கண்ணா என அழைத்தேன் வாராயோ

5 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Sep 17, 2021, 3:47:37 AM9/17/21
to Santhavasanthsm சந்தவசந்தம்
(Radha sings)
கண்ணா என அழைத்தேன் வாராயோ (1)
Won’t you come Kanna, Beseeching to come I call?
(Krisna sings)
காற்றாய் உனை அணைத்தேன் பாராயோ! (2)
As the wind, I am caressing You, Don’t you see!

(R)  முன்னால் உன் வடிவைத் தாரோயோ (3)
Won’t you  come in front to present your form?
(K) முத்தம் தருந் தென்றல் காணாயோ! (4)
In the kissing breeze I am, Don’t you see!

(R)  புல்லாங் குழல் எடுத்து ஊதாயோ (5)
Won’t you take the flute and play?
 (K) பொழுதென்  குரல் தொடுத்துக் கேளாயோ! (6)
Forever is my melody in all, Don’t you hear?

(R)  எல்லாம் தெரிந்தா நான் கேட்கின்றேன்? (7)
How could I know all, as I plead?
(K) எனக்குள் நீஎன்று சேர்க்கின்றேன்! (8)
Within Me, You are, (do know) Indeed!

(R)  போதும் உன்வழக்கு! புலன் விளக்கு!  (9)
Enough of Your Answers! Enter into (my) Senses!
(K) யாதும் என்கணக்கு! உனுள் துலக்கு!  (10)
Everything is in my hold! Within you, (I am ) behold!

(R) ”ராதே” எனக்கூவி என்னை அணை! (11)
Calling as “Radhe”, may You embrace me!
(K) நானே உனக்கென்றும் நல்ல  துணை! (12)
Forever, for you, I alone is the  best succor!

(R) ”ராதே”  ……. ”ராதே”
”ராதே”  என்றென்  மடியில் துயில்! (13)
Radhe!  Radhe!
Calling (me) as “Radhe”, May You sleep in my lap!
(K) ராதே ……ராதே …
ராதே என்றென்  அடியர் பெயர் ! (14)
Radhe!  Radhe!
All My devotees are known as Radha!

(both sing)
ராதே கிருஷ்ணா  எனச் சொல்வோம்
ரகசிய பந்தம் எனக் கொள்வோம்
வேதாந் தந்தருமிது நாதம்
வேணுகா னவிநோதம்!   (15)
May we recite as “Radhe Krishna”!
May we hold this secret bond!
The essence of Vedanta is ‘this sound!’
The wondrous melody of the Flute around!

ராதே கிருஷ்ணா  ராதே கிருஷ்ணா (16)
Radhe Krishna!  Radhe Krishna!

மீ. ரா
(inspired by a picture of Radha and Krishna on WhatsApp today!)
17-9-2021
Reply all
Reply to author
Forward
0 new messages