தமிழைப் பிழையின்றிக் கற்க விரும்புவதை மெச்சுகின்றேன்!
கூகிள் காட்டிய "தொல்லம்" சூத்திரத்தைப் புலவர்கள் விளக்கக்கூடும்.
("காப்பியன் / காப்பியம்" என்பது சாதிப்பெயர் என்று பிறர் சொல்ல அறிந்தபடியால், இக்காலத் திராவிட நாட்டு அரசு சாதிப்பெயர்களை நீக்கியே எழுதுவதால், இந்த நூலைத் "தொல்லம்" என்று அழைத்தலே இக்கால அரசு எண்ணப்படி சரி என்று தோன்றுகின்றது).
குடிமை, ஆண்மை, இளமை, மூப்பே,
அடிமை, வன்மை, விருந்தே, குழுவே,
பெண்மை, அரசே, மகவே, குழவி,
தன்மை திரி பெயர், உறுப்பின் கிளவி,
காதல், சிறப்பே, செறற்சொல், விறற்சொல்-என்று
ஆவறு-மூன்றும் உளப்படத் தொகைஇ,
அன்ன பிறவும், அவற்றொடு சிவணி,
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையினஆயினும்,
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்.