இன்று சித்திரைப் பூசம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான பண்ணிசை மாமேதை தியாகராஜரின் 259-ஆம் ஜயந்தி கொண்டாடப்படும் நாளிது.
*******************
(அறுசீர் விருத்தம்)
நார்கனிந்த உள்ளத்தி ராமனைவைத் தேத்தியவன்
நளிசொல் பன்னூ
றேர்செறிந்த பாடறந்தெந் தென்னிசையின் இசையிமயம்
எட்டச் செய்யச்
சீர்மிகுந்த ஐயாறு வழியந்த மாமேதை
தியாக ராஜன்
பார்புகுந்த நற்றினத்தவ் வரியகலைப் பொக்கிடத்தைப்
பாடு வோமே.
நார் = அன்பு; நளி = பெருமை; ஏர் = அழகு; பாடறந்து = பாடல் தந்து; இசை = சங்கீதம், புகழ்
*******************