நகைசெய்தாள் நாணி நனி!

3 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 25, 2025, 8:16:31 PM (yesterday) Nov 25
to santhav...@googlegroups.com
.         . நகைசெய்தாள் நாணி நனி!

                 (நேரிசை வெண்பா)

பாதிமதி உன்றன் பளிங்குநெற்றி என்றேன்நான்
மீதிமதி யாங்கென்றாள் மெல்லியலாள் - கோதில்
முகில்குழல் மொய்த்ததனை மூடியதே என்றேன்
நகைசெய்தாள் நாணி நனி!

                                  —தில்லைவேந்தன்.
Reply all
Reply to author
Forward
0 new messages