தேநீர்த் தியானம்

54 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Aug 13, 2024, 3:59:54 PM8/13/24
to santhavasantham
தேநீர்த் தியானம்
(நேரிசை வெண்பா)

தேநீர் அருந்துங்கால் சிந்தனையொன் றில்லாமல்
தேநீர் சுவைக்கச் சிறக்குமே - தேநீரின்
இன்மணத்தில் ஆழ்கின்ற இக்கணமே மெய்யென்று
நின்மலமாய் நின்றொளிரும் நெஞ்சு.

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Aug 13, 2024, 5:11:38 PM8/13/24
to santhav...@googlegroups.com
தேனீர் சுவையதனைத் தேனொழும் பாட்டாலே
ஆனந்தம் மேவ அளித்திட்டீர் - ஞானத்தில்
மெய்யணர் வெய்திடும் மேம்பா டிதுவெனும்
ஐயாநும் பாட மரிது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F6E2582C-BB06-4D71-BE96-8AB5C41A169C%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Aug 13, 2024, 5:12:38 PM8/13/24
to santhav...@googlegroups.com
தேனீர் சுவையதனைத் தேனொழுகும் பாட்டாலே
ஆனந்தம் மேவ அளித்திட்டீர் - ஞானத்தில்
மெய்யணர் வெய்திடும் மேம்பா டிதுவெனும்
ஐயாநும் பாட மரிது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


On Tue, Aug 13, 2024 at 3:59 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--

Ram Ramakrishnan

unread,
Aug 13, 2024, 5:35:11 PM8/13/24
to santhav...@googlegroups.com
தேனீர் சுவையதனைத் தேனொழுகும் பாட்டாலே
ஆனந்தம் மேவ அளித்திட்டீர் - ஞானத்தின்
மெய்யுணர் வெய்திடும் மேம்பா டிதுவெனும்
ஐயாநும் பாட மரிது.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


On Tue, Aug 13, 2024 at 3:59 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--

இமயவரம்பன்

unread,
Aug 13, 2024, 5:41:26 PM8/13/24
to santhavasantham
மிக அருமையான வெண்பாவினால் வாழ்த்துரைத்தமைக்கு நனிநன்றி!

எனது வெண்பா ஒரு Zen தத்துவத்தின் பாடத்தைத் தழுவி எழுதப்பட்டது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

N. Ganesan

unread,
Aug 13, 2024, 9:50:19 PM8/13/24
to சந்தவசந்தம்
On Tuesday, August 13, 2024 at 4:41:26 PM UTC-5 இமயவரம்பன் wrote:
மிக அருமையான வெண்பாவினால் வாழ்த்துரைத்தமைக்கு நனிநன்றி!

எனது வெண்பா ஒரு Zen தத்துவத்தின் பாடத்தைத் தழுவி எழுதப்பட்டது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தியானம் - சானித்தல் எனத் தமிழில் வரும். Chan, Zen என்றாகிறது.

Madras Coffee is popular in Indian restaurants in USA.
கிவாஜவின் காப்பி வெண்பா உண்டு.

NG

N. Ganesan

unread,
Aug 13, 2024, 9:52:19 PM8/13/24
to சந்தவசந்தம்
On Tuesday, August 13, 2024 at 4:35:11 PM UTC-5 Ram Ramakrishnan wrote:
தேனீர் சுவையதனைத் தேனொழுகும் பாட்டாலே
ஆனந்தம் மேவ அளித்திட்டீர் - ஞானத்தின்
மெய்யுணர் வெய்திடும் மேம்பா டிதுவெனும்
ஐயாநும் பாட மரிது.

 ஐயநும் - என்றால் 3-ம் அடி முதற் சீருடன் பொருந்தும். ஐய = ஐயா.

Ram Ramakrishnan

unread,
Aug 13, 2024, 10:01:37 PM8/13/24
to santhav...@googlegroups.com
நன்றி, திரு. கணேசன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 13, 2024, at 21:52, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



Kavingar Jawaharlal

unread,
Aug 13, 2024, 10:48:23 PM8/13/24
to santhav...@googlegroups.com

அருமை


இமயவரம்பன்

unread,
Aug 14, 2024, 4:14:37 AM8/14/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, கவிஞரே!

- இமயவரம்பன்

On Aug 13, 2024, at 10:48 PM, Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> wrote:



Ramamoorthy Ramachandran

unread,
Aug 14, 2024, 2:17:55 PM8/14/24
to santhav...@googlegroups.com

காஃபியின் பெருமை!
           -----------
சுக்லாம் =
அம்பர தரம்=
சசிவர்ணம்=
சதுர் புஜம்=
ப்ரசன்ன வதனம்=
த்யாயேது=
சர்வ விக்ன=
உபசாந்தயே!

இதற்கான பொருளை அறிந்தவர்கள் ஆற்றுக.


RNachi

unread,
Aug 15, 2024, 3:06:27 AM8/15/24
to சந்தவசந்தம்
மிகவும் அருமை இமயவரம்பன் ஐயா. 
ஒரு ஐயம், செய்யுளில் ஒரே வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரலாமா? நன்றி

இராம. நாச்சியப்பன்

இமயவரம்பன்

unread,
Aug 15, 2024, 5:30:22 AM8/15/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. நாச்சியப்பன்!

சொல்லின்பம் சேர்ப்பதற்காகத் “தேநீர்” என்பது பலமுறை வந்துள்ளது.

இவ்வாறு ஒரே சொல் பலமுறை வெண்பாக்களில் பயின்று வருவதை நளவெண்பாவிலும் ஆழ்வார் பாசுரங்களிலும்  பார்க்கலாம்:

இவ்வளவில் செல்லும்கொல் இவ்வளவில் காணும்கொல்

இவ்வளவில் காதல் இயம்பும்கொல் - இவ்வளவின்

மீளும்கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று

ஆளும் கொல் யானை அரசு.

  • நளவெண்பா -47


நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்

    நாகத் தணையரங்கம் பேர் அன்பில் - நாகத்

    தணைப் பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்

    அணைப் பார் கருத்தனாவன்

     (2417) - நான்முகன் திருவந்தாதி - 36



அன்புடன்,
இமயவரம்பன்

On Aug 15, 2024, at 3:06 AM, RNachi <rna...@gmail.com> wrote:

மிகவும் அருமை இமயவரம்பன் ஐயா. 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

RNachi

unread,
Aug 15, 2024, 8:44:26 AM8/15/24
to சந்தவசந்தம்
தெளிவு படுத்தியமைக்கு நன்றிங்க ஐயா.  

On Thursday, August 15, 2024 at 5:30:22 PM UTC+8 இமயவரம்பன் wrote:
மிக்க நன்றி திரு. நாச்சியப்பன்!

சொல்லின்பம் சேர்ப்பதற்காகத் “தேநீர்” என்பது பலமுறை வந்துள்ளது.

N. Ganesan

unread,
Aug 15, 2024, 8:49:16 AM8/15/24
to santhav...@googlegroups.com
On Wed, Aug 14, 2024 at 1:17 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:

காஃபியின் பெருமை!
           -----------
சுக்லாம் =
அம்பர தரம்=
சசிவர்ணம்=
சதுர் புஜம்=
ப்ரசன்ன வதனம்=
த்யாயேது=
சர்வ விக்ன=
உபசாந்தயே!

இதற்கான பொருளை அறிந்தவர்கள் ஆற்றுக.


2015-ல் தாங்கள் ஆற்றியது:
சுக்லாம் பரதரம் வெள்ளைத் துணியில் 
சிக்கும்   சசிவர்ணக்  காப்பி -தினந்தினம்  
நீட்டவும்  வாங்கும்  சதுர்புஜத்தில் ஏந்தினால்  
வாட்டமிலா  நல்வதனம் பார்! 
(சுக்ல அம்பரதரம் ;சசி வர்ணம்; சதுர்புஜம் 
பிரசன்ன  வதனம் த்யாயேத்,
சர்வ விக்ன உப சாந்தையே||)

சதுர்புஜத்தில் - இவ்வெண்பாவில் பொருள் விளங்கவில்லை, ஐயா.

நன்றி,
நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Aug 15, 2024, 8:51:23 AM8/15/24
to santhav...@googlegroups.com
இரு கரம் நீட்டும், இரு கரம் வாங்கும். எனவே 2+2 = சதுர்புஜம்.
விளங்கிற்று. நன்றி.

N. Ganesan

unread,
Aug 15, 2024, 11:59:56 AM8/15/24
to santhav...@googlegroups.com
On Thu, Aug 15, 2024 at 2:06 AM RNachi <rna...@gmail.com> wrote:
மிகவும் அருமை இமயவரம்பன் ஐயா. 
ஒரு ஐயம், செய்யுளில் ஒரே வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரலாமா? நன்றி

வரலாம். யமகம், திரிபு, மடக்கு - பிரபந்தங்கள் பார்க்கவும்.


இராம. நாச்சியப்பன்

On Wednesday, August 14, 2024 at 3:59:54 AM UTC+8 இமயவரம்பன் wrote:
தேநீர்த் தியானம்
(நேரிசை வெண்பா)

தேநீர் அருந்துங்கால் சிந்தனையொன் றில்லாமல்
தேநீர் சுவைக்கச் சிறக்குமே - தேநீரின்
இன்மணத்தில் ஆழ்கின்ற இக்கணமே மெய்யென்று
நின்மலமாய் நின்றொளிரும் நெஞ்சு.

- இமயவரம்பன்

--

Ram Ramakrishnan

unread,
Aug 15, 2024, 3:45:46 PM8/15/24
to santhav...@googlegroups.com
திருமூலர் திருமந்திரம் இன்னொரு உதாரணம்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இமயவரம்பன்

unread,
Aug 16, 2024, 10:21:32 AM8/16/24
to santhav...@googlegroups.com
புலவரின் காப்பி வெண்பா சிறப்பு!

சதுர்புஜம் - பொருள் பொருத்தம் அருமை! 


அன்புடன்,
இமயவரம்பன்

On Aug 15, 2024, at 8:51 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 16, 2024, 10:35:03 AM8/16/24
to சந்தவசந்தம்
On Thursday, August 15, 2024 at 2:06:27 AM UTC-5 RNachi wrote:
மிகவும் அருமை இமயவரம்பன் ஐயா. 
ஒரு ஐயம், செய்யுளில் ஒரே வார்த்தை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரலாமா? நன்றி

குடம் என்ற சொல்லை வைத்துக் கிருஷ்ணாவதாரம். சுந்தர் கிடாம்பி(Chess Grandmaster) இங்கே எழுதினார்.

குடத்திருந்த வெண்ணையைக் குடித்துவந்த வாயனே 
குடத்திருந்தை யென்பதாற் கொடுத்துவீடு தாயுளங் 
குடத்திருந்த சிற்றுயிர்க் கொடுங்கணைக்கண் காத்தனைக் 
குடத்திருந்து ழற்பிறப் பறுக்கவல்லை யல்லையே

பொருள்:

N. Ganesan

unread,
Aug 16, 2024, 1:42:26 PM8/16/24
to santhav...@googlegroups.com, sundar...@gmail.com

IV> எனது வெண்பா ஒரு Zen தத்துவத்தின் பாடத்தைத் தழுவி எழுதப்பட்டது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அந்த ஃசென் தத்துவத்தைப் பகிரமுடியுமா?

ஃசென் தத்துவ போதகர், காஞ்சிபுரத்தார். போதிதருமர் பல்லவ குலத்தோன்றல்.
அவரது பூர்வீகம் பற்றிய செய்திகள் சில:
Śaka Clans, Pallava Royals, Śākya Nāyanār and Bodhidharma
https://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html

பேரா. கமில் சுவெலெபில் நான் நன்கறிந்த தமிழ்ப் பேராசிரியர். 600+ ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய மொழியியல் அறிஞர். தமிழ் செம்மொழி என உலகப் பல்கலைகளில் அறிய ஒரு முக்கியக் காரணர். 20 நூல்கள், ...

ஃசென் தொடர்பு ஒன்று காட்டியுள்ளார். தட்டெழுதியுள்ளேன். படித்தருள்க.

The Sound of the One Hand

Kamil Zvelebil, Journal of the American Oriental Society, Vol. 107, No. 1 (Jan. - Mar., 1987), pp. 125-126


NG

இமயவரம்பன்

unread,
Aug 18, 2024, 9:03:18 AM8/18/24
to santhav...@googlegroups.com, sundar...@gmail.com
காஞ்சியிலிருந்து சீனத்துக்குச் சென்று பெளத்த நெறியைப் பரப்பிய போதிதர்மரைக் குறித்த பதிவு (The Sound of the One Hand) அருமை, திரு. கணேசன்!

தேநீர்த் தியானத்தின் தத்துவத்தைப் பகிருமாறு கேட்டிருந்தீர்கள். இதோ அந்த ஃசென் தத்துவம் (கவிதை வடிவில்):

எந்தச் செயலை எடுத்தாலும் மற்றெந்தச்
சிந்தனையும் நெஞ்சத்தில் சேராமல் - அந்தச்
செயலே தவமென்று தெள்ளறிவால் தேர்ந்தால்
துயர்போய் ஒழியும் தொலைந்து.

- இமயவரம்பன்

N. Ganesan

unread,
Aug 18, 2024, 9:09:14 AM8/18/24
to santhav...@googlegroups.com
thx. can u please share the Zen sentence about Tea?

On Sun, Aug 18, 2024 at 8:03 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
காஞ்சியிலிருந்து சீனத்துக்குச் சென்று பெளத்த நெறியைப் பரப்பிய போதிதர்மரைக் குறித்த பதிவு (The Sound of the One Hand) அருமை, திரு. கணேசன்!

சாக்கிய நாயனார் குலம் தான் ஃசென் போதித்த போதிதருமர். 


தேநீர்த் தியானத்தின் தத்துவத்தைப் பகிருமாறு கேட்டிருந்தீர்கள். இதோ அந்த ஃசென் தத்துவம் (கவிதை வடிவில்):

எந்தச் செயலை எடுத்தாலும் மற்றெந்தச்
சிந்தனையும் நெஞ்சத்தில் சேராமல் - அந்தச்
செயலே தவமென்று தெள்ளறிவால் தேர்ந்தால்
துயர்போய் ஒழியும் தொலைந்து.

- இமயவரம்பன்


On Aug 16, 2024, at 1:41 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

அந்த ஃசென் தத்துவத்தைப் பகிரமுடியுமா?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 18, 2024, 9:10:11 AM8/18/24
to santhav...@googlegroups.com
I presume you read Zen sentences in English.

Ram Ramakrishnan

unread,
Aug 18, 2024, 10:18:09 AM8/18/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 18, 2024, at 09:03, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

காஞ்சியிலிருந்து சீனத்துக்குச் சென்று பெளத்த நெறியைப் பரப்பிய போதிதர்மரைக் குறித்த பதிவு (The Sound of the One Hand) அருமை, திரு. கணேசன்!

இமயவரம்பன்

unread,
Aug 18, 2024, 12:10:06 PM8/18/24
to santhav...@googlegroups.com
This is the Zen philosophical statement based on which I composed my poem:

"As one’s whole being merges with tasting the tea, 
and one’s whole attention is invested into the unfolding moment of each sip, 
the whole experience is like a moving meditation, 
where the mind, being fully present in the here-now,  
is uplifted above ordinary thoughts, 
and enters a realm of absolute stillness, harmony, balance and beauty."

இமயவரம்பன்

unread,
Aug 18, 2024, 12:10:35 PM8/18/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.ராம்கிராம்!



N. Ganesan

unread,
Aug 18, 2024, 4:00:40 PM8/18/24
to santhav...@googlegroups.com

Arasi Palaniappan

unread,
Aug 18, 2024, 11:11:40 PM8/18/24
to சந்தவசந்தம்
குன்றில் வளர்காஃபிக் கொட்டைவழி நீரெடுத்(து)
அன்றே கறந்தெடுத்த ஆவின்பால் - ஒன்றாகிச் 
சர்க்கரை சேரத் 
தமிழ்போல் மணம்வீசும் 
மிக்க சுவைநல்கு மே! 

காலை'பூ பாள'த்தை 'காப்பி'யே வெல்லுமாம் 
மாலை,'வசந்தா'வும் அப்படியே!- 
ஆளை 
மயக்கும்அப் பண்கள்;மணக்கின்ற 
காஃபி 
மயக்கம் களையும் மருந்து!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Imayavaramban

unread,
Feb 13, 2026, 3:55:59 PM (21 hours ago) Feb 13
to சந்தவசந்தம்
இசையால் விளையும் மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாகக் காப்பியை வருணித்த விதம் மிக அருமை, அண்ணலே!  

- இமயவரம்பன் 

Reply all
Reply to author
Forward
0 new messages