மதிசூடி துதிபாடி - 10

1,038 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 17, 2016, 4:39:04 PM3/17/16
to santhavasantham
Starting a new thread as the old thread (மதிசூடி துதிபாடி - 9) has more than 800 posts.

For the prior thread:
மதிசூடி துதிபாடி - 9: https://groups.google.com/forum/?hl=en#!topic/santhavasantham/nayMqE8k7Vw



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
Mar 17, 2016, 4:46:28 PM3/17/16
to santhavasantham

2013-11-16/17
திருத்துருத்தி (இக்கால வழக்கில் 'குத்தாலம்'. இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது)
----------------
(அறுசீர்விருத்தம் - 'மா மா மா மா விளம் கூவிளங்காய்' என்ற வாய்பாடு.
ஐந்தாம் சீர் மாச்சீர் ஆயின் ஆறாம் சீர் கருவிளங்காய்.)

(கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.7 - 'இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற')

1)
ஓலை யாலன் றடிமை ஆனார் உடற்பிணி தீர்த்தவனே
பாலை யாழைப் பாடித் தேனைப் பரிசென வண்டடையும்
சோலை சூழ்ந்த துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
வேலை சூழ்ந்த உலகிற் பிறவா விதம்வினை தீர்த்தருளே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Mar 18, 2016, 7:55:37 PM3/18/16
to santhavasantham

2)
நெற்றிக் கண்ணாய் நிலவ ணிந்தாய் நீரை அடைத்தருளும்
கற்றைச் சடையாய் காவென் றிமையோர் கதற இரங்கிவிடம்
துற்ற கண்டா துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
சுற்றும் உலகிற் பிறவா வண்ணம் தொல்வினை தீர்த்தருளே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-17 16:46 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2013-11-16/17
திருத்துருத்தி (இக்கால வழக்கில் 'குத்தாலம்'. இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது)
----------------
(அறுசீர்விருத்தம் - 'மா மா மா மா விளம் கூவிளங்காய்' என்ற வாய்பாடு.
ஐந்தாம் சீர் மாச்சீர் ஆயின் ஆறாம் சீர் கருவிளங்காய்.)

(கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.7 - 'இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற')

1)



Siva Siva

unread,
Mar 19, 2016, 7:37:50 PM3/19/16
to santhavasantham

3)
மடல விழ்ந்த மலர்கள் தூவி வானவர் வந்திறைஞ்சக்
கடலு மிழ்ந்த கடுவி டத்தைக் களத்தினில் வைத்தவனே
சுடலை ஆடும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
உடலை எய்தி உழலா வண்ணம் ஊழ்வினை தீர்த்தருளே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-18 19:55 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2)

Siva Siva

unread,
Mar 20, 2016, 6:34:28 PM3/20/16
to santhavasantham

4)
சீலத் தொண்டர் பால டைந்த சினமலி காலனுயிர்
கால மார்பில் காலால் உதைத்துக் காத்தவனே கரத்திற்
சூலம் ஏந்தும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
ஞாலம் எய்தி நலியா வண்ணம் நன்மை புரிந்தருளே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-19 19:37 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

3)

Siva Siva

unread,
Mar 21, 2016, 8:46:22 PM3/21/16
to santhavasantham

5)
பணியும் இமையோர் பரவ அவர்க்குப் பரிந்து மருந்தளித்த
மணிகண் டத்தாய் மங்கை பங்கா மாசுணம் ஊர்முடிமேல்
துணிவெண் பிறையாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேன்பிறவிப்
பிணியும் நோயும் இன்றி மகிழப் பெருவினை தீர்த்தருளே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-20 18:34 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

4)

Vis Gop

unread,
Mar 22, 2016, 11:00:54 AM3/22/16
to santhav...@googlegroups.com
நெற்றியிற் கண்ணாய் நிலவை அணிந்தானோ 
சுற்றம் சுகமே பெற!
நல்வாழ்த்துக்களுடன் 
கோபால்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

sankara dass nagoji

unread,
Mar 23, 2016, 9:01:49 AM3/23/16
to சந்தவசந்தம்

காத்தருள் கச்சி ஏகம்பனே (திருக்கச்சி ஏகம்பம்)

(வஞ்சி விருத்தம் - 'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு)


தீர்ப்பவன் நம்முடைச் செடிதனைப்

போர்ப்பவன் கரியுரி புலியதள்

சேர்ப்பவன் அரைதனில் சிவவெனக்

காப்பவன் கச்சியே கம்பனே….(1) -- 23-Mar-2016


சிவவெனக் காப்பவன் - சிவ என்று சொன்னால் காப்பவன்

செடி - வினை


>>1)

>>ஆர்த்திரு வினையெனை ஆரிருள்

>>சேர்த்திடில் செய்வதென் செப்புவாய்

>>பூத்திரள் கொடுன்கழல் போற்றினேன்

>>காத்தருள் கச்சியே கம்பனே.

- sankara dass

Siva Siva

unread,
Mar 23, 2016, 9:47:38 AM3/23/16
to santhavasantham
That is an interesting perspective too! :)

நெற்றிக் கண்ணாய் நிலவ ணிந்தாய் - "நெற்றிக்கண்ணனே! நிலவை அணிந்தவனே!" என்ற விளிகள்.

Vis Gop

unread,
Mar 23, 2016, 12:39:49 PM3/23/16
to santhav...@googlegroups.com
தீர்ப்பவன் நல்வினை தீவினை யாவைக்கும் 
காப்பவன் அன்புக் கழல்!
கோபால்.

--

Siva Siva

unread,
Mar 23, 2016, 5:35:11 PM3/23/16
to santhavasantham

6)
சுடலைப் பொடியைப் பூசீ கணங்கள் சூழ நடம்புரிவாய்
இடபக் கொடியாய் இண்டை போல இளமதி ஏறுகின்ற
சுடர்பொற் சடையாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனுலகில்
இடர்கட் கிடமாய் இளையா வண்ணம் இருவினை தீர்த்தருளே.

7)
ஓடோர் கையில் உடைய வள்ளால் ஒள்ளெரி சேர்கணையால்
கூடார் புரங்கள் கொளுத்தும் மைந்தா குளிர்புனல் பாய்சடையாய்
தோடோர் செவியாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
வாடா வாண்ணம் வலிய வினைகள் மாய மகிழ்ந்தருளே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-21 20:46 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

5)

Siva Siva

unread,
Mar 23, 2016, 5:36:28 PM3/23/16
to santhavasantham

7)
ஓடோர் கையில் உடைய வள்ளால் ஒள்ளெரி சேர்கணையால்
கூடார் புரங்கள் கொளுத்தும் மைந்தா குளிர்புனல் பாய்சடையாய்
தோடோர் செவியாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்

வாடா வண்ணம் வலிய வினைகள் மாய மகிழ்ந்தருளே.


2016-03-23 17:35 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

6)
சுடலைப் பொடியைப் பூசீ கணங்கள் சூழ நடம்புரிவாய்
இடபக் கொடியாய் இண்டை போல இளமதி ஏறுகின்ற
சுடர்பொற் சடையாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனுலகில்
இடர்கட் கிடமாய் இளையா வண்ணம் இருவினை தீர்த்தருளே.


அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Nagoji

unread,
Mar 24, 2016, 8:22:34 AM3/24/16
to santhav...@googlegroups.com

சுடுபவன் முப்புரம் சுடரொளி

விடுபவன் விழியினால் வேளினை

அடுபவன் ஆர்த்திடும் காலனைக்

கடிபவன் கச்சியே கம்பனே…(2) -- 24-Mar-2016


விடுதல் - ஒளிவிடுதல், மிகுதல்

அடுதல் - எரித்தல்

வேள் - மன்மதன்


>>2)

>>செய்வினைக் கடலினில் திகைக்கிறேன்

>>மைவிழி மங்கைம ணாளனே

>>கொய்ம்மலர் கொடுன்கழல் போற்றினேன்

>>கைகொடு கச்சியே கம்பனே.


- sankara dass

Siva Siva

unread,
Mar 24, 2016, 9:22:56 PM3/24/16
to santhavasantham

8)
தோளார் வலியால் மலையை அசைத்த துட்டனை அன்றடர்த்தாய்
வாளார் கண்ணி பங்கு மகிழ்ந்தாய் மாதவர் போற்றுகின்ற
தோளா முத்தே துருத்திப் பெருமான் தொழுமடி யேனுலகில்
மீளா வண்ணம் வினைகள் தீர்த்து மெய்ந்நெறிச் சேர்த்தருளே.


2016-03-23 17:36 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

7)


--

Nagoji

unread,
Mar 25, 2016, 8:28:48 AM3/25/16
to santhav...@googlegroups.com

தண்டமிழ் நாவினன் சங்கரன்

வண்டறை மாலையார் மார்பினன்

மண்டையிற் பலிகொளும் மையொளிர்

கண்டனெம் கச்சியே கம்பனே….(3) -- 25-Mar-2016


>>3)

>>அண்டிய வினைகளால் ஆரிடர்

>>கொண்டிடில் செய்வதென் கூறுவாய்

>>தொண்டனாய்த் தமிழ்த்தொடை சூட்டினேன்

>>கண்டருள் கச்சியே கம்பனே.


- sankara dass

Siva Siva

unread,
Mar 25, 2016, 11:14:17 PM3/25/16
to santhavasantham

9)
கண்ணிற் றீயாய் கரிய மாலும் கடிமலர் மேலவனும்
நண்ணற் கரிய சோதி யாகி நடுவி லுயர்ந்தவனே
சுண்ண நீற்றாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
மண்ணிற் பிறவி எய்தா வண்ணம் வல்வினை தீர்த்தருளே.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-24 21:22 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

8)

Nagoji

unread,
Mar 26, 2016, 2:19:14 AM3/26/16
to santhav...@googlegroups.com

வெண்ணிறக் காளையன் வேதியன்

பெண்ணமர் மேனியன் பீறிடும்

தண்ணமர் வேணியன் தற்பரன்

கண்ணுதல் கச்சியே கம்பனே….(4) -- 26-Mar-2016


>>4)

>>உண்ணுதல் உறங்குதல் உறுபிணி

>>நண்ணுதல் என்றுநான் நலிவனோ

>>எண்ணுதல் செய்கிறேன் ஏன்றுகொள்

>>கண்ணுதல் கச்சியே கம்பனே.


- sankara dass

Siva Siva

unread,
Mar 26, 2016, 8:09:42 AM3/26/16
to santhavasantham
/ பீறிடும் தண்ணமர் வேணியன்/

I think you intended to say பீரிடும்.

2016-03-26 2:19 GMT-04:00 Nagoji <nag...@gmail.com>:

வெண்ணிறக் காளையன் வேதியன்

பெண்ணமர் மேனியன் பீறிடும்

தண்ணமர் வேணியன் தற்பரன்

கண்ணுதல் கச்சியே கம்பனே….(4) -- 26-Mar-2016



- sankara dass


Siva Siva

unread,
Mar 26, 2016, 7:36:36 PM3/26/16
to santhavasantham

10)
மாயம் பேசி வலையை விரிக்கும் வஞ்சகர் சொல்விடுமின்
தூய மதியாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
காயம் எய்திக் கலங்கா வண்ணம் கடுவினை தீர்த்தருளாய்
தோயச் சடையாய் என்பார் கட்குத் துயர்களை வான்சிவனே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-25 23:14 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

9)

Vis Gop

unread,
Mar 27, 2016, 4:01:58 AM3/27/16
to santhav...@googlegroups.com
துயர்களை வான்சிவனே.
முழுதும் முன்னிலையாக, துயர்களை வாய்சிவனே என்றிருக்கலாமோ?
கோபால்.

--

Siva Siva

unread,
Mar 27, 2016, 10:29:33 AM3/27/16
to santhavasantham
Thanks.
However, in the context of this song, such a change may not fit.

Nagoji

unread,
Mar 27, 2016, 11:52:22 AM3/27/16
to santhav...@googlegroups.com
Thanks SivaSiva for pointing that out. Yes it is பீரிடும்.

- sdn

Nagoji

unread,
Mar 27, 2016, 11:52:42 AM3/27/16
to santhav...@googlegroups.com

மதியொளிர் முடியுடை மன்னவன்

குதிநதி சடையுடைக் கொற்றவன்

எதியருள் இணையிலன் எவர்க்கும்நற்

கதியருள் கச்சியே கம்பனே….(5) -- 27-Mar-2016


>>5)

>>சதிபுரி புலன்களால் சழக்கனாய்,

>>விதிவழி நின்றுனை வேண்டிலேன்;

>>மதியிலேன்; அன்பனாய் வழிபடும்

>>கதியருள் கச்சியே கம்பனே.


- sankara dass

Siva Siva

unread,
Mar 27, 2016, 5:49:45 PM3/27/16
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாட்டு :

11)
கடிய விடையன் கலைசேர் கையன் கார்மலி மாமிடறன்
கொடிய பாம்பு குளிர்வெண் திங்கள் கொன்றை அணிந்தபரன்
துடியை ஏந்தி துருத்திப் பெருமான் துணையடி ஏத்துகின்ற
அடியர் தங்கள் மிடியை நீக்கி அருள்புரி சங்கரனே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



2016-03-26 19:36 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

10)

Nagoji

unread,
Mar 28, 2016, 1:12:37 PM3/28/16
to santhav...@googlegroups.com

சுழித்தெழும் நதியணி துல்லியன்

வழித்துணை யாய்வரும் வண்கையன்

அழித்ததற் கருள்பவன் அயன்சிரம்

கழித்தவன் கச்சியே கம்பனே….(6) -- 28-Mar-2016


அழித்ததற் கருள்பவன் - சிவன் சம்ஹாரம் செய்வதும் ஒரு வகை அருளே.


>>6)

>>வழிப்படா மனத்தினால் வல்வினைச்

>>சுழிப்பட விரைகிறேன் தூயனே;

>>விழித்துவேள் எரித்தவா; வெவ்வினை

>>கழித்தருள் கச்சியே கம்பனே.


- sankara dass

Siva Siva

unread,
Mar 29, 2016, 6:19:25 PM3/29/16
to santhavasantham

அடுத்த பதிகத்தின் முதல் இரு பாட்டுகள்:

2013-11-22
திருநெல்வேலி
----------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(
சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")

1)
அறைகின்ற கடலுமிழ்ந்த ஆலாலம் அமுதுண்டு
கறைகொண்ட மிடற்றானைக் காந்திமதி காதலனை
நிறைநெஞ்சர் வந்திக்க நெல்வேலித் தடங்கோயில்
உறைகின்ற உத்தமனை ஓதவினைத் தீதறுமே.

2)
மதனாகம் எரித்துப்பின் மனைவிக்குப் பரிந்தானைக்
கதநாகக் கச்சையனைக் காந்திமதி காதலனை
நிதமன்பர் திரண்டேத்தும் நெல்வேலித் தடங்கோயில்
மதமத்தம் சூடிறையை வாழ்த்தவினை மாய்ந்தறுமே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Nagoji

unread,
Mar 30, 2016, 9:37:09 AM3/30/16
to santhav...@googlegroups.com
ஆலாலம் அமுதுண்டு --> ஆலால அமுதுண்டு?

- sdn

Nagoji

unread,
Mar 30, 2016, 9:39:58 AM3/30/16
to santhav...@googlegroups.com

துமித்தவன் சொல்மகள் நாசியை

அமைத்தவன் அண்டமோ டியாவையும்

குமைத்தவன் கூற்றினைக் குறையெலாம்

கமித்தருள் கச்சியே கம்பனே….(7)  -- 29-Mar-2016


துமித்தல் - வெட்டுதல்/அறுத்தல்

சொல்மகள் - கலைமகள்

கமித்தல் - பொறுத்தல்


>>7)

>>குமிழ்க்கிணை சுகங்களைக் குறியென,

>>அமிழ்த்திடும் அருவினை பெருக்கினேன்;

>>தமித்துநான் வாடினேன்; தாயெனக்

>>கமித்தருள் கச்சியே கம்பனே.


- sankara dass

Nagoji

unread,
Mar 30, 2016, 9:40:25 AM3/30/16
to santhav...@googlegroups.com

புரத்தினை நகைத்தெரி புரிந்தவன்

சரத்தர(வு) அணிந்தவன் அரக்கனின்

உரத்தினை அடர்த்தவன் ஒண்மழுக்

கரத்தினன் கச்சியே கம்பனே…(8) -- 30-Mar-2016


சரம் - மாலை

சரத்தரவு - அரவுச்சரம் - பாம்பு மாலை என்று கொள்க


>>8)

>>உரத்தினால் மலையசை அரக்கனும்

>>உரக்கவோ எனவிரல் ஊன்றினாய்

>>சரக்கவே அருள்புரி கரப்பிலாக்

>>கரத்தினாய் கச்சியே கம்பனே.


- sankara dass

Siva Siva

unread,
Mar 30, 2016, 11:11:40 AM3/30/16
to santhavasantham
/கடலுமிழ்ந்த ஆலாலம் அமுதுண்டு/
ஆலாலத்தை அமுதாக உண்டு .

சம்பந்தர் தேவாரம் - 2.20.2 - 
கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடமே வினையே.

ramaNi

unread,
Mar 30, 2016, 11:39:33 AM3/30/16
to சந்தவசந்தம்
திருநெல்வேலி
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.48.1: கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்)

கோவில்

தேவாரப் பதிகம்
சம்பந்தர்: 03.092: மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்

காப்பு
பொல்லாப்பிள் ளையாரே போற்றினேன் ஓர்பதிகம்
நெல்லையப்பர் மீது நெகிழ்ந்தவர் - வல்லவி
காந்திமதி அம்மையின் காப்பையும் வேண்டியே
பாந்தமுடன் பாடவருள் வீர்!

பதிகம்
தான்தோன்றி யுருவாகத் தன்னகத்தே அம்மையுடன்
வான்தோன்றி கங்கைநதி வடிவாகப் பொருநைவரக்
கான்தோன்றி வேணுவனம் காட்சிதந்தே நிலைபெற்றுத்
தேன்தோன்றி மலர்சூழத் திருநெல்லை யமர்ந்தாரே.

[தன்னகத்தே அம்மையுடன் = சுயம்பு லிங்கத்தில் உறைந்த அன்னை உருவுடன்]

வேணுவன நெல்லையப்பர் வேய்முத்த நாதரவர்
நாணுவன நங்கையவள் நாயகியாம் காந்திமதி
தோணுவன தோய்வதனால் தோன்றுகின்ற வினைதீர்க்க
சேணுவனன் மூலிகையாய்த் திருநெல்லை யமர்ந்தாரே.

[சேணுவனன் = ஆகாச கருடன் என்று வழக்கிலுள்ள விடம் தீர்க்கும் மூலிகை]

--ரமணி, 30/03/2016

*****

M. Viswanathan

unread,
Mar 30, 2016, 12:31:44 PM3/30/16
to Santhavasantham
கவிஞர் சிவசிவா, கவிஞர் நாகோஜி, கவிஞர் ரமணியின் பாடல்கள் எல்லாமே மிக அழகு. பண்பட்ட வார்த்தைகள்.
அன்பன்,
மீ.வி.

ramaNi

unread,
Mar 30, 2016, 12:37:31 PM3/30/16
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, விசு!

Siva Siva

unread,
Mar 30, 2016, 6:53:24 PM3/30/16
to santhavasantham
2016-03-30 11:39 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
திருநெல்வேலி
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.48.1: கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்)

கோவில்

தேவாரப் பதிகம்
சம்பந்தர்: 03.092: மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்

காப்பு
பொல்லாப்பிள் ளையாரே போற்றினேன் ஓர்பதிகம்
நெல்லையப்பர் மீது நெகிழ்ந்தவர் - வல்லவி
காந்திமதி அம்மையின் காப்பையும் வேண்டியே
பாந்தமுடன் பாடவருள் வீர்!

பதிகம்
தான்தோன்றி யுருவாகத் தன்னகத்தே அம்மையுடன்
வான்தோன்றி கங்கைநதி வடிவாகப் பொருநைவரக்
கான்தோன்றி வேணுவனம் காட்சிதந்தே நிலைபெற்றுத்
தேன்தோன்றி மலர்சூழத் திருநெல்லை யமர்ந்தாரே.

--> nice edhugai. 

[தன்னகத்தே அம்மையுடன் = சுயம்பு லிங்கத்தில் உறைந்த அன்னை உருவுடன்]

வேணுவன நெல்லையப்பர் வேய்முத்த நாதரவர்
நாணுவன நங்கையவள் நாயகியாம் காந்திமதி
தோணுவன தோய்வதனால் தோன்றுகின்ற வினைதீர்க்க
சேணுவனன் மூலிகையாய்த் திருநெல்லை யமர்ந்தாரே.

-->  /நாணுவன நங்கை/
நாணு + வனநங்கை என்று வினைத்தொகையாக வந்தது என்று கொள்கின்றேன். 

--> /தோணுவன / = ?

Siva Siva

unread,
Mar 30, 2016, 6:58:57 PM3/30/16
to santhavasantham

3)
ஓடுமொரு கலனாக உண்பலிதேர்ந் துழல்வானைக்
காடுமிடம் ஆனவனைக் காந்திமதி காதலனை
நீடுயர்ந்த கோபுரஞ்சூழ் நெல்வேலித் தடங்கோயில்
நாடுகின்ற நாடகனை நாடவினை நலிந்தறுமே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

2016-03-29 18:19 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

அடுத்த பதிகத்தின் முதல் இரு பாட்டுகள்:

2013-11-22
திருநெல்வேலி
----------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(
சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")

1)



2)

ramaNi

unread,
Mar 30, 2016, 9:41:45 PM3/30/16
to சந்தவசந்தம்
-> /நாணுவன நங்கை/
நாணு + வனநங்கை என்று வினைத்தொகையாக வந்தது என்று கொள்கின்றேன். 

’நாணுகின்ற அழகிய (வன) நங்கை’ என்றும் கொள்ளலாம்.

-> /தோணுவன / = ?
தோணுதல் = தோன்றுதல்

*****

ஊன்தோன்றி உளைகின்ற உயிர்க்கருளி யாட்கொளவிண்
மீன்தோன்றிப் பல்கிவரும் வேளையிலே நடமாடி
நான்தோன்றி யலைந்துமனம் நலிகின்ற போதினிலே
தேன்தோன்றி மலர்சூழத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 3

Nagoji

unread,
Mar 31, 2016, 8:20:46 AM3/31/16
to santhav...@googlegroups.com

விழிநுதல் கொண்டவண் வேலினன்

மழவிடை ஏறிமால் அயற்குமுன்

தழலெரி யாய்நிமிர் சத்தியன்

கழலருள் கச்சியே கம்பனே….(9) -- 31-Mar-2016


>>9)

>>பழவினைப் பற்றினால் பாரினில்

>>உழல்கிறேன் உய்வதும் எங்ஙனே?

>>அழலென அன்றுயர் அண்ணலே

>>கழலருள் கச்சியே கம்பனே.


- sankara dass

Nagoji

unread,
Mar 31, 2016, 8:25:24 AM3/31/16
to santhav...@googlegroups.com
வினைதீர்க்க சேணுவனன்  --> வினைதீர்க்கச் சேணுவனன் ??

- sdn

ramaNi

unread,
Mar 31, 2016, 9:08:39 AM3/31/16
to சந்தவசந்தம்
தோணுவன தோய்வதனால் தோன்றுகின்ற வினைதீர்க்கச்
சேணுவனன் மூலிகையாய்த் திருநெல்லை யமர்ந்தாரே.

திருத்திக்கொண்டேன். நன்றி, நாகோஜி.

Siva Siva

unread,
Mar 31, 2016, 8:16:35 PM3/31/16
to santhavasantham

4)
சீலத் தொண்டர் பால டைந்த சினமலி காலனுயிர்
கால மார்பில் காலால் உதைத்துக் காத்தவனே கரத்திற்
சூலம் ஏந்தும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
ஞாலம் எய்தி நலியா வண்ணம் நன்மை புரிந்தருளே.


அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-30 18:58 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

3)

Siva Siva

unread,
Mar 31, 2016, 9:07:37 PM3/31/16
to santhavasantham

4)
அடுகின்ற புலியதன்தோல் ஆடையனை அமரர்க்காக்
கடுநஞ்சம் ஆர்ந்தானைக் காந்திமதி காதலனை
நெடுவீதி சூழ்ந்தழகார் நெல்வேலித் தடங்கோயிற்
சுடுநீறு பூசிறையைத் தொழுதேத்தப் பழுதிலையே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-30 18:58 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

3)
ஓடுமொரு கலனாக உண்பலிதேர்ந் துழல்வானைக்
காடுமிடம் ஆனவனைக் காந்திமதி காதலனை
நீடுயர்ந்த கோபுரஞ்சூழ் நெல்வேலித் தடங்கோயில்
நாடுகின்ற நாடகனை நாடவினை நலிந்தறுமே.



VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 31, 2016, 10:45:42 PM3/31/16
to சந்தவசந்தம்
இப்பாடல், முன்னம் (மார்ச் 20) இட்ட திருத்துருத்திப் பதிகத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது.

2016-03-31 20:16 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

4)
சீலத் தொண்டர் பால டைந்த சினமலி காலனுயிர்
கால மார்பில் காலால் உதைத்துக் காத்தவனே கரத்திற்
சூலம் ஏந்தும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
ஞாலம் எய்தி நலியா வண்ணம் நன்மை புரிந்தருளே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Nagoji

unread,
Apr 1, 2016, 10:04:48 AM4/1/16
to santhav...@googlegroups.com

மலைவிலான் அடியினை மதித்திடாக்

குலமிலார் சொல்தனைக் கொள்ளன்மின்

அலகிலாப் புதுவிளை யாட்டுடைக்  

கலையினான் கச்சியே கம்பனே….(10) -- 1-Apr-2016


>>10)

>>புலமிலார் பொய்யலாற் புகல்கிலார்

>>நலமிலார் புகலிலார் மலமிலான்

>>அலகிலான் அன்பரை அகல்கிலான்

>>கலையினான் கச்சியே கம்பனே.


புலம் - Knowledge, learning, wisdom; அறிவு.

புகல்தல் - சொல்லுதல்;

புகல் - அடைக்கலம்; சரண்;

மலம் - மும்மலங்கள்;

அலகு - அளவு;

அகலுதல் - நீங்குதல்;

கலை - சாத்திரம்; அறுபத்து நான்கு கலைகள்;


- sankara dass

Siva Siva

unread,
Apr 1, 2016, 1:38:36 PM4/1/16
to santhavasantham
Yes, that was my oversight during the copy/paste process.
The correct song also has been posted shortly thereafter.

Siva Siva

unread,
Apr 1, 2016, 6:02:24 PM4/1/16
to santhavasantham

5)
சலமுலவு சடையானைத் தனிவெள்ளை விடையானைக்
கலவமயில் அன்னநடைக் காந்திமதி காதலனை
நிலவுதொடு கோபுரஞ்சூழ் நெல்வேலித் தடங்கோயில்
தலைமகனை முக்கண்ணன் தனைநினைய வினையறுமே



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-03-31 21:07 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

4)
அடுகின்ற புலியதன்தோல் ஆடையனை அமரர்க்காக்




ramaNi

unread,
Apr 1, 2016, 8:58:22 PM4/1/16
to சந்தவசந்தம்
தலவிருட்சம் மூங்கிலெனில் தலத்தீர்த்தம் பலவாமே
தலப்பெருமை தாண்டவனின் தாமிரச பையாமே
வலம்வந்து காணநுட்ப வடிவுகளில் சிற்பமெனச்
சிலையாக நின்றருளத் திருநெல்லை யமர்ந்தாரே.  ... 4

அரனுக்கோர் கோவிலெனில் அன்னைக்கின் னொருகோவில்
இருவரையும் சமமாக ஏத்துவழி பாடுகளாம்
ஒருசக்தி பீடமெனில் உருத்திரனின் ஓர்சபையாம்
திருமணக்கோ லம்கொண்டே திருநெல்லை யமர்ந்தாரே. ... 5

Siva Siva

unread,
Apr 1, 2016, 9:44:37 PM4/1/16
to santhavasantham
2016-04-01 20:58 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
தலவிருட்சம் மூங்கிலெனில் தலத்தீர்த்தம் பலவாமே
தலப்பெருமை தாண்டவனின் தாமிரச பையாமே
வலம்வந்து காணநுட்ப வடிவுகளில் சிற்பமெனச்
சிலையாக நின்றருளத் திருநெல்லை யமர்ந்தாரே.  ... 4

--> /தாமிரச பையாமே/ 
It is better to split seers here as தாமிர சபையாமே.

ramaNi

unread,
Apr 1, 2016, 11:35:05 PM4/1/16
to சந்தவசந்தம்
Fine, Sivasiva. I have changed it as in my text:

தலவிருட்சம் மூங்கிலெனில் தலத்தீர்த்தம் பலவாமே
தலப்பெருமை தாண்டவனின் தாமிர சபையாமே
வலம்வந்து காணநுட்ப வடிவுகளில் சிற்பமெனச்
சிலையாக நின்றருளத் திருநெல்லை யமர்ந்தாரே.  ... 4
 
ramaNi

Nagoji

unread,
Apr 2, 2016, 7:47:47 AM4/2/16
to santhav...@googlegroups.com

இத்தொடரின் கடைசிப் பாடல்.


மலைமகள் தழுவிடும் மணமகன்

அலைதவழ் வேணியன் ஆரியன்

உலகினைக் காத்திடும் ஊழியன்

கலைமலி கச்சியே கம்பனே….(11) -- 2-Apr-2016


>>11)

>>இலைமலர் அடியவர் இடஅவர்

>>மலைவினை நீக்கிவான் வழங்குவான்

>>தலைமிசைத் தண்புனல் தாங்குவான்

>>கலைமலி கச்சியே கம்பனே.


மலைவு - மயக்கம் (confusion of mind);

மலைவினை - 1) மலை அளவு இருக்கும் வினை; 2) மயக்கத்தை;


- sankara dass

Nagoji

unread,
Apr 2, 2016, 7:49:25 AM4/2/16
to santhav...@googlegroups.com
சிற்பமெனச் சிலையாக  - not one and the same?
-sdn

ramaNi

unread,
Apr 2, 2016, 6:29:05 PM4/2/16
to சந்தவசந்தம்
The first line refers to the other sculptures in the temple.
The second to Shiva's statue.

ramaNi

ramaNi

unread,
Apr 2, 2016, 6:29:53 PM4/2/16
to சந்தவசந்தம்
இராமக்கோன் கண்டறிய ஈசனவர் அருள்செய்ய
இராமபாண் டியமன்னன் எடுத்ததொரு கோவிலிலே
இராமருக்குப் பாசுபதம் ஈந்தருளி நெல்லையப்பர்
சிராவியமாய்த் துதிகொண்டே திருநெல்லை யமர்ந்தாரே. ... 6

[சிராவியம் = இனிமையான]

*****
 

Siva Siva

unread,
Apr 2, 2016, 7:37:33 PM4/2/16
to santhavasantham
/இராமருக்குப் பாசுபதம் ஈந்தருளி /

??

Siva Siva

unread,
Apr 2, 2016, 7:40:40 PM4/2/16
to santhavasantham

6)
அத்தியுரி போர்த்தவனை அலைகடலில் அன்றெழுந்த
கைத்தவிடம் உண்டானைக் காந்திமதி காதலனை
நித்தமடி யார்திரளும் நெல்வேலித் தடங்கோயில்
மத்தமணி உத்தமனை வாழ்த்தவினை மாய்ந்தறுமே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-04-01 18:02 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

5)

ramaNi

unread,
Apr 2, 2016, 11:03:52 PM4/2/16
to சந்தவசந்தம்
I took this information from here:

ramaNi

Nagoji

unread,
Apr 3, 2016, 8:01:38 AM4/3/16
to santhav...@googlegroups.com

திரு ஓணகாந்தன்தளி

(எண்சீர் விருத்தம் - 'மா மா மா மா' அரையடி வாய்பாடு - 1-5 சீர்களில் மோனை)

(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.5.1 - 'நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு')


புலவ  னாக மதுரை வந்த

….பொன்னன் பத்தர் போற்றும் தேவன்

குலவும் பாவை தன்னைத் தாங்கும்

….கோல மேனி கொண்ட கூத்தன்

நிலவின் அருகில் அரவம் வைத்த

….நீல கண்டன் நெற்றிக் கண்ணன்

உலவும்  நதியார் ஒப்பில் சடையன்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(1) -- 3-Apr-2016


>>1)

>>உலகில் பொருள்மேல் மிக்க ஆசை

>>.. உற்றுத் தினமும் உழன்று ழன்று

>>நிலைகெட் டிழிய நினைப்ப தேனோ

>>.. நிலைக்கும் பெரும்செல் வம்பெற் றுய்யச்

>>>>சுலப மான வழியிங் குண்டே

>>.. தூய மதியின் அருகில் கங்கை

>>உலவும் சடையை உடைய ஈசன்

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


- sankara dass

Siva Siva

unread,
Apr 3, 2016, 9:14:38 PM4/3/16
to santhavasantham
OK. I have not heard about Rama getting Pasupathasthiram. Please check if it is mentioned in either Valmiki or Kamba Ramayana.


-- 

Siva Siva

unread,
Apr 3, 2016, 9:17:01 PM4/3/16
to santhavasantham

7)
பெற்றமிவர் பெற்றியனைப் பிறைசூடும் பெருமானைக்
கற்றவருக் கினியவனைக் காந்திமதி காதலனை
நெற்றிவிழி உடையானை நெல்வேலித் தடங்கோயில்
உற்றவனை நற்றவனைப் பற்றவினை பற்றறுமே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-04-02 19:40 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

6)

ramaNi

unread,
Apr 3, 2016, 9:43:08 PM4/3/16
to சந்தவசந்தம்
வேதியர்நெல் மீதுமழை வீழாத வேலியருள்,சு
வேதகேது மீதியமன் மேவாத ஈசனுருள்
சீதரனும் நெஞ்சிருத்தும் சீர்கொண்ட மாதேவர்
தீதறுக்கத் தான்தோன்றித் திருநெல்லை அமர்ந்தாரே. ... 7

ரமணி

Nagoji

unread,
Apr 4, 2016, 11:47:39 AM4/4/16
to santhav...@googlegroups.com
// உற்றவனை நற்றவனைப் பற்றவினை பற்றறுமே.
arumai.
-sdn

Nagoji

unread,
Apr 4, 2016, 11:49:25 AM4/4/16
to santhav...@googlegroups.com

பெற்றம் ஏறும் பெரியன் பித்தன்

….பேரா னந்தம் தருமோர் சித்தன்

கற்ற மாந்தர் போற்றும் தேவன்

….காலை வீசி ஆடும் நட்டன்

முற்றும் அறிந்த மோன போதன்

….முன்பின் அறியா இடத்தில் தொண்டர்க்(கு)

உற்ற துணையாய் வரும்நற் றோழன்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(2) -- 4-Apr-2016


>>2)

>>மற்ற வர்மேல் பொறாமை கொண்டு

>>.. வாழ்வில் என்றும் மேலும் மேலும்

>>குற்றங் கள்செய் துழல்வ தொன்றே

>>.. குறியாய்க் கொண்டு கெடுவ தேனோ

>>நெற்றி விழியா கங்கைச் சடையா

>>.. நீல கண்டா என்னும் பத்தர்க்(கு)

>>உற்ற துணையாய் வரும்எம் மானின்

Nagoji

unread,
Apr 4, 2016, 11:52:57 AM4/4/16
to santhav...@googlegroups.com
//வேதியர்நெல் மீதுமழை வீழாத வேலியருள்
One line you told a whole big story. great!

//வேதியர்நெல் மீதுமழை வீழாத வேலியருள்,சு
last seer becomes 4-asai. koo-viLa-naRum-pU - Is that allowed in kalippaa?

- sdn

Siva Siva

unread,
Apr 4, 2016, 5:55:54 PM4/4/16
to santhavasantham

8)
இருபதுதோள் உடையானை இருவரைக்கீழ் அடர்த்தானைக்
கருவிடமார் மிடற்றானைக் காந்திமதி காதலனை
நிருபமனை மதில்சூழ்ந்த நெல்வேலித் தடங்கோயிற்
குருபரனை இருகரங்கள் கொண்டுதொழ வினையறுமே.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-04-03 21:17 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

7)

ramaNi

unread,
Apr 4, 2016, 9:33:19 PM4/4/16
to சந்தவசந்தம்
நன்றி, நாகோஜி. கலிப்பாவில் நாலசைச்சீர் வருதல் கூடாதுதான். திருத்த முயல்கிறேன்.

கண்மூடித் தனமாகக் கயிலைமலை தூக்கியானை
மண்ணழுந்தச் செய்தவனை மன்னித்தே வாள்தந்த
கண்ணுதலார் காளியுடன் காட்டுமுயிர்க் கருணையினைத்
திண்ணமாகத் தருபவராய்த் திருநெல்லை யமர்ந்தாரே. ... 8

--ரமணி, 05/04/2016

ramaNi

unread,
Apr 4, 2016, 10:11:16 PM4/4/16
to சந்தவசந்தம்
திருத்திய வடிவம்

வேதியர்நெல் மீதுமழை வீழாத வேலியருள்
பேதமெலாம் தீரவருள் பெம்மானின் கோவிலிலே
சீதரனும் நெஞ்சிருத்தும் சீர்கொண்ட மாதேவர்
தீதறுக்கத் தான்தோன்றித் திருநெல்லை அமர்ந்தாரே. ... 7

--ரமணி, 05/04/2016

Nagoji

unread,
Apr 5, 2016, 12:56:25 PM4/5/16
to santhav...@googlegroups.com

துண்ட மதியை அணியும் தூயன்

….தோடும் குழையும் ஆரும் செவியன்

அண்டி வந்த அடியார்க் கென்றும்

….அள்ளிக் கொடுக்கும் அரசர்க் கரசன்

சண்டிக் கருளும் சாம வேதன்

….சாவா மருந்தைப் போல நஞ்சை

உண்ட பெருமான் கோயில் கொள்ளும்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(3) -- 5-Apr-2016


சாவா மருந்து - அமுதம்


>>3)

>>அண்டை அயலார் போல வாழ

>>.. ஆசை கொண்டு மதியி ழந்து

>>கண்ட கண்ட செயல்கள் செய்து

>>.. காலம் போக்கிக் கண்ட தென்ன

>>அண்டம் எரிக்கும் ஆல காலம்

>>.. அதனை அள்ளி அமுதைப் போல

>>உண்ட பெருமான் கோயில் கொள்ளும்

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


அண்டம் - உலகம்; பிரபஞ்சம்;

கோயில்கொள்ளுதல் - வாழுமிடமாகக் கொள்ளுதல் (To take up abode i);


- sankara dass

Siva Siva

unread,
Apr 5, 2016, 7:09:23 PM4/5/16
to santhavasantham

9)
சேண்பறந்த நான்முகனும் திருமகட்கு நாயகனும்
காண்பரிய தாணுவினைக் காந்திமதி காதலனை
நீண்மதில்கள் புடைசூழ்ந்த நெல்வேலித் தடங்கோயிற்
கேண்மையனை அடிபோற்றக் கேடில்லா நிலைதானே.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-04-04 17:55 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

8)

ramaNi

unread,
Apr 5, 2016, 10:21:55 PM4/5/16
to சந்தவசந்தம்
அருவுருவன் வானுயர்ந்த அழலுருவாய்த் தோன்றிடவே
திருமால்க ழல்தேடித் திசைமுகன்ற லைதேடித்
திரிந்தோய முன்தோன்றித் தியம்பகன்றன் நிலையுரைத்த
திருத்தனவர் நமக்கருளத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 9.

--ரமணி, 06/04/2016

*****

Siva Siva

unread,
Apr 6, 2016, 6:19:58 PM4/6/16
to santhavasantham

10)
விருப்பமொடு நீறணியா வெற்றுரையர் சொல்விடுமின்
கருப்புவிலி தனையெரித்த காந்திமதி காதலனை
நெருப்புமிழும் நேத்திரனை நெல்வேலித் தடங்கோயில்
இருப்பவனை இருபொழுதும் எண்ணவினை நண்ணாவே.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-04-05 19:09 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

9)

ramaNi

unread,
Apr 6, 2016, 9:39:21 PM4/6/16
to சந்தவசந்தம்
வேதவிழி தேராதே வேறுவழி நோக்குமத
வாதங்கள் மெய்ஞ்ஞான வழியல்ல வென்றந்தத்
தீதறுப்போர்க் கருள்செய்யும் செம்பொருளா யுருக்கொண்டே
சீதளநீர் முழுக்காடித் திருநெல்லை யமர்ந்தாரே.

[வேதவிழி = வேதஞானம்\

--ரமணி, 07/04/2016

*****

Nagoji

unread,
Apr 7, 2016, 4:54:06 AM4/7/16
to santhav...@googlegroups.com
//வேதவிழி -- வேறுவழி 
arumai.

-sdn

Nagoji

unread,
Apr 7, 2016, 7:52:07 AM4/7/16
to santhav...@googlegroups.com

எரியும் மரியும் ஏந்தும் ஈசன்

….இரியும் நீரைக் கட்டும் சடையன்

எருதில் ஏறித் திரியும் இறைவன்

….எல்லில் ஆடி மகிழும் இளைஞன்

கருதும் அடியார்க் கருளும் தேவன்

….கன்னல் தமிழில் பொய்யில் புலவர்

உரிமை யோடு பாடிப் போற்றும்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(4) -- 7-Apr-2016


கன்னல் - கரும்பு

உரிமை - பிரியம், சுவாதீனம்


>>4)

>>பெரிதும் பொருள்மேல் ஆசை கொண்டு

>>.. பிறருக் குதவா தென்றும் தீமை

>>புரிதல் ஒன்றே குறியாய்ப் போது

>>.. போக்கிக் கண்ட தென்ன முன்னம்

>>அரிய ஓலை ஒன்றி னாலே

>>.. அடிமை ஆன நாவ லூரர்

>>உரிமை யோடு பாடிப் போற்றும்

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


நாவலூரர் - சுந்தரர்;

சுந்தரர் தேவாரம் - திருமுறை.பதிகம் - 7.5.1: 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' - ஓணகாந்தன்தளி ஈசனைப் பொன் வேண்டிச் சுந்தரர் வஞ்சப்புகழ்ச்சி அமையப் பாடிப் பொன் பெற்றார்.


- sankara dass

Siva Siva

unread,
Apr 7, 2016, 8:24:23 AM4/7/16
to santhavasantham
/மரியும் /
I think you intended to say மறியும் .

/இரியும் நீரை/
Not sure if இரியும் has been/can be used in this context. Others may be able to confirm.
இழியும் will also fit.


2016-04-07 7:52 GMT-04:00 Nagoji <nag...@gmail.com>:

எரியும் மரியும் ஏந்தும் ஈசன்

….இரியும் நீரைக் கட்டும் சடையன்

எருதில் ஏறித் திரியும் இறைவன்

….எல்லில் ஆடி மகிழும் இளைஞன்

கருதும் அடியார்க் கருளும் தேவன்

….கன்னல் தமிழில் பொய்யில் புலவர்

உரிமை யோடு பாடிப் போற்றும்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(4) -- 7-Apr-2016


கன்னல் - கரும்பு

உரிமை - பிரியம், சுவாதீனம்


- sankara dass


ramaNi

unread,
Apr 7, 2016, 9:31:02 AM4/7/16
to சந்தவசந்தம்
Thanks, NagOji.
ramaNi

Siva Siva

unread,
Apr 7, 2016, 8:36:43 PM4/7/16
to santhavasantham

இப்பதிகத்தின் கடைசிப்பாடல்:

11)
சீலமணி மாணியிடம் சென்றிடர்செய் காலனுயிர்
காலவுதை கழலானைக் காந்திமதி காதலனை
நீலமணி மிடற்றானை நெல்வேலித் தடங்கோயில்
ஆலமணி சடையானை அடையவினை அடையாவே.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-04-06 18:19 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

10)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 7, 2016, 9:39:22 PM4/7/16
to சந்தவசந்தம்
மிக அழகிய பதிகம்.

.. அனந்த் 
சீலமணி மாணியிடம் சென்றிடர்செய் காலனுயிர்
காலவுதை கழலானை...
காலல் என்னும் அரிய பிரயோகத்தைக் கண்டதும், திருத்துருத்திப் பதிகத்தில் (பாடல் 4) இந்நிகழ்ச்சிக் குறிக்கையில்  சொல்லப்பட்டுள்ளது நினைவுக்கு வந்தது.. 
சீலத் தொண்டர் பால டைந்த சினமலி காலனுயிர்
கால மார்பில் காலால் உதைத்துக் காத்தவனே
..
2016-04-07 20:36 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

இப்பதிகத்தின் கடைசிப்பாடல்:

11)
சீலமணி மாணியிடம் சென்றிடர்செய் காலனுயிர்
காலவுதை கழலானைக் காந்திமதி காதலனை
நீலமணி மிடற்றானை நெல்வேலித் தடங்கோயில்

ஆலமணி சடையானை அடையவினை அடையாவே.10)


ramaNi

unread,
Apr 8, 2016, 1:25:22 AM4/8/16
to சந்தவசந்தம்
வெடிதரு தலையேந்தி விடையமர் கலைசூடி
பொடியணி மேனியராய்ப் புடையொரு மங்கையுடன்
கடிமலர்ப் பதிகமொன்றால் காழியர் கோன்துதிக்கத்
திடிமமத் தளமொலிக்கத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 11

[வெடிதரு=வெடித்த (சம்பந்தர் பதிகம், பாடல் 6;)
காழியர்கோன் = சம்பந்தர்; திடிமம் = திண்டிமம் = ஒருவகைப் பறை]

--ரமணி, 08/04/2016

*****

Nagoji

unread,
Apr 8, 2016, 7:52:01 AM4/8/16
to santhav...@googlegroups.com
2016-04-08 10:55 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:
//வெடிதரு தலையேந்தி விடையமர் கலைசூடி
//பொடியணி மேனியராய்ப் புடையொரு மங்கையுடன்

First 2 lines with Monai and edhukai - sound very very good.
Especially first line, 2nd and 4th seers have edhukai within those!

arumai.

- sdn

Siva Siva

unread,
Apr 8, 2016, 9:06:36 AM4/8/16
to santhavasantham
தேவாரச் சொற்றொடர்கள் மனத்தில் பதிவது கண்டு மகிழ்கின்றேன்.

ramaNi

unread,
Apr 8, 2016, 9:11:14 AM4/8/16
to சந்தவசந்தம்
I am glad for the appreciation of the qualities of my last and other songs in this patikam by sarvashrI NagOji and Sivasiva.
My sincere thanks for their continued patronage.

ramaNi

Siva Siva

unread,
Apr 8, 2016, 9:11:31 AM4/8/16
to santhavasantham
படித்துவரும் அன்பர்கள் எல்லார்க்கும் வணக்கம்.

/காலனுயிர்
காலவுதை கழலானை...
காலல் என்னும் அரிய பிரயோகத்தைக் கண்டதும், திருத்துருத்திப் பதிகத்தில் (பாடல் 4) இந்நிகழ்ச்சிக் குறிக்கையில்  சொல்லப்பட்டுள்ளது நினைவுக்கு வந்தது.. /

திருத்துருத்திப் பதிகம் எழுதிய சில நாள்களுக்குப் பின்னர்த் திருநெல்வேலிப் பதிகம் எழுதினேன். அதனால் அச்சொல் மனத்தில் எழும் வாய்ப்பு அதிகம்போல்!

ramaNi

unread,
Apr 8, 2016, 9:20:01 AM4/8/16
to சந்தவசந்தம்
சிவசிவா மற்றும் நாகோஜி அவர்களின் மூலம்-முகம்பார்க்கும் பாடல்கள் குறித்துக் கருத்துச் சொல்லும் அளவு நான் திருமுறைகள் கற்றவன் அல்லன். எனினும் அவர்களின் ஒவ்வொரு பாடலும் அதன் அமைப்பிலும் சொற்பொருளிலும் எனக்கு வழிகாட்டியாக உள்ளது கண்டு மிக மகிழ்கிறேன்.

அன்புடன்,
ரமணி

Nagoji

unread,
Apr 8, 2016, 2:56:25 PM4/8/16
to santhav...@googlegroups.com
னன்றி சிவசிவா. மரை என்பது மந்த்தில் இருந்தது. தட்டக்சுப் பிழை. மறி என்பது இன்னும் அழகாக உள்ளது.

எரியும் மறியும் ஏந்தும் ஈசன்

….இழியும் நீரைக் கட்டும் சடையன்


மேற்கண்டது போல் திருத்தி விட்டேன்.

- sdn

Nagoji

unread,
Apr 8, 2016, 3:03:02 PM4/8/16
to santhav...@googlegroups.com

விடையான் வெள்ளைப் பொடியைப் பூசி

….வேதன் போற்றும்  ஞான போதன்

புடையார் பெண்ணன் பொங்கு நதியன்

….பூத கணங்கள் சூழும் புத்தன்

சடையார் நாவன் தங்க வண்ணன்

….சண்டிக் கருளும் சாம்பன் பாம்பன்

உடையான் அன்பர்க் கரணா னானின்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(5) -- 9-Apr-2016


சடை - ஜடா முறையில் ஓதுதல்

வேதன் - பிரம்மா; புத்தன் - புதியவன்


>>5)

>>அடையாப் பொருள்மேல் ஆசை யாகி

>>.. அறிவி ழந்து செய்யும் பாவம்

>>படையாய் வருமே சற்றும் எண்ணிப்

>>.. பாரா திருந்து கெடுவ தேனோ

>>சடையான் சடைமேல் திங்கள் கங்கை

>>.. தாங்கி மலையான் மகளோர் பங்கன்

>>உடையான் அன்பர்க் கரணா னானின்

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


சடையான் - சடையை உடையவன் - சிவன்;

சடைமேல் திங்கள் கங்கை தாங்கி - சடைமீது சந்திரனையும் கங்கையையும் தாங்கியவன்;

உடையான் - சுவாமி (Master, lord);

அரண் ஆனானின் - பாதுகாவல் ஆனவனுடைய;


- sankara dass

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 8, 2016, 4:06:32 PM4/8/16
to சந்தவசந்தம்
கலைசூடி பொடியணி - ஒற்று? 

அனந்த்

2016-04-08 1:25 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Vis Gop

unread,
Apr 9, 2016, 1:08:54 AM4/9/16
to santhav...@googlegroups.com
மதிசூடி துதிபாடி-இன் ஒவ்வொரு பாடலும் நெஞ்சை நெகிழ்விக்கும் திறன் கொண்டவை. பத்தியும் புலமையும் இழைந்து இசையாகின்றன.

விடையான் வெள்ளைப் பொடியைப் பூசி

….வேதன் போற்றும்  ஞான போதன்

விடையான், வெள்ளைப் பொடிபூசி, வேதன் போற்றும் ஞானபோதன், என்றெல்லாம் இறைவன் வருணிக்கப் படுவது மிக அழகு. சடையார் நாவன் மிக அருமையான துதி! புத்தன் என்றால் ஞானி என்ற பொருளும் கொள்ளலாம் அல்லவா?
என் ஐயம்: வெள்ளைப் பொடியைப் பூசி என்பது வினை எச்சமாகி வேதன் போற்றும் என்பதோடு சேர்வதாக எனக்குப் படுகிறது. வெள்ளைப் பொடிபூசி என்றிருந்தால் பெயர்ச்சொல் போலத் தொனிக்கும் என நினைக்கிறேன். 'பொடியார் காயன்' போன்ற சொற்கள் பொருந்தலாம்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

ramaNi

unread,
Apr 9, 2016, 1:52:39 AM4/9/16
to சந்தவசந்தம்
ஒற்று சேர்த்துக்கொள்கிறேன்.

Nagoji

unread,
Apr 9, 2016, 4:51:30 AM4/9/16
to santhav...@googlegroups.com
The nouns with ikaram at the end, are nowadays treated as vinai echcham.
In Ramani sir's song also, Ananth has commented the same to have oRRu after kalai-sUdi, treating it as vinai echcham. I do not think there is a need for oRRu when we treat it as noun.
Thanks.

- sdn

Nagoji

unread,
Apr 9, 2016, 5:09:37 AM4/9/16
to santhav...@googlegroups.com

சாது வாகி  நோற்கும் சீலன்

….சம்பு வாகித் தவம்செய் மோனி

யாது மாகி நிற்கும் ஈசன்

….என்போ டாமை அணியும் இறைவன்

பாதம் பணியும் பத்தர்க் கருளும்

….பரமன் பனியார் வரையன் சாமம்

ஓதும் பெருமான் மேவு கின்ற

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(6) -- 9-Apr-2016


>>6)

>>போதும் என்ற எண்ணம் இன்றிப்

>>.. பொருள்மேல் கொண்ட ஆசை யாலே

>>தீது புரிந்து தினமும் பாவம்

>>.. திரட்டி நரகில் வீழ்வ தேனோ

>>பாது காக்கும் அன்னை நீயே

>>.. பரமா என்று பத்தர் அன்போ(டு)

>>ஓதும் பெருமான் மேவு கின்ற

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


அன்போடு ஓதும் - பக்தியோடு பாடும்;

மேவுதல் - உறைதல் (to abide, dwell);


- sankara dass

Vis Gop

unread,
Apr 9, 2016, 5:25:05 AM4/9/16
to santhav...@googlegroups.com
I think I haven't got the answer.
பொடியைப் பூசி என்பது இந்த இடத்தில் (தமிழ் ஞானம் குறைந்த) எனக்குப் பெயர்ச்சொல் பயன்பாடு போலத் தோன்றவில்லை. வெள்ளைப் பொடியைப் பூசி(க்கொண்டு)  வேதன் போற்றும்  . . . . என்று எனக்குப் பொருள்படுகிறது. பொடிபூசி (பொடியைப் பூசுபவன்) என்பது (காரணப்) பெயர்ச்சொல்லாகத் தெரிகிறது. முதலாவது ஏற்றுக் கொள்ளப் படினும் இரண்டாவது அதிகம் தெளிவானதாகத் தெரிகிறது. [The former shows (a higher degree of) ambiguity, in the present context, considering also the words that follow பொடியைப் பூசி.]
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

Nagoji

unread,
Apr 9, 2016, 2:41:59 PM4/9/16
to santhav...@googlegroups.com
True. The way the person splits and reads, will give a different meaning. The 2aam vERRumai and the oRRu, gives a continuity to the next word also, and hence may cause this confusion. Why to leave like that, let us change it.

விடையான் வெள்ளைப் பொடியார் தேகன்

….வேதன் போற்றும்  ஞான போதன்


- sdn

Nagoji

unread,
Apr 9, 2016, 2:44:19 PM4/9/16
to santhav...@googlegroups.com

இமைக்கும் போதில் எல்லாம் ஆக்கி

….எதிலும் இலங்கும் தேவ தேவன்

தமக்குத் தாமே ஒப்பாய் விளங்கும்

….தனியன் தண்ணார் சடையன் சாந்தன்

எமக்குத் தமிழை ஈந்த வள்ளல்

….இடபம் ஏறித் திரியும் எளியன்

உமைக்கி டத்தைத் தந்தான் மேவும்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(7) -- 10-Apr-2016


>>7)

>>நமக்குத் தேவை பணமென் றெண்ணி

>>.. நாளும் அதையே தேடி மூட்டை

>>சுமக்கும் கழுதை போல்தி ரிந்து

>>.. தொய்ந்து நிலைகெட் டிழிவ தேனோ

>>எமைக்கா என்னும் பத்தர்க் கெல்லாம்

>>.. இனிதே அருளும் முக்கண் ஈசன்

>>உமைக்கி டத்தைத் தந்தான் மேவும்

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


மூட்டை சுமக்கும் கழுதை - தான் சுமக்கிற மூட்டையில் உள்ளதைக் கழுதை அனுபவியாது.

உமைக்கு இடத்தைத் தந்தான் - பார்வதிக்கு உடலின் இடப்பாகத்தை அளித்தவன் - சிவன்;


- sankara dass

Vis Gop

unread,
Apr 10, 2016, 4:34:00 AM4/10/16
to santhav...@googlegroups.com
The possible ambiguity has been removed. 
Best wishes,
gopal.

Nagoji

unread,
Apr 10, 2016, 1:00:49 PM4/10/16
to santhav...@googlegroups.com

மலையை அசைத்த அரக்கன் தோள்கள்

….வாட விரலால் அடர்த்த வல்லன்

மலையைச் சிலையாய் ஏந்தும் வீரன்

….மாணிக் காகப் பரியும் பாதன்

தலையின் மேலே நதியைத் தாங்கும்

….தங்க வண்ணன் சரிகோ வணத்தன்

உலகங் களுக்கோர் தலைவன் உறையும்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(8) -- 10-Apr-2016


>>8)

>>நிலையில் லாத பணத்தின் மேலே

>>.. நிறைய ஆசை கொண்டு மாய

>>வலையில் மதியில் லாத மான்போல்

>>.. வலியச் சென்று விழுவ தேனோ

>>மலையின் அடியில் இலங்கை மன்னன்

>>.. வாட விரலை ஊன்றும் ஈசன்

>>உலகங் களுக்கோர் தலைவன் உறையும்

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


மாயம் - வஞ்சனை; மாயை;

"மாய வலையில் சென்று விழுவது" என்பதை 'இறக்குமாறு வலையில் சிக்கிக்கொள்வது" என்றும் பொருள்கொள்ளலாம்;


- sankara dass

Siva Siva

unread,
Apr 10, 2016, 8:57:04 PM4/10/16
to santhavasantham

2013-11-22
திருப்பழனம்
----------------
(எழுசீர் ஆசிரிய விருத்தம் - ' 6 மா + புளிமாங்காய் ' என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை. பாடல்தோறும் ஈற்றடியில் 1-3 சீர்களில் எதுகையும் உண்டு.)
(சுந்தரர் தேவாரம் - 7.41.1 - "முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே")

1)
இயல்க ளாலும் இசைக ளாலும் .. ஏத்திப் பாதம் பணிவார்கள்
மயல்கள் தீர்ந்து மகிழும் வண்ணம் .. வரங்கள் நல்கும் மணிகண்டன்
அயில்கொள் சூலம் ஏந்து கின்ற .. ஐயன் உறையும் பதியென்பர்
கயல்கள் பாயும் வயல்கள் சூழும் .. கவினார் பழன நகர்தானே.



அன்போடு,
வி. சுப்பிரமணியன் 

Nagoji

unread,
Apr 11, 2016, 12:41:14 PM4/11/16
to santhav...@googlegroups.com

துயரம் தன்னைத் துடைக்கும் சொக்கன்

….துரிய நிலையைக் கடந்த தூயன்

வயிரம் பாய்ந்த எண்டோள் ஈசன்

….வாயி லாருக் கருளும் மதியன்

உயரும் அன்னம் ஆழும் கேழல்

….உழந்தும் காணா ஒளிப்பி ழம்பாய்

உயரும் ஒருவன் மேவு கின்ற

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(9) -- 11-Apr-2016


கேழல் - பன்றி

உழத்தல் - வருந்திப் பிரயாசைப் படுதல்


>>9)

>>பெயரும் பணமும் தினமும் தேடிப்

>>.. பெரிதும் உழன்று மிகவும் வாடி

>>அயரும் வாழ்வும் வாழ்வு தானோ

>>.. அரியும் அயனும் அன்று மிகவும்

>>முயன்றும் அடியும் முடியும் காணா

>>.. முடிவில் லாத நெருப்புத் தூணாய்

>>உயரும் ஒருவன் மேவு கின்ற

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


பெயர் - புகழ்;

அயர்தல் - தளர்தல்;


- sankara dass

Siva Siva

unread,
Apr 11, 2016, 10:46:22 PM4/11/16
to santhavasantham

2)
வெளியும் உள்ளும் வெண்மை தாங்கும் .. மேன்மை யோடு புகழ்பாடி
அளியும் அன்பர்க் கன்ப னாகி .. அவர்தம் அகங்கள் உறைகின்ற
தளிகள் ஆக மகிழும் தலைவன் .. தனிவெள் விடையன் பதியென்பர்
அளிகள் ளுண்டு களிகொள் சோலை .. ஆரும் பழன நகர்தானே.



அன்போடு,
வி. சுப்பிரமணியன் 


2016-04-10 20:57 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2013-11-22
திருப்பழனம்
----------------
(எழுசீர் ஆசிரிய விருத்தம் - ' 6 மா + புளிமாங்காய் ' என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை. பாடல்தோறும் ஈற்றடியில் 1-3 சீர்களில் எதுகையும் உண்டு.)
(சுந்தரர் தேவாரம் - 7.41.1 - "முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே")

1)

Siva Siva

unread,
Apr 12, 2016, 4:38:24 PM4/12/16
to santhavasantham

3)
பறைகள் முழக்கிப் பாரி டங்கள் .. பலவும் சூழ நடமாடும்
கறைகொள் கண்டன் கயிலை மலையன் .. காதல் மங்கை ஒருபங்கன்
குறைவெண் திங்கள் கொன்றை சூடும் .. கோலச் சடையன் பதியென்பர்
சிறைவண் டார்த்து நறையுண் சோலை .. திகழும் பழன நகர்தானே.



அன்போடு,
வி. சுப்பிரமணியன் 


2016-04-11 22:46 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2)

Nagoji

unread,
Apr 13, 2016, 2:41:01 PM4/13/16
to santhav...@googlegroups.com

மதர்த்து நின்று மதியன் பேரை

….வாயால் ஓதார் வழியில் செல்லேல்

எதிர்த்து வந்த வேழம் தன்னை

….இமைக்கும் போதில் உரித்துப் போர்த்தான்

மதித்துண் டத்தை முடிமேல் கொண்டான்

….மாணிக் காகக் காலன் தன்னை

உதைத்த முக்கட் பரமன் மேவும்

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே….(10) -- 13-Apr-2016


>>10)

>>விதைத்த வினைகள் இன்று வந்து

>>.. விளைக்கும் இன்னல் தீர வேண்டில்

>>மதத்து மனத்தில் இருளை வைத்து

>>.. வழிகெட் டலைவோர் தங்கட் கெட்டான்

>>பதத்தைப் பரவும் பத்தர்க் காகப்

>>.. பாய்ந்து வந்த நமனைக் காலால்

>>உதைத்த முக்கட் பரமன் மேவும்

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


மதத்தல் - மதங் கொள்ளுதல் (To be furious, as by fanaticism); செருக்குதல் (To be arrogant); மயங்குதல் (To be bewildered);

எட்டான் - எட்டாதவன்; அடைய இயலாதவன்;

பதம் - திருவடி;

பரவுதல் - துதித்தல்;

பத்தர்- இங்கே, மார்க்கண்டேயர்;


கமையார் கையன் கங்கைச் சடையன்

….கண்ணார் நுதலன் கால காலன்

நமையாள் நம்பன் நாத ரூபன்

….நாகம் தன்னைப் பூணும் நல்லன்

தமையே நம்பி வந்தோர் தம்மைத்

….தாங்கி அருளும் சங்க வண்ணன்

உமையாள் பங்கன் இனித மர்ந்த

.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே…..(11) -- 13-Apr-2016


கமை - மலை

தமையே - சிவனையே


>>11)

>>எமையாள் ஈசா எருதில் ஏறும்

>>.. இறைவா கங்கைச் சடையாய் ஏத்தும்

>>இமையோர் தம்மைக் காக்க நஞ்சை

>>.. எடுத்துண் டவனே முப்பு ரங்கள்

>>தமையோர் நகையால் சாம்பல் ஆக்கும்

>>.. சங்க ராவென் பார்க்க ருள்செய்

>>உமையாள் பங்கன் இனித மர்ந்த

>>.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.


எமை ஆள் ஈசா - எம்மை (எங்களை) ஆளும் ஈசனே;

இமையோர் - தேவர்கள்;

நகை - சிரிப்பு;

உமையாள் பங்கன் - உமையை ஒரு கூறாக உடையவன்;

ஒருவா - ஒருவனே - ஒப்பற்றவனே - (சம்பந்தர் தேவாரம் - 3.41.1 - 'கருவார் கச்சித் , திருவே கம்பத் தொருவா...');


- sankara dass

Siva Siva

unread,
Apr 13, 2016, 5:42:00 PM4/13/16
to santhavasantham
Posting in this thread as well:

2016-04-13 / 14 (தமிழ் வருடப்பிறப்பு - "துன்முகிஆண்டு)
-----------
தேடிய அயனும் மாலும்

..  திகைத்திட ஓங்கு சோதி

பாடிய அன்பர்க் கென்றும்

..  பரிந்தருள் பரமன் நாமம்

சூடிய நாவர் ஆகித்

..  துன்முகி ஆண்டு தன்னில்

நீடிய இன்பம் பெற்று

..  நீணிலத் தோர்கள் வாழ்க!


அடிமுடி தேடிய பிரமனும் விஷ்ணுவும் வருந்தும்படி சோதியாகி ஓங்கியவன்துதித்துப் பாடும் பக்தர்களுக்கு என்றும் இரங்கி அருளும் பரமன்இவ்வுலகத்தோர் எல்லாம் அப்பெருமானுடைய திருநாமத்தைத் தங்கள் நாக்கில் தரித்தவர்களாகி இந்தத் துன்முகி வருடத்தில் மிகுந்த இன்பம் பெறுவார்களாக!

அன்புடன்,

விசுப்பிரமணியன்

It is loading more messages.
0 new messages