வாராகி நூல் வெளியீடு

124 views
Skip to first unread message

Subbaiyar Ramasami

unread,
Jan 12, 2019, 10:56:27 AM1/12/19
to santhavasantham

வாராகி பற்றி நான் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு அடுத்த வாரம் சென்னையில் வெளியாகிறது. தலைப்பு “வாரிக்கொடுப்பாள் வாராகி” அத்தொகுப்பிலுள்ள பாடல்கள்

வாராகி திருப்பள்ளியெழுச்சி, வாராகி திருநட்சத்திர மாலை, வாராகி பஞ்சகம் வாராகி அந்தாதி வாராகி திருத்தசாங்கம், வாராகி நவரத்ன மாலை மகாவாராகி ஊஞ்சல் பதிகம், வாராகி கோலாட்டம் வாராகி கீர்த்தனை, வாராகி அட்டமங்கலம் வாராகி நவமணி மாலை 
வாராகி தோடகம்
வாராகி பள்ளு, வாராகி சம்வாதம் வாராகி கவசம்
வாராகி மகிட விருத்தம், வாராகி குங்குமம்
வாராகி வரவு 
மயிலை வாராகி சவ்வாது விடு தூது, 
வாராகி திருக்கண்ணியல் வகுப்பு, வாராகி பன்னிரு திருநாமங்கள், வாராகி தாலாட்டு 
வாராகி ஆற்றுப்படை, வாராகி கிரிசக்கர ரத விருத்தம் 
வாராகி சரண சிருங்க ரஹித வெண்பா
வாராகி நடுவெழுத்தலங்காரம், வாராகி அஸ்வரூடா பந்தம், வாராகி இரத பந்தம் வாராகி அட்டநாக பந்தம் வாராகி இரட்டைநாக பந்தம்
வாராகி ஐம்பாகி, வாராகி இரட்டைமணி மாலை
வாராகி அனுக்கிரக ஸ்தவம்-மொழியாக்கம்
வாராகி நாமம், வாராகி மங்கலம்


image.png


Kaviyogi Vedham

unread,
Jan 12, 2019, 11:56:44 PM1/12/19
to santhavasantham
வாழ்க உங்கள் கவி முயற்சி. இந்நூல் ஏற்கெனவே என்னிடம் உள்ளதே. வாழ்க,
 யோ
    ஓம் சக்தி!.யோக அன்னை அருள் உமக்குக் கிட்டட்டும்.
 சக்தி வெள்ளப் பரவசத்தில் மிதந்து
 சாகசம் செய்வோம்; சாதனை புரிவோம்/
 யோகியார்


--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaiyar Ramasami

unread,
Jan 13, 2019, 2:10:39 AM1/13/19
to santhavasantham
I have added more poems after that.
RAMASAMI

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 23, 2024, 8:52:48 PM7/23/24
to சந்தவசந்தம்
வணக்கம் தலைவரே 🙏
வாய்ப்பிருந்தால் வாராகி தாலாட்டு பாடலைப் பதிவு செய்யுங்கள்.
முருகா சரணம் 🙏

Subbaier Ramasami

unread,
Jul 24, 2024, 8:27:07 AM7/24/24
to santhav...@googlegroups.com

வாராகி  தாலாட்டு

ஆராத அமுதே என் அன்பே தாலேலோ
      அழகுமிகக் கொண்டவளே அரசி தாலேலோ
வாராகி வார்த்தாளி வரமே தாலேலோ
       வராகமுகி வராகமுகி வடிவே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
        வாழ்விக்க வந்தவளே மகவே தாலேலோ
கூரான தந்தங்கள்  கொண்டோய் தாலேலோ
        குலம்விளங்க வந்தவளே கோவே தாலேலோ

 அன்னைலலி தாம்பிகையின் செல்லம் தாலேலோ
       ஆயுதங்கள் கையெடுக்கும் அருளே தாலேலோ
மின்னுமொளி கண்களிலே கொண்டோய் தாலேலோ
       வேகமுடன் காலுதைக்கும் மின்னே தாலேலோ
சின்னதொரு தூளிக்குள் சேர்ந்தாய் தாலேலோ
       திரிலோகம் வளர்சக்தி பெற்றோய் தாலேலோ
முன்னொளிரும் நெற்றிக்கண் கொண்டோய் தாலேலோ
        முக்கண்ணி மோகினியே முத்தே தாலேலோ

ஆனைபலம் கொண்டவள்நீ ஆனாலும் கைக்குள்
       அடங்கியொரு குழந்தையென ஆனாய் தாலேலோ
சேனைநடத் திடுவதென  பொம்மைகளை யெல்லாம்
       செப்பமுடன் அணிவகுக்கும் திருவே தாலேலோ
வானமழும் மண்ணுமழும் வளரண்ட மெல்லாம்
       வருந்தியழும் நீயழுதால் அழவேண்டாம் கண்ணே
ஆனவிந்தை அண்டத்தைக் கிலுகிலுப்பை ஆக்கி
       ஆட்டுகிறேன் நீகேட்டு மகிழ்வாய் என் கண்ணே!

 பால்தருவேன் பழந்தருவேன் பரமே தாலேலோ
       பாரடியில் கிழங்கெடுத்துத் தருவேன் தாலேலோ
கோல்தருவேன் உலக்கையென வைத்துக்கொள் பெண்ணே
       கொடுங்கலப்பை வில்லம்பு நான்தருவேன்  கண்ணே

மேல்சுழலும் சக்கரமும் கதையோடு பூவும்
       விளையாட நான் தருவேன் ஆடிடுவாய் கண்ணே
கால்விரித்து நீபடுத்தால் துணிகிழிந்து போகும்
       கால்மடக்கிப் படுத்துக்கொள் என்செல்லப் பெண்ணே!

உன்விழிகள் சிவப்பதுமேன் என்னருமைக் கண்ணே
       ஓங்குசினம் கொள்ளுவதேன் வாராகிப் பெண்ணே
உன்கழுத்தில் போடுதற்கு  நவரத்ன மாலை
      உனக்காக அனுப்பியுளாள் லலிதாம்பா தேவி
என்னயிது வரம்கொடுப்ப தென்ன உன்றன் கையை
        இப்படிவைத் துள்ளாயோ
என் தெய்வம் நீயே
என்னரசி என் தெய்வம் இதமே தாலேலோ
        எங்கள்குல நாயகியே இறையே தாலேலோ

 தாலேலோ  தாலேலோ ஓ தண்ட நாதா

தாலேலோ தாலேலோ நீயெல்லாம் தாதா!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 24, 2024, 10:49:53 AM7/24/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா 🙏
மிகவும் சிறப்பாக உள்ளது வாராகி தாலாட்டு

/தாலேலோ தாலேலோ ஓ தண்ட நாதா/

இதன் பொருள் மட்டும் புரியவில்லை ..

சிவசதீஷ் குமார்.ர

unread,
Jul 24, 2024, 10:54:33 AM7/24/24
to santhav...@googlegroups.com

தண்டநாதா என்பது லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் வாராகி திருநாமம்...இதன் பொருள் தண்டம் எனும் ஆயுதத்தை வைத்திருப்பவளும் லலிதையின் சேனாதிபதியாக இருப்பதாலும் பக்தர்கள் நிம்மதியை கெடுக்கும் பாவிகளுக்கு தண்டனை கொடுப்பவளாகவும் வாராகி தேவி உள்ளாள்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jul 24, 2024, 11:38:50 AM7/24/24
to santhav...@googlegroups.com
தண்டநாதா என்பது வாராகியின் 12 திருநாமங்களில் ஒன்று

On Wed, Jul 24, 2024 at 9:49 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
மிக்க நன்றி ஐயா 🙏
Message has been deleted

Kaviyogi Vedham

unread,
Jul 24, 2024, 11:59:30 AM7/24/24
to santhav...@googlegroups.com
abaaram, vaazga ilandhai
 yogiyar

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 25, 2024, 10:49:50 PM7/25/24
to சந்தவசந்தம்
இலந்தை ஐயாவுக்கும் சிவ சதீஷ் தம்பிக்கும் நன்றி 🙏

On Wednesday, July 24, 2024 at 9:08:50 PM UTC+5:30 Subbaier Ramasami wrote:
தண்டநாதா என்பது வாராகியின் 12 திருநாமங்களில் ஒன்று

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Sep 9, 2025, 7:51:24 AM (9 days ago) Sep 9
to சந்தவசந்தம்
https://youtu.be/TbArbu_cT1Y?si=UjOQHp6RP5OpzoOy
👆 இலந்தை ஐயா எழுதிய 
வாராகி தாலாட்டு ஜிப்ரான் இசையில் 

On Friday

Siva Siva

unread,
Sep 10, 2025, 11:13:53 AM (8 days ago) Sep 10
to santhav...@googlegroups.com
It may be a good idea to include the verses in the description or as a comment - that can be pinned to the top by the channel owner.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages