திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம்

484 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 26, 2008, 12:34:48 PM4/26/08
to santhavasantham
சித்திரைச் சதயத்தன்று திருநாவுக்கரசர் குருபூஜை. (இந்த ஆண்டு 30-4-2008).

அதை ஒட்டிச் சில பாடல்கள்.

2008-04-24
திருநாவுக்கரசர் துதி
--------------------------
1)
தூற்றும் புறமதத்தர் சோர்வ‌டையு மா(று)அன்று
நீற்றறையில் நின்மலனை நெக்குருகிப் - போற்றிஉய்ந்த‌
சாவுக்கஞ் சாதந‌ம் நாவுக் க‌ர‌ச‌ரைப்
பாவுக்குள் வைத்தேன் ப‌ணிந்து.

2)
அஞ்செழுத் தோதி அரன்இன் அருளாலே
ந‌ஞ்சுசேர் பாற்சோறும் ந‌ல்லமுதாய் - உஞ்ச‌
திருநா வினுக்க‌ரைய‌ர் செப்பியதே வாரம்
ஒருநாளும் த‌ப்பா(து) உரை.

3)
கொல்ல வரும்யானை கூட மனம்மாறிச்
செல்லும்தே வாரம் செவிமடுத்(து) - எல்லை
இலாப்புகழார் அப்பர் இருந்தமிழ் பாட‌
நிலாவினைகள் நெஞ்சே நினை.

4)
கல்லினைக் கட்டிக் கடலினில் வீசினும்
சொல்லுமெழுத்(து) அஞ்சே துணையாகி - நல்ல
புணையாகக் கல்மேல் கரைசேர் புனிதர்
இணையடியே எம்துணை இன்று.

5)
பாம்பால் உயிர்நீத்த பத்தர் மகன்எழத்
தீம்பால் நிகர்க்கிற தேவாரம் - தாம்பாடி
வாழ்வித்த அப்பர் மலரடியைப் போற்றவரும்
தாழ்வின்றி என்றுமின்பம் தான்.

6)
உழவாரம் தாங்கி உளபதிகள் எல்லாம்
அழகாக்கி அன்பின் உருவாய்க் - குழைஓர்
செவியினில் காட்டும் சிவன்புகழ்சொல் அப்பர்
கவின்அடிகள் என்றுமெம் காப்பு.

7)
பணிவே உருவாய்ப், பரமனுக்குச் செய்யும்
பணியே நினைவாய்,நம் பந்தப் - பிணியினைப்
போக்கும் தமிழைப் புனைந்தஅப்பர் காட்டிய
போக்கில் மனமேநீ போ.

8)
இன்றமிழ் பாடி இரும்கதவின் தாழினை
அன்று விலக்கிய அப்பரை - என்றும்
மனத்தினில் வைத்து மகிழ்ந்தடி போற்ற
எனக்கோர் இடர்உண்டோ இங்கு.

9)
உடல்தேய்ந்து போனாலும் உள்ள உறுதி
விடல்இன்றி உந்திஅரன் வெற்பை - அடையச்செல்
அப்பரை ஐயாற்றில் அக்கயிலை கண்டவரை
எப்பொழுதும் என்நெஞ்சே எண்ணு.

10)
தமிழ்வாழச், சைவ சமயம் தழைக்கக்,
குமிழ்போல் கொடுவினை மாய, - அமிழ்தினும்
தித்திக்கும் தேவாரம் செப்பிய அப்பர்சொல்
முத்திக்குச் சேர்க்கும் மொழி.

அன்புட‌ன்,
வி. சுப்பிர‌ம‌ணிய‌ன்


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
Apr 26, 2008, 10:48:17 PM4/26/08
to santhav...@googlegroups.com


On 4/26/08, Siva Siva <naya...@gmail.com> wrote:
சித்திரைச் சதயத்தன்று திருநாவுக்கரசர் குருபூஜை. (இந்த ஆண்டு
30-4-2008).
அப்பரைப்பற்றிய அருமையான பதிகம்.
 
திருநா வினுக்க‌ரைய‌ர் செப்பியதே வாரம்
ஒருநாளும் த‌ப்பா(து) உரை.
என்ற வரிகளைப் படிக்கிறபோது திருநாவுக்கு அரசியர் செப்பியதே, வாரம்
ஒருநாளும் தப்பாது உரை என்று படித்தேன். அப்படிப்படித்தாலும் அப்பர் சொன்னதையே வாரம் ஒருநாளும் தப்பாமல்(இதையே ஒருநாளும் வாரம் தப்பாமல் என்று படித்து வாரம் என்பதற்கு அன்பு என்ற பொருளைக் கொள்ளலாம்)படி என்ற பொருளிலும் அருமையாக அமைந்திருக்கிறது.
 
குமிழ்போல் கொடுவினை என்ற உவமையைத் தெளிவாக்க முடியுமா?
 
இலந்தை
 

Siva Siva

unread,
Apr 26, 2008, 11:11:17 PM4/26/08
to santhav...@googlegroups.com
ஆழ்ந்து படித்து, அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.
 

"குமிழ்போல் கொடுவினை மாய - நீர்க்குமிழியைப் போல, ஓதுபவரது கொடிய வினைகள் எல்லாம் உடனே அழிய" என்ற கருத்தில் எழுதினேன்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/4/26 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>:

kavimamani

unread,
Apr 26, 2008, 11:30:16 PM4/26/08
to Santhavasantham
குமிழ் , குமிழி இரண்டும் ஒன்றா?

குமிழ் என்பது knob குமிழி என்பது bubble
குமிழ் என்பது நீர்க்குமிழி என்னும் பொருளில் எங்கேனும்
பயன்படுத்தப்பட்டுள்ளதா?
இலந்தை

On Apr 27, 8:11 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> ஆழ்ந்து படித்து, அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.
>
> "குமிழ்போல் கொடுவினை மாய - நீர்க்குமிழியைப் போல, ஓதுபவரது கொடிய வினைகள்
> எல்லாம் உடனே அழிய" என்ற கருத்தில் எழுதினேன்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/4/26 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>:
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Apr 26, 2008, 11:39:11 PM4/26/08
to santhav...@googlegroups.com
குமிழ், குமிழி - இரண்டும் ஒரே சொல்லின் இருவடிவங்கள் என எண்ணுகிறேன். தமிழ் அகராதியில்:
 
 
குமிழி¹ kumiḻi , n. < குமிழ்-. 1. Bubble; நீர்முதலியவற்றிலெழுங் குமிழி. குமிழிவிட் டுமிழ் குருதி (சீவக. 2239). 2. Boss; knob, as of wooden sandals; பாதக்குறட்டின் குமிழ். (J.) 3. Spring, as the source of a stream; ஊற்றுவாய். கிண்ண கத்தில் குமிழிக்கீழே சாவிபோமாபோலே (ஈடு, 5, 3, 7).
 
 
குமிழ்² kumiḻ  n. < குமிழ்-. 1. Water bubble; நீர்க்குமிழி. (பிங்.) 2. [M. kumiḻ.] Knob, as of wooden sandals; stud; pommel; anything round or convex, as the head of a nail; உருண்டு திரண்ட வடிவம். (W.) 3. Hump of an ox; எருத்தின் திமில். (W.) 4. Swelling in the sole of the foot; உள்ளங்கால் வீக்கம். (W.) 5. [M. kumiḻ.] Small Cashmere tree. See நிலக்குமிழ். 6. [T. gumudu.] Coomb teak. See பெருங்குமிழ். (தொல். எழுத். 386.) 7. Mucilaginous shrub that yields water, Gruelina parviflora; நீரைவடிக்கும் செடிவகை. 8. Kaus, a large and coarse grass. See நாணல். (மலை.)
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008/4/26 kavimamani <ELAN...@gmail.com>:

Hari Krishnan

unread,
Apr 27, 2008, 12:03:21 AM4/27/08
to santhav...@googlegroups.com


2008/4/27 kavimamani <ELAN...@gmail.com>:

குமிழ் , குமிழி இரண்டும் ஒன்றா?

குமிழ் என்பது  knob      குமிழி என்பது bubble
குமிழ் என்பது நீர்க்குமிழி என்னும் பொருளில் எங்கேனும்
பயன்படுத்தப்பட்டுள்ளதா?
இலந்தை

குமிழ் என்று கம்பன் பயன்படுத்தியிருக்கும் இடங்கள், குமிழ்முலை, குமிழ்வாய் என்றுதான் தென்படுகின்றன.  இரணியன் வதைப் படலத்தில்

நீரிடைக் குமிழியூட்டும், நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்

என்ற நரசிம்மத்தின் போர் நினைவுக்கு வருகிறது.  'மீதெழும் மொக்குள் அன்ன யாக்கை' என்ற கும்பகர்ணன் பேச்சும் நினைவுக்கு வருகிறது.  மொக்குள் என்ற சொல்லும் இதற்கு இணையான சொல்.  குமிழ், குமிழி இரண்டையும் தெளிவான வேறுபாட்டுடன்தான் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான். 

ஆயினும் குமிழ்த்தல் என்ற verbified form இந்தச் சொல்லுக்கு உண்டு.  அப்போது குமிழி, குமிழ் என்று பயன்படும்.

ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனைத்
தூசி வந்து அண்ணல்தன்னைப் போக்கு அறவளைந்து சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலும், விண்ணோர் ஆக்கை
கூசின, பொடியால்; எங்கும் குமிழ்த்தன, வியோம கூடம்

மூலபல வதைப் படலத்தில் இராமனுடைய போர் வருணனை. 

ஆயினும் குமிழ் என்று குமிழியைக் குறிப்பதும் ஏற்புடையது என்றுதான் தோன்றுகிறது.



--
அன்புடன்,
ஹரிகி.

Kaviyogi Vedham

unread,
Apr 27, 2008, 1:50:51 AM4/27/08
to santhav...@googlegroups.com


--
yogiyar
அட்டகாசம்!அட்டகாசம் சிவசிவா!
 என்ன ஓர் எளிமை!நயம்!,அவ்வளவும் சுவைத் தேன்!
 வாழ்க சிவா!
யோகியார்
----- Original Message -----
From: Siva Siva
Sent: Saturday, April 26, 2008 10:04 PM
Subject: திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம்

சித்திரைச் சதயத்தன்று திருநாவுக்கரசர் குருபூஜை. (இந்த ஆண்டு 30-4-2008).

அதை ஒட்டிச் சில பாடல்கள்.

2008-04-24
திருநாவுக்கரசர் துதி
--------------------------
1)
தூற்றும் புறமதத்தர் சோர்வ‌டையு மா(று)அன்று
நீற்றறையில் நின்மலனை நெக்குருகிப் - போற்றிஉய்ந்த‌
சாவுக்கஞ் சாதந‌ம் நாவுக் க‌ர‌ச‌ரைப்
பாவுக்குள் வைத்தேன் ப‌ணிந்து.

2)

veNbA virumbi

unread,
Apr 27, 2008, 6:40:41 PM4/27/08
to Santhavasantham
********************
(அறுசீர் விருத்தம்)

உருநாரி ஒருபாலும் இருமிடறு[ம்] மூவிழியும்
...உடையோற்(கு) ஓவா
மருநாவின் சுவையாருந் தமிழானற் றொடைசாத்தி
...மகிழ்ந்த சீலன்
திருநாவுக் கரசரிசை அறிவுறுத்தும் ஈரைந்து
...திருவெண் பாவை
ஒருநாமம் இருமுறையாய் வருபேர்கொள் அடியார்நன்(கு)
...உரைத்தார் கேளீர்.

உரு=அழகு; இருமிடறு=கறுத்த கண்டம்; ஓவா மரு நா=நீங்காத மணம், பொலிவு;
இசை=புகழ்

ஒருநாமம் இருமுறையாய் வருபேர்=சிவ சிவா
********************
> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Apr 19, 2009, 9:15:04 PM4/19/09
to santhavasantham

சித்திரைச் சதயத்தன்று திருநாவுக்கரசர் குருபூஜை. (இந்த ஆண்டு 20-4-2009).

திருநாவுக்கரசர் வணக்கம்
----------------------------------
1) --- (
அறுசீர் விருத்தம் - காய் காய் தேமா - அரையடி வாய்பாடு) ---
உமையவளை ஓர்கூறு வைத்த
..
உத்தமனே நாவரையர் என்ற,
நமதுதமிழ் நலிவின்றி வாழ,
..
நானிலத்தில் சைவநெறி ஓங்கக்,
குமரிமுதல் கயிலைவரை எங்கும்
..
குறைவின்றித் திருத்தொண்டு செய்த,
தமக்குநிகர் இல்லாத அன்பர்
..
தாளிணையை நாம்வாழ்த்து வோமே.

2) --- (
அறுசீர் விருத்தம் - காய் மா தேமா - அரையடி வாய்பாடு) ---
திலகவதி யாரின் தம்பி
..
திருவதிகை தன்னில் அன்று
மலைமகள்கோன் தாள்வ ணங்கி
..
வலிநீங்கி, நாடும் உய்யத்
தலம்பலவும் சென்று போற்றித்
..
தமிழ்பாடித் தொண்டு செய்த
நலமிகுநா வரசர் தம்மை
..
நாம்பணிந்து போற்று வோமே.

3) --- (
நாலடித் தரவுகொச்சகக் கலிப்பா ) ---
திண்ணார்நெஞ் சமணரொளி பழையாறைத் திருக்கோயில்
கண்ணாரக் கண்டென்றன் கையாரத் தொழும்வரைநான்
உண்ணேன்என் றுள்ளத்தில் உறுதிகொண்டு நோன்பிருந்த
பண்ணார்செந் தமிழ்பன்னும் நாவரசர் பதம்போற்றி.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/4/26 Siva Siva <naya...@gmail.com>

veNbA virumbi

unread,
Apr 20, 2009, 4:20:55 PM4/20/09
to சந்தவசந்தம்
(கட்டளைக்கலித்துறை)

சாவுக் கரசனைக் காலால் உதைத்தன்று தள்ளியமா
தேவுக் கிரசநன் கேய்ந்த தமிழாரஞ் செய்தளித்த
பாவுக் கரசரம் மூவருள் ஓர்வரன் பத்திமலி
நாவுக் கரசரின் தாள்பணி வாமிந்நன் னாளினிலே.
********************

> 2008/4/26 Siva Siva <nayanm...@gmail.com>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
May 8, 2010, 2:40:54 PM5/8/10
to santhavasantham

திருநாவுக்கரசர் குருபூஜை - 2010 (May 7/8)
(
சித்திரைச் சதயம்)
----------------------------------------------------------
1) -- (
வஞ்சி விருத்தம்) --
இருள்நீங்க, இருளால் விளையும்
மருள்நீங்க, மதிசூ டிறைவன்
அருள்ஓங்க, மறவேல் மனமே
திருநாவுக் கரசர் கழலே.

2) -- (
நேரிசை வெண்பா) --
வினைக்கடலில் மூழ்க விரைகிறகல் நெஞ்சே
தினைத்தனையும் தேவாரம் செப்பு - கனக்கிற
கல்லும் மிதந்து கரையடையும் நாவரசர்
சொல்லும் அடியும் துணை.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/19 Siva Siva <naya...@gmail.com>



--
http://nayanmars.netne.net/

12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Apr 23, 2011, 12:27:47 AM4/23/11
to santhavasantham

அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/5/8 Siva Siva <naya...@gmail.com>

திருநாவுக்கரசர் குருபூஜை - 2010 (May 7/8)

Siva Siva

unread,
Apr 23, 2011, 9:20:29 PM4/23/11
to santhavasantham


2011/4/23 Siva Siva <naya...@gmail.com>

அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.


2)
கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
கண்டன் அருளால் கரையேறி னார்கழல்


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

3)
நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Apr 25, 2011, 7:11:18 AM4/25/11
to santhavasantham


2011/4/23 Siva Siva <naya...@gmail.com>


2011/4/23 Siva Siva <naya...@gmail.com>

அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.


2)
கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
கண்டன் அருளால் கரையேறி னார்கழல்


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

3)
நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி

உண்டென்றும் என்னுள்ளத் துள்.



4)
அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்
தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Lalitha & Suryanarayanan

unread,
Apr 25, 2011, 11:19:59 AM4/25/11
to santhav...@googlegroups.com
அப்பரைப் பாடுமும் அற்புதப் பாட்டெலாம்
இப்புவி காக்கும் இனிது.

சிவ.சூரியநாராயணன்.

Siva Siva

unread,
Apr 25, 2011, 9:58:03 PM4/25/11
to santhavasantham


2011/4/25 Siva Siva <naya...@gmail.com>



2011/4/23 Siva Siva <naya...@gmail.com>


2011/4/23 Siva Siva <naya...@gmail.com>

அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.


2)
கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
கண்டன் அருளால் கரையேறி னார்கழல்


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

3)
நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி

உண்டென்றும் என்னுள்ளத் துள்.



4)
அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்
தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


5)
காலையும் மாலையும் கண்ணுதலான் சீர்பரவி
மாலை அகற்றிடும் வண்டமிழ் - மாலைகள்
விண்டதிரு நாவுக் கரசரின் மென்மலர்த்தாள்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


 

veNbA virumbi

unread,
Apr 27, 2011, 3:17:14 AM4/27/11
to சந்தவசந்தம்
********************
(அறுசீர் விருத்தம்)

எப்போது மப்புமதிக் கீற்றுமணி போதுமணி
...இறையோன் மாண்பைத்
தப்பாது செப்பியவன் அருள்பெற்றக் கருணையலைத்
...தயையான் மாசில்
அப்பூதி பெற்றவிளம் பாலகனை உயிர்ப்பித்த
...அப்பர் சீரை
இப்பாட்டி லிட்டசிவ சிவாக்கவனல் லாசிகளுண்
...டென்று மன்னோ.
********************

On Apr 25, 4:11 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/4/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
>
>
> > 2011/4/23 Siva Siva <nayanm...@gmail.com>


>
> >> அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
> >> ---------------------------------
> >> 1)
> >> மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
> >> தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
> >> தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
> >> உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> > 2)
> > கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
> > எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
> > கண்டன் அருளால் கரையேறி னார்கழல்
>
> > உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> > 3)
> > நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
> > குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
> > மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி
>
> > உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> 4)
> அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
> இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்
> தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்
> உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> அன்புடன்,
>
> > வி. சுப்பிரமணியன்
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Apr 27, 2011, 7:22:52 AM4/27/11
to santhavasantham
பத்துப் பாடல்களும் தொகுப்பாக:

அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.

தண்டமிழ் - தண் தமிழ்;

2)

கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
கண்டன் அருளால் கரையேறி னார்கழல்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.

கார்க்கண்டன் - நீலகண்டன்;

3)
நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி
உண்டென்றும் என்னுள்ளத் துள்.

மண்டலம் - பலவகைப் புவனங்கள்; ('மண் தலம் = பூமி' என்றும் கொள்ளலாம்);
மண்டலத்தில் வாரா வழி - பிறவித்தொடரை அறுக்கும் வழி;

(அப்பர் தேவாரம் - 6.81.1 -
கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
...
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் ... )

4)
அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்
தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.

அப்பூதி - 63 நாயன்மார்களுள் ஒருவர்;

5)

காலையும் மாலையும் கண்ணுதலான் சீர்பரவி
மாலை அகற்றிடும் வண்டமிழ் - மாலைகள்
விண்டதிரு நாவுக் கரசரின் மென்மலர்த்தாள்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.

மாலை - 1) சாயங்காலம்; 2) அறியாமையை; 3) மலர்களால் தொடுத்த மாலை;
வண்டமிழ் - வண் தமிழ் - வளமான தமிழ் - தேவாரம்;
விண்ட - சொன்ன; (விள்ளுதல் - சொல்லுதல்);

6)
வஞ்சத்தை நெஞ்சத்தில் வைத்தவர்கள் அன்புடைமை
கிஞ்சித்தும் இல்லாத கேடரளி - நஞ்சத்தை
உண்டு சிவனருளால் உய்ந்தவப்பர் தாளிணை


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

அளி நஞ்சத்தை - அளித்த விஷத்தை; (அப்பர்க்கு உணவில் விஷத்தைக் கலந்து உண்பித்ததைச் சுட்டியது);
உய்ந்தவப்பர் - உய்ந்த அப்பர்;

7)
நெய்யாடும் நின்மலனார் நீலகண்டர் நீண்மலைமேல்
மையார்கண் மாதொடுறை கோலத்தை - ஐயாற்றில்
கண்டு களித்ததிரு நாவுக் கரசர்தாள்


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

நெய் ஆடுதல் - நெய்யால் அபிஷேகம் செய்யப்பெறுதல்;
நீண்மலை - நீள் மலை - புகழால் உயர்ந்த திருக்கயிலை மலை;


8)
வண்டுசேர் மாமயி லாடுதுறை வள்ளலை
அண்டர்தம் நாயகனை ஆலாலம் - உண்டுதிகழ்
கண்டனைக் காதலொடு கைதொழுத அப்பரடி


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

வண்டு சேர் மா மயிலாடுதுறை - வண்டுகள் சேரும் பொழில்சூழ்ந்த அழகிய மயிலாடுதுறை;

(
அப்பர் தேவாரம் - 5.39.3 -
"
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக் கும்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.")

9)
பண்டை வினைகள் பறைய, எமபடர்கள்
அண்டும் அவலநிலை அற்றுய்யத் - தொண்டர்க்குத்
தண்டமிழ்த்தேன் தந்தஉழ வாரப் படையாளி


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

பண்டைவினை - பழவினை;
பறைதல் - அழிதல்;
எமபடர் - எமதூதர்;
தண்டமிழ்த்தேன் - தண் தமிழ்த் தேன் -- குளிர்ந்த தேன் போன்ற தேவாரம்;
உழவாரப் படையாளி - உழவாரப் படையால் திருக்கோயில்களைத் தூய்மை செய்து தொண்டுபுரிந்த திருநாவுக்கரசர்; (உழவாரப்படை - உழவாரம் - புல் செதுக்கும் கருவி);

10)
உலகம் இருள்நீங்கி உய்யவருஞ் சைவம்
நிலவத் தமிழும் நிலவ - நிலவணிவான்
தொண்டிற் சிறந்த திலகவதி தம்பியின்தாள்


உண்டென்றும் என்னுள்ளத் துள்.

உய்யவருஞ் சைவம் - உய்ய அரும் சைவம்;


===================================

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/4/25 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 27, 2011, 6:06:58 PM4/27/11
to சந்தவசந்தம்

உண்டென்றும் என்னுள்ளத் துள்ளென்ற ஈற்றடியில்

கண்டோம் சிவசிவனார் காதலை - பண்(டு)உழ

வாரப் படையார் வளர்த்ததமிழ் சைவத்தின்

சாரத்தைத் தந்தார் பிழிந்து.


.. அனந்த்


>> மாலை அகற்றிடும் வண்டமிழ்  மாலைகள்    --  அழகு!

அனந்த்

2011/4/25 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Apr 28, 2011, 7:32:20 AM4/28/11
to santhav...@googlegroups.com
மணியான பாடல்!

2011/4/27 veNbA virumbi <mvms...@gmail.com>

Siva Siva

unread,
Apr 28, 2011, 7:35:35 AM4/28/11
to santhav...@googlegroups.com
அப்பர் குருபூஜையை ஒட்டி இவண் இட்ட பாடல்களைப் படித்தோர்க்கும் கருத்துச் சொல்லி வாழ்த்தியோர்க்கும் என் வணக்கம்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/4/27 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

veNbA virumbi

unread,
Apr 28, 2011, 10:09:11 AM4/28/11
to சந்தவசந்தம்

நன்றி.

சுப்பிர'மணி'க்கு எழுதிய பாட்டாயிற்றே!

On Apr 28, 6:32 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> மணியான பாடல்!
>

> 2011/4/27 veNbA virumbi <mvmsp1...@gmail.com>

veNbA virumbi

unread,
Apr 29, 2011, 12:03:38 AM4/29/11
to சந்தவசந்தம்
சிவசிவாவின் பாடல்களின் ஈற்றடியின் முதற்சீர் தோற்றுவித்த செய்யுளொன்று
வருமாறு; குறை பொறுக்கவும். நன்றி.
**********
**********

(நேரிசை வெண்பா)

உண்டென்று மெய்யைநனி ஓம்பலிலன் றோபேரின்
புண்டென்று சொல்வார் உயர்மெய்யைக் - கண்டென்று
மாறுவ ரோவெனினா மன்னவன் காட்டியசீர்
ஆறுதொடர்ந் தேகுவரேல் ஆய்ந்து.

*****

பதம் பிரித்து:

உண்டு, என்றும் மெய்யை நனி ஓம்பலில் அன்றோ பேரின்பு
உண்டு என்று சொல்வார், உயர் மெய்யைக் கண்டு
என்று மாறுவரோ எனில், நா மன்னவன் காட்டிய
சீர் ஆறு தொடர்ந்து ஏகுவரேல் ஆய்ந்து.

ஆறு=வழி
**********
**********

> 2011/4/25 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Apr 15, 2012, 2:22:41 PM4/15/12
to santhavasantham

2012-04-15
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - (2012-04-16)
---------------------------------------------
1) --- (
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
திருநீற்றைப் புனையடியார் தூரத்தே தென்படினும்
ஒருதீட்டென் றலப்பமணர் உளம்கலங்க அவரடைத்த
பெருநீற்ற றைக்குள்ளும் பிறைசூடி கழல்பாடி
உருமாற்றம் இன்றியுய்ந்தார் உரைதமிழ்கள் உறுதுணையே.

அலப்புதல் - பிதற்றுதல்;
பிறைசூடி கழல்பாடி - பிறைச்சந்திரனைச் சூடும் ஈசன் திருவடியைப் பாடி;
உரு மாற்றம் இன்றி உய்ந்தார் - ஏழு நாள்களுக்குமுன் நீற்றறையில் இட்டவாறே உடலில் எவ்வித மாறுபாடும் (ஊனமும்) இன்றி உய்ந்தவர் - திருநாவுக்கரசர்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/4/27 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Apr 16, 2012, 7:17:35 PM4/16/12
to santhavasantham

2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பதிதோறும் தொழுதங்குப் பைஞ்ஞீலி செல்லுங்கால்
மதியாறு புனைகின்ற மணிகண்டன் வழிநின்று
பொதிசோறு தந்தருளப் பெற்றவர்சொல் புகழ்மாலை
நிதிநாடி நிதம்பாடில் வினையோடி நிறைவாமே.

தலங்கள் தோறும் ஈசனைப் போற்றி, (வெயிலில் பசியோடு) திருநாவுக்கரசர் அங்குத் திருப்பைஞ்ஞீலிக்குத் போகும்பொழுது, நிலவையும் கங்கையையும் சூடும் நீலகண்டன் அவ்வழியில் (சோலையும் குளமும் அமைத்துக்கொண்டு) காத்திருந்து அவர்க்குப் பொதிசோறு தந்து பசித்தீர்த்தருளினான். அந்நாயனார் அருளிய தேவாரம் என்ற நிதியை நாடித் தினமும் பாடினால், நம் வினைகளெல்லாம் நீங்கி, நாம் நிறைவை அடையலாம்.

(
பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 305
காவுங் குளமும் முன்சமைத்துக் காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய் விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் தனிமன் னவர்க்கெதிரே நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்குந் தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/4/15 Siva Siva <naya...@gmail.com>

2012-04-15
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - (2012-04-16)
---------------------------------------------
1) --- (
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

Siva Siva

unread,
Apr 17, 2012, 9:29:16 AM4/17/12
to santhavasantham

3) --- (அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' அரையடி வாய்பாடு) ---
தங்கள் சமயம் தனைநீங்கிச்
..
சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப்
பொங்கு வஞ்ச நெஞ்சமணர்
..
புகட்டு நச்சுச் சோறதனைப்
பங்கம் இல்லா அமுதாக்கிப்
..
பாலித் தானைப் பதியெங்கும்
துங்கத் தமிழால் துதியப்பர்
..
துணைம லர்த்தாள் துணைநமக்கே.

துணை - இரண்டு; காப்பு;

(
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.70.5
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/4/16 Siva Siva <naya...@gmail.com>
2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

Siva Siva

unread,
Apr 21, 2014, 9:32:30 PM4/21/14
to santhavasantham

2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்

பதஞ்ஜலி த்₃ருʼக₃ஞ்ஜன மனஞ்ஜன மசஞ்சலபத₃ம்ʼ ஜனன ப₄ஞ்ஜன கரம் |

கத₃ம்ப₃ருசிமம்ப₃ரவஸம்ʼ பரமம்பு₃த₃ கத₃ம்ப₃ கவிட₃ம்ப₃க கக₃லம்

சித₃ம்பு₃தி₄ மணிம்ʼ பு₃த₄ ஹ்ருʼத₃ம்பு₃ஜ ரவிம்ʼ பர சித₃ம்ப₃ர நடம்ʼ ஹ்ருʼதி₃ ப₄ஜ"

1)
அணங்கவ ரிரந்திட இரங்கிய அரன்தரு கொடும்பிணி அகன்றிட அரும்
மணங்கம ழுமின்தமி ழொடும்புய மடிந்தவ ரெலும்பணி பவன்தன பதம்
வணங்கிய வுடன்துய ரொடுஞ்செடி பவங்கெட வரம்பெறு மருந்தவ ரமண்
கணங்கெட நிலம்பெரு நலம்பெற அரும்பணி புரிந்தவ ரிருங்கழ றொழும்
.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012-04-17 9:29 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

3) --- (அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' அரையடி வாய்பாடு) ---
தங்கள் சமயம் தனைநீங்கிச்
..
சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப்



Siva Siva

unread,
Apr 22, 2014, 11:19:40 AM4/22/14
to santhavasantham
With word separation.


2014-04-21 21:32 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்

.....


1)
அணங்கவ ரிரந்திட இரங்கிய அரன்தரு கொடும்பிணி அகன்றிட அரும்
மணங்கம ழுமின்தமி ழொடும்புய மடிந்தவ ரெலும்பணி பவன்தன பதம்
வணங்கிய வுடன்துய ரொடுஞ்செடி பவங்கெட வரம்பெறு மருந்தவ ரமண்
கணங்கெட நிலம்பெரு நலம்பெற அரும்பணி புரிந்தவ ரிருங்கழ றொழும்
.

பதம் பிரித்து:

அணங்கு அவர் இரந்திட இரங்கிய அரன் தரு கொடும் பிணி அகன்றிட, அரும்
மணம் கமழும் இன்தமிழொடும், புய[ம்] மடிந்தவர் எலும்பு அணிபவன்தன பதம்
வணங்கியவுடன் துயரொடும் செடி பவம் கெட வரம் பெறும் அரும் தவர்; அமண்

கணம் கெட, நிலம் பெருநலம் பெற, அரும் பணி புரிந்தவர் இரும் கழல் தொழும். 

Pas Pasupathy

unread,
Apr 22, 2014, 11:21:43 AM4/22/14
to santhav...@googlegroups.com
அருமையான சந்தம்! 


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Siva Siva

unread,
Apr 22, 2014, 6:25:59 PM4/22/14
to santhavasantham
Thanks.

In this particular song, the 'thanam' at the end of each line adds to the effect (and complexity).

By the way, there is a thiruppugazh song that is close to this pattern:

"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன

தனந்தன தனந்தன ...... தனதான"
("தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்" என்ற திருப்புகழ் - for the thalam பெருங்குடி.)



Siva Siva

unread,
Apr 23, 2014, 6:41:08 PM4/23/14
to santhavasantham

2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्

);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்)

2)

விலங்கலிமர்ந்தவ னலந்தரு மிருங்கழ னிதந்தொழு தெழுந்திடு முளம்
இலங்கிய வரன்றிய சமண்கல ரிடும்விட மருந்தென உணும்படி வரும்
கலங்கிய வருந்திய பெருங்கரி கரங்கொடு பணிந்தடி வணங்கிவி லகும்
கலுங்கல மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி யரின்பத நினைந்திடு தினம்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2014-04-21 21:32 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.


1)

Siva Siva

unread,
Apr 24, 2014, 8:01:37 AM4/24/14
to santhavasantham
with word separation:



2014-04-23 18:41 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்

.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्
);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்)

2)

விலங்கலிமர்ந்தவ னலந்தரு மிருங்கழ னிதந்தொழு தெழுந்திடு முளம்
இலங்கிய வரன்றிய சமண்கல ரிடும்விட மருந்தென உணும்படி வரும்
கலங்கிய வருந்திய பெருங்கரி கரங்கொடு பணிந்தடி வணங்கிவி லகும்
கலுங்கல மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி யரின்பத நினைந்திடு தினம்.


பதம் பிரித்து:

விலங்கலில் அமர்ந்தவன் நலம் தரும் இரும் கழல் நிதம் தொழுது எழுந்திடும் உளம்
இலங்கியவர்; அன்றிய சமண் கலர் இடும் விட[ம்] மருந்து எஉணும்படி வரும்;
கலங்கி அவர் உந்திய பெரும் கரி கரங்கொடு பணிந்து அடி வணங்கி விலகும்;
கலும் கலம் எனும் புகழ் உறும் தமிழ் தரும் பெரியரின் பத[ம்] நினைந்திடு தினம்.

விலங்கல் - மலை; இங்கே கயிலைமலை;
இருமை - பெருமை; மேன்மை;
அன்றுதல் - பகைத்தல்; கோபித்தல்;
கலர் - கீழோர்;
மருந்து - அமுதம்;
கலங்குதல் - மனம் குழம்புதல்; மயங்குதல்; அஞ்சுதல்;
உந்துதல் - அனுப்புதல்; செலுத்துதல்;
கலும் - கல்லும் - இடைக்குறையாக வந்தது;
கலம் - மரக்கலம்; படகு;
தமிடரும் - தமிழ் + தரும்; (ழ்+- புணர்ச்சியில் டகரமாகத் திரியும்);

பெரியர் - இங்கே திருநாவுக்கரசர்;
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2014-04-21 21:32 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.


1)


Siva Siva

unread,
Apr 26, 2014, 10:23:08 AM4/26/14
to santhavasantham
Here are 2 youtube clips of patanjali's nataraja sthothram.

Patanjali - Nataraja Sthothram - Clip-1 : http://www.youtube.com/watch?v=i0zDX3let08
Patanjali - Nataraja Sthothram - Clip-2: TS Ranganathan: http://www.youtube.com/watch?v=-aHMBDpPlRs

sankara dass nagoji

unread,
Apr 28, 2014, 3:36:35 AM4/28/14
to santhav...@googlegroups.com
மிக அருமை. இதனுடன், தங்களது பழைய பாடல்களையும் (இதே இழையில்) படித்தேன். அற்புதம்.
- சங்கர தாஸ்

Ramamoorthy Ramachandran

unread,
May 1, 2014, 9:02:10 AM5/1/14
to santhav...@googlegroups.com
                          ஆனைமுகன் அருள்வேண்டி!

பழம்பெறு  மகன்திறம் அகம்நிறை  செயற்றிறம் பலித்திட நினைக்குதென்  மனம் 
மழக்களி    றதன்பதம்  தினம்பணி  முயற்சியில்  செழித்திடு  முடற்றிறம்  பெறும் 
பழக்கமும்  வழக்கமாய்  பயிற்சியில் இணக்கமாய்  வலம்வரும் தினப்பணி யுறும் 
சழக்கெனு  மழுக்கினை  விலக்கிப  முகத்தவன்  தளிர்ப்பதந் தனிச்சுகந்  தரும்!

சிவசிவா  உங்கள் அழகுச் சந்தம் கண்ட சந்தோஷம் அடியேனையும் தூண்டியது.; 
பிழை பொறுத்தேற்க. நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.


 



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 1, 2014, 10:55:21 AM5/1/14
to சந்தவசந்தம்
அழகிய கருத்துக்களை உள்ளடக்கிய பாடல். குறிப்பாக ஈற்றடியை நன்கு ரசித்தேன். இவ்வகை வண்ணச் சந்தப்பாடலின் ஓசையை ஒட்டி, சீர்களில் வல்லொற்று தவிர்த்தல் நன்று.

அனந்த்

Siva Siva

unread,
May 1, 2014, 11:01:21 AM5/1/14
to santhavasantham
தனத்தன, தனந்தன என்ற சந்தங்கள் விரவி வரும் இனிய பாடல்.

நெடில் ஓசை இருக்கும் சில இடங்களை நோக்குக.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2014-05-01 9:02 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:

Ramamoorthy Ramachandran

unread,
May 1, 2014, 9:15:38 PM5/1/14
to santhav...@googlegroups.com
வாழ்த்துக்கு  நன்றி பல. முயற்சி செய்வேன் .
பழக்கம்  வழக்கமாகும்  அன்புடன் 
புலவர் இராமமூர்த்தி 

ramaNi

unread,
May 3, 2014, 10:05:46 AM5/3/14
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

சிவசிவாவின் அழகான பதஞ்சலி சந்தம் ஈர்த்திட நானும் ஒன்று முயன்றேன்.
சரியாக உள்ளதா என்று சொல்லக் கேட்டுக்கொள்கிறேன்.

சிவனே கதி! 


"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

அகங்கர மிலங்கிடு மகங்கொள லடங்கிட விலங்கது மகன்றிட வரும்
அகந்தனி லசங்கமு மசங்கையும் களங்கொளு மடங்கினி லனங்கம ழியும்
உகந்தொரு வனந்தனி லணங்குட னொருங்குடன் பிணந்தினும் குணங்குடன் தினம்
அகண்டனி னிதந்தரும் நடந்தரும் பதந்தரும் சுகந்தரு மலங்கலில் மனம். ... 1

சீர் பிரித்து:
அகங்கரம் இலங்கிடும் அகங்கொளல் அடங்கிட விலங்கதும் அகன்றிட வரும்
அகந்தனில் அசங்கமும் அசங்கையும் களங்கொளும் அடங்கினில் அனங்கம்-அ ழியும்
உகந்தொரு வனந்தனில் அணங்குடன் ஒருங்குடன் பிணந்தினும் குணங்குடன் தினம்
அகண்டனின் இதந்தரும் நடந்தரும் பதந்தரும் சுகந்தரும் அலங்கலில் மனம். ... 1

[அகங்கரம் = அகந்தை; அசங்கம் = பற்றின்மை; அசங்கை = ஐயமின்மை, அச்சமின்மை;
அனங்கம் = உடலாகா மனம்; குணங்கு = பேய். அலங்கல் = ஒழுங்கு, ஒளி, துதிப்பாடல்.]

அன்புடன்,
ரமணி

*****

Siva Siva

unread,
May 3, 2014, 10:20:03 AM5/3/14
to santhavasantham
உங்கள் ஆர்வத்தை மெச்சுகின்றேன்.

1) சீர்களுக்கு இடையேயும் ஒலியைக் கவனிக்க.
உதாரணமாக:
மசங்கையுங்* களங்கொளு
ஒருங்குடன்* பிணந்தினுங்* குணங்குடன்* தினம்
நடந்தரும்* பதந்தரும்* சுகந்தரு

வல்லொற்றோ, மெல்லொற்றைத் தொடர்ந்து வல்லினமோ, வாராதிருந்தால் ஒலி சரியாக இருக்கும்.


2) படிப்போர்கள் பொருள் உணரும் வண்ணம் உங்கள் பாடலில் வரும் வாக்கியங்களுக்கு / சொற்றொடர்களுக்கு விளக்கம் இட்டால் உதவும்.

உதாரணமாக: 

தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
     தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ் 
சமைந்தனர் .......

தலங்களில் வரும் கன இ(ல்)லம் கொ(ண்)டு மடந்தையர் ... பூமியில் உள்ள இடங்களில் இருக்கிற பெரிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மாதர்களின் 
தழைந்த உதரம் திகழ் தச மாதம் சமைந்தனர் ... பூரித்துள்ள வயிற்றில் செம்மையாக பத்து மாதங்கள் வளர்ந்து இருந்தனர்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagoji

unread,
May 4, 2014, 8:53:24 AM5/4/14
to santhav...@googlegroups.com
This santham reverberates so well. Here is my attempt on Lord Sivan.


தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்

அறஞ்செய விரும்பிடும் அருந்தவர் அகந்தனில் நடஞ்செயும் அருஞ்சிவ பதம்
உறங்கிடு மனந்தனை எழுந்திரு வெழுந்திரு எனும்சொலும் உயர்ந்ததொர் பதம்
புறம்பயம் நெடுங்களம் வலஞ்சுழி எனும்பல புலந்தனில் விளங்கிடு பதம்
கறங்குடை அனந்தனும் அயன்றனும் யுகம்பல முனைந்திட  வளர்ந்திடு பதம்.

புலம் - இடம்
உயர்ந்ததொர் பதம் - சிறந்த சிவ எனும் மந்திரச் சொல்
கறங்கு - சக்கரம்
முனைதல் - காரியம் செய்தல் - இங்கு தேடுதல்

- sankara dass

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 4, 2014, 9:14:15 AM5/4/14
to சந்தவசந்தம்
நல்ல கருத்தோடு அழகாக அமைந்துள்ளது. அயன்றனும் யுகம்பல என்ற இடத்தில் ஓட்டம் தட்டுப் படாமலிருக்க உகம்பல என்னலாம் (உகம் -யுகம்)

உறங்கிடு மனந்தனை எழுந்திரு வெழுந்திரு எனும்சொலும் உயர்ந்ததொர் பதம் - அருமை.
 
..அனந்த்


-

Siva Siva

unread,
May 4, 2014, 10:02:31 AM5/4/14
to santhavasantham
அழகிய பாடல்.

எனும்பல புலந்தனில் -- 'எனும்பல தலங்களில்' என்பதும் பொருந்தக்கூடும்.

கறங்கு = சக்கரம்? இலக்கிய உதாரணம் ஏதேனும் உள்ளதா?
யுகம்பல முனைந்திட - 'அலைந்துளம் மலங்கிட' என்பதும் பொருந்தக்கூடும்


2014-05-04 8:53 GMT-04:00 Nagoji <nag...@gmail.com>:

Ramamoorthy Ramachandran

unread,
May 4, 2014, 10:48:43 AM5/4/14
to santhav...@googlegroups.com
வணக்கம் 
உறங்குகின்ற கும்பகன்ன  உங்கள்மாய  வாழ்வெலாம் 
இறங்குகின்ற  தின்றுகாண்  எழுந்திரா யெழுந்திராய் 
கறந்குபோல  விற்பிடித்த  காலதூதர்  கையிலே 
யுறங்குவாய்  உறங்குவாய்  இனிக்கி டந்து  றங்குவாய் 

என்ற கம்பராமாயணப் பாடலில்   சுழலும் சக்கரம் போல எங்கும் திரியும் வில் 
என்ற பொருளில் கறங்கு போல  என்ற தொடர் அமைந்துள்ளது.

கறங்கு கால் புகா ; கதிரவன்  ஒளி புகா  மறலி 
மறம் புகாது  
என்ற பாடலில் சுழலும் காற்று என்ற பொருள் உள்ளது.

தேடிக் கொன்றனன்  சிலவரை கறங்கு எனத் திரிவான் 
 இதில் காற்றாடி  என்ற பொருளில் வந்தது

பெயர்க்கும் சாரிகை  கறங்கு எனத் திசைதொறும்  பெயர்வின் 
 என்ற பாடலடியிலும்  காற்றாடி என்று  பொருள் படுகிறது.

புறநானூற்றில் சிலைத்தார்  முரசங் கறங்க  என்ற பகுதியில்  ஒலிக்க 
என்ற பொருளில் வருகிறது 

மேலும் தேடுவேன்  அன்புடன் இராமமூர்த்தி  


ramaNi

unread,
May 4, 2014, 11:22:14 AM5/4/14
to santhav...@googlegroups.com
அன்புடையீர்!

சிவசிவா தந்த திருத்தங்களால் செப்பனிட்டு முதல் பாடலை மெல்லினமெய் ’ங்’ மட்டுமே
முழுதும் பயிலுமாறு அமைத்த பாடல் கீழே.

இதேபோல், ’ஞ்’ மட்டுமே வருமாறு அமைத்த இரண்டாம் பாடலும் கீழே.

சிவசிவா சொன்னபடி, சீர் பிரித்தலுடன்கூடப் பொருளும் தந்துள்ளேன்.

அன்பர்கள் நிறை/குறை கருத்துரைக்க வேண்டுகிறேன். இவ்விரண்டு பாடலும் சரியாக வந்தபின்
மற்ற மூன்று மெல்லின மெய்களை வைத்து முயல்வேன்.


அன்புடன்,
ரமணி

*****

சிவனே கதி! 
(மெல்லினமெய்ப் பஞ்சகம்)
["தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்"
என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம்]

அகங்கர மிலங்கிடும் விலங்கத னழுங்கலை யகங்கொளல் நுணங்கிட வரும்
அகங்களி லசங்கமு மசங்கையும் நிலங்கொளு மடங்கினி லனங்கம ழியும்
உகங்கொளும் புயங்கனை யணங்குட னொழுங்குட னொருங்குட னுளங்கொள நிதம்
இகங்கொளு மறங்களு மியங்கிட விலங்கிட நிறங்குணம் மழுங்கிம றையும். ... 1


சீர் பிரித்து:
அகங்கரம் இலங்கிடும் விலங்கதன் அழுங்கலை அகங்கொளல் நுணங்கிட வரும்
அகங்களில் அசங்கமும் அசங்கையும் நிலங்கொளும் அடங்கினில் அனங்கம்-அ ழியும்
உகங்கொளும் புயங்கனை அணங்குடன் ஒழுங்குடன் ஒருங்குடன் உளங்கொள நிதம்
இகங்கொளும் அறங்களும் இயங்கிட இலங்கிட நிறங்குணம் மழுங்கிம றையும். ... 1

பொருள்:
அகங்காரம் விலங்காக இலங்கித் துன்பம் தருவதை அகத்தில் கொள்ளுதல் வாடிட (நுணங்கிட) அமையும்
மனங்களில் பற்றின்மையும் (அசங்கம்), ஐயம், அச்சமின்மையும் (அசங்கை) நிலையாகத் தங்க
. இந்த உடலாகா மனம் அழியும்;
பாம்பை உடலில் கொண்டு (உகங்கொளும்), பாம்பைத் தோளில் அணிபவனை அவன்சார்ந்த அணங்காகிய
. உமையுடன், ஒழுங்குடன், மன ஒருங்குடன் உளத்தில் தினமும் கொள்ள,
இந்த இகவாழ்வில் கொள்ளும் அறங்கள் ஒழுங்காக இயங்கியும் இலங்கியும் சிறக்க,
. நிறம் குணம் கலந்த இயல்பு மழுங்கியே மறையும்.

*****

அருஞ்சிறை யிலஞ்சியி னிடைஞ்சலி னலஞ்செற வகஞ்செழி நிரஞ்சன முறும்
அருஞ்செயல் வசஞ்செய வழிஞ்சியி லகஞ்செல முகஞ்செல அவிஞ்சைய ழியும்
இரஞ்சித னகிஞ்சன னசஞ்சல னனுஞ்ஞையி னினஞ்சன மிருஞ்சிறை விழும்
கருஞ்சிதை வனஞ்செலும் நலஞ்செயு மசஞ்சல னகஞ்சுட வயிஞ்சையி லிகம். ... 2



சீர் பிரித்து:
அருஞ்சிறை இலஞ்சியின் இடைஞ்சலின் அலஞ்செற அகஞ்செழி நிரஞ்சனம் உறும்
அருஞ்செயல் வசஞ்செய வழிஞ்சியில் அகஞ்செல முகஞ்செல அவிஞ்சை-அ ழியும்
இரஞ்சிதன் அகிஞ்சனன் அசஞ்சலன் அனுஞ்ஞையின் இனஞ்சனம் இருஞ்சிறை விழும்
கருஞ்சிதை வனஞ்செலும் நலஞ்செயும் அசஞ்சலன் அகஞ்சுட அயிஞ்சையில் இகம். ... 2

பொருள்:
அருஞ்சிறையாகிய இந்த வாழ்வின் மதிற்சுவர் (இலஞ்சி) தரும் இடைஞ்சலின் துன்பத்தை
. அழித்துவிட, மனத்தில் செழிக்கும் நிறைவும் வீடுபேறும் வந்து வாய்க்கும்.
அத்தகைய அருஞ்செயலை வசம் செய்ய, இளமைக்காலத்தில் (வழிஞ்சி), அகமும் முகமும்
. செல்ல அவித்யை (அவிஞ்சை) அழிந்துபடும்.
இவ்வாறு செய்யும் போது, இன்பமானவனும் (இரஞ்சிதன்) தரித்திரனும் (அகிஞ்சனன்),
. அசைவற்றவனும் (அசஞ்சலன்) ஆகிய சிவனின் அனுமதியால் (அனுஞ்ஞை)
. சுற்றம்-நட்பும் (இனஞ்சனம்), இருமை மனபாவமும் (இருஞ்சிறை) வீழ்ந்துபடும்.
கரிய சிதை நிறைந்த சுடுகாடு செல்லும், நலமே செய்யும், அசைவற்ற சிவன்
. அகத்தில் உறைக்க, வருத்தாமையில் (அயிஞ்சை) இந்த வாழ்வு அமையும்.

--ரமணி, 04/05/2014

*****

Ramamoorthy Ramachandran

unread,
May 4, 2014, 12:25:12 PM5/4/14
to santhav...@googlegroups.com
பதந்தரு  பதந்தனை பதந்தரு  பதப்பொருள்  பதிந்திட பதித்திடு மனம்
விதந்திடு  மிதந்தரு  விதத்தினி லதெந்துவென் றுதிர்ந்த சொல் சதந்தரு மினம் 
அதம்புரி   கதங்கொடு  மதம்பொழி   நதந்தனை  வதம்புரிந்   தணிந்தருள் தவம்  
சிதம்பர  சுதந்தர! மதன்தனு  வெரித்தவ! பதஞ்சலி   பணிந்தவ! சிவம்!

பதம் =சிவபதம் ; பதம் =திருவடி ;பதம்= சொல்; பதப்பொருள் =சொற்பொருள் ; பதிந்திட =நிலைத்திட; பதித்திடும்= பதியவைக்கும்  மனம்= கவிஞர் உள்ளம்;
விதந்திடும் = எடுத்துக் கூறும்;இதம் =சாந்தி; விதம் =வகை;அதெந்து = அஞ்சாதே 
சதம்= நூறாண்டு  இனம்= இன்னும் 
அதம் அழித்தல்;  கதம்= கோபம்; மதம்= மதநீர் ; நாதம்= மலைபோன்ற யானை;
வதம்= கொலை; அணிந்து= உரிபோர்த்து; தவம்= தவவடிவம் 
சுதந்தர= தன்வயத்தன்; மதன்= மன்மதன் ; தனு = உடல்; பதஞ்சலி= முனிவர் 
சிவம்=அன்புருவம் 
நன்றி அன்புடன்  புலவர் இராமமூர்த்தி .




   



        



Ramamoorthy Ramachandran

unread,
May 4, 2014, 12:30:20 PM5/4/14
to santhav...@googlegroups.com
பதந்தரு  பதந்தனை பதந்தரு  பதப்பொருள்  பதிந்திட பதித்திடு மனம்
விதந்திடு  மிதந்தரு  விதத்தினி லதெந்துவென் றுதிர்ந்த சொல் சதந்தரு மினம் 
அதம்புரி   கதங்கொடு  மதம்பொழி   நதந்தனை  வதம்புரிந்   தணிந்தருள் தவம்  
சிதம்பர  சுதந்தர! மதன்தனு  வெரித்தவ! பதஞ்சலி   பணிந்தவ! சிவம்!

பதம் =சிவபதம் ; பதம் =திருவடி ;பதம்= சொல்; பதப்பொருள் =சொற்பொருள் ; பதிந்திட =நிலைத்திட; பதித்திடும்= பதியவைக்கும்  மனம்= கவிஞர் உள்ளம்;
விதந்திடும் = எடுத்துக் கூறும்;இதம் =சாந்தி; விதம் =வகை;அதெந்து = அஞ்சாதே 
சதம்= நூறாண்டு  இனம்= இன்னும் 
அதம் அழித்தல்;  கதம்= கோபம்; மதம்= மதநீர் ; நதம்= மலைபோன்ற யானை;
வதம்= கொலை; அணிந்து= உரிபோர்த்து; தவம்= தவவடிவம் 
சுதந்தர= தன்வயத்தன்; மதன்= மன்மதன் ; தனு = உடல்; பதஞ்சலி= முனிவர் 
சிவம்=அன்புருவம் 
நன்றி அன்புடன்  புலவர் இராமமூர்த்தி .

Siva Siva

unread,
May 4, 2014, 12:42:03 PM5/4/14
to santhavasantham
முயற்சி முன்னேற்றம் தரும்.

/மனங்களில் பற்றின்மையும் (அசங்கம்), ஐயம், அச்சமின்மையும் (அசங்கை) நிலையாகத் தங்க . இந்த உடலாகா மனம் அழியும்;/
மனத்தில் xyz தங்கினால் மனம் அழியும்?

மனமழிதல் = வருந்துதல்?

எனமொழிந்து மற்றிதனுக் கினியிதுவே செயல்இவ்ஆன்
மனமழியுந் துயரகற்ற மாட்டாதேன் வருந்துமிது
தனதுறுபே ரிடர்யானுந் தாங்குவதே கருமமென
அனகன்அரும் பொருள்துணிந்தான் அமைச்சருமஞ் சினரகன்றார். 

ramaNi

unread,
May 5, 2014, 10:05:39 AM5/5/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவசிவா,


>> அகங்களில் அசங்கமும் அசங்கையும் நிலங்கொளும் அடங்கினில் அனங்கம்-அ ழியும்
>> மனங்களில் பற்றின்மையும் (அசங்கம்), ஐயம், அச்சமின்மையும் (அசங்கை) நிலையாகத் தங்க
. இந்த உடலாகா மனம் அழியும்;

> மனத்தில் xyz தங்கினால் மனம் அழியும்?

மனித மனம் என்பது அகங்காரம், புத்தி, சித்தம் மற்றும் செயல்படு மனம் இவற்றின் தொகுதியல்லவா?
அகங்காரம் புத்தியை நிராகரிக்க வரும் சித்தவிருத்தியில், கரும்பலகை எழுத்துகள்/சித்திரம் போல்
வாசனைகள் படிகின்றன. ஊமத்தை இலைசேர்ந்த கரித்தூளாலால் கரும்பலகை எழுத்துகள் அழிக்கப்பட்டுப்
பளீரென்று துலங்குகிறது. இன்னமும் அங்கே கரி தங்குவதுபோல், மனதில் பற்றின்மையும், அச்சமின்மையிம்
மற்றவற்றைத் துடைத்துவிட்டுத் தங்க, மனித மனம் அழிந்து, ஞானியர் கொளும் சுத்த மனமாகும்.

இரமண மகரிஷியின் இந்த சுத்தமனம் பற்றிய போதனையைக் கருவாக வைத்து மேலுள்ள
வரிகளை எழுதினேன்.


அன்புடன்,
ரமணி

*****


ramaNi

unread,
May 5, 2014, 10:10:33 AM5/5/14
to santhav...@googlegroups.com
அன்பர்கள் நிறை/குறைக் கருத்துரைக்கவும்.

னகரமெய்:
கனன்றிடும் வியன்மணி அஞன்றனி னயன்மையு மதன்மமும் வறன்விளை சிவன்
மனன்பர னலன்றலி லசன்பெய ருடன்வரு முறன்முறை வயன்படும் நலம்
அனன்னிய மியன்றிடு மறன்கடை யகன்றிடு மியன்மொழி யுடன்படு முளம்
இனன்புர வலன்பத முரன்பட விடன்வரும் வரன்வரும் வளம்வரு மிவன்மனம் வரின். ... 3


சீர் பிரித்து:
கனன்றிடும் வியன்மணி அஞன்றனின் அயன்மையும் அதன்மமும் வறன்விளை சிவன்
மனன்பரன் அலன்றலில் அசன்பெயர் உடன்வரும் உறன்முறை வயன்படும் நலம்
அனன்னியம் இயன்றிடும் அறன்கடை யகன்றிடும் இயன்மொழி உடன்படும் உளம்
இனன் புரவலன் பதம் உரன்பட இடன்வரும் வரன்வரும் வளம்வரும் இவன்மனம் வரின். ... 3

பொருள்:
நெருப்பால் கனலும் சூரியன் (வியன்மணி); அஞ்ஞானியின் (அஞன்றனின்) அன்னியமும் (அதனால் வரும்)
. அதர்மமும் (அதன்மம்) வறன்படுமாறு விளைப்பவன் சிவன்.
கடவுளாகிய மன்னன் (மனன்பரன்), சாதல் இல்லாப் (அலன்றலில்) பிறப்பிலி (அசன்), அவன்பெயர்
. உடன்வரும் உறவுமுறை ஆக, நிலைமை (வயன்) நலமாகும்.
அந்தத் தலவனைப் போற்றிப் பாடும் இயன்மொழியில் உடன்பட்டுத் திளைக்கும் உள்ளத்தில்
. அன்னியமற்ற தன்மை (அனன்ன்னியம்) இயலும்; பாவம் (அறன்கடை) அகலும்.
சூரியன், புரவலனாகிய சிவன் பதத்தைப் பற்றுக்கோளாகக் கொள்ள (உரன்பட),
. நல்லகாலம் (இடன்) வரும், வாழ்வில் துணை வரும், வளமெல்லாம் வரும், இவன் நம்மனம் வந்தால்.

--ரமணி, 05/05/2014

*****

ramaNi

unread,
May 5, 2014, 11:25:30 PM5/5/14
to santhav...@googlegroups.com
நகரமெய்:
கருந்தரை வனந்தனி லெழுந்தழ லரிந்திடும் நிணந்தனி லெழுந்தருள் சிவன்
கரந்துறை நிரந்தர னரந்தைய னருந்தவன் விடந்தனை யருந்திடும் வரன்
இருந்தையி லெழுந்திடு மிளந்தளி ரிடந்தனி லிருந்திட நலந்தரும் நலம்
மருந்தென வுளந்தனி லருந்திட யலந்தலை யறுந்திட மகிழ்ந்துறை மனம்.. ... 4


சீர் பிரித்து:
கருந்தரை வனந்தனில் எழுந்தழல் அரிந்திடும் நிணந்தனில் எழுந்தருள் சிவன்
கரந்துறை நிரந்தரன் அரந்தையன் அருந்தவன் விடந்தனை அருந்திடும் வரன்
இருந்தையில் எழுந்திடும் இளந்தளிர் இடந்தனில் இருந்திட நலந்தரும் நலம்
மருந்தென உளந்தனில் அருந்திட அலந்தலை அறுந்திட மகிழ்ந்துறை மனம்.. ... 4

[அரந்தையன் = தரித்திரன்; இருந்தை = இருமை; இளந்தளிர் = இங்கு சக்தி;
அலந்தலை = துன்பம்]

--ரமணி, 05/05/2014

*****



Nagoji

unread,
May 6, 2014, 1:54:16 PM5/6/14
to santhav...@googlegroups.com
புலம், யுகம் என்பவற்றைச் சொல்லும் போது, உதட்டுக்குக் கொஞ்சம் அதிக வேலை தர வேண்டியுள்ளது. சுட்டியமைக்கு நன்றி.

இயலில், சுழலும் எதுவுமே கறங்குதான் - சக்கரம், பனையோலைக் காற்றாடி, பம்பரம், ஏனைய. இலக்கியச் சான்று கேட்டவுடன் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கம்பனில் இருந்து புலவர் எடுத்துக் காட்டியமைக்கு நன்றி.

திருத்தங்களுடன் இதோ.


தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்

அறஞ்செய விரும்பிடும் அருந்தவர் அகந்தனில் நடஞ்செயும் அருஞ்சிவ பதம்
உறங்கிடு மனந்தனை எழுந்திரு வெழுந்திரு எனும்சொலும் உயர்ந்ததொர் பதம்
புறம்பயம் நெடுங்களம் வலஞ்சுழி எனும்பல தலங்களில் விளங்கிடு பதம்
கறங்குடை அனந்தனும் அயன்றனும் உகம்பல முனைந்திட வளர்ந்திடு பதம்.


உயர்ந்ததொர் பதம் - சிறந்த சிவ எனும் மந்திரச் சொல்
கறங்கு - சக்கரம்
முனைதல் - காரியம் செய்தல் - இங்கு தேடுதல்
உகம் - யுகம்

- சங்கர தாஸ்
2014-05-04 19:32 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:

ramaNi

unread,
May 7, 2014, 10:06:12 AM5/7/14
to santhav...@googlegroups.com
மகரமெய்:

உடம்பிதன் நிணம்பட வுடம்படி லுளம்படி லலம்பிடு மழும்பெது மிலம்
நடம்பயி லிளம்பிறை யரும்பொரு ளகம்வரின் மலம்பட அரும்பிடும் வலம்
இடம்பயி லிளம்பிடி யுடம்பென வெழும்பர மரும்பதம் நிதம்வரு முளம்
திடம்பட வயம்படு முரம்வரு மிடும்பைய ழியும்நலம் வரும்வளம் வரும்.. ... 5


சீர் பிரித்து:
உடம்பிதன் நிணம்பட உடம்படில் உளம்படில் அலம்பிடும் அழும்பெதும் இலம்
நடம்பயில் இளம்பிறை அரும்பொருள் அகம்வரின் மலம்பட அரும்பிடும் வலம்
இடம்பயில் இளம்பிடி உடம்பென எழும்பரம் அரும்பதம் நிதம்வரும் உளம்
திடம்பட வயம்படும் உரம்வரும் இடும்பைய ழியும்நலம் வரும்வளம் வரும்.. ... 5

பொருள்:
இவ்வுடம்பு வெறும் நிணம் என்பதை சம்மதித்தே உளத்தில் கொண்டால்
. நெறிதவறும் (அலம்பிடும்) தீம்பு (அழும்பு) எதுவும் இல்லை.
நடனம் பயிலும், இளம்பிறை சூடும் அரும்பொருளாகிய சிவன் அகம் வந்தால்
. மலம் பட்டுப்போகச் சிரேஷ்டம் அரும்பிடும்.
இடப்பக்கம் உறையும் இளம்பிடியாகிய உமையே மேனியென எழுந்தருளும் பரத்தின்
. அரிய பதம் எப்போதும் வரும் உள்ளத்தில்
திண்மையுற அது வசப்படும், வலிமை வரும், துன்பம்/நோய்
. அழியும் நலம் வரும், மாட்சிமை (வலம்) வரும்.

--ரமணி, 07/05/2014

*****

Siva Siva

unread,
May 7, 2014, 7:37:19 PM5/7/14
to santhavasantham
I often see rare/obscure words in your writings. Where did you come across such words? How did you manage to memorize all those words?

/உடம்பிதன் நிணம்பட உடம்படில் = இவ்வுடம்பு வெறும் நிணம் என்பதை சம்மதித்தே /

நிணம்பட = நிணம் என்பதை ?


/இடம்பயில் இளம்பிடி உடம்பென எழும்பரம் = இடப்பக்கம் உறையும் இளம்பிடியாகிய உமையே மேனியென எழுந்தருளும் பரத்தின்/

உமையே மேனியென? 
அவன் உமை ஒரு பங்கன் தானே?


/திடம்பட வயம்படும் = திண்மையுற அது வசப்படும்/

வயம்படும் = வசப்படும்? 'ப்' என்பது 'ம்' என்று மெலித்தல் விகாரம் பெற்றதா?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

ramaNi

unread,
May 7, 2014, 9:54:16 PM5/7/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவசிவா,

>> உடம்பிதன் நிணம்பட உடம்படில் = இவ்வுடம்பு வெறும் நிணம் என்பதை சம்மதித்தே
> நிணம்பட = நிணம் என்பதை?

Actually the meaning should be ’நிணம் என்று தோன்றி/உதித்து/மனதில் பட்டு (அந்த உண்மைக்கு மனது உடன்பட்டு)’

’படுதல் = உண்டாதல்/தோன்றுதல்/உதித்தல்; நிகழ்தல்; அகப்படுதல்; அழிதல்/சாதல்/மறைதல்; வாடுதல்’ etc.


>> இடம்பயில் இளம்பிடி உடம்பென எழும்பரம் = இடப்பக்கம் உறையும் இளம்பிடியாகிய உமையே மேனியென எழுந்தருளும் பரத்தின்"
>> உமையே மேனியென
> அவன் உமை ஒரு பங்கன் தானே?

சிவம் என்பதற்கு உருவமோ உடலோ இல்லை. ஆயின் சக்தி என்பது உருவமும் உடலும் கொள்கிறது. சக்தியின் மூலமே சிவம் கண்ணுக்குத்
தெரிகிறது. இதனால் தான் ’சக்தியில்லையில் சிவம் இல்லை’ என்கிறோம். சிவம் அனைத்தின் மூல காரணமாக இருப்பினும் அது மனமும் செயலும்
அற்ற அத்வைத பூரணம். நேற்றிரவு சுகி சிவம் அவர்களின் லலிதா சகஸ்ரநாம விளக்கத்தின் ஆரம்பம் கேட்டேன். ’ஒன்றை ஒன்பதாக்கும் பெண்’
என்று அவர் அதில் விளக்குகிறார். அதாவது, கருக்கொண்ட ஓர் அணுவை, மாமிசம், ரத்தம், மஜ்ஜைம் கொண்ட அங்கங்களுடன் ஒன்பதாகச் சேர்த்து
ஓர் உடலைப் படைப்பது பெண்ணே. திருவிளையாடல் திரைப்படத்தில் ஓர் வசனம்: "சிவன்: ஆணுக்குப் பெண் அடிமை. சக்தி: அந்த ஆணையும்
பெற்றுத் தருவது பெண்மை." இவ்வாறு, சிவனின் வல்லப்பக்க ஆண் உடலையும் உருவாக்குவது சக்தியே என்பது துணிபு.


>> திடம்பட வயம்படும் = திண்மையுற அது வசப்படும்
> வயம்படும் = வசப்படும்? ’ப்’ என்பது ’ம்’ என்று மெலித்தல் விகாரம் பெற்றதா?

’வயம்’ எனும் சொல்லுக்கு ’வலிமை, வெற்றி, வசம், ஏற்றது’ என்ற பொருள் உண்டு. எனவே ’வயம்பட’ என்றால் ’வசப்பட’ என்று பொருள்படும்
என்று நினைத்து எழுதினேன்.

இப்போது தேடியபோது வில்லிபாரதத்தில் ’வயம்பட’ என்னும் சொல் வருவது தெரிந்தது:

"கயம்படு மனத்தனாய கண்ணிலா வரசன் மைந்தன்
வயம்பட நினைந்து கங்குல் வகுத்ததோர் சூழ்ச்சிதன்னாற்"

’வயம்பட நினைத்து’ என்பதன் உரை ’தனக்கு வெற்றி உண்டாகுமாறு ஆலோசித்து’
http://www.tamilvu.org/slet/l3800/l3805pag.jsp?x=312

’வயம்பட’ என்பதற்கு ’வெற்றி உண்டாகுமாறு’ என்று பொருளிருப்பின்,
’வயம்பட’ என்பது ’வசப்பட’, ’தன்வசம் ஆகுமாறு’ என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?


> I often see rare/obscure words in your writings. Where did you come across such words?
> How did you manage to memorize all those words?

இதுபற்றி ’ணகரமெய்ப்’ பாடலை அஞ்சலிட்டபின் விளக்குகிறேன்.


அன்புடன்,
ரமணி

*****


ramaNi

unread,
May 9, 2014, 1:31:00 AM5/9/14
to santhav...@googlegroups.com
ணகரமெய்:
புரண்டெழும் வெகுண்டெழும் விகண்டித முரண்மொழி யிரண்டக யிருண்மையில் வரும்
சுரண்டிடு மிவண்வரு மிரண்டெனும் முரண்வர யிருண்மலம் மரண்பட மனம்
திரண்டிடும் முரண்கொளு மிரண்டுள னிரண்டில னிருண்மதி யவுண்செறு வரண்
சரண்புக, அகண்டித னருண்மலை யருண்மொழி யுலண்டென, இவண்வரு முவண்.


சீர் பிரித்து:
புரண்டெழும் வெகுண்டெழும் விகண்டித முரண்மொழி இரண்டக இருண்மையில் வரும்
சுரண்டிடும் இவண்வரும் இரண்டெனும் முரண்வர இருண்மலம் மரண்பட மனம்
திரண்டிடும் முரண்கொளும் இரண்டுளன் இரண்டிலன் இருண்மதி அவுண்செறு அரண்
சரண்புக, அகண்டிதன் அருண்மலை அருண்மொழி உலண்டென, இவண்வரும் உவண்.

பொருள்:
கரைபுரண்டு, வெகுண்டு எழுகின்ற வேறுபாடு/கட்டின்மையால் (விகண்டிதம்)
. முரண்படும் மொழிகள் பயில எழும் துரோகத்தின் (இரண்டகம்) இருளினால் வருகின்ற
அரிக்கின்ற, இம்மையில் உள்ள இரண்டு எனும் முரண் வர எழும், ஆணவமலம் (இருண்மலம்)
. மரணம் எய்துவதால் (மரண்பட) அமைகின்ற மனத்தினில்
திரண்டுவரும் முரண் கொள்ளுகின்ற இருமையாக உள்ளவனும், இரண்டெனும் வேறுபாடற்றவனும்,
. இருண்ட மதியை உடைய அசுரசாதியை அழித்துக் காப்பவனுமாகிய அரண் போன்றவனைச்
சரண் அடைந்தால், அந்த வின்னமற்ற பூரணன் (அகண்டிதன்), அருள்செய்யும் மலையின்
. அருள்மொழியைப் பட்டாகக் (உலண்டென) கொள்ள, இம்மையில் வருமே மேலுலகம்/மேன்மை (உவண்).

--ரமணி, 09/05/2014

*****

Ramamoorthy Ramachandran

unread,
May 10, 2014, 10:50:45 PM5/10/14
to santhav...@googlegroups.com
அகண்டிதன்  தகுந்தநல்  லருள்மலை அடைந்துள 
                                              மடைந்திடு முவகையும்  வரும்!
விகண்டைசேர்  நகைமொழி விளைத்திடு பவவினை 
                                              விலக்கிடற்  கிறையருள்  தரும்! 
வெகுண்டுமுக் கிரிகளை  விழித்தழித் திடும்சிவம் 
                                              வினைமலை  தமைப்பொடித் திடும்!
சிகண்டியில்  விரைந்தருள் மகன்வழித்   திகழ்ந்திடும் 
                                                செழிப்பிகம்  பரந்தொடர்ந்  திடும்!

அன்புடன் புலவர் இராமமூர்த்தி  
    
                                                

ramaNi

unread,
May 11, 2014, 10:15:50 AM5/11/14
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவசிவா,

இந்த மடல் கொஞ்சம் நீளமாகப் படுவதால் இரண்டு அஞ்சல்களில் இடுகிறேன்.

கீழுள்ள உங்கள் கேள்விகளுக்கு ’ணகரமெய்’ச் செய்யுளை இட்டதும் பதில் சொல்வதாகக் கூறியிருந்தேன்.
இதோ அந்த பதில்:

மரபில் கவிதை எழுதுவோர் ஏற்கனவே தாம் எழுதும் வடிவத்தில் அமைந்துள்ள பழந்தமிழ்ப் பாக்களை
நன்று கற்றறிந்தவாராக இருந்தால், அவர் எழுதும் கவிதையின் சொற்கள் ஏற்கனவே படித்து மனனமாகியுள்ள
பாக்களிலிருந்தும், அத்தகைய சொற்களின் தொடர்பாக வரும் சொற்களில் இருந்தும் பெரும்பாலும் தாமே குதிர்ந்து வரும்.

போதிய பழந்தமிழ்ப் பனுவல்கள் ஞானம் இல்லாது கற்பனை வளம் மட்டுமுள்ள என் போன்றோர் மரபுக்கவிதை
முனையும் போது, அந்த வடிவப் பாக்களை ஒருமுறை அப்போது பார்த்துப் பொருளறிந்தாலும், சொற்கள் அமைக்கும் போது
பெரிதும் அகராதி, நிகண்டு இவற்றின் உதவியை நாட வேண்டுவதாகிறது. தனக்குத் தெரிந்த சொறகளை மட்டும் கொண்டு
முயல்வதை விட இது நல்லது என்பது என் கருத்து.

பொதுவாக ஒரு கவிஞனின் vocabulary--மொழி(ச்சொல்) ஞானம், இரண்டு வகையில் அமையும்:
functional vocabulary--இயல் மொழிஞானம், மற்றும் recognition vocabulary--உணர் மொழிஞானம்.

முதல் வகையில் நம் மனதில் ஏற்கனவே நன்கு பதிந்து, அகராதியைப் புரட்டவேண்டிய தேவையில்லாத சொற்கள் அமையும்.
இத்தகைய சொற்கள் மனதில் பதிய நிறையப் பொருளுணர்ந்து படிக்கவேண்டும்.
இவற்றைக் கவிஞன் எப்போது வேண்டுமானாலும் தயாராகப் பயன்படுத்த முடியும்.

இரண்டாவது வகையில் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லாவிடினும், பார்த்தவுடன், சுற்றியுள்ள சொற்பொருள் சூழ்நிலையில்
இருந்து பரிச்சயம் இல்லாத சொல்லின் பொருளை ஊகித்து உணர்ந்திட முடியும். நாமே இவற்றின் பொருளை அறிந்து
பயன்படுத்தும் போது இவை நாளடைவில் முதல்வகைக்கு மாறும்.

அன்புள்ள சிவசிவா,

இந்த மடல் கொஞ்சம் நீளமாகப் படுவதால் இரண்டு அஞ்சல்களில் இடுகிறேன்.

கீழுள்ள உங்கள் கேள்விகளுக்கு ’ணகரமெய்’ச் செய்யுளை இட்டதும் பதில் சொல்வதாகக் கூறியிருந்தேன்.
இதோ அந்த பதில்:

மரபில் கவிதை எழுதுவோர் ஏற்கனவே தாம் எழுதும் வடிவத்தில் அமைந்துள்ள பழந்தமிழ்ப் பாக்களை
நன்று கற்றறிந்தவாராக இருந்தால், அவர் எழுதும் கவிதையின் சொற்கள் ஏற்கனவே படித்து மனனமாகியுள்ள
பாக்களிலிருந்தும், அத்தகைய சொற்களின் தொடர்பாக வரும் சொற்களில் இருந்தும் பெரும்பாலும் தாமே குதிர்ந்து வரும்.

போதிய பழந்தமிழ்ப் பனுவல்கள் ஞானம் இல்லாது கற்பனை வளம் மட்டுமுள்ள என் போன்றோர் மரபுக்கவிதை
முனையும் போது, அந்த வடிவப் பாக்களை ஒருமுறை அப்போது பார்த்துப் பொருளறிந்தாலும், சொற்கள் அமைக்கும் போது
பெரிதும் அகராதி, நிகண்டு இவற்றின் உதவியை நாட வேண்டுவதாகிறது. தனக்குத் தெரிந்த சொறகளை மட்டும் கொண்டு
முயல்வதை விட இது நல்லது என்பது என் கருத்து.

பொதுவாக ஒரு கவிஞனின் vocabulary--மொழி(ச்சொல்) ஞானம், இரண்டு வகையில் அமையும்:
functional vocabulary--இயல் மொழிஞானம், மற்றும் recognition vocabulary--உணர் மொழிஞானம்.

முதல் வகையில் நம் மனதில் ஏற்கனவே நன்கு பதிந்து, அகராதியைப் புரட்டவேண்டிய தேவையில்லாத சொற்கள் அமையும்.
இத்தகைய சொற்கள் மனதில் பதிய நிறையப் பொருளுணர்ந்து படிக்கவேண்டும்.
இவற்றைக் கவிஞன் எப்போது வேண்டுமானாலும் தயாராகப் பயன்படுத்த முடியும்.

இரண்டாவது வகையில் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லாவிடினும், பார்த்தவுடன், சுற்றியுள்ள சொற்பொருள் சூழ்நிலையில்
இருந்து பரிச்சயம் இல்லாத சொல்லின் பொருளை ஊகித்து உணர்ந்திட முடியும். நாமே இவற்றின் பொருளை அறிந்து
பயன்படுத்தும் போது இவை நாளடைவில் முதல்வகைக்கு மாறும்.

உணர் மொழிஞானம் இயல் மொழிஞானத்தை விடப் பலமடங்கு இருக்கும். கவிதையில் புலமை ஏறயேற இயல் மொழிஞானம் அதிகரிக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் ஒரு தெரியாத சொல்லைக் காணும் போதோ அல்லது அது நான் எழுதும் போது நினைவில் வந்தாலோ,
சலிக்காமல் உடனே அகராதியையும், பிங்கள நிகண்டுவையும் ஒரு முறை புரட்டிப் பார்ப்பேன்.

(மீதி அடுத்த அஞ்சலில்)

*****

ramaNi

unread,
May 11, 2014, 10:23:59 AM5/11/14
to santhav...@googlegroups.com
(சென்ற மடலின் தொடர்ச்சி)

இந்த இழையில் பதஞ்சலியின் சிவத்தோத்திரச் சந்த அமைப்பில் முயன்ற போது, அகராதியை எனக்கு வேண்டியவாறு
பயன்படுத்தச் சில வழிகள் கண்டேன். அவை கீழே:

1. எளிதில் சொல்தேட உதவும் அகராதியாக நான் பயன்படுத்துவது:
University of Madras Tamil Lexicon

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

2. இத்துடன் notepad++ text editor என்னும் ஆற்றல் மிக்க மென்பொருளைப் பயன்படுத்தினேன்.

இந்த இலவச மென்பொருளை இங்குத் தரவிறக்கலாம்:

http://notepad-plus-plus.org/

3. இப்போது நம் அகராதியில் இருந்து ’ணகரமெய்’ வரும் சொற்களைப் பிரித்துப் பயன்படுத்துவதாகக் கொள்வோம்.
இதற்கு மேலுள்ள அகராதி வலைதளத்தில் இந்த ஆணைகளைத் தரவேண்டும்:

Look up an entry word ண் 

Search options [ ] Search entry words only (not definitions)
என்னும் checkbox-ஐ tick செய்யவேண்டும்.

அதன்பின் Words containing (Example: patti) என்னும் radio button-ஐச்
சொடுக்கி நிரப்ப வேண்டும்.

இறுதியாக, Search என்னும் button-ஐச் சொடுக்கவேண்டும்.

சில வினாடிகளில் ணகரமெய் அடங்கிய சொற்கள் ஒரு பக்கத்தில் முழுதும் காட்டப்படும்.
இவை மொத்தம் 6,245 சொற்கள்!

3. இந்தப் பயிற்சியில் நமக்கு வேண்டுவது ணரகமெய் மூன்றாவது இடத்தில் அமையும் சொற்கள்.
இவற்றை நாம் இந்த அகராதியில் தேட முடியாது. யாரேனும் இதுபோல் வேண்டிய எழுத்து/சொற்பகுதிகளைச்
சொல்லில் வேண்டிய இடத்தில் தேட ஒரு மென்பொருள் எழுதினால் இன்னும் எளிதாக இருக்கும்.

இங்குதான், notepad++ editor பயன்படுகிறது. அகராதி தரும் அத்தனை சொற்களையும்
Ctrl+A, Ctrl+C விசைகள் மூலம் பிரதியெடுத்து, notepad++-இல்
ஒரு புதிய கோப்பில் Ctrl+v விசைகள் மூலம் பதியவேண்டும்.

பின் முதலிலும் இறுதியும் உள்ள வேண்டாத வரிகளை நீக்கிவிட்டு, ஒரு column
தள்ளியுள்ள சொற்களை முதல் column கொண்டுவர Ctrl+A, Shift+Tab
விசைகளைப் பயன்படுத்தவேண்டும்.

இந்த நிலையில் கோப்பை மீண்டும் பயன்படுத்த ஏதுவாக save செய்துகொள்வோம்.

4. மூன்றாவது இடத்தில் வரும் ண்கரமெய்ச் சொற்களை highlight செய்ய,
editor-இன் Search menu-வில் Find textbox-இல்

^..ண் 
(^‍=வரிமுதல்; .=ஒரு இடம்; ண்=தேவையான எழுத்து) 

என்னும் ஆணையையும், அதன்பின் mark tab-இல் Mark All button-ஐயும் சொடுக்கவேண்டும்.
இப்போது நாம் விரும்பும் சொற்கள் hightlight செய்யப்படும்.
மேலும் கீழும் ஊர்ந்தோ ஓடியோ தேவையான சொற்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஒருங்குறியில் கால்-கொம்பு போன்ற குறிகள் தனி இடத்தைப் பெறுவதால் நமக்கு வேண்டாத
சொற்களும் highlight செய்யப்பட்டாலும், வேண்டிய சொற்கள் சில விடப்பட்டாலும், இந்த அணுகுமுறை
பொதுவாக நாம் வேண்டிய சொற்களைப் பெற்றுத்தரும்.

5. இறுதியாக நமக்குப் பொருள் தேவைப்படும் சொற்களை browser-இல் உள்ள
அகராதிப் பக்கத்தில் மேலும் கீழும் சென்று தெரிந்து,

mouse right-click செய்து,
Open in New Tab ஆணை மூலம் வேறு tab-இல் காணலாம்.

வேறு tab-இல் காண்பதன் நோக்கம் ஏற்கனவே உள்ல அகராதிப் பக்கத்தை உள்ளபடி வைத்துக்கொள்வதே.
இதனால் ஒவ்வொரு முறையும் இந்தப் பக்கம் உருவாகும் நேரம் மிஞ்சும். பொருள் தேடலும் எளிதாகும்.

அரிய சொற்களை நான் என் பாடல்களில் பயன்படுத்துவதன் நோக்கம் இன்றைய மரபுத் தமிழ் வழக்கில் அவற்றின்
நாணயத்தை அதிகப் படுத்த முயல்வதே. அப்போது பொருள் அறிந்தாலும் இந்தச் சொற்கள் பொதுவாக மனதில்
நிற்பதில்லை. ஆயினும் நான் என் பாடலை மீண்டும் படிக்கும் போது, ஏற்கனவே பொருள் தந்திருப்பதால் இவை
சிறிதுசிறிதாக மனதில் ஊறிப் பதியும்.

இந்தப் பயிற்சியில் நான் இப்படி அறிந்த அரிய சொற்கள் எல்லோரும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிவன
என்று எனக்குத் தோன்றுகிறது. சில சான்றுகள்:

அழுங்கல் = துன்பம்; நுணங்கல் = வாடுதல்; உகம் = பாம்பு; இலஞ்சி = மதிற்சுவர்; இனஞ்சனம் = நட்பும் சுற்றமும்;
இருஞ்சிறை = மனபாவம்; உரன் = பற்றுக்கோள்; இருந்தை = இருமை; அலந்தலை = துன்பம்; வலம் = மாட்சிமை;
உலண்டு = பட்டு; உவண் = மேலுலகம். 

Siva Siva

unread,
May 11, 2014, 5:07:43 PM5/11/14
to santhavasantham
Thanks for the detailed explanation.
Interesting approach.
The search feature you are using in notepad++ sounds like 'Regular Expressions' - a search feature available in other word processing tools as well - such as Open Office. (https://help.libreoffice.org/4.1/Common/List_of_Regular_Expressions )

As a dictionary contains all words, it is possible that you may sometimes end up using obscure words that may have been used very sparingly in literature or that may have specialized meanings in specific contexts only.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
May 11, 2015, 1:18:15 PM5/11/15
to santhavasantham

2015-05-07

திருநாவுக்கரசர் குருபூஜை சித்திரைச் சதயம் - 2015-05-12

---------------------------------

1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----

மழுவாளி மலரடியில் வண்டமிழ்கள் பலசாத்தித்

தொழுவாரம் மலிநெஞ்சர் தூநீற்று மேனியராய்

உழவாரப் படையேந்தி ஓயாமற் பணிசெய்து

வழுவாரா வழிகாட்டு வாகீசர் தாள்போற்றி.



அன்பொடு,

விசுப்பிரமணியன்

2014-04-23 18:41 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை


-------------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்)

2)

விலங்கலிமர்ந்தவ னலந்தரு மிருங்கழ னிதந்தொழு தெழுந்திடு முளம்
இலங்கிய வரன்றிய சமண்கல ரிடும்விட மருந்தென உணும்படி வரும்
கலங்கிய வருந்திய பெருங்கரி கரங்கொடு பணிந்தடி வணங்கிவி லகும்

கலுங்கல மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி யரின்பத நினைந்திடு தினம்.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்



--

Siva Siva

unread,
May 12, 2015, 5:41:01 PM5/12/15
to santhavasantham

2015-05-10

திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12

---------------------------------

2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----

பண்ணார் தமிழால் பரமனையே .. பாடிப் பணிந்தார் அரன்பாதம்

நண்ணாச் சமணர் ஒளித்திட்ட .. நம்பன் தளியைக் கண்டுதொழா(து)

உண்ணேன் என்று பழையாறை .. ஊரில் தவம்செய் ததைமீட்டு

மண்ணோர் போற்றத் தந்தருள்செய் .. வாக்கின் மன்னர் பதம்போற்றி.



பதம் பிரித்து:

பண் ஆர் தமிழால் பரமனையே பாடிப் பணிந்தார்; அரன் பாதம் நண்ணாச் சமணர் ஒளித்திட்ட நம்பன் தளியைக் கண்டுதொழா(து) உண்ணேன் என்று பழையாறை ஊரில் தவம்செய்து அதை மீட்டு, மீட்டும் மண்ணோர் போற்றத் தந்து அருள்செய் வாக்கின் மன்னர் பதம் போற்றி.

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.58.1

தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள்

நிலையி னால்மறைத் தால்மறைக் கொண்ணுமே

அலையி னார்பொழில் ஆறை வடதளி

நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.)



அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


2015-05-11 13:18 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2015-05-07

திருநாவுக்கரசர் குருபூஜை சித்திரைச் சதயம் - 2015-05-12

---------------------------------

1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----

மழுவாளி மலரடியில் வண்டமிழ்கள் பலசாத்தித்

தொழுவாரம் மலிநெஞ்சர் தூநீற்று மேனியராய்

உழவாரப் படையேந்தி ஓயாமற் பணிசெய்து

வழுவாரா வழிகாட்டு வாகீசர் தாள்போற்றி.


Pas Pasupathy

unread,
May 12, 2015, 6:14:14 PM5/12/15
to Santhavasantham
அருமை! 

முன்பு இங்கே வந்த “அண்ணலும் அப்பரும்” என்ற இழை நினைவுக்கு வருகிறது.



2015-05-12 17:41 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2015-05-10

திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12

---------------------------------

2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----

பண்ணார் தமிழால் பரமனையே .. பாடிப் பணிந்தார் அரன்பாதம்

நண்ணாச் சமணர் ஒளித்திட்ட .. நம்பன் தளியைக் கண்டுதொழா(து)

உண்ணேன் என்று பழையாறை .. ஊரில் தவம்செய் ததைமீட்டு

மண்ணோர் போற்றத் தந்தருள்செய் .. வாக்கின் மன்னர் பதம்போற்றி.



பதம் பிரித்து:

பண் ஆர் தமிழால் பரமனையே பாடிப் பணிந்தார்; அரன் பாதம் நண்ணாச் சமணர் ஒளித்திட்ட நம்பன் தளியைக் கண்டுதொழா(து) உண்ணேன் என்று பழையாறை ஊரில் தவம்செய்து அதை மீட்டு, மீட்டும் மண்ணோர் போற்றத் தந்து அருள்செய் வாக்கின் மன்னர் பதம் போற்றி.

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.58.1

தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள்

நிலையி னால்மறைத் தால்மறைக் கொண்ணுமே

அலையி னார்பொழில் ஆறை வடதளி

நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.)



அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



Siva Siva

unread,
May 12, 2015, 9:11:46 PM5/12/15
to santhavasantham
Thanks for the link to that 2009 discussion in SV.

Siva Siva

unread,
Apr 30, 2016, 9:49:17 AM4/30/16
to santhavasantham

2016-04-27

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)

-------------------------------

1)

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


ஆனை இடறிட ஓடி வருபொழு

.. தீசன் அடிதொழு .. தருளாலே

ஊனம் இலரென ஆகி அமணெனும்

.. ஊறு தனையொழி .. திருநாவர்

வானம் அடியவர் ஏறு வழியென

.. வார மலிதமிழ் .. உரைநாவர்

ஞான வடிவவர் பாத மலர்களை

.. நாளு நினைவது .. நலமாமே.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2015-05-12 17:41 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2015-05-10

திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12

---------------------------------

2)




--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
May 1, 2016, 8:07:03 AM5/1/16
to santhavasantham

2)

2016-04-29

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)

-------------------------------

தாத்த தனதன தாத்த தனதன

தாத்த தனதன .. தனதான

(பெரும்பாலும் இவ்வமைப்பை ஒத்த திருப்புகழ் -

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை திருப்புகழ் தீர்த்தமலை)


மூர்க்க அமணர்கள் ஆட்டம் முடிவுற

.. மூழ்த்த வரிகலை .. ஒருநாவாய்

ஆக்க வலவனை வாழ்த்தி உயவல

.. ஆத்தர் பணிவதன் .. உருவான

வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை

.. மாற்று வழியென .. அறிவோமே

காக்கும் அரனெரி நாட்ட நுதலிறை

.. காட்டும் அவர்மொழி .. உரைநாவே.


அன்பொடு,

விசுப்பிரமணியன்


2016-04-30 9:49 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2016-04-27

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)

-------------------------------

1)

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


ஆனை இடறிட ஓடி வருபொழு

.. தீசன் அடிதொழு .. தருளாலே

ஊனம் இலரென ஆகி அமணெனும்

.. ஊறு தனையொழி .. திருநாவர்

வானம் அடியவர் ஏறு வழியென

.. வார மலிதமிழ் .. உரைநாவர்

ஞான வடிவவர் பாத மலர்களை

.. நாளு நினைவது .. நலமாமே.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


M. Viswanathan

unread,
May 1, 2016, 9:10:24 AM5/1/16
to Santhavasantham
கவிஞர் சிவசிவா, திருநாவுக்கரசரின் குருபூஜை நினைவாகப் பதிவு செய்துள்ள அழகான கவிதைக்குப் பாராட்டுகள்.
அன்பன்,
மீ.வி.

Siva Siva

unread,
May 1, 2016, 5:32:01 PM5/1/16
to santhavasantham
2016-05-01 8:07 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2)

2016-04-29

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)

-------------------------------

தாத்த தனதன தாத்த தனதன

தாத்த தனதன .. தனதான

(பெரும்பாலும் இவ்வமைப்பை ஒத்த திருப்புகழ் -

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை திருப்புகழ் தீர்த்தமலை)


மூர்க்க அமணர்கள் ஆட்டம் முடிவுற

.. மூழ்த்த வரிகலை .. ஒருநாவாய்

ஆக்க வலவனை வாழ்த்தி உயவல

.. ஆத்தர் பணிவதன் .. உருவான

வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை

.. மாற்று வழியென .. அறிவோமே

காக்கும் அரனெரி நாட்ட நுதலிறை

.. காட்டும் அவர்மொழி .. உரைநாவே.



மூர்க்க அமணர்கள் ஆட்டம் முடிவுற மூழ்த்த வரிகலை - மூர்க்கர்களான சமணர்களுடைய அதிகாரம் முடிவடையும்படி, அவர்கள் திருநாவுக்கரசரைக் கொல்லவேண்டிக் கடலில் ஆழ்த்துவதற்காகக் கட்டிய கல்லையே; (மூர்க்கம் - கடுஞ்சினம்; மூடத்தனம்; பகை); (மூழ்த்துதல் - ஆழ்த்துதல்); (வரித்தல் - கட்டுதல்); (கலை - கல்லை - இடைக்குறையாக வந்தது);

ஒரு நாவாய் ஆக்க வலவனை வாழ்த்தி உய வல ஆத்தர் - ஒரு படகு ஆக்க வல்லவனை வாழ்த்தி உய்யவல்ல அன்பர்; (நாவாய் - படகு; கப்பல்); (வலவனை - வல்லவனை); (வல - வல்ல); (ஆத்தர் - ஆப்தர் - இஷ்டமானவர்கள்; आप्तः - A relative, friend);

பணிவு அதன் உரு ஆன வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை மாற்று வழி என அறிவோமே - பணிவே உருவமான திருநாவுக்கரசரின் தேவாரம் நம் வினைகளைத் தீர்க்கும் உபாயம் என்று நாம் அறிவோம்; (வாக்கின் அரையர் - வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்); (மாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);

காக்கும் அரன், எரி நாட்ட நுதல் இறை காட்டும் அவர் மொழி உரை நாவே - காக்கின்ற ஹரனும், எரிக்கின்ற நெற்றிக்கண் உடைய கடவுளும் ஆன சிவபெருமானைக் காட்டுகின்ற அவர் தேவாரத்தை, நாக்கே, நீ உரைப்பாயாக; (எரி - நெருப்பு); (நாட்டம் - கண்); (நுதல் - நெற்றி); 

அன்பொடு,

விசுப்பிரமணியன்


2016-04-30 9:49 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2016-04-27

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)

-------------------------------

1)

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


ஆனை இடறிட ஓடி வருபொழு

.. தீசன் அடிதொழு .. தருளாலே

ஊனம் இலரென ஆகி அமணெனும்

.. ஊறு தனையொழி .. திருநாவர்

வானம் அடியவர் ஏறு வழியென

.. வார மலிதமிழ் .. உரைநாவர்

ஞான வடிவவர் பாத மலர்களை

.. நாளு நினைவது .. நலமாமே.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Jun 3, 2017, 3:01:28 PM6/3/17
to santhavasantham
Better late than never!

2017-06-03

திருநாவுக்கரசர் குருபூஜை - 2017 (சித்திரைச் சதயம் - 2017-04-22)

--------

(ஷட்பதி அமைப்பில் -

விளம் மா விளம் மா

விளம் மா விளம் மா

விளம் மா விளம் மா விளம் மாங்காய்)


கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும்

படகென ஆகப் பரிவொடு பதிகத்

தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவுள்ளார்

உடலது தேய்ந்தும் உடையவன் வெற்பை

அடையமு யன்ற திடமனத் தொண்டர்

மடலவிழ் மலரின் மணமிகு வாக்கின் மன்னவர் கழல்போற்றி.


கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும் படகு என ஆகப் - கடலில் ஆழ்த்துவதற்காகப் பிணித்த அந்தக் கல்லே படகு போல ஆகும்படி;

பரிவொடு பதிகத்தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவு உள்ளார் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானது திருநாமத்தைப் பக்தியோடு பதிகப் பாமாலையில் சொன்ன துணிவு உடையவர்; (பரிவு - அன்பு; பக்தி); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே");

உடல்அது தேய்ந்தும் உடையவன் வெற்பை அடைய முயன்ற திட மனத் தொண்டர் - தமது உடல் தேய்ந்தாலும் ஈசன் உறையும் கயிலைமலையைச் சென்றடைய முயன்ற மன உறுதி மிக்க தொண்டர் அவர்; (பெரியபுராணம் - "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டுமீ ளேன்என மறுத்தார் ");

மடல் அவிழ் மலரின் மணம் மிகு வாக்கின் மன்னவர் கழல் போற்றி - இதழ்கள் விரியும் பூவினும் மணம் மிக்கவான, திருநாவுக்கரசரது திருவடிகளுக்கு வணக்கம். (மடல் - பூவின் இதழ்); (வாக்கின் மன்னவர் - திருநாவுக்கரசர்);


அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
May 7, 2018, 8:39:43 AM5/7/18
to santhavasantham

2018-05-07

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2018-05-09 USA)

--------------------

(வஞ்சி விருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம்);

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்");

1)

குணமில் சமணர் பழிசொல்லிப்

பிணைகல் அலையார் கடல்மீது

புணையாய்க் கரைசேர் புகழாளர்

மணமார் மலர்மென் கழல்போற்றி.


நற்குணம் இல்லாத சமணர்கள் பொய்யாகப் பழிசுமத்தித் திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் தள்ளியபோது, அரன் அருளால் அக்கல்லே ஒரு தெப்பமாகி மிதந்து கரையை அடைந்த புகழை உடையவர்; அவரது வாசமிக்க மென்மலர்ப் பாதங்களுக்கு வணக்கம்.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
May 7, 2018, 9:02:42 PM5/7/18
to santhavasantham

2)

விடையான் அடியார் உழவாரப்

படையார் தமிழின் தொடைநாவர்

உடையார் பரிவே எவருக்கும்

இடையார் அவர்தாள் இணைபோற்றி.


3)

துணிவின் சிகரம் மெனநின்றார்

பணிவின் வடிவாம் மொழிவேந்தர்

பணிமா லையினான் திருநாமம்

அணிநா வுடையார் அடிபோற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


2018-05-07 8:39 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2018-05-07

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2018-05-09 USA)

--------------------

(வஞ்சி விருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம்);

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்");

1)-- 

Siva Siva

unread,
May 8, 2018, 8:14:56 PM5/8/18
to santhavasantham

4)

நதியைச் சடையிற் சிறைசெய்த

அதிகைப் பெருமான் அருளாலே

பதிகத் தமிழால் அமணாதர்

சதிவென் றவர்தாள் மலர்போற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2018-05-07 21:02 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2)

3)-- 

Siva Siva

unread,
May 9, 2018, 8:52:18 AM5/9/18
to santhavasantham

5)

மடமென் முலையாள் உமைபங்கா

உடையாய் இடபம் திரிசூலம்

உடல்மேற் பொறியாய் எனவேண்டி

அடைநற் றவர்தாள் மலர்போற்றி.


மட மென் முலையாள் உமைபங்கா - அழகிய இள மென் முலைகளையுடைய உமையைப் பங்கில் உடையவனே;

உடையாய் - சுவாமியே; ("உமை பங்கா உடையாய்" என்று ஒரு சொற்றொடராகவே கொள்ளலும் கூடும்);

இடபம் திரிசூலம் உடல்மேற் பொறியாய் என வேண்டி அடை - "இடபச் சின்னத்தையும் சூலச் சின்னத்தையும் என் உடம்பின்மேல் பொறித்து அருள்வாயாக" என்று வேண்டி அவ்வாறே அவை பொறிக்கப்பெற்ற;

நற்றவர் தாள்மலர் போற்றி - நல்ல தவவடிவினரன திருநாவுக்கரசரது திருவடித்தாமரைக்கு வணக்கம்;


* திருநாவுக்கரசர் தம் உடம்பின்மேல் விடை இலச்சினையையும் சூல இலச்சினையையும் வேண்டிப் பெற்றார். இது பெண்ணாகடத்தில் நடந்த நிகழ்ச்சி. பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் வரலாற்றிற் காண்க;

(அப்பர் தேவாரம் - 4.109.1 - “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் . . . மூவிலைச் சூலமென் மேற்பொறி . . . ”);

(அப்பர் தேவாரம் - 4.109.10 - “. . . இடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாய் . . . ”);


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2018-05-08 20:14 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

4)-- 

Siva Siva

unread,
May 10, 2018, 8:37:02 AM5/10/18
to santhavasantham

6)

துடியார் கரனின் னருளாலே

அடியார் உணவிற் குயர்காசைப்

படியா மிழலைப் பெறவல்லார்

கடியார் மலர்மென் கழல்போற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்





2018-05-09 8:52 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

5)-- 

Siva Siva

unread,
May 11, 2018, 8:35:07 AM5/11/18
to santhavasantham

7)

மறைகாப் பிடுமாக் கதவத்தை

இறைவா அருளென் றுளம்நெக்கு

நறையார் தமிழால் பிரியச்செய்

மறையாப் புகழார் அடிபோற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்




2018-05-10 8:36 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

6)-- 

Siva Siva

unread,
May 12, 2018, 8:33:33 AM5/12/18
to santhavasantham

8)

கயிலைக் கிறைவன் திருவெற்பில்

மயிலாள் அவளோ டுறைகாட்சி

புயலார் பொழில்சூ ழுமையாற்றில்

இயல்மா தவர்தாள் இணைபோற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்




2018-05-11 8:35 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

7)


--

Siva Siva

unread,
May 13, 2018, 8:18:19 AM5/13/18
to santhavasantham

9)

உமையாள் தருபால் தனையுண்ட

தமிழா கரர்தம் சிவிகைக்கீழ்த்

தமரோ டதுதாங் கியஅப்பர்

கமழ்செங் கமலக் கழல்போற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2018-05-12 8:33 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

8)-- 

Siva Siva

unread,
May 14, 2018, 8:11:40 AM5/14/18
to santhavasantham

இப்பதிகத்தின் நிறைவுப் பாடல்:


10)

மலைபேர்த் தவன்வாய் ஒருபத்தும்

அலறச் சிறிதே விரலிட்ட

தலைவன் புகலூர் இறைதாட்கீழ்

நிலைபெற் றவர்தாள் மலர்போற்றி.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2018-05-13 8:18 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

9)-- 

Siva Siva

unread,
Apr 28, 2019, 12:54:21 PM4/28/19
to santhavasantham

2019-04-28

திருநாவுக்கரசர் குருபூஜை (சித்திரைச் சதயம் - 2019-04-29)

--------------------------

("கந்த பத்யம்" - அமைப்பில்)


கேடில் வாழ்வது கிட்டும்

வாடிச் சுழலிந் நிலையறு வழிநினை நெஞ்சே

பாடிக் கல்புணை செய்தவ

ரீடில் வாக்கின் மனரடி யிணைதனை மறவேல்.


கேடு இல் வாழ்வு-அது கிட்டும்

வாடிச் சுழல் இந்நிலை அறு வழி நினை நெஞ்சே;

பாடிக் கல் புணை செய்தவர்

ஈடு இல் வாக்கின் மனர் அடியிணைதனை மறவேல்.


வாடிச் சுழல் இந்நிலை அறு வழி நினை நெஞ்சே - நெஞ்சமே, வாடிக் கலங்குகின்ற இந்த நிலை தீர்வதற்கு வழியை எண்ணுவாயாக;

கேடு இல் வாழ்வு-அது கிட்டும் வழி நினை நெஞ்சே - நெஞ்சமே, உயர்கதி அடையும் வழியை எண்ணுவாயாக;

பாடிக் கல் புணை செய்தவர் - பதிகம் பாடிக் கல்லையே ஒரு தெப்பம் ஆக்கியவர்;

ஈடு இல் வாக்கின் மனர் அடியிணைதனை மறவேல் - ஒப்பற்ற திருநாவுக்கரசரது இரு திருவடிகளை மறவாதே! (மனர் - மன்னர் என்பதன் தொகுத்தல் விகாரம்) (சம்பந்தர் தேவாரம் - "இலங்கைமனன் முடிதோளிற வெழிலார்திரு விரலால்");


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

On Mon, May 7, 2018 at 8:39 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2018-05-07

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2018-05-09 USA)

--------------------

-- 

Siva Siva

unread,
Apr 17, 2020, 11:24:23 PM4/17/20
to santhavasantham

2020-04-17

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)

-------------------------

(சந்தக் கலிவிருத்தம் - “தானா தனனா தனனா தனனா" என்ற சந்தம்);


கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்

நல்லார் நமையாள் திருநா வரசர்

பொல்லா நமனே வரினும் வெருவொன்

றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.


கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர் நல்லார் - பிணித்த கல்லே தெப்பம் ஆகிக் கடலில் மிதக்கக் கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்;

நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்;

பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (அப்பர் தேவாரம் - 6.98.1 - “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”);

அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


On Sun, Apr 28, 2019 at 12:54 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2019-04-28

திருநாவுக்கரசர் குருபூஜை (சித்திரைச் சதயம் - 2019-04-29)

--------------------------


Siva Siva

unread,
Apr 18, 2020, 9:18:24 AM4/18/20
to santhavasantham

2020-04-18

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)

-------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


செப்பரிய செயல்செய்த திருவுடைய இருவரைக்கண்

டப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர்பெறவே

ஒப்பரிய தமிழ்சொன்ன உயர்வாக்கின் மன்னரடி

எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே.


செப்பரிய செயல் செய்த திரு உடைய இருவரைக் கண்டு - சொல்வதற்கு அரிய செயலைச் செய்த திரு மிக்க அப்பூதி அடிகளின் மனைவியையும் அவரையும் பார்த்து மனம் நெகிழ்ந்து;

அப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர் பெறவே - (பாம்பின் விடத்தால மாண்ட) அப்பூதி அடிகள் மகன் உடனே மீண்டும் உயிர்பெற்று எழும்படி;

ஒப்பு அரிய தமிழ் சொன்ன உயர் வாக்கின்மன்னர் அடி - ஒப்பற்ற அரிய தமிழ்ப் பாமாலை பாடியருளிய உயர்ந்த திருநாவுக்கரசரது திருவடிகள்;

எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே - எங்கள் மனத்தில் நீங்காமல் எப்பொழுதும் இருக்கின்றன;


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



On Fri, Apr 17, 2020 at 11:24 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-04-17

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)

-------------------------

(சந்தக் கலிவிருத்தம் - “தானா தனனா தனனா தனனா" என்ற சந்தம்);


கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்

நல்லார் நமையாள் திருநா வரசர்

பொல்லா நமனே வரினும் வெருவொன்

றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.


கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர் நல்லார் - பிணித்த கல்லே தெப்பம் ஆகிக் கடலில் மிதக்கக் கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்;

நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்;

பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (அப்பர் தேவாரம் - 6.98.1 - “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”);

அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


N. Ganesan

unread,
Apr 19, 2020, 8:15:57 PM4/19/20
to Santhavasantham
On Sat, Apr 18, 2020 at 8:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-04-18

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)

-------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


செப்பரிய செயல்செய்த திருவுடைய இருவரைக்கண்

டப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர்பெறவே

ஒப்பரிய தமிழ்சொன்ன உயர்வாக்கின் மன்னரடி

எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே.


அப்பர் நூலை எழுதுவதற்கு இரா. நாகசாமி திருப்புகலூர் சென்ற சமயம்.
சித்திரைச் சதயம் பற்றி அவ்வூரில் உள்ள கல்வெட்டு, திருவிழா பற்றி எழுதியுள்ளார்.

ஒலியில் உதித்த ஒளி

நா. கணேசன்

Siva Siva

unread,
Apr 19, 2020, 9:07:35 PM4/19/20
to santhavasantham
Thanks.

N. Ganesan

unread,
Apr 28, 2020, 8:14:03 PM4/28/20
to Santhavasantham
On Fri, Apr 17, 2020 at 10:24 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-04-17

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)

-------------------------

(சந்தக் கலிவிருத்தம் - “தானா தனனா தனனா தனனா" என்ற சந்தம்);


மலேசிய ஹிந்து சங்கம் - சித்திரை சதயம் - அப்பர் குருபூஜை:


கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்

நல்லார் நமையாள் திருநா வரசர்

பொல்லா நமனே வரினும் வெருவொன்

றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.


கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர் நல்லார் - பிணித்த கல்லே தெப்பம் ஆகிக் கடலில் மிதக்கக் கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்;

நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்;

பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (அப்பர் தேவாரம் - 6.98.1 - “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”);

அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


On Sun, Apr 28, 2019 at 12:54 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2019-04-28

திருநாவுக்கரசர் குருபூஜை (சித்திரைச் சதயம் - 2019-04-29)

--------------------------


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOsiNB-GExqpbxCb%3DMoLRd10gRsJOWZWStEaX-JDGi-hg%40mail.gmail.com.

Siva Siva

unread,
May 4, 2021, 8:49:07 AM5/4/21
to santhavasantham

2021-05-03

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )

-----------------

(வண்ணவிருத்தம்;

தானதன தான தந்த .. தனதான )

(காரணம தாக வந்து - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


சூலையெனும் நோய டைந்து .. மிகவாடித்

.. தூயதிரு நீற ணிந்து .. அடிபாடச்

சூலமுடை யான்ம கிழ்ந்து .. தருநாமம்

.. சூடியலை சூழும் இந்த .. உலகோர்கள்

மேலைவினை தீர இன்ப .. உலகேற

.. வீறுமலி வாரம் என்ற .. தமிழாலே

சீலநெறி யேப கர்ந்த .. உழவாரச்

.. சேவகரின் ஏர்மி குந்த .. கழல்வாழ்க!


பதம் பிரித்து:

சூலை எனும் நோய் அடைந்து மிக வாடித்,

.. தூய திருநீறு அணிந்து அடி பாடச்,

சூலம் உடையான் மகிழ்ந்து தரு நாமம்

.. சூடி, அலை சூழும் இந்த உலகோர்கள்

மேலைவினை தீர இன்ப உலகு ஏற,

.. வீறு மலி வாரம் என்ற தமிழாலே

சீலநெறியே பகர்ந்த, உழவாரச்

.. சேவகரின் ஏர் மிகுந்த கழல் வாழ்க!


வி. சுப்பிரமணியன்



On Sat, Apr 18, 2020 at 9:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


rathnam

unread,
May 4, 2021, 9:08:25 AM5/4/21
to santhav...@googlegroups.com
கழல் வாழ்க! என்றென்றும் வாழ்க!!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 5, 2021, 8:47:17 AM5/5/21
to santhavasantham

2021-05-03

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )

-----------------

(வண்ணவிருத்தம்;

தானான .. தனதாத்த )

(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


போரானை .. உரிபோர்த்துப்

.. பூணாக .. அரவார்க்கும்

சீரானை .. நினையார்க்குச்

.. சேயானை .. நினைவார்க்குத்

தீராத .. வினைதீர்க்கும்

.. தேவார .. மொழிகாட்டி

வாராத .. வழிகாட்டும்

.. வாகீசர் .. அடிபோற்றி.


&


நேற்று இட்ட பாடலில் முதலடியில் ஒரு சிறு மாற்றத்தோடு:

2021-05-03

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )

-----------------

(வண்ணவிருத்தம்;

தானதன தான தந்த .. தனதான )

(காரணம தாக வந்து - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


சூலையெனும் நோய டைந்து .. மிகவாடித்

.. தூயதிரு நீற ணிந்து .. துதிபாடச்

சூலமுடை யான்ம கிழ்ந்து .. தருநாமம்

.. சூடியலை சூழும் இந்த .. உலகோர்கள்

மேலைவினை தீர இன்ப .. உலகேற

.. வீறுமலி வாரம் என்ற .. தமிழாலே

சீலநெறி யேப கர்ந்த .. உழவாரச்

.. சேவகரின் ஏர்மி குந்த .. கழல்வாழ்க!


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
May 5, 2021, 10:06:18 PM5/5/21
to santhavasantham

2021-05-03

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )

-----------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தய்யா .. தனதான )

(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


பிணித்த கல்லே .. புணையாகிப்

.. பிழைக்க வல்லார் .. உழவாரப்

பணிக்கு நல்லூர் .. பலசேர்வார்

.. பழுத்த சொல்லார் .. தமிழ்பாடித்

தணிக்க வல்லார் .. விடவேகம்

.. தவித்தல் விள்ளா .. நிலையேசேர்

பிணிக்கு மெய்யே .. பிதிகாரம்

.. பிடித்தல் நல்லார் .. அவர்தாளே.


பதம் பிரித்து:

பிணித்த கல்லே புணை ஆகிப்

.. பிழைக்க வல்லார்; உழவாரப்

பணிக்கு நல்லூர் பல சேர்வார்;

.. பழுத்த சொல் ஆர் தமிழ் பாடித்

தணிக்க வல்லார் விடவேகம்;

.. தவித்தல் விள்ளா நிலையே சேர்

பிணிக்கு மெய்யே பிதிகாரம்,

.. பிடித்தல் நல்லார் அவர் தாளே.


வி. சுப்பிரமணியன்


On Wed, May 5, 2021 at 8:47 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-05-03

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )

-----------------

(வண்ணவிருத்தம்;

தானான .. தனதாத்த )

(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


போரானை .. உரிபோர்த்துப்

.. பூணாக .. அரவார்க்கும்

சீரானை .. நினையார்க்குச்

.. சேயானை .. நினைவார்க்குத்

தீராத .. வினைதீர்க்கும்

.. தேவார .. மொழிகாட்டி

வாராத .. வழிகாட்டும்

.. வாகீசர் .. அடிபோற்றி.


Siva Siva

unread,
Apr 25, 2022, 8:39:04 AM4/25/22
to santhavasantham

2022-04-20

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2022-04-25 USA / 2022-04-26 India )

----------------

(வண்ணவிருத்தம்;

தனதனதனத் .. தனதான )

(பகலிரவினில் - திருப்புகழ் - சென்னிமலை)


எருதணிகொடிப் .. பெருமானை

.. எழுதிடுமறைத் .. தமிழ்பாடி

ஒருபெரியகற் .. புணைமேலே

.. உலகினர்தொழக் .. கரைசேர்வார்

கருவிடமிடற் .. றணியீசன்

.. கழலைமுடிவைத் .. தருள்நேயர்

அருவினையறத் .. திருநாவுக்

.. கரசரடியைப் .. பணிவோமே.


பதம் பிரித்து:

எருது அணி கொடிப் பெருமானை

.. எழுதிடு மறைத் தமிழ் பாடி,

ஒரு பெரிய கற்புணைமேலே

.. உலகினர் தொழக் கரை சேர்வார்;

கருவிடம் மிடற்று அணி ஈசன்

.. கழலை முடி வைத்து அருள் நேயர்;

அருவினை அறத் திருநாவுக்கு

.. அரசர் அடியைப் பணிவோமே.


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
May 12, 2023, 8:01:54 AM5/12/23
to santhavasantham

2023-03-01

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2023-05-13 USA)

------------------------

(ருபாயி அமைப்பில்)

(சந்தக் கலிவிருத்தம் - தானா தனனா தானதனா தானதனா )

(1,2,4-ஆம் அடிகளின் ஈற்றில் இயைபு)


பாயிற் கிடவா முன்பணிவாய் பன்னவரே

மாயச் சமணைத் தீர்த்தருளும் கொற்றவரே

கோயிற் கதவம் தாழ்விலகப் பாடியவர்

வாயில் மணமார் மாலையறா மன்னவரே.


பாயில் கிடவாமுன் பணிவாய், பன்னு அவரே - பாயில் கிடக்கும் காலம் வருவதன்முன்னமே அவரை வணங்கு, துதி

மாயச் சமணைத் தீர்த்தருளும் கொற்றவரே - மாயப் புறச்சமயமான சமணத்தை நாட்டிலிருந்து நீக்கிய வெற்றியுடையவர்

கோயில் கதவம் தாழ் விலகப் பாடியவர் - (திருமறைக்காட்டில்) கோயிலின் கதவு திறக்கப் பாடியவர்;

வாயில் மணம் ஆர் மாலை அறா மன்னவரே - தம் வாயில் மணம் மிக்க தேவாரம் என்றும் திகழ்ந்த வாக்கின் மன்னவர் (திருநாவுக்கரசர்);


V. Subramanian


On Mon, Apr 25, 2022 at 8:38 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Anand Ramanujam

unread,
May 12, 2023, 1:19:49 PM5/12/23
to santhav...@googlegroups.com
‘வாயில் மணம் ஆர் மாலை அறா மன்னவர்’

திருநாவுக்கரசர் என்னும் திருப்பெயரை அழகுற விரித்துரைத்த விதம் அருமை!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 12, 2023, 3:14:20 PM5/12/23
to santhav...@googlegroups.com
Thanks.

On Fri, May 12, 2023 at 1:19 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
‘வாயில் மணம் ஆர் மாலை அறா மன்னவர்’

திருநாவுக்கரசர் என்னும் திருப்பெயரை அழகுற விரித்துரைத்த விதம் அருமை!


On Fri, May 12, 2023 at 8:01 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2023-03-01

திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2023-05-13 USA)

------------------------

பாயிற் கிடவா முன்பணிவாய் பன்னவரே

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 13, 2023, 12:14:39 PM5/13/23
to santhav...@googlegroups.com
அருமை.
பன்னு + அவரே -- பன்னுவவரே?

அனந்த் 

Siva Siva

unread,
May 13, 2023, 12:33:23 PM5/13/23
to santhav...@googlegroups.com
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40920&padhi=092&startLimit=2&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
4.92.2
இழித்தன வேழேழ் பிறப்பு மறுத்தன வென்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன வாறங்க மானவை யாற னடித்தலமே.

அடி-2 சீர்-5: போற்றவர்க்காய்க்
என்ற பிரயோகத்தைக் காண்க.

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
May 2, 2024, 10:49:48 AM5/2/24
to santhav...@googlegroups.com

2024-05-02

திருநாவுக்கரசர் துதி - சித்திரைச் சதயம் - 2024 (May 2/3)

----------------

(வஞ்சித்துறை - தானா தனதான - சந்தம்)


நல்லான் அருளாலே

கல்லே புணையாக

வல்லார் வாகீசர்

சொல்லே துணையாமே.


நல்லான் - நன்மையே வடிவானவன்; மங்கலவடிவன்; - சிவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.13.7 - "கோழம்ப மேவிய நல்லானை ஏத்துமின் நும்மிடர் நையவே");

புணை - தெப்பம்;

வாகீசர் - நாவுக்கரசர்;


V. Subramanian

Siva Siva

unread,
Apr 22, 2025, 9:01:36 PM4/22/25
to santhav...@googlegroups.com

2025-04-18

திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2025 (Apr 23)

----------------

(ஈரடிமேல் வைப்பு ;

தானான தானான தானா - தான

.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)

(அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்)

(mārgabandhu stotram - https://sanskritdocuments.org/doc_shiva/maargabandhu.html?lang=iast

A clip on YouTube: https://www.youtube.com/watch?v=1n1BxKU2cJg )


முற்குறிப்பு: இப்பாடலில், ஓர் அடியில் தானா என்ற சந்தம் அமையும் இடங்களில் நிறுத்திப் பாடப்பெறும். ஒவ்வோர் அடியிலும் அந்த இடங்களிடையே இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்.


அக்காவின் அன்பால டைந்தார் - வெள்ளை

.. ஆனேற தூர்ந்தானை நாவால்மொ ழிந்தார்

அக்கால னார்ச்செற்ற பாதம் - கந்த

.. அம்மாலை கொண்டேத்து வார்க்கில்லை ஏதம்

வாகீசர் இன்னாமம் ஒன்றே - உன்ன

.. வல்லார்க்கு வையத்தில் எந்நாளு(ம்) நன்றே.


அக்காவின் அன்பால் அடைந்தார் - திலகவதியாரின் அன்பால் நற்கதி அடைந்தவர்; திலகவதியாரின் அன்பால் ஈசனைச் சரணடையப்பெற்றவர்;

வெள்ளை ஆனேறது ஊர்ந்தானை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை; (இந்தச் சொற்றொடர் இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது; "அடைந்தார் ... இடபவாகனனை & இடபவாகனனை ... மொழிந்தார்);

நாவால் மொழிந்தார் - தம் நாவினால் போற்றிப் பாடினார்;

அக்-காலனார்ச் செற்ற பாதம் - அந்தக் காலனை உதைத்து அழித்த திருவடியை; (இந்தச் சொற்றொடர் இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது); (காலனார்ச் செற்ற = காலனாரைச் செற்ற; இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகும்);

கந்த அம்-மாலை கொண்டு ஏத்துவார்க்கு இல்லை ஏதம் - மணம் மிகுந்த அழகிய அப்பாமாலைகளால் துதிப்பவர்களுக்குத் துன்பம் இல்லை; (அம் - 1. அழகிய; 2. அந்த); (ஏதம் - துன்பம்; கேடு);

வாகீசர் இன்னாமம் ஒன்றே - வாகீசரது இனிய நாமம் ஒப்பற்றது; (ஒன்று - ஒப்பற்றது);

உன்ன வல்லார்க்கு வையத்தில் எந்நாளு(ம்) நன்றே - அந்தப் பெயரை எண்ண-வல்லவர்களுக்கு உலகில் என்றும் நன்மையே கிட்டும்; (உன்னுதல் - எண்ணுதல்); (வையம் - பூமி); (நன்று - நல்லது); (* அப்பூதி அடிகள் வரலாற்றைக் காண்க);


V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Apr 22, 2025, 10:35:55 PM4/22/25
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. சிவசிவா.

நோக்குகையில் ஆனந்தக்களிப்பு பாவையொத்து அமைந்தாற் போலிருக்கிறது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 22, 2025, at 21:01, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 23, 2025, 8:21:19 AM4/23/25
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Siva Siva

unread,
May 10, 2026, 12:56:06 PM (2 days ago) May 10
to santhav...@googlegroups.com

2026-05-10

திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2026

-------------

(வண்ணவிருத்தம்;

தனதானத் தனன .. தனதான)


தவமாகக் குளியல் .. தவிர்கோலச்

.. சமண்வீழக் கருணை .. புரிவீரர்

உவர்நீலக் கடலில் .. உயு(ம்)நேயர்

.. உழவாரப் படையை .. அணிதோளர்

பவவாழிப் புணையை .. மொழிநாவர்

.. படிவாழத் தமிழை .. வளர்நாவர்

சிவனேவைத் தருளும் .. ஒருநாமத்

.. திருநாவுக் கரசர் .. அடிவாழ்க.


பதம் பிரித்து:

தவமாகக் குளியல் தவிர்-கோலச்

.. சமண் வீழக் கருணை புரி-வீரர்

உவர்-நீலக்-கடலில் உயு(ம்) நேயர்;

.. உழவாரப் படையை அணி-தோளர்;

பவ-ஆழிப் புணையை மொழி-நாவர்;

.. படி வாழத் தமிழை வளர்-நாவர்;

சிவனே வைத்தருளும் ஒரு நாமத்

.. திருநாவுக்கரசர் அடி வாழ்க.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

தவமாகக் குளியல் தவிர்-கோலச் சமண் வீழக் கருணை புரி-வீரர் - தவம் என்று எண்ணிக் குளிப்பதைக் கைவிட்ட கோலம் உடைய சமணமதம் குன்றும்படி கருணைசெய்த வீரர்; (குளியல் - குளித்தல்); (சமண் - சமணமதம்);

உவர்-நீலக்-கடலில் உயு(ம்) நேயர் - உவர்க்கின்ற கரிய கடலில் (ஆழ்த்தச் சமணர்கள் கட்டிய கல்லே தெப்பமாகித்) தப்பிய அன்பர்; (உவர்த்தல் - உப்புக்கரித்தல்); (உயும் - உய்யும்; உய்தல் - தப்புதல்);

உழவாரப் படையை அணி-தோளர் - உழவாரப்படையைக் கையில் ஏந்தியவர்; (தோள் - புஜம்);

பவ-ஆழிப் புணையை மொழி-நாவர் - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் தெப்பத்தை (= சிவபெருமானைப் போற்றி) உரைத்த நாவுடையவர்; (பவம் - பிறவி); (ஆழி - கடல்); (புணை - தெப்பம்);

படி வாழத் தமிழை வளர்-நாவர் - உலகம் உய்யும்படி தமிழை வளர்த்த (= தேவாரத்தைப் பாடியருளிய) நாவுடையவர்; (படி - பூமி);

சிவனே வைத்தருளும் ஒரு நாமத் திருநாவுக்கரசர் அடி வாழ்க - சிவபெருமானே சூட்டியருளிய ஒப்பற்ற நாமத்தையுடைய திருநாவுக்கரசரது திருவடிகள் வாழ்க! ( ஒரு - ஒப்பற்ற);


V. Subramanian


Ram Ramakrishnan

unread,
May 10, 2026, 10:54:41 PM (2 days ago) May 10
to santhav...@googlegroups.com
அருமையான துதி. சிறப்பான சந்தக்குழிப்பு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 10, 2026, at 22:26, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages