வெங்காயம்

5 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 3, 2026, 1:22:07 PM (8 days ago) Apr 3
to santhavasantham

Another vegetable veNbA!


14)

2026-03-16

வெங்காயம்

----------------

(வெண்பா)


வெங்காயம் வேண்டும் விரைந்துநறுக் கீரென்றாள்

பொங்கார்வத் தோடுசெய்து புண்ணுண்டேன் - செங்காயம்

கைவிரலில் மைவிரவு கண்ணியது கண்டுரைத்தாள்

ஐய வரிமின் அறிந்து.


பதம் பிரித்து:

"வெங்காயம் வேண்டும்; விரைந்து நறுக்கீர்" என்றாள்;

பொங்கு-ஆர்வத்தோடு செய்து புண்ணுண்டேன்; செங்காயம்

கைவிரலில்; மை விரவு கண்ணி அது கண்டு உரைத்தாள்,

"ஐய! அரிமின் அறிந்து".

(/ "ஐய! வரிமின் அறிந்து").


(வெங்காயம் - 1. Onion; 2. வெம்மை + காயம்

வெம்மை - விருப்பம்; காயம் - புண்);

ஐயவரிமின் - 1. ஐய, வரிமின்; 2. ஐய, அரிமின்;

ஐய - 1. தலைவனே; 2. ஐயோ;

அரிதல் - வெட்டுதல்;

வரித்தல் - கட்டுதல்; தேர்ந்துகொள்ளுதல்;


V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages