பாரதி எனும் பகலவன்

4 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Dec 11, 2025, 2:25:04 AM (5 days ago) Dec 11
to Santhavasanthsm சந்தவசந்தம்
*பாரதில் பார்! அதிபன்*
*பாரதியே நம்தலைவன்!*

பற்ற வைத்தான் தீயை!
பதிய வைத்தான் நற்கோபம்!
சுற்ற வைத்தான் தேடும்
சுதந் திரந்தான் வீடென்று
முற்ற வைத்தான் உள்ளம்
முழுமை யைத்தான் மெஞ்ஞானம்
உற்ற வர்க்காம் வீடென்று
உணர வைத்தான் என்னாசான்!

செல்லம்மாள் பசித்திருக்கச்
செல்வக் குறுணையையும்
மெல்லத்தான் குருவிகளின்
மெய்பசிக்குத் தரும்வள்ளல்
சொல்லத்தான் சொல்லேது!
சுடர்நநெருப்பன் பாரதிஎன்
இல்லத்தான்! உள்ளத்தான்!
இறைவனவன் என்பேனே!

மீ. ரா
11-12-2025
Sent from my iPhone

Lalitha & Suryanarayanan

unread,
Dec 11, 2025, 2:27:53 AM (5 days ago) Dec 11
to santhav...@googlegroups.com
" பாரதிஎன்
இல்லத்தான்! உள்ளத்தான்! "

- மிக அருமை, மீ.ரா !

சிவசூரி.

Rajja Gopalan

unread,
Dec 11, 2025, 4:23:09 AM (5 days ago) Dec 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Bharathiyar always loads a great amount of weight and guilt in my heart….


பாரதியார்  யாரென்று

பாரதனாற் தானென்று

பாரதியாய் நானன்று

படபடத்துத் திரிந்ததவும்


பாரிதனை எந்தமிழாற்

பார்மாற்று வேனென்று

பாடலிடுங் கேள்விகளாற்

பலகணைகள் பூட்டியதும்


ஏனெதற்கு சாதிமதம்

இனச்செருக்கு பெண்கொடுமை

ஊனெதற்குப் பிறர்க்குதவா

உயிரெதற்கு என்றதுவும்


இளவயதின் நினவாக

எனுட்கனலும் தணிவாக

களவுமனம் புனைவாகக்

கரைந்ததுவோ எனதுறுதி!


ஊழலிலே அரசாங்கம்!

உண்மைகளுக் கவமானம்!

பாழுமறி வீனர்களின்

பகுத்தறிவுச் சொறிசிறங்கு!


தொகுத்துணரத் தெரியாத

துட்டர்களின் கையிற்சட்டம் !

வகுப்புவத வாதங்கள்!

வன்மமுடன் ஆபாசம்!


விடுதலையில் குழறுபடி!

விருப்பமுடன் சிறைவாசம்!

கொடுமையிது பணலசதிக்

கொள்ளையரின் ராஜாங்கம்!


ஏனெனக்குள் பாரதியார்

எழுந்தின்னும் வரவில்லை!

ஊன்மிகுத்த காரணத்தால்

உணர்விழப்பு ஆனதுவோ!


சீரளித்த பாரதியே!

செந்தமிழின் நல்வேந்தே!

யாரினித்தீ மூட்டுவது?

கும்பிருட்டை ஓட்டுவது?


மீ. ரா

11-12-2025


Sent from my iPhone

On 11 Dec 2025, at 07:27, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNO4TPgHwguTJaRU3WhgmL2O-8VhcVhJkr6rxa8gQzYCow%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Dec 11, 2025, 7:14:52 AM (5 days ago) Dec 11
to santhav...@googlegroups.com, Santhavasanthsm சந்தவசந்தம்
பாரதியின் அறச்சீற்றத்தைப் போற்றும் பாடல் மிக அருமை!

Subbaier Ramasami

unread,
Dec 11, 2025, 8:27:16 AM (5 days ago) Dec 11
to santhav...@googlegroups.com
சிறப்பான கவிதை

இலந்தை
Reply all
Reply to author
Forward
0 new messages