உ
இன்றெ னக்குப் பிறந்ததினம்
எண்பத்தைந்தில் நுழைகின்றேன்
ஒன்று சொல்வேன் என்தேவி
உயர்வாய் என்னைக் காக்கின்றாள்
என்றும் என்றும் எதுசரியோ
எடுத்துத் தந்து வாழ்த்துகிறாள்
நன்றென் றிருந்தால் நன்றேதான்
நமக்கென் தெரியும் இறை நோக்கு.
என்னிலும் வயது மூத்தருக்கு
என் வணக்கம்
என்னிலும் இளையோருக்கு என் நல்வாழ்த்து
இலந்தை
20-4-2026
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPztitDg_r-Ko%3D%2B_r_TMwwviOfVHNxn_Sw8KBoTWgE-zg%40mail.gmail.com.

On Apr 20, 2026, at 11:36 AM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vqH%2B7WiUarjecViEPvqYN%2BaQZgtjQpt3U-b2drLEhRvA%40mail.gmail.com.
தலைவர் கவிவேழம் இலந்தையாருக்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க நீவிர் பல்லாண்டு. வளர்க நுந்தம் தமிழ்த் தொண்டு.
கற்பனைத்தேர் இவர்ந்தேறிக் கவிமழையாய்ப் பெய்வார்
…. கற்பவர்தம் நெஞ்சினிக்கக் கனிபலவும் கொய்வார்
நற்புகழில் தமிழ்மரபை நாட்டுகின்ற ஏறு
…. நங்குழுமத் தலைவரிவர் நாம்கொண்ட பேறு
சொற்சுவையில் பொருட்சுவையைத் தோய்த்தளிக்கும் வேழம்
…. சுடரொளியாய் திகழுமவர் பேர்நிலத்து வாழும்
எற்றிசையும் போற்றுகின்ற எம்தலைவர் வாழ்க
…. எண்பத்தோ டைந்துடனே ஏற்றமெலாம் சூழ்க
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
20/04/2026
On Apr 20, 2026, at 19:20, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPztitDg_r-Ko%3D%2B_r_TMwwviOfVHNxn_Sw8KBoTWgE-zg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CADDmYbFvx0u_BoNyKdM%2ByTW8m_MArD_q9vnzJ%2Bp-SGRfZcgkCQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BVcKE6LRQOgMPci_e1_41rvURQrwJYS%2BLskH7usU63M9w%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBASqndcHbgv6Bz8ZgF55P9tgenfR%3Dj1zfeR0yqftWt1Vw%40mail.gmail.com.
--
பெருமை வாழ்வில் மிகவுடையார்
பெரும்புகழ் பெற்ற கவிவேழம்
குருவாய் வந்து வாய்த்ததனால்
குறைகள் இன்றி கவிசெய்தோம்!
வருநாள் யாவினும் நலத்துடனே
வாழ்ந்திட வேண்டி வாழ்த்துகிறேன்!
திருமால் அவர்க்குத் துணைநிற்க
திருவடி போற்றி வணங்குகிறேன்!
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNOijY7UTrk-CLTPb9RtgBev5fUHqN_3hXj5k6iKKBnjjw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B0EE92F1-D1F9-477F-8919-0E773B5A5C6A%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP0HNNLgCmdXKVqVnGaeek%2BNyrkGwqPx9P9YehO2gMaVQ%40mail.gmail.com.
என் பாடலைச் செப்பம் செய்ய உதவியமைக்கு நெஞ்சார்ந்த் நன்றி.
இதோ திருத்திய வடிவில்.
பெருமை வாழ்வில் மிகவுடையார்
பெரும்புகழ் பெற்ற கவிவேழம்
குருவாய் வந்து வாய்த்ததனால்
குறையிலா வண்ணம் கவிசெய்தோம்!
வருநா ளெல்லாம் நலத்துடனே
வாழ்ந்திட வேண்டி வாழ்த்துகிறேன்!
திருமால் அவர்க்குத் துணைநிற்க
திருவடி போற்றி வணங்குகிறேன்!