அன்னை அளித்த அமுது

24 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 5, 2026, 10:09:16 PM (6 days ago) Apr 5
to சந்தவசந்தம்
அன்னை அளித்த அமுது

தூதுவளை சாற்றமுதும் சூடான சாதமும் 
கோதில்லா கோவைக்காய்க் கூட்டதனால்  - வாதிடாமல்
இன்றுண்டேன் ஆஹாஹா என்னசுவை ஆர்வமுடன் 
அன்னை அளித்த அமுது

பிற்குறிப்பு

சாற்றமுது - ரசம்.
05.04.2022 அன்று எங்கள் வீட்டுச் சமையல் 

Rajagopalan Soundararajan

unread,
Apr 6, 2026, 8:32:14 AM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்
நான்கு வருடமாய் நாவில் சுவைதேக்கிப்
பாங்குடன் சொன்னார் பரிந்து!

On Sunday, 5 April 2026 at 22:09:16 UTC-4 தங்கவேல் காஞ்சிபுரம் wrote:
அன்னை அளித்த அமுது

Siva Siva

unread,
Apr 6, 2026, 9:14:10 AM (5 days ago) Apr 6
to santhav...@googlegroups.com
1)
I do not know if that date has any typo.
If it is from 20022 then,
ஆசையாய்ப் போட்ட அமுதை
அசைபோட்டு எழுதிய வெண்பா!

2)
தூதுவளை*ச்* சாற்றமுதும் 
கோதில்லா*க்* கோவைக்காய்க் கூட்டதனால்  

3)
/ ஆர்வமுடன் அன்னை /

ஆர்வத்தோ டன்னை - may fit as well.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 6, 2026, 9:14:49 AM (5 days ago) Apr 6
to santhav...@googlegroups.com
2022 - not 20022.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 6, 2026, 9:41:32 AM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா 

On Monday, April 6, 2026 at 6:02:14 PM UTC+5:30 Rajagopalan Soundararajan wrote:
நான்கு வருடமாய் நாவில் சுவைதேக்கிப்
பாங்குடன் சொன்னார் பரிந்து!


அற்புதமான குறள் வெண்பா 
மன்னிக்கவும் ஐயா தேதி தவறான எழுதிவிட்டேன்.
05.04.2026 ( 2022 அல்ல)
On Sunday, 5 April 2026 at 22:09:16 UTC-4 தங்கவேல் காஞ்சிபுரம் wrote:
அன்னை அளித்த அமுது

05.04.2026 அன்று எங்கள் வீட்டுச் சமையல் 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 6, 2026, 9:44:58 AM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 

05.04.2026 அன்று எங்கள் வீட்டுச் சமையல் .

எனது தவறைச் சரிசெய்து எழுதிய வெண்பா

தூதுவளைச் சாற்றமுதும் சூடான சாதமும் 
கோதில்லாக் கோவைக்காய்க் கூட்டதனால்  - வாதிடாமல்
இன்றுண்டேன் ஆஹாஹா என்னசுவை ஆர்வத்தோ 
டன்னை அளித்த அமுது

On Monday, April 6, 2026 at 6:44:10 PM UTC+5:30 Siva Siva wrote:
1)
I do not know if that date has any typo.
If it is from 20022 then,
ஆசையாய்ப் போட்ட அமுதை
அசைபோட்டு எழுதிய வெண்பா!

நன்றி குருவே

Arasi Palaniappan

unread,
Apr 6, 2026, 10:28:07 AM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்
சாற்றமுதாம் ஐயங்கார் சாற்(று)அமுதும், கோவைக்காய்க் 
கூட்டமுதும் தாய்கைமணம் கூடவரப் - போற்றியுண்டே 
"என்ன  சுவை"என்றாய், 
ஏதெனினும் நற்சுவையே 
அன்னைகை பட்ட அமுது!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/fc89140b-1490-4ab5-8c64-87d6b154f8a1n%40googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Apr 6, 2026, 11:12:24 AM (5 days ago) Apr 6
to santhav...@googlegroups.com
வாதிடாமல்.. enRu  -kuri  nediil..venbaavil varaathu. vanthaal  osai   kuRaiyum   enRe  anRaiya ppulavarkaL  thaviththaarkaL. aagave sari seyyavum.  just  ithu  oru  karutthu. no advice,
 yogiyaar

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 6, 2026, 11:56:08 AM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்
யோகியாருக்கும் அரசி பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி
 வாதிடாமல் - விளாங்காய்ச்சீர் எனவே 
வாதின்றி என்று மாற்றிக்கொள்கிறேன்


தூதுவளைச் சாற்றமுதும் சூடான சாதமும் 
கோதில்லாக் கோவைக்காய்க் கூட்டதனால்  - வாதின்றி
இன்றுண்டேன் ஆஹாஹா என்னசுவை ஆர்வத்தோ 
டன்னை அளித்த அமுது


On Monday, April 6, 2026 at 8:42:24 PM UTC+5:30 Kaviyogi Vedham wrote:
வாதிடாமல்.. enRu  -kuri  nediil..venbaavil varaathu. vanthaal  osai   kuRaiyum   enRe  anRaiya ppulavarkaL  thaviththaarkaL. aagave sari seyyavum.  just  ithu  oru  karutthu. no advice,
 yogiyaar

On Mon, Apr 6, 2026 at 10:28 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
சாற்றமுதாம் ஐயங்கார் சாற்(று)அமுதும், கோவைக்காய்க் 
கூட்டமுதும் தாய்கைமணம் கூடவரப் - போற்றியுண்டே 
"என்ன  சுவை"என்றாய்,  ஏதெனினும் நற்சுவையே 
அன்னைகை பட்ட அமுது!


அற்புதமான வெண்பா 

நீங்கள் கூறியது உண்மை ஐயா
எங்க அம்மா எது செய்தாலும் தனிநற்சுவை தான்.



Reply all
Reply to author
Forward
0 new messages