ஶ்ரீ அகிலாண்டஶ்வரி

6 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Jul 23, 2026, 4:46:20 AM (2 days ago) Jul 23
to Santhavasanthsm சந்தவசந்தம்
தாயும்நீ தந்தைநீ தயையருட் சுடரும்நீ
தன்னுளுன் உணர்வூ றிடும்
தகையும்நீ அறிவுநீ தருமமும் ஞானமும்
தந்தாளும் குருவும் நீயே!

வாயுநீ வன்னிநீ வளியும்நீ ஒளியும்நீ
வட்டமிட் டொளிர்பிரா ணன்நீ!
வடிவுநீ வடிவிலா வெளியும்நீ முடிவும்நீ
வந்தாளும் திருவும் நீயே!

காயும்நீ கதிரும்நீ கனிமதி மலரும்நீ
கண்கண்ட தெய்வ மும்நீ!
கனிவருள் மழையும்நீ கைவல்ய நிலையும்நீ
கலிநீக்கும் அருளும் நீயே!

ஆயும்நீ! எமதிடர் நோயகன் றிடவருள்
அமுதூட்டி நின்ற தறிவேன்!
ஆனைக்கா நாயகி! ஏனைக்கண் பாரினி!
அகிலாண் டேஶ்வரி உமையே! (1)



புதிருனது புவனங்கள் பூதவி நோதங்கள்
பொய்மையுட் பொய்யா தொளிர்
புலனறிவு மனமுடற் பொதிகடந் துணர்வெனும்
பொற்சுடர் ஆன தாயே!

நிதியுனது அடிமலர்கள் நிழலெனது வாழ்வியல்
நிச்சயப் படுத்த வந்தாய்!
நீரிலுரை வார்சிவனை நேரிலணை வாயெதிரில்
நின்றெனக் கருளுகின் றாய்!

விதியெனது பதியுவிதை விளையுமிடர் களையுமுனை
விட்டுயான் செல்வ தேது!
வீடருளுந் தாடங்க மோடெதிரில் நிற்குமுனை
விழிவழிந் துண்ட போது

கதியுனது காலடியே! கரிக்காவின் நாயகியே!
கைவல்ய வர தாயகி!
காணாத பேறுனையே கண்டுய்ய வைத்தஸ்ரீ
அகிலாண் டேஶ்வரி உமையே! (2)


மீ. ரா

Sent from my iPhone

Rajja Gopalan

unread,
Jul 23, 2026, 1:51:45 PM (2 days ago) Jul 23
to Santhavasanthsm சந்தவசந்தம்
🙏
(3)

கண்ணீரே தண்ணீராய்க் கண்மலரே துதிப்பூவாய்
கலந்தமனப் பாலன் பினால்
கனிமொழியும் முனிமொழியும் கண்டதுதி வெள்ளம்
கட்டியங் கூறும தனால்

பண்ணூறும் நல்லிதயப் பாத்திரமே பொற்கலசம்
பரவசம் கவரிவி சையாய்ப்
பரிவுநறும் பன்னீரும் பக்தியெனும் இளநீரும்
பணிவுநெய் உருகும தனால்

செண்டூறும் மந்திரமும் சிந்தனையாம் சந்தனமும்
சேருமபி டேகமெ னவாய்
சேயனுனை யேதினமும் நேயமுடன் தொழுகின்ற
செயலுறுதி வரம ளித்தாய்!

வண்டூறூங் கண்முனைகள் கண்டூடிக் காக்கவே
வந்தெதிர் நின்ற மயிலே!
வனராணி! ஆனைக்கா வாய்த்தபரி பூரணி!
அகிலாண் டேஶ்வரி உமையே!

மீ. ரா



(3)

With my tears as the sacred water,
my lotus-eyes as the flowers of worship,
my heart, dissolved in devotion, as the milk of offering;
with the flood of praise woven from the sweetness of Tamil
and the wisdom-laden utterances of the sages in Sanskrit—

Making my heart, enriched with countless hymns, the golden vessel;
my ecstasy the ceremonial yak-tail fan;
my compassion the fragrant rosewater,
my devotion the tender coconut water,
and my melting humility the clarified butter—

Let sacred mantras become the vermilion offering,
and contemplative thoughts the cooling sandal paste;
thus gathering all these as the offerings
for Your holy Abhishekam,
You have granted me the blessed resolve
to worship You each day with a loving heart,
as Your devoted child.

O Peacock-like Mother,
who came and stood before me
to protect me with the gracious glance
of Your flower-like eyes, alive with bees!

O Sovereign Queen of the Forest!
O Paripūrani, adored by the elephant at Tiruvanaikaval!
O Mother Akhilāṇḍeśvarī,
I bow to You.


Mee. Ra

Sent from my iPhone

> On 23 Jul 2026, at 14:16, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
>
> தாயும்நீ தந்தைநீ தயையருட் சுடரும்நீ

Rajja Gopalan

unread,
Jul 24, 2026, 9:48:31 PM (8 hours ago) Jul 24
to Santhavasanthsm சந்தவசந்தம்
🙏
(4)
சாத்திரங்க ளோஅறியேன்! 
      சாதனைக ளோபுரியேன்!
           சரியைமுத லான தறியேன்!
சத்தியமாய் ஆனதெது 
      சாதிமத பேதமெது
          சடங்குகளோ யாது  அறியேன்!

தோத்திரங்க ளும்அறியேன்!
    துதிமுறைகள் தானறியேன்!
        துட்டகுணம் விட்டொழி யிலேன்!
துணையுனது இணையடிகள் 
    எனமனது பிணைவதனால்
        தொடர்ந்துனைத் தான்வேண் டினேன்!

பூத்தவிழி யாற்கருணை 
    புரியுமரு ளேநினது
        பொற்பதப் புகல் நாடியே
புள்ளெனவுஞ் சிறுபிள்ளைச் 
     சொல்லெனவும் தடுமாறி
        பூசிக்கும் இசை பாடினேன்!

காத்தருள்க! நினதுகடைக் 
    கண்ணருள்க! பெண்ணமுதே!
        கரிக்கா வளர் சோதியே!
கதிரெதிரில் பனியெனவென் 
    கவலையழிந் தோயுமே!
        அகிலாண் டேஶ்வரி உமையே!

மீ. ரா

(meaning)
I know not the scriptures,
Nor have I practised sacred disciplines.
I do not know the paths of Sariyai
Or any solemn modes of worship.
I know not the Eternal Truth,
Nor can I tell caste from creed,
Nor grasp the weight of rites and observances.
I know not hymns of praise,
Nor the fitting form of offering.
I have not shed my wayward ways.
Yet my heart clings, unwavering,
To Your incomparable twin lotus feet.
I seek only You, without cease—
Refuge at Your golden feet,
Those feet that pour compassion
From Your blossoming, gracious eyes.
With faltering voice I sing these praises,
Like a small bird’s simple trill,
Like an innocent child’s first words.
Protect me by Your grace.
Turn on me that merciful sidelong glance,
O Nectar-soft Divine Mother,
O Radiant One who dwells in Karikkā.
As frost yields to the rising sun,
Let all my sorrows melt and vanish.
O Akhilāṇḍeśvarī, Divine!

24-7-2026

On Thu, 23 Jul 2026, 23:21 Rajja Gopalan, <raj...@gmail.com> wrote:
🙏

Sai Ganesan H

unread,
Jul 24, 2026, 10:48:35 PM (7 hours ago) Jul 24
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்கள்! 👏👏👏💐💐💐
— சத்ய வேழன் H சாயி கணேசன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANuAMWwHEt6d9xvmdHRnTn6ZPH08DtUOHdY0jV6JYpxV2qwt%3Dw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages