கம்.

Part 4

பாடல் 11: வசிட்டன் உரை தொடர்ச்சி; பாடல் 12-18: இராமனைத் திரும்ப அழைத்து வந்து மகுடம் சூட்டப் போவதாக அறிவித்து, அரசேற்க பரதன் மறுத்தல்; 19-20: பரதனை அனைவரும் புகழ்தல்; 21-25: பரதன் கட்டளைப்படி, சத்துருக்கனன், சேனையையும், மக்களையும், இராமனைத் திரும்ப அழைத்துக் கொண்டுவரக் கிளம்புமாறு முரசறைதல்; 25-33: ஆரவாரமின்றிச் செல்லும் சேனையின் வருணனை.

இன்னுமொரு எச்சரிக்கை.  முப்பத்தெட்டாம் அமர்வு, நாளை என் இல்லத்தில் நடைபெறப் போகிறது. :)

Hari Krishnan

unread,
Dec 27, 2013, 9:51:50 AM12/27/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
சொக்கனுடைய க்ளாஸ் நோட்ஸ் கீழே:

இன்றைய ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களிலேயே:

(பரதன் செய்யும் சபதங்கள், இழிவானோரைப் பட்டியல் போடுகிறான்)

1. அறம் கெட முயன்றவன்
2. அருள் இல் நெஞ்சினன்
3. பிறன் கடை நின்றவன்
4. பிறரைச் சீறினோன்
5. மன் உயிர் கொன்று வாழ்ந்தவன்
6. மாதவர்க்குத் துயரம் சூழ்ந்துளோன்
7. குழலியை வாளில் கொன்றுளோன்
8. புரவலன் தன்னொடு அமரில் புக்கு, விரவலர் வெரிநிடை விழிக்க மீண்டுளோன்
9. இரவலர் நிதி வௌவினோன்
10. துளவினோன் தலைவன் அல்ல என்று அழைத்தவன்
11. அந்தணாளரின் பிழைத்தவன்
12. மறையை இழைத்தவர் உளர் எனும் நெஞ்சினோன்
13. தாய் பசி உழந்து தளரத் தான் தனிப் பாழ் வயிறு அளிக்கும் பாவி
14. நாயகன் பட நடந்தவன்
15. தாளினில் அடைந்தவர் தம்மை தற்கு ஒரு கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதை
16. அறம் மறந்தவன்
17. பொய்க் கரி கூறினோன்
18. போருக்கு அஞ்சினோன்
19. கைக்கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்
20. எய்த்த இடத்து இடர் செய்தோன்
21. அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்
22. மைந்தரைக் கொன்றுளோன்
23. வழக்கில் பொய்த்துளோன்
24. நிந்தனை தேவரை நிகழ்த்தினோன்
25. கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்
26. மன்று இடைப் பிறர்பொருள் மறைத்து வவ்வினோன்
27. நன்றியை மறந்திடும் நயம்இல் நாவினோன்
28. மாதரை ஊறு கொண்டு அலைக்க, தன் உயிர் கொண்டு ஏகினோன்
29. தன் அயலுளோர் பசிக்கத் துய்த்து உளோன்
30. செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
31. அஃகல் இல் அறம் நெறி அகற்றி ஒள்பொருள் வெஃகிய மன்னன்
32. அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று இழிவரு சிறுதொழில் இயற்றி ஆண்டு தன் வழிவரு தருமத்தை மறந்து மற்றொரு பழிவரு நெறிபடர் பதகன்
33. தஞ்சு என ஒதுங்கினோர் தனது பார் உளோர் எஞ்சலின் மறுக்கினோடு இரியல் போய் உற, இறுத்தவன் வாகை மீக்கொள அஞ்சின மன்னவன்
34. கன்னியை அழிசெயக் கருதினோன்
35. குரு பன்னியை நோக்கினோன்
36. நறை பருகினோன்
37. இகழ் களவினில் பொருந்தினோன்
38. நாயின் உண்டவன்
39. ஆணலன், பெண்ணலன், ஆர்கொல்லாம் என நாணலன்
40. நரகம் உண்டு என்னும் நல் உரை பேணலன்
41. பிறர் பழி பிதற்றி
42. மறு இல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்
43. சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன்
44. அயலவர் நாவில் நீர் வர நுங்கிய ஒருவன்
45. பொய்ம்மை யாக்கையை ஓம்புபான்
46. ஏற்றவர்க்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று மாற்றலன், உதவலன், வரம்பில் பல் பகல் ஆற்றினன்

(ஒருவேளை கைகேயியின் சதி எனக்குத் தெரிந்திருந்தால், இப்படி 46 வகைப் பாவிகள் அடையும் நரகத்தைச் சென்று அடைவேன் என்கிறான் பரதன்)

பரதன்: ‘தீயன கொடியவள் செய்த செய்கையை நாயினேன் உணரின்... வீழ்க யான்.’

தூய வாசகம் சொன்ன தோன்றலை (பரதனை) கானகம் போயினான் (ராமன்) வரக் கண்ட பொம்மலாள் (கோசலை) அன்பினால் அழுது புல்லினாள்.

கோசலை: (பரதனிடம்) ‘மன்னர் மன்னவா, முன்னை நும் குல முதலுளோர்கள்தாம், நின்னை யாவரே நிகர்க்கு நீர்மையார்?’

இன்ன வேலைவாய் முனிவன் (வசிட்டன்) எய்தினான்...

வந்த மாதவன் தாளில் வள்ளல் (பரதன்) வீழ்ந்து... அழுது புல்லினான்.

வசிட்டன்: ‘உந்தையார் இறுதி எய்தி நாள் ஏழு இரண்டின, சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி.’

(பரதன்) புனிதனோடும் போய்த் தன்னை நல்கியத் தரும நல்கினான் (தசரதன்) படிவம் நோக்கினான்... அலறி மாழ்குவான்.

மன்னனை மற்றொர் பொன்னின் மாமானம் ஏற்றினார்... யானையில் கொண்டுபோயினார்... சரயு எய்தினார்... தீத்தலம் ஏற்றினார்...

மற்றவர்கள்: (பரதனிடம்) ‘வீர, நுந்தைபால் பொய்யின் மாக்கடன் கழித்தி.’

வசிட்டன்: ‘அன்னை தீமையால் அரசன் நின்னையும் துறந்துபோயினான் முன்னரே.’

பரதன்: ‘நன்று நன்று’... நகை முகிழ்த்தனன்... விம்மி...

பரதன்: ‘என்னின் யாவரே? பிரெத பூசனைக்கு உரிய பேறிலேன், அரசு செய்யவோ அமைவதாயினேன்.’

பரதன்: ‘மன்னர் நீதியால் தேவர் ஆயினார், சிறுவன் நான் பிறந்து அவத்தன் ஆனவா! தாழையின் பதடி ஆயினேன், என் அன்னையார் எனக்கு அழகு செய்தவா!’

இளைய தோன்றலால் (சத்ருக்கனன்) கடன் அமைவது...

கொம்பனார்கள் (தசரதனின் மற்ற மனைவியர்) எரியின் மூழ்கினார்...

வசிட்டன். மந்திரிகள்: ‘மன்னர் இன்றியே வையம் வைகல்தான் தொன்மை அன்று’ (என்று யோசித்து பரதனிடம் வந்தார்கள்)

வசிட்டன்: ‘கோது அறு குணத்தினாய், (பரதனே,) காக்குதி உலக, நின் கடன் இதாம். பேரரசு அளித்தி.’

முனிவரன் செப்பக் கேட்டலும் (பரதன்) அஞ்சினன், அயர்ந்தனன், அருவிக் கண்ணினான், நடுங்கினான், தடுமாறி நாட்டமும் இடுங்கினன்.

பரதன்: ‘முதல் தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் சான்றவர் உரை செய... ஈன்றவள் செய்கையின் இழுக்குண்டாகுமோ!’

பரதன்: ‘என் அன்னை செய்கையை நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றலின்... கலியின் ஆட்சியோ?’

பரதன்: ‘நான் இந்நானிலம் சுமந்து வாழ்கிலேன், அன்னவன் (ராமன்) தனைக் கொணர்ந்து மாமுடி சூட்டல் காண்டிரால்.’

பரதன்: ‘அன்று எனில், அவனொடும் அரிய கானிடை நின்று இனிது அரும்தவம் ஆற்றுவன்.’

பரதன்: ‘ஒன்று இனி உரைப்பின் என் உயிரை நீக்குவன்.’

சபையினர்: ‘யார் உளர் நின்னின் தோன்றினார்?’

சபையினர்: ‘உலகம் எஞ்சினும் வாழிய நின் புகழ்!’

பரதன்: (சத்ருக்கனனிடம்) ‘இந்நகர் முறைமை வேந்தனைத் தருது மீண்டு என்பது சாற்றித் தானையை விரைவினில் எழுக என விளம்புவாய்.’

மாநகர் இரைத்தது... செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!

முரசு அறைந்தனர்...

அழிந்தது கேகயன் மடந்தை ஆசை...

(ராமனைத் தேடி அயோத்தி சேனை மொத்தமும் புறப்படுகிறது)

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 27, 2013, 12:09:42 PM12/27/13
to தமிழ் மன்றம், santhavasantham, mintamil, vallamai, தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, rugan arya, Naga Chokkanathan, Kannan S
அருமையான திரட்டு.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.


2013/12/18 Hari Krishnan <hari.har...@gmail.com>
இன்றைய வகுப்பு Notes: கம்பனின் சொற்களிலேயே


Hari Krishnan

unread,
Dec 29, 2013, 8:47:55 AM12/29/13
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.


முப்பத்தேழாம் அமர்வு நேற்று மாலை நடந்தேறியது.  முழு விவரங்களும் கீழே.  பரதன் வருகையைச் சந்தேகிக்கும் குகன், ‘அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே’ தொடங்கி, ஆவேசமாக நடக்கும் சந்தம், ‘வற்கலையின் உடையானை’ என்று, பரதனுடைய கோலத்தைக் கண்டவுடனேயே பாவத்துக்கு ஏற்றாற் போல் பொக்கென்று அடங்குவதுமாக மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.  சொக்கன் அமர்வில் இல்லாததால், இந்த முறை அவருடைய குறிப்புரையைத் தர இயலவில்லை.

முப்பத்தெட்டாம் அமர்வு புத்தாண்டு தினத்தன்று (1.1.2014) நடைபெறுகிறது.  இடையில் கிடைக்கும் விடுமுறை நாட்களின் புண்ணியத்தால், ஓதல் விரைவாக நடைபெறுகிறது.  சுட்டிகளும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பாடல்களின் சுருக்கக் குறிப்புகளும் கீழே:

Part 1

பாடல் 36-51: சேனை வழிநடை வருணனை; பாடல் 52-56 பரத சத்துருக்கனர்கள் புறப்படுதல்; மந்தரையை சத்துருக்கனன் எற்ற முயல, பரதன் தடுத்தல்; 57 இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல்.

Part 2

பாடல்58-59 காலையில் பரதன் அந்தச் சோலையிலிருந்து கிளம்பி, நடந்து செல்லுதல் (ஆறுசெல் படலம் முடிவு). குகப் படலம் பாடல் 1-5: பரதனுடன் செல்லும் சேனை; 6-13: குகன், பரதனை ஐயுறுதல்; 14-22: குகன் எழுச்சியுரை (அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே...)

Part 3

பாடல் 22-23 குகனுடைய உரையின் தொடர்ச்சி; 24-27 சுமந்திரன் அக்கரையில் தென்படும் குகனை சுட்டிக் காட்டி அறிமுகப்படுத்த, குகனைச் சந்திக்க பரதன் கிளம்புதல்; 29-31 குகன் பரதனைச் சந்திக்கக் கிளம்புதல்; 32 ‘அவனும் அவனை வணங்கினான்’ பாடல் விளக்கம். 33-41 குகன் பரதன் உரையாடல்; பரதன், இராமன் துயின்ற இடத்தைக் காண்பது முதலானவை.

Part 4

பாடல் 41-44 பாடல்களின் விளக்கம்; 45--47 நாவாய்களின் வருகை; 48-55 சேனையும் மகளிரும் படகுகளில் ஏறுதல்.

இரண்டாம் தேதியன்ற அடுத்த பதிவுகளை அனுப்பி வைக்கிறோம்.  புத்தாண்டு வாழ்த்துகளுடன்.  

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 1, 2014, 1:49:06 AM1/1/14
to vallamai, kambaraamayanam, santhavasantham, mintamil, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.



2014/1/1 nchokkan <ncho...@gmail.com>

28 டிசம்பர் அன்று நடைபெற்ற பெங்களூரு கம்ப ராமாயண வகுப்பின் Notes, கம்பன் சொற்களிலேயே

கம்பன் கடல் திளைக்கிற நண்பர்களுக்கும், வழி நடத்துகிற திரு ஹரிகி, பதிந்து வைக்கிற திரு சொக்கன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். 
 

வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை, நகை இழந்த முகத்தானை, கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் (குகன்). வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று…

தூரக்காட்சியில் தொடங்கி கொஞ்சம் கொஞசமாக நெருக்கமாகக் காட்டும் இன்றைய நிழற்படக் கலைஞனைப் போன்ற காட்சி அமைப்பில் கம்பன் சொற்களில் காட்டுகிறானாம். முதலில் மொத்த உருவாக உடை. அணுக்கமாக மாசடைந்த மேனி. மேலும் நெருங்கி முகம், நகையிழ்ந்த இதழ்கள், கண் காட்டும் துயரம் என்று காட்சி நெருங்கி விரிகிறது. நன்றி.

அன்புடன்,

Hari Krishnan

unread,
Jan 2, 2014, 7:36:13 AM1/2/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
முப்பத்தொன்பதாம் அமர்வு நேற்று நடைபெற்றது.  குகப்படலத்தின் மீதப் பாடல்களையும் திருவடி சூட்டுப் படலத்தில் முதல் 69 பாடல்கள் வரையும் முடித்தோம்.  பதிவுகளும் பாடல் விவரங்களும் கீழே இடம் பெறுகின்றனர்.

கம்பராமாயணம் படிக்கிறேன் என்று கிளம்புவார்கள்; அயோத்தியா காண்டத்தைத் தாண்டினால் ஆச்சரியம் என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொன்னதாக இன்னொரு பெரிய எழுத்தாளர் இரண்டு நாட்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறாராம்.  எத்தனையோ முறை தனிப்பட்ட முறையில் ஓதியிருப்பவன்; இதற்கு முன்னால் தென்றல் ஆசிரியர் மதுரபாரதியுடன் சேர்ந்து ஓதி முடித்தவன் என்ற முறையில், இந்தக் குழு நிச்சயமாக முற்றோதலை முடித்தே தீரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  சொக்கன் குறிப்பிட்டதைப் போல், யுத்த காண்டத்தின் கடைசிப் பாடலைப் படித்துவிட்டு, அன்றே மீண்டும் உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் என்று தொடக்கமும் செய்ய வேண்டும் என்பது இலக்கு.  இந்த முறை ஓதி முடிப்பது நிச்சயம்.

முற்றோதல் என்றால் வழக்கமாக, பாடல்களை மட்டும் ஓதுவதுதான் வழக்கம்.  பாடல்களையும் ஓதி, ஒரு பாடல் விடாமல் பொருளும் இலக்கணக் குறிப்பும் யாப்பிலக்கண முறைகளையும் விளக்கி அவற்றைப் பதிவும் ஏற்றும் ஒரே முற்றோதல் இதுதான் என்பதை அந்தப் மிகப் பெரிய எழுத்தாளருக்கு இதன் மூலமாக நினைவூட்டுகிறோம்.  

சென்ற முறை வகுப்புக்கு வரமுடியாத சொக்கன், இணையத்தில் பதிவுகளைப் பார்த்து, போன அமர்வின் குறிப்புகளையும் தயாரித்தளித்திருக்கிறார்.  அதையும் தனியாக அனுப்புகிறோம்.

உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.  உங்கள் கருத்துகளை எப்போதும்போல் வரவேற்கிறோம்.


Part 1

பாடல் 57-64 ஏனையோர் ஓடமேறியபின் பரதன் ஓடமேறுதல் 65-70 கோசலை, சுமித்திரை, கைகேயி மூவரையும் பரதன், குகனுக்கு அறிமுகப்படுத்தல்; 71-73 அனைவரும் பரத்துவாசர் ஆசிரமத்தை அடைதல்.

Part 2


1-7 பரத்துவாச முனிவர்-பரதன் உரையாடல்; 8-16 சைனியத்துக்கு பரத்துவாசன் அளித்த விருந்து; 17 பரதன் புழுதியில் உறங்கல்; 18-25 சேனை ஒரு பாலை வனத்தைக் கடத்தல்; 26-27 சேனையின் வருகையைத் தொலைவிலிருந்து இலக்குவன் கண்டு சினங் கொள்ளல்

Part 3

28 சேனையின் வருகையைத் தொலைவிலிருந்து இலக்குவன் கண்டு சினங் கொள்ளல்; 29-41 பரதனுடைய சேனையை அழிக்கப் போவதாக, இராமனிடத்தில் இலக்குவன் வீர உரை; 46-48 இராமன் இலக்குவனை சமாதனப் படுத்துதுல்; பரதன், செம்மையின் ஆணி--இராமன் வாக்கு; 49-53 பரதன் வருவதும், இராமன் அடி பணிவதும்.


Part 4
54 பரதன் தோற்றத்தைக் கண்டு இராமன் கண்ணீர் பெருக்குதல்; 57-69: தசரதன் இறந்த செய்தியை அறியும் இராமன் அரற்றுவதும் வசிட்டன் தேற்றுவதும், நீர்கடன் இறுக்கச் சொல்லத் தொடங்குவதும்

Hari Krishnan

unread,
Jan 2, 2014, 7:42:32 AM1/2/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
28/12/2013 அன்று நடைபெற்ற முப்பத்தெட்டாம் அமர்வுக்கான சொக்கனின் வகுப்புக் குறிப்புகள்:

இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களிலேயே!

(குகன் படகில் அயோத்தி) சேனையும், எல்லை தீர் நகர் மாந்தரும் மகளிர் வெள்ளமும் செறிதிரைக் கங்கை பின் கிடக்கச் சென்றவே.

(பரதன்) தானும் (படகில்) ஏறினான்.

தம்பியும் (சத்ருக்கனன்), தாயர் மூவரும், தேர் வலவனும் (சுமந்திரன்), தூய தோழனும் (குகன்) ஏறலும், (படகு) மேயினான்.

குகன்: (கோசலையைப் பார்த்து, பரதனிடம்) ‘குரிசில், இவர் ஆர்?’

பரதன்: ‘முற்றத்தான் (தசரதன்) பெரும் தேவி, மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானை பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால் துறந்த பெரியாள்.’

(குகன்) அடியின்மிசை நெடிது விழுந்து அழுவான்.

கோசலை: ‘இவன் யார்?’

பரதன்: ‘இன் துணைவன் இராகவனுக்கு.’

பரதன்: ‘இலக்குவர்க்கும் இளையவர்க்கும் எனக்கும் மூத்தான், குகன் என்பான் இந்நின்ற குரிசில்.’

கோசலை: ‘மைந்தீர், காடு நோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலம், காளை (குகன்) இவன் தன்னொடும் கலந்து ஐவீரும் அகல் இடத்தை அளித்திர்.’

குகன்: (சுமித்திரையைப் பார்த்து, பரதனிடம்) ‘ஐய, அன்பின் நிறைந்தாளை உரை!’

பரதன்: ‘(தசரதன்) இளம் தேவி, இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் (லட்சுமணன்) தனைப் பயந்த பெரியாள்.'

குகன்: (கைகேயியைப் பார்த்து, பரதனிடம்) ‘யார் இவர் என்று உரை.’

பரதன்: ‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை... ஒருத்தி அன்றே இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல், இந்நின்றாள், என்னை ஈன்றாள்.’

இரக்கம் இலாளையும் தன் நல் கையின் (குகன்) வணங்கினான். வந்தது தோணியே.

தாயர் சிவிகையின் ஏற, குகனும் உடன் ஏகினான், (பரதன்) கழிந்தனன் பல காவதம் காலினே.

பரத்துவன் எனும் பேர் மாதவன் வைகிடம் அணுகினன், அவன் வேதியரோடு எதிர் மேவினான்.

மாதவத்தோனை அம்மைந்தனும் (பரதன்) தாழ்ந்து வணங்கினான். (பரத்வாஜ முனிவன்) ஆசிகள் கூறினான்.

பரத்வாஜ முனிவர்: ‘பேரரசு ஆண்டிலை ஐய நீ, முனிவர் தூசு உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?’

பரதன்: ‘முறை நீங்கி நிலம் கொள்கிலேன். இறைவன் (ராமன்) கொள்கிலன் எனின், உறைவென் கானத்து ஒருங்குடனே.’

உரைத்த வாசகம் கேட்டலும் தவத்தோர்க்கெலாம் உள்ளம் குளிர்ந்தது...

ஐயனைக் கொண்டு தன் தூய சாலை உறைவிடம் துன்னினான் (பரத்வாஜ முனிவன்).

(பரத்வாஜ முனிவன்) நினையத் துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது. (பரதன் படையினர் இன்பம் கொண்டாடினார்கள்).

யாவரும் இந்திரன் போகம் துய்த்தனர், தோன்றல் (பரதன்) காயும் கிழங்கும் உண்டு பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான்.

கதிரவன் தோன்றினான்.

பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே.

சித்திரகூடம் சேர்ந்தது.

தூளியின் படலையும் ஓதையும் ஆரவாரமும் படை இது என்று கூறவே, எழுந்தனன் இளையவன் (லட்சுமணன்).

நெடிய குன்றின்மேல் (லட்சுமணன்) ஏறினான். கடலை நோக்கினான்.

லட்சுமணன்: ‘பரதன் இப் படை கொடு பார் கொண்டு ஆள் மறம் கருதி விரதம் உற்றிருந்தவன் (ராமன்) மேல் வந்தான், இது சரதம், மற்று இலது.’

(லட்சுமணன்) சீற்றத்தான், குதித்தனன், இராமனை விரைவில் எய்தினான்.

லட்சுமணன்: ‘மதித்திலன் பரதன், நின் மேல் வந்தான், சேனையின் பரப்பினான்.’

(லட்சுமணன்) கட்டினன் சுரிகையும் கழலும். பல்கணைப் புட்டிலும் பொறுத்தனன். கவசம் பூட்டமைந்து இட்டனன், எடுத்தனன் வரிவில்.

(லட்சுமணன்) ஏந்தலை (ராமனை) வணங்கி சொல்லினான்.

லட்சுமணன்: ‘பரதன் சேனையின் பெருமையும் நின் பின் வந்த என் ஒருமையும் கண்டு இனி உவத்தி நீ.’

லட்சுமணன்: ‘பகழி புக்கு இருவர் (பரதன், சத்ருக்கனன்) மார்பிடைப் புழைத்த வான் பெருவழி போகக் காண்டியால்.’

லட்சுமணன்: ‘பரதன் தான் பெறும் இருநிலம் ஆள்கை விட்டு, என் ஏவலால் அரு நரகு ஆள்வது காண்டி, கைகயன் மகள் விழுந்து அரற்றக் காண்டி.’

லட்சுமணன்: ‘அனிக வேலையைக் கணை ஒன்றில் வென்று பொலிவென் யான்.’

ராமன்: ‘இலக்குவ, உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ கலக்குவன் என்பது கருதினால், அது விலக்குவது அரிது. ஒரு பொருள் புகலக் கேட்டி.’

ராமன்: ‘நம் குலத்து உதித்தவர் நவையுள் நீங்கினர், தருமம் நீங்கினர் யாவரே? என்வயின் நேய நெஞ்சினால் நினைத்திலை.’

ராமன்: ‘என்வயின் காதலின் வரும் என நினைகையும், மண்ணை என்வயின் தரும் என நினைகையும்தவிர, தானையால் பொரும் என நினைகையும் புலமைப்பாலதோ?’

ராமன்: ‘பரதன் போந்தனன், படை நல்கல் அன்றியே, என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ!’

ராமன்: ‘தருமத்தின் தேவை, செம்மையின் ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ? (பரதன்) போந்தது ஈண்டு எனைக் காணிய, நீ இது பின்னும் காண்டி.’

பரதன் நிமிர்ந்த சேனையைப் ‘பின் தருக’ என்று தன் பிரிவு இல் காதலின் தன் துணைத் தம்பியும் (சத்ருக்கனன்) தானும் முந்தினான்.

தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன், அழுது அழி கண்ணினன், அவலம் ஈது என எழுதிய படிவம் ஒத்து எய்துவான்(பரதன்)தனை (ராமன்) நோக்கினான்.

ராமன்: (லட்சுமணனிடம்) ‘ஐய நீ பரதன் சீறிய போர்ப் பெரும்கோலத்தை நோக்கு.’

எல் ஒடுங்கிய முகத்து இளவல் (லட்சுமணன்) நின்றனன். சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர் தர வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே.

பரதன் தொழுது முன் சென்றான்.

பரதன்: ‘அறம் தனை நினைந்திலேன், அருளும் நீத்தனன், துறந்தனன் முறைமையை.’

(ராமனுடைய) மலரடி வந்து வீழ்ந்தனன்.

ஒடுங்கினான் (பரதன்) உருக் கண்டனன், நின்றனன், கண் எனும் புண்டரீகம் பொழி புனல் அவன் சடா மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

(ராமன் பரதனைப்) புல்லினான். (பரதன்) புனைந்த வேடத்தைப் பல்முறை நோக்கினான், பலவும் உன்னினான்.

ராமன்: ‘மல் உயர் தோளினான் (தசரதன்) வலியனோ?’

பரதன்: ‘ஐய, நின் பிரிவு எனும் பிணியினால் அக்கரியவள் (கைகேயி) வரம் எனும் காலனால் (தசரதன்) உம்பரான்.’

(ராமன்) மண்ணிடை விழுந்தனன். புலம்பினான்.

ராமன்: ‘அந்தோ! இனி வாய்மைக்கு ஆர் உளர்?’

கோளரியை (ராமனை) வன் தடக்கைத் தம்பியரும் மன்னவரும் தாங்கினார். மா வதிட்டன் தேற்றினான்.

பின்னு சடையோரும் மன்னரும் மந்திரியர் எல்லாரும் வந்தடைந்தார், சேனைத் தலைவோரும்தாம் அடைந்தார்.

வசிட்டன்: ‘இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ?’

வசிட்டன்: ‘ஐய, நீ யாதொன்றும் அவலிப்பாயலை, உய்திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ? செய்வரன் முறை ஒழுக்குதி கடன் எலாம்.’

Hari Krishnan

unread,
Jan 2, 2014, 7:55:41 AM1/2/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
01.01.2014 அன்று நடந்த முப்பத்தொன்பதாம் அமர்வுக்கான வகுப்புக் குறிப்புகள், சொக்கன் தொகுத்தவை:
(நாற்பதாம் அமர்வு 04.01.2014 சனியன்று நடக்கப் போகிறது.  அன்று அயோத்தியா காண்டம் முடிந்து, ஆரணிய காண்டம் தொடங்கும்.)

இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களிலேயே!

(குகன் படகில் அயோத்தி) சேனையும், எல்லை தீர் நகர் மாந்தரும் மகளிர் வெள்ளமும் செறிதிரைக் கங்கை பின் கிடக்கச் சென்றவே.

(பரதன்) தானும் (படகில்) ஏறினான்.

தம்பியும் (சத்ருக்கனன்), தாயர் மூவரும், தேர் வலவனும் (சுமந்திரன்), தூய தோழனும் (குகன்) ஏறலும், (படகு) மேயினான்.

குகன்: (கோசலையைப் பார்த்து, பரதனிடம்) ‘குரிசில், இவர் ஆர்?’

பரதன்: ‘முற்றத்தான் (தசரதன்) பெரும் தேவி, மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானை பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால் துறந்த பெரியாள்.’

(குகன்) அடியின்மிசை நெடிது விழுந்து அழுவான்.

கோசலை: ‘இவன் யார்?’

பரதன்: ‘இன் துணைவன் இராகவனுக்கு.’

பரதன்: ‘இலக்குவர்க்கும் இளையவர்க்கும் எனக்கும் மூத்தான், குகன் என்பான் இந்நின்ற குரிசில்.’

கோசலை: ‘மைந்தீர், காடு நோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலம், காளை (குகன்) இவன் தன்னொடும் கலந்து ஐவீரும் அகல் இடத்தை அளித்திர்.’

குகன்: (சுமித்திரையைப் பார்த்து, பரதனிடம்) ‘ஐய, அன்பின் நிறைந்தாளை உரை!’

பரதன்: ‘(தசரதன்) இளம் தேவி, இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் (லட்சுமணன்) தனைப் பயந்த பெரியாள்.’

குகன்: (கைகேயியைப் பார்த்து, பரதனிடம்) ‘யார் இவர் என்று உரை.’

பரதன்: ‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை… ஒருத்தி அன்றே இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல், இந்நின்றாள், என்னை ஈன்றாள்.’

இரக்கம் இலாளையும் தன் நல் கையின் (குகன்) வணங்கினான். வந்தது தோணியே.

தாயர் சிவிகையின் ஏற, குகனும் உடன் ஏகினான், (பரதன்) கழிந்தனன் பல காவதம் காலினே.

பரத்துவன் எனும் பேர் மாதவன் வைகிடம் அணுகினன், அவன் வேதியரோடு எதிர் மேவினான்.

மாதவத்தோனை அம்மைந்தனும் (பரதன்) தாழ்ந்து வணங்கினான். (பரத்வாஜ முனிவன்) ஆசிகள் கூறினான்.

பரத்வாஜ முனிவர்: ‘பேரரசு ஆண்டிலை ஐய நீ, முனிவர் தூசு உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?’

பரதன்: ‘முறை நீங்கி நிலம் கொள்கிலேன். இறைவன் (ராமன்) கொள்கிலன் எனின், உறைவென் கானத்து ஒருங்குடனே.’

உரைத்த வாசகம் கேட்டலும் தவத்தோர்க்கெலாம் உள்ளம் குளிர்ந்தது…

Hari Krishnan

unread,
Jan 5, 2014, 9:07:22 AM1/5/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
டிசம்பரிலும் ஜனவரியிலும் கிடைத்த விடுமுறைகளையும் பயன்படுத்திக் கொண்ட காரணத்தால், இம்மாதக் கடைசியில் நடைபெற்றிருக்க வேண்டிய நாற்பதாம் அமர்வு, இம்மாதத்தின் முதல் சனிக்கிழமையிலேயே நடைபெற்றது.  

அயோத்தியா காண்டத்தின் கடைசிப் படலமான திருவடி சூட்டுப் படலத்தில், ‘ஆட்சி உனக்குத்தான் சொந்தம்’ என்று மாற்றி மாற்றி வழக்காடும் ராம-பரதர்களின் பரிசுத்தம் நிறைந்த அதே சமயத்தில் சொல்லுக்குச் சொல் ஒருவரையொருவர் விஞ்சும் பாங்கும், ‘நிலம் தாங்கும் உரிமை சரதம் நின்னதே’ என்று பேசத் தொடங்கும் இராமனை, பரதன் தன் சொற்களால் மறிப்பதும், ‘யார் வேண்டுமானாலும் ஆண்டு கொள்ளுங்கள்.  நான் வனம் புகுந்து தவம் மேற்கொள்ளப் போவது என்னவோ திண்ணம்’ என்று பரதன் தன் கடைசி ஆயுதத்தைப் பிரயோகிக்க, கடைசியில் படிப்படியாக இராமனுடைய நிலைப்பாடு மாற்றம் பெற்றுக் கொண்டே வந்து, ‘சரி.  பதினான்கு வருடங்கள் கழிந்த பின்னர் வந்து பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 

வானவர் உரைத்தலும், 'மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார்' எனா,
தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான். 

என்று, ‘உன்னை இரந்து கேட்டுக் கொள்கிறேன்.  என் ஆணையால்  உலகைப் பரிபாலிப்பாய்’ என்று, I beg of you; please accept my command' என்ற நிலைவரை இராமன் இறங்கி வருவதும்; பாதுகைகளைப் பெற்ற பரதன், அயோத்தியுட் புகாமல், நந்திகிராமத்தில் இருந்தவாறே ஆட்சியை பாதுகை மூலமாக நடத்துவதும், இராமன், இலக்குவன், சீதை ஆகியோர் தண்டகவனம் போய்ச் சேருவதுமாக அயோத்தியா காண்டம் முடிந்தது.

அயோத்தியா காண்டத்தை முடித்த கையோடு ஆரணிய காண்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதனால், முதல் ஒன்பது பாடல்களோடு முடித்துக் கொண்டோம்.  விராதன் வருணனையில் பாதி வாக்கியமாக நிற்கிறது.  இதோ, அடுத்த சனிக்கிழமை, விரான் வதையையும் சரபங்கர் பிறப்பு நீங்கலையும் முடித்துவிட்டால் போயிற்று என்று சமாதானம் செய்து கொண்டோம்.

இந்த அமர்வில்  (அண்மையில் கண்புரை அறுவைச் சிகிச்சை முடிந்த கையோடு) புலவர் இராமமூர்த்தி உள்ளிட்ட பெரியவர்கள் கலந்து கொண்டனர்.  இதில் கலந்து கொள்வதற்காக என்றே சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து அமர்வில் கலந்து கொண்டு, நேற்றிரவே பேருந்து மூலமாக, சென்னைக்குத் திரும்பிய நிரஞ்சன் பாரதி ஏற்படுத்தியது ஆனந்தமா, ஆச்சரியமா, அதிர்ச்சியா என்பதைத்தான் இன்னமும் தீர்மானிக்க முடியவில்லை.  :)

இனி, பதிவுகள் உங்கள் பார்வைக்கு.  (சென்ற முறை வல்லமையில் கேள்வி எழுப்பிய சகோதரியைப் போல யாரும் கேள்விகளை எழுப்பலாம்.  விடை சொல்லக் காத்திருக்கிறோம்.)  உங்கள் கருத்துகளையும் வினாக்களையும் வரவேற்கிறோம்.

Part 1

இப்பகுதி: திருவடி சூட்டுப் படலம்-ராம--பரத உரையாடல்

Part 2
இப்பகுதி: திருவடி சூட்டுப் படலம்-ராம--பரத உரையாடல்

Part 3
இப்பகுதி: திருவடி சூட்டுப் படலம்-ராம--பரத உரையாடல், பாதுகையுடன் பரதன் நந்தியம்பதி திரும்புதல்; இராம இலக்குவ சீதையர்கள் தண்டகாரண்யம் செல்லல்



Part 4
இப்பகுதி: ஆரணிய காண்டத் தொடக்கம்.  இராமன் அத்திரி முனிவர் பர்ணசாலைக்குச் செல்லலும்; அநசூயை தந்த ஆபரணங்களை சீதை பெற்றுக் கொண்டு தண்டகாரண்யத்துக்குப் புறப்படலும்; எதிர்ப்படும் விராதன் குறித்த வருணனையில் ஒரு பகுதியும்.  பாடல் 1 முதல் 9 வரை.

Hari Krishnan

unread,
Jan 5, 2014, 9:08:47 AM1/5/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
சொக்கனுடைய வகுப்புக் குறிப்புகள், இரண்டு பாகங்களாக, கீழே தரப்படுகின்றன: 

இன்றைய வகுப்பு Notes, கம்பன் சொற்களில் (பகுதி 1)

ஏந்தலும் எழுந்து… புனலிடை முழுகி… மறையவன் சடங்கு காட்ட… முறையின் ஈந்தனன். சானகி இருந்த அச்சாலை எய்தினான்.

தையலை நோக்கினன், கைகளில் கண் மலர் புடைத்துக் கால்மிசை பரதன் வீழ்ந்து அரற்றினான்.

துயர் உறும் அரிய வீரனை (பரதனை) ராமன் தாங்கினான்.

ராமன்: ‘நாயகன் (தசரதன்) என் பிரிவினின் துஞ்சினான்.’

(சீதை) துண் எனும் நெஞ்சினாள் துளங்கினாள், ஏங்கினாள், துயர்க் கடல் அடிவைத்தாள்.

முனிவர்தம் தருமப் பன்னியர் ஆயவள் தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர், தூய நீராட்டினர், துயரம் நீக்கினர், நாயகர் சேர்த்தினர்.

நால்வரை ஈந்த மூவரோடு சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய தோன்றல்(ராமன்)பால் சுமந்திரன் தொழுது தோன்றினான்.

ராமன்: (தன் தாயரிடம்) ’எந்தை யாண்டையாண்? இயம்புவீர்’…

தாயரும் தலைப் பெய்து, தழீஇ துன்பினால் உரறல் ஓங்கினார்.

அவ்வீரரைப் பெற்ற பொன் அனார்களும் சனகன் பூவையைத் துன்னி புல்லினார், இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார்.

சேனை வீரரும் மாந்தரும் மற்றுளோர்களும் ஏனை வேந்தரும் பிறரும் யாவரும் கோனை எய்தினார் குறையும் சிந்தையார்.

அன்று தீர்ந்தபின்…

ராமன்: ‘பரத, கூறு, வரதன் துஞ்சினான், வையம் ஆணையால் சரதம் நின்னதே, மகுடம் தாங்கலாய், விரத வேடம் நீ என் கொல் வேண்டுவான்?’

பரதன்: ‘வரத்தின் நின்னையும் நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான்தனைக் கொன்றாள் தரும் தனையன், ஆதலால் எனக்குத் தவம் அடுப்பது ஒன்றா.’

பரதன்: ‘இவ்வுலகை நோய் செய்த பாவகாரியில் பிறந்த பாவியேன், யாவன் ஆகி இப் பழி நின்று ஏறுவேன்?’

பரதன்: ‘நீ பதம் துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால், மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று அறம் தின்றான் என அரசு ஆள்வெனோ?’

பரதன்: ’உந்தை (தசரதன்) தீமையும், தாய் (கைகேயி) தீமையும் நீங்க, மீண்டு அரசு செய்க.’

ராமன்: ‘வெற்றி வீர! யான் விளம்பக் கேள்!’

ராமன்: ‘முறையும் வாய்மையும் நீதியும் மேன்மையோடு அறனும் யாவையும் இறைவர் ஏவலால் இயைவ.’

ராமன்: ‘கேள்வியும் ஞானமும் சீலமும் வினையின் மேன்மையும் தொழற்கு உரிய தேவரும் குரவரே.’

ராமன்: ‘அந்த நல் பெருங்குரவர் ஆர் என நோக்கினால், தந்தை, தாயர் என்று இவர்கள்தாம், வேறு எவரும் இல்லை.’

ராமன்: ‘தாய் வரம் கொள, தந்தை ஏவலால் நம் குலத் தருமம் மேவினேன், நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ?’

ராமன்: ‘புதல்வர் ஆதல் தந்தை தாயரை வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ? வன் பழி புனைதலோ?’

ராமன்: ‘வரன் நில் உந்தை சொல் மரவினால், தரணி நின்னது என்று இயைந்த தன்மையால், உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால், அரசு நின்னதே, ஆள்க!’

பரதன்: ‘முன்னர் வந்து உதித்து, நின்னை ஒப்பு இலா நீ, பார் என்னது ஆகில், யான் இன்று தந்தனென், போந்து நீ மகுடம் சூடு.’

ராமன்: ‘நீ வையம் என் வசம் செய்தால் அது முறைமையோ? எந்தையார் அருள, அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ?’

ராமன்: ‘வாய்மை அன்றி வையகம் தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ? தீமைதான் அதில் தீர்தல்.’

ராமன்: ‘எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் நான் வனத்துள் வைக, நீ தந்த பார் அகம் தன்னை அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால்.’

ராமன்: ‘மன்னவன் இருக்கவேயும் மகுடம் சூடுக என்ன, யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி. நீ என் ஆணையை மறுக்கலாமோ? சொன்னது செய்தி ஐய!’

வசிட்டன்: ‘வள்ளியோய்! கேட்டி!’

வசிட்டன்: ‘உன் தனிக்குலம் வேந்தர்கள் இன்று அளவினும் முறை இகந்துளார் இலை.’

வசிட்டன்: ‘யாரினும், பண்பினால் உதவிய ஒருவனே, உயரும்.’

வசிட்டன்: ‘யான் உனை எடுத்து விஞ்சைகள் பல உதவிற்று உண்மையால், “அன்று” எனாது, எனது ஆணை! ஐய! நீ போந்து அளி, உனக்கு உரிய நாடு!’

கூறிய முனிவனைக் கைகளால் தொழுது…

ராமன்: ‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை கூறுவது உளது!’

ராமன்: ‘சான்றவர் ஆக, தன் குரவர் ஆக, தாய் போன்றவர் ஆக, மெய்ப் புதல்வர் ஆக, செய்வேன் என்று ஏன்றபின் மறுக்கும் ஈட்டதோ?’

ராமன்: ‘தாய் பணித்து உவந்தன, தந்தை “செய்க” என ஏய, மேற்கொளாத் தீய அப் புலையனின், நாய் எனத் திரிவது நல்லதல்லதோ?’

ராமன்: ‘முன் உறப் பணித்தவர் மொழியை யான் கொண்டு “அது செய்வேன்” என்றதன் பின்னுறப் பணித்தனை, என் இனிச் செய்வகை?’

வசிட்டர்: ‘உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம் இனி!’

பரதன்: ‘ஆள்பவர் ஆள்க நாடு, நான் பனிபடர் காடு உடன் படர்தல் மெய்.’

தேவர்கள்: (தங்களுக்குள்) ‘இவ்வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல், செவ்வழித்து அன்று நம் செயல்.’

தேவர்கள்: (பரதனிடம்) ‘இராமன் இவ்வழிப் போத்து தாதை சொல் புரக்கும் பூட்சியான், ஆண்டு ஏழினொடு ஏழும் நிலம் காத்தல் உன் கடன், இவை கடமை.’

ராமன்: (பரதனிடம்) ‘மறுக்கற்பாலது அன்று, யான் உனை இரந்தனென், இனி என் ஆணையால் ஆனது ஓர் அமைதியின் அளத்தி பார்.’

பரதன்: ‘ஆம் எனில், ஏழ் இரண்டு ஆண்டில், நீ நெடுநகர் (அயோத்தி) நண்ணி, கோ முறை புரிகிலை என்னின் எரி சாம், இது சரதம், நின் ஆணை சாற்றினேன்.’

ராமன்: ‘அன்னது ஆக!’

விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்…

பரதன்: ‘செம்மையின் திருவடித்தலம் தந்து ஈக.’

(பாதுகைகள்) இரண்டும் (ராமன்) நல்கினான்.

(பரதன்) அழுத கண்ணினான், அடித்தலம் இரண்டையும் சூடினான், இறைஞ்சினன், போயினான்.

ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் சான்றவர் குழு, தவத்துளோர்கள், சேனை, மற்றும் சுற்றுற முனியும் (வசிட்டர்) போயினான்.

பரத்துவனும் போயினான், நெடுநகர் (அயோத்தி) மாந்தர் போயினார், தேவரும் போயினார், கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான்.

பரதன் கங்கையின் கரை கடந்து முந்தினான், அயோத்தி புக்கிலன், கங்குலில் நெடிது உறக்கம் நீக்கினான்.

நந்தியம்பதியிடை, நாதன் பாதுகம் கோல் முறை செலுத்த, சிந்தையான் (பரதன்) இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான், நீர் அறாத கண்ணினான்.

’குன்றினில் இருந்தனன்’ என்னும் கொள்கையால், ‘நின்றவர் நலிவரால், நேயத்தால்’ எனா… தம்பியும் தானும் (ராமனும்) தையலும் (சீதை) சேறல் மேயினான்.

(அயோத்தியா காண்டம் நிறைவு)

இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களிலேயே, பகுதி 2

(ஆரண்ய காண்டம் தொடக்கம்)

முத்து இருத்தி அவ் இருந்தனைய மொய்ந்நகையொடும், சிலைக் குமரர் சென்று அணுகினார், அத்திரிப் பெயர் அருந்தவன் இருந்த அமைதி.

முனிவனைப் புக்கு இறைஞ்சினர்.

அத்ரி: ‘குமரர்! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ? எமரின் யார் தவம் முயன்றவர்கள்?’

அவன் (அத்ரி) பன்னி அனசூயை பணியால் அணிகலன், தூசு, சந்து இவை சுமந்த சனகன் பொன்(சீதை)னொடு ஏகி, தண்டக வனம் புகுதலும்…

(விராதன் வருகிறான்)

செஞ்சுடர் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன், நஞ்சு உருவு பெற்று நடந்ததென…

கண்கள் கனல் பொங்க, விண் துளங்கிட, விலங்கல்கள் குலுங்க, வெயிலும் கண்டு கதிர் குறைந்திட…

புக்க வாள் அரி முழங்கு செவியின் உற, பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட, எதிர் உற்ற செருவத்து உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சை…

படையொடு ஆடவர்கள், புரவி, களிறு, தேர், அரிகள், உழுவை எலாம் வாரி அரவால் முடி மாலை…

Hari Krishnan

unread,
Jan 12, 2014, 8:04:50 AM1/12/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
நேற்று நடைபெற்ற நாற்பத்தோராம் அமர்வில் விராதன் வதைப் படலத்தை முடித்து சரபங்கர் பிறப்பு நீங்கு படலத்தைத் தொடங்கி பதினான்கு பாடல்களோடு நிறுத்திக் கொண்டோம்.  தொடக்கத்தில் இந்தப் படலத்தையும் முடிப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தோம்.  இருந்தாலும் விராதன், இராமனைத் துதிக்கும் பாடல்கள் அமர்வில் இருந்த அத்தனை பேரையும் கட்டிப் போட்டுவிட்டன.   விளக்கமும் அவையினரின் கூட்டு விளக்கமுமாக இந்த அமர்வு, மறக்க முடியாத அமர்வாக அமைந்துவிட்டது.  

பதிவுகளின் சுட்டிகளும் விவரங்களும் கீழே: 

Part 1
பாடல் 11-19 விராதன் தோற்ற வருணனை; 20 விராதன், சீதையைத் தூக்கிச் செல்லல்; 21-25 இராம இலக்குவர்கள் விராதனைத் தடுத்தல்; 26 விராதன் இராம இலக்குவர்களின்மேல் தன் திரிசூலத்தை எறிதல்.

Part 2
பாடல் 27-40 விராதனுடைய சூலப்படை இரண்டு துண்டுகளாகப் போகவும், அவன் சீதையை விடுத்து இராம இலக்குவர்களுன் போர் புரிவதும், அவனுடைய கைகளை வெட்டுவதற்காக தோளின் மேல் ஏறிய இருவரையும் விராதன் தூக்கிக் கொண்டு விராதன் அந்தரத்தில் சாரி வருவதும்; சீதையின் துயரமும்; 41 சீதை துன்பப்படும் சமயத்தில் இவனுடன் என்ன விளையாட்டு வேண்டியிருக்கிறது என்று இலக்குவன் கேட்பது; 42-47 வாசிப்பு.

Part 3
42 விராதனை இராமன் காலால் உதைத்துத் தள்ளல்; 43 இருவரும் அவன் தோளை வெட்டுதல்; 44-45 இலக்குவன் வெட்டிய குழியில் விராதனைப் புதைத்தல்; 46 சாபம் நீங்கிய விராதன் விண்ணில் தோன்றி 47 இராமனைத் துதிக்கத் தொடங்குதல்--பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ தொடங்கி பாடல் 55 வரை



Part 4
விராதன் துதி தொடர்ச்சி பாடல் 55ன் விளக்கத் தொடர்ச்சி; 56-61 விராதன் துதி தொடர்ச்சி; முடிவு. 62-73 விராதன் தன் சாப வரலாறு சொல்லி, நீங்கிப் போதல்; மூவரும் ஒரு தபோவனத்தில் தங்குதல்.  விரதன் வதைப்படலம் முடிவு.  சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்.  பாடல் 1 மூவரும் சரபங்காஸ்ரமத்துக்கு வருதல்; 2-14 இராமன் ஆஸ்ரமத்தை அணுகும் சமயத்தில் அங்கே வரும் இந்திரன்-இந்திராணி வருவதன் வருணனை.


அடுத்த அமர்வு, 14ம் தேதியன்று திட்டமிடப்பட்டுள்ளது.  18ம் தேதி சனிக்கிழமையன்று காலை அமர்வில் அபிராமி அந்தாதி முற்றும் விளக்கங்களுடன் தனியுரையாகச் செய்கிறேன்.  மாலை வழக்கம் போல கம்பராமாயண அமர்வு நடைபெறும்.  முடிந்தவர்கள் நேரில் வரலாம்.  முடியாதவர்களுக்குப் பதிவுகள் இருக்கவே இருக்கின்றன!

Hari Krishnan

unread,
Jan 12, 2014, 8:09:21 AM1/12/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
சொக்கனுடைய வகுப்புக் குறிப்புகள், வழக்கம் போல்:


இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பனின் சொற்களிலேயே: (பாகம் 1)

வீர வெம் சிலையினோர் எதிர், விராதன் எனும் அக் கோர வெம் கண் உரும் ஏறு அன கொடுந்தொழிலினான் (வந்து நின்றான்)

விராதன்: ‘நில்லும் நில்லும்…’

வந்து மலர் அன்ன மனையாளை ஒரு கை முகந்து உயர் விசும்பு தொடர…

காளை மைந்தர் அது கண்டு, கதம் வந்து கதுவ, சிலை இடம் கொண்டு…

ராமன்: ‘அடா! மீளுக! எங்கு அகறி?’

விராதன்: ‘நான்முகன் வரத்தின், எனது ஆவி அகலேன்! ஏது யாவதும் இன்றி சாதியாதன இல்லை! உயிர் தந்தனன்! அடா! போதிர், மாது இவளை உந்தி இனிது!’

வீரனும் (ராமன்) சிறிது வெண்முறுவல் வெண்ணிலவு உக…

ராமன்: ‘போர் அறிந்திலன் இவன்! பொற்பும் உரனும் தீரும் எஞ்சி.’

பாவையை (சீதையை) விடா… அஞ்சனக் குரியனான் எதிர் அரக்கன் அழலா… படை திரித்து எறியவே… ராமன் ஒரு வாளி விடவே… எஃகம் அது அற்ற…

(விராதன்) போர் ஒடுங்கலன், புழுங்கி பருப்பதம் எலாம் விசைத்து விடலும்… கிரி அற்று உக வாளி கடவலால்… விட்ட மலை மீள… அவன் உடல் ஊறுபடலும்…

ராமரை மாமராமரம் இறுத்து அதுகொண்டு எற்றவரலும்… சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால் வேறு வேறு துணி செய்து…

மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த… தைத்த அக்கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே…

எரியின் கணை இராமன் விட, உருவி ஓட, மறம் ஓடுதல் செயா உணர்வினான், குருதி ஆறு பெருகிச் சொரிய, வேக வலி கெட்டு, உணர்வு சோர்வுறுதலும்…

சின வாள் உருவி…

ராமன்: ‘வல் கை துணித்தும்!’

முந்து கடுகிப் படர்புயத்து தோள் இருவர் ஏற…

விழுந்து அழி கொழுங்குருதியான் தோள்கொடு சுமந்து தழுவிக் கொண்டு எழுந்தனன்… சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்.

தன் கணவன் வஞ்சன் வினையில் போதலோடும் அலமந்தனள் சீதை.

சீதை: ‘அறவோர்கள்தமைவிட்டு, என்னையே நுகர்தி!’

லட்சுமணன்: ‘தேவி துயர்கூர விளையாடல் தொழிலோ? பழுது! வாழி!’

ராமன்: ‘ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் போகல் நன்று என நினைந்தனன், இவன் சாகல் இன்று பொருளன்று.’

நகும் தகைமையோன் (ராமன்) உந்தலும் விராதன் விழவே… தோள் இரண்டும் வடிவாள் கொடு துணித்து, குதித்தலும்… வெகுண்டு குறுகலும்…

ராமன்: ‘இளையோய், இவனை மண்ணிடைக் கடிது பொத்துதல் வழக்கு.’

மத நல் யானை அனையான் (லட்சுமணன்) வகிர்ந்த குழிவாய் அழுந்த… அன்பர் கருதிற்று உதவு சேவடியினால் அமலனும் உந்துதலுமே…

பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் கட்ட வல் பிறவி தந்த கடையான உடலான் விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் என.

(விராதன்) அறிவு வந்து, நம்பனை அறிந்து பகர்வான்…

விராதன்: ‘வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன நின் பாதங்கள் இவை என்னில், படிவங்கள் எப்படியோ!’

விராதன்: ‘அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றிக் கறங்கு ஆகுமெனத் திரிய நீயேயோ கடவாய்தான்!’

விராதன்: ‘இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டின் இனிது உகந்தோய்!’

விராதன்: ‘பிறவிக் கடல் கடக்கும் புணைபற்றி நனி நின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்னத் தனி நின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீ!’

விராதன்: ‘அயனே முதலாக உளராகி, வானவர்க்கும், மன்னுயிர்க்கும் நீ ஆகின் முதல் தாதை நெறிமுறையால் ஈன்றெடுத்த தாயாவார் யாவரே?’

விராதன்: ‘தருமத்தின் தனிமூர்த்தி!’

விராதன்: ‘நீ ஆதி பரம்பரமும், நின்னவே உலகங்கள், ஆயாத சமயமும் நின்னடியவே!’

விராதன்: ‘தீயாரின் ஒளித்தி, வெளி நின்றால் தீங்கு உண்டோ? வீயாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ?’

விராதன்: ‘தாய்தன்னை அறியாத கன்று இல்லை, கன்றை ஆ அறியும், உலகின் தாய் ஆகின், ஐய, நீ அறிதி எப்பொருளும், அவை உன்னை நிலை அறியா! மாயை இது என்கொலோ!’

விராதன்: ‘வாராதே வரவல்லாய்!’

விராதன்: ‘உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே!’

விராதன்: ‘சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் தவம் நின்று இயற்றுவார், திரு உறையும் மணிமார்ப! நினக்கு என்னை செயற்பால? உறங்குதி உறங்காதாய்!’

விராதன்: ‘அரவு ஆகிச் சுமத்தியால், எயிற்றின் ஏந்துதியால், வாயில் விழுங்குதியால், ஓரடியால் ஒளித்தியால் நிலமகளை. இஃது அறிந்தால் சீறாளோ மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள்?’

விராதன்: ‘மெய்யைத்தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள் உய்யத்தான் ஆகாதோ, உனக்கு என்ன குறை உண்டோ?’

விராதன்: ‘வையத்தார், வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த ஐயத்தால், சிறிது ஐயம் தவிர்ந்தார்.’

விராதன்: ‘அன்னமாய் அருமறைகள் அறைந்தாய், பின்னமாய் ஒன்றாதல் பிரிந்தேயோ, பிரியாதோ? என்ன மாயம் இவை?’

விராதன்: ‘அடியேன் அருந்தவத்தால் அணுகுறலால் இப்பிறவிக் கடல் கடந்தேன், இனிப் பிறவேன், இருவினையும் துடைத்தாய் நீ!’

ராமன்: ‘நீ இவ்வாறு உற்றவாறு உணர்த்து!’

விராதன்: ‘வள்ளல், வாழி, கேள்!’

விராதன்: ‘ஆடல் ரம்பை நீடு அரங்கு ஊடு நின்று, பாடலால் ஊடல் வந்து, கூட, இக்கூடு வந்து கூடினேன்.’

விராதன்: ‘வீர! (என்) பேர் தும்புருத்தன்’

விராதன்: ‘காம நோய் துரக்க வந்த தோமினால், இரக்கம் இன்றி ஏயினார், அரக்கன் மைந்தன் ஆயினேன்!’

விராதன்: ‘கிலிஞ்சன் (என்ற அரக்கனின்) மைந்தன் ஆயினேன்.’

விராதன்: ‘ஏயினார் இன்னல் தீரும் ஈகையான் நின்ன தாளின் நீங்கும் என்று உணர்த்தினார்.’

விராதன்: ‘இன்றுகாறும் ஏழையேன், நன்று, தீது நாடலேன், தின்று தீய தேடினேன், நின் பொலம் கொள் தாள் தீண்ட இன்று தேறினேன்.’

விராதன்: ‘தெறுத்து வந்த தீது எலாம், அறுத்த உன்னை ஆதனேன் ஒறுத்த தன்மை பொறுத்தி.’

(விராதன்) போயினான்

பூவையோடு ஏ வலாரும் ஏகினார். வேத மெய்யர் வாழ் சோலை முன்னினார், வைகல்தானும் வைகினார்.


இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பரின் சொற்களிலேயே (பாகம் 2)

இரவு உறும்பொழுது ஏகினர் சரபங்கம் இருந்து தவம் கருது வாச வனம்.

அவ்வேலையின் (அங்கே) எய்தினன் ஆயிரம் தாமரையின் கண்ணினன், விண்ணவர் கோன் (இந்திரன்).

செம்மா மலராள் நிகர்த் தேவியொடும் (சசி) வெம்மா (ஐராவதம்) மிசையான், விரிவெள்ளி விளங்கு அம்மாமலை அண்ணலையே (சிவன்) அனையான்.

(இந்திரன்) நின்றான்.

எதிர்நின்ற நெடுந்தவனும் (சரபங்கர்) எதிர்கொண்டு சிறப்பு அமையா…

சரபங்கர்: ‘இவண் எய்திய ஆறு என்?’

Sk Natarajan

unread,
Jan 12, 2014, 10:58:15 PM1/12/14
to வல்லமை, santhavasantham, mintamil, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், Ramanan Isaikkavi, crazy mohan
மிகவும் அருமை ஐயா
வாழ்த்துகள்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/11/10 Hari Krishnan <hari.har...@gmail.com>
அமர்வு நடந்துகொண்டிருக்கும் போதே, உடனுக்குடன் குறிப்புகளை வலையேற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நாக. சொக்கன் தொகுத்தளித்த வகுப்புக் குறிப்புகளை இங்கே தருகிறோம்.

இந்த வார வகுப்பு, நாடக வடிவில்:

கோசலையிடம் தசரதன் பழைய கதை சொல்கிறான்: ‘வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை, சென்று திரிவேன், நதியின் கரைவாய்ச் சென்றே நின்றேன்!’



Hari Krishnan

unread,
Jan 15, 2014, 11:35:10 PM1/15/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
பொங்கலன்று நடந்த நாற்பத்திரண்டாம் அமர்வில், சரபங்கன் பிறப்பு நீங்கு படலத்தையும் அகத்தியப் படலத்தையும் முற்றாக ஓதி முடித்தோம்.  பதிவுகளும் விவரங்களும் கீழே:

Part 1
சரபங்கன் பிறப்புநீங்கு படலம்: பாடல் 15-20 சரபங்கரை சத்தியலோகத்துக்கு வருமாறு இந்திரன் அழைத்தலும் அவர் மறுத்தலும்; 21-24: இராமன் தனியனாக சரபங்கர் ஆசிரமத்துள் நுழைதல்; 25-30:  இந்திரன் இராமனைக் கண்டு, மனத்துள் துதித்தல்
Part 2
பாடல் 31: இந்திரன் துதி (தொடர்ச்சி); 32: இந்திரன் விடைபெறல்; 33-44: சரபங்கர் இராம இலக்குவ சீதையரை வரவேற்றலும், அவர்கள் முன்னிலையில் தன் மனைவியுடன் தீயில் பிரவேசித்து வீடு பெறுதலும்.  அகத்தியப் படலம் தொடக்கம்: 1-13 வரை இராமனிடத்தில் அரக்கர்களால் படும் துயரை முனிவர்கள் முறையிடல்.

Part 3
பாடல் 14-16: முனிவர்கள் முறையீடு தொடர்ச்சி; 17-22: அரக்கரை அழிப்பதாக இராமனின் வாக்குறுதி; 23-27: அவ்விடத்தில் பத்தாண்டுகள் தங்கியிருந்த மூவரும் சுதீக்கண முனிவரிடத்துக்குச் செல்வது; 28-31 வரை முனிவரோடு உரையாடல்; 32-37: மூவரும் அகத்திய ஆசிரமத்துக்குக் கிளம்புவதும் அகத்திய முனியின் சிறப்பும்.

Part 4
பாடல் 38-41 அகத்தியன் சிறப்பு (தொடர்ச்சி) 42-53: அகத்தியன்-இராமன் உரையாடல் முதலியன; 54: அரக்கர் இருக்குமிடத்துக்கு முன்னதாகவே சென்று தங்க விரும்புவதாக இராமன் தெரிவிப்பது; 55-56: இராமனுக்கு ஆயுதங்களை வழங்கி, அகத்தியர் விடை தந்து; 57-59 அகத்தியன் உரைத்தபடி மூவரும் பஞ்சவடிக்குக் கிளம்புதல்.




வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அபிராமி அந்தாதி பொருள் விளக்கத்துடன் ஓதி முடித்து,  மாலை 4-7 வரை (நாலு முதல் ஏழுதானா அதில் மாற்றம் உண்டா என்பதை சொக்கன் முதலானோர் உறுதிப் படுத்துவார்கள்) கம்பராமாயண முற்றோதலின் நாற்பத்து மூன்றாம் அமர்வும் நடைபெற இருக்கின்றன.  இரண்டு அமர்வுகளின் பதிவும் வலையேறும்.  முடிந்தவர்கள் நேரில் வந்து பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Hari Krishnan

unread,
Jan 15, 2014, 11:36:17 PM1/15/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
சொக்கனின் வகுப்புக் குறிப்புகள்:

இன்றைய கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பரின் சொற்களிலேயே (Part 1)

இந்திரன்: ‘மாதவ, நின்னால் இயை நீதி நெடும்தவம் அரிது என்று உணர்வான், அந்நான்முகன், நின்னை அழைத்தனன். போதுதி!’

இந்திரன்: ‘நீ வந்தாய் எனின், (பிரம்மன்) நின் எதிரே வருவான். நல்லாள் உடனே நட நீ!’

சரபங்கர்: ‘அல்லேன்.’

சரபங்கர்: ‘அற்பம் கருதேன், என் தவமோ கற்பம் பல சென்றது. குறுகா, நெடுகா, குணம் வேறுபடா நெறி எய்துவென்.’

என்று இன்ன விளம்பிடும் எல்லைவாய், வல் திண் சிலை வீரரும் வந்து அணுகா, ஓதையினால் உணர்வார், நின்று நினைவார்.

அவர்கள்: ‘கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக் கம்பக் கரி நின்றது கண்டனம். உம்பர்க்கு அரசு எய்தினன்.’

மானே அனையாளொடும் (சீதை) மைந்தனை (லட்சுமணனை) அப் பொழிலின் புறனே நிறுவா (ராமன்) அகல் பொழில் சாருதலும்… கண்டான் இமையோன் இறை.

(இந்திரன்) தூணாகிய தோள் கொடு அவன் (ராமனைத்) தொழுவான்.

(இந்திரன்) துன்னாரைக் கொன்றும், சுருதிப் பெருங்கடலின் சொற்பொருள் கற்பித்தும், செந்நெறியின் துய்த்தும், திருவளித்தும், வீடளித்தும் கவசமாய், ஆருயிராய், மெய்த்தவமாய், கண்ணாய், ஞானமாய்க் காப்பானைக் காணா… அவசமாய்ச் சிந்தை அழிந்து அயலே நின்றான்.

இந்திரன்: ‘தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே, சுற்றமே, நீந்த அரியா கருணைக்கெல்லா நிலயமே!’

இந்திரன்: ‘வேத நெறிமுறையின் நேடி ஆய்ந்த உணர்வின் உணர்வே, எந்தாய், இருநிலத்தவோ நின் இணையடித் தாமரைதாம்?’

இந்திரன்: ’மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை, வெளியோடு இருள் இல்லை, மேல், கீழ் இல்லை, மூவாமை இல்லை, மூத்தமையும் இல்லை.’

இந்திரன்: ‘முதல், இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை, தேவா, இங்கு சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவக் காவாது ஒழியில் பழி பெரிதோ?’

இந்திரன்: ‘தாழி தலையாகத் தண் தயிர் நீராகத் தடவரையே மத்தாகத் தாமரைக் கை நோவ ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய்.’

இந்திரன்: ’ஒன்றாகி, மூலத்து உருவம் பல ஆகி, உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி நிலையது ஆகி, உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற ஞானக் கொழுந்தே.’

இந்திரன்: ‘நவை தீர்க்கும் நாயகமே, நல்வினையே நோக்கி நின்றார்கைக் காத்தி, அயல் பேரைக் காய்தி.’

(இந்திரன்) இன்னன பல நினைந்து ஏத்தினன், இயம்பா…

இந்திரன்: (சரபங்கரிடம்) ‘துன்னுதல் இடை உளது, தர விடை.’

புரந்தரன் (இந்திரன்) போனான்.

(சரபங்கர்) வானவர் தலைவனை (ராமனை) வரவு எதிர் கொண்டான். ஆனவன் அடி தொழ, அருள் வர அழுதான், தழுவினன்.

சரபங்கர்: ‘ஏழையும் இளவலும் வருக.’

அவரொடும் (ராமன்) வந்தனன். அறிஞன் அறவுரை செவிவயின் உதவ வைகினன்.

(மறுநாள்)

அறிஞனும் (சரபங்கர்) தீ இடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்.

சரபங்கர்: ‘நீ விடை தருக!’

ராமன்: ‘நீ புரிதொழில் எனையது? புகலுதி!’

சரபங்கர்: ‘செய் திருவினை உற யான் எரி புக நினைகுவென், அருள்க.’

ராமன்: ‘யான் வரும் அமைதியில் இது செயல் எவனோ?’

சரபங்கர்: ‘ஆயிரம் முகம் உள தவம் அயர்குவென் நான், நீ இவண் வருதி எனும் நினைவு உடையேன். மேயினை, போயின இருவினை! இனியொரு வினை இலை.’

சரபங்கர்: ‘இந்திரன் மலர் அயன் உலகம் தந்தனன், சாரலன், அந்தம் இல் உயர்பதம் அடைதலை முயல்வேன், ஆதலின் இது பெற அருள்.’

(சரபங்கர்) காதலி அவளொடு எரி முழுகிப் போதலை மருவினன்.

இன்றைய பெங்களூரு கம்ப ராமாயண வகுப்பு Notes, கம்பரின் சொற்களிலேயே (Part 2)

அனையவன் (சரபங்கர்) இறுதி நோக்கலின் இரங்கு நெஞ்சினர்… அரிதின் போயினார்.

மலைகளும் மரங்களும் மணிக் கல் பாறையும் நதிகளும் அருவிச் சாரலும் பழுவமும் இனிய சூழலும் தடங்களும் நீங்கினார்.

பாலகில்லரும் முண்டரும் மோனரும் கண்டனர் ராமனை, களிக்கும் சிந்தையார்.

அரக்கர் காய வெதும்புகின்றனர், அனல் வரு கானகத்து அமுது அளாவிய புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார்.

புழுங்கிச் சோருநர், அரக்கர் என் கடல் இடை ஆழ்கின்றார் ஒரு மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார்.

(முனிவர்கள்) அக்குரிசில் வீரனைப் பொழிந்து எழு காதலில் பொருந்தினார், அவன் தொழும்தொறும் தொழும்தொறும் ஆசி சொல்லுவார்.

இனியது ஓர் சாலை கொண்டு ஏகி…

முனிவர்கள்: ‘இவ்வயின் நனி உறை.’

(முனிவர்கள்) தனி இடம் சார்ந்தனர்.

மாதவர் அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான்.

எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்து உவந்து ஐயனும் இருந்தனன்.

ராமன்: ‘அருள் என்?’

முனிவர்கள்: ‘வந்ததோர் வெய்ய வெம் கடும் துயர் விளைவு கேள், இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர், அரக்கர் என்று உளர் சிலர்.’

முனிவர்கள்: ‘நெருக்கவும் அரும் தவத் துறையுள் நீங்கினேம், சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினெம், வீடு காண்குமோ?’

முனிவர்கள்: ‘மாதவத்து ஒழுகலெம், மறைகள் ஓதலெம், ஓதுவார்க்க்கு உதவ ஆற்றலெம், மூது எரி வளர்க்கிலெம், முறையின் நீங்கினேம், அந்தணரேயும் ஆகிலேம்.’

முனிவர்கள்: ‘இந்திரன் அரக்கர் ஏயின சென்னியில் கொள்ளும் செய்கையான், யார் உளர் இடுக்கண் நீக்குவார்? வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால்.’

முனிவர்கள்: ‘புதல்வ! போக்கு இலா இருள் இடை வைகினேம், இரவி தோன்றினாய், வீர! நின் அபயம் யாம்!’

ராமன்: ‘புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின் அகல்வரேனும் என் அம்பொடும் வீழ்வர், நீர் துன்பம் தவிருதிர்.’

ராமன்: ‘வேந்தன் வீயவும் யாய் துயர் மேவவும் எம்பி வருந்தவும் நகர் மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் போந்தது என்னுடைப் புண்ணியத்தால்.’

ராமன்: ‘(இதனால்) அமைந்த வில்லும் அரும் கணைத் தூணியும் சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால்.’

ராமன்: ‘அவர் வேர் அறுப்பென், வெருவன்மின்!’

உரைத்த வாசகம் கேட்டு (முனிவர்கள்) இரைத்த காதலர், தேமறை பாடினர், நிருத்தம் ஆடினர்.

முனிவர்கள்: ‘தோன்றல், நீ முனியின் புவனத் தொகை முப்பது கோடி வந்து ஏன்றபோதும் எதிர் அல என்றலின், சான்று வேதம் தவம் பெரு ஞானமே!’

முனிவர்கள்: ‘ஏயின ஆண்டு எலாம் இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய்.’

மாதவர் பாதம் தொழுது மைந்தனும் (ராமனும்) வைகினான்.

ஐந்தும் ஐந்தும் ஆண்டு வைகினர்.

முனிவர்கள்: ‘அகத்தியர் சேர்க.’

ஏகினார்.

சுதீக்கணன் என்னும் அவ் இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார்.

முனிவனைச் செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும்…

சுதீட்சணன்: ‘இருக்க ஈண்டு!’

வைகினார். செய்கை யாவையும் செய்து…

சுதீட்சணன்: ‘நீ எய்த யான் செய்தது எத்தவம்?’

ராமன்: ‘நான்முகன் வழித் தோன்றினர் முன்னையோருள் தவம் முற்றினார் உன்னின் யார் உளர்? அருள் எய்திய என்னின் யார் உளர் இப்புவிமீது?’

சுதீட்சணன்: ‘விருந்து ஆகி என்னால் அமை தவம் எலாம் கொள்க தக்கிணையா.’

ராமன்: ‘இறைவ, நின் அருள் எத்தவத்திற்கு எளிது? அறைவது உண்டு, அகத்தியர் காண்பது ஓர் குறை கிடந்தது இனி.’

சுதீட்சணன்: ‘நல்லதே நினைந்தாய், அது நானும் முன் சொல்லுவான் துணிகின்றது. செல்க, ஆண்டு அவர் சேருதி, சேர்ந்தபின் இல்லை எய்தலில்லாதவே.’

சுதீட்சணன்: ‘நின் வரவினை ஆதரித்து இன்றுகாறும் நின்று ஏமுறும், அவர் சென்று சேருதி, தேவர்க்கும் யாவர்க்கும் நன்று!’

மாதவன் மொய்ம்மலர்த் தாள் தொழா… சோலை விரைவினின் போயினார்.

ஆண் தகையரவ்வயின் அடைந்தமை அறிந்தான் (அகத்தியன்), சரண் வழங்க எதிர்வந்தான், நீண்ட தமிழால் உலகை அளந்தான்.

(அகத்தியன்) கடல் உண்டு உமிழ்ந்தான், வாதவி உண்டு உலகின் இடர் களைந்தான், விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான்.

(அகத்தியன்) உலகு சீர் பெற இருந்தான், சுடர்க் கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்.

அகத்தியன்: ‘விண்ணினில் நிலத்தினில் யாரும் உள் நினை கருத்தினை உறப் பெறுவென் என் கண்ணினில்.’

அகத்தியன்: ‘வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் வந்தனன் மருத்துவன்.’

கண்டனன் இராமனை, புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் காவிரி கொணர்ந்தான் (அகத்தியன்).

நின்றவனை (அகத்தியனை) வந்த நெடியோன் (ராமன்) அடி பணிந்தான், அவனும் அன்பொடு தழீஇ பல நல் உரை பகர்ந்தான்.

அகத்தியர்: ‘நன்று வரவு!’

வேதியர்கள் வேத மொழி கூறி, காதல் மிக நின்று, கமண்டலுவின் நல் நீர் மாதவர்கள் வீசி நெடு மாமலர்கள் தூவ, சோலை புக்கான்.

அகத்தியர்: ‘இருந்தவம் இழைத்த எனது இல் இடை வந்து என் அரும்தவம் முடித்தனை!’

முனியை(அகத்தியனை)த் தொழுது…

ராமன்: ‘இமையோரும் நெடியோரும் உன் அருள் பெற்றிலர், உன் அருள் சுமந்தேன், வென்றனன் அனைத்து உலகும், மேல் இனிது என்?’

அகத்தியன்: ‘தண்டக வனத்து உறைதி என்று உரை தரக்கொண்டு, உண்டு வரவு இத்திசை எனப் பெரிது உவந்தேன்!’

அகத்தியன்: ‘ஈண்டு உறைதி ஐய இனி, இவ்வயின் இருந்தால் வேண்டியன மாதவம் விரும்பின முடிப்பாய்.’

அகத்தியன்: ‘நிருதர் தோன்றியுளர் என்றால், மாண்டு உக மலைந்து எமர் மனத் துயர் துடைப்பாய்.’

அகத்தியன்: ‘வாழும் மறை, வாழும் மனு, நீதி, அறம் வாழும், இமையோர் உயர்வர், தானவர் தாழ்வார். இனி இங்கு உறைதி.’

ராமன்: ‘அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி அழி தரக் கடிது கொல்வது சமைந்தேன். அவர் வரும் திசையின் முந்துற்று இருக்கை நலம், நிற்கு அருள் என்?’

அகத்தியர்: ‘விழுமியது சொற்றனை! இவண் இவ்வில் மேல் நாள் முழு முதல்வன் வைத்துளது, மூவுலகும் யானும் வழிபட இருப்பது, புட்டிலோடு கோடி!’

புவனம் முற்றும் ஒரு தட்டின் இடை இட்டால் ஒப்பு வரவிற்று என உரைப்பு அரிய வாளும் வெப்பு உருவு பெற்ற அரன் (சிவன்) மேரு வரை வில்லா முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும் (அகத்தியர்) நல்கா

அகத்தியர்: ‘மரன் ஓங்கி, மலை ஓங்கி, மணல் ஓங்கி, சோலை புடை விம்மி, ஆறு தவழ் சூழல், ஓர் குன்றின் பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி.’

அகத்தியர்: ‘கன்னி இள வாழை கனி, கதிர் வாலின் செந்நெல் உள, தேன் ஒழுகு போதும் உள, ஆறும் உள, அன்னம் உள பொன் இவளோடு அன்பின் விளையாட.’

அகத்தியன்: ‘ஏகி இனி அவ்வயின் இருந்து உறைமின்.’

மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான்.

Hari Krishnan

unread,
Mar 6, 2014, 8:18:10 AM3/6/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
நாற்பத்து மூன்றாவது அமர்வில் இடம் பெற்ற நான், 44, 45, 46 ஆகிய மூன்று அமர்வுகளிலும் கலந்து கொள்ள இயலவில்லை.  பேரனோடு மும்பையில் இருந்தேன்.  43 முதல் 46 வரையிலான பதிவுகள் இங்கே இடம் பெற்றுள்ளன.  ஆர்வமுள்ளவர்களுக்காக:


இதில் சூர்ப்பணகைப் படலமும் கரன் வதைப் படலத்தில் ஒரு பகுதியும் அடங்கும்.

நாற்பத்தேழாவது அமர்வுக்கு நான் வந்து விட்டேன்.  கரன் வதை தொடர்ந்தது.  பதிவுகளைப் பின்னால்தான் வலையேற்ற முடிந்தது.

மார்ச் இரண்டாம் தேதி நடைபெற்ற 48ம் அமர்வில் கரன் வதைப்படலத்தை முடித்து 250+ பாடல்களுள்ள சூர்ப்பணகை சூழ்வினைப் படலத்தை் தொடங்கியிருக்கிறோம்.  இனிமேல் அறிவிப்புகள் முறைப்படி வரும்.  இந்த சனிக்கிழமை நான்கரை மணி நேர அமர்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இது நாற்பத்தெட்டாம் அமர்வின் பதிவுகள்.  நான்காவது பகுதியிலிருந்து சூர்ப்பணகை சூழ்வினைப் படலம் தொடங்குகிறது.

இந்த முறை ஆயுதங்களில் கங்கபத்திரம், பல்லம் முதலான அம்புகள், மெர்குரி புல்லெட்டும் திரிசூலப் படையையும் எவ்வாறு ஒப்பிடலாம் (ஒப்பீடு நிறைவு பெறவில்லை; பின்னால் இன்னொரு சந்தர்ப்பத்தில் முடிக்கலாம்) போன்ற பல ஆயுதங்களின் விவரங்களை விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.  கம்பன் அமைத்துள்ள போர்க்களக் காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  இந்த ஆயுத வகைகளை விரிவாக ஆய்ந்தவன் என்ற முறையில் இவற்றை விளக்கியிருக்கிறேன்.  பார்த்து எங்களை கௌரவித்துப் பயனையும் துய்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துகள்/மாற்றுக் கருத்துகள் எப்போதும்போல் வரவேற்கப்படுகின்றன.  

பகுதி 1 கரன் வதைப் படலம் பாடல் 149 முதல் இறுதி வரை



பகுதி 2 கரன் வதைப் படலம் பாடல் 149 முதல் இறுதி வரை

பகுதி 3 பகுதி 1 கரன் வதைப் படலம் பாடல் 149 முதல் இறுதி வரை


பகுதி 4
சூர்ப்பணகை சூழ்வினைப் படலம் முதல் 23 பாடல்கள்.

Hari Krishnan

unread,
Mar 10, 2014, 9:17:37 AM3/10/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
கம்பராமாயண முற்றோதலின் நாற்பத்தொன்தாவது அமர்வு கடந்த சனிக்கிழமை (08.03.2014) அன்று, நான்கு மணி நேரத்துக்கு நீண்டதாக அமைந்ததது.  படிக்கப்பட்ட பகுதி: மாரீசன் வதைப் படலம் பாடல் 24 முதல் 115 வரை (சில பதிப்புகளில் இது சூர்ப்பணகை சூழ்ச்சிப்/சூழ்வினைப் படலம் என்று குறிப்பிடப்படுகிறது.)

சுமார் நாற்பது நிமிட நேரமுள்ள ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன.  உங்கள் கருத்துகளை எப்போதும்போல் வரவேற்கிறோம்.

Part 1

Part 2


Part 3


Part 4


Part 5


Part 6

Hari Krishnan

unread,
Mar 16, 2014, 8:31:25 AM3/16/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.

முற்றோதலின் ஐம்பதாம் அமர்வு வழக்கம் போல விறுவிறுப்பாக நடந்தேறியது.  படிக்கப்பட்ட பகுதி: மாரீசன் வதைப் படலம் பாடல் 116 முதல் 176 வரை (வைமுகோ பதிப்பு தவிர்த்த மற்ற பதிப்புகளின் படி, சூர்ப்பணகை சூழ்விளைப் படலம் முற்றிலும்; மாரீசன் வதைப் படலத்தின் முதல் ஆறு பாடல்கள்)

பதிவுகளை நான்கு பகுதிகளாக இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பகுதி 1


பகுதி 2


பகுதி 3


பகுதி 4


ஐம்பதாவது அமர்வைத் தொட ஆதரவளித்த நண்பர் குழுவுக்கும், இணையப் பெருமக்களுக்கும், இடைவிடாமல் யூட்யூபில் கண்டு ரசிக்கும் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. இன்னும் இரு வாரங்களில், முற்றோதலின் முதலாண்டு நிறைவு விழாவின் பதிவுகளோடு சந்திக்கிறோம்.

ஏப்பரல் மாதம் முடிவதற்குள் கிஷ்கிந்தா காண்டத்தைத் தொடங்க விரும்பும் எங்களை ஆசிர்வதியுங்கள்.

கூடவே, உங்கள் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.  குறைந்த மட்டம், பதிவுகளைப் பார்க்கும் போது, உங்கள் கருத்தை ஒரு வரியாவது பதிவு செய்யுங்கள். இந்தச் செய்தி பரவ உதவுங்கள்.  தமிழகத்துக்கு வெளியே இப்படி ஒரு முயற்சி நடைபெறுகையில் இதற்கு ‘அதுவுமற்றோர் வாய்ச்சொல் அருளீர்’.  வாய்ச்சொல்லையாவது அருளீர்.

மனம் நிறைந்த நன்றியுடன்,
கம்பராமாயண முற்றோதல் குழுவினர்.

Hari Krishnan

unread,
Mar 23, 2014, 10:43:12 PM3/23/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
22 மார்ச் அன்று நடந்தது 51ம் அமர்வு என்றாலும், இந்த நிகழ்வு தொடங்கிய 51ம் வாரம் அன்று.  தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி முதலில், ஒருநாள்-மட்டும்-சுந்தர காண்ட-வாசிப்பு என்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கம் இன்று செழித்தோங்கி, ஆரணிய காண்டத்தின் இறுதிப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அமர்வில், மாரீச மான் சீதையின் முன்னே உலவுவதிலிருந்து அதன் வதை வரையிலான (வைமுகோ பதிப்பின் மாரீசன் வதைப்படலம் பாடல் எண் 177 தொடங்கி, படலத்தின் இறுதிப் பாடலான 252 வரை 75 பாடல்களை, யானை நடையாக மிக நிதானமாக அனுபவித்து ஓதி முடித்தோம்.  இப்படி ஓதியும் 15 நிமிடங்கள் மிகுந்திருந்தன.  அடுத்த படலமான (மற்ற பதிப்புகளில் இராவணன் சூழ்வினைப் படலமாக சுமார் 84 பாடல்களும், சடாயு உயிர் நீத்த படலமாக சுமார் 135-140 பாடல்களுமாகப் பிரித்தும்; வைமுகோ பதிப்பில் 225 பாடல்களாக மொத்தமாகவும்) உள்ள பகுதியைத் தொடங்கிவிடலாம் என்று ஒரு பிரிவு துடிப்பாக இருந்தாலும், இந்தப் படலத்தின் முக்கியத்துவம் கருதி, ஒன்றாக, மொத்தமாக ஓதுவதே முறை என்று அடுத்த வாரத்துக்காகத் தள்ளி வைத்திருக்கிறோம்.  

இந்த வாரப் பதிவில் சீதை, ராமனிடத்தில் வந்து பொன்மானைப் பற்றித் தரும்படி கொஞ்சுவது, இலக்குவன் விலக்குவது, இராமன், இலக்குவனுடைய ஒவ்வொரு வாதத்துக்கும் மறு வாதம் சொல்லி, தான் போவதை நியாயப்படுத்துவது, 'நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதற்குள் அது ஓடிவிடப் போகிறது' என்று சீதை தவிப்பது, இலக்குவன், 'நானே போய் பற்றி வருகிறேன்; அல்லது கொன்று வருகிறேன்' என்ற கிளம்புவது; 'நாயக, நீயே பற்றி நல்கலை போலும்' என்று சீதை சிணுங்குவது, சீதையின் கோபத்தைப் பார்த்துப் புன்முறுவல் வெளிப்பட்டுத் தோன்ற, ராமன் வில்-அம்புகளை எடுத்துக் கொண்டு புறப்படுவது (கணவன்-மனைவியருக்கிடையே உள்ள தனிப்பட்ட அன்பு நிறைந்த தருணங்கள்), மாரீசன் ராமனுக்குப் போக்குக் காட்டியபடி செல்வது, மானுடைய ஒவ்வொரு அசைவையும், மெய்ப்பாட்டையும், அதன் இயக்க அழகையும் கம்பன் விவரமாக வர்ணிக்கும் அழகு.. இறுதியில் ராமன் அம்பெய்து மாரீசனை வதைப்பதும், அவன் சீதை, இலக்குவர்கள் பெயர்களை உரத்து அழைத்தபடி தரையில் விழுந்து உயிர் விடுவதும்; உயிர்விடுவதே நோக்கமாக இவன் வந்திருக்க முடியாது; இதற்கும் மேற்பட்ட சூழ்ச்சி ஏதோ ஒன்று இருக்கிறது.  அது நிறைவேறுவதன் முன் பர்ணசாலைக்குத் திரும்புவதே நல்லத என்று சிந்தனையுடனும், 'ஐயன் வல்லன், என் ஆருயிர் வல்லன்; நான் உய்ய வந்தவன் வல்லன்' என்று இலக்குவனைப் பற்றிப் பெருமிதம் ததும்பும் எண்ண ஓட்டமுமாக ராமன் பர்ணசாலை திரும்புவது வரையில் இடம் பெற்றுள்ளன.

வழக்கம் போல நான்கு பகுதிகளாகப் பிரித்தளித்திருக்கிறோம்.  

பகுதி 1


பகுதி 2


பகுதி 3


பகுதி 4


சுவை மிகுந்த கட்டம்.  இனி, இந்த வாரம் தொடங்கி, கிஷ்கிந்தா காண்டத்தின் தொடக்கத்திலேயே அனுமன் வந்துவிடப் போகிறார்.  இனி ஒவ்வோர் அமர்வும் உயிரை நனைப்பதாகத்தான் நடைபெறப் போகிறது--கார்காலப் படலத்தை எட்டும் வரை.  கார்காலப் படலம் குறித்து, அமர்வின் முடிவில் உரையாடிக் கொண்டிருந்தபோது, 'அதைப் படிக்கிறதும், கமலஹாசனுடைய மஹாநதி படம் பார்ப்பதும் ஒன்று.  படப்பிடிப்பு துல்லியமாக இருந்தாலும், காட்சியின் சோகத்தைத் தாங்கும் அளவுக்கு நமக்கு மனவலிமை போதாது' குறிப்பிட்டேன். இந்தக் கட்டம் தொடங்கி இனிமேல் எல்லாமே மிகமிக வேகம் நிறைந்த காட்சிகளாக அமையப் போகின்றன.  

அமர்வின் இறுதியில் வழக்கம் போல அருமையான விரைவுண்டி.  இந்த வார உபயதாரர் அளித்த தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் நாவிலேயே நிற்கிறது--எனக்குத் தனிப்பட்ட முறையில் அதிகம் பிடித்த புளிப்புச்சுவைதான் காரணமோ என்னவோ!  

ஏப்ரல் 19 (அல்லது தமிழ்ப் புத்தாண்டான 14ம் தேதி, இங்கே விடுமுறையாக இருந்தால்) முதல் ஆண்டைப் பூர்த்தி செய்கிறோம்.  இந்த அமர்வில் குழுவைச் சேர்ந்த அனைவரும்  திரண்டு வந்து கலந்து கொண்டு, இந்த நிகழ்வு தொடங்கிய நாளின் இனிமையை மீண்டும் ஒருமுறை மனத்தில் அசைபோட்டும்,(அந்தச் சமயத்தில்தான் அநேகமாக அயோமுகி, கபந்தன் வதை ஏதோ ஒன்று நடைபெறும். கபந்தன் வதை என்றால் அதற்கடுத்த சபரி பிறப்பு நீங்கு படலம் எட்டே பாடல்கள்தான் என்பதால் ஆரணிய காண்டத்தை நிறைவு செய்து விடலாம்) பாடல்களின் நிறைவை மனத்தில் சுமந்தபடியும் அனுபவிப்போம்.  அனைவரும் வருக.  இதுவரையில் வராதவர்களும், சென்னை முதலான மற்ற இடங்களிலுள்ள அன்பர்களும் ஒன்று திரண்டு இந்த முதலாண்டு நிறைவை நிறைவானதாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை எப்போதும் போல் வரவேற்கிறோம்.  எப்போதும் போல் கண்டு களிக்குமாறு அழைக்கிறோம்.

Hari Krishnan

unread,
Mar 23, 2014, 10:51:28 PM3/23/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.

2014-03-24 8:13 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை எப்போதும் போல் வரவேற்கிறோம்.  எப்போதும் போல் கண்டு களிக்குமாறு அழைக்கிறோம்.

முக்கியமான ஒன்றை சொல்ல விட்டுப் போயிற்று.  சென்ற வாரப் பதிவு தொடங்கி, ஒலிப்பதிவின் தரத்தை அதிகரிப்பது எப்படி என்ற வித்தை பிடிபட்டிருக்கிறபடியால், ஒலிப்பதிவு (வெளியோசைகள் தொடர்ந்தாலும்) தெளிவாக இருக்கும்படி அமைத்திருக்கிறோம்.  ஒரு முறைக்கு இருமுறை பாடல்களைப் படிப்பதால், புத்தகம் இல்லாமலும் கேட்பவர்களுக்குப் புரியும்.  கதையின் நிகழ்வுகளும் அனைவருக்கும் தெரிந்த, ஆனால் முழுமையாகத் தெரியாத ஒன்று.  ஆகையாலே, கேட்பவர்களுக்கு 'இது இப்படியா!  அப்படியென்றல்லவா நினைத்தேன்!'  என்று நினைக்கக்கூடிய கட்டங்கள் ஏராளமாக அமைந்ததாகவும் இருக்கின்றன; இருக்கப் போகின்றன.  முடிந்தவர்கள் புத்தகத்தையும் கையில் வைத்துக் கொண்டும், முடியாதவர்கள் அப்படியேயும் கூட, கூடவே படித்தும் அல்லது கேட்க மட்டும் கேட்டும் ரசிக்க ஏதுவானதாய் பதிவுகள் அமைந்துள்ளன.  இனிவரப் போகும் ஒவ்வொரு கட்டத்திலும், நமக்குச் சொல்லப்பட்டு வரும் ராமாயணத்துக்கும், கம்பனுடைய விவரிப்பும் (கூடவே ஆங்காங்கே வால்மீகியின் சம இட விவரிப்புகளும்) நிறைந்ததாக இருக்கப் போகின்றன.  

இந்த அனுபவத்தைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.  

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 24, 2014, 1:09:01 AM3/24/14
to தமிழ் மன்றம், santhavasantham, mintamil, vallamai, தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
வணக்கம் திரு ஹரிகி.
கம்பராமாயணத்தை இதுவரை அது எழுதப்பட்ட காலத்திலிருந்து எத்தனையோ பேர் படித்திருப்பார்கள். எடுத்துச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவற்றை நாம் காண்பதும் கேட்பதும் இயலாது.
ஆனால் தாங்களும் நண்பர்களும் ஓதுவதை நாளையும் எவரும் காணலாம். வேண்டியவர் பயன்கொள்வார். இன்று மதுரைத் திட்டம், இணையப் பல்கலை போன்ற தளங்களைத் தேடிப் பயன்கொள்வார் போல நாளை கம்பராமாயண ஆர்வலர் தங்களுடைய காணொளிகளைத் தேடி வந்து பயன் பெறுவார்கள் என்பது உறுதி. பயன்கொண்டவர் நன்றி சொல்வார் என்பதுமில்லை! 
உங்கள் செயல் அருமை உடைய செயல். 
போற்றுகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Hari Krishnan

unread,
Apr 2, 2014, 12:21:54 AM4/2/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
மார்ச் 30, 2014 அன்று நடைபெற்ற முற்றோதலின் 52ம் அமர்வில், பிற பதிப்புகளில் இராவணன் சூழ்ச்சிப் படலம் என்று பகுக்கப்பட்டுள்ள (வைமுகோவில் சடாயு உயிர் நீத்த படலமாக சேர்த்துத் தரப்பட்டுள்ள) பாடல்களில் முதல் 75 பாடல்களை முடித்தோம்.

'ஹே சீதா, ஹே லக்ஷ்மணா' என்று மாரீசன் இட்ட கூக்குரலால் பதைத்துப் போகும் சீதை இலக்குவனை, இராமனுக்குத் துணையாக இருக்கும்படி போகக் கூறுவதும், இலக்குவன் மறுப்பதும், சீதை, தான் சொல்வதை இலக்குவன் கேட்காவிடில் தீயிடை விழுந்து இறப்பன் என்று தீ மூட்டுவதும், வேறு வழியில்லாமல் இலக்குவன் நீங்குவதும் தொடங்கி;

இந்த இடத்தில் அருணாசல கவிராயருடைய சம இடத்துப் பாடலான, 'யாரென்று ராகவனை எண்ணினீர் அம்மா'  பாடலுக்கு மூலமான, 

'பார் என, புனல் என, பவன, வான், கனல்
பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்;
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்?

என்ற கம்பன் பாடலையும்; எந்த அக்னியில் சீதை விழாமலிருப்பதற்காக இலக்குவன் அவளை இங்கே விட்டுவிட்டுச் செல்கிறானோ, அதே அக்னியில் சீதை அக்னிப் பிரவேச கட்டத்தில் பிரவேசிக்கப் போவதையும், அவள் அவ்வாறு செய்ய ஏதுவாக, இதே இலக்குவனே தன் கரத்தால் அழல் வளர்க்க நேர்வதுமாக கம்பன் படைத்துள்ள முரணைச் சுவைத்தபடிச் சென்று;

இலக்குவன் அகன்றதும், இராவண சன்னியாசி பர்ணசாலைக்கு வருவதும், சீதை அவனை வரவேற்பதும், இரண்டு பேருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் போது, சீதை, 'ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்.  நாளைக்கே ராமர் அரக்கர் கூட்டத்தை வேரறுத்துடுவார்.  நீங்களே பாக்கப் போறீங்க'  என்று அவனை ஒரு முனிவனாக நினைத்துச் சொல்லப் போக, இராவணன் சினமுற்று,

சீறினன், உரைசெய்வான், "அச் சிறு வலிப் புல்லியோர்கட்கு
ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று எடுத்து இயம்பினாயேல்,
தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது, பூளைவீ என வீவன்' அன்றே?

இருபது தோள்கள் அசையும் போதும், வேகமாகத் திரும்பும் போதும் உண்டாகக் கூடிய காற்றின் வேகத்தால் இராமன் பூளைப்பூவைப் போல உதிர்ந்துவிடுவான் என்று சொன்ன அதே மொழிகளை, கம்பன் வெகு கவனத்துடனும் நேர்த்தியுடனும், முதற்போரிபுரி படலத்தில், இராவணனைக் களத்திலிருந்து திருப்பி அனுப்புகையில்:

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன் நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். 

என்று சொல்லும்போது, பல்லாயிரக் கணக்கான பாடல்களைத் தாண்டி, இராவணன் சொன்ன அதே பெருங்காற்று இப்போது சூறாவளியாகவும், அதே பூளைப்பூ மொத்துண்டு சிதறிப் போவதையும், ஓரிடத்தில் சொல்லப்பட்ட வாசகத்தையும் கருத்தையும் அப்படியே பிற்பட்ட இடங்களில் பயன்படுத்தி வியப்பூட்டும் கம்பன், இந்த இடத்தில் எந்த இராமன் எப்படி ஆகப் போகின்றான் என்று இராவணன் சொல்கின்றானோ, அதே இராமன் கையால் அதே இராவணன் அதே நிலைமைக்கு ஆளாய் நிற்பதை இராமன் வாய்மொழியாகச் சொல்லியிருப்பதன் சூக்குமத்தை வியந்தும்;

உரையாடல் நீடித்து, இராவணன் சீதையிருந்த பர்ணசாலையை வேருடன் பெயர்த்தெடுத்து தேர்மிசை வைத்து, வானத்தில் கிளம்பும் 75ம் பாடலுடன் நிறுத்தியிருக்கிறோம்.  அடுத்த வாரம் சடாயு உயிர்நீத்த படலமும் காட்சியும் இடம் பெறப் போகின்றன.  அமர்வின் பதிவுகள் நான்கு பகுதிகளாக இங்கே தரப்பட்டுள்ளன:


ஆர்வலர்கள் வழக்கம் போல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிகு: 29ம் தேதி இரவே வலையேற்றிவிட்டாலும், இப்போதுதான் தகவல் சொல்ல முடிந்தது.  இடையில் சென்னைக்குப் போய்வரும் வேலை இருந்ததே காரணம்.

Hari Krishnan

unread,
Apr 7, 2014, 12:24:43 AM4/7/14
to santhavasantham, mintamil, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, isaikkav...@googlegroups.com, Madhura Bharati, Ramanan Isaikkavi, crazy mohan, V.R Bala Subramaniyan, rugan arya, Naga Chokkanathan, Kannan S, Raghava Mani, Veeraraghavan P.
ஐம்பத்து மூன்றாம் அமர்வில் வெகு நிதானமாக 85 பாடல்களை வாசித்தோம்.  அவற்றின் விவரங்களும், பதிவுகளுக்கான சுட்டிகளும் கீழே தரப்பட்டுள்ளன.

பகுதி 1


பாடல்கள் 75-95: இராவணன் பிராட்டியைத் தூக்கிச் செல்வது; பிராட்டி சோகமுற்றுப் புலம்புவது; இராவணன், பிராட்டியைப் பரிகசிப்பது; 'நீ வீரனாக இருந்தால், தேரை நிறுத்தி, என் கணவனைப் போரில் சந்தி' என்று பிராட்டி சவால் விடுதல்; 'மனிதரோடு பொருதல் இழிவு'--இராவணன்.  'ஆனால், மங்கையரை வஞ்சித்துக் கவர்வது வீரம்'--பிராட்டி.  சடாயு எதிர் வருதல். சீதைக்கு அபயங்கூறி, இராவணனுக்கு அறிவு சொல்லுதல்.

பகுதி 2

பாடல்கள் 96-119: சடாயு அறிவுரை தொடர்ச்சி; இராவணன் மறுத்துப் பேசல்; வருந்தும் சீதைக்கு சடாயு உறுதியூட்டுதல்; சடாயு-இராவணன் போர்; இராவணன் அம்புகளைச் சடாயு உடைத்தெறிந்தது; குண்டலங்களைக் கவர்ந்தது; மார்பில் 14 இராவண சரங்களைத் தாங்கியது; இராவணனுடைய கவசத்தை மூட்டறுத்தது; அவன் கை வில்லைப் பிடுங்கிக் கொண்டது; உடைத்தது; இராவணன் விட்ட சூலப்படை, சடாயுவை பாதிக்காது திரும்பியது.

பகுதி 3

பாடல்கள் 120-143: இராவணன் சூலப்படையை இழந்தது; கதாயுதத்தால் சடாயுவைப் புடைக்க, சடாயு மண்ணில் வீழ்வது; சீதை கலங்குவது கண்டு சடாயு மீண்டும் எழுந்து, இராவணனுடைய தேர்ப்பாகன் தலையைக் கொய்து, இராவணன் முகத்தின்மேல் விட்டெறிவது; அம்பறாத் தூணியைப் பறிப்பது; மார்பிலும் தோளிலும் சக்கரப் படையைப் போல தன் அலகால் கொத்தியும், சிறகுகளால் அடித்தும், கால்களால் பிறாண்டியும் போரிடுவது; சிவன் தந்த வாள் மட்டுமே எஞ்சிய நிலையில், இராவணன் அதைக் கொண்டு சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவது; பிராட்டியின் துயரம்; இராவணன், பர்ணசாலையைத் (தேர் இழந்த நிலையில்) தோளின் மேல் வைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாகக் கிளம்புவது; சடாயு இரங்குவது; தெளிவது.
பகுதி 4


பாடல்கள் 144-160: சடாயு, சோர்வுற்றுத் துயில்வது; இராவணன், பிராட்டியை அசோக வனத்தில் வைத்தது; இலக்குவன், இராமபிரானைச் சந்திப்பது; 'நம் ஆணையை மீறி இவன் ஏன் வருகிறான்' என்று இராமன் சிந்திப்பது; வினவுவது; இலக்குவன் விவரங்களைச் சொல்வது; இராமன், நடந்த எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, 'அவள் மீதும் குற்றமில்லை.  அவளோ பெண்.  பதறுவது இயல்பு.  அதை எண்ணினால் உன் மனத் துயரம் ஆறும்.  உன் மீதும் குற்றமில்லை.  நீதான் என்ன செய்ய முடியும்?  நீ சொல்லச் சொல்லக் கேட்காமல், மானுக்குப் பின்னால் சென்ற நானே எல்லாவற்றுக்கும் பொறுப்பு' என்று சொல்வது; சம இடத்தில் வால்மீகி ராமாயணத்தில், இராமன் இலக்குவனைக் கடுமையாகக் கண்டிப்பதும்; சீதை செய்ததிலோ சொன்னதிலோ தவறேதும் இல்லை என்று விளக்குவதும்--வாசிப்பு. 'இது அனைத்தும் அரக்கர் சூழ்ச்சியே.  சீதையைக் கவரும் திட்டம் அவருக்குள்ளது' என்று உணர்ந்த இராமன், பர்ணசாலைக்கு விரைவது; சீதையைக் காணாமல் திகைப்பது.  உலகின் ஆதி மூலத்தின் மனம் சுழல்வதால் உலகமெல்லாம் சுழலத் தொடங்குது.

பெருகி வரும் ஆதரவுக்கு நன்றி சொல்வது போதாது.  வேறு என்ன செய்து இந்தக் கடனுக்கு ஈடு செய்வது என்று தெரியவில்லை.  இந்தத் திருக்குறளை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்:

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 

உணர்பவருக்கு முன்னால் பேசுவதே, வளரும் பயிரின் பாத்திக்குள் நீர் வார்த்ததைப் போன்றது.  உணர்பவர் திருச்சபை முன்னால் நிற்கக் கிடைத்தது எங்கள் பேறு.  மிக்க நன்றி.

உங்கள் கருத்துகளை எப்போதும்போல் வரவேற்கிறோம்.
It is loading more messages.
0 new messages