ஈழம் பற்றிய கவிதை

1,392 views
Skip to first unread message

kirikasan

unread,
May 21, 2011, 10:34:04 AM5/21/11
to சந்தவசந்தம்
கவிதை 1


முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்
வெட்டித்தலை கொத்திக் கிழியென
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ
சொத்துக்களைத் தட்டிப் பறியிவர்
கற்பைக்கெடு, குத்திக் கொலையென
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ

கொத்துக்குலை மொத்தத் தமிழரும்
கத்திக்குரல் சத்தமிட ஒழி
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோடு
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்
சுற்றிப்பொது பொத்து பொதுவென
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக

முற்றும்அழி ஒற்றைத் தமிழனும்
சற்றும் விதிபெற்றுக் குறைஉயிர்
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக
கத்திக்குடி மக்கள் முழுவதும்
திக்குத்திசை விட்டுத் திரிபடும்
சிக்கல்பட நச்சுக் கலவையை எறிந்தானே

வெட்டித்தலை கொட்டக் குருதியும்
பட்டுத்தெறி ரத்தக் கறையதும்
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானோ
பட்டுக்கிட செத்துத் தொலையென
சொட்டும்மனம் இரக்கப் படவிலை
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட

பத்தும்பல கட்டுக் கதைகளை
விட்டுப்பலர் புத்தித் திரிபட
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண
செத்தும்விழும் ரத்தப் பிணமதை
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே

பக்கம்இரு ரத்தக் கொலைவெறி
யுத்தப்பிரி யெத்தன் அரசது
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய
மத்தம்பிடி பித்தன் கொலையிடு
வித்தைதனை மெத்தப் பழகிய
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ

விட்டுத்துயில் தட்டுக் கதவினை
சட்டத்துறை தக்கப் பதிலிடும்
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை
சட்டத்தவர் இட்டுச் சிறையிடை
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே

கட்டித்தடி வெள்ளை கொடியுடன்
விட்டுச்சுடும் வீரக் குழலதும்
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ

வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட
கத்திக்கிலி பற்றிக் கதறிய
மொத்தக்குரல் விட்டு போவென விடுமாமோ
வட்டிச்சக மொத்தத் தொகைபெற
கத்திக்குரல் விட்டுக் கதறிட
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ

ஒற்றைக்கரம் கொண்டே உருவிய
வெட்டுக்கொலை வாளைச் செருகிட
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற
வட்டக்கதிர் முற்றும் மேற்கிடை மறைவானே

அச்சம்இலை சற்றுப் பொறுபொறு
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்
திட்டமிடு துட்டர் தனையது
சட்டம்எமை முற்றும் புரிந்திட
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்

Lalitha & Suryanarayanan

unread,
May 21, 2011, 10:58:51 AM5/21/11
to santhav...@googlegroups.com
அமர்க்களமான கவிதை!  என்ன வேகம், என்ன உணர்ச்சி!

சிவ.சூரி

2011/5/21 kirikasan <kanaga...@hotmail.com>
     கவிதை 1



VETTAI ANANTHANARAYANAN

unread,
May 23, 2011, 3:04:41 PM5/23/11
to santhav...@googlegroups.com
நெஞ்சத்தை உருக்கும் நடைமுறை நிகழ்வைக் கண்டு கொதிக்கும் உங்கள் உள்ள உணர்வை அருமையும் கடினமுமான சந்த விருத்த நடையில் கொட்டியுள்ளீர்கள்..

அனந்த்

2011/5/21 kirikasan <kanaga...@hotmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

kirikasan

unread,
May 24, 2011, 3:59:54 AM5/24/11
to சந்தவசந்தம்
பாராட்டுக்கள் தந்த தங்கள் இருவருக்கும்
மிக்க நன்றிகள் !

ஈழமெனும் எழில் தேசம் (கவிதை 2)

பச்சை வயல்வெளிக் காற்றுக் கதிர்களில்
பட்டுமேனி தொட்டுஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம் நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறும் இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனிற் காளை சலங்கைக்குக்
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசுந்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழ மெம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் போகும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுமாகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்

On May 23, 8:04 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> நெஞ்சத்தை உருக்கும் நடைமுறை நிகழ்வைக் கண்டு கொதிக்கும் உங்கள் உள்ள உணர்வை
> அருமையும் கடினமுமான சந்த விருத்த நடையில் கொட்டியுள்ளீர்கள்..
>
> அனந்த்
>

> 2011/5/21 kirikasan <kanagaling...@hotmail.com>

> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
>
> - Show quoted text -

Pas Pasupathy

unread,
May 24, 2011, 8:01:59 AM5/24/11
to santhav...@googlegroups.com
அழகான காட்சிகளைக் கண்முன் வைக்கும்
கவிதை. நல்ல அமைப்பு. குற்றாலக் குறவஞ்சி
போன்ற பாடல்களை நினைவூட்டுகிறது.

2011/5/24 kirikasan <kanaga...@hotmail.com>



--

SUBBAIER RAMASAMI

unread,
May 25, 2011, 6:39:51 AM5/25/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசன்.,
திருப்புகழ் சந்தத்தைப் பின்பர்றுகிற உங்கள் பாடல் மிக அருமை.
வண்ணப்பாவாக நடக்கும் சந்தத்தைப் பின்பற்றி எழுதுவது சற்றுச் சிரமம்தான்.
ஆனால் மிகவும் திறம்படச்செய்திருக்கிறீர்கள்.
இவ்வகைப்பாடல்களில் எந்தவகை தேமா முதலடியில் வருகிறதோ அவ்வகையெ அதே
இடத்தில் அடுத்த அடியிலும் வரவேண்டும்.

சுற்றும்பெரு யந்திரப் பறவையும்

சொட்டும்மனம் இரக்கப் படவிலை

SUBBAIER RAMASAMI

unread,
May 25, 2011, 6:53:07 AM5/25/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசன்,

உங்கள் பாட்டின் ஓட்டம் அற்புதம். கீழே நான் கொடுத்தௌள்ள வரிகளை மீண்டும்
ஒருமுறை சர்ரிபார்க்க வேண்டுகிறேன்.
சிலவற்றில் ஒற்றுப்பிழையும் சிலவற்றில் சந்தப்பிழையும் உள்ளன.

இலந்தை

சுற்றும்பெரு யந்திரப் பறவையும்

சொட்டும்மனம் இரக்கப் படவிலை

குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்

வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே

கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்

மொத்தக்குரல் விட்டு போவென விடுமாமோ

பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ

வட்டக்கதிர் முற்றும் மேற்கிடை மறைவானே

எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்

SUBBAIER RAMASAMI

unread,
May 25, 2011, 7:08:11 AM5/25/11
to santhav...@googlegroups.com
ஈழ தேசத்தின் எழிலைக் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டீர்கள்.

வயல்வெளியும், நெற்கதிர்களின் சலசல்ப்பும், ஆலோலம் பாடும் அழகுக்
குருவிகளும், உழைக்கும் பெண்களின் ஒப்பனையில்லா இயற்கை அழகும்,,
சாலைகளில் ஓடும் வண்டிகளின் சங்கீதமும், சிறுவர்களின் விளையாட்டும்,


வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு

வண்ண மலர் தலையாட்டும் காட்சியும்,வண்ணத்துப்பூச்சிகளின் பரவசமும்,
இளநீர்க் குலைகளின் எழில் தோற்றமும் தென்றலின் இதமான தடவலும், அடடா
இவ்வழகுக் காட்சிகளை மீண்டும் என்று காணப்போகிறோம் என்று ஏங்க
வைத்துவிட்டன. ச்யானுபவம் சுடர்விடுகிறபோது கவிதையும் உணர்ச்சிபெற்றுக்
கனந்தாங்கிக் கனிகிறது.

வாழ்க! தங்கள் விருப்பம் விரைவிலேயே நிறைவேறுக!

இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 26, 2011, 10:35:11 PM5/26/11
to santhav...@googlegroups.com
கிறங்க வைக்கும் கவிதை! ஈழ நாட்டின் எழிலை இசை கொஞ்சும் நடையமைந்த பாடலின் வழியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளீர்கள்.  நீங்கள் இறுதியில் சொல்வது போல நல்ல காலம் வரத்தான் போகிறது.

அனந்த் 

2011/5/25 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 27, 2011, 8:17:17 PM5/27/11
to santhav...@googlegroups.com
ஒற்று விட்டுப் போன இடங்கள்: வட்டக்குளத்தினில், பட்டுச்சிறகு, கோதிக்கிளி


2011/5/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

kirikasan

unread,
May 31, 2011, 4:16:24 PM5/31/11
to சந்தவசந்தம்
நீண்ட நாட்கள் இங்கு வராமல் இருந்துவிட்டேன். தாங்கள் அனைவரினதும்
பாராட்டுகளும் அன்புடன் ஏற்றுக்கொண்டு
சுட்டிகாட்டிய தவறுகளை ஒவ்வொன்றாகத் திருத்தி கொண்டு பதில் தருவேன்.
கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால்
தவறுகள் திருத்திக்கொள்வேன்.

அதற்குள் அவசரமாக இன்னொன்று எழுதிவிட்டேன். பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.

ஈழத்தில் ஒரு விடியல் நேரம்

பனி படர்ந்து புல்வெளியிற்பரவி எழில்கொல்ல
பசுமைகொண்ட இலையழுது நுனிவழி நீர்சிந்த
சினமெழுந்து கதிர் பனியைச் சுட்டழித்து வெல்ல
சிறகடித்துப் பறவையினம் சேதி சொல்லும் காலை
கனிசுவைக்க மாமரத்தைக் கிளி பறந்து சேரும்
கலகலத்த இலைமறைவிற் கனிகிடந்து நாணும்
இனிபழத்தின் முகஞ்சிவக்க இளையகிளி உண்ணும்
ஈழமண்ணின் இயற்கைதந்த இனியதொருகாலை

வனமதிலே கள்நிறைந்து வாசமிடும் பூக்கள்
வந்துபூவைக் கொஞ்சிமீண்டும் வான்பறக்கும்பூச்சி
இனம்மகிழும் சுதந்திரத்தை யெண்ணும் ஈழமாந்தர்
ஏழைகளின் கனவுபோல என்று மதைத் தேட
குனியும்நடை கொள்குரங்கு கொப்புதனில் தாவி
குழைஉதிர்த்துக் கலகமிடக் காணுமொரு குயிலும்
தனியிருந்து ஒருகிளையிற் தாகம் கொண்டுபாட
தவழுமிளங் காற்றொலியைத் தானெடுத்து ஓடும்

எதிர்நிமிர்ந்த பெருமலையோ அதைப் பறித்துவீச
எதிரொலிக்கு இன்னொருத்தி என்றுகுயில் ஏங்க
கதிரெழுச்சி கண்டிருளோ கடகடன்றுஓடும்
கதிநினைந்து கதிர்மகிழ்ந்து கனல் பெருத்து மூளும்
நதிநடந்த விதம்நெளிந்து நெடுங்கிடந்த பாதை
நானதிலேநடந்து சென்ற வேளை ஒருவீட்டில்
விதிசினந்த சிறுவர் கூட்டம் வேதனையிற் கூடி
விரிஉலகம் நிறைதமிழம் மொழியிற்கூறல் கேட்டேன்

கருமைநிற மேனிகளிற் கசங்கியதோர் உடையும்
காய்ந்த சிறு உதரமொட்டிக் கடும்பசியின் சுவடும்
இருவிழிநீர் வழிந்தஇடம் இருமருங்கும் காய
எழுந்த துயர் பூமுகங்கள் எரித்த நிலை கண்டேன்
சரிகுழலும் வாரிவிடச் சற்றும் மனம் எண்ணா
சிறுமிகளுந் தேகமது செழுமை பெருந்தீமை
தருமெனவே அஞ்சினரோ தன்னெழிலை விட்டு
தரைவிழுந்த புழுதிபட்ட பூமலராய் கண்டார்

அவர்களுடன் பலசிறுவர் அணியிருந்துபேசி
அதிசினந்து கொதியெழுந்து ஆற்ற எவர்இன்றி
பவள இதழ் பனிபடர்ந்து பதைபதைக்கக் கூறும்
பலகுரலுங் கேட்டருகே பக்கம்நின்று பார்த்தேன்
தவளுமிளந் தமிழ்மொழியின் தடமழிக்கஎண்ணி
தவறிழைத்து இனமழிக்கும் தரணியிலே இவர்கள்
எவர் விளைத்த தவறு இதோ ஏதிலியாய் நின்று
ஏங்கியழக் காரணம் யார் இவ்வுலகே யன்றோ!

சிறுவர்தமை சேர்த்துப்பெரும் போரெடுத்தீர் என்று
செந்தமிழர் படையில்குறை சொன்னவர்கள் இன்று
சிறுவருடன் மழலைகளும் சிறுமியரும் கொன்று
சொல்லரிய தொகையினரை சிறையிலிடச் செய்தார்
உருவம்மாறி அங்கமின்றி உள்ளதெல்லாம்நொந்து
உயிர் பிழைக்க ஏதும்வழி இல்லைஎன்று கூறும்
சிறுமைதனை இவ்வுலகே சேர்ந்தளித்தகோலம்
சேர்ந்திவர்கள் செய்தகுற்றம் யார்கணக்கில் போகும்

(ஒரு சிறுமி)
அம்மா என்னைப் பெற்றவளே நீ அருகில்வாராயோ
அள்ளிகட்டிக் கொஞ்சிப்பேசு அன்பைத் தாராயோ
செம்மாதுளையின் முத்தே என்றே என்னைக் கூறாயோ
செந்தேன் தமிழில் சொல்லில் இனிமை சேரப் பேசாயோ
எம்மா பெரிதோர் துன்பம் கொண்டேன் இழிமை செய்தாரே
இருகண்வழியும் பெருநீரோடும் இமைகள் தழுவாயோ
வெம்மை கொண்டே இதயம்வேக விம்மிக் கேட்கின்றேன்
விடியும் வாழ்வோ விரைவில் என்றாய் விட்டேன் சென்றாயோ

மாவில் தூங்கும் கிளியைப் போலுன் மடியில்கிடந்தேனே
மலரைத்தூவி தலையிற் சூட்டி மகிழ்வைத் தந்தாயே
பாவி எங்கள் வாழ்வில்வந்தே பலியைக் கொண்டானே
பார்க்கக் கண்முன் பட்டப் பகலில் சுட்டுக் கொன்றானே
கூவிக் கேட்டும் தெய்வம்வாழும் கோவில் கும்பிட்டும்
கொன்றார் உயிரைக் கொல்லும் செயலிற் குறைவே எழவில்லை
ஆவி உடலை விட்டுப் பதறி அலறிச் சாவென்று
அகிலம் கொண்டோர் அமைதிதானும் அதிலும் குறைவில்லை

(மற்றவள்)
படையும் அரசும்அழிப்பார் எம்மை பாவம் என்செய்தோம்
பகலில் இரவில் கடையில் தெருவில் பள்ளிக்கூடத்தில்
நடையாய் நடந்தே நம்மைகொன்று நாட்டைச் சிதைக்கின்றார்
நாங்களேதும் கேட்டால் உலகோ நம்மைப் பிழைஎன்பார்
தடைகள் போட்டுச் சாலை, தெருவில் தனியே போய்விட்டால்
தலையேஇன்றி வெட்டிதுண்டாய் தரையுள் புதைக்கின்றார்
இடையே காக்கஇளைஞர் எழுந்தே எம்மைக் காத்திட்டால்
எல்லாஉலகும் ஒன்றாய் கூடி எரிகுண் டெறிகின்றார்

(சிறுவன்)
புகையும் தீயாய் எரியும் ஊரை பேசும் மொழியறியா
பிறிதோர் இனமே செய்தாரிங்கு, போனோமா நாமும்?
பகைவர்தம்மின் ஊரும் சென்றே படுத்தோர் தலைவெட்டி
பாதிஇரவில் வீட்டில் தீயைப் பற்றச் செய்தோமா
நகைகள் திருடி நடுவீட்டினிலே நாக்குத்தொங்கத்தான்
நாமும் சிறியோர் பெற்றோர் தூக்கி நாசம்செய்தோமா
வகைகள் தொகையும் காணாஅழிவை வாழ்வில் செய்கின்றார்
வையம்கண்டும் தொன்மைத்தமிழர் வாரிப்புதை என்றார்

(இன்னொருவன்)
நாடும் உலகும் எதிராய் நின்றால் நல்லோர் என்செய்வார்
நாளும் சாகும் நம்மை காப்பாய் நாடே என்றோடி
ஆடும் வரையும் ஆடிக்கத்தி அலறித் தெருவோடி
அடர்ந்தகாடு அலைகொள்கடலும் அருகே நின்றாலும்
ஓடும் மறைவும் பயனோ நிலவுக்கொழித்தே பரதேசம்
நாடிச்சென்றால் விடுமோ அதுபோல் நம்மைக் கொன்றானே
வீடுமின்றி வெல்லும் திடமும் வெற்றிக் களிப்பின்றி
வீரிட்டலறி மயங்கும்வாழ்வே விதியாய் போயாச்சே !

(மற்றுமொருவன்)
ஆண்ட இனமோ மீண்டும் ஆள அடிமுன் வைத்தாலே
ஆழக் குழியைவெட்டும் உலகோ அறத்தின் எதிராமே
மீண்டும்இவரோ விட்டோர் பிழையை மீளச் செய்கின்றார்
மெல்ல பேசி உண்மைவிட்டு மிருகத்தைக் கூட்டி
நீண்டதாளில் நீதிக்கதைகள் நெடிதே எழுதித்தான்
நெஞ்சம் ஆற நீதிக்கூண்டில் நிறுத்த நகர்கின்றார்
ஆண்ட இனமோ அழியும்வேகம் அடிக்கும் புயலென்றால்
அணைக்கும் உலகக் கரங்கள் ஆமை யானால் பிழைப்போமா

வேண்டாம் நம்பி விதியென் றெண்னி வீணேபோகாமல்
விரைந்து எழுவோம் வீரம்கொள்வோம் விடிவைக்காண்போமே
கூண்டில் ஏற்றிக் குற்றம் புரிந்தோர் கொள்ளும் நிலைகாண
கொள்கை கொண்டு நாமும்கூடிக் குரலைத் தருவோமே !
ஆண்ட இனமும் ஆளக்கேட்டால் அண்ணாந்தே பார்த்து
ஆளைஏய்க்கும் உலகில் நாமும் அறத்தைக் கேட்போமே
மீண்டும் எழுந்தோர் அரசு தொலைவில் மீட்கப் புறப்பட்டார்
மெல்லத் தெரியும் விடிவை விரைவில்கொள்ள புதிதாவோம்

வெல்லட்டும்தமிழீழம் விளையட்டும் புதுவாழ்வு
செல்லட்டும் பெருங்கொடுமை சிதறட்டும் பகைஆட்சி
கொல்லட்டும் துயர், கொடுமை கொள்ளட்டும் மனமின்பம்
தொல்தொட்டும் எம்பூமி திரும்பட்டும் எம்கையில்
சொல்லட்டும் புவி வாழ்த்து சுதந்திரமே எம்மூச்சு
நில் தொட்டு நெஞ்சுறுதி நீகொண்டுஎழு வெல்வோம்


On May 28, 1:17 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> ஒற்று விட்டுப் போன இடங்கள்: வட்டக்குளத்தினில், பட்டுச்சிறகு, கோதிக்கிளி
>
> 2011/5/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > கிறங்க வைக்கும் கவிதை! ஈழ நாட்டின் எழிலை இசை கொஞ்சும் நடையமைந்த பாடலின்
> > வழியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளீர்கள்.  நீங்கள் இறுதியில் சொல்வது
> > போல நல்ல காலம் வரத்தான் போகிறது.
>
> > அனந்த்
>

> > 2011/5/25 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
> >>  ஈழ தேசத்தின் எழிலைக் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டீர்கள்.
>
> >> வயல்வெளியும், நெற்கதிர்களின் சலசல்ப்பும், ஆலோலம் பாடும் அழகுக்
> >> குருவிகளும், உழைக்கும் பெண்களின் ஒப்பனையில்லா இயற்கை அழகும்,,
> >> சாலைகளில் ஓடும் வண்டிகளின் சங்கீதமும், சிறுவர்களின் விளையாட்டும்,
> >> வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
> >>  வண்ண மலர் தலையாட்டும் காட்சியும்,வண்ணத்துப்பூச்சிகளின் பரவசமும்,
> >> இளநீர்க் குலைகளின் எழில் தோற்றமும் தென்றலின் இதமான தடவலும், அடடா
> >> இவ்வழகுக் காட்சிகளை மீண்டும் என்று காணப்போகிறோம் என்று ஏங்க
> >> வைத்துவிட்டன. ச்யானுபவம் சுடர்விடுகிறபோது கவிதையும்  உணர்ச்சிபெற்றுக்
> >> கனந்தாங்கிக் கனிகிறது.
>
> >> வாழ்க!  தங்கள் விருப்பம் விரைவிலேயே நிறைவேறுக!
>
> >> இலந்தை
>

> ...
>
> read more »

kirikasan

unread,
Jun 13, 2011, 11:46:40 AM6/13/11
to சந்தவசந்தம்
ஈழம் பற்றிய கவிதைக்குள் இன்னொன்று கலக்கப்போகிறேன். மன்னிக்கவும்

காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

இதை தாங்கள் ஒருமுறை படித்துவிட்டால் போதாது. இரண்டாவது தடவையும்
பார்க்கவேண்டும்.
எதற்காக அது .. அது.... உங்களுக்கே இறுதியில் புரியும்!

காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவத் தேகங்குளிர் கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தரும் அந்திவேளை தன்னில்

மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்கு மந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்

சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் உண்டேன்
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் அவளோ
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்

வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதிற் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கை மகள்தானோ

பொன்னுதட்டிற் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்

வஞ்சிமனம் வைத்த துள்ளே என்னவென்று அறியேன்
வாசனைக்கு பூமறந்து வந்த வண்டைக் கண்டேன்
நெஞ்சிலெழும் இச்சைதனை நீலவிழிப் பார்வை
நெளிபுருவ வில் வளைத்து நினைவழிய எய்தாள்

தேரிலேறி திங்களுலா தோன்றும் எழில்வண்ண
திருமகளின் ஒரு உறவு திரும்பியெனைக் காண
போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல
பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்

சின்னவளே இப்படிநீ சீறும்விழி கொண்டு
செந்தணலாய் நிற்பதுஏன் சென்றுவிடு உந்தன்
புன்னகையிலற் கொல்லுகிறாய் போதுமடி பெண்ணே
பூவுடலில் காணுமெழில் பித்தமிடக் கண்டேன்

கன்னியவள் நேர்திரும்பி கண்களெனைப் பார்த்து
கனியுதடைக் கடித்து ஒரு கள்ளநகை பூத்து
என்னிதயங் கொண்டவரே இன்றுமது வாழ்வு
எல்லைவந்து சேர்ந்ததடா கொல்லுகிறேன் என்றாள்

அஞ்சி மனம் பதைபதைக்க அவளெழுந்துமுன்னே
ஆடுமொரு பாம்பெனவே அகமெடுத்த நஞ்சும்
வஞ்சியொரு கையில் சிறு வாளெனவே கத்தி
வைத்தபடி காலெடுத்து வந்துவிடக் கண்டேன்

அத்தனையும் சொத்து பணம் ஆசைகொண்டு வந்தேன்
ஆடுவரை ஆடியுனை அன்பு கொள்ளவைத்தேன்
இத்தரையில் எண்ணியதை இறுதியிலே வெல்வேன்
இறைவனைநீ தொழுது நில்லு இறுதி மூச்சுஎன்றாள்

புன்னகைத்த பொன்னிலவோ பேரிடியாய் நிற்க
பூவிழிகள் மின்னியொரு புயலெனவே கண்டேன்
இந்தவேளை பார்த்தவரோ இனித் ’தொடரும்’ போட்டார்
எழுந்து தொலைக்காட்சி தனை எரிச்சலோடு அணைத்தேன்


பி.கு நான் பார்த்தது தொலைக்காட்சி. அணைக்க போனதும் தொலைக்காட்சியை!
கொல்ல போனது தொலைக்காட்சியில் ஒருவனை. அவனின்பேச்சுமிஅடயில்வந்தது.
நான் பார்த்துகொண்டிருந்தேன். குற்ற்மா??

அன்புடன் கிரிகாசன்

> பாதிஇரவில் வீட்டில் தீயைப் பற்றச் செய்தோமா...
>
> read more »

Lalitha & Suryanarayanan

unread,
Jun 13, 2011, 12:20:22 PM6/13/11
to santhav...@googlegroups.com
உங்கள் தமிழும் கற்பனையும் சந்தமும் அழகோ அழகு!

2011/6/13 kirikasan <kanaga...@hotmail.com>

ஈழம் பற்றிய கவிதைக்குள் இன்னொன்று கலக்கப்போகிறேன். மன்னிக்கவும்

காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

இதை தாங்கள் ஒருமுறை படித்துவிட்டால் போதாது. இரண்டாவது தடவையும்
பார்க்கவேண்டும்.
எதற்காக அது .. அது.... உங்களுக்கே இறுதியில் புரியும்!

    காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவத் தேகங்குளிர் கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தரும் அந்திவேளை தன்னில்


"அந்திஎனும்  போதில்"  என்றால் சந்தம் சரியாய் இருக்குமோ?

"அண்ணளவாய்" என்றால் என்னவோ?

மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்கு மந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்

அழகு!

சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் உண்டேன்
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் அவளோ
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்

"நீர்வழியச் சிற்றிடையாள்"  என்று வருமோ?

"கரமெடுத்து" என்பது  சரிதானா?



வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதிற் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கை மகள்தானோ


அழகோ அழகு!

பொன்னுதட்டிற் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்

"தென்றலுக்குத் தலை" என்று வருமோ?

"இடையசையத்   தாகமுடன்" என்றால் என்னவோ?

வஞ்சிமனம் வைத்த துள்ளே என்னவென்று அறியேன்
வாசனைக்கு பூமறந்து வந்த வண்டைக் கண்டேன்

சந்தம் சரியாய் இருக்கிறதா?

 
நெஞ்சிலெழும் இச்சைதனை நீலவிழிப் பார்வை
நெளிபுருவ வில் வளைத்து நினைவழிய எய்தாள்


அழகான கவிதை!

தேரிலேறி திங்களுலா தோன்றும் எழில்வண்ண
திருமகளின் ஒரு உறவு திரும்பியெனைக் காண
போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல

?
 
பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்

சின்னவளே இப்படிநீ சீறும்விழி கொண்டு
செந்தணலாய் நிற்பதுஏன் சென்றுவிடு உந்தன்

நிற்பதுமேன்  என்றால் சரியாய் இருக்குமோ?
புன்னகையிலற் கொல்லுகிறாய் போதுமடி பெண்ணே

புன்னகையால் என்பதன் மின்னச்சோ?
பூவுடலில் காணுமெழில் பித்தமிடக் கண்டேன்

பித்தமிடல் என்றால்?

கன்னியவள் நேர்திரும்பி கண்களெனைப் பார்த்து
கனியுதடைக் கடித்து ஒரு கள்ளநகை பூத்து
என்னிதயங் கொண்டவரே இன்றுமது வாழ்வு
எல்லைவந்து சேர்ந்ததடா கொல்லுகிறேன் என்றாள்

அஞ்சி மனம் பதைபதைக்க அவளெழுந்துமுன்னே
ஆடுமொரு பாம்பெனவே  அகமெடுத்த நஞ்சும்
வஞ்சியொரு கையில் சிறு வாளெனவே கத்தி
வைத்தபடி காலெடுத்து வந்துவிடக் கண்டேன்

அத்தனையும் சொத்து பணம் ஆசைகொண்டு வந்தேன்
ஆடுவரை ஆடியுனை அன்பு கொள்ளவைத்தேன்
இத்தரையில் எண்ணியதை இறுதியிலே வெல்வேன்
 
இறைவனைநீ தொழுது நில்லு இறுதி மூச்சுஎன்றாள்

சந்தம் ?

kirikasan

unread,
Jun 13, 2011, 1:29:27 PM6/13/11
to சந்தவசந்தம்
தங்களுக்கு மிக்கநன்றி !
அக்கறை கொண்டு எனது தவறுகளை சரி செய்ய உதவுவது
மிகுந்த மகிழ்வைத் தருகிறது

அண்ணளவாய் என்பது கிட்டத்தட்ட என்றகருத்தில் போட்டேன்
ஓரளவு இன்பந்தரும் மாலை என்று கொள்ளலாமா
அல்லது அந்த அடியை
மண்ணுலகில் இன்பந்தரும் மாலைவந்தபோதில்
என்று மாற்றலாமா? மாற்றிவிட்டேன்

கரமெடுத்து என்பதைக் கையெடுத்து என்றுமாற்றிவிட்டேன்
(தொலைக்காட்சியை நிறுத்த கைகொண்டுசென்றேன)

இடையசையத் தாகமுடன்:-
தென்னைஓலை காற்றுக்கு ஆடுவதுபோல் உடலசைவு என வர்ணித்தேன் நடக்கும்போதோ
நின்றுபேசும்போதோ என்று கொள்க.
தாகமுடன்- என்பது கொல்லும் எண்ணம் அடுத்து வரப்போகிறது. அதற்குமுதல் அந்த
வித்தியாசமான முகத்தோற்றம் காதல் உணர்வு போலக்காட்டவே அதை பிரயோகித்தேன்


போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல

போரில் ஆயுதங்களை இழந்த, வெறும்கைகளுடன் நிற்கும்பரிதாப நிலை என்பதை
கூறினேன்

அடுத்த வரி உறுதியற்ற நலிந்தகுரலில் தொலைக்காட்சியில் ஒருவர் பேசினார்
அந்தப்பெண்ணின் முன்னால் நிற்பவர்


பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்

பித்தமிடல் - அழகில் பித்தனாகுதல் (பைத்தியம் போல)
இறுதிவரிகள் சந்தம் பிழைக்கிறது. திருத்தியதும் போடுகிறேன்

மற்றைய கவலையீனப் பிழைகள் எல்லாம் திருத்தி வைத்துள்ளேன் திரும்ப
போடுவேன்


On Jun 13, 5:20 pm, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:


> உங்கள் தமிழும் கற்பனையும் சந்தமும் அழகோ அழகு!
>

> 2011/6/13 kirikasan <kanagaling...@hotmail.com>

Siva Siva

unread,
Jun 13, 2011, 9:33:22 PM6/13/11
to santhav...@googlegroups.com


2011/6/13 kirikasan <kanaga...@hotmail.com>

ஈழம் பற்றிய கவிதைக்குள் இன்னொன்று கலக்கப்போகிறேன். மன்னிக்கவும்

காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

இதை தாங்கள் ஒருமுறை படித்துவிட்டால் போதாது. இரண்டாவது தடவையும்
பார்க்கவேண்டும்.
எதற்காக அது .. அது.... உங்களுக்கே இறுதியில் புரியும்!

    காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவத் தேகங்குளிர் கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தரும் அந்திவேளை தன்னில்

அண்ணளவாய் = 'அண்ண அளவாய்' என்பது இப்படி விகாரம் ஏற்று வந்ததோ?
(அண்ணுதல் - கிட்டுதல் - To approach, draw near );


மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்கு மந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்

சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் உண்டேன்
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் அவளோ
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்

வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதிற் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கை மகள்தானோ

பொன்னுதட்டிற் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்

பொன்னுதடு? காலத்தின் கோலமோ? சாயமோ!

தென்னை இலை?
 

Lalitha & Suryanarayanan

unread,
Jun 13, 2011, 9:43:57 PM6/13/11
to santhav...@googlegroups.com












நண்பரே!

வணக்கம்.

பொதுவாக நான் மற்றவரின் பாடல்களைத் திருத்த முயலுவதே கிடையாது : முதலில் என் பாடல்களைப் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்பதே என் நோக்கம். இருந்தாலும் உங்கள் பாடல்களின் சந்தம் என்னைக் கவர்ந்து இழுக்கின்றது!  விண்ணைத் தீண்டுகின்ற உங்கள் கற்பனை படிபடி என்று தூண்டுகிறது!  தமிழோ உங்களிடம் கொஞ்சுகிறது!  ஆதலால் உரிமையோடு ஏதோ எடுத்துரைத்துள்ளேன்!

வாழ்க நீங்கள்!

அன்புடன்
சிவ.சூரி.

>
>
>
> >
>
>
>
> > சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் உண்டேன்
> > செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் அவளோ
> > கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
> > கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்
>
> "
இது சரியாக இருக்குமா  என்று  பாருங்களேன்:

கண்கலங்கி நிற்பதனைக்  கண்டுதுயர் கொண்டேன்
துன்பமதைத் துடைத்திடவே துணிந்தருகு சென்றேன்

Lalitha & Suryanarayanan

unread,
Jun 14, 2011, 5:56:42 AM6/14/11
to santhav...@googlegroups.com


2011/6/14 kirikasan <kanaga...@hotmail.com>
அன்பு உள்ளங்களுக்கு இடையில் இது அவசியமான அவசர செய்தி

இலங்கையின் படுகொலைக் களம் (ஆவணத் திரைப்படம்)



நீரைக் கண்ணில் ஓடச்செய்யும் நிகழ்வைப் படமாக்கி
பாரைக் காணச் செய்யும் காட்சிப் படத்தைக் காணுங்கள்


ஈழம் வாழ்ந்த மக்கள் தம்மை லங்கா ராஜபடை
ஓலமிட்டுக் கதறக் கதற உயிரை வதைக்கின்ற
கோலம்தன்னைக் கொண்டோர் காட்சி காணச் செய்கின்றார்




நின்றோர் கண்கள் கலங்கச் செய்த நிகழ்வுத் தொகுப்பாளர்

நீங்கள் எழுதியிருப்பதே  நெஞ்சை உருக்குகின்றது !

என்ன கொடுமை! என்ன கொடுமை!

சிவ.சூரி

kirikasan

unread,
Jun 14, 2011, 6:07:49 AM6/14/11
to சந்தவசந்தம்
அன்பு உள்ளங்களுக்கு இடையில் இது அவசியமான அவசர செய்தி

> இலங்கையின் படுகொலைக் களம் (ஆவணத் திரைப்படம்)


ஊரைக் உயிரைக்கொன்றே உலகின் உச்சக்கொடுமையினை
போரைக் காட்டித் தமிழர் கொன்ற பொல்லாக் கோரத்தை


நீரைக் கண்ணில் ஓடச்செய்யும் நிகழ்வைப் படமாக்கி

பாரைக் காணச் செய்யும் காட்சிப் பதிவைக் காணுங்கள்

நாலாம் காட்சிச் சனலாம் லண்டன் நாட்டின் தொலைகாட்சி


ஈழம் வாழ்ந்த மக்கள் தம்மை லங்கா ராஜபடை
ஓலமிட்டுக் கதறக் கதற உயிரை வதைக்கின்ற

கோலம்தன்னைக் கொண்டோர் காட்சி காணச் செய்கின்றார்

பெண்ணைக் கொல்லும் வகைகள் பற்றிப் பேசிச்சிரித்தெல்லாம்
எண்ணங் கெட்டு இயற்கைமீறி இழைத்தோர் கொடுமைகளை
கண்டால்போதும் வருடம் முழுதாய் கண்முன்னே நின்று
மண்ணிற் கொடுமை கெட்டோர் செயலை மறக்கமுடியாது

இந்தோர் உலகில் இதுவேபோதும் இருக்கும்வரை மீண்டும்
இன்னோர் செயலைக் காணும் எண்ணம் எளிதிற் தோன்றாது
என்றே சொன்னார் இதனை ஆக்கி ஐநாவிற் காட்டி
நின்றோர் கண்கள் கலங்கச் செய்த நிகழ்வுத் தொகுப்பாளர்

நேரம் பத்தோ டொன்று இரவு பதினொன்றுக் காகும்
கோரம் காணும் திண்மையற்றோர் கூடி நோய் வாழ்வோர்
யாரும்சிறுவர் பெண்கள் தாமும் இதனைத் தவிருங்கள்
கோரம் தங்கா நெஞ்சோர் காணக் கூடாதென்கின்றார்

காட்சி தளம்

http://www.channel4.com/

இணையத்தளத்தில் ஒளிபரப்பின் பின்னர் சில மணிநேரத்தில் இங்கே காணாலாம்.
இளகிய மனமுடையோர் பார்க்கவேண்டாம்
http://www.channel4.com/programmes/4od

> > > இத்தரையில் எண்ணியதை இறுதியிலே வெல்வேன்...
>
> read more »

kirikasan

unread,
Jun 14, 2011, 6:14:52 AM6/14/11
to சந்தவசந்தம்
இதையும் காணுங்கள் ! உலகத்தையே உலுப்பபோகும் காட்சிகளாம்

http://blogs.channel4.com/snowblog/sri-lankas-killing-fields-project-affect-history/15457

> > > > தென்னையிலை தென்றலுக்கு...
>
> read more »

kirikasan

unread,
Jun 14, 2011, 5:44:10 AM6/14/11
to சந்தவசந்தம்
அன்பு உள்ளங்களுக்கு இடையில் இது அவசியமான அவசர செய்தி

இலங்கையின் படுகொலைக் களம் (ஆவணத் திரைப்படம்)

ஊரைக் உயிரைக்கொன்றே உலகின் உச்சக்கொடுமையினை
போரைக் காட்டித் தமிழர் கொன்ற பொல்லாக் கோரத்தை
நீரைக் கண்ணில் ஓடச்செய்யும் நிகழ்வைப் படமாக்கி

பாரைக் காணச் செய்யும் காட்சிப் படத்தைக் காணுங்கள்

நாலாம் காட்சிச் சனலாம் லண்டன் நாட்டின் தொலைகாட்சி
ஈழம் வாழ்ந்த மக்கள் தம்மை லங்கா ராஜபடை
ஓலமிட்டுக் கதறக் கதற உயிரை வதைக்கின்ற
கோலம்தன்னைக் கொண்டோர் காட்சி காணச் செய்கின்றார்

பெண்ணைக் கொல்லும் வகைகள் பற்றிப் பேசிச் சிரித்தெல்லாம்


எண்ணங் கெட்டு இயற்கைமீறி இழைத்தோர் கொடுமைகளை
கண்டால்போதும் வருடம் முழுதாய் கண்முன்னே நின்று

மண்ணிற் கொடுமை, கெட்டோர் செயலை மறக்கமுடியாது

இந்தோர் உலகில் இதுவேபோதும் இருக்கும்வரை மீண்டும்
இன்னோர் செயலைக் காணும் எண்ணம் எளிதிற் தோன்றாது
என்றே சொன்னார் இதனை ஆக்கி ஐநாவிற் காட்டி
நின்றோர் கண்கள் கலங்கச் செய்த நிகழ்வுத் தொகுப்பாளர்

நேரம் பத்தோ டொன்று இரவு பதினொன்றுக் காகும்
கோரம் காணும் திண்மையற்றோர் கூடிநோய் வாழ்வோர்
யாரும்சிறுவர் பெண்கள் தாமும் இதனைத் தவிருங்கள்
கோரம் தங்கா நெஞ்சோர் காணக் கூடாதென்கின்றார்

காட்சி தளம்

http://www.channel4.com/

ஒளிபரப்பின் பின்னர் சில மணிநேரத்தில் இங்கே காணலாம்.
இளகிய மனமுடையோர் பார்க்கவேண்டாம்
http://www.channel4.com/programmes/4od

On Jun 14, 2:43 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:

kirikasan

unread,
Jun 14, 2011, 8:37:46 PM6/14/11
to சந்தவசந்தம்
அன்புட்ன் கிரிகாசன்


அன்றும் இன்றும் ஈழம்

அன்று

நீலவான நெற்றி நீறென மேகத்தை
நீள இழுத்துக் கிடந்தது
காலக்குமரனும் கால்நடந்த வழி
காற்றி லழிந்திடப் போனது
சேலை முகிலணி கீழடி வானிலே
சென்றன புள்ளின மானது
மாலையல்ல அது மாதவம் செய்தவர்
மங்கிய பொன்னொளி நாளது

ஆலைகளில் சிலர் வேலைமுடிந்ததும்
ஆனந்தமாய் வீடுசென்றனர்
காலைமுதல் இல்ல வேலைமுடித்திட்ட
காரிகைகள் எழில்கொண்டனர்
சாலையோரம் விழிவைத்துத் தமதவர்
சற்றுப் பொழுதினில் வந்திடும்
மாலைத் தனிமையைக் காதல்மொழிகொண்டு
மாற்றும் துணைவரைக் காத்தனர்

போதை யெடுத்திடும் இன்கவிபாடியே
பேதையர் நாட்டியமாடினர்
மாதை அழகிலும் மல்லிகை வாசமும்
மற்றவர் கண்டுளம் ஏங்கினர்
காதை இனித்தமிழ் கீதமடைந்திடக்
காணப்பொறுக்காது சின்னவர்
பாதை தனில் பெருங் கூச்சலிட்டோடிடப்
பற்றி இழுத்தனர் பெற்றவர்

காகம் பலகூடி நீர்நிலையோரத்தில்
கங்கை நீராடிக் களித்தன
போகும் நிறமெனப் பார்த்தனவோஎனப்
போயொரு சின்னவன் கண்டனன்
தேகம் சிலிர்த்துத் தெளித்தன நீரினை
துள்ளிப்பறந்த பறவைகள்.
தீமைகளற்றுச் சிறந்தது அன்றைய
தீந்தமிழீழமென் தேசமே

இன்று

தேரைச்சிறிதொரு சின்னக் கொடிக்கீந்த
தேசத்தின் மன்னன் தமிழ்வழி
பாரை வணங்கியே அஞ்சியும் கெஞ்சியும்
பாவம் பழித்துக் கிடந்தது
போரைநடத்திய வீரமும் தீரமும்
பற்றிய தீயினில் நீரென
ஊரை அழித்திடும் தீயெழ ரத்தமும்
ஊற்றி அணைத்துக் கிடந்தது

மார்பில் அடித்துக் கதறிய மங்கையர்
மானம் அழியக் கிடந்தனர்
போர்வை கிழித்தெழு பேய்களோ அங்கவர்
புத்தநீதி விட்டுக்கொன்றனர்
வேர்வைவிழ வயற் பக்க முழுதவர்
வீதிகளிற் பிணமாகிட
கூர்கொடும் வாளினைக் கையிற்பிடித்தவர்
கொன்று குவித்து விரைந்தனர்

கோவில்களின் மணியோசை இறப்பவர்க்
கூதும் சங்கின் ஒலியாயின
ஆவி பறந்தது நீர்கொதித்து அல்ல
ஆட்கள் உடல்செத்துப் போயின
பாவிகள் வெட்டிட ஆடிஅடங்கின
பாவையர் பூவுடல் பார்த்துமே
கூவிக்கதறியே ஓடினர் சின்னவர்
கூட்டிவர யாரு மில்லையே

மாலை மலர்ந்திட தென்றலில்வந்தது
மக்கள் இறந்தமெய் வாசமும்
வேலைமுடித்தவன் கைகளில் ஊறிய
வெட்ட வழிந்ததோர் ரத்தமும்
பாலைவனமென ஊருமழிந்தது
பாலையில் நீர்வற்றிப் போனதாய்
காலை நிலமூன்றி கொல்லப்பகை அழக்
கண்ணீரற்று ஈழம் நின்றது

Message has been deleted

kirikasan

unread,
Jun 17, 2011, 8:59:51 PM6/17/11
to சந்தவசந்தம்
சனல் 4 ன் இலங்கையின் கொலைக்களக் காட்சிகள் கண்டதும் எழுந்த நினைவுகள்
உலகத்தின்மீது கோபத்தை வரவழைக்கவே இதை எழுதினேன்.

உலகே கண்ணை மூடாதே!


கண்கள் குத்தி இரத்தம் வழியக் கண்டுசிரிப்பதோ - எங்கள்
கன்னிப்பெண்கள் மேனிகொல்லக் கைவிரிப்பதோ
புண்கள்மீது கீறக்கீறப் புல்லரிப்பதோ - எங்கள்
பிணம் குவிக்கக் கூட்டி அள்ளிப் போட்டெரிப்பதோ

இனமழிக்க உணர்விழந்து நடை பிழைப்பதோ =எங்கள்
இடமிருந்த மறவர்கண்ட உரமிழப்பதோ
கனமிழந்த தமிழனென்று மனமிளைப்பதோ =எங்கள்
கையில் கண்ட வலிமையேது அதை இழக்கவோ

பெண்ணைமேனி ஆடைநீக்கிப் பேய்களாடியே= ஒரு
பேசவார்த்தை யற்றுக்கேலி செய்த கண்டுமே
எண்ணம் மாசுகொண்டு பூமி என்னசொல்லுது =அவர்
இறைமை என்றுகூறிக் கையும் நழுவப் பார்க்குது

அண்ணன் செய்த வேலை என்று அழகுகாட்டுது- கொஞ்சம்
அமைதி என்று சொல்லி எம்மை அடக்கிப் பார்க்குது
கண்ணை மூடிக்காணு என்று காட்சி காட்டுது - நாமும்
காடுமலை உச்சிஏறக் காலை வாருது

பெண்கள்,பிஞ்சு முதியர்கொன்று பேய்கள்கூடியே- எங்கள்
பிணமடுக்கி மேடைபோட்டு ஆடும் நாட்டியம்
கண்ணிற் காண அழகுஎன்று காட்சி காணுதோ - பூமி
கயமைகண்டு அமைதிகாக்கும் நியதி என்னவோ

திருடன் ’தானே திருந்த’ வேண்டும் என்று கூறுது -பெரிசு
தெருவில் போகும் ஒருவனாகத் தன்னைக் காணுது
உரிமைஇல்லை கேட்கவென்று உதடுகாட்டுது- ஐயோ
உண்மைவீட்டு காதில் பூவை ஓடி வைக்குது

கொடுமைகண்டு கொதிக்க மேனி குளிரச்சொல்லுது சீறும்
கொதிக்குமிந்த எரிமலைக்கு மழையைத் தூவுது
தடுக்குமோ சொல் எரிமலைக்குத் தண்ணீர் போதுமோ அந்த
தகிப்பெழுந்து வெடிக்கு மாயின் தரணி தாங்குமோ

உலகம் வாழும் தமிழமக்கள் ஒன்று சேருங்கள் எங்கள்
உரிமைக்காக நீதிகேட்டுக் கைகள் தூக்குங்கள்
பலமில்லாத நிலையும்கண்டு பூமியானது -எம்மை
பதர்களென்று காற்றில்ஊதிப் பறக்க விடுகுது

நாடுமில்லை நாதியற்ற நல்லவ னென்று - இந்த
நானிலத்தில் யாருமற்ற நம்மைத் தாக்கியே
வீடில்லாத பாவி என்று விரட்டி ஓட்டுறார் -நீவிர்
வீறுகொண் டெழுந்து வீரம்கொள்ள மாறுவார்

சாதுவாகி வாழ்ந்ததெல்லாம் போதும் விட்டெழு- நாமும்
சரித்தி ரத்தை மாற்றவேண்டும் சேர்விழித்திடு
மீதி என்னசாது தானும் மிரண்டெழுந்திடில் -மரண
மேடு விட்டுக் கீழிறங்கி நாடு காணலாம்

> > > > > > கரமெடுத்து சென்றவனோ கணம்...
>
> read more »

kirikasan

unread,
Jun 19, 2011, 2:57:31 AM6/19/11
to சந்தவசந்தம்

கண்டால் சொல்வீரோ ?

தேடுகிறேன் காணவில்லை தேன்மலரே நீயெங்கும்
வாடும் தமிழனுக்கோர் வழிஒன்று கண்டதுண்டோ
கேடும் துயரங்களும் கெட்டுமனம் சோர உயிர்
ஆடுமொரு ஊஞ்சலென ஆவியலைந் தோடுகிறான்

வெள்ளைநிற மல்லிகையே விதிதானும் இவ்வழியே
அள்ளிப்பெ ரும்புயலாய் அடித்தோடக் கண்டனையோ
நள்ளிரவில் கொல்லுவதும் நாடுபெருந் தீயெரியக்
கொள்ளிவைத்துக் கொல்விதியை கூப்பிட்டு சொல்லிவிடு

கூவி இசைத் தேன்படிக்கும் கோகிலமே இவ்வழியில்
காவியுயிர் தோள்சுமந்து காலன்வரக் கண்டனையோ
ஆவி,உடல் தான்பிரித்தே அள்ளுமுயிர் கொஞ்சமில்லை
சாவு இனிப்போதுமென்று சற்றே நிறுத்தச் சொலு

கார்இருளின் நேர்முகிலே கனத்தோர் மழைபொழிய
நீர்அருவி ஆறெனவே நீபோகும் மண்ணதிலோ
ஊரை அழித்தவனால் உதிரமது பெருகி நதி
ஆறாகி ஓடவைத்தோன் அழிய இடிவீழ்த்தாயோ

வட்டச்சு னைநடுவில் வந்த’அலை’ காலுதைக்க
பட்டதுயர் தான்மறந்து பங்கயமே ஆடுகிறாய்
தொட்டபகை காலுதைக்கத் தூயதமிழ்த் தம்பிசிலர்
விட்டமொழிக் காடுவது விந்தைஉனைக் கற்றதிலோ

ஊரின்எழில் பார்த்துலவும் ஓடுங்கார் வான்முகிலே
நீரைப்பொழிய முன்னே நின்றுபதில் சொல்லிடுவாய்
ஊரை உறவுகளை உத்தமரைக் காக்கவெனப்
போரைநடத் தியவர் போனவழி கண்டதுண்டோ

காற்றின் சுதந்திரமும் காணுமதன் விடுதலையும்
பேற்றில் பெரும்பேறாய் பேசிடுவர் எனையெண்ணி
நேற்றோ பூந்தென்றலென நின்றவர்கள் நீதிக்காய்
சீற்றப்புய லாகிப்பின் சென்றதிசை கண்டவர் யார்?

பூவே, விரிவானே, போகும்முகில், புள்ளினமே
நாவே நறுந்தமிழை நல்லிசைப்போர் கொன்றுஒரு
சாவே பிடியென்று சுற்றும்புவி தந்திடினும்
போ,வீறு கொண்டிவரோ புத்தீழம் செய்திடுவர்!

> > வெட்ட வழிந்ததோர் ரத்தமும்...
>
> read more »

kirikasan

unread,
Jun 19, 2011, 3:01:50 AM6/19/11
to சந்தவசந்தம்
சொல்ல மறந்தது
மேற்கூறிய கவிதை காற்று பாடியதாக உருவகிக்கப்பட்டுள்ளது

அன்புடன் கிரிகாசன்

> > > காலைமுதல் இல்ல வேலைமுடித்திட்ட...
>
> read more »

Lalitha & Suryanarayanan

unread,
Jun 19, 2011, 3:50:32 AM6/19/11
to santhav...@googlegroups.com


2011/6/19 kirikasan <kanaga...@hotmail.com>


           கண்டால் சொல்வீரோ ?

தேடுகிறேன் காணவில்லை தேன்மலரே நீயெங்கும்
வாடும் தமிழனுக்கோர் வழிஒன்று கண்டதுண்டோ
கேடும் துயரங்களும் கெட்டுமனம் சோர உயிர்
ஆடுமொரு ஊஞ்சலென ஆவியலைந் தோடுகிறான்

                     அந்தந்தோ இப்படியோர் அநியாயம் நடப்பதுவோ!
                     செந்தமிழர் படுமடிகள்  பாரின்மேல் படராதோ!
வெள்ளைநிற மல்லிகையே விதிதானும் இவ்வழியே
அள்ளிப்பெ ரும்புயலாய் அடித்தோடக் கண்டனையோ
நள்ளிரவில் கொல்லுவதும் நாடுபெருந் தீயெரியக்
கொள்ளிவைத்துக் கொல்விதியை கூப்பிட்டு சொல்லிவிடு
                   மண்மீதில்  நடப்பதனை மல்லிகையே அறியாயோ?
                       கண்மூடிக் கிடக்கத்தான் மண்மீது வந்தாயோ?
   

கூவி இசைத் தேன்படிக்கும் கோகிலமே இவ்வழியில்
காவியுயிர் தோள்சுமந்து காலன்வரக் கண்டனையோ
ஆவி,உடல் தான்பிரித்தே அள்ளுமுயிர் கொஞ்சமில்லை
சாவு இனிப்போதுமென்று சற்றே நிறுத்தச் சொலு
                    போகுமுயிர் பார்த்தும் நீ  கூவுவதும் வீணாமோ  ?
                        கோகுலமே எங்களுடை ஆகுலத்தைக் காணாயோ?
கார்இருளின் நேர்முகிலே கனத்தோர் மழைபொழிய
நீர்அருவி ஆறெனவே நீபோகும் மண்ணதிலோ
ஊரை அழித்தவனால் உதிரமது பெருகி நதி
ஆறாகி ஓடவைத்தோன் அழிய இடிவீழ்த்தாயோ
                     குருதிநதி  ஒடுங்கால்  குமுறிமுகில் இடிக்காயோ?
                          பரிதிமாலன் உரைப்பதனைப் பார்த்தும் நீ துடிக்காயோ?

வட்டச்சு னைநடுவில் வந்த’அலை’ காலுதைக்க
பட்டதுயர் தான்மறந்து பங்கயமே ஆடுகிறாய்
தொட்டபகை காலுதைக்கத் தூயதமிழ்த் தம்பிசிலர்
விட்டமொழிக் காடுவது விந்தைஉனைக் கற்றதிலோ
                      பைந்தமிழர்க்  கிழிவேன்றால் பங்கயமே உனக்கிலையோ?
                           நைந்தழியும் துயருக்கே நானிலத்தில் கணக்கிலையோ?
ஊரின்எழில் பார்த்துலவும் ஓடுங்கார் வான்முகிலே
நீரைப்பொழிய முன்னே நின்றுபதில் சொல்லிடுவாய்
ஊரை உறவுகளை உத்தமரைக் காக்கவெனப்
போரைநடத் தியவர் போனவழி கண்டதுண்டோ
                        வான்முகிலே  பார்த்தும்நீ  வாய்திறந்து பேசாயோ?
                             நானிலத்தில் நாமிலையேல் நீ இருந்தால் ஏசாரோ?

காற்றின் சுதந்திரமும் காணுமதன் விடுதலையும்
பேற்றில் பெரும்பேறாய் பேசிடுவர் எனையெண்ணி
நேற்றோ பூந்தென்றலென நின்றவர்கள் நீதிக்காய்
சீற்றப்புய லாகிப்பின் சென்றதிசை கண்டவர் யார்?
                         கண்ணகியின் வழிவந்தோர் கண்கலங்க  விடுவாயோ?
                             பெண்ணொருத்திக் கூப்பிட்டால் பிரளயமே படராயோ?
பூவே, விரிவானே, போகும்முகில், புள்ளினமே
நாவே நறுந்தமிழை நல்லிசைப்போர் கொன்றுஒரு
சாவே பிடியென்று சுற்றும்புவி தந்திடினும்
போ,வீறு கொண்டிவரோ புத்தீழம் செய்திடுவர்!
                        செந்தமிழே உன்மைந்தர் சீரெல்லாம் யார்காப்பார்?
                             அந்தமிலா ஆண்டவனின் அருளிருந்தால் யார்தோற்பார்?

செங்குருதியைக்    கொண்டிங்கோர் சித்திரத்தைத்  தீட்டிவிட்டேன்!
சிந்தையெல்லாம் நொந்ததனால் சீற்றத்தைக் காட்டிவிட்டேன் !
     ...சிவ.சூரியநாராயணன்.

kirikasan

unread,
Jun 19, 2011, 4:51:28 AM6/19/11
to சந்தவசந்தம்
மிகவும் அருமையாக கவிதைக்கு அணி சேர்த்த தங்களின் இரசனையை என் கவி
கவர்ந்துள்ளது என்பது எனக்கு கிடைத்த பெரும் கௌரவமாகக் கொண்டு
மகிழ்கிறேன்.

On Jun 19, 8:50 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> 2011/6/19 kirikasan <kanagaling...@hotmail.com>

Raja.Tyagarajan

unread,
Jun 19, 2011, 6:00:07 AM6/19/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசன்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

மனதைப் பிசையும் வரிகள். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ”பலநேரங்களில்
வாய்மூடிய மௌனங்கள் தாம் பெருங் குற்றமாகிப் போகிறது நடந்த குற்றங்களை விட,”
என்றறைகிறார் சொற்களினால்.

எந்தமிழ்த் தாயழவே ஈழத்தி லெம்சுற்றம்
வெந்தே எரிகின்ற வேதனையை; - நந்தமிழர்
மண்ணிற் புதைகின்ற மாகொலையைக் கண்டென்றன்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

யாரவர்கள்? நம்மினத்தார்! ஏதுமற்ற ஏதிலியாய்,
வேரறுந்த நீள்மரமாய், வீழ்கையிலே; - சீரழகுப்
பண்ணார் தமிழணங்கும் பற்றி யெரிகையிலே
கண்ணோரம் கண்ணீர்க் கடல்!

ஏனின் னுந்தாமத மென்றேங்கி நிற்காமல்
கூனிக் குறுகித்தான் குந்தாமல் - ஆனையென
விண்ணதிர வீறுகொண்டே மீண்டெழுந்தா லீங்கேது
கண்ணோரம் கண்ணீர்க் கடல்?

அன்பன்
இராஜ.தியாகராஜன்.


---- Original Message -----
From: "kirikasan" <kanaga...@hotmail.com>
To: "சந்தவசந்தம்" <santhav...@googlegroups.com>
Sent: Sunday, June 19, 2011 12:27 PM
Subject: Re: ஈழம் பற்றிய கவிதை

kirikasan

unread,
Jun 19, 2011, 6:14:46 AM6/19/11
to சந்தவசந்தம்
தங்கள் வெண்பாக்களைப் படித்தபோது -உண்மையாக கூறுகிறேன்- கண்கள் பனித்தன.
கவிதை சந்தங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது.
மனதுள் ஊடுருவிப்பாய்கிறது. அன்போடு ஆறுதலாக வந்த கவிதைக்கு நன்றிகள்!

Lalitha & Suryanarayanan

unread,
Jun 19, 2011, 6:36:00 AM6/19/11
to santhav...@googlegroups.com
நண்பரே!

கிரிகாசன் என்னைத் தள்ளிய கண்ணீர்க் கடலில் இருந்து நான் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றபோது மீண்டும் என்னை பல்வேறு கடல்களில் ஆழ்த்திவிட்டீர்களே !

சிவ.சூரி

2011/6/19 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Jun 26, 2011, 10:18:07 AM6/26/11
to சந்தவசந்தம்

பாராட்டுக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்

காதல் நோய்

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
பார்த்த விழியிரண்டும் -அதன்
கோலமிழந்துமே கூடும் துயிலதைக்
கொள்ள மறுத்தன காண் -ஒரு
ஓலைநடுவினில் ஊதி வரும் தென்னங்
காற்றின் குளிர் கரமும் -எழிற்
காலைமலர் நீவி மேனி தொடபெருங்
காயமென் றாகிடுதே

காத லெனும்நோயே ஈதறிவே னெந்தன்
காதலோ ஈழம்மெனும் -சிறு
நாத மணித்திரு நாட்டினிலே கொண்டேன்
நானதை வேண்டிநின்றேன் ஒரு
போதும் பொழுதுமோர் தூக்கமில்லை அதை
பெற்றிடலன்றி என்னை -வரும்
சாதலி ருந்துமே காத்திடப் பாரினில்
சற்றும் வழியொன்றில்லை

வீர வழிவந்த தூயமறவரும்
வேண்டிய காதலிது - இன்னும்
ஈர விழிகொண்ட மாதரும் வீறுடன்
எண்ணிய தாகம் இது -எங்கள்
ஊரை அழித்தவர் உள்மனதில் கொண்ட
ஓங்கிய மோகம் இது
பாரைக் கிலிகொள்ள பாய்ந்தவரும் அன்று
பாசமெடுத்த திங்கு

நானும் எண்ணியிங்கு வாடுகிறேன் சிறு
நெஞ்சினில் ஆசைகொண்டேன் -எந்தன்
ஊனும் உருகிட உள்ளம்சுதந்திர
தாகம் அதிகம் கொண்டேன் -இனி
தேனும் பாலும் உண்டு தித்திக்க வாழ்வதில்
தேவை எதுஇருக்கு? -அட
ஆனவழி ஒன்று கண்டிடவேண்டுமே
ஈழம் அமைப்பதற்கு

தாயைத் தமிழ்திரு ஈழஅன்னைதனை
தேரிலி ருத்தியொரு - அவள்
வேய்குழல் மீதினில் வெள்ளிச்சரமிட்டு
வீர முடியிருத்தி - வளை
தேய்பிறை நெற்றியில்வெற்றித்திலகமும்
திங்கள்வடிவிலிட்டு தமிழ்த்
தூயமலர் அள்ளி தூவிஅணிசெய்து
ஊர்வலம் வந்திடுவோம்

Lalitha & Suryanarayanan

unread,
Jun 26, 2011, 10:40:31 AM6/26/11
to santhav...@googlegroups.com


2011/6/26 kirikasan <kanaga...@hotmail.com>

      காதல் நோய்

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
பார்த்த விழியிரண்டும் -அதன்
கோலமிழந்துமே கூடும் துயிலதைக்
கொள்ள மறுத்தன காண் -ஒரு
ஓலைநடுவினில் ஊதி வரும் தென்னங்
காற்றின் குளிர் கரமும் -எழிற்
காலைமலர் நீவி மேனி தொடபெருங்
காயமென் றாகிடுதே

காத லெனும்நோயே ஈதறிவே னெந்தன்
காதலோ ஈழம்மெனும் -சிறு
நாத மணித்திரு நாட்டினிலே கொண்டேன்

உங்கள்  நாட்டுப் பற்று  அழகாக வெளிப்படுகிறது.
நானதை வேண்டிநின்றேன் ஒரு
போதும் பொழுதுமோர் தூக்கமில்லை அதை
பெற்றிடலன்றி என்னை -வரும்
சாதலி ருந்துமே காத்திடப் பாரினில்
சற்றும் வழியொன்றில்லை

வீர வழிவந்த தூயமறவரும்
வேண்டிய காதலிது - இன்னும்
ஈர விழிகொண்ட மாதரும் வீறுடன்
எண்ணிய தாகம் இது

அழகோ அழகைய்யா  கவிதை!

   தாயைத் தமிழ்திரு ஈழஅன்னைதனை
தேரிலி ருத்தியொரு - அவள்
வேய்குழல் மீதினில் வெள்ளிச்சரமிட்டு
வீர முடியிருத்தி - வளை
தேய்பிறை நெற்றியில்வெற்றித்திலகமும்
திங்கள்வடிவிலிட்டு தமிழ்த்
தூயமலர் அள்ளி தூவிஅணிசெய்து
ஊர்வலம் வந்திடுவோம்
என்னமாக வர்ணித்துள்ளீர்கள்!

சிவ.சூரியநாராயணன்.



kirikasan

unread,
Jun 26, 2011, 10:02:54 AM6/26/11
to சந்தவசந்தம்
அன்போடு பாராட்டுக்கள் வழங்கியவர்களுக்கு நன்றிகள் மீண்டும்!

காதல் நோய்

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது

பார்க்கும் விழியிரண்டும் -அதன்


கோலமிழந்துமே கூடும் துயிலதைக்
கொள்ள மறுத்தன காண் -ஒரு
ஓலைநடுவினில் ஊதி வரும் தென்னங்
காற்றின் குளிர் கரமும் -எழிற்
காலைமலர் நீவி மேனி தொடபெருங்
காயமென் றாகிடுதே

காத லெனும்நோயே ஈதறிவே னெந்தன்
காதலோ ஈழம்மெனும் -சிறு

நாத மணித்திரு நாட்டினிலே கொண்டேன்


நானதை வேண்டிநின்றேன் ஒரு
போதும் பொழுதுமோர் தூக்கமில்லை அதை
பெற்றிடலன்றி என்னை -வரும்
சாதலி ருந்துமே காத்திடப் பாரினில்
சற்றும் வழியொன்றில்லை

வீர வழிவந்த தூயமறவரும்
வேண்டிய காதலிது - இன்னும்
ஈர விழிகொண்ட மாதரும் வீறுடன்

எண்ணிய தாகம் இது -எங்கள்

ஊரை அழித்தவர் உள்மனதில் கொண்ட
ஓங்கிய மோகம் இது -அந்தப்


பாரைக் கிலிகொள்ள பாய்ந்தவரும் அன்று
பாசமெடுத்த திங்கு

நானும் எண்ணியிங்கு வாடுகிறேன் சிறு
நெஞ்சினில் ஆசைகொண்டேன் -எந்தன்
ஊனும் உருகிட உள்ளம்சுதந்திர
தாகம் அதிகம் கொண்டேன் -இனி
தேனும் பாலும் உண்டு தித்திக்க வாழ்வதில்
தேவை எதுஇருக்கு? -அட
ஆனவழி ஒன்று கண்டிடவேண்டுமே
ஈழம் அமைப்பதற்கு

தாயைத் தமிழ்திரு ஈழஅன்னைதனை
தேரிலி ருத்தி வைத்து அவள்
வேய்குழல் மீதினில் வெள்ளிச்சரங்களும்


வீர முடியிருத்தி - வளை

தேய்பிறை நெற்றியில் வெற்றித்திலகமும்
திங்கள் வடிவிலிட்டு -தமிழ்த்
தூயமலர்தனை அள்ளி அணிசெய்து


ஊர்வலம் வந்திடுவோம்


-கிரிகாசன்


On Jun 19, 11:36 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:


> நண்பரே!
>
> கிரிகாசன் என்னைத் தள்ளிய கண்ணீர்க் கடலில் இருந்து நான் வெளியே வரமுடியாமல்
> தவிக்கின்றபோது மீண்டும் என்னை பல்வேறு கடல்களில் ஆழ்த்திவிட்டீர்களே !
>
> சிவ.சூரி
>

> 2011/6/19 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Jun 30, 2011, 5:44:53 PM6/30/11
to சந்தவசந்தம்
கவியரங்கம் 34 ல் கிடைத்த பாராட்டுக்களுக்கு மிகவும் மன மகிழ்வாக
இருந்தது. அதனால் இந்தக்கவிதையை
சந்தவசந்தத்திற்கும் பாராட்டிய,மற்றும் பார்வையிட்ட அனைவருக்கும் அன்போடு
சமர்ப்பிக்கிறேன்.
இந்த மகிழவை இப்போது காண்கிறேன் இதை கவியரங்கில் இடுவது சரியாக இருக்காதோ
என்ற சந்தேகத்தால் இங்கு சேர்க்கிறேன்.

நான் கண்ட ஆனந்தம்!

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
தென்றலே றிவிளை யாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
பூத்ததும் வானத்துத் தாரகையோ

ஏறியே ஓடவே மேகங்களோ -இந்த
ஏழையை சுற்றியும் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
கொண்டது வாழ்வில்பெரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ

அன்பினில் இனிய செந்தமிழே -என்
ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை கொண்டு தென்றல்வர -அதில்
செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர

மின்னும் மத்தாப்பென வண்ணவெடி எந்தன்
மேனியில் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
கற்பனையென் றுள்ளம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!

மகிழ்வுடன்
கிரிகாசன்

kirikasan

unread,
Jul 1, 2011, 12:34:13 PM7/1/11
to சந்தவசந்தம்
மிகவும் சந்தோசமான சூழ்நிலையில் மேற்காணும் கவிதை எழுதினேன்.
எண்ணங்களுக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறதல்லவா. துயரம், பயம் அதுவும்
மிகப்பெரியது மரணம் பயம். இந்த மரணத்தைப்பற்றி நினைத்தே பார்க்கக்கூடதா?
நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அதற்கு நான் பயப்படவில்லை.
எப்படியோ வரப்போகிற ஒன்றை எதற்காக பயத்துடன் எதிர்கொள்ள வேண்டும்!
ஒன்றிரண்டு கவிதை எழுதினேன். நான் அதை உங்களோடு பகிரலாமா?

முதலில் சிறியதிலிருந்து பெரிதுக்கு போகிறேன். இது ஆரம்பகாலத்தில்
எழுதியது. அதனால் பிழைகள் நிறைய இருக்கலாம். தெரிந்தளவில்
களைந்திருக்கிறேன்.


கண்விழித்துக் கண்ட கனவு

மாலைப் பொழுதினில் ஓர்நாள் - மன
தில் பல எண்ணங்கள் கொண்டு
சாலை வழிதனிற் சென்றேன் - நல்ல
சங்கீதம் கொண்டு குருவிகள் பாட
சோலைமலர் மணம்வீச - நல்ல
சுந்தரத் தென்றல் அதைஅள்ளிப் போக
வேலைமுடிந் தெங்கும் வீடு- செல்லும்
வீறுகொண் டேகும் மனிதர்கள் கண்டேன்.


சீறிச் சினத்தவள் கன்னம் - போல
சிவ்வென்று வண்ணம் எடுத் தடிவானம்
மாறிக் கிடந்தது வெய்யோன் - இந்த
மண்ணில் கொடுமைகள் தன்கதிர் மீறி
தேறிக் கிடக்குதே யென்று - நொந்து
மேலைக் கடலில் உயிர்விடும் நேரம்
பூரிப்பு டன்மனம் துள்ளி - புள்ளி
மானைப் போலக் குதித்தது கண்டேன்.

அந்தி கருகிடும் நேரம் - இருள்
ஆடி, அசைந்து புவி கொள்ளும் நேரம்
மந்த மயங்கி யோர் இன்பம் - கள்ளை
உண்டவன்போல உணர்வதைக் கண்டேன்
செந்தமி ழில்இசை பாடிப் - பல
தெய்வத் திருத்தல மெங்கும் பண்ணோசை
முந்தி எழ, அந்த மேகம் - அதை
முட்ட எழுந்தநற் கோபுரம் கண்டேன்

இத்தனை யும்கொண்டு இன்பம் - நெஞ்சில்
எட்டி அலைமோத என்வழி சென்றேன்
எத்தனை யோஅழ காக - இந்த
ஊரை உலகைப் படைத்தவன் செய்தான்
வித்தைகள் அன்றோ புரிந்தான் - என்று
வீறுநடை கொண்டு ஏகிடும்போது
பத்தை சிறுமரக் காடு - அதன்
பக்கத்தி லோர்சுடு காட்டினைக் கண்டேன்

நட்ட நடுவினில் வேகும் - மரக்
கட்டையி னுள்ளே கிடந்தது தேகம்
சுட்டெரியும் தீயின் வாயில் - அந்த
சுந்தரத் தேகம் எரிவது கண்டேன்
இந்த மனிதனும் நேற்று - இந்த
இன்ப உலகினைக் கண்டுகளித்தான்.
இன்று அவன் வெறும் கூடு - அது
மண்ணில் கலந்து மறைந்திடப் போகுது

அத்தனையும் வெறும் மாயை -நாம்
ஆடும் களிப்பு நடனங்கள் யாவும்
வித்தகன் ஆண்டன் மேடை - தனில்
வேடிக்கைக்காக விளையாடும் பொம்மை
நித்திலம் என்பது இல்லை - இங்கு
நி ரந்தரம் என்பதுசற்றேனும் இல்லை
செத்து மடிந்திடச் சூழும் - இருள்
மட்டும் நிரந்தரம் என்றெண்ணி நொந்தேன்

பொன்னெனப் பூத்த இவ்வானம் - அதில்
போகும்வெள்ளி மலைபோன்ற வெண்மேகம்,
விண்ணிற் பறக்கும் குருவி - இந்த
வீதி,மரம், ஓடிச்செல்லும் மனிதர்
தண்ணீர்க் குளத்தின் அலைகள் - அதில்
தாவும் கயல்மீனும் அல்லி இவைகள்
கண்கள் மூடுமட்டும் தோன்றும் - ஒரு
ஞாலக்கனவுகள் என்பதைக் கண்டேன்

மாலை முடிந்திருள் கவ்வ - நாம்
பாயிற் படுத்துமே தூங்கிடக் காண்போம்
காலையில் மீண்டும் எழுந்து - நாம்
கண்ணை விழித்திட இன்னொன்று காண்போம்
யாவும்கனவுகள் கண்டீர் கண்
மூடித் திறந்தென காண்பது ரண்டு.
ஒன்று விழித்திடப் போகும் இன்
னொன்று கண்களை மூடிடப்போகும்

அன்புடன்
கிரிகாசன்

magudadheeban

unread,
Jul 1, 2011, 8:03:28 PM7/1/11
to santhav...@googlegroups.com
இனிய கும்மிச் சந்தம்
நிறையவே சொல்லாட்சி கைக்கு வந்திருக்கிறது...
பாடல்களில் முன்பு நான் படித்ததைவிட
அதிக முன்னேற்றம் காண்கிறேன் கிரிகாசன் ....

ஏழையை சுற்றியும் ....... ஒற்று வரவேணுமே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே ...... என்பினுக் குள்தீ எரிகிறதே
என்றால் இன்னும் நன்றாய் இருக்கும் அல்லவா ?

வாழ்த்துக்கள் கிரிகாசன் !

-மகுடதீபன்


2011/7/1 kirikasan <kanaga...@hotmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

kirikasan

unread,
Jul 2, 2011, 1:54:34 AM7/2/11
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா மகுடதீபன் அவர்களே!
இதோ திருத்தம்

ஏறியே ஓடவே மேகங்களோ -இந்த

ஏழையைச் சுற்றியும் தேவர்களோ


கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
கொண்டது வாழ்வில்பெரி தல்ல

இரண்டாவதை இப்படி மாற்றட்டுமா?

அன்பினில் இனிய செந்தமிழே -என்
ஆவி கலந்திட்ட பொன்மகளே

என்பிலுக் குள்ளொரு தீஎரிதே -இதில்


இன்ப நினைவும் பெருகிடுதே

இங்கு இதை நான் கூறுவதை தவறாக எடுக்கவேண்டாம். இப்போதெல்லாம்
கவிதைகள் எழுதும்போது பற்களை இறுக கடித்துகொண்டுதான் எழுதுவேன்.
ஏனென்கிறீர்களா?
இதுவும் சில மாதங்களுக்கு முன் எழுதியது. இத்துடன் என்புகழ் பாடும்
கவிதைகளை நிறுத்திக் கொள்கிறேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்

பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு
தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
கனவென்ற நிலையாகிடும்

களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
விளையாட்டு முடிவாகிடும்
களையாது தினந்தோறும் கனவோடு உயிர்கொண்டு
புவிமீது நடந்தோடினேன்
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு
பலநூறு பிழை யாற்றினேன்

எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
நிழலாக்கி உயிரோடிடும்

அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
போகும்வரை ஆடுவேன்.

மீண்டும் ஒரு இடைவெளிக்குபின் சந்திப்போம்.


அன்புடன்
கிரிகாசன்

On Jul 2, 1:03 am, magudadheeban <magudadhee...@gmail.com> wrote:
> இனிய கும்மிச் சந்தம்
> நிறையவே சொல்லாட்சி கைக்கு வந்திருக்கிறது...
> பாடல்களில் முன்பு நான் படித்ததைவிட
> அதிக முன்னேற்றம் காண்கிறேன் கிரிகாசன் ....
>
> ஏழையை சுற்றியும் ....... ஒற்று வரவேணுமே
> என்பிலும் ஊடேஓர் தீஎரிதே ...... என்பினுக் குள்தீ எரிகிறதே
> என்றால் இன்னும் நன்றாய் இருக்கும் அல்லவா ?
>
> வாழ்த்துக்கள் கிரிகாசன் !
>
> -மகுடதீபன்
>

> 2011/7/1 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

magudadheeban

unread,
Jul 2, 2011, 4:22:08 AM7/2/11
to santhav...@googlegroups.com
எரிதே .... !
என்றொரு சொல் உளதா ?

அதைத்தான் கேட்டேன் ...

-மகுடதீபன்
2011/7/2 kirikasan <kanaga...@hotmail.com>

--

kirikasan

unread,
Jul 2, 2011, 5:26:58 AM7/2/11
to சந்தவசந்தம்
ஆகா அதைநான் இதுவரை உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டேன். எரியுதே என்பதை எரிதே
என்ற கூறலாம் என தவறாக எண்ணிவிட்டேன்.
சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றிகள். தங்கள் வழிகாட்டியை முற்றுமுழுதாக
ஏற்றுக்கொள்கிறேன்

திருத்தத்திலும் பிழை விட்டு விட்டதால் மீண்டும் இரண்டும்

ஏறியே ஓடவே மேகங்களோ -இந்த
ஏழையைச் சுற்றியும் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்

கொண்டது வாழ்வில்பெரி தல்லவோ?


2.


அன்பினில் இனிய செந்தமிழே -என்
ஆவி கலந்திட்ட பொன்மகளே

என்பினுக் குள்தீ எரிகிறதே -இதில்


இன்ப நினைவும் பெருகிடுதே

மீண்டும் நன்றிகள்!
கிரிகாசன்

On Jul 2, 9:22 am, magudadheeban <magudadhee...@gmail.com> wrote:
> எரிதே .... !
> என்றொரு சொல் உளதா ?
>
> அதைத்தான் கேட்டேன் ...
>
> -மகுடதீபன்

> 2011/7/2 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

kirikasan

unread,
Jul 4, 2011, 5:37:22 AM7/4/11
to சந்தவசந்தம்
இயற்கையே எதிரியா?(ஈழத்தில்)

நீராடும் போதுகுளம் சேறானதேன்?
நிலவென்று நானிருக்க நெருப்பானதேன்?
போராடு என்றுவாழ்வு புதிர்நிறைத்ததேன்?
பூகம்பம் ஒன்றெழுந்து பொலிவழிந்ததேன்?

தேரோடும் வீதியெங்கும் செடிமுளைத்ததேன்?
திசைமாறிப் புரவிகளும் தேரிழுத்ததேன்?
வேரோடு வீழவென்று விதி வகுத்ததேன்?
வீழவெனப் புயலடித்து வெறுமை தந்ததேன்?

ஆற்றோரம் மலர்கள்மீது அனலடித்ததேன்?
ஆற்றாது மலரிதழும் அழிந்துவிட்டதேன்?
சேற்றோடு வெள்ளம் ஊரைச் சேர்ந்தழிப்பதேன்?
சிறுகுடிசை சரிய கொடுஞ்சேதி வந்ததேன்?

காற்றோடு கனவுகளும் கலைந்து போனதேன்?
கண்ணீரும் வற்றும்வரை கலங்கி அழுவதேன்?
நேற்றோடு இருந்தவாழ்வு நிலை குலைந்ததேன்?
நினைவோடு துயரெழுந்து நிறைவு கொண்டதேன்?

சிலைநினைத்து கல்செதுக்கச் சிதறி உடைவதேன்?
சித்திரமும் தீட்டவர்ணம் சிந்தி யழிவதேன்?
கலையென்று நடனமிடக் கால் வழுக்கினேன்
கவியென்று தமிழ் எழுதக் கைவலிப்ப தேன்?

மலையென்று நம்பியதோ மழை கரைத்ததேன்?
மன்னவனென் றெண்ண உளம் மாறிவிட்டதேன்?
இலையென்று ஆனபின்னே இந்த வாழ்வு ஏன்?
இல்லையிரு சக்தியவள் என்னசொல்லக் கேள்!

> > > > >  தில் பல எண்ணங்கள் கொண்டு...
>
> read more »

kirikasan

unread,
Jul 23, 2011, 4:49:28 AM7/23/11
to சந்தவசந்தம்
ஒருநாள் மனம் சஞ்சலமாக இருக்கும்போது இதை எழுதினேன். பின்னர்
இதை வேண்டாம் என்று விட்டுவிட முடியவில்லை . நன்றாகத்தானே இருக்கிறது
என்று வைத்துக்கொண்டேன்.


யார் அழைப்பது?

தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது

வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது

பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது

கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டு முழுதும் என முடிக்கின்றது

ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது

சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது


கிரிகாசன்

> > > > On...
>
> Erfahren Sie mehr »

Chandar Subramanian

unread,
Jul 24, 2011, 8:50:21 PM7/24/11
to santhav...@googlegroups.com
கடைசியாக அமைந்த பாடல் மிக அருமையாகவுள்ளது. "சென்ற திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது" என்னும் இந்த ஈற்றடி, கவிதையின் முத்தாய்ப்பாயுள்ளது.


2011/7/23 kirikasan <kanaga...@hotmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

kirikasan

unread,
Jul 25, 2011, 2:00:35 PM7/25/11
to சந்தவசந்தம்

நன்றிகள் Chandar Subramanian அவர்களுக்கு! மிகவும் நன்றிகள்!

ஈழத்துக் கவிதைகள் என்ற தலைப்பில் வேறு கவிதைகளை தருவதற்கு மன்னிக்க!
என் உணர்வுகளின் கலவையாக இவை!

கலையுள்ளம்

மலரோடு மலர்மோதும் இதழ் நோவு பெறுமோ
மலர்கொண்ட இதழ்தன்னில் ஒருகாயம் வருமோ
அலர்கொள்ளு மிதழ்மென்மை அதுபோலு முள்ளம்
கலைவானில் எதிர்மோதும் களிப்பானதன்றோ

மதுவான தனையேந்தும் மலர்கொண்ட மென்மை
அதுபோல கலைதேர்ந்த உளம் கொண்ட தன்மை
எதுவாக இருந்தாலும் இவர்கொள்வர் மேன்மை
இதுதானே  தமிழ் கொண்ட இணையற்ற தகமை

கவியென்ப தழகான கலைவண்ணப் பூக்கள்
புவிமீது எழுகின்ற பொழில்நீரின் அலைகள்
குவிந்தாடும் மலர்போலக் கொள்ளும் பல்வண்ணம்
அவிழ்ந்தோடும் அலைபோல அழகாக விரியும்

இரும்பான தழல்சேர எழிலான தொன்றாய்
கரும்பாலை நெரிந்தாலே கனிபோன்ற இனிதாய்
வருமாதல் போலெம்மை வளமாக்கும் கவியாய்
உருவாக்கும் தமிழன்னை உளம்வாழ்த்துகின்றேன்

கிரிகாசன்

On 25 Jul., 01:50, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:


> கடைசியாக அமைந்த பாடல் மிக அருமையாகவுள்ளது. "சென்ற திக்கில் தெருமுடிந்து
> கிடக்கின்றது" என்னும் இந்த ஈற்றடி, கவிதையின் முத்தாய்ப்பாயுள்ளது.
>

> 2011/7/23 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> Erfahren Sie mehr »

kirikasan

unread,
Jul 27, 2011, 7:46:34 AM7/27/11
to சந்தவசந்தம்
என்னைத் தீயிட்டதார் ?

புண்ணாகிப் போனதே மேனி - என்ன
பொல்லாத காலமோ சொல்லடி தேவி
கண்ணான பட்டதோ மேனி - யாரும்
காணாத எழிலொடு கனவிலே தோன்றி
மண்ணாளும் வேந்தனின் ஜோதி - கொண்ட
மாசறு மேனியன் ஆனேனோ ஓடி
எண்ணாது பொய்சொல்லி மாற்றி -இங்கு
எவர் செய்ததோ துயர் இப்படி வாட்டிக்

கொள்ளுதே தேகமும் கோடி - துன்பம்
கொண்டவன் ஆகிட மெய்நொந்து பாதி
உள்ளுரம் போனதே வீதி - விண்ணில்
உலவியே தேய்ந்ததோர் நிலவென்று ஆகிக்
கள்ளமும் கொள்ளுதே ஆ..நீ, - என்னைக்
காத்திட பின்னிற்ப தேன் சக்தி தேவி
எள்ளிவன் என்றெண்ணி கிள்ளி - எங்கும்
எறியாது ’அவசியம் வாழ்`வென்று கொள்நீ

பாதாள பைரவன் கட்டி - என்னைப்
பாம்பொடு குழியிட்டு பண்ணுமோர் துன்பம்
வேதாளம் இரண்டுகை பற்றி - உடல்
வேகிடத் தீயினில் விட்டதோர் துன்பம்
போதாது என்றிடப் பல்லை - நீட்டி
பெரிதுடல் கரியெனும் பேய்போலும் பெண்கள்
காதோடு ஆவெனக் கத்தி - கரம்
கொண்டதோர் ஈட்டியை உடலெங்கும் குத்தி

கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதிக்கவே கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியிற் காணும் - நல்ல
பூவாக என்னையும் பொலிவுறச்செய் நீ !

தள்ளாத போதிலும் பாடித் - தாயே
தமிழ்மீது பற்றினைக் கொண்டவன், ஆற்றின்
வெள்ளமென் றாகவே நீந்தி - நீ
விளையாடி மகிழஇன் தமிழ் கொண்டு ஊற்றி
அள்ளவே குன்றாநல் லமுதம் - ஈயும்
அரும்பெரும் சுரபியென் றாகுவேன் - காற்றை
உள்ளிடும் மூச்சினைக் காத்தால் - இந்த
உலகதன் பாரமும் பெரிதோ நீ யோசி

> > > > > > என்றொரு சொல் உளதா ?...
>
> Erfahren Sie mehr »

kirikasan

unread,
Jul 27, 2011, 1:26:06 PM7/27/11
to சந்தவசந்தம்
சந்தர்ப்பம் கூறவில்லையே! இரண்டு நாட்களாக காய்ச்சல் அடிக்கிறது.
அதையிட்டு இன்று எழுதிய கவிதை

> > > > > திசைமாறிப் புரவிகளும்...
>
> Erfahren Sie mehr »

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 27, 2011, 2:18:21 PM7/27/11
to santhav...@googlegroups.com
அழகான சிந்து. உங்கள் காய்ச்சலின் சூடு அதில் நன்கு தெரிகிறது. அது பிறவித் துயருக்கும் பொருந்தும்.   விரைவில் "நல்லமுதம் ஈயும்
அரும்பெரும் சுரபியென்' றா குக!

அனந்த்  

2011/7/27 kirikasan <kanaga...@hotmail.com>
>
> Erfahren Sie mehr »

Kaviyogi Vedham

unread,
Jul 28, 2011, 3:55:01 AM7/28/11
to santhav...@googlegroups.com
ரொம்ப ரொம்ப அழகு ரசித்தேன் வாழ்க!,
 யோகியார்

2011/7/1 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Jul 28, 2011, 12:24:17 PM7/28/11
to சந்தவசந்தம்
மிக்க நன்றிகள்! தங்கள் வாழ்த்துடன் இன்று குணமாகி விட்டேன். அதற்குள்
இன்னொன்று எழுதிவிட்டேன்
பகிர்ந்துகொள்ள மனம் தூண்டுகிறது. தருகிறேன். நன்றிகள்!

On 27 Jul., 19:18, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அழகான சிந்து. உங்கள் காய்ச்சலின் சூடு அதில் நன்கு தெரிகிறது. அது பிறவித்
> துயருக்கும் பொருந்தும்.   விரைவில் "நல்லமுதம் ஈயும்
> அரும்பெரும் சுரபியென்' றா குக!
>
> அனந்த்
>

> 2011/7/27 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> Erfahren Sie mehr »

kirikasan

unread,
Jul 28, 2011, 12:26:37 PM7/28/11
to சந்தவசந்தம்
ஐயா
தங்கள் பாராட்டு என் தலையில் வைத்த கிரீடம் போல் மிக மகிழ்வடைகிறேன்
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

On 28 Jul., 08:55, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> ரொம்ப ரொம்ப அழகு ரசித்தேன் வாழ்க!,
>  யோகியார்
>

> 2011/7/1 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Jul 28, 2011, 12:31:21 PM7/28/11
to சந்தவசந்தம்
தீயின்றி சுட்ட தேகம்

செந்தணல் கொண்டு தீமூட்டாதே திரும்பிப் பாரம்மா
. .சிங்களமன்னன் எங்களை இன்று செய்வதுபோலம்மா
எந்தழல் கொண்டு எரித்தாலும் அது இயற்கையில் தவறம்மா
. .எரியும் உடலில் சந்தணம்பூசு இரங்கிடு இறையம்மா
கந்தகம்கொண்டு எரித்தானாம் அக் காதகன் செயலம்மா
. .கைளில் அந்தப் பாதகம் வேண்டாம் கனலை ஆற்றம்மா
வந்ததுபோதும் நின்றதுகாணும் வாழ்வினில் என்றம்மா
. .வைத்த கணக்கில் குற்றமிருக்கு வார்த்தையைக் கேளம்மா

சந்திரன்கூட செங்கதிரோனும் சுற்றுகி றாரம்மா
. .சுந்தரவானில் விண்சிறுமீனும் எத்தனை நாளம்மா
வந்தவர்போவார் வாழ்விதுவென்று வைத்தது எமதம்மா
. .வாழ்வெனக்ககூறி வதைப்பதுதானே வையக விதியம்மா
பந்தெனவந்து பட்டதும் ஓடும் பாவப் பிறப்பம்மா
. .பனிபோல் தோன்றி பகலுள் காயும் பாசக் கனவம்மா
இந்தொரு வாழ்வில் நிரந்தரம் இல்லை ஏனோ கூறம்மா
. .இருப்பதும் போவது வருவது இயல்பே என்றதுமேனம்மா

பூக்களின் வாழ்வு போதுமே நாமும் புதுவான் தாரகையாய்
. பொன்னொளிவானில் என்றுமே வாழும் புதுநிலை தாஅம்மா
ஈக்களின்வாயில் தேனினை காட்டி ஏய்த்தது போதும்மா
. இனித்ததுவாழ்வு என்றுநினைத்தோம் இதுவே தவறம்மா
தூக்கமும் இரவும் தந்தது யாவும் துயரத்தின் பிறப்பம்மா
. தோலினுள் தசையும் குருதியும் கொள்ளத்தோன்றுது அழிவம்மா
தீக்குள் எரியாத் தேகமும் ஒளியில் தோலும் தசை செய்தே
. தொட்டால் உணராத் தேகம் செய்தால் துயரம் ஏதம்மா !

kirikasan

unread,
Jul 29, 2011, 3:42:18 AM7/29/11
to சந்தவசந்தம்
நானும் அரசந்தான்

நேரே நிமிர்ந்து நடப்பேனடா ஆனால்
நெஞ்சமோ கூனலடா
பாரே புகழ்ந்திட ஆகுமடா ஆயின்
பாதி மடையனடா
ஊரேமனம் கொண்டு வாழ்த்திடினும்
இவனுள்ளம் சிறுமையடா
வேரே கிடக்குது வாடி யிவனொரு
வீழும் விருட்சமடா

தோல்வி யெனக் கென்றும் சொந்தமடா வெற்றி
தோள்களில் பாரமடா
கால்கள் இறங்கையில் ஓடுதடா மலை
ஏறத் தயங்குதடா
ஆலமரமென நான் வளர்ந்தால் புயல்
ஆட்டும் பின் வீழ்த்துமடா
கோலமதில் நானும் நாணலடா இனி
கொஞ்சமும் வீழேனடா

வேலைகள் செய்திடச் சோம்பலடா நானோ
வீதிக்கு ராசாவடா
மாலைதனில் மது வண்டெனவே மதி
கெட்டொரு மந்தியடா
சாலையில் சுற்றித் திரிவேனடா பல
சேட்டை புரிவேனடா
தோலை உரித்திட யாரும் வந்தால் பின்னே
தோப்புக் கரணமடா

கோவில்கள் வாசலில் பக்தனடா உள்ளே
கொள்கையில் நாத்திகன்டா
சேவைபுரிந்து வணங்கிடுவேன் தரும்
சாதம் வரைக்குமடா
நாவில் நற்கீத மிசைத்திடுவேன் அந்த
நல்லிசை ஞானம்கொண்டோன்
பாவினித்தோ குரல் தந்திடுவான் உதை
போடும் பொதி சுமப்போன்

நாளுமொரு போதும் பொய்யுரையேன் நானோ
நற்குண வேந்தனடா
ஏழுதனை இது எட்டு என்பேன் அது
எண்ணத்தின் மாற்றமடா
பாழுமுலக மெனைக்குறித்து இவன்
பைத்தியம் என்குதடா
ஊரை உலகேய்த்துப் பொய்சொன்னவன் மட்டும்
ஊருக்கு ராஜாவடா!

காதை அறுத்தவன், சங்கிலியைக் கொண்ட
கள்ளன் சிறையிலடா
மாதைக் கெடுத்தவன் மங்கை தீண்டஅந்தக்
மாயவன் உள்ளேயடா
தீதை இழைத் தில்லம் தீயிட் டெரித்தவன்
நீதியின் கையிலடா
ஈது அனைத்தையும் யாரொருவன் செய்தால்
நாட்டின் அரசானடா!

kirikasan

unread,
Jul 29, 2011, 4:02:29 AM7/29/11
to சந்தவசந்தம்
மேலே தந்த கவியின் தலைப்பை ’’நானும் அரசன்தான் என பிழை திருத்தி
கொள்கிறேன்
உண்மையில் என் சொந்தக் குணமல்ல என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்
கொள்கிறேன்
நன்றிகள்
கிரிகாசன்

> > > > > பொன்னெனும்...
>
> Erfahren Sie mehr »

kirikasan

unread,
Jul 30, 2011, 5:28:48 PM7/30/11
to சந்தவசந்தம்

வாழ்வில் வந்த வசந்தம்

சொல்லினியத் தமிழ்அமுதச் சுவைகவிகள் செய்தேன்
சுற்றி நறுந் தேன்துளிகள் சேர்த்தினிமை செய்தேன்
பல்திசையும் பார்த்தெவரும் பாவினிமை கண்டே
பகருவதென், பார்த்துவிடப் பயணமொன்று கொண்டேன்
இல்லையொரு வேளையிது என்றுமனம் வாடி
இருந்துவிடத் தோன்றியது இவ்வரிய வேளை
செல்வழியில் ஓர்திசையில் செந்தமிழ்ப் பூஞ்சோலை
சீருடன்நற் சந்தமிடும் செழுமைதனைக் கண்டேன்

மெல்லெனவே உள்நுழைய மேதினியி லிதுபோல்
மேன்மையுறு அன்புமன மில்லையெனக் கண்டேன்
வல்லமைகொள் விழியுயர்த்தி வைக்குமொரு மேடை
வானளவு நிற்க கவி வார்த்தை சொல்லி நின்றேன்
அல்லலுற்ற என்மனதை ஆற்றுமெழில் கூற்றை
அன்புமொழிப் பேச்சினையும் அங்கு கண்டு நின்றேன்
புல்முளைத்துப் பேர்விருட்சம் போலுயர்த்தும் வித்தை
பிறைநிதமும் வளரஒளிப் பருதியெனும் விந்தை

கல்செதுக்கிச் சிற்பஎழில் காணும்கலைக் கோவில்
கலைமகளின் கமலமிருப் பிவர்கவிஞர் நாவில்
வில்லெனவே ஏழுவண்ண முள்ளஉயர் வானில்
விரைந்துதவழ் துச்சி ஏறும் வெய்யவனின் பாங்கில்
நல்லொளியும் வீசஅதில் நான்வியந்து நின்றேன்
நறுமணத்தின் சுகமிழைந்த வசந்தமதைக் கண்டேன்
பல்லுடைக்கும் கவிபடைக்கும் பாடலடி செய்வேன்
பா புனைந்து நானுமிங்கு பகிர்ந்தளித்து நிற்க

மெல்லிசைகள் மீட்டுமின்ப வீணையொலி கேட்டேன்
மேவுமெழில் கூட்டுமின்ப நாதஇசை கேட்டேன்
சல்லெனவே சலங்கையொலி, சங்கீதமென் னோசை
சற்றிடையே விட்டுவிட்டு சொற்கவிதை மேடை
நில்லெனவே உள்ளமெனை நிறுத்திவிட்ட திங்கே
நீர்குதித்து ஓடும்நதி சென்றதிங்கு கடலே
பல்கலைஞர் ஒன்றிணையப் பக்கமிது நன்றே!
பாரினிலே இல்லைநிகர், பாடுந்தென்றல் ஒன்றே!

அன்புடன் கிரிகாசன்

> > > > > பொன்னெனும்...
>
> Erfahren Sie mehr »

Kaviyogi Vedham

unread,
Jul 31, 2011, 2:51:52 AM7/31/11
to santhav...@googlegroups.com
பலே பலே..வாழ்க கிரி..
யோகியார்

2011/7/31 kirikasan <kanaga...@hotmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

kirikasan

unread,
Jul 31, 2011, 10:17:39 AM7/31/11
to சந்தவசந்தம்
நன்றி ஐயா!,
தங்கள் ஆசீர்வாதம் என்னை உயர்த்தும். நன்றிகள் பல!

On 31 Jul., 07:51, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> பலே பலே..வாழ்க கிரி..
> யோகியார்
>

> 2011/7/31 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> Erfahren Sie mehr »

kirikasan

unread,
Jul 31, 2011, 10:23:25 AM7/31/11
to சந்தவசந்தம்

காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!

அன்புடன் கிரிகாசன்

> > > ஈக்களின்வாயில் தேனினை காட்டி...
>
> Erfahren Sie mehr »

kirikasan

unread,
Aug 1, 2011, 12:52:23 AM8/1/11
to சந்தவசந்தம்
வசந்தம் வீசும் காலை.!

இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்

மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்

தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்

புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்

பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்
இசைந்தது மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்

> > > ஏழுதனை இது எட்டு என்பேன் அது...
>
> Erfahren Sie mehr »

Kaviyogi Vedham

unread,
Aug 1, 2011, 2:06:24 AM8/1/11
to santhav...@googlegroups.com
ரொம்ப ரொம்ப அழகு வர்ணனை. வாழ்க!
 யோகியார்

2011/8/1 kirikasan <kanaga...@hotmail.com>
>
> Erfahren Sie mehr »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

kirikasan

unread,
Aug 3, 2011, 9:14:29 AM8/3/11
to சந்தவசந்தம்
தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா!


வாழ்க்கை

தேனோடும் மனம் மீதோடும் துயர்
தானோடும் மகிழ் வேயாகும்
வானோடும் முகில் போலோடும் உளம்
வாழ்வோடும் வழி தானோடும்
மீனோடும் கடல் மேலோடும் அலை
போலாடும் அது தள்ளாடும்
தானோடும் அலைமீதோடும் சிறு
ஓடம் எனவே வாழ்வாகும்

நிலவோடும் ஒளி நிலம்மூடும் அதில்
நினைவோ டினிமைகள் குதிபோடும்
பலஓடும் முகில் அருகோடும் சில
அதைமூடும் பொழு திருள்கூடும்
கலையோடும் மனம் தமிழோடும் சில
காலம் மகிழ்வுடன் இருந்தாலும்
பலமோடும் பெரும் வலியோடும்
பல துன்பம் மகிழ்வைப் பந்தாடும்

மலைபோலும் மனதிடமோடும் அதில்
கனிவோடும் நாம் நடந்தாலும்
வலைபோடும் விதி வாழ்வோடும் பல
வழியிற் துயர்தர விளையாடும்
சிலைபோலும் மனம் இருந்தாலும் அதிற்
சிலநேரம் விழி வழிந்தோடும்
நிலைமாறும் துயர் தனை ஓடும்வகை
நினைவை மாற்றிடும் நிலைவேண்டும்

விழிமூடும் வரை வழிதேடும் பெரும்
வாழ்வில் எதுவரை உரமோடும்
எழிலாடும் மலர் இதழ்காணும் மெது
இதயம் கொண்டிட வாழ்ந்தாலும்
வழிதோறும் பல குழிகாணும் அதில்
வீழ்ந்தே அடிபட வலிதோன்றும்
எழிதோடும் நல்ல இயலோடும் அதை
இல்லா வகைசெய்து எழுநீயும்

வாழ்வோடும் அது வானோடும் சுடர்
போலாகி ஒளிவந்தாளும்
நாள்கூடும் வரை போராடும் மனம்
பேராழித் திரை போலாடும்
வீழ்வோடும் பெருவளைவோடும் அது
வீழ்ந்தாலும் உடன் வீறோடும்
ஆழ்வோடும் வெகுஅழகோடும் அது
அலைந்தும் உயர்ந்திடக் கரைநாடும்

இனிதோடும் மனம் இதுபோலும் நிலை
இருந்தும் வாழ்ந்திட வழிதேடும்
கனிதேடும் கிளி என்றாகும் படி
கலையில் இனிமையை மனம்தேடும்
பனிமூடும் அது விழிமூடும் பின்
படபட வென்றே இடி தோன்றும்
எமை நாடும் எதுவென்றாலும் அதை
எதிர்கொள்ளும் மனம் இறை வேண்டும்

மீனோடும் அதுஆறோடும் அலை
மீதோடும் அது சேர்ந்தோடும்
ஏனோடும் சிலஇளமீன்கள் அதில்
எதிரோடும் நிலை போலோடும்
தானோடும் குளிர் தண்ணீரில் இவை
தடுமாறும் அது இடம்மாறும்
தேனோடும் அத் திரைநீரில் அவை
தேடிச் சுகமும் கொண்டாடும்


On 1 Aug., 07:06, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> ரொம்ப ரொம்ப அழகு வர்ணனை. வாழ்க!
>  யோகியார்
>

> 2011/8/1 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> Erfahren Sie mehr »

Pas Pasupathy

unread,
Aug 3, 2011, 11:51:47 AM8/3/11
to santhav...@googlegroups.com
தென்றல் போலச் சுகமாய் வீசுகிறது பாடல்!

2011/8/3 kirikasan <kanaga...@hotmail.com>
> ...
>
> Erfahren Sie mehr »

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Siva Siva

unread,
Aug 3, 2011, 5:42:18 PM8/3/11
to santhav...@googlegroups.com
1)
/ தேனோடும் மனம் மீதோடும் துயர்
தானோடும் மகிழ் வேயாகும் /

நல்ல ஒலி அமைப்பு.

'தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமாங்காய்'
என்ற அமைப்பிலும் நோக்கலாமோ?

2)
/தானோடும் அலைமீதோடும் சிறு
ஓடம் எனவே வாழ்வாகும்/
இதில் 'எனவே' என்ற இடத்தில் 'வே' என்பது பாடலின் ஒலிநயத்தை மாற்றுகிறது.
இவ்வாறே இன்னும் சில இடங்களில்.

3)
/ குளிர் தண்ணீரில் / ??
தண் = குளிர்ச்சி அன்றோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/8/3 kirikasan <kanaga...@hotmail.com>


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

kirikasan

unread,
Aug 14, 2011, 2:13:26 PM8/14/11
to சந்தவசந்தம்
மனமார்ந்த நன்றிகள், ஐயா !

அன்புடன் கிரிகாசன்

On Aug 3, 4:51 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> தென்றல் போலச் சுகமாய் வீசுகிறது பாடல்!
>

> 2011/8/3 kirikasan <kanagaling...@hotmail.com>

> ...
>
> read more »

kirikasan

unread,
Aug 14, 2011, 3:05:18 PM8/14/11
to சந்தவசந்தம்
siva siva அவர்களுக்கு!

தங்கள் கருத்துக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி கூறிக்கொள்வதோடு
திருத்தங்கள்..

/தானோடும் அலைமீதாடும் அது
தாங்கும் ஓடம் வாழ்வாகும்/

என்று மாற்றுகிறேன்

/தானோடும் குளிர் நீரோடும் சில
தடுமாறும் அதில் இடம்மாறும்/

என்றும் திருத்திக்கொள்கிறேன்.

தங்களுக்கு மீண்டும் நன்றிகள்!


On Aug 3, 10:42 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 1)
> / தேனோடும் மனம் மீதோடும் துயர்
> தானோடும் மகிழ் வேயாகும் /
>
> நல்ல ஒலி அமைப்பு.
>
> 'தேமா கூவிளம் தேமா கூவிளம்
> தேமா கூவிளம் தேமாங்காய்'
> என்ற அமைப்பிலும் நோக்கலாமோ?
>
> 2)
> /தானோடும் அலைமீதோடும் சிறு
> ஓடம் எனவே வாழ்வாகும்/
> இதில் 'எனவே' என்ற இடத்தில் 'வே' என்பது பாடலின் ஒலிநயத்தை மாற்றுகிறது.
> இவ்வாறே இன்னும் சில இடங்களில்.
>
> 3)
> / குளிர் தண்ணீரில் / ??
> தண் = குளிர்ச்சி அன்றோ?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/8/3 kirikasan <kanagaling...@hotmail.com>

> --http://nayanmars.netne.net/

kirikasan

unread,
Aug 15, 2011, 5:50:39 AM8/15/11
to சந்தவசந்தம்

பிரிவென்னும் துயர்


நீ அழுதால் நான் வருவேன் அன்பெனும் தேரில் -என்
நினைவழுதால் யார்வருவார் நீயில்லை யாயின்
பூ அழுதால் தேன் வடியும் பூஇதழ் தன்னில் - பகற்
பொழுதழுதால் இருள் பரவும் பூமியின்கண்ணில்

மீனழுதால் நீரறியும் ஆழ்கடல்தன்னில் - வான்
மேகமழை முகில் விழியின் ஊற்றிடும் கண்ணீர்
நானழுதால் நீயறிவாய் நாள துதன்னில் -இந்த
நாளிலுயிர் வாடுகிறேன் நீயின்றி வீணில்

தாயழுது நான் பிறந்தேன் தரையினில் அன்றே- ஒரு
தரமழுது புவிவிழுந்தேன் தாங்கிட மண்ணே
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்வினில் பெண்ணே - இனி
வார்த்தையின்றி அழுவது என் விதியடி கண்ணே

சேயழுதால் தாயெடுப்பாள் தீர்த்திடச் சோகம் அதைச்
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் சென்றிடும் கோபம்
நோய்பிடித்தால் தேகம்அழும் நொந்திடும் பாவம் - என்
நினைவழுது நேர்வது உன் நெஞ்சமே கூறும்

பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே, காகம்- வீழ்ந்த
பறவைக்காகச் சேர்ந்துஅழும் பெரிதொரு கூட்டம்
பாய்ந் தலைகள் ஓடியழும் பெரிதொரு ஆழி - கரை
பார்த்தழுது திரும்பிவரும் பிரிந்ததை தேடி

தாமரைப்பூ நீரிலாடும் தன்மையில் நானும்- இங்கு
தவித்துமனம் ஆடுகிறேன் தாங்கியே நாளும்
நீமறைந்து நிற்பதென்ன நெஞ்சமே இன்னும் என்
நினைவிருக்க வந்துவிடு நிறம்கொள்ள வாழ்வும்

விறகடுக்கி தீயிலிட்டால் வேகுமே தேகம் -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே ஆகும்
உறவிருக்கும் போதிலெனை ஒன்றெனக் கூடு -இந்த
உலகமதில் எதுவும் இல்லை உயிர் சென்றபோது

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலது வீணே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகமே போமே
மறந்து உனைவாழ்த லுண்டோ மனமழ நிதமும் -நல்ல
மாற்றத்துக்கு வழியுமுண்டு மாறிடு நீயும்

அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Aug 17, 2011, 5:55:23 AM8/17/11
to சந்தவசந்தம்
அன்பு உள்ளங்களுக்கு காணிக்கை

கவிபாட மறவேன் !


நானெழுந்து நடந்தாலுந் தமிழன்னை
தாள்பணிந்தே நடப்பேன்
கூன்விழுந்து கிடந்தாலும் இன்பத்தமிழ்க்
கொஞ்சுகவி படிப்பேன்
வானெழுந்த வெயில்போயும் காலையிலே
வந்து விடுவதைப்போல்
போனதுபோ லிருப்பேன் பின்னால்நின்று
போற்றித் தமிழ்படிப்பேன்

தேனொழுகும் கனிக்காய் பெற்றவரைச்
சுற்றிய ஐங்கரன்போல்
நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே
நல்லோரைச் சுற்றிடுவேன்
வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
கோவிலையே சுற்றுவேன்
தேன்மலரைச் சுழன்றாடும் வண்டெனவே
தீந்தமிழ் சுற்றிநிற்பேன்

மீனெழுந்து துள்ளும்மேலே மீண்டுமது
நீரினில் தானேவிழும்
மின்னலிடு மேகம்செல்லும் மழைமீண்டும்
மெல்லத் திரும்பிவரும்
என்னமன மெடுத்தாயினும் இன்தமிழ்
சொல்லமறந் தொருகால்
இன்தமிழில் கவிசெய்ய மறந்திங்கு
என்னுளம் தூங்கிடுமோ

கற்றிடுவேன் தமிழ்ச்சொல்லை எடுத்தெங்கு
வைப்பதென அறிய
சொற்றமிழைக் கட்டும் வித்தகனாயொரு
சுந்தரப் பாட்டிசைக்க
பெற்றவளை விட்டுப்போவ துவோபுத்தி
கெட்டு மறுகுவனோ
சற்றும்அயரேன் சத்தம்செய்யே னென்று
கத்திக்கத்திச் சொல்லுவேன்


அன்புடன் கிரிகாசன்

> > > > எமை நாடும் எதுவென்றாலும் அதை...
>
> read more »

kirikasan

unread,
Aug 17, 2011, 9:05:21 AM8/17/11
to சந்தவசந்தம்
இதுஒரு கதையுடன் கூடிய கவிதை . இதில் உள்ள குறைகளைப்
பொறுத்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது நீண்ட கவிதை என்பதால்
தொடராக தருகிறேன். பிழைகள் நிறைய இருந்தால் கூறுங்கள்
திருத்திக்கொள்வேன் (கவிதையே பிழை என்றால் நிறுத்திக்கொள்வேன்)

வாழ்க்கைப்பயணம்


1. மயக்கும் மாலை

வான மகளித ழானமுகில் தனை
வண்ணச் சிவப்பினில் சாயமிட
தேனு மினியபொன் மாலையிளங் குளிர்
தென்றலலைந் தென்னை தேடிவர
ஞானமறை ஓதும் கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் நேர் நடந்தே யந்தப்
பூமிதனில் வழி கண்டிருந்தேன்

தேனை உண்ண மலர்மீதிருந்த வண்டு
தென்றல்தொடத் துள்ளியோடிவர
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேர்க்கும் பறவைகள் ஓசையிட
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சும்அதனை வளர்த்ததென
வான மெங்குமிசை பாடும் பறவைகள்
வட்டமடித் தென்னைச் சுற்றிவர

வீசி அடித்திட்டும் காற்றில் மரத்தினில்
விழ்ந்து குதித்தது சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன தாமரைகள்
பேசிச் சிரித்திடும் பெண்குலத்தோர் கரை
பககமிருந் தள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் எந்தனோர் பாதைகண்டு

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்தமுகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணினொளி சிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட அந்தமூத்தவளும்
எண்ணி யேதுவென நான்நினைத்தே அயல்
ஏகமுதல் கணீரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை நின்றாள்

எங்கு சென்றாயடி சின்னவளே இங்கு
என்னைவிட்டு என்று கோபமிட்டார்
தங்கமகள் அவர் இரண்டு உருவமும
தன்மைகண்டு நானும் எண்ணிநின்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தெழுந்து நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழிசிந்தும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலபல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்துகை
ஊன்றும்தடி கொண்டு நேர் குனிந்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையாமொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் பார்வைகொண்டேன்
அந்த சிறுமகள் புன்னகைத்தே யெனைச்
`ஆழவிழிகொண்டு ஈது சொன்னாள்

(தொடரும்)

> > > > > அதைமூடும் பொழு திருள்கூடும்...
>
> read more »

Siva Siva

unread,
Aug 17, 2011, 9:18:33 AM8/17/11
to santhav...@googlegroups.com
/ நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே

      நல்லோரைச் சுற்றிடுவேன்
வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
     கோவிலையே சுற்றுவேன் /

நல்ல கருத்து.
இச்சுற்றுகள் நன்மை பயக்கும்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/8/17 kirikasan <kanaga...@hotmail.com>



--

kirikasan

unread,
Aug 18, 2011, 3:52:53 AM8/18/11
to சந்தவசந்தம்

வாழ்க்கைப் பயணம்


2. இளமை மயக்கம்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவே இந்த வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை வந்ததுபொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னையவள் இனி ஒரடிகூட
எடுத்துநடந்திடும் ஆற்றல் கெட்டாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்று மயங்குகிறேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ”
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்ணெனும் நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகில்
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்று தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றிவளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிட பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்து - அந்த
நீலவிண்ணின் மதிதங்கையினை
உற்ற வழிஒன்று தோன்றியதேயென
ஓர்பயமில்லையென் றாற்றுவித்தேன்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொல்ல
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இந்த
ஏழை பெரிதும் உவகை கொண்டேன்

கண்ணை விழித்தனள்அச்சம்கொண்டு அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவென கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தவன் புன்னகைத்தான்
அண்ணா நீங்கள் கூடவந்திடுவீரென
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்வதென அவள்
கேட்கமனம் கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைய
பாடிக்களித்திட எண்ணியவனொரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

(அவன் பாடுகிறான்)
ஆத்தினிலேவெள்ளம் வந்து அலையடிக்குது
அதிலிரண்டு கயல்புரண்டு துடிதுடிக்குது
சேத்தினிலே பூமலர்ந்து சிரித்துநிற்குது
செங்கனியின் வண்ணமுடன் செழுமைகாணுது
நேத்துவந்த மாமனுக்கு நெஞ்சு குளிருது
நிலவுவந்து நேரில் நின்று ஒளியைவீசுது
சாத்திரங்கள் பாத்துபாத்து சரியென்றானது
சாமிகூட பூவிழுத்தி சம்மதிக்குது

வாத்தியாரு பெத்தபொண்ணு சட்டம்பேசுது
வந்துநில்லு பக்க மென்றால் வாதம்பண்ணுது
கூத்தடிச்சுச் சின்னதோட கூடியாடுது
குழந்தையாக அழுதுகொஞ்சம் கோவம் கொள்ளுது
பாத்துப் பாத்து எத்தனைநாள் காவல் காப்பது
பழமிருக்கு பக்கத்திலே பொழுது மாளுது
காத்தடிக்கும் வேளையிலே தூற்றத்தோணுது
காட்டுமலர் தோற்றத்திலே கண்ணைஇழுக்குது

முன்னிரவு குளிரடிச்சு மேனி நடுங்குது
மூச்சினிலேபூவின் வாசம் மோகம்கூட்டுது
பின்னிலவு தூக்கம்விட்டு என்னைஎழுப்புது
பேசவென்று எவருமில்லை பாவம் விதியிது
கன்னி யவள் நெஞ்சம் காணும் காதலானது
காணும் பச்சை இலைமறைத்த காயென்றானது
சின்னப்பொண்ணு கண்ணசைவில் என்னசொல்லுது
சேர்ந்திடலாம் என்பதனை தின்று விழுங்குது

******************

பாடியவன் கடைக் கண்ணெடுத்துஅவள்
பாவைதனை இடை நோக்குவதும்
ஓடிய மாட்டினை ஓங்கிவிரட்டியே
ஒன்றுஇல்லையென காட்டுவதும்
தேடியே காதலை திங்கள் முகவிழி
தேன் மலராளிடம் காத்துநிற்க
ஆடிய வண்டியின் ஆட்டத்திலேஅவள்
அல்லியென நடமாடிநின்றாள்

மெல்ல அவள்மனம் மாறியதோ இந்தப்
மாயமனம் தன்னை நான் அறியேன்
கல்லும் கரைத்திடும் கட்டழகைகொண்ட
காளை அவன் விழிமோதிடவே
வல்லமன தனல்நெய்யெனவே விட்டு
வாசமெழ வழிந்தோடக் கண்டேன்
நல்லதுவோ இல்லை அல்லதுவோஅதை
நானோ புரிந்துகொள்ளாது நின்றேன்.

மேலைத் திசையினில் மேகம்கறுத்திட
மாலைக் கிழவனும் ஆடிவந்து
வாலைக்குமரி யென்றாடும் சுழல்புவி
வண்ணமகளிடம் மாயமிட்டு
ஓலைபிரித்தொரு மந்திரம்சொல்லிட
ஓடிக் கருத்தது விண்ணரங்கு
ஆலைமுடிந்தொரு சங்குகள் கூவிட
ஆடிப்பறந்தன வான்குருவி

தென்றலணைந்தங்கு வீசியதுஅது
தேகம் வருடியேஓடியது
நின்றமரங்களின் மீதுஅதுபட
நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தன காண்
குன்றதன் பின்னே குடியிருந்த மதி
கோலமிட்டு முகம் பொன்குழைத்து
நன்றெனப்பூசி நளினமிட்டே விண்ணில்
நானிலம் காண நடைநடந்தாள்

உள்ளம் மயங்கிடும் வேளையது மேனி
உணர்வு வென்றிடும் நேரமது
கள்ளைஉணவென்று உண்டதென இரு
கண்ணும் மயங்கிடும் மாலையது
தெள்ளெனும் நீரினில் கல்லுவிழுந்தன்ன
கன்னியின் உள்ளம் கலங்கியதோ
மெள்ள அவனதைக் கண்டுகொள்ள அந்த
மேடையின் நாடகம் கண்டுநின்றேன்

(தொடரும்)

On Aug 17, 2:18 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> / நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே
>       நல்லோரைச் சுற்றிடுவேன்
> வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
>      கோவிலையே சுற்றுவேன் /
>
> நல்ல கருத்து.
> இச்சுற்றுகள் நன்மை பயக்கும்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2011/8/17 kirikasan <kanagaling...@hotmail.com>

> --http://nayanmars.netne.net/

kirikasan

unread,
Aug 23, 2011, 3:44:47 AM8/23/11
to சந்தவசந்தம்
தொடர் கவிதைக்கு இடையி இது ஒன்று

என்ன? என்ன? என்ன?

நேர்மையென்ப தென்ன என்ன, நீதி என்பதென்னடா?
போர்புரிந்து மென்ன என்ன, போர்விதிகள் எங்கடா
பாரிழைத்த தென்ன என்ன, பார்த்து நீதி கேளடா!
ஊரழிக்கும் மன்னன் என்ன, எமன் விடுத்த தூதனா?

கோலமிட்டு மென்ன என்ன, கோவில்கட்டி என்னடா?
ஆலமிட்ட கண்ட என்ன, அசுரனை அழிப்பரா?
காலமிட்ட தென்ன என்ன? கன்னியர்க்கு மேனிதான்
கால்மிதித்துக் கொல்லு என்று காலதேவன் சட்டமா?

காலைப்பூ மலர்ந்த தென்ன, காய் வெயிலும் கொல்லவா?
பாலையில் விழுந்த நீரைப் போலஈழம் செல்லவா?
சேலையை இழந்த பெண்கள் சீரழித்தல் கண்டுமா?
மூலையிற் படுத்துறங்க மேனிஎன்ன கல்லோடா?

வீறுகொண் டெழுந்து நில்லு வெல்லவென்று துள்ளடா
ஆறுபோ லெழுந்துஓடு அன்னைபூமி வெல்லடா
நீறுகொள்ள மேனிகொன்று நித்தம்தீ கொளுத்துவோர்
கூறுபோட முன்பிடித்துக் கூட்டில்தள்ளிப் பூட்டடா

வாழையுங் கனிந்துவந்து வாயில் சேருமென்றடா
நாளைஎண்ணி நீஇருப்ப தாகுமாமோ கூறடா
வேளையில் பழுக்குமென்று விட்டுகாத் திருக்கவே
ஏழைஅஞ் சுகம் பறந்த இலவம் பஞ்சும் எண்ணடா

பொன்னிழைத்த தட்டிலில்நாடும் புன்னகைத்து மெல்லவே
நன்மைசெய்து நாமளித்தோம் நாடுஉங்க ளானதே
என்றுருக்க உள்ளங்கொண்டு ஈழமீவ ரென்பதை
இன்னும்நம்பி அண்மைநாட்டை எண்ணிக்காத் திருப்பியோ

முன்னெடுத்த கால்களோடு மெல்லஉண்மை கண்டுநீ
தன்நிகர்த்த தாருமற்ற தன்மைகொண்டாய் நம்புநீ
உன்னெடுப்பில் நீதகர்த்த போர்களங்கள் எத்தனை?
நின்னைநீயே நம்பு வாழ்வில் நீதிஒன்று காணடா !


அன்புடன் கிரிகாசன்

> நின்றமரங்களின்...
>
> read more »

kirikasan

unread,
Aug 23, 2011, 3:52:51 AM8/23/11
to சந்தவசந்தம்
/இலவம் பஞ்சும்/ என்பதை இப்படிமாற்றலாம் என எண்ணுகிறேன்

வேளையில் பழுக்குமென்று விட்டுகாத் திருக்கவே

ஏழைஅஞ் சுகம் பறந்த இலவுபஞ்சை எண்ணடா

அல்லது - இலகுபஞ்சை எண்ணடா - என்று
தவறை மன்னிக்க!

அன்புடன் கிரிகாசன்

> > வாத்தியாரு...
>
> read more »

kirikasan

unread,
Aug 23, 2011, 6:28:49 PM8/23/11
to சந்தவசந்தம்
என் அன்னை, என்தேசம், என்கனவு

பகுதி 1

என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்

வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்

மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க

நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்

பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதென்றேன்

நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் சிங்கமகன்
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவனாம்

எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்

பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்

என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்

கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

(பகுதி 2 பார்க்க)

> > > ஆத்தினிலேவெள்ளம்...
>
> read more »

kirikasan

unread,
Aug 23, 2011, 6:32:28 PM8/23/11
to சந்தவசந்தம்
என் அன்னை, என்தேசம், என்கனவு

பகுதி 2

அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு .

எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன

பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து

பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்

அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து

குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா

ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்

கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்

நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு

இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு

துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு

மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்

--அன்புடன் கிரிகாசன்

> > > > இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா...
>
> read more »

kirikasan

unread,
Aug 24, 2011, 7:16:17 PM8/24/11
to சந்தவசந்தம்

விடியலைத் தேடிநட..!

படபட தடதட எனவரும் இடர்களும்
விடுபட உயிர்பெறவே
கடகட குடுகுடு எனநட தடைகளும்
பொடிபட உடைபடவே
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவர்
பகைவரும் எமைவிடவே
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்
இணைந்திடு ஒருபடவே

தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு
மடைவெள்ளம் உடைபடவே
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு
எதிரிகள் விடைபெறவே
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்
உளவிரி வான்அருகே
மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்
கொடுமைகள் தறிகெடவே

தடுதடு வருமவர் தமிழரை நெருங்கிட
துடிதுடி உனதுடலே
எடுஎடு கொடுகொடு எதிரிகள்நடைபிழன்
றுடைபட விழகுழியே
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்
ஒருபய னெதுவில்லையே
அடியெனும் ஒருமொழி அறிவரே அதைவிட
எதுவித புரிவில்லையே

படுபடு கிடகிட எனவுடல் சரிந்திட
அயர்வுடன் உறங்கிடவே
துடிதுடி என அவன் கொலையிட உறவுகள்
கொடுமையில் வதைபடுமே
விடிவிடி எனவரும் விடியலும் உனதிரு
விழிகளில் தெரிந்திடுமே
அதுவரை விடுவிழி திறஒரு இரவதும்
இலையுன தருகினிலே

கடகட எனஎழு கனதுள செயவென
திடமுடன் எடுநடையே
இட இட முடிஉன திருகர மிடுசெயல்
முடிவுற எமதுயர்வே
சட சடவெனப்பகை சுடுமொரு கொதியுறும்
அனல்பட நீறெனவே
மடமட எனஎரி மறமுடன் தருமமும்
பெருநெருப் பெனஎழவே

சடசட எனஅடி சிறகொடு பறவைகள்
திரிவது உயர்வினிலே
திடமொடு உனதரு கடமையும் குறிதனும்
நிலகொளும் மனதுயர்வே
கடகட எனவருங் கடமைகள் தனை முடி
பெறுவது தமிழீழமே
அதுவரை உனதரும் இதயமும் துடிகொள்ளு
விடுதலை கொடுஎனவே !

> > நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று...
>
> read more »

Siva Siva

unread,
Aug 24, 2011, 9:11:38 PM8/24/11
to santhav...@googlegroups.com
ஒலிநயம் உள்ள பாடல். அடியெங்கும் குறில் விரவி வர, ஒரு சில இடங்களில் அடியின் இடையில் நெடில் வருவது ஓசையைச் சற்று மாற்றுகிறது.


2011/8/24 kirikasan <kanaga...@hotmail.com>

kirikasan

unread,
Aug 25, 2011, 7:29:31 AM8/25/11
to சந்தவசந்தம்
மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு! திருத்தியுள்ளேன். இப்போது

விடியலைதேடிநட..!

படபட தடதட எனவரும் இடர்களும்
விடுபட உயிர்பெறவே
கடகட குடுகுடு எனநட தடைகளும்
பொடிபட உடைபடவே
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவர்
பகைவரும் எமைவிடவே
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்
இணைந்திடு ஒருபடவே

கடகட எனஎழு கனதுள செயவென


திடமுடன் எடுநடையே
இட இட முடிஉன திருகர மிடுசெயல்
முடிவுற எமதுயர்வே

சட சடவெனப்பகை தொடவரில் கொதியுறும்
அனலென எமதிடையே


மடமட எனஎரி மறமுடன் தருமமும்
பெருநெருப் பெனஎழவே

தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு


மடைவெள்ளம் உடைபடவே
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு
எதிரிகள் விடைபெறவே
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்

உளவிரி விண்அருகே


மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்
கொடுமைகள் தறிகெடவே

தடுதடு வருமவர் தமிழரை நெருங்கிட
துடிதுடி உனதுடலே
எடுஎடு கொடுகொடு எதிரிகள்நடைபிழன்
றுடைபட விழகுழியே
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்
ஒருபய னெதுவில்லையே

அடிதர வருமவர் அதைவிட உடனிடு
அதைவிட ஒருசெயலே

படுபடு கிடகிட எனவுடல் சரிந்திட
அயர்வுடன் உறங்கிடவே
துடிதுடி என அவன் கொலையிட உறவுகள்
கொடுமையில் வதைபடுமே
விடிவிடி எனவரும் விடியலும் உனதிரு
விழிகளில் தெரிந்திடுமே
அதுவரை விடுவிழி திறஒரு இரவதும்
இலையுன தருகினிலே

சடசட எனஅடி சிறகொடு பறவைகள்


திரிவது உயர்வினிலே
திடமொடு உனதரு கடமையும் குறிதனும்
நிலகொளும் மனதுயர்வே
கடகட எனவருங் கடமைகள் தனை முடி

பெறுவது தமிழரசே


அதுவரை உனதரும் இதயமும் துடிகொள்ளு
விடுதலை கொடுஎனவே

On Aug 25, 2:11 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> ஒலிநயம் உள்ள பாடல். அடியெங்கும் குறில் விரவி வர, ஒரு சில இடங்களில் அடியின்
> இடையில் நெடில் வருவது ஓசையைச் சற்று மாற்றுகிறது.
>

> 2011/8/24 kirikasan <kanagaling...@hotmail.com>

kirikasan

unread,
Aug 27, 2011, 4:09:44 AM8/27/11
to சந்தவசந்தம்
(ஏழையின் புலம்பல் தவறெனில் நீக்குக)

நீதி கேட்டல் தவறா?

கத்தி எடுத்தவன் வெட்டவந்தால் - நாமும்
கண்கள்மூடித் தவம் செய்வதுவோ
வித்தை யேதுமுண்டோ வெட்டுபவன்- தன்னை
வேடிக்கை செய்துவிரட்ட லுண்டோ
சொத்துசுகம் யாவும் விட்டிடலாம் - ஆயின்
சொந்த உயிரையும் விட்டிடவோ
செத்துமடிவது இன்பமென்று - அவன்
தெய்வமென்று கையும் கும்பிடவோ

சத்தியம் தர்மமும் கொண்டவர்கள் - குரு
ஷேத்திரம் போர்க்கள பாண்டவ்ர்கள்
நித்திலம் எங்கிலும் பாரதப்போர் - கதை
நீதியென்று ஏற்றுக் கொண்டதன்றோ
கத்தியே நீதியும் கேட்டவளாம் - அந்தக்
காரிகை திரௌபதி ஆடையினை
ஒத்தவ கையினில் நீக்கிவிட - எஙகள்
ஊரிலெத் தனை துச் சாதனன்கள்

சித்தம் தவறிய ரத்தவெறியர் முன்- தாம்
சத்தியம் காந்தீயம் பேசுவதோ
கத்தும் விலங்குக்கு கற்பூரவாசனை
காட்டிவைத்தால் உதை விட்டிடுமோ
அத்தனைபேரும் அருச்சுனாய் எண்ணி
அம்பினை கீழேயும் வைத்துண்டொ
புத்தரும் யுத்தம்பின் ஞானம்கண்டார் இன்று
பேய்களன்றோ எமைச்சுற்றி நின்றார்

நாடுமில்லை ஒரு வீடுமில்லை
ஒரு நாலடி ஐந்தடி மண்ணுமில்லை
காடுதானே உங்கள் சொந்தம் என்றார் - அந்தக்
கௌரவர்கள் ஆகா எத்தனைமேல்
வீடுமில்லை அந்தக்காடுமில்லை பெரு
வான்வெளியில் தனி ஆவியென
ஒடிப்பற விளையாடுஎன்று எமை
ஓங்கிவெட்டி இவர் கொல்லுகிறார்

வைத்தியம் செய்யநோய் முற்றிவிட்டால் அதை
வெட்டிப்பிரிப்பது குற்றமில்லை
சத்திரசிகிச்சை செய்வதுதான் உயிர்
தப்புமென்றால் அது பாவமில்லை
பெத்தவள் உயிரை காப்பதுவா இல்லை
பிள்ளை உயிர்தனை காப்பதுவா
வைத்தியர் கூட தருணமதில் ஒரு
வன்மை மனம்கொள்வ தாகிடுவார்

கொத்தவரும் பாம்பைகொல்லுவதுபாவம்
கொண்ட தடியினை போடுஎன்றார்
சுத்தமாகக் கையில் ஏதுமில்லை இன்று
கொல்பவர் கூத்தாடிக் கொல்லுகிறார்
சத்தியம் பேசிய நாட்டிலெல்லாம் இன்று
சின்னத்திரை படம் ஓடுகிறார்
கொத்திய வெட்டிய கோலமெல்லாம் படம்
கொண்டு வெள்ளித்திரை காட்டுகிறரர்

இப்போதேவை வெறும் காட்சியல்ல இந்த
ஏழைகளுக்கெனத் தீர்வுஒன்று
தப்போ சரிதானோ விட்டுவிடு இன்று
தர்மம் அதை துயில் விட்டெழுப்பு
எப்போ நடுவினில் வந்துநின்று எமை
வெட்டுவர் கையில் விலங்கையிட
தொப்பெனவோர் திரைநாயகனாய் ஒரு
தேசம் துணிந்து குதித்திடுமோ

Reply all
Reply to author
Forward
0 new messages