சந்தவசந்த நண்பர்களுக்கு:
இத்துடன் இணைத்துள்ள கோப்பில் அம்மானைக் கட்டுரையைக் காணவும். தட்டச்சுச் செய்யும்போது ஏற்பட்டிக்கக் கூடிய பிழைகளையும், அமைப்பு, பொருள், பற்றிய உங்கள் கருத்தையும் கூறுமாறு வேண்டுகிறேன். அதன்படி இதை இன்னும் சீர் செய்ய முயல்வேன்.
அனந்த் 26-11-2008
பி.கு. கட்டுரையின் இணைப்பிலுள்ள பாடல்களை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்!
கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. சந்தவசந்த யயஹூ குழுமத்தில்
இங்கே நீங்கள் கொடுத்திருப்பவை தவிர மேலும் பல ஆம்மனைப்பாடல்களையும் நாம்
விவாதித்திருக்கிறோம்
.
அவைவிவரம் கீழ்க்கண்ட இடுகைகளில் காண்க.
6816,6813,6812,6792
3874to3936
இவைதவிர புள்ளிருக்கு வேளூர் அம்மானைபாடல்கள் இரண்டு இட்டநினைவு.
என்னுடைய அம்மானைப்பாடல் ஆறு அடிகள் கொண்ட வேறொரு அமைப்பு
அம்மானைக் கைக்கொண்ட அண்னல் அருமைந்தன்
அம்மான் மகனுக் கலைந்தானே அம்மானை
அம்மான் மகளுக் கலைந்தானே ஆமாகில்
செம்மான் மகளைத் திருடியதேன் அம்மானை
செம்மான் மகளைத் திருடியதும் முற்பிறப்பில்
அம்மான் மகளாய் அமைந்ததனால் அம்மானை
இலந்தை
On Nov 26, 5:58 am, "VETTAI ANANTHANARAYANAN" <gan...@gmail.com>
wrote:
> Essay on ammAnai -edited word file அம்மானை ஆய்வுக் கட்டுரை.doc
> 99KViewDownload
விரித்தபுகழ்ப் புள்ளிருக்கு வேளூர் வயித்தியனார்
பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதர்காண் அம்மானை
பரிந்துவினை தீர்க்கவல்லபண்டிதரே யானக்கால்
மருந்துவிலை கைக்கூலி வாங்காரோ அம்மானை
வாயிலே மண்போட்டு வாங்குவர்காண் அம்மானை
பூங்கா வனஞ்சூழும் புள்ளிருக்கு வேளூரர்
பாங்கான தென்மதுரைப் பாணர்காண் அம்மானை
பாங்கான தென்மதுரைப் பாணரே ஆமாயின்
தாங்கா திழையெடுத்துத் தைப்பரோ அம்மானை
தையலுக்கு நல்ல சமர்த்தர்காண் அம்மானை
(மூவர் அம்மானை என்ற நூலிலிருந்து
தில்லைக்கலம்பகம்- இரட்டையர்கள்
தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலியொன் றெந்நாளும் மேவுங்கான் அம்மானை
வெம்புலியொன் றெந்நாளும் மேவுமே ஆமாகில்
அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானை
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை!
அம்மனை ஆட்டம் என்பது மூன்று பெண்களால் மட்டுமே ஆடப்படுவது அல்ல .
இரண்டு, ஏன் ஒரு பெண்கூட அம்மானைக் காய்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து
அம்மானை ஆடலாம் எனத் தெரியவருகிறது.
அம்மானைக் காயென்றால் ஏதோ தேங்காய் மாங்காய்போல எண்னிக்கொள்ள வேண்டாம்.
சோழியை வைத்துத் தாயம் ஆடுவதில்லையா? அதுபோல மரக்கட்டைகளில்
வழுவழௌப்பாகச் செதுக்கிவைத்த சிறு உருண்டைகளே அம்மானைக் காய்கள். அப்படி
இல்லாமல் வைரத்தாலோ பிற உலோகங்களாலோ ஆகியும் இருக்கலாம்.(= தமிழில்
கலம்பக இலக்கியம்-சௌந்தரபாண்டியன்)
ஆரத் தடவயல்சூழ் ஆமாதை வாழழகர்
தாரொத்த மேனி தழலொத்ததம்மானை
தாரொத்த மேனி தழலொத்த தாமாயின்
ஈரக் கங்காநதியாள் இருப்பதேன் அம்மானை
ஈரம் பெருநெருப்புக் கில்லையே அம்மானை!
- திருவாமாத்தூர் கலம்பகம்- இரட்டைப்புலவர்கள்
இன்ன திதுவென் றிறைவன் திறமதனை
சொன்ன மறையும் துணிந்திலகாண் அம்மானை
சொன்ன மறியும் துணியாத் தோன்றாத்துணையைநம்
கன்னிவனத்திடையே காணலாமம்மானை
கண்டார் பிறிதொன்றும் காணார்காண் அம்மானை!
(திருப்பதிரிப்புலியூர்க்கலம்பகம்—தொல்காப்பியத் தேவர்)
நாராயணணறியா நாதரரு ணேசருக்கு
வாரார் சிலைகலைமெய் மாதங்க மம்மானை
வாரார் சிலைகளைமெய் மாதங்க மாமாயின்
ஆராயும் காலெடுப்பதையமன்றோ அம்மானை
அன்னமறி ய்யரெடுப்ப தையமோ அம்மானை!
- திருவருணைக் கலம்பகம்- எல்லப்ப நாவலர்
இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசர்
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர்காண் அம்மானை
விருதுகட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில்
அருமையுடம் பொன்றிருகூ றாதேன் அம்மானை
ஆனாலும் காயமிலை அயரவர்க்கம்மானை!
- மதுரைக் கலம்பகம்- குமகுருபரர்
கலைமதியின் கீற்றணிந்த காசியகிலேசர்
சிலமதனைக் கண்ணழலாற் செற்ரனர்காண் அம்மானை
சிலைமதனைக் கண்ணழகாற் செற்ரனரே யாமாகில்
மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை
வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை!
- காசிக்கலம்பகம்- குமரகுருபரர்.
சீதரராஞ் சோலைமலைச் செல்வரை முன் சந்ததியா
மாதர சோதை வளர்த்தனள்காண் அம்மானை
மாதரசோதை வளர்த்தனளே ஆமாகில்
ஆதரவில்லார்போல் அடித்ததேன் அம்மானை
அடித்ததொரு வன்மத்தால் அல்லவோ அம்மானை!
அழகர் கலம்பகம்- கவிக்குஞ்சர பாரதி
பூந்துளவன் தென்பேரைப் புங்கவன்மண் மாவலிபால்
ஏந்துகரத் தோனா விரந்தனன் காண் ஆம்மானை
ஏந்து கரத்தோனா விரந்தனனே ஆமாயின்
மாந்தர் பெருங் கன்னனென வாழ்த்துவரோ அம்மானை
வாழ்த்தல் படியளக்க வாய்ந்ததனால் அம்மானை!
திருப்பேரைக் கலம்பகம்-அனந்த கிருஷ்ண அய்யங்கார்
ஏனத் திருவுருவன் எம்பெருமான் சௌரீசன்
கூனற் பிறைமருப்பிற் கொம்புயர்த்தான் அம்மானை
கூனற் பிறை மருப்பிர் கொம்புயர்த்தான் ஆமாகில்
தானற்கொபொன்றுரத்துத் தாங்கியதேன் அம்மானை
ஆனற்கொம் பிடைமுன் கூத்தாடினன்காண் அம்மானை
கொம்பு- பெண் என்ற பொருள் கொள்க!
- திருக்கண்ணபுரக்கலம்பகம்- திரு . இராசகோபாலன்
நாடனிந்த மக்கா நகர்வாழ் மகுமூதர்
மோடனிந்த காய முழுமதிகா னம்மானை
மோடனிந்த காய முழுமதியே யாமாகில்
மாடணிந்த மேக மறியுமே அம்மானை
மறையல்லோ வெல்லார்க்கும் மாண்புதரும் அம்மானை-
- மக்காக் கலம்பகம்-ச்ய்கு அப்துல் காதிரு நயினார் லெப்பை ஆலிம்
On Nov 26, 5:58 am, "VETTAI ANANTHANARAYANAN" <gan...@gmail.com>
wrote:
அன்புள்ள இலந்தை,
நீங்கள் சுட்டிய சந்தவசந்த இடுகைகள் எல்லாவற்றையும் கட்டுரை எழுதும்போது நான் பார்த்துப் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால், உங்கள் அருமையான 6-அடி அம்மானைப் பாட்டு மட்டும் கவனிக்காமல் விட்டுப் போயிற்று. கட்டுரையைத் திருத்துகையில் அதை சேர்த்து விடுகிறேன். அவ்வகையில் அமைந்த அம்மானைப் பாடல்களுக்கு இலக்கியக் காட்டுக்களைத் தந்தால் நல்லது.
மூவரம்மானை, கலம்பகங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் இட்ட அம்மானைகள் அருமையானவை. கட்டுரை இணைப்பில் இவ்வகை அம்மானைப் பாடல்களுக்குக் காட்டுத் தரும்போது இவற்றில் சிலவற்றைச் சேர்க்கிறேன். அங்கு, பழைய இலக்கியக் காட்டுகளை விட இக்காலத்துக் காட்டுகளுக்கு, குறிப்பாகச் ச.வ.-வில் இட்ட பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணினேன். திரும்ப எழுதும்போது கலம்பகப் பாடல்களுக்கு வகைக்கு ஓரிரண்டாய்க் காட்டுக்களைச் சேர்க்கிறேன்.
அனந்த் 26-11-2008
சிலம்புப் பாடலை ஐந்து அடிப் பாடல் என்பதற்குப் பதிலாக ஐந்து வரிப் பாடல்
என்றும், பின்பு நான்கடிக் கலித்தாழிசை என்றும் குறித்தல் நலம் என்று
எண்ணுகிறேன்.
கி.வா.ஜ பற்றிய கேள்வி படித்தேன். ஆம், இன்னும் சில அம்மானைகள் பாடியிருப்பதாக
அறிகிறேன்.
பசுபதி
26-11-08
2008/11/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
http://sites.google.com/site/santhavasantham/Home
அதில் அம்மானை பற்றிய உங்கள் பழைய கட்டுரை ஒன்றும் இருக்கிறது..
http://sites.google.com/site/santhavasantham/Home/ammanai
அப்படியே இலந்தையாரின் விருத்தம் எழுத வருத்தம் எதற்கு தொடர் தட்டச்சு
செய்யப்பட்ட வடிவத்தில் (படம், PDF அல்லாது) இருந்தால் அனுப்புமாறு
கேட்டுக் கொள்கிறேன்.
Vidya
கல்வி கரையில, கற்பவர் நாள்சில, கூகிளே நிரந்தரம் :)
> > பி.கு. கட்டுரையின் இணைப்பிலுள்ள பாடல்களை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்!- Hide quoted text -
>
> - Show quoted text -
என் கணினியில் உள்ள கோப்பில் இலந்தையாரின் விருத்தம் எழுத வருத்தம்
எதற்கு தொடர் படத்துடன் (word and pdf) தான் இருக்கிறது. இலந்தையார்
தனித்தனியாக இன்னொரு வலை இதழில் இட்டவற்றை என் கணினியில் நான்
ஒளிப்பதிவாகத் தொகுத்ததையே ச.வ. யாஹூ கோப்புப் பகுதியில் இட்டோம். வேறு
யாரிடமாவது text மட்டுமாக இருந்தால் தெரிவிக்கவும்.
அனந்த்
28-11-2008
> > - Show quoted text -- Hide quoted text -
அம்மானைப் பற்றிய தகவல் கட்டுரை அருமை!
என் முயற்சி:
புகழேந்திப் புலவர் பாண்டிநாட்டுப் புகழ் பாடிய அம்மானையை மட்டும் எடுத்துக்காட்டிய அனந்த் அவர்கள், சோனாட்டுப் பெண்களிடம் எப்படி மாட்டுகிறார் பாருங்கள்!
பாண்டியனார் புகழேந்திப் பாடியதைச் சொன்னாரே,
ஆண்டவருள் சோழமில்லா அனந்தையா அம்மானை!
ஆண்டவருள் சோழமில்லா அனந்தையா ஆமாகில்
பாண்டவருள் கன்னனில்லா பாங்கதுவோ அம்மானை?
வேண்டினாரே மீண்டுமீண்டு வேளூரை அம்மானை!
நடராஜன்.