சிலேடை-பழையது-பெருமாள்

79 views
Skip to first unread message

K.R. Kumar

unread,
Jul 10, 2009, 8:43:55 AM7/10/09
to santhav...@googlegroups.com, nambikkai
அன்பர்களே,
 
முக்கூர் லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருக்கிறார். அதன் பொருள் மட்டும் கூறியிருக்கிறார்.
 
இது பழையது :
அவனும் புராண புருஷன்
ராத்திரி முழுதும் சாதம் தண்ணீரிலே இருக்கிறது.
அவனும் ஜலத்திலேதான் படுத்துக்கொண்டிருக்கிறான்
பழையதின் பெருமை அதை அனுபவித்து உணர்ந்த சிலருக்கே தெரியும்.
“என்னை உள்ளபடி உணர்கிறவர்கள் ஒரு சிலரே “ என்றான் பரமாத்மா கீதையிலே.
பழையதை அதிகாலையில் சாப்பிடவேண்டும்
எம்பெருமானையும் அதிகாலையிலே தியானம் பண்ணவேண்டும்”
 
பாடல் தெரிந்தவர் தயவு செய்து அந்த பாடலை இங்கு மடலிட்டால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)
 
பிகு:புதிதாக மரபுக் கவிதை புனைய விரும்புவோர் கவிதை புனைந்து இட்டால் மேலும் வரவேற்கிறேன்.

Pas Pasupathy

unread,
Jul 10, 2009, 10:34:10 AM7/10/09
to santhav...@googlegroups.com
:-))
 
நீங்கள் சௌந்தரின் கதையை இன்னும் படிக்கவில்லையோ?

 
2009/7/10 K.R. Kumar <krish...@gmail.com>
 

Siva Siva

unread,
Jul 10, 2009, 11:22:55 AM7/10/09
to santhav...@googlegroups.com, nambikkai
உங்களுக்காகச் சுடச்சுடப் பழையது!! :)

சிவன் - பழையது - சிலேடை
------------------------------------
நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்
பார்மகிழுமோர் அன்னம் படைக்குமிகப் - பேருண்டு
வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/10 K.R. Kumar <krish...@gmail.com>



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 10, 2009, 11:25:59 AM7/10/09
to santhav...@googlegroups.com, nambikkai
இரண்டாம் அடியைச்சற்று மாற்றி:

நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்

பார்மகிழு மோர்அன்னம் நல்குமிகப் - பேருண்டு


வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.



2009/7/10 Siva Siva <naya...@gmail.com>

K.R. Kumar

unread,
Jul 10, 2009, 10:24:22 PM7/10/09
to santhav...@googlegroups.com
அன்ன்புள்ள பசுபதி ஐயா,
 
வணக்கம்.
 
சௌந்தர் ஐயாவின் சிலேடையைப் முன்னமேயே படித்தேன்.
 
நீரில் கிடந்தவண்ணம் நிர்மலமாய்க் காட்சிதரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்-சாரப்
பொருள்தேறும் போற்றும் பழமையால் சோறும்
எருதேழ் அடர்த்த இறை
 
அழகாய் இருக்கிறது.
 
முக்கூர் குறிப்பிட்டது வேறொரு சிலேடை என்று நினைக்கிறேன்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)


2009/7/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Siva Siva

unread,
Jul 11, 2009, 12:36:59 AM7/11/09
to santhav...@googlegroups.com, nambikkai

2009-07-10
அரி - பழையது - சிலேடை
------------------------------------
நீரில் துயில்கொள்ளும் காலை நினைப்பரன்பர்
பேரில் பெரும்தொன்மை கொண்டிருக்கும் - பார்பிசைந்(து)
உண்ணலுண்(டு) உள்ளியோர் பக்கமிருக் கும்காக்கும்
கண்ணன் பழையது காண்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/7/10 Siva Siva <naya...@gmail.com>
இரண்டாம் அடியைச்சற்று மாற்றி:
நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்
பார்மகிழு மோர்அன்னம் நல்குமிகப் - பேருண்டு

வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.


2009/7/10 Siva Siva <naya...@gmail.com>
உங்களுக்காகச் சுடச்சுடப் பழையது!! :)

சிவன் - பழையது - சிலேடை
------------------------------------
நீர்மேல் பொருந்த இரவெல்லாம் நின்றாடும்
பார்மகிழுமோர் அன்னம் படைக்குமிகப் - பேருண்டு
வாழ்த்துகிற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்
ஏத்தரன் இப்பழைய தொப்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

K.R. Kumar

unread,
Jul 11, 2009, 12:59:44 AM7/11/09
to santhav...@googlegroups.com, nambikkai
அட்டகாசம்!! அற்புதம்!!
 
வாழ்த்துகள், நன்றி,
 
குமார்(சிங்கை)

2009/7/11 Siva Siva <naya...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 11, 2009, 7:05:06 AM7/11/09
to santhav...@googlegroups.com

எமது முயற்சி: 

சிவன், பழையது : சிலேடை
 
நீர்கசிய நாளாய்ப் பொருட்குன் றிலுறையு
மோர்மத்தாற் சேரக்க டைந்தமுதன் - ஆர்வுடன்
பேர்சொல ஊறும் சுவைச்சேர்க்கு மாமிளகாய்
தூர்ச்சடியோ னேபழைய துகாண்
 
(பொருட்குன்று - மேரு; தூர்ச்சடி - சிவன், பாரமான சடை தரித்தவன்)

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

சௌந்தர்

unread,
Jul 12, 2009, 10:51:09 AM7/12/09
to சந்தவசந்தம்
அன்புள்ள குமார்:

நீங்கள் குறிப்பிட்டது போல் முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின்


“குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்

படித்துக் கொண்டிருக்கும் போது, அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்
நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருப்பதை
நானும் படித்தேன். அதன்
பொருள் மட்டும் கூறியிருக்கிறார். மூலப் பாடல் யாரிடம் இருக்கிறதோ
தெரியாது. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து நாமே ஏன் ஒரு சிலேடை
வெண்பா எழுதக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் எழுந்ததுதான் இந்த
முயற்சி. வெறும் வெண்பாவாக எழுதினால் எல்லோருக்கும் ரசிக்காது என்பதனால்,
கூடவே ஒரு கற்பனைக் கதையும் கூட்டி எழுதினேன்.

இதைப்போலே எங்கோ படித்த கருத்தை வைத்து சொந்தக் கற்பனையும் சேர்த்து
சில சிறுகதைகள் எழுதியதுண்டு. அவை மன்ற மையத்திலும் சந்தவசந்ததிலும்
இட்டதுண்டு.
எடுத்துக்காட்டாக, சென்ற வருடம், ஆடிப்பூரத்தின்போது, Route-143
என்றகதையும், நப்பின்னை காணில் சிரிக்கும் என்பதை ஆதாரமாக வைத்து
(ஜீனா நகுவளே), சென்றால் குடையாம் என்பதை ஆதாரமாக வைத்து (who wants to
be a millionaire?) என்பன

இச்சிறுகதைகள் படிக்க சுட்டிகள் இதோ.

http://hubmagazine.mayyam.com/dec08/?t=12353
http://hubmagazine.mayyam.com/feb09/?t=12641
http://groups.yahoo.com/group/santhavasantham/message/20311

சௌந்தர்

Pas Pasupathy

unread,
Jul 12, 2009, 7:10:22 PM7/12/09
to santhav...@googlegroups.com
சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு சிலேடை வெண்பா:
 
பெருமாள் -- புளியோதரை -சிலேடை
---------------------------------------------------------

தூணில் இருப்பதால், சூதன் தொழிலதனால்
மாணி உருவில் மயக்குவதால் -- ஆணம்
தருநெறியால், அன்னம் சனித்ததால் ஒக்கும்
பெருமாள் புளியோ தரை.

பெருமாள் : நரசிம்மராய்த் தூணில் இருப்பதால், தேர்ப்பாகன்(சூதன்)  தொழிலைக் கண்ணனாய்ச் செய்ததால், வாமனப் பிரம்மசாரி( மாணி) உருவில் மகாபலியை மயக்குவதால்,  அன்பு (ஆணம்) நெறியான வைணவத்தால், (சிவன் முடியை நோக்கிப் பறந்த) அன்ன உருவினனான பிரம்மனைப் பிறப்பித்ததால்.

புளியோதரை: கோயில் தூண்களில் இருப்பதால்,:-)) சமையற்காரன் (சூதன்) தொழிலாக இருப்பதால், அழகு(மாணி) உருவில் மக்களை மயக்குவதால், கொள்கலம் (ஆணம்) தருமுறையால், அன்னமாய்(சோறாய்)  பிறப்பதால்.

பசுபதி

2009/7/11 Siva Siva <naya...@gmail.com>

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

K.R. Kumar

unread,
Jul 12, 2009, 8:20:15 PM7/12/09
to santhav...@googlegroups.com
சௌந்தர் ஸ்வாமி,
 
நமஸ்காரம்.
 
ரூட் 143 நல்ல கற்பனை. வி.வி.சி (விழுந்து விழுந்து சிரித்தேன்)
 
ஜீனா சிரிப்பாள் என்றவுடன் டென்னிஸ் குளிக்கப் போய்விட்டான் என்பது மனோதத்துவ ரீதியில் இன்றும் சரியாகத்தான் இருக்கிறது.
 
who wants to be a millionare எழுத்துரு ஒருங்குறி(யுனி கோட்) யில் இல்லை. அதனால் படிக்கமுடியவில்லை. ஒருங்குறியில் மாற்றி அனுப்ப முடியுமா ?
 
அன்புடன்,
குமார்(சிங்கை)
 

 
2009/7/12 சௌந்தர் <rsou...@gmail.com>

K.R. Kumar

unread,
Jul 12, 2009, 8:23:45 PM7/12/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள பசுபதி சார்,
 
சிலேடை நன்றாகவே இருக்கிறது. ஆனால் சில சொற்களுக்கு உள்ள பொருள் தெரியாவிட்டால் புரிந்து கொள்ள முடியாது. பொருளுடன் வெண்பாவ மீண்டும் அளித்தமைக்கு நன்றி.
 
அன்புடன்,
குமார்(சிங்கை) 

2009/7/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 12, 2009, 11:30:46 PM7/12/09
to santhav...@googlegroups.com

பசுபதி சுட்டியது போல யாஹூ தளத்துச் சந்த வசந்தத்தில், இலந்தையார் தமது ஆசான் அ.சீ.ரா.-வின் புளியோதரை-பெருமாள் பற்றிய பாடல் ஒன்றை (கீழே காணவும்) குறிப்பிட்டு, அவையோரை, புளியோதரை-பெருமாள் இணைக்கும் சிலேடையைப் புனையச் சொன்னார். (http://groups.yahoo.com/group/santhavasantham/message/14486)
அதற்கு விடையாக வந்த சிலேடை வெண்பாக்கள்: 

--------------------
þÄó¨¾

¿øÄ ¿¢§Å¾ÉòÐ ¿¡Â¸Á¡ö, ¾ý§ÁÉ¢
¿ø¦Äñ¨½ ¬Ê ¿ÂÁ¡¸î- ¦º¡øÖõ
«Ã¢Â ͨÅ¡Ìõ «÷о¡Ãô
¦ÀÕÁ¡û ÒÇ¢§Â¡ ¾¨Ã.
ÒÇ¢§Â¡¾¨Ã
¿øÄ ¿¢§Å¾ÉòÐ ¿¡Â¸Á¡ö- ¿¢§Å¾ÉÁ¡¸ì ¦¸¡ÎìÌõ ¦À¡Õð¸Ç¢ø ¾¨Ä º¢È󾾡ö
¿ø¦Äñ¨½ ¬Ê ¿ÂÁ¡¸- ¦¾Ç¢×
¦º¡øÖõ «Ã¢Â ͨÅ¡Ìõ - ¦º¡øÄ¢ô ââìÌõ «Ã¢ÂͨÅ¡Ìõ
«÷ž¡Ãô ¦ÀÕÁ¡û.
¿øÄ ¿¢§Å¾Å¾Éò¨¾ ²ü¸¢ýÈ ¿¡Â¸Á¡ö þÕôÀÅ÷
¾ý §ÁÉ¢ ¿ø¦Äñ¨½ ¬Ê ¿ÂÁ¡¸- ¾ý §Áɢ¢ø ¿ø¦Äñ¨É «À¢§„¸õ ¦ÀüÚô ÀÇÀÇôÀ¡ö
¦º¡øÖõ «Ã¢Â ͨÅ¡Ìõ- ¦ÀÕÁ¡Ç¢ý ¿¡Áí¸¨Çî ¦º¡øÄ ¿¡×ìÌî ͨÅ¡Ìõ
--------------------------------
«Éóò

Åð§¼ó¾¢ Å󧾡÷ ÁÉõ¿¢¨ÈìÌõ ¿øÄâì(Ì)
þð¼§À÷ þýÒÚõ þýÉÓÐ - Àð¼¡ø
´ÕÁïºû Åñ½Ó¨¼ì(Ì) ¯ñÎÒÇ¢ ÂýÉõ
¦ÀÕÁ¡Ùì ¦¸¡ôÒõ±Éô §ÀÍ.

¦ÀÕÁ¡û: ºì¸Ãò¨¾ ²ó¾¢ò ¾õÁ¢¼õ Åէšâý ÁÉõ ¾¢Õô¾¢Â¨¼Âî ¦ºöÅ¡÷;
¿ý¨ÁÒâÔõ †Ã¢ìÌ þð¼ ¦ÀÂ÷¸Ç¢ø ¦ÀÕÁ¡Ùõ ´ýÚ; «ýÀ÷¸û о¢òÐ
þýÀÁ¨¼Ôõ «Ó¾õ§À¡ýÈÅ÷; ÀðÎ «½¢Å¾¡ø «ÅÃÐ ¬¨¼ìÌ ¯Â÷ó¾
Áïºû ¿¢Èõ ¯ñÎ ((À£¾ ÅŠòÃõ).

ÒÇ¢§Â¡¾¨Ã: (Åð¼Á¡É) ¾ð§¼ó¾¢ Å󧾡âý ÁÉõ¿¢¨È ¨ÅìÌõ;
¿øÄâìÌ þð¼§À÷ = «Ã¢º¢ìÌ þð¼ ¿øÄ ÁÚ¦ÀÂ÷; «øÄÐ,
¿øÄâìÌ þð¼§À÷ þýÒÚõ þýÉÓÐ = †Ã¢ìÌ ¿¢§Å¾ÉÁ¡¸ þÎÀŨà þýÀõ ¦ÀÈöÔõ; «øÄÐ,
þð¼§À÷ þýÒÚõ þýÉÓÐ = ¦¸¡ÎôÀÅÕõ (þð¼ §À÷) þýÀõ¦ÀÚõ þɢ «ÓÐ §À¡ýÈÐ (¨Å½Å÷ ÒÇ¢ÂÓÐ ±ýÀ¡÷¸û);
¯¨¼Â¢ø Àð¼¡ø ´ÕŨ¸Â¡É Áïºû ¿¢Èò¨¾ «Ð (¯¨¼) ¦ÀÚõ.
º¡ôÀ¢ðÎô À¡÷òÐ (¯ñÎ), ÒÇ¢ÂýÉõ ¦ÀÕÁ¡ÙìÌ ²üÈÐ (´ôÒõ) ±ýÚõ, ¦ÀÕÁ¡ÙìÌ ®¼¡ÉÐ ±ýÚõ §ÀÍÅ¡ö.

==========================
சிவசிவா:

1.
¦ÀÕÁ¡û - ÒÇ¢§Â¡¾¨Ã - º¢§Ä¨¼
2006-02-21

þ¨Ä¢ø ¸¢¼ó¾¡Öõ ²Éò¾¢ø ¯ñ¼¡õ
¯ÄÌñÏõ ¬Å¡ ±Û§Á - ¿Äõ¦ºö
ÁÕóÐ ÅÆ¢òШ½ Áì¸û Ò¸Øõ
¦ÀÕÁ¡û ÒÇ¢§Â¡ ¾¨Ã!

þ¨Ä = º¡ôÀ¢Îõ þ¨Ä; / ¬Ä¢¨Ä;
²Éõ = À¡ò¾¢Ãõ; / ÀýÈ¢
¬Å¡ = «¾¢ºÂ ¬Éó¾ì ÌÈ¢ôÒ; / ¬+Å¡ = ÀÍ + Å¡
ÁÕóÐ = §º¡Ú; / «Á¢÷¾õ;
ÅÆ¢òШ½ = À¢Ã¡½ò¾¢ø ܼ ÅÕÅÐ; / ÀÃõÀ¨Ã¡¸ ¯¾Å¢ ÅÕõ ÌÎõÀò Ш½;

ÒÇ¢§Â¡¾¨Ã:
º¡ôÀ¡ðÎ þ¨Ä¢ø þÕìÌõ. À¡ò¾¢Ãò¾¢Öõ þÕìÌõ. ¯Ä¸ò¾Å÷ ¯ýÀ¡÷¸û. ¬†¡ ±ýÀ¡÷¸û.

(«øÄÐ -
¸¡Ãò¾¡ø ¬ ¬ ±ýÀ¡÷¸û). Àº¢¨Âô §À¡ì¸¢ ¿ý¨Á «Ç¢ìÌõ §º¡Ú. À¢Ã¡½ò¾¢ø ܼ ÅÕõ. Áì¸û Ò¸úÅ¡÷¸û.

¦ÀÕÁ¡û:
¬Ä¢¨Ä¢ø ТøÅ¡ý. ÀýÈ¢ ¯ÕÅ¢ø (Åᆠ«Å¾¡Ãõ) þÕôÀ¡ý. ¯Ä¸í¸¨Çò ¾ýÛû§Ç ¦¸¡ñ¼Åý.
(¸ñ½É¡¸) ÀÍì¸¨Ç Å¡ ±ýÀ¡ý. Àì¾÷¸ÙìÌ ¿Äõ¾Õõ «Á¢÷¾õ ¬Å¡ý. «Å÷¸ÙìÌ ÀÃõÀ¨Ã¡¸ ¯¾Å¢
ÅÕõ Ш½ ¬Å¡ý. («øÄÐ - «Å÷¸û ±íÌî ¦ºýÈ¡Öõ ܼ§Å ¦ºøÖõ Ш½ ¬Å¡ý). Áì¸û о¢ôÀ¡÷¸û.

2)
Á¢¸¦Åñ¦½ö §ÅñΞ¡ø §ÁÖõ ÀÄÃ(Ð)
«¸ò¾¢ø þÕôÀ¾¡ø «í¸î - ͸ò¨¾ò
¾Õž¡ø ¿øÄ ¾Á¢ÆÈ¢»÷ ¦º¡øÅ÷
¦ÀÕÁ¡û ÒÇ¢§Â¡ ¾¨Ã.

Á¢¸¦Åñ¦½ö = Á¢¸ ¦Åñ¦½ö; / Á¢¸ ±ñ¦½ö
«¸õ = ÁÉõ; / Å£Î;
«í¸î͸õ = «íÌ «î ͸õ; / «í¸õ + ͸õ

¦ÀÕÁ¡û:
¸ñ½É¡¸ ÅóÐ Á¢¸×õ ¦Åñ¦½ö §ÅñÊò ¾¢ýÀ¾¡ø, ÀÄÕ¨¼Â ÁÉò¾¢ø þÕôÀ¾¡ø, §ÀâýÀò¨¾ò
¾Õž¡ø
ÒÇ¢§Â¡¾¨Ã: ¦ºöžüÌ Á¢¸ ±ñ¦½ö §¾¨ÅôÀΞ¡ø, ÀÄÕ¨¼Â þøÄí¸Ç¢ø þÕôÀ¾¡ø, (¯ñÀÅ÷ìÌî) ºÃ£Ã ͸ò¨¾ò ¾Õž¡ø

¿ýÌ ¾Á¢ú ¸üÈÅ÷¸û ¦ÀÕÁ¡Ùõ ÒÇ¢§Â¡¾¨ÃÔõ §¿÷ ±ýÀ÷.


3)
Áì¸û À¨¼ò¾¢ÎÅ÷ šâÔ𠦸¡ûÙÅ÷
«ì¸¡ ÃÅʺ¢Ä¡ö «ýÀÕ - ÅìÌõ
Ò¸úì(Ì)«Ç(×) þøÄ¡ô ¦À¡Õû;¦ÀÕÁ¡û §À¡Äî
º¸ò¾¢ø ÒÇ¢§Â¡ ¾¨Ã!

À¨¼ò¾¢ÎÅ÷ = ¨¿§Åò¾¢Âõ ¦ºöÅ÷; / §¾¡üÚÅ¢ôÀ÷
šâÔ𦸡ûÙÅ÷ = šâ ¯ð¦¸¡ûÙÅ÷; / šâÔû (ÀûÇ¢) ¦¸¡ûÅ÷
šâ = «ûÇ¢; / ¸¼ø;
«ì¸¡ÃÅʺ¢Ä¡ö = «ì ¸¡Ã «Êº¢Ä¡ö; / «ì¸¡ÃÅʺ¢ø ¬ö;
«ýÀÕÅìÌõ = «ýÀ÷ ¯ÅìÌõ

ÒÇ¢§Â¡¾¨Ã:
Áì¸û ÒÇ¢§Â¡¾¨Ã¨Â þ¨ÈÅÛìÌ ¨¿§Åò¾¢Âõ ¦ºöÅ÷. «¨¾ «ûÇ¢ ¯ñÏÅ÷. À¢Ã¢Â÷¸û Á¸¢Øõ «ó¾ì
¸¡Ãõ ¯ûÇ º¡¾õ ¬¸¢, «ÇÅ¢øÄ¡¾ Ò¸ú ¯¨¼Â ¦À¡ÕÇ¡õ.

¦ÀÕÁ¡û:
Á츨Çò §¾¡üÚÅ¢ôÀ÷. À¡ü¸¼Öû ÀûÇ¢ ¦¸¡ûÅ÷. §¾Îõ Àì¾÷¸û Á¸¢Øõ «ì¸¡ÃÅʺ¢ø (þýÉÓÐ). ±ø¨Ä þøÄ¡¾ Ò¸ú ¯¨¼ÂÅ÷.
±É§Å, þù×ĸò¾¢ø ¦ÀÕÁ¡¨Çô §À¡ýȧ¾ ÒÇ¢§Â¡¾¨Ã!

4.
¦ÀÕõÀº¢Â÷ «ýÀ÷¸û §ÀÏÅ÷ ¨¸Â¢ø
ÅÕõŨÃÔõ ¸¡ò¾¢ÕôÀ÷ ¯ñ§¼ - «ÕõÀ¾õ
þýÒÚÅ÷ š¡à ²òÐÅ÷ ¿üÒÇ¢
«ýÉõ «Ã¢¦Âý(Ú) «È¢!

Àº¢Â÷ = Àº¢òÐ þÕôÀÅ÷; / À¡¸ þÕôÀÅ÷;
§ÀϾø = ¯ð¦¸¡ûÙ¾ø; §À¡üÚ¾ø; Á¾¢ò¾ø; Å¢ÕõÒ¾ø; ÅÆ¢Àξø; ¸Õоø;
Ũà = Á¨Ä
¸¡ò¾¢Õò¾ø = ±¾¢÷À¡÷ò¾¢Õò¾ø; / À¡Ð¸¡ò¾ø
¯ñÎ = º¡ôÀ¢ðÎ; / ¯ûÇÐ
«ÕõÀ¾õ = «Ã¢Â À¾õ
«Õõ = «Ã¢Â; «Õ¨Á¡É;
À¾õ = ÀìÌÅõ; ¯½×; §º¡Ú; / À¾Å¢; ¦¾öÅÀ¾Å¢; ÅÆ¢; þ¼õ;
š¡à = Å¡ö ¿¢ÃõÀ; / ÓØìÌçġÎ;
²òоø = Å¡úòоø; / о¢ò¾ø

ÒÇ¢§Â¡¾¨Ã:
¦ÀÕõÀº¢§Â¡Î þÕôÀÅ÷¸Ùõ Àì¾÷¸Ùõ ¯ð¦¸¡ûÅ¡÷¸û. («Ð) ¨¸Â¢ø ¸¢¨¼ìÌõ ŨÃÔõ ±¾¢÷À¡÷òÐì
¸¡ò¾¢ÕôÀ¡÷¸û. «Ã¢Â §º¡ü¨È ¯ñÎ þýÒÚÅ¡÷¸û. (¯ñ¼ À¢ý) š¡à šúòÐÅ¡÷¸û.

¦ÀÕÁ¡û:
¦Àâ À §ÁÉ¢ ¯¨¼ÂÅ÷. ("À Á¡Á¨Ä §À¡ø §ÁÉ¢"). Àì¾÷¸û §À¡üÚÅ¡÷¸û. («øÄÐ -
Àì¾÷¸û Å¢ÕõÒÅ÷ / Àì¾÷¸¨Ç Å¢ÕõÒÅ¡÷). «ÅÃÐ ¨¸Â¢ø Á¨ÄÔõ ÅÕõ. ("§¸¡Å÷¾É ¸¢Ã¢¨Âò
à츢ÂÐ"). ±øÄ¡ ¯Â¢÷¸¨ÇÔõ ¸¡ôÀÅ÷. («Å¨Ã ÅÆ¢ÀÎõ Àì¾÷¸ÙìÌ) §ÁÄ¡É À¾Å¢ ¯ñÎ.
«Å÷¸û þýÀõ «¨¼Å¡÷¸û. š¡Ãò о¢ôÀ¡÷¸û.

±É§Å ¿øÄ ÒÇ¢§Â¡¾¨Ã †Ã¢ ±ýÚ ¯½÷š¡¸.

«ýÒ¼ý,
Å¢. ÍôÀ¢ÃÁ½¢Âý
======================
பசுபதி:

தூணில் இருப்பதால், சூதன் தொழிலதனால்
மாணி உருவில் மயக்குவதால் -- ஆணம்
தருநெறியால், அன்னம் சனித்ததால் ஒக்கும்
பெருமாள் புளியோ தரை.

பெருமாள் : நரசிம்மராய்த் தூணில் இருப்பதால், தேர்ப்பாகன்(சூதன்)  தொழிலைக் கண்ணனாய்ச் செய்ததால், வாமனப் பிரம்மசாரி( மாணி) உருவில் மகாபலியை மயக்குவதால்,  அன்பு (ஆணம்) நெறியான வைணவத்தால், (சிவன் முடியை நோக்கிப் பறந்த) அன்ன உருவினனான பிரம்மனைப் பிறப்பித்ததால்.

புளியோதரை: கோயில் தூண்களில் இருப்பதால்,:-)) சமையற்காரன் (சூதன்) தொழிலாக இருப்பதால், அழகு(மாணி) உருவில் மக்களை மயக்குவதால், கொள்கலம் (ஆணம்) தருமுறையால், அன்னமாய்(சோறாய்)  பிறப்பதால்.

----------------------------------------
¦ºªó¾÷:

þ§¾¡ ÅÕ¸¢ÈÐ ³Âí¸¡÷ Å£ðÎô ÒÇ¢§Â¡¾¨Ã

þ¨Ä¢ø þÕó¾¢Îõ; «ýÉÓõ ¬Ìõ
Á¨Ä§ÂÚõ Àì¾Ã¢ý Å¡Ôõ Á½ìÌõ;
«ÕõÀ¾õ ¸ñÊÎõ «ýÀ÷ ¸Ç¢ìÌõ
¦ÀÕÁ¡û ÒÇ¢§Â¡¾¨Ã.

ÒÇ¢§Â¡¾¨Ã: Å¡¨Æ Ӿġ þ¨Ä¢ø þÕìÌõ; ´ÕŨ¸ «ýÉÓõ ¬Ìõ; Á¨Ä ²È¢ ÅÕõ
Àì¾÷¸û ÒÇ¢§Â¡¾¨Ã ¯ñÏž¡ø Å¡¦ÂøÄ¡õ Á½ìÌõ; «Õ¨ÁÂ¡É À¾ò¾¢ø ¬ì¸ôÀð¼ §º¡üÈ¢ø ¸Ä󾾡ø «ýÀ÷ ÁÉõ Á¸¢úÅ÷.

¦ÀÕÁ¡û: ¬Ä¢¨Ä§Áø À¡Ä¸É¡ö þÕôÀ¡÷; «ýÉÅÊÅ¢ø «Å¾Ã¢ôÀ¡÷; ¾¢ÕÁ¨Ä ²ÚÅ¡÷;
¿¡Áõ ¿Å¢øÅ¡Ã¢ý Å¡¦ÂøÄ¡õ Á½ì¸î ¦ºöÅ¡÷; ®ÊøÄ¡ ¾¢ÕÅʸ¨Çì ¸¡ðÊ «ýÀ÷ ÁÉõ Á¸¢úÅ¢ôÀ¡÷
===========================
«.º£.á Å¢ý 'ÒÇ¢§Â¡¾¨Ã'ô À¡ðÎ
þ§¾¡ þý¦É¡Õ ³Âí¸¡÷ Å£ðÎô ÒÇ¢§Â¡¾¨Ã!

“Å¡Éó ¾ýÉ¢ø Á¨ÈóÐûÇ¡ö
. ¨Å Áñ½¢ø ÒÌóÐûÇ¡ö
»¡Éõ Á¢Ç¢Õõ ÓÉ¢ÅÕÇõ
. ¿ÂóÐ §¸¡Â¢ø ¦¸¡ñÎûÇ¡ö
²ÉÁ¡¸¢ ±¨É «¨½ó¾¡ö
. ±É¢Ûõ «È¢Â¡ý ±ý§È¡¿£
§À¡É ¾¢¨ºÂ¢ý Өɢ¦ÄÄ¡õ
. ÒÇ¢§Â¡ ¾¨Ã¡ö ¿¢ýȨɧ¡?”

ÀÍÀ¾¢
------------------------------
மறைந்த பெரும் கவிஞர் ராஜரங்கன் என்னும் ரங்கராஜன்:

«Ãí¸ò¾ÃºÕìÌõ «ÕïͨÅô ÒÇ¢§Â¡¾¨ÃìÌõ ¬Â¢Ãõ ¬ñθÙìÌ §ÁÄ¡¸ ¦¿Õí¸¢Â ¦¾¡¼÷Ò ( Óó¨¾Â ƒýÁí¸¨ÇÔõ §º÷òÐ!)

þó¾ ¦ÅñÀ¡¨Å Å¢ðÎ ¨Åì¸Ä¡Á¡?

°ºø ¯ÅôÀ¾¡ø °Ã¡÷ Á¸¢úž¡ø
¸¡º¢¨Éì ¨¸Â¡ø ÓÊž¡ø - Å£º¢
þÕ¨¸Ôõ §º÷ò¾Å÷ þÃôÀ¾¡ø þíÌ
¦ÀÕÁ¡û ÒÇ¢§Â¡ ¾¨Ã

¦ÀÕÁ¡û °ïºÄ¡Îž¢ø ¸Ç¢ôÀÅ÷. «¨¾ì ¸ñÎ °Ã¡÷ Á¸¢úÅ÷. ¸¡Í ±ýÛõ «îÍò¾¡Ä¢¨Â ( ÒÄ¢ ¿¸õ, º£ôÀ¢ý
Àü¸û, º¢È¢Â ¾í¸«½¢¸û §À¡ýÈ «î͸û ¦¾¡íÌÅÐ) º£§¾Å¢ ¸Øò¾¢ø ¦ÀÕÁ¡û âðÎÅ¡÷. ÒÈôÀ¡ðÊø Àì¾÷¸û þÕ
¨¸¸¨ÇÔõ ÜôÀ¢ «Å¨Ã ÅÃí¸û §¸ðÎ §ÅñÎÅ÷.

¦¸¡ïºõ À¨ÆÂ¾¡É ÒÇ¢§Â¡¾¨Ã ͨŠÁ¢ì¸Ð, ( სƒ¢ ´Õ ¸¨¾Â¢ø º¢È¢Ð «Ç¢ó¾ Å¡¨ÆôÀÆò¾¢ý ͨŠ«¾¢¸õ
±ýÚ ÌÈ¢ôÀ¢Î¸¢È¡÷). ' ²ö, °ºø ÒÇ¢§Â¡¾¨Ã' ±ýÀÐ ÀûǢ¢ø «ó¾ì ¸¡Äò¾¢ø «Êì¸Ê §¸ðÌõ º£ñ¼ø.
ÒÇ¢§Â¡¾¨Ã ÅÆíÌÀÅ÷ «íÌÁ¢íÌõ À¡÷òÐ º¢øÄ¨È Å¡í¸¢î ¦ºÕ¸¢ì ¦¸¡ûÅÐ ¯ñÎ. ÒÇ¢§Â¡¾¨Ã측¸ þÃñÎ
¨¸¸¨ÇÔõ §º÷òÐ ¿£ðÊì ¦¸ïº §ÅñÎõ.
 
ÒÇ¢§Â¡¾¨Ã ¾¡…ý
-----------------------------------
2009/7/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

K.R. Kumar

unread,
Jul 12, 2009, 11:39:34 PM7/12/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள அனந்த்,
 
எழுத்துரு குளறி வந்திருக்கிறது. ஒருங்குறி இல்லையோ ??
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/7/13 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 13, 2009, 12:01:55 AM7/13/09
to santhav...@googlegroups.com
Sorry, I just cut-and-pasted the poem from the yahoo site which used TSc font. Blame it on posting at mid-night! 
The Unicode version is given below. I have not fixed the broken sentences..
 
ananth 
--------------
பசுபதி சுட்டியது போல யாஹூ தளத்துச் சந்த வசந்தத்தில், இலந்தையார் தமது ஆசான் அ.சீ.ரா.-வின் புளியோதரை-பெருமாள் பற்றிய பாடல் ஒன்றை (கீழே காணவும்) குறிப்பிட்டு, அவையோரை, புளியோதரை-பெருமாள் இணைக்கும் சிலேடையைப் புனையச் சொன்னார். (http://groups.yahoo.com/group/santhavasantham/message/14486)
அதற்கு விடையாக வந்த சிலேடை வெண்பாக்கள்: 
--------------------
இலந்தை
நல்ல நிவேதனத்து நாயகமாய், தன்மேனி
நல்லெண்ணை ஆடி நயமாகச்- சொல்லும்
அரிய சுவையாகும் அர்ச்சாவ தாரப்

பெருமாள் புளியோ தரை.
 
புளியோதரை
நல்ல நிவேதனத்து நாயகமாய்- நிவேதனமாகக் கொடுக்கும் பொருட்களில் தலை சிறந்ததாய்
நல்லெண்ணை ஆடி நயமாக- தெளிவு
சொல்லும் அரிய சுவையாகும் - சொல்லிப் பூரிக்கும் அரியசுவையாகும்

அர்ச்சாவதாரப் பெருமாள்.
நல்ல நிவேதவதனத்தை ஏற்கின்ற நாயகமாய் இருப்பவர்
தன் மேனி நல்லெண்ணை ஆடி நயமாக- தன் மேனியில் நல்லெண்னை அபிஷேகம் பெற்றுப் பளபளப்பாய்
சொல்லும் அரிய சுவையாகும்- பெருமாளின் நாமங்களைச் சொல்ல நாவுக்குச் சுவையாகும்
--------------------------------
அனந்த்
 
வட்டேந்தி வந்தோர் மனம்நிறைக்கும் நல்லரிக்(கு)
இட்டபேர் இன்புறும் இன்னமுது - பட்டால்
ஒருமஞ்சள் வண்ணமுடைக்(கு) உண்டுபுளி யன்னம்
பெருமாளுக் கொப்பும்எனப் பேசு.

பெருமாள்: சக்கரத்தை ஏந்தித் தம்மிடம் வருவோரின் மனம் திருப்தியடையச் செய்வார்;
நன்மைபுரியும் ஹரிக்கு இட்ட பெயர்களில் பெருமாளும் ஒன்று; அன்பர்கள் துதித்து
இன்பமடையும் அமுதம்போன்றவர்; பட்டு அணிவதால் அவரது ஆடைக்கு உயர்ந்த மஞ்சள் நிறம் உண்டு ((பீத வஸ்த்ரம்).
புளியோதரை: (வட்டமான) தட்டேந்தி வந்தோரின் மனம்நிறைய வைக்கும்;
நல்லரிக்கு இட்டபேர் = அரிசிக்கு இட்ட நல்ல மறுபெயர்; அல்லது,
நல்லரிக்கு இட்டபேர் இன்புறும் இன்னமுது = ஹரிக்கு நிவேதனமாக இடுபவரை இன்பம் பெறச்செய்யும்; அல்லது,
இட்டபேர் இன்புறும் இன்னமுது = கொடுப்பவரும் (இட்ட பேர்) இன்பம்பெறும் இனிய அமுது போன்றது (வைணவர் புளியமுது என்பார்கள்);
உடையில் பட்டால் ஒருவகையான மஞ்சள் நிறத்தை அது (உடை) பெறும்.
சாப்பிட்டுப் பார்த்து (உண்டு), புளியன்னம் பெருமாளுக்கு ஏற்றது (ஒப்பும்) என்றும், பெருமாளுக்கு ஈடானது என்றும் பேசுவாய்.
-----------------------------

சிவசிவா சுப்பிரமணியன்:
1.
பெருமாள் - புளியோதரை - சிலேடை
2006-02-21

இலையில் கிடந்தாலும் ஏனத்தில் உண்டாம்
உலகுண்ணும் ஆவா எனுமே - நலம்செய்
மருந்து வழித்துணை மக்கள் புகழும்
பெருமாள் புளியோ தரை!

இலை = சாப்பிடும் இலை; / ஆலிலை;
ஏனம் = பாத்திரம்; / பன்றி
ஆவா = அதிசய ஆனந்தக் குறிப்பு; / ஆ+வா = பசு + வா
மருந்து = சோறு; / அமிர்தம்;
வழித்துணை = பிரயாணத்தில் கூட வருவது; / பரம்பரையாக உதவி வரும் குடும்பத் துணை;

புளியோதரை:
சாப்பாட்டு இலையில் இருக்கும். பாத்திரத்திலும் இருக்கும். உலகத்தவர் உன்பார்கள். ஆஹா என்பார்கள்.
(அல்லது -
காரத்தால் ஆ ஆ என்பார்கள்). பசியைப் போக்கி நன்மை அளிக்கும் சோறு. பிரயாணத்தில் கூட வரும். மக்கள் புகழ்வார்கள்.

பெருமாள்:
ஆலிலையில் துயில்வான். பன்றி உருவில் (வராஹ அவதாரம்) இருப்பான். உலகங்களைத் தன்னுள்ளே கொண்டவன்.
(கண்ணனாக) பசுக்களை வா என்பான். பக்தர்களுக்கு நலம்தரும் அமிர்தம் ஆவான். அவர்களுக்கு பரம்பரையாக உதவி
வரும் துணை ஆவான். (அல்லது - அவர்கள் எங்குச் சென்றாலும் கூடவே செல்லும் துணை ஆவான்). மக்கள் துதிப்பார்கள்.
 
2)
மிகவெண்ணெய் வேண்டுவதால் மேலும் பலர(து)
அகத்தில் இருப்பதால் அங்கச் - சுகத்தைத்
தருவதால் நல்ல தமிழறிஞர் சொல்வர்

பெருமாள் புளியோ தரை.

மிகவெண்ணெய் = மிக வெண்ணெய்; / மிக எண்ணெய்
அகம் = மனம்; / வீடு;
அங்கச்சுகம் = அங்கு அச் சுகம்; / அங்கம் + சுகம்
பெருமாள்:
கண்ணனாக வந்து மிகவும் வெண்ணெய் வேண்டித் தின்பதால், பலருடைய மனத்தில் இருப்பதால், பேரின்பத்தைத்
தருவதால்
புளியோதரை: செய்வதற்கு மிக எண்ணெய் தேவைப்படுவதால், பலருடைய இல்லங்களில் இருப்பதால், (உண்பவர்க்குச்) சரீர சுகத்தைத் தருவதால்
நன்கு தமிழ் கற்றவர்கள் பெருமாளும் புளியோதரையும் நேர் என்பர்.
 
3)
மக்கள் படைத்திடுவர் வாரியுட் கொள்ளுவர்
அக்கா ரவடிசிலாய் அன்பரு - வக்கும்
புகழ்க்(கு)அள(வு) இல்லாப் பொருள்;பெருமாள் போலச்
சகத்தில் புளியோ தரை!

படைத்திடுவர் = நைவேத்தியம் செய்வர்; / தோற்றுவிப்பர்
வாரியுட்கொள்ளுவர் = வாரி உட்கொள்ளுவர்; / வாரியுள் (பள்ளி) கொள்வர்
வாரி = அள்ளி; / கடல்;
அக்காரவடிசிலாய் = அக் கார அடிசிலாய்; / அக்காரவடிசில் ஆய்;
அன்பருவக்கும் = அன்பர் உவக்கும்

புளியோதரை:
மக்கள் புளியோதரையை இறைவனுக்கு நைவேத்தியம் செய்வர். அதை அள்ளி உண்ணுவர். பிரியர்கள் மகிழும் அந்தக்
காரம் உள்ள சாதம் ஆகி, அளவில்லாத புகழ் உடைய பொருளாம்.

பெருமாள்:
மக்களைத் தோற்றுவிப்பர். பாற்கடலுள் பள்ளி கொள்வர். தேடும் பக்தர்கள் மகிழும் அக்காரவடிசில் (இன்னமுது). எல்லை இல்லாத புகழ் உடையவர்.
எனவே, இவ்வுலகத்தில் பெருமாளைப் போன்றதே புளியோதரை!
 
4.
பெரும்பசியர் அன்பர்கள் பேணுவர் கையில்
வரும்வரையும் காத்திருப்பர் உண்டே - அரும்பதம்
இன்புறுவர் வாயார ஏத்துவர் நற்புளி
அன்னம் அரியென்(று) அறி!

பசியர் = பசித்து இருப்பவர்; / பச்சையாக இருப்பவர்;
பேணுதல் = உட்கொள்ளுதல்; போற்றுதல்; மதித்தல்; விரும்புதல்; வழிபடுதல்; கருதுதல்;
வரை = மலை
காத்திருத்தல் = எதிர்பார்த்திருத்தல்; / பாதுகாத்தல்
உண்டு = சாப்பிட்டு; / உள்ளது
அரும்பதம் = அரிய பதம்
அரும் = அரிய; அருமையான;
பதம் = பக்குவம்; உணவு; சோறு; / பதவி; தெய்வபதவி; வழி; இடம்;
வாயார = வாய் நிரம்ப; / முழுக்குரலோடு;
ஏத்துதல் = வாழ்த்துதல்; / துதித்தல்

புளியோதரை:
பெரும்பசியோடு இருப்பவர்களும் பக்தர்களும் உட்கொள்வார்கள். (அது) கையில் கிடைக்கும் வரையும் எதிர்பார்த்துக்
காத்திருப்பார்கள். அரிய சோற்றை உண்டு இன்புறுவார்கள். (உண்ட பின்) வாயார வாழ்த்துவார்கள்.

பெருமாள்:
பெரிய பச்சை மேனி உடையவர். ("பச்சை மாமலை போல் மேனி"). பக்தர்கள் போற்றுவார்கள். (அல்லது -
பக்தர்கள் விரும்புவர் / பக்தர்களை விரும்புவார்). அவரது கையில் மலையும் வரும். ("கோவர்தன கிரியைத்
தூக்கியது"). எல்லா உயிர்களையும் காப்பவர். (அவரை வழிபடும் பக்தர்களுக்கு) மேலான பதவி உண்டு.
அவர்கள் இன்பம் அடைவார்கள். வாயாரத் துதிப்பார்கள்.
எனவே நல்ல புளியோதரை ஹரி என்று உணர்வாயாக.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
======================
பசுபதி:

தூணில் இருப்பதால், சூதன் தொழிலதனால்
மாணி உருவில் மயக்குவதால் -- ஆணம்
தருநெறியால், அன்னம் சனித்ததால் ஒக்கும்
பெருமாள் புளியோ தரை.

பெருமாள் : நரசிம்மராய்த் தூணில் இருப்பதால், தேர்ப்பாகன்(சூதன்)  தொழிலைக் கண்ணனாய்ச் செய்ததால், வாமனப் பிரம்மசாரி( மாணி) உருவில் மகாபலியை மயக்குவதால்,  அன்பு (ஆணம்)
நெறியான வைணவத்தால், (சிவன் முடியை நோக்கிப் பறந்த) அன்ன உருவினனான பிரம்மனைப் பிறப்பித்ததால்.
புளியோதரை: கோயில் தூண்களில் இருப்பதால்,:-)) சமையற்காரன் (சூதன்) தொழிலாக இருப்பதால், அழகு(மாணி) உருவில் மக்களை மயக்குவதால், கொள்கலம் (ஆணம்) தருமுறையால்,
அன்னமாய்(சோறாய்)  பிறப்பதால்.
----------------------------------------
சௌந்தர்:
 
இதோ வருகிறது ஐயங்கார் வீட்டுப் புளியோதரை

இலையில் இருந்திடும்; அன்னமும் ஆகும்
மலையேறும் பக்தரின் வாயும் மணக்கும்;
அரும்பதம் கண்டிடும் அன்பர் களிக்கும்
பெருமாள் புளியோ தரை.

புளியோதரை: வாழை முதலாய இலையில் இருக்கும்; ஒருவகை அன்னமும் ஆகும்; மலை ஏறி வரும்
பக்தர்கள் புளியோதரை உண்ணுவதால் வாயெல்லாம் மணக்கும்; அருமையான பதத்தில் ஆக்கப்பட்ட சோற்றில் கலந்ததால் அன்பர் மனம் மகிழ்வர்.
பெருமாள்: ஆலிலைமேல் பாலகனாய் இருப்பார்; அன்னவடிவில் அவதரிப்பார்; திருமலை ஏறுவார்;
நாமம் நவில்வாரின் வாயெல்லாம் மணக்கச் செய்வார்; ஈடில்லா திருவடிகளைக் காட்டி அன்பர் மனம் மகிழ்விப்பார்
===========================
அ.சீ.ரா வின் 'புளியோதரை'ப் பாட்டு
 
இதோ இன்னொரு ஐயங்கார் வீட்டுப் புளியோதரை!

“வானந் தன்னில் மறைந்துள்ளாய்
. வைய மண்ணில் புகுந்துள்ளாய்
ஞானம் மிளிரும் முனிவருளம்
. நயந்து கோயில் கொண்டுள்ளாய்
ஏனமாகி எனை அணைந்தாய்
. எனினும் அறியான் என்றோநீ
போன திசையின் முனையிலெலாம்
. புளியோ தரையாய் நின்றனையோ?”

பசுபதி

------------------------------
மறைந்த பெரும் கவிஞர் ராஜரங்கன் என்னும் ரங்கராஜன்:
 
அரங்கத்தரசருக்கும் அருஞ்சுவைப் புளியோதரைக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய தொடர்பு ( முந்தைய ஜன்மங்களையும் சேர்த்து!) இந்த வெண்பாவை விட்டு வைக்கலாமா?

ஊசல் உவப்பதால் ஊரார் மகிழ்வதால்
காசினைக் கையால் முடிவதால் - வீசி
இருகையும் சேர்த்தவர் இரப்பதால் இங்கு

பெருமாள் புளியோ தரை

பெருமாள் ஊஞ்சலாடுவதில் களிப்பவர். அதைக் கண்டு ஊரார் மகிழ்வர். காசு என்னும் அச்சுத்தாலியை ( புலி நகம், சீப்பின்
பற்கள், சிறிய தங்கஅணிகள் போன்ற அச்சுகள் தொங்குவது) சீதேவி கழுத்தில் பெருமாள் பூட்டுவார். புறப்பாட்டில் பக்தர்கள் இரு
கைகளையும் கூப்பி அவரை வரங்கள் கேட்டு வேண்டுவர்.
கொஞ்சம் பழையதான புளியோதரை சுவை மிக்கது, ( ராஜாஜி ஒரு கதையில் சிறிது அளிந்த வாழைப்பழத்தின் சுவை அதிகம்
என்று குறிப்பிடுகிறார்). ' ஏய், ஊசல் புளியோதரை' என்பது பள்ளியில் அந்தக் காலத்தில் அடிக்கடி கேட்கும் சீண்டல்.
புளியோதரை வழங்குபவர் அங்குமிங்கும் பார்த்து சில்லறை வாங்கிச் செருகிக் கொள்வது உண்டு. புளியோதரைக்காக இரண்டு
கைகளையும் சேர்த்து நீட்டிக் கெஞ்ச வேண்டும்.
 
புளியோதரை தாஸன்
-----------------------------------
2009/7/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
2009/7/12 K.R. Kumar <krish...@gmail.com>

K.R. Kumar

unread,
Jul 13, 2009, 12:10:10 AM7/13/09
to santhav...@googlegroups.com
அனைவருக்கும் நன்றி.
 
இப்பொழுது சரியாகப் படித்(தேன்), ரசித்(தேன்)!
Reply all
Reply to author
Forward
0 new messages