சிலேடை - 2

824 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 21, 2012, 7:35:52 PM3/21/12
to santhavasantham
முன்னர் இட்டு வந்த 'சிலேடை' இழையை இணையம் வழியே சந்தவசந்தக்குழு மடல்களில் காண இயலவில்லை. இப்பிரச்சினை எனக்கு மட்டுமா பிறர்க்குமா என்றறியேன்.
ஆகவே, புது இழை!

(பழைய இழை: http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/1c782ddb02a4b6eb/9ce50abfd8d2e92e?hl=en&

இவ்விழையிலும், 13-Apr-2011 வரை இட்ட மடல்களே உள்ளன! அதன் பிறகு அவ்விழையில் இட்டவற்றை அங்கே காண்கிலேன். )

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Mar 21, 2012, 7:54:51 PM3/21/12
to santhavasantham

ஈசன் கைகாட்டி வந்தபின் நத்தை வாராதிருத்தல் ஆமோ?!

சிவன் - நத்தை - சிலேடை
2012-03-20
-----------------------------------
நீரோடு தாங்குவதால் நித்தங்கா னாடுவதால்
பாரோரும் காணவரும் பண்பினால் - ஊரோர்
ஒழுகுவழி செய்தாண்பெண் ஆவதால் உம்பர்
தொழுமிறையே நத்தையென்றே சொல்!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Snail Facts:
Types of snails by habitat - Land snail, Freshwater snail, and Sea snail.
They have the reproductive organs of both males and females which categorizes them as hermaphrodites.

Snails don’t see very well. They aren’t able to hear at all. They use their sense of smell to help them find food.

To help them move, snails secrete a stream of slime (mucus) from a gland located at the front of their foot. This slime enables them to glide smoothly over many different types of surface and helps to form a suction that helps them cling to vegetation and even hang upside down.



2012/3/21 Siva Siva <naya...@gmail.com>
முன்னர் இட்டு வந்த 'சிலேடை' இழையை இணையம் வழியே சந்தவசந்தக்குழு மடல்களில் காண இயலவில்லை. இப்பிரச்சினை எனக்கு மட்டுமா பிறர்க்குமா என்றறியேன்.
ஆகவே, புது இழை!



Siva Siva

unread,
Mar 21, 2012, 8:05:44 PM3/21/12
to santhavasantham
விளக்கத்தோடு:

2012/3/21 Siva Siva <naya...@gmail.com>

ஈசன் கைகாட்டி வந்தபின் நத்தை வாராதிருத்தல் ஆமோ?!

சிவன் - நத்தை - சிலேடை
2012-03-20
-----------------------------------
நீரோடு தாங்குவதால் நித்தங்கா னாடுவதால்
பாரோரும் காணவரும் பண்பினால் - ஊரோர்
ஒழுகுவழி செய்தாண்பெண் ஆவதால் உம்பர்
தொழுமிறையே நத்தையென்றே சொல்!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Snail Facts:
Types of snails by habitat - Land snail, Freshwater snail, and Sea snail.
They have the reproductive organs of both males and females which categorizes them as hermaphrodites.

Snails don’t see very well. They aren’t able to hear at all. They use their sense of smell to help them find food.

To help them move, snails secrete a stream of slime (mucus) from a gland located at the front of their foot. This slime enables them to glide smoothly over many different types of surface and helps to form a suction that helps them cling to vegetation and even hang upside down.



நத்தை:
நீர் ஓடு தாங்குவதால் - நீர் தாங்குவதால், ஓடு தாங்குவதால் - நீரிலும் வாழும்; ஓடு தாங்கும்; (அது சுரக்கும் ஒரு திரவம் அதைத் தாங்குவதையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்);
நித்தம் கான் நாடுவதால் - எப்பொழுதும் வாசனையை நாடி இயங்கும்;
பாரோரும் காண வரும் பண்பினால் - உலகத்தவரும் காணும்படி வரும்;
ஊர் ஓர் ஒழுகுவழி செய்து, ஆண் பெண் ஆவதால் - ஊர்ந்து செல்லத் தன்னிடமிருந்து ஒழுகும் ஒரு திரவத்தால் வழி செய்யும்; ஓருடம்பில் ஆணும் பெண்ணுமாகத் திகழும்.

சிவன்:
நீர் ஓடு தாங்குவதால் - தலைமேல் கங்கையையும் கையில் மண்டையோட்டையும் தாங்குபவன்;
நித்தம் கான் ஆடுவதால் - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;
பாரோரும் காணவரும் பண்பினால் - உலகத்தவர்கள் தரிசிக்க வருவர்;
ஊர் ஓர் ஒழுகுவழி செய்து - ஊர்மக்கள் எண்ணும் பின்பற்றத்தக்க நெறி செய்து; (ஊரோர் - ஊர்மக்கள் என்றும் கொள்ளலாம். 'மக்கள் முறைப்படிவாழும் நன்னெறி செய்து');
ஆண் பெண் ஆவதால் - அர்த்தநாரீஸ்வரன் ஆவதால்;
உம்பர் தொழும் இறையே - வானவரும் வணங்கும் கடவுளே;
நத்து ஐ - விரும்பும் தலைவன்;
என்றே சொல் - என்று சொல்;


 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 21, 2012, 10:47:35 PM3/21/12
to santhav...@googlegroups.com
இங்கே பார்க்கவும்:
 
 
2012/3/21 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 24, 2012, 10:03:56 PM3/24/12
to santhav...@googlegroups.com

சிவனும் –பாம்பும் சிலேடை

 

அரவத்தோ(டு) ஆடும் அணியு(ம்)உடற் பட்டை

இரவில் நடமாடும் என்றும் - இரைக்கு

விரையும் விடந்தாங்கும் வேண்டுவோர்க்(கு) ஈயும்

உரைக்கின்பாம்(பு) ஈசற்(கு)ஆம் ஒப்பு.

 

..அனந்த் 24-3-2012



2012/3/21 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Mar 25, 2012, 8:36:42 AM3/25/12
to santhav...@googlegroups.com
அழகிய பாடல்.

அணியும் உடற்பட்டை: ஈசன்:  திரிபுண்டரமாக நீறு அணிவதைச் சுட்டுகிறதா? கச்சாக நாகத்தை அணிவதைச் சுட்டுகிறதா? பட்டுத்துகிலை அணிவதா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/3/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

சிவனும் –பாம்பும் சிலேடை

 

அரவத்தோ(டு) ஆடும் அணியு(ம்)உடற் பட்டை

இரவில் நடமாடும் என்றும் - இரைக்கு

விரையும் விடந்தாங்கும் வேண்டுவோர்க்(கு) ஈயும்

உரைக்கின்பாம்(பு) ஈசற்(கு)ஆம் ஒப்பு.

 

..அனந்த் 24-3-2012


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 25, 2012, 6:34:01 PM3/25/12
to santhav...@googlegroups.com
>அணியும் உடற்பட்டை: ஈசன்: திரிபுண்டரமாக நீறு அணிவதைச் சுட்டுகிறதா? கச்சாக நாகத்தை
> அணிவதைச் சுட்டுகிறதா? பட்டுத்துகிலை அணிவதா?
அனைத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.சிலேடை விளக்கம்:

சிவன்:

அரவத்தோடு ஆடும் – (அ) பாம்பைஅணிந்து நடனம் ஆடும்; அல்லது (ஆ) உடுக்கை ஒலி, பக்தர் துதிக்கும் ஒலிக்கிடையே ஆடுவான்; அல்லது (இ) இடுகாட்டில் பேய்க்கணங்கள்ஒலி ஆகிய அரவம் சேர  நடனமாடுவான்.

உடல் பட்டை அணியும் – அ) உடலில்,பட்டையாகத் திருநீற்றை அணிவான் அல்லது (ஆ) உற்சவ மூர்த்தி அல்லது சுந்தர பாண்டியன் போன்றவடிவங்களில் பட்டாடையை அணிவான்; அல்லது (இ) மரப்பட்டையை (மரவுரியை) அணிவான்- இறுதியில்உள்ள பதிகம் காண்க: அல்லது, சிவசிவா கருதியவாறு, (ஈ) ஆடும்போது பாம்பை இடுப்பில் பட்டையாக அணிந்து கொள்வான்   

இரவில் நடமாடும் : நள்ளிரவில் சுடுகாட்டில் நடனம் செய்வான்

இரைக்கு விரையும் = (கையில் மண்டையோட்டுடன்) தனது உணவைப் பிச்சை எடுத்துப் பெறவிடைமீதேறி விரைந்து செல்வான்.

விடம் தாங்கும்= கழுத்தில் ஆலகால விஷம்தாங்கியவன்

வேண்டுவோர்க்கு ஈயும் = பிரார்த்தனைசெய்யும் பக்தர்களுக்கு வேண்டியவற்றைத் தருவான்

பாம்பு:   (முன்னுள்ள வரிசையில்)- பாம்பாட்டின்மகுடி ஓசையோடு படமெடுத்தாடும்; கட்டுவிரியன் போன்ற பாம்பு வகைகளில் உடலில் கோடுகள்காணும்; நல்ல பாம்பு படமெடுக்கையில் காணும் கோடுகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்;  இரவில் புற்றைவிட்டு வெளியில் வந்து திரியும்; இரைக்குநடமாடும் என்றும் கொள்ளலாம்; உணவைத் தேடி விரைந்து செல்லும்; (பல்லில்) விஷம் கொண்டது;தன்னைத் தெய்வமாகக்கருதி வழிபடுவோர்க்கு அருளும்; அல்லது அவர்க்கு நாக ரத்தினம் போன்றஅரிய பொருள்களைக் கொடுக்கும்.

...அனந்த் 25-3-2012
புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே
திருமுறை 7-72-2


2012/3/25 Siva Siva <naya...@gmail.com>

--

Siva Siva

unread,
Mar 25, 2012, 9:20:36 PM3/25/12
to santhav...@googlegroups.com
நல்ல விளக்கம்.

அரவத்தோடு ஆடும் - கீழ்க்காணும் விளக்கமும் பொருந்தும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=10620&padhi=062&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
1,62,2
ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

குறிப்புரையில் காண்பது: "...... தோடு அரவம் - தோடாக உள்ள பாம்பு. ......."


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/3/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

>அணியும் உடற்பட்டை: ஈசன்: திரிபுண்டரமாக நீறு அணிவதைச் சுட்டுகிறதா? கச்சாக நாகத்தை
> அணிவதைச் சுட்டுகிறதா? பட்டுத்துகிலை அணிவதா?
அனைத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.சிலேடை விளக்கம்:

சிவன்:

அரவத்தோடு ஆடும் – (அ) பாம்பைஅணிந்து நடனம் ஆடும்; அல்லது (ஆ) உடுக்கை ஒலி, பக்தர் துதிக்கும் ஒலிக்கிடையே ஆடுவான்; அல்லது (இ) இடுகாட்டில் பேய்க்கணங்கள்ஒலி ஆகிய அரவம் சேர  நடனமாடுவான்.


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 25, 2012, 11:20:17 PM3/25/12
to santhav...@googlegroups.com
நன்றி. ஆக, பாம்போடு ஆடுவதில் 4 வகைப் பொருள் கிடைக்கிறது!
 
அனந்த் 

2012/3/25 Siva Siva <naya...@gmail.com>
--

Suganthi Venkatesh

unread,
Mar 26, 2012, 8:09:52 AM3/26/12
to santhav...@googlegroups.com

 அனைவருக்கும் என் வணக்கம்


என் மனதில் தோன்றியதை  இங்கே இட்டுள்ளேன்.

 தவறு இருந்தால்  சுட்டிக் காட்டவும்.



"மதி சூடி துதி பாடி"  மூலம் என்னை வழி நடத்திய சிவா சிவா  அவர்களுக்கும் அவரின் ஈசனுக்கும் என் நன்றி.


காலம் கடந்த விண்ணேறும் ஒலியாலும்

ஞாலம் மாற்றும் செஞ்சொல்ஞா னத்தாலும்

மாலம் எரிக்கும் தனிநிலைமுக் கண்ணாலும்

சால அன்பர் சொல்தமிழும் சங்கரனே



 காலம் கடந்த விண்ணேறிய ஒலி என்பதை ஓம்

என்பது சிவனுக்கும் ஒலியால் சிறந்து இன்று கணினி வழி வானில் பறக்கும் தமிழுக்கும் என்று எண்ணினேன்.

ஞாலம் மாற்றும் செஞ்சொல் நம சிவாய என்ற வார்த்தை  ஒருவரின் உலகத்தை மாற்றும் சக்தி கொண்ட து. தமிழ் நூல்களான திருக்குறள் ஆத்திச்சூடியை பின்பற்றினால்  உலகை மாற்றி அமைக்கும் அறிவு ஒருவருக்குக் கிடைக்கும் என்ற பொருளில்  எழுதினேன்

மாலம் எரிக்கும்  தனிநிலை  முக்கண்ணாலும்  சிவ பெருமானின் நெற்றிக்கண் தீயவைகளை அழிப்பதாகவும், மற்ற மொழிகளின் பாசாங்குத் தன்மையை அழித்து தமிழின் தனிநிலை காக்கும் ஆய்த எழுத்தை முக்கண்ணாக  எழுதினேன்.


தமிழ் அறிஞர்களின் தமிழும் சிவனும் ஒன்றே என்பதை சால அன்பர் சொல்தமிழும் சங்கரனே என்ற வரி சொல்கிறது.

With regards
SugatnhiVenkatesh

--
Taking Tamil to the Next Generation.
http://www.tamilunltd.com/
10 Maybelle Court
Mechanicsburg
PA 17050
USA
Ph 717 728 3999

Siva Siva

unread,
Mar 29, 2012, 7:50:17 AM3/29/12
to santhav...@googlegroups.com
உங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன்.

/காலம் கடந்த விண்ணேறும் ஒலியாலும்

ஞாலம் மாற்றும் செஞ்சொல்ஞா னத்தாலும்

மாலம் எரிக்கும் தனிநிலைமுக் கண்ணாலும்

சால அன்பர் சொல்தமிழும் சங்கரனே /


மா மா காய் காய் என்ற அமைப்பில் உள்ளது. இதைக் கலிவிருத்தம் என்று கருதலாமா என்று அறிந்தோர் சொல்லக்கூடும்.


'மாலம்' - மால் என்ற சொல் 'அம்' என்ற சாரியை பெற்று வந்ததா? (மதி/மதியம், வான்/வானம்,,,)


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்


2012/3/26 Suganthi Venkatesh <vkn...@gmail.com>

Suganthi Venkatesh

unread,
Mar 29, 2012, 9:26:16 AM3/29/12
to santhav...@googlegroups.com
, n. < மாலம் +. Deceit or trick of a devil; , n. < மாலம் +. Deceit, cunning; வஞ்சகம்.  என்று தமிழ் லெக்ஸிகானில் பொருள் விளக்கம்  கண்டு அப்படி  எழுதினேன்.
தமிழுக்கென்று எண்ணி எழுதும் போது மற்ற மொழிகளின்  , n. prob. மாய மாலம். 1. Hypocrisy; dissimulation, pretension; பாசாங்கு. என்ற பொருள் விளக்கம் கண்டு எழுதினேன்.
 நன்றி
With regards
SuganthiVenkatesh.
 
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Jul 5, 2012, 9:41:49 AM7/5/12
to santhavasantham

2012-07-05
திருமால் - கண்ணப்பன் - சிலேடை
-----------------------------------------------
கரிய திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு பன்றியு மானான் - அரிநாடி
வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்
கான்வதிகண் ணப்பன்மால் காண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/21 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 5, 2012, 11:01:33 AM7/5/12
to santhav...@googlegroups.com
திருவீழிமிழலையையும் காளத்தியையும் சேர்த்தது அழகு!

அனந்த்

2012/7/5 Siva Siva <naya...@gmail.com>

2012-07-05
திருமால் - கண்ணப்பன் - சிலேடை
-----------------------------------------------
கரிய திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு பன்றியு மானான் - அரிநாடி
வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்
கான்வதிகண் ணப்பன்மால் காண்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


h

Siva Siva

unread,
Jul 8, 2012, 11:17:56 PM7/8/12
to santhavasantham


2012/7/5 Siva Siva <naya...@gmail.com>

2012-07-05
திருமால் - கண்ணப்பன் - சிலேடை
-----------------------------------------------
கரிய திருமேனி கையில்வில் ஏந்தி
திரிதரு பன்றியு மானான் - அரிநாடி
வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்
கான்வதிகண் ணப்பன்மால் காண்.


அரி - 1) சிங்கம்; / 2) சக்கரம் (Wheel, discus); ஆயுதம் (Weapon);
ஏந்தி - ஏந்துபவன்;
திரிதரு - 'தரு' என்றது துணைவினை; (An auxiliary added to verbs);
பன்றியுமானான் - 1) பன்றியும் மான் ஆன்; / 2) பன்றியும் ஆனான்;
நாடி - 1) நாடுபவன்; / 2) 'விரும்பி' என்ற வினையெச்சம்;
வான்மதி சூடி - அழகிய பிறையைச் சூடியவன் - சிவபெருமான்;
இடத்தல் - தோண்டுதல்;

திருமால்:
கரியவன். இராமனும் பன்றியுமாக அவதாரம் செய்தவன்; சக்கரத்தை விரும்பி, அழகிய திங்களைச் சூடிய ஈசன் மகிழுமாறு தன் கண்ணை இடந்து இட்டுப் பூசித்தவன்;

கண்ணப்பன்:
கரிய மேனியன்; கையில் வில் ஏந்தியவன் (வேடன்); திரிகிற பன்றியையும், மானையும், ஆனினத்தையும், சிங்கத்தையும் (வேட்டைக்கு) நாடியவன்; வான்பிறை சூடிய ஈசன் மகிழுமாறு தன் கண்ணை இடந்து அப்பியவன்; கானில் உறையும் கண்ணப்பன்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/3/21 Siva Siva <naya...@gmail.com>




--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Krishnamoorthy Premkumar

unread,
Jul 10, 2012, 3:36:59 AM7/10/12
to santhav...@googlegroups.com
அடடா அழகு  அற்புதம் அருமையான சிலேடை  ........ பாராட்ட வார்த்தைகளில்லை. 

பிரேமு 

2012/7/9 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
"நற்றுணை யாவது நமச்சி வாயவே"


இராம்குமார் முகவை

unread,
Jul 10, 2012, 8:08:32 AM7/10/12
to santhav...@googlegroups.com
ஐயா,

கண்ணப்பர் கரிய நிறத்தவரா? பாடல் தரவுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிங்கங்கள் பொதுவாக ஆப்ரிக்கக் காடுகளில் மட்டுமே உள்ளன. கிர் காடுகளில் உள்ள சிங்கங்கள் ஆசியாட்டிக் வகையைச் சேர்ந்தவை என்பது கூற்றளவிலே  மட்டுமே உள்ளது. கண்ணப்பர் சிங்கத்தை வேட்டைக்கு நாடியது எங்ஙனம்?

சுவையான மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
முகவை இராம்குமார்.

2012/7/9 Siva Siva <naya...@gmail.com>
--

Siva Siva

unread,
Jul 10, 2012, 8:16:19 AM7/10/12
to santhav...@googlegroups.com
படித்தும் பாராட்டியும் ஆதரிக்கும் அன்பர்கட்கு வணக்கம்.

2012/7/10 Krishnamoorthy Premkumar <krsna...@gmail.com>

Siva Siva

unread,
Jul 10, 2012, 8:25:44 AM7/10/12
to santhav...@googlegroups.com
நல்ல வினாக்கள்.

பொதுவாக வேடர்கள் கரிய மேனியர். சிவனார் அருச்சுனனுக்கு அருள்செய்ய வேட்டுவ வடிவில் வந்தபோது செம்மேனியரான அப்பெருமானும் கரிய வடிவம் தாங்கிவந்தார்.

பாடலை எழுதும்போது, கண்ணப்பர் கரிய மேனியரா, அவர் சிங்கத்தை வேட்டை ஆடினாரா, அவற்றிற்கு ஏதேனும் ஆதாரங்கள் உளவா என்று சிந்தித்திலேன்! உங்கள் வினாவால் தேடினேன்!

அவ்வாறு தேடியதில் அற்புதமான உவமைகள் அடங்கிய இப்பாடலைக் கண்டேன்!

---
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1210&padhi=72&startLimit=82&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம் - பாடல் 82
கருவரையொரு தனுவொடுவிசை   கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர்   கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை   புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன  எனமிடையுமவ் வனமே.

கரிய பெருமலை, கையில் ஒரு வில்லுடன் விரைவாக ஓடுகின்றதெனப், பொருந்தும் படியாக வனத்தின் முன்னாக நேர்ந்து வரும் திண்ணனார், முன் விடுகின்ற கொலை புரியும் அம்புகள் எதிர்வந்த மிருகங்களைக் கொலை செய்கின்ற அமையத்து, அவ்வம்புகள் போரிடும் யானையோடு சினமுடைய சிங்கங்களின் வயிற்றிலும் இடையீடு இன்றிப் புகுதலால், இறந்து வீழ்ந்து கிடக்கும் அம்மிருகங்கள் இரவின் பின்னால் பகல் தொடர்கின்றது எனும்படி அவ்வனம் காட்சியளித்தது

யானை இரவுக்கும் சிங்கம் பகலுக்கும் உவமையாயின.
---


2012/7/10 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>

இராம்குமார் முகவை

unread,
Jul 10, 2012, 11:56:09 AM7/10/12
to santhav...@googlegroups.com
பொன்னார் மேனியன் பாசுபதம் தர கரிய வடிவம் கொண்டாரா? கொடுப்பதென்றால் முகில் வண்ணம் தான் பொருத்தம் போலும் ;-)

//அவ்வாறு தேடியதில் அற்புதமான உவமைகள் அடங்கிய இப்பாடலைக் கண்டேன்!//
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


2012/7/10 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jul 10, 2012, 12:03:15 PM7/10/12
to santhav...@googlegroups.com
/பொன்னார் மேனியன் பாசுபதம் தர கரிய வடிவம் கொண்டாரா? கொடுப்பதென்றால் முகில் வண்ணம் தான் பொருத்தம் போலும் ;-) /

http://www.shaivam.org/siddhanta/makira.html
........

kirAtar : the hunter

This is the only form of Lord Shiva in which He appeared black in color. arjuna wanted to get the peerless weapon pAsupatAstram from Lord Shiva for the battle of mahAbharata. He left the other four pANdavAs, went to the forest and did austere tapas for getting the boon of Lord Shiva. Lord Shiva was satisfied with his prayer, wanted to give the pAsupatAstram to him, but wanted to play a bit too. He took the form of a Hunter with Shakthi as Huntress.   ........

2012/7/10 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>
பொன்னார் மேனியன் பாசுபதம் தர கரிய வடிவம் கொண்டாரா? கொடுப்பதென்றால் முகில் வண்ணம் தான் பொருத்தம் போலும் ;-)

Siva Siva

unread,
Jul 13, 2012, 5:30:27 PM7/13/12
to santhavasantham

2012-07-13
சிவன் - திருமால் - பிரமன் - சிலேடை

----------------------------------------------------
பூமிசை அண்ணலும் தாமரைக்கண் ணுள்ளவனும்
பூமியும் வானும்போய்ப் போற்றிநிற்கும் - சாமியெனும்
பொற்பினனு முந்திமலர் நீர்மையனும் புள்ளேறி
பொற்சடையன் நான்முகன் போல்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jul 15, 2012, 9:34:37 AM7/15/12
to santhavasantham
விளக்கத்தோடு:

2012/7/13 Siva Siva <naya...@gmail.com>

2012-07-13
சிவன் - திருமால் - பிரமன் - சிலேடை

----------------------------------------------------
பூமிசை அண்ணலும் தாமரைக்கண் ணுள்ளவனும்
பூமியும் வானும்போய்ப் போற்றிநிற்கும் - சாமியெனும்
பொற்பினனு முந்திமலர் நீர்மையனும் புள்ளேறி
பொற்சடையன் நான்முகன் போல்.


பிரமன்:
பூமிசை அண்ணலும் - பூவின்மேல் இருப்பவனும்;
தாமரைக்கண் உள்ளவனும் - தாமரையில் இருப்பவனும்;
பூமியும் வானும் போய்ப் போற்றிநிற்கும் சாமி எனும் பொற்பினனும் - மண்ணுலகோரும் வானுலகோரும் வணங்கும் தேவனும்;
உந்திமலர் நீர்மையனும் - (திருமாலின்) நாபியில் உதித்த தன்மையை உடைவனும்;
நான்முகன் - நான்கு முகங்களையுடைய பிரமன்.

திருமால்:
பூ மிசை அண்ணலும் - மண்ணை உண்டவனும்;
தாமரைக்கண் உள்ளவனும் - தாமரை போன்ற கண்கள் உடையவனும்;
பூமியும் வானும்போய்ப் போற்றிநிற்கும் சாமியெனும் பொற்பினனும் - மண்ணுலகோரும் வானுலகோரும் வணங்கும் தேவனும்;
உந்தி மலர் நீர்மையனும் - நாபியில் மலரை உடையவனும்;
புள் ஏறி - (கருடன் என்ற) பறவையை ஊர்தியாக உடைய திருமால்;

சிவன்:
பூமிசை அண்ணலும் தாமரைக்கண் உள்ளவனும் பூமியும் வானும் போய்ப் போற்றி நிற்கும் சாமி எனும் பொற்பினனும் - பூமேல் இருக்கும் பிரமனும் தாமரைக்கண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்தும் வானிற் பறந்தும் சென்று தேடிக் காணாமல் அவர்களால் வணங்கப்பட்ட தலைவனும்;
முந்தி மலர் நீர்மையனும் - எல்லாவற்றிற்கும் முன்னமே இருந்தவனும்;
பொற்சடையன் - பொற்சடையை உடைய சிவபெருமான்.

(அப்பர் தேவாரம் 4.15.11 - "முந்தித் தானே முளைத்தானை ..." - ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன்);
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/7/5 Siva Siva <naya...@gmail.com>

2012-07-05


Subbaier Ramasami

unread,
Aug 4, 2012, 7:57:32 AM8/4/12
to santhav...@googlegroups.com
அருமையான சிலேடை. நல்ல பொருள் வளம்

இலந்தை

2012/7/8 Siva Siva <naya...@gmail.com>
--

Siva Siva

unread,
Oct 29, 2012, 11:49:01 AM10/29/12
to santhavasantham

(New Jersey awaits landfall of major hurricane named 'Sandy' on 29-Oct-2012)
2012-10-29
சிவன் - புயல் - சிலேடை
---------------------------------
நீர்வெளி வல்வளியாய் நிற்கும் நிலமஞ்சும்
பேர்தரும் உச்மழை பெய்யுமா - லாரும்
துணையாம் புணையென்று சொல்வர் புயலுக்
கிணையாம் உமையாட் கிறை.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/7/13 Siva Siva <naya...@gmail.com>

2012-07-13





Suganthi

unread,
Oct 29, 2012, 12:11:41 PM10/29/12
to santhav...@googlegroups.com
Let Lord shiva take pity and protect people who are in the path of Sandy
We are  all getting ready to face sandy and power outage 
With regards
SuganthiVenkatesh


Taking Tamil to the Next Generation



Sent from my iPhone
--

Siva Siva

unread,
Nov 2, 2012, 5:34:47 PM11/2/12
to santhavasantham
ஆர்வமுள்ளோர்க்காக விளக்கத்தோடு:

2012/10/29 Siva Siva <naya...@gmail.com>

(New Jersey awaits landfall of major hurricane named 'Sandy' on 29-Oct-2012)
2012-10-29
சிவன் - புயல் - சிலேடை
---------------------------------
நீர்வெளி வல்வளியாய் நிற்கும் நிலமஞ்சும்
பேர்தரும் உச்மழை பெய்யுமா - லாரும்
துணையாம் புணையென்று சொல்வர் புயலுக்
கிணையாம் உமையாட் கிறை.




புயல்:
நீர்வெளி வல்வளியாய் நிற்கும் - கடற்பரப்பில் மிக வலிமை உடைய காற்றாகத் தோன்றும்;
நிலம் அஞ்சும் - உலகம் அதைக் கண்டு அச்சம்கொள்ளும்;
பேர் தரும் - அந்த அச்சத்தால் வேறு இடங்களுக்கு நீங்கிச்செல்வார்கள் (evacuation to safer places ahead of storm's landfall); (தருதல் - துணைவினைச்சொல்). (இக்காலத்துப் பழக்கத்தை ஒட்டி, 'அதற்கு ஒரு பெயரைக் கொடுக்கும்' என்றும் பொருள்கொள்ளலாம்);
உச்மழை பெய்யுமால் - மிக அதிக மழை பெய்யும்; (ஆல் - அசைச்சொல்);
ஆரும் "துணைம் புணை" ன்று சொல்வர் - (புயலால் வெள்ளமும் ஏற்படுவதால்) எவரும் "ஒரு படகு இருந்தால் உதவும்" என்று சொல்வார்கள்;

சிவன்:
நீர் வெளி வல்வளியாய் நிற்கும் - நீர், ஆகாயம், வலிய காற்று, என ஐம்பூதங்களாய் நிற்பவன்
நிலம் அஞ்சும் - உலகோர் (இறைவனுக்குப்) பயப்படுவர்;
பேர் தரும் - (ஒரு பெயரும் இல்லாத அவனுக்குப்) பல பெயர்கள் தருவர்;
('
நிலம் அஞ்சும் பேர் தரும்' - தமிழ் இலக்கணம் சொல்வதுபோல், 'குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற இயற்கையான ஐந்துநிலப்பிரிவுகளில் உள்ளோர் கடவுளுக்கு முருகன், திருமால், முதலிய வெவ்வேறு பேர்கள் தருவர்' என்றும் பொருள்கொள்ளலாம்;)
உச்ம் மழை பெய்யும் - அவன் உச்சந்தலையில் கங்கை பொழியும்;
ஆல் ஆரும் - ஆலகால விடத்தை உண்பான்;
துணைம் புணைன்று சொல்வர் - சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தெப்பம் என்று புகழ்வார்கள்;
உமையாட்கு இறை - மைமங்கைக்குத் தலைவன் ஆன சிவபெருமான்;

(
அப்பர் தேவாரம் - 5.23.9 -
"
அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ ....."
-
அஞ்சியாகிலும் - அச்சம் கொண்டாவது. அன்பு பட்டாகிலும் - அன்பு கொண்டாவது. பயபக்தி இரண்டில் ஒன்றையேனும் கடைப்பிடித்து என்றபடி.);

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 3, 2012, 2:14:24 PM11/3/12
to santhav...@googlegroups.com
>> Let Lord shiva take pity and protect people who are in the path of Sandy
 
இதுபோல, சென்னையிலும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும், ஈழத்திலும் அண்மையில் வீசிய புயலால் அவதியுற்ற அனைவருக்கும் நமது அனுதாபங்களும் இறையருள் வேண்டுதலும் உரித்தாகுக.
 
அனந்த்

2012/10/29 Suganthi <vkn...@gmail.com>

Siva Siva

unread,
Nov 10, 2012, 5:43:29 PM11/10/12
to santhavasantham

2010-11-02 (updated 2012-11-10)
சிவன் - சுந்தரர் - சிலேடை
-------------------------------------
பகிரங்க மாகவோர் பாவையிடஞ் சேர
மகிழ மரடை வாக்குப் - புகலுங்கால்
என்றவர் பார்பரவை யின்றுணைவர் ஒற்றியமர்
குன்றவில்லி நாவலர் கோன்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/10/29 Siva Siva <naya...@gmail.com>


Siva Siva

unread,
Nov 18, 2012, 10:34:23 PM11/18/12
to santhavasantham
with explanation:

2012/11/10 Siva Siva <naya...@gmail.com>

2010-11-02 (updated 2012-11-10)
சிவன் - சுந்தரர் - சிலேடை
-------------------------------------
பகிரங்க மாகவோர் பாவையிடஞ் சேர
மகிழ மரடை வாக்குப் - புகலுங்கால்
என்றவர் பார்பரவை யின்றுணைவர் ஒற்றியமர்
குன்றவில்லி நாவலர் கோன்.



சுந்தரர்:
பகிரங்கமாகர் பாவையிடம் சேர "மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால்" என்றவர் பார் - சங்கிலியாரை ஊரறியத் திருமணம் செய்துகொள்ளவேண்டி, 'நான் சத்தியம் செய்யும்பொழுது (சிவபெருமானே நீ) மகிழ மரத்தில் போய் இரு' என்று சொன்னவர் காண்.
பரவையின் துணைவர் - பரவையாரின் கணவர்;
நாவலர் கோன் - திருநாவலூராளியான சுந்தரர்.




சிவன்:
பகிர் அங்கமாகர் பாவைம் சேர - பகிர்ந்துகொண்ட திருமேனியாகப் பார்வதி இடப்பக்கம் பொருந்த;
"மகிழமரம் அடை வாக்குப் புகலுங்கால்" என்றவர் - (சங்கிலியாரிடம் போய்ச்), '(சுந்தரர்) சத்தியம் செய்யும்பொழுது மகிழ மரத்தை அடை' என்று சொன்னவர்;
பார் பரவு ஐ - உலகோர் எல்லாம் போற்றும் தலைவர்;
ன் துணைவர் - (அவ்வாறு போற்றும் பக்தர்களுக்கு) இனிய துணையாக இருப்பவர்;
ஒற்றிமர் குன்றவில்லி - திருவொற்றியூரில் எழுந்தருளியிருப்பவர்; மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானார்.


(சுந்தரர் தேவாரம் - 7.89.9
பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.)


Kavingar Jawaharlal

unread,
Nov 18, 2012, 11:40:48 PM11/18/12
to santhav...@googlegroups.com
சிவ சிவா சிலேடைகளும் பாடல்களும் அருமை.

2012/11/19 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


Siva Siva

unread,
Nov 30, 2012, 11:23:02 PM11/30/12
to santhav...@googlegroups.com
பாடல்களைப் படித்து வாழ்த்தும் அன்பர்களுக்கு என் வணக்கம்.

2012/11/18 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>

Siva Siva

unread,
Feb 24, 2013, 12:46:25 PM2/24/13
to santhavasantham

2013-02-24
சிவன் - சாளரம் - சிலேடை
-------------------------------------
வளியொளி செல்லும் வழியாகும் உள்ளும்
வெளியும் உளபொருள் தோற்றும் - எளிதில்
அடைநீர்மை உண்டுகார் கண்டவிடத் தந்தாழ்
சடையீசன் சாளரம் தான்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2012/11/10 Siva Siva <naya...@gmail.com>

2010-11-02 (updated 2012-11-10)
சிவன் - சுந்தரர் - சிலேடை

Ramamoorthy Ramachandran

unread,
Feb 24, 2013, 1:25:44 PM2/24/13
to santhav...@googlegroups.com
we prey laord saiva to save newjercy and give courage to face.-r. raamamoorthy

2013/2/24 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Siva Siva

unread,
Feb 25, 2013, 8:15:51 PM2/25/13
to santhavasantham
with explanation:

2013/2/24 Siva Siva <naya...@gmail.com>

2013-02-24
சிவன் - சாளரம் - சிலேடை
-------------------------------------
வளியொளி செல்லும் வழியாகும் உள்ளும்
வெளியும் உளபொருள் தோற்றும் - எளிதில்
அடைநீர்மை உண்டுகார் கண்டவிடத் தந்தாழ்
சடையீசன் சாளரம் தான்.

சாளரம் (window):

வளிளி செல்லும் வழிகும் - காற்றும் வெளிச்சமும் செல்லும் வழி ஆகும்;
உள்ளும் வெளியும் உள பொருள் தோற்றும் - (வெளியில் இருப்போர்க்கு) உள்ளே இருப்தையும், (உள்ளிருப்போர்க்கு) வெளியே இருப்பதையும் காட்டும்;
எளிதில் அடை நீர்மை உண்டு கார் கண்டடத்து - மழை வரும்போது சுலபமாகச் சாத்தும் தன்மை இருக்கும்.

சிவன்:
வளி, ளி, செல்லும் வழிகும் - காற்று ஒளி என ஐம்பூதங்களாகவும், நாம் செல்லும் நன்னெறியாகவும் இருப்பவன்; (நீர், நிலம், நெருப்பு ஆகியன குறிப்பால் பெறப்பட்டன);
உள்ளும் வெளியும் உள பொருள் - பிரபஞ்சத்தின் உள்ளேயும் புறத்தேயும் இருக்கும் மெய்ப்பொருள்; நமக்கு உள்ளும் இருப்பவன்; வெளியிலும் இருப்பவன்
தோற்றும் - படைப்பவன்;
எளிதில் அடை நீர்மை உண்டு - பக்தர்களால் எளிதில் அடையப்படும் இயல்பு உடையவன்;
உண்டு கார் கண்டடத்து - கழுத்துப் பகுதியில் கருமை உண்டு;
அம் தாழ்டைசன் - அழகிய தாழும் சடையை உடைய சிவபெருமான்.
 

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Ramamoorthy Ramachandran

unread,
Feb 25, 2013, 10:36:54 PM2/25/13
to santhav...@googlegroups.com
ஒன்பது சாளரங்கள் வழியே ஓடப் பார்க்கும் உள்ளம் உருகி ஒடுங்கும் சிவச்சாளரம் உங்கள் பாடலில் திறந்திடக் கண்டேன் .
சிவத்தமிழுக்கு நன்றி.புலவர் இராமமூர்த்தி  

2013/2/26 Siva Siva <naya...@gmail.com>
--

Swaminathan Sankaran

unread,
Feb 25, 2013, 11:18:21 PM2/25/13
to santhav...@googlegroups.com
மிக நன்று.
 
சங்கரன் 


2013/2/25 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>



--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Feb 26, 2013, 5:40:58 AM2/26/13
to santhav...@googlegroups.com
சாளரத் தோடொத்துச் சார்ந்த சிவனாரை
ஆளவைத்தார் பாட்டின் அகம்.

இலந்தை


2013/2/26 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 26, 2013, 11:48:31 PM2/26/13
to santhav...@googlegroups.com

அருமையான சிலேடை


வளி ஒளி செல்லும் வழி என்பது,  குண்டலினி யோகம் பயில்வோர் மூலக்கனலைச் சுவாசக் காற்றால் எழுப்பி ஸஹஸ்ராரச் சக்கரத்தில் கடவுளை (இங்கு, சிவனை) ஒளிவடிவமாகக் காண்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.


அனந்த்

(தற்போது கோவையில்). 


2013/2/26 Siva Siva <naya...@gmail.com>
--

Siva Siva

unread,
Feb 27, 2013, 7:43:47 AM2/27/13
to santhav...@googlegroups.com
Thanks for the additional explanation.

As you are in Coimbatore, I hope you get to visit the temples at Avinasi (the place where Sundarar brought back to life a child who was eaten by a crocodile a few years prior to that point) and thirumurugan poondi.

2013/2/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Mar 3, 2013, 12:00:30 PM3/3/13
to santhavasantham

2013-03-03
சிவன் - பனிமலை - சிலேடை - #2
(The other song was on 2012-02-06 - that starts as "
நீருறையும்")
-----------------------------------------
தண்புனல் தாங்கிடும் வெண்பொடி மேலிலங்கும்
விண்ணுயரும் உச்சி விரைபுள்ளும் - நண்ணுதற்
கொண்ணா தடிவார முள்ளோர்கண் டுள்மகிழ்வர்
திண்ணாரெண் டோளன் சிலை
.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2013/2/24 Siva Siva <naya...@gmail.com>

2013-02-24



Siva Siva

unread,
Mar 9, 2013, 7:18:43 AM3/9/13
to santhavasantham
with explanation:

2013/3/3 Siva Siva <naya...@gmail.com>

2013-03-03
சிவன் - பனிமலை - சிலேடை - #2
(The other song was on 2012-02-06 - that starts as "
நீருறையும்")
-----------------------------------------
தண்புனல் தாங்கிடும் வெண்பொடி மேலிலங்கும்
விண்ணுயரும் உச்சி விரைபுள்ளும் - நண்ணுதற்
கொண்ணா தடிவார முள்ளோர்கண் டுள்மகிழ்வர்
திண்ணாரெண் டோளன் சிலை
.


பதம் பிரித்து:
தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும்
விண்யரும் உச்சி விரை புள்ளும் - நண்ணுதற்(கு)
ண்ணா(து) டிவாரம் உள்ளோர் கண்(டு) ள் மகிழ்வர்
திண் ஆர் எண் தோளன் சிலை.

வெண்பொடி - பனித்துளி (snow); / திருநீறு;
அடிவாரம் - மலையினடி (Foot of a hill);
அடி - திருவடி;
வாரம் - அன்பு;
சிலை - மலை;

பனிமலை:
தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும் - குளிர்ந்த நீரை உள்ளே தாங்கிய பனித்துளி (snow) மேலே திகழும்;
விண்யரும் உச்சி விரை புள்ளும் நண்ணுதற்(கு) ண்ணா(து) - விரைந்து பறக்கும் பறவைகளும் வானளாவும் மலைமுகட்டினைச் சென்றடையமாட்டா; (This is generally speaking.)
டிவாரம் உள்ளோர் கண்(டு) ள் மகிழ்வர் - மலையின் அடிவாரத்தில் இருப்பவர்கள் (பனி திகழும் மலையுச்சியைக்) கண்டு மனம் மகிழ்வார்கள்;
சிலை - மலை;

சிவன்:
தண் புனல் தாங்கிடும் - கங்கையைத் தாங்குபவன்;
வெண் பொடி மேல் இலங்கும் - திருமேனிமேல் திருநீறு திகழும்;
விண்யரும் - சோதியாக உயர்ந்தவன்;
உச்சி விரை புள்ளும் நண்ணுதற்கு ண்ணாது - (அப்படி உயர்ந்தபோது) அன்னமாகி விரைந்து பறந்த பிரமனாலும் உச்சியைக் காண இயலாது;
டி வாரம் உள்ளோர் கண்டுள் மகிழ்வர் - திருவடியை அன்புடைய பக்தர்கள் கண்டு உள்ளம் மகிழ்வார்கள்;
திண் ஆர் எண் தோளன் - உறுதியான எட்டுத் தோள்களை உடைய சிவபெருமான்.

 

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



Ramamoorthy Ramachandran

unread,
Mar 9, 2013, 10:40:16 AM3/9/13
to santhav...@googlegroups.com
வணக்கம்,சிவனுக்கும் திருமாலுக்கும்  சிலேடை :-

கண்ணன் புனல்மேலான் காருருவின்  தாதை  
திண்ணுருவ நாகம்   புடைத்தானை   - எண்ணுமதி 
நண்ணுங் குழலனாய் மாதின்பால் நஞ்சுண்டான் 
வண்ணமா லாவான்சி வன்
சிவன்=(முக்)கண்ணன்; புனல்மேலான்=கங்கையைத் தலைமேல் தாங்கியவன்;காருருவின் =கரியநிற கணபதியின், தாதை=தந்தை;
திண்ணுருவ =வலிய உருவுடைய, நாகம் = யானையின் (தோலை),பாம்பினை ; புடைத்தானை=உடலின்பக்கத்தில் உடையாக , நகையாக அணிந்தவனை; எண்ணுமதி =திதியில் எண்ணப்படும் நிலவு , நண்ணும் குழலன்= சேர்ந்த சடாமுடியன்;மாதின் பால்= பெண்ணொரு பாகன்; நஞ்சுண்டான்=விடமுண்டவன்;வண்ண =தீவண்ணன் ;

திருமால்=கண்ணன் =கிருஷ்ணன் ;புனல் மேலான்= பாற் கடல் மேல் படுத்திருப்பவன்;காருருவின் தாதை= மேகவண்ணன் ஆகிய எந்தை,திண்ணுருவ நாகம் =வலிய காளியன் என்ற பாம்பை,சிந்துரம்  என்ற யானையை    புடைத்தான்= வதைத்தவன்; கொம்பொடித்தவன்; எண்ணுமதி  நண்ணும் =எண்ணும் அறிவினன்; நண்ணும் குழலன்=புல்லாங்குழல் கொண்டவன்; 
மாதின் பால்=பூதனையாகிய பெண்ணின் பாலில் இருந்த, நஞ்சு =விடத்தை , உண்டான்= உயிரோடுசேர்த்து உண்டு வதைத்தவன்;
வண்ணம்= அழகுடைய 
மால்  ஆவான் சிவன்  09/03/2013 புலவர் இராமமூர்த்தி
  

  

On Sat, Mar 9, 2013 at 5:48 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naya...@gmail.com) Add cleanup rule | More info

with explanation:

2013/3/3 Siva Siva <naya...@gmail.com>

2013-03-03

சிவன் - பனிமலை - சிலேடை - #2
(The other song was on 2012-02-06 - that starts as "
நீருறையும்")
-----------------------------------------
தண்புனல் தாங்கிடும் வெண்பொடி மேலிலங்கும்
விண்ணுயரும் உச்சி விரைபுள்ளும் - நண்ணுதற்
கொண்ணா தடிவார முள்ளோர்கண் டுள்மகிழ்வர்
திண்ணாரெண் டோளன் சிலை
.

பதம் பிரித்து:
தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும்
விண்யரும் உச்சி விரை புள்ளும் - நண்ணுதற்(கு)
ண்ணா(து) டிவாரம் உள்ளோர் கண்(டு) ள் மகிழ்வர்
திண் ஆர் எண் தோளன் சிலை.

வெண்பொடி - பனித்துளி (snow); / திருநீறு;
அடிவாரம் - மலையினடி (Foot of a hill);
அடி - திருவடி;
வாரம் - அன்பு;
சிலை - மலை;

பனிமலை:
தண் புனல் தாங்கிடும் வெண் பொடி மேல் இலங்கும் - குளிர்ந்த நீரை உள்ளே தாங்கிய பனித்துளி (snow) மேலே திகழும்;
விண்யரும் உச்சி விரை புள்ளும் நண்ணுதற்(கு) ண்ணா(து) - விரைந்து பறக்கும் பறவைகளும் வானளாவும் மலைமுகட்டினைச் சென்றடையமாட்டா; (This is generally speaking.)
டிவாரம் உள்ளோர் கண்(டு) ள் மகிழ்வர் - மலையின் அடிவாரத்தில் இருப்பவர்கள் (பனி திகழும் மலையுச்சியைக்) கண்டு மனம் மகிழ்வார்கள்;
சிலை - மலை;

சிவன்:
தண் புனல் தாங்கிடும் - கங்கையைத் தாங்குபவன்;
வெண் பொடி மேல் இலங்கும் - திருமேனிமேல் திருநீறு திகழும்;
விண்யரும் - சோதியாக உயர்ந்தவன்;
உச்சி விரை புள்ளும் நண்ணுதற்கு ண்ணாது - (அப்படி உயர்ந்தபோது) அன்னமாகி விரைந்து பறந்த பிரமனாலும் உச்சியைக் காண இயலாது;
டி வாரம் உள்ளோர் கண்டுள் மகிழ்வர் - திருவடியை அன்புடைய பக்தர்கள் கண்டு உள்ளம் மகிழ்வார்கள்;

திண் ஆர் எண் தோளன் - உறுதியான எட்டுத் தோள்களை உடைய சிவபெருமான்.

 

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--

Ramamoorthy Ramachandran

unread,
Mar 9, 2013, 4:05:17 PM3/9/13
to santhav...@googlegroups.com
சிலேடைப் பாடலில்,இன்னும் ஒரு  வளர் திருத்தம்...ஏற்க வேண்டுகிறேன்  புலவர் இராம மூர்த்தி.10/03/2013

கண்ணன் புனல்மேலான் காருருவன் தாதை 
திண்ணுருவின்  நாகம் சிதைத்தானை -எண்ணுமதி 
நண்ணுங் குழல்மாடன்  மாதின்பால் நஞ்சுண்டான் 
வண்ணமா லாவான்சி வன்.
(மாடன் =சிவன், காலை வாகனன் ;திருமால்,மாடுமேய்ப்பவன்,ஆக எட்டுப் பொருத்தங்கள்). 

2013/3/9 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

Ramamoorthy Ramachandran

unread,
Mar 10, 2013, 12:24:06 PM3/10/13
to santhav...@googlegroups.com
 வணக்கம் அடுத்த பாடலும்  சிவன்-திருமால்  சிலேடையே.

உதைத்தகால்  கொண்டான், உயர்ந்தகல்  தாங்கிப்
பதைத்தபார்த்  தன்சேர்  படையான் - மதயானை 
சுற்ற  விளங்கனியை  உக்கான்தூ  தானான்மால் 
உற்றசிவன் நேராம் உரை  
 நன்றி, இராமமூர்த்தி 10/03/2013
விளக்கம்  விரைவில்
...
2013/3/10 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

Ramamoorthy Ramachandran

unread,
Mar 10, 2013, 2:37:47 PM3/10/13
to santhav...@googlegroups.com
சிவன்- திருமால் சிலேடை , விளக்கம் 

சிவனுக்கு :-- உதைத்த கால் கொண்டான் = கூற்றுவனை உதைத்த பாதம் உடையான்; உயர்ந்த கல் தாங்கி = உயரமான இமயமலையால்  தாங்கப்படுபவன்; பதைத்த பார்த்தன்சேர் படையான் = நடுங்கிய அருச்சுனனுக்கு பாசுபதமாகிய ஆயுதம் தந்தவன்; மதயானை சுற்ற = விநாயகர் வலம் வர, இளங்கனி =மாம்பழம் ,உகுத்தான்= வழங்கினான்; தூதானான்=பரவை நாச்சியாருக்காகத் தூது நடந்தவன்; சுந்தரனாய்=மதுரையில்  சோமசுந்தரராக;    

திருமாலுக்கு:-- உதைத்த கால் கொண்டான்= சகடாசுரனான சக்கரத்தை நீட்டி உதைத்த பாதம் கொண்டவன்; உயர்ந்த கல் தாங்கி= கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கியவன்; பதைத்த பார்த்தன் சேர் படையான்= போரில் பத்தாம் நாளில் பதறிய அர்ச்சுனனுக்காகச் சக்கரப்படையை எடுத்தவன்; மதயானை சுற்ற = சிந்துரம் என்ற யானையை சுற்றிக்கொம்பினை   ஒடித்தவன்; விளங்கனி உகுத்தான்= விளாமரத்தைக் கன்றால் அடித்துக் கனி உதிர்த்தவன்;பணடவர்க்குத் தூது நடந்தான் ; சுந்தரனாய்= சுந்தரராஜப் பெருமளானவன்.

அதனால்,சிவனும் திருமாலும் ஒப்பாவார்.
நன்றி புலவர் இராமமூர்த்தி. 
 

2013/3/10 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

Siva Siva

unread,
Mar 26, 2013, 8:39:51 PM3/26/13
to santhavasantham

2013-03-26 (பங்குனி உத்தரம்)
சிவன் - முருகன் - சிலேடை
--------------------------------------
நெற்றிக்கண் தோன்றிட நீர்தாங்கும் இவ்வுலகு
சுற்றிவரு மான்மலரான் தோத்திரிக்கும் - பெற்றியினன்
காவடி வேலன்பன் மாமலையாள் மைந்தனவன்
சேவமர்ந்தான் ஆறுமுகன் செப்பு
.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2013/3/3 Siva Siva <naya...@gmail.com>


Subbaier Ramasami

unread,
Mar 26, 2013, 10:08:08 PM3/26/13
to santhav...@googlegroups.com
சிலேடை மிகச் சிறப்பு. விளக்கம் இன்னும் தெளிவுபடுத்தும்

இலந்தை

2013/3/26 Siva Siva <naya...@gmail.com>
--

Siva Siva

unread,
Mar 26, 2013, 10:17:24 PM3/26/13
to santhav...@googlegroups.com
Thanks. Will post the explanation shortly.

2013/3/26 Subbaier Ramasami <elan...@gmail.com>

Siva Siva

unread,
Mar 26, 2013, 10:24:01 PM3/26/13
to santhavasantham
With explanation:

2013/3/26 Siva Siva <naya...@gmail.com>

2013-03-26 (பங்குனி உத்தரம்)
சிவன் - முருகன் - சிலேடை
--------------------------------------
நெற்றிக்கண் தோன்றிட நீர்தாங்கும் இவ்வுலகு
சுற்றிவரு மான்மலரான் தோத்திரிக்கும் - பெற்றியினன்
காவடி வேலன்பன் மாமலையாள் மைந்தனவன்
சேவமர்ந்தான் ஆறுமுகன் செப்பு
.



முருகன்:
நெற்றிக்கண் தோன்றிட, நீர் தாங்கும்; இவ்வுலகு
சுற்றிவரு[ம்] மான்; மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;
கா வடிவேலன்; பன் மா மலைள் மைந்தன்; வன்
சேமர்ந்தான் ஆறுமுகன் செப்பு.

(
ஈசனின்) நெற்றிக்கண்ணில் பொறியாகத் தோன்றிக், கங்கையால் தாங்கப்பெற்றவன்; (கனி வேண்டி மயில்மேல் ஏறி) உலகைச் சுற்றிவந்த பெருமான்; (பிரணவப் பொருளை அறியாத பிரமனைச் சிறையில் அடைத்துப்பின்) பிரமனால் துதிக்கப்படும் பெருமையை உடையவன்;
காக்கும் கூரிய வேலை உடையவன்; பல மலைகளில் வீற்றிருக்கும் குமரன் (குன்றுதோறாடும் குமரன்); ஆறுமுகங்களையை உடைய முருகன்.

(
இவ்வுலகு சுற்றிவருமான்மலரான் = "இவ்வுலகு சுற்றிவருமால்; மலரான்" என்றும் கொள்ளலாம். 'சுற்றிவருமால்' என்பதில் 'ஆல்' என்பதை அசையாகக் கொள்ளலாம்);

சிவன்:

நெற்றிக்கண் தோன்றிட நீர் தாங்கும்; இவ்வுலகு

சுற்றிவரு[ம்]; மால், மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;
கா வடிவு ஏல் அன்பன்; மாமலையாள் மைந்தன்; வன்
சேமர்ந்தான் ஆறுமுகன் செப்பு.

நெற்றியிற் கண் தோன்ற, முடிமேல் கங்கையைத் தாங்குவான்; உலக மக்கள் வலம்செய்து வணங்குவர்; (அடிமுடி தேடிய) திருமாலாலும் பிரமனாலும் துதிக்கப்படும் பெருமையினான்; (அன்பர் விரும்பிய வண்ணம் அவர்களைக்) காக்கும் உருவம் ஏற்கும் அன்புடையவன்; அழகிய மலைமகள் கணவன்; இடப வாகனன்; சிவபெருமான்;


 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


Ramamoorthy Ramachandran

unread,
Mar 27, 2013, 6:16:07 PM3/27/13
to santhav...@googlegroups.com
சிவசிவாவின் சிலேடை நன்று. சிவனுக்கும் ஆறுமுகம் உண்டே !ஆறுமுகங்களின் கண்களில் தோன்றிய ஆறு பொறிகளில் உருவானவன் =ஆறுமுகன் ஆற்றிடையில்  முகத்தைக் காட்டியவன் ; ஆறு திருமுகங்களைக் கொண்டவன்;சிவன் சிரசில் ஆறு பாய்வதால் ஆறு, முகத்தின் மேல் கொண்டவன் =ஆறுமுகன்  
ஆஹா பலவகையில் சிவ, முருக தரிசனம் நன்றி 
-புலவர் இராம மூர்த்தி 

2013/3/26 Siva Siva <naya...@gmail.com>
With explanation:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
              சிவனுக்கும்முருகனுக்கும் சிலேடை 
                       கட்டளைக் கலித்துறை 
ஆறார்  தலையாய்  மலையவ  ளன்பா  அறுமுகவா 
நீறார்    நுதலெழிற்  கண்ணா  ரனலாய்  நெடுமலையாய்
ஏறமர்    சேவற்   கொடியா  ரவர்முன்  மலைவிலியாய்
சீறிய   ழித்தனை யானை  யணைத்தாய்   சிவன்குகனே 

விளக்கம்: (சிவனுக்கு)-ஆறார் தலையாய் =ஆற்றைத்   தலையில் கொண்டவனே  ; மலையவ ளன்பா= மலைமகளின்  கணவனே; அறுமுகவா =ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் அதோமுகம் ஆகிய ஆறுமுகம் உடையவனே;நீறார் =திருநீறுஅணிந்த, நுதல் எழில் கண்ணா =நெற்றியில் கண்ணை உடையவனே; ஆரனலாய் =நெருப்பு நிறத்தவனே; நெடுமலையாய்=உயர்ந்த மலையில் இருப்பவனே; ஏறமர் =இடபவாகனத்தில்  அமர்ந்த; சே வல் கொடியா =காளையைக் கொடியில் உடையவனே ; ஆர்  அவர் முன் =ஆர்க்கும் அரக்கர் முன்னே; மலை வில்லி ஆய்= இமய மலையாகிய  வில்லேந்திய வராய்;சீறி அழித்தனை=சினந்து எரித்தாய்; யானை அணைத்தாய்= யானைத்தோல் போர்த்தாய்; சிவன்= சிவனே!
                    (முருகனுக்கு) ஆறார் தலையாய்=அலைநீர்  ஒலிக்கும் திருச்சீரலைவாய் உறைபவனே ; மலையவளன்பா= மலைமகளின் மகனே; அறுமுகவா=ஆறு திருமுகங்களை உடையவனே; நீறார்=திருநீறு  அணிந்தவனே; நுதல் எழில் கண் 
ஆர் அனலாய்=நெற்றிக்கண்ணில் நெருப்புப் பொறியாகத்  தோன்றியவனே;நெடுமலையாய் =மலைதொறும் உறைபவனே; ஏறமர் சேவல் கொடியாய்=அழகிய கோழிக் கொடி உடையாய் ;ஆர் அவர் முன் மலைவு இலி ஆய்=ஆர்த்த சூரன் முன் தயக்கம் இல்லாதவராய்;சீறி அழித்தனை =கோபித்து அழித்தாய்;யானை அனத்தனை =அதற்குப் பரிசாக தெய்வானையை அணைத்துக் கொண்டாய்; குகனே=மனக்கிகையில் உறையும் முருகனே 

எளியேனின் சிறு முயற்சி  ஏற்றருள்க -புலவர் இராம மூர்த்தி                  

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 27, 2013, 6:48:12 PM3/27/13
to santhav...@googlegroups.com
சிவசிவாவின் சிலேடை வெண்பாவும், உடனடியாகப்  புலவர் கட்டளைக்கலித்துறையில் திறனும் அழகு.
அனந்த்

2013/3/27 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

Siva Siva

unread,
Mar 27, 2013, 8:55:32 PM3/27/13
to santhav...@googlegroups.com
படித்த, வாழ்த்திய அன்பர்களுக்கு என் வணக்கம்.


2013/3/27 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Mar 27, 2013, 9:18:53 PM3/27/13
to santhav...@googlegroups.com
இனிய பாடல்.

சிவனுக்கு ஆறுமுக விளக்கமும் அழகு.

பாடலின் ஈற்றில் "சிவன்குகனே" என்ற இடத்தில் 'சிவகுருவே' என்பதும் பொருந்தக்கூடும்.

/ஏறமர் சேவல் கொடியாய்=அழகிய கோழிக் கொடி உடையாய் ;/
முருகன் என்ற விளக்கத்தில், 'ஏரமர்' என்பது 'ஏறமர்' எனத் திரிந்தது எனக்கொள்கிறேன்.

/ சேவற்   கொடியா  ரவர்முன் /
"சே வல் கொடியா =காளையைக் கொடியில் உடையவனே ; ஆர்  அவர் முன் =ஆர்க்கும் அரக்கர் முன்னே;"

சிவன் என்ற விளக்கத்தில், இவ்விடத்தில், 'கொடியாவாரவர்முன்' என்பது 'கொடியாரவர்முன்' என்று தொகுத்தல் விகாரம் பெற்றது என்று கொள்கிறேன்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2013/3/27 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>
சிவசிவாவின் சிலேடை நன்று. சிவனுக்கும் ஆறுமுகம் உண்டே !ஆறுமுகங்களின் கண்களில் தோன்றிய ஆறு பொறிகளில் உருவானவன் =ஆறுமுகன் ஆற்றிடையில்  முகத்தைக் காட்டியவன் ; ஆறு திருமுகங்களைக் கொண்டவன்;சிவன் சிரசில் ஆறு பாய்வதால் ஆறு, முகத்தின் மேல் கொண்டவன் =ஆறுமுகன்  
ஆஹா பலவகையில் சிவ, முருக தரிசனம் நன்றி 
-புலவர் இராம மூர்த்தி 

              சிவனுக்கும்முருகனுக்கும் சிலேடை 
                       கட்டளைக் கலித்துறை 
ஆறார்  தலையாய்  மலையவ  ளன்பா  அறுமுகவா 
நீறார்    நுதலெழிற்  கண்ணா  ரனலாய்  நெடுமலையாய்
ஏறமர்    சேவற்   கொடியா  ரவர்முன்  மலைவிலியாய்
சீறிய   ழித்தனை யானை  யணைத்தாய்   சிவன்குகனே 

விளக்கம்: (சிவனுக்கு)-ஆறார் தலையாய் =ஆற்றைத்   தலையில் கொண்டவனே  ; மலையவ ளன்பா= மலைமகளின்  கணவனே; அறுமுகவா =ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் அதோமுகம் ஆகிய ஆறுமுகம் உடையவனே;நீறார் =திருநீறுஅணிந்த, நுதல் எழில் கண்ணா =நெற்றியில் கண்ணை உடையவனே; ஆரனலாய் =நெருப்பு நிறத்தவனே; நெடுமலையாய்=உயர்ந்த மலையில் இருப்பவனே; ஏறமர் =இடபவாகனத்தில்  அமர்ந்த; சே வல் கொடியா =காளையைக் கொடியில் உடையவனே ; ஆர்  அவர் முன் =ஆர்க்கும் அரக்கர் முன்னே; மலை வில்லி ஆய்= இமய மலையாகிய  வில்லேந்திய வராய்;சீறி அழித்தனை=சினந்து எரித்தாய்; யானை அணைத்தாய்= யானைத்தோல் போர்த்தாய்; சிவன்= சிவனே!
                    (முருகனுக்கு) ஆறார் தலையாய்=அலைநீர்  ஒலிக்கும் திருச்சீரலைவாய் உறைபவனே ; மலையவளன்பா= மலைமகளின் மகனே; அறுமுகவா=ஆறு திருமுகங்களை உடையவனே; நீறார்=திருநீறு  அணிந்தவனே; நுதல் எழில் கண் 
ஆர் அனலாய்=நெற்றிக்கண்ணில் நெருப்புப் பொறியாகத்  தோன்றியவனே;நெடுமலையாய் =மலைதொறும் உறைபவனே; ஏறமர் சேவல் கொடியாய்=அழகிய கோழிக் கொடி உடையாய் ;ஆர் அவர் முன் மலைவு இலி ஆய்=ஆர்த்த சூரன் முன் தயக்கம் இல்லாதவராய்;சீறி அழித்தனை =கோபித்து அழித்தாய்;யானை அனத்தனை =அதற்குப் பரிசாக தெய்வானையை அணைத்துக் கொண்டாய்; குகனே=மனக்கிகையில் உறையும் முருகனே 

எளியேனின் சிறு முயற்சி  ஏற்றருள்க -புலவர் இராம மூர்த்தி                  

--

Ramamoorthy Ramachandran

unread,
Mar 28, 2013, 12:32:32 AM3/28/13
to santhav...@googlegroups.com
உடனே படித்து சரியான விளக்கமும் அளித்த சிவசிவா வுக்கும், பேராசிரியர் அனந்த் அவர்களுக்கும் நன்றி -புலவர் இராமமூர்த்தி 

2013/3/27 Siva Siva <naya...@gmail.com>

--

Siva Siva

unread,
Apr 9, 2013, 9:37:18 PM4/9/13
to santhavasantham

அனந்தனாரின் வெங்காய சாம்பாரின் வாசனை !!

2013-04-09
சிவன் - விருந்து - சிலேடை
----------------------
(
இன்னிசை வெண்பா)
குழம்பாய் மனமேதான் தோன்றியார் கூட்டால்
எழும்பழ வாசனையால் இங்காவி சென்று
விழும்போ துதவி இலையேஎன் னாதே
செழும்புனல் வேணியனைச் செப்பு
.



பதம் பிரித்து:

குழம்பாய் மனமே தான்தோன்றியார் கூட்டால்,
எழும் பழ வாசனையால், இங்கு ஆவி சென்று
விழும்போது உதவி இலையே என்னாதே,
செழும் புனல் வேணியனைச் செப்பு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2013/3/26 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 9, 2013, 10:45:04 PM4/9/13
to சந்தவசந்தம்
அருமை!

அனந்த்


2013/4/9 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Apr 9, 2013, 10:51:23 PM4/9/13
to santhavasantham
With explanation:


2013/4/9 Siva Siva <naya...@gmail.com>

அனந்தனாரின் வெங்காய சாம்பாரின் வாசனை !!

2013-04-09
சிவன் - விருந்து - சிலேடை
----------------------
(
இன்னிசை வெண்பா)
குழம்பாய் மனமேதான் தோன்றியார் கூட்டால்
எழும்பழ வாசனையால் இங்காவி சென்று
விழும்போ துதவி இலையேஎன் னாதே
செழும்புனல் வேணியனைச் செப்பு
.



பதம் பிரித்து:
குழம்பாய் மனமே தான்தோன்றியார் கூட்டால்,
எழும் பழ வாசனையால், இங்கு ஆவி சென்று
விழும்போது உதவி இலையே என்னாதே,
செழும் புனல் வேணியனைச் செப்பு.


மனமே! குழம்பு ஆகி, அதில் தான்களும் தோன்றிப், பொருந்துகிற கூட்டு, பழங்கள் இவற்றின் வாசனைகளால், அவற்றிலேயே நாட்டம் கொண்டு, உண்ண அவற்றை இடும்போது இலைதான் உதவும் என்று எண்ணி உழலாதே! மனமே! நீ குழம்பமாட்டாய்! ஆணவம் மிக்கவர்கள் சகவாசத்தாலும், இப்பிறவியில் எழுகின்ற பழைய பிறவிகளின் வாசனையாலும், உழன்று, உயிர் போய் உடல் விழும்போது ஒரு துணை இல்லையே என்று வருந்தாமல், (இப்பொழுதே) கங்கையைச் சடையில் வைத்த சிவபெருமான் நாமத்தைச் சொல்.

 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Aug 28, 2013, 7:30:45 PM8/28/13
to santhavasantham

கோகுலாஷ்டமியை ஒட்டி
2013-08-28
கண்ணன் - சிவன் - சிலேடை
--------------------------------------
திருவாய் விரியத் தெரியும்பல் அண்டத்
துருவாய் ஒளித்திருப்பான் ஓடி - வருவான்
களிக்கக் கரியவன்னஞ் சார்பவன் கங்கை
தெளிக்குமுடி யான்கண்ணன் செப்பு
.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2013/4/9 Siva Siva <naya...@gmail.com>

அனந்தனாரின் வெங்காய சாம்பாரின் வாசனை !!

2013-04-09
சிவன் - விருந்து - சிலேடை
----------------------

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 29, 2013, 4:16:42 PM8/29/13
to சந்தவசந்தம்
அழகு!

அனந்த்


2013/8/29 Siva Siva <naya...@gmail.com>
விளக்கத்தோடு:


2013/8/28 Siva Siva <naya...@gmail.com>

கோகுலாஷ்டமியை ஒட்டி
2013-08-28
கண்ணன் - சிவன் - சிலேடை
--------------------------------------
திருவாய் விரியத் தெரியும்பல் அண்டத்
துருவாய் ஒளித்திருப்பான் ஓடி - வருவான்
களிக்கக் கரியவன்னஞ் சார்பவன் கங்கை
தெளிக்குமுடி யான்கண்ணன் செப்பு
.



கண்ணன்:

திரு வாய் விரியத் தெரியும் பல் அண்டத்து
ரு வாய் ஒளித்திருப்பான் ஓடி வருவான்
களிக்கக்; கரியவன்; நம் சார்பு அவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.

('
மண்ணை உண்டாயா?' என்று அசோதை கேட்டபோது) அவனுடை திருவாய் விரியவும் பல அண்டங்களும் தெரியும்; (அவற்றைத் தன்) வாயுள் ஒளித்திருப்பான்; பெற்றோரும் மற்றோரும் களிப்பு அடையும்படி அவர்களிடம் ஓடி வருவான்; ('ஒளித்திருப்பான்' என்பதை 'ஓடி வருவான்
களிக்க' என்பதோடும் மீண்டும் இயைத்துக், 'கண்ணாமூச்சி' விளையாடுவான் என்றும் பொருள்கொள்ளலாம்); கரிய நிறம் உடையவன்; நம் புகலிடம் அவன்; ('கரியவன்னஞ் சார்பவன்' என்பதைக் 'கரிய வன்னம் சார்பவன்' என்றும் கொள்ளலாம் - கரிய வண்ணம் பொருந்துபவன்); கண்ணன்.

சிவன்:
திருவாய், விரியத் தெரியும் பல் அண்டத்து
ருவாய், ஒளித்து இருப்பான்; ஓடி வரு வான்
களிக்கக், கரிய வன்ஞ்சு ஆர் பவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.

திரு ஆகி, விரிந்து தெரிகின்ற எல்லா அண்டங்களின் உரு ஆகி, (அப்படி இருந்தாலும்) அறிய இயலாதபடி தன்னை ஒளித்து இருப்பவன்; (அஞ்சி) ஓடிவந்த தேவர்கள் மகிழும்படி, கரிய கொடிய விடத்தை உண்ட, பவன் என்ற திருநாமம் உடையவன்; கங்கைநீர் தெளிக்கின்ற உச்சியை உடையவன்; சிவபெருமான்.


 

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Aug 29, 2013, 10:08:54 PM8/29/13
to santhav...@googlegroups.com
வணக்கம், பேராசிரியர் இராதாகிருஷ்ணன்  வரலாற்று நூல்
வளர்ந்து வருகிறது.சற்றுப் பணி  நெருக்கடி.அவ்வப்போது 
 தலை நீட்டுவேன்! பொறுத்தேற்க.   
  
சிவன்கண்ணன் சாளரத்தைச் சேர்த்துச்சி லேடைதனில் 
கவர்ந்தே கவிதைக்குள் காட்டி- பவநோய்தான் 
தீரும் வழியைச் சிவசிவா செப்பியபின் 
ஆர்தாம் நிகராகு வார்?

நன்றி, வணக்கம்.-புலவர் இராமமூர்த்தி 30/08/2013


2013/8/30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Siva Siva

unread,
Aug 29, 2013, 4:03:53 PM8/29/13
to santhavasantham
விளக்கத்தோடு:


2013/8/28 Siva Siva <naya...@gmail.com>

கோகுலாஷ்டமியை ஒட்டி


2013-08-28
கண்ணன் - சிவன் - சிலேடை
--------------------------------------
திருவாய் விரியத் தெரியும்பல் அண்டத்
துருவாய் ஒளித்திருப்பான் ஓடி - வருவான்
களிக்கக் கரியவன்னஞ் சார்பவன் கங்கை
தெளிக்குமுடி யான்கண்ணன் செப்பு
.



கண்ணன்:

திரு வாய் விரியத் தெரியும் பல் அண்டத்து

ரு வாய் ஒளித்திருப்பான் ஓடி வருவான்
களிக்கக்; கரியவன்; நம் சார்பு அவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.

('
மண்ணை உண்டாயா?' என்று அசோதை கேட்டபோது) அவனுடை திருவாய் விரியவும் பல அண்டங்களும் தெரியும்; (அவற்றைத் தன்) வாயுள் ஒளித்திருப்பான்; பெற்றோரும் மற்றோரும் களிப்பு அடையும்படி அவர்களிடம் ஓடி வருவான்; ('ஒளித்திருப்பான்' என்பதை 'ஓடி வருவான்
களிக்க' என்பதோடும் மீண்டும் இயைத்துக், 'கண்ணாமூச்சி' விளையாடுவான் என்றும் பொருள்கொள்ளலாம்); கரிய நிறம் உடையவன்; நம் புகலிடம் அவன்; ('கரியவன்னஞ் சார்பவன்' என்பதைக் 'கரிய வன்னம் சார்பவன்' என்றும் கொள்ளலாம் - கரிய வண்ணம் பொருந்துபவன்); கண்ணன்.

சிவன்:
திருவாய், விரியத் தெரியும் பல் அண்டத்து
ருவாய், ஒளித்து இருப்பான்; ஓடி வரு வான்
களிக்கக், கரிய வன்ஞ்சு ஆர் பவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.

திரு ஆகி, விரிந்து தெரிகின்ற எல்லா அண்டங்களின் உரு ஆகி, (அப்படி இருந்தாலும்) அறிய இயலாதபடி தன்னை ஒளித்து இருப்பவன்; (அஞ்சி) ஓடிவந்த தேவர்கள் மகிழும்படி, கரிய கொடிய விடத்தை உண்ட, பவன் என்ற திருநாமம் உடையவன்; கங்கைநீர் தெளிக்கின்ற உச்சியை உடையவன்; சிவபெருமான்.


 

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Aug 29, 2013, 11:39:19 PM8/29/13
to santhavasantham
வாழ்த்திய அன்பர்களுக்கும் இழையை ஆதரிக்கும் பிற அன்பர்களுக்கும் என் வணக்கம்.


2013/8/29 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

sankara dass nagoji

unread,
Aug 30, 2013, 3:08:30 AM8/30/13
to santhav...@googlegroups.com
சிவன் தேங்காய் சிலேடை 

முக்கண் உடைத்தால் முதுகுடுமி கொண்டதனால் 
மிக்குவரு நீரினை  மீமிசை ஏற்றதனால் 
மேவு   பணத்தால்  பரையினால்  ஏறேறும் 
தேவுக்கு  நேராகும் தெங்கு.

பணம் - நாகப் படம், மட்டையின் அடிப்பாகம் 
பரை - கொப்பரை, கப்பரை 

- சங்கர தாஸ் 

Pas Pasupathy

unread,
Aug 30, 2013, 5:52:46 AM8/30/13
to santhav...@googlegroups.com
நன்றாய் வந்திருக்கிறது.


2013/8/30 sankara dass nagoji <nag...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Siva Siva

unread,
Aug 30, 2013, 8:23:45 AM8/30/13
to santhavasantham
நல்ல முயற்சி.

முதுகுடுமி - முது - என்ன பொருளில்?
'பணம் - மட்டையின் அடிப்பாகம்' - இது புழக்கத்தில் உள்ள சொல்லா? OTL அகராதியிற் காணேன்.

பரை = பார்வதி என்றும் பொருள் உண்டு..




2013/8/30 sankara dass nagoji <nag...@gmail.com>
சிவன் தேங்காய் சிலேடை 

Nagoji

unread,
Aug 30, 2013, 9:09:11 AM8/30/13
to santhav...@googlegroups.com
நள வெண்பா - சரியாக நினைவு இல்லை.  கமுகு மட்டையை "பைந்தலைய நாகப்பணமென்று" என்று ஒரு வருணனை வரும். பேச்சு வழக்கில் பன்னாடை என்போம். அது பன்னக  ஆடை. மட்டையின் அடிப்பாகம், வலை போன்று ஒன்று இருக்கும் பழுப்பு நிறத்தில். நன்றாக எரியும். வெந்நீர் அடுப்புக்கு உபயோகப் படுத்துவோம். மரமேறிகள் அதை முதலில் சீவிய பின்னே தான் தேங்காய் பறிப்பார்கள். தேள் ஒளிந்து இருக்கும்.

முது - தொன்மையான குடுமி சிவனுக்கு. தேங்காயில் அன்னம், இளநீர், கொட்டாங்கச்சி இவை உருப்பெறும் முன்பேயே, குரும்பையாக இருக்கும் போதே உள்ளே  குடுமிப் பாகம் நாருடன் உருப்பெறும். பழக்கத்தில் நான் பார்த்தது. பாட்டனி என்ன சொல்கிறது என்பது தெரியாது!


- சங்கர தாஸ்


2013/8/30 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 30, 2013, 10:09:12 AM8/30/13
to சந்தவசந்தம்
நல்ல சிலேடை, நல்ல அமைப்பு.

முக்கண் உடைத்தால் - முக்கண் உடைத்ததால் என்றிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறாயின் அடுத்த சொல்லை மாற்றவேண்டியிருக்கும்; பன்னாடை அகராதியில் உள்ளது. அதைப் பணம் என்று அங்குக் குறிக்கவில்லை.  அவ்வாறு குறிக்கும்  நளவெண்பாப் பகுதியைத் தர இயலுமா?

அனந்த் 


2013/8/30 Nagoji <nag...@gmail.com>

Siva Siva

unread,
Aug 30, 2013, 10:29:44 AM8/30/13
to santhavasantham
http://tamilkirukkan.wordpress.com/நளவெண்பா/கலிநீங்குகாண்டம்-பக்கம்/

may have the song that was quoted by Sankara Dass.


2013/8/30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Nagoji

unread,
Aug 30, 2013, 12:04:41 PM8/30/13
to santhav...@googlegroups.com
பன்னாடை எதைச் சுற்றி இருக்கிறதோ மட்டைக் கீற்றின் அந்த அகன்ற அடிப் பாகம் தான் பணம். ஓலைகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் படம் எடுக்கும் பாம்பு போலவே இருக்கும். சிறு வயதில் எங்களுக்கு கிரிக்கெட் மட்டை அது தான்!

உடைத்தால். உடைத்ததால் என்பதற்கு இந்த சொல்லாடல் முறை சரி என்றே தோன்றுகிறது. கெடுதல் விகாரம்?

கலி நீங்கு படலப் பாடலைத் தந்த சிவா சிவாக்கு நன்றி.


- சங்கர தாஸ்


2013/8/30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Nagoji

unread,
Aug 30, 2013, 2:07:57 PM8/30/13
to santhav...@googlegroups.com
பசும்புல் தலை காண்பு அரிது (காண்பது அரிது) , போர்த்து மேய்ந்தற்று (மேய்ந்ததற்று) என்பதில் "அது" என்பது இல்லாமலேயே வருவது போல் "உடைத்தால்" என்பதும் வரும் என்பது என் யூகம்.

திருத்தொண்டர் புராண சாரத்தில் திருக்குறிப்புத் தொண்டர் பற்றி வரும் இடத்தில்,
கந்தை புலரா தொழிய மழையும் மாலைக்
   கடும்பொழுதும் வரக்கண்டு கலங்கிக் கன்மேற்
சிந்தமுடி புடைப்பளவிற் றிருவே கம்பர்
   திருக்கைகொடு பிடித்து உயர்வான் சேர்த்தினாரே" என்று வருகிறது. புடைப்பளவில் (புடைப்பது அளவில்).

என் யூகம் சரியா என்று சொல்லவும்.

sankara dass nagoji

unread,
Sep 2, 2013, 7:15:03 AM9/2/13
to santhav...@googlegroups.com
சிவன் செக்கு சிலேடை. 

சுற்றும் பசுக்களால் சுத்தநெய் கொள்வதனால் 
உற்ற   இலிங்க உருவால் அரவத்தால் 
பக்கம் அணையும்  படையால்  சினத்தினால் 
செக்கினை யொக்கும் சிவன்.

பசு - செக்கு மாடு, ஜீவன் 
நெய் - பிழியப்படும் எண்ணெய், அபிடேக நெய். செக்கும் கொஞ்சம் எண்ணெயைக் குடிக்கும்.  
சிவன் செக்கு இரண்டுக்கும் இலிங்க வடிவு 
அரவம்   - சத்தம், பாம்பு 
படை - சிவ கணம்/ஆயுதங்கள் , செக்கின் அரைபடு பாகத்தை ஒட்டினாற்போல் இருக்கும் பாகங்களை ஒன்றாக வைத்துப்  பார்த்தால், அது படைக் கலப்பை போலவே இருக்கும்.
சினம் - சூடு, தீ  - செக்கின் அடிப்பாகம் மிகவும் சூடாக இருக்கும் 

Iyappan Krishnan

unread,
Sep 2, 2013, 7:16:33 AM9/2/13
to சந்தவசந்தம்
அருமை ஐயா :)

ramaNi

unread,
Sep 2, 2013, 10:41:51 AM9/2/13
to santhav...@googlegroups.com
செக்கிழுக்கக் காளைமாடுகள் தானே பயன்படும் அன்றோ?
ஒரு சுவாரஸ்ய ஜோக் சுட்டி:
http://gokulathilsuriyan.blogspot.in/2010/03/mba.html

Nagoji

unread,
Sep 2, 2013, 11:56:54 AM9/2/13
to santhav...@googlegroups.com
1 pacu 1. cow; 2. bull; 3. taurus in the zodiac; 4. beast, brute; 5. individual soul, spirit, as bound by pa1cam ; 6. a gentle, harmless person; 7. sacrificial animal; 8. collection of six seeds at a time in a hole in the game of palla1n3kul6i
In sanskrit, pasu means any animal.

- sdn

2013/9/2 ramaNi <sai...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 2, 2013, 12:15:01 PM9/2/13
to சந்தவசந்தம்
>என் யூகம் சரியா என்று சொல்லவும்.

சரியல்ல, மன்னிக்கவும். நீங்கள் தந்துள்ளவை கு.உ. புணர்ச்சிகள். மேய்ந்தற்று - மேய்ந்து அற்று; புடைப்பளவில்-  புடைப்பு அளவில் (தந்துள்ள தி.தொ. புராணப் பாடலில், புடைத்த அளவில் என்ற பொருளில் வரும்). 

அனந்த்


2013/8/30 Nagoji <nag...@gmail.com>
பசும்புல் தலை காண்பு அரிது (காண்பது அரிது) , போர்த்து மேய்ந்தற்று (மேய்ந்ததற்று) என்பதில் "அது" என்பது இல்லாமலேயே வருவது போல் "உடைத்தால்" என்பதும் வரும் என்பது என் யூகம்.

--

Nagoji

unread,
Sep 2, 2013, 1:39:01 PM9/2/13
to santhav...@googlegroups.com


நன்றி. தவறுகளைச் சரி செய்து கொள்ளவே உம்மை நாடி வந்துள்ளேன். என்னிடம் ஏன் எச்சூஸ் மீ சொல்கிறீர்கள்!

"முக்கண் உடைத்தால்" என்பதை "முக்கண் உளதால்" என்று மாற்றி விடுகிறேன்.

-சங்கர தாஸ்

2013/9/2 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Nagoji

unread,
Sep 3, 2013, 3:32:30 AM9/3/13
to santhav...@googlegroups.com
சிவன் - கல்யாணத் தரகர் சிலேடை

படமுண்டு    பாம்புண்டு  பாலுண்டு   தூது
நடையுண்டு காருண்டு   நன்மறையு  முண்டு 
தரமுடன்  வாழத் தசப்பொருத்தம் பார்க்கும் 
தரகர்க் கிணையாம் அரன்.

படம் - கொடி/சின்னம் , வரன் வது படங்கள் 
பாம்பு - நாகம், முகூர்த்தம் 
பால்  - சிவனுக்கு வெண்மை நிறம், அபிடேகப் பால் . பிரிவு;  குலம், சாதி, இடம், தரம் என்ற பல வகைப் பட்ட பிரிவுகளைப் பார்த்தே தரகர்  முடிவு செய்வார் 
மறை - வேதம், ரகசியம் 
கார் - கறைக்கண்டம், கறுப்புப் பணம் (வர தக்ஷிணை என்று இங்கே கொள்ளவும்)
Message has been deleted

ramaNi

unread,
Sep 4, 2013, 6:01:17 AM9/4/13
to santhav...@googlegroups.com
சிவனும் கள்வனும் சிலேடை 

கரந்திருந்து காத்து சமயத்தில் வேறாய்
உருவமும் தாங்கித் திருடி யகப்பட்டே
உள்ளே சிறையில் உவப்பிலே தூங்கிடும்
கள்வனு மாவான் சிவன்.

[சமயம்=நேரம், மதம்;]

சிவனும் திருட்டும் சிலேடை 

கன்னக்கோ லிட்டே அடியார் உளம்திருடி
உன்னியோட யத்தனித்(து) உட்கிடையில் சிக்குண்டே
இன்னம் சிறையிருந்து வன்னநடம் காட்டியுளம்
கொன்னக்கோல் போடும் திருட்டு.

[உட்கிடை=கருத்து, சிறு கிராமம்]

--ரமணி, 04/09/2013

*****

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 4, 2013, 10:13:17 AM9/4/13
to சந்தவசந்தம்
கரந்திருந்து காத்து சமயத்தில் வேறு

உருவமும் தாங்கித் திருடி யகப்பட்டு
உள்ளே சிறையில் உவப்பிலே தூங்கிடும்
கள்வனு மாவான் சிவன்.


பொருத்தங்களை நன்கு அமைத்த சிலேடை.  இரண்டாவது சிலேடை இதைப் போலச் சிறப்பாக  அமையவில்லை.
2 இடங்களில் கு.உ. புணர்ச்சியால் தளைதட்டும். 2,4 அடிகளில் மோனை தேவை.
இரண்டாவதில், கு.உ.பு. + விளாங்காய்.

அனந்த்

2013/9/4 ramaNi <sai...@gmail.com>
சிவனும் கள்வனும் சிலேடை 

கரந்திருந்து காத்து சமயத்தில் வேறு

ramaNi

unread,
Sep 4, 2013, 10:49:38 AM9/4/13
to santhav...@googlegroups.com
07. சிவனும் வணிகனும் சிலேடை 

குள்ள நரியை உயர்ச்சிப் பரியாக்கி
கொள்வது மிக்குக் கொடுப்பது குன்றவே
உள்ளம் வசப்படுத்தி ஊடாடி ஏமாற்றும்
கள்ள வணிகனாம் தாணு.

வியாபாரி
குள்ளநரி போன்ற போலிப் பொருட்களை உயர்வான குதிரைகள் போலத் தோன்றச் செய்து
விலையாக கொள்வதை அதிகம் கொண்டு தரமாகக் கொடுப்பதை குறைவாகத் தந்து
கவர்ச்சிப் பொருள், பேச்சினால் உள்ளம் கவர்ந்து கலந்து பழகி ஏமாற்றும்
கள்ள வணிகன்.

சிவன்
நம்முள் உறையும் குள்ள நரித்தனத்தை மாற்றி உயர்சாதிப் பரியாக்கி
நம்மிடம் உள்ள உலகியல் பொருட்களை யெல்லாம் விலையாகக் கொண்டு கொடுக்கும் ஞானம் குறைவாகத் தோன்றச் செய்து
நம்முள்ளம் கவர்ந்து கலந்துறவாடி ஏம்-ஆற்றும்=மயக்கத்தைத் தெளியவைக்கும்
களவினைச் செய்யும் வணிகன் சிவன்.

08. சிவனும் சிலேடையும் சிலேடை 

ஒருசொல்லாய் நின்று பொருளிரண்டு தந்தே
உருவங்கள் உள்ளங்கள் ஒன்றும் கலையைப்
பலே-சபாஷ் என்று படித்தோர் மகிழச்
சிலேடையில் சிக்கும் சிவன்.

சிவன்
ஒருசொல்=ஓம்; இருபொருள்=பரம்பொருள், உலகம்;
சிலேடை=சில+ஏடை=கொஞ்சம் ஆசை -- ஒன்றைச் சிலவாக்கும் ஆசை

--ரமணி, 04/09/2013, கலி.19/05/5114

ramaNi

unread,
Sep 4, 2013, 11:02:21 AM9/4/13
to santhav...@googlegroups.com
திருத்தியது
கரந்திருந்து காத்து சமயத்தில் வேறாய்த்
தெரியுரு தாங்கித் திருடி யகப்பட்டே

உள்ளே சிறையில் உவப்பிலே தூங்கிடும்
கள்வனு மாவான் தாணு.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 4, 2013, 11:35:22 AM9/4/13
to சந்தவசந்தம்
நல்ல திருத்தங்கள்.

கள்வனு மாவான் தாணு.- தளை + மோனையின்மை (கள்ளன் சிவனாவான் காண் என்பது போல அமைக்கலாம்)

அனந்த்


2013/9/4 ramaNi <sai...@gmail.com>
திருத்தியது

Nagoji

unread,
Sep 5, 2013, 5:11:24 AM9/5/13
to santhav...@googlegroups.com
சவம் சிவம் சிலேடை 

அமங்கலமாகக் கருத வேண்டாம். 

நெற்றிப் பொறிகொள்ளும் நீண்ட   துயில்கொள்ளும் 
சுற்றும் அரவுகொள்ளும் சூழ்பனியும்  கொள்ளும் 
உவப்புடன் பாடைகொண்டே ஊர்க்கயலை நாடும் 
சவமும் சிவமும் சமம்.

பொறி - கண், வட்ட வடிவம் கொண்ட காசு 
துயில் - துணி , தூக்கம் 
அரவு - பாம்பு, சத்தம் 
பனி - குளிர் பனி, துக்கம் 
பாடை - நட்டபாடைப்  பண், பிண இருக்கை 
உவப்பு - மகிழ்ச்சி, உயரம் 
ஊர்க்கு அயலில் மயானம் இருக்கும் 

ramaNi

unread,
Sep 6, 2013, 8:40:15 AM9/6/13
to santhav...@googlegroups.com
சிவனும் கள்வனும் சிலேடை - 2

கன்னக்கோ லிட்டே கருவில் புகுந்துகொள்வான்
உன்னியே பற்றினால் உட்கிடையில் சிக்குவான்
இன்னம் சிறையிருக்க மின்ன லெனமறைவான்
கொன்னக்கோல் போடும்நெஞ் சு.

சிவன்
கன்னக்கோல் = சூலம் (உள்ளம்/உயிர் கொள்வதால்); கருவில் = கருத்தில், புத்தியில்;
இன்னம் சிறையிருக்க = சிறை மட்டும் இருக்க இறையைக் காணாது
கொன்னக்கொல் = தாளச் சொற்களில் வேண்டுதல்

கள்வன்
கருவில்=கருப்பாய்த் தெரியும் இல்லம்; புகுந்துகொள்வான் = புகுந்து திருடுவான்;
உன்னியே பற்றினால் = முனைந்து பிடித்தால்; உட்கிடை = சிறு கிராமம்;
இன்னம் சிறையிருக்க... = சிறையிலிருந்து தப்பித்து மறைவான்;
கொன்னக்கொள் = கவலைச் சொற்கள்.

*****


On Wednesday, September 4, 2013 7:43:17 PM UTC+5:30, ananth wrote:
இரண்டாவது சிலேடை இதைப் போலச் சிறப்பாக  அமையவில்லை.
2 இடங்களில் கு.உ. புணர்ச்சியால் தளைதட்டும். 2,4 அடிகளில் மோனை தேவை.
இரண்டாவதில், கு.உ.பு. + விளாங்காய்.

அனந்த்

Shrikaanth K. Murthy

unread,
Sep 7, 2013, 1:22:21 PM9/7/13
to santhav...@googlegroups.com
சந்தவசந்தத்‌தின் சான்றோர் நண்பர்களுக்கு வணக்கம். இங்கு முதன்முதலாக நான் கவியெழுதிப் பகிர்ந்துகொள்கிறேன். பிழைகள் இருக்குமென்பதில் ஐயமில்லை. அன்புகூர்ந்து திருத்தவும்.
நன்றி
ஸ்ரீகாந்த்

பாம்பு மற்றும் சுவர்க்கம் இவைகளை சிலேடை செய்துள்ளேன்.

போகம் பரப்பும் புலனதைத்து ரப்பும் ஆம்
நாகுநிற்கும் நல்லபேர் நச்சுயிர் போக உட்-
போகும் உறைவிடம் பொங்குமும்பர் கோன் பேணும்
நாகம் தனையறிக நன்கு

பாம்பிற்கு
போகம்- படம்; புலன்- கழனி; அதைத்து- அலைந்து; உரப்பும்- சத்தமிட்டு மிரட்டும்;
நாகு- புற்று; நல்லபேர் நச்சு- நல்ல பெயர் கொண்ட விஷம்/ தொந்தரவு
உயிர் போக உள் போகும் உறை விடம் பொங்கும்- உயிர் நீங்க உட்புகுந்து ஊரும் விஷத்‌தை விஷப்பையிலிருந்து கக்கும்
உம்பர்கோன் பேணும்- ஈசன் அணியும்;

சுவர்க்கத்திற்கு
போகம் பரப்பும்- பலவித இன்பங்களைப் படைக்கும்; புலன் அதைத் துரப்பும்- ஐம்புலன்கள் அவ்வின்பத்தை நாடும்;
நாகு நிற்கும்- அங்கு இளமை நிலையாக நிற்கும்; நல்ல பேர் நச்சு- நல்லவர்கள் விரும்புவது;
உயிர் போக உள் போகும் உறைவிடம்- நீங்கிய பின் புகும் வீடு;
பொங்குமும்பர் கோன் பேணும்- இந்திரன் காக்கும்;
நாகம்- சுவர்க்கம்

Siva Siva

unread,
Sep 7, 2013, 3:51:27 PM9/7/13
to santhavasantham
பல அரிய சொற்கள் அமைந்த பாடல்போல்!



2013/9/7 Shrikaanth K. Murthy <drshri...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 7, 2013, 3:54:04 PM9/7/13
to சந்தவசந்தம்
ஸ்ரீகாந்த்,

நல்ல முயற்சி. பல அரிய சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் (போகம், துரத்தல், அதைத்தல், நாகு). பொருள் புரிந்து கொள்வது சற்றுக் கடினமாகவும், சுற்றிவளைத்தும் இருக்கிறது. எளிமையாக்க முயலல் நன்று.

அனந்த்


2013/9/7 Shrikaanth K. Murthy <drshri...@gmail.com>
சந்தவசந்தத்‌தின் சான்றோர் நண்பர்களுக்கு வணக்கம். இங்கு முதன்முதலாக நான் கவியெழுதிப் பகிர்ந்துகொள்கிறேன். பிழைகள் இருக்குமென்பதில் ஐயமில்லை. அன்புகூர்ந்து திருத்தவும்.

Vis Gop

unread,
Sep 7, 2013, 8:38:33 PM9/7/13
to santhav...@googlegroups.com
சிவன் புகழ் பாடும் ஸ்ரீருத்ரம் சிவனைக் கள்வனாகவும் (स्तेन) காண்கிறது!
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.



2013/9/6 ramaNi <sai...@gmail.com>

ramaNi

unread,
Sep 7, 2013, 9:09:51 PM9/7/13
to santhav...@googlegroups.com
ஆம், ’ஸ்தேனானாம் பதயே நம’...
ஶ்ரீருத்ரம் சிவனை ஒப்பிடும் உருவங்களை வைத்தே சிலேடை புனையலாம் போலிருக்கிறதே?
பாராட்டுக்கு நன்றி.

அன்புடன்,
ரமணி

Shrikaanth K. Murthy

unread,
Sep 8, 2013, 4:19:24 AM9/8/13
to santhav...@googlegroups.com
சிவசிவ, அனந்த்
தங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி. இதை கவனத்தில் வைத்து இனிமேல் கவி வடிக்க முயற்சிக்கிறேன். தாங்கள் ஏதும் சொல்லாததால் நான் வடித்த்துள்ள வெண்பா பிழையில்லாமல் இருக்கிறதென்று கொள்கிறேன். அதுமட்டும் சந்தோஷம்.

Shrikaanth K. Murthy

unread,
Sep 8, 2013, 4:20:11 AM9/8/13
to santhav...@googlegroups.com

ருத்திரத்தில் "தஸ்கராணாம் பதயே நமஹ்" என்றுள்ளது. "திருடர்களுக்கெல்லாம் தலைவனே போற்றி". இதற்குப் பலவிதமாக வியாக்கிய்யானம் செய்வர்.

Balasubramanian N.

unread,
Sep 8, 2013, 2:29:36 PM9/8/13
to santhav...@googlegroups.com

தஸ்கராணாம் பதயே நமஹ்

 



2013/9/8 Shrikaanth K. Murthy <drshri...@gmail.com>

ருத்திரத்தில் "தஸ்கராணாம் பதயே நமஹ்" என்றுள்ளது. "திருடர்களுக்கெல்லாம் தலைவனே போற்றி". இதற்குப் பலவிதமாக வியாக்கிய்யானம் செய்வர்.

Balasubramanian N.

unread,
Sep 8, 2013, 2:44:52 PM9/8/13
to santhav...@googlegroups.com

முயற்சிக்கிற, முயற்சித்த;

 தப்பிக்கிற, தப்பித்த;

அனுப்பிக்கிற,  அனுப்பித்த,  அனுப்பித்தல்     :-

எனத் தற்காலமாக வேரூன்றிக்கொண்டிருக்கும் பிழைகள்.

 

முயல்கிற, முயன்ற, தப்புகிற, தப்பின/ய; அனுப்புகிற, அனுப்பின/ய; அனுப்புதல்

 என இலக்கணம்.



2013/9/8 Shrikaanth K. Murthy <drshri...@gmail.com>
 சிவசிவ, அனந்த்

தங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி. இதை கவனத்தில் வைத்து இனிமேல் கவி வடிக்க முயற்சிக்கிறேன். தாங்கள் ஏதும் சொல்லாததால் நான் வடித்த்துள்ள வெண்பா பிழையில்லாமல் இருக்கிறதென்று கொள்கிறேன். அதுமட்டும் சந்தோஷம்.

ஸ்ரீகாந்த்

Shrikaanth K. Murthy

unread,
Sep 14, 2013, 1:45:23 PM9/14/13
to santhav...@googlegroups.com
ஆற்றிற்கும் முடிக்கும் சிலேடையாக ஒரு கவி

கார்மல்கும் கீழ்சொரியும் கானிரையப் பூமேவும்
வார்மல்கும் நேயமுறும் வாராக்கால் பேனிரையும்
சீர்மல்கும் சீத்தரிக்கும் தீஞ்சுழியால் பீடிக்கும்
நீர்மையினால் முடிக்காறு நேர்
------

ஆறு
கார் மல்கும்- மழை நிரப்பும்; கீழ் சொரியும்- கீழ் நோக்கிச் செல்லும்; கான் நிரைய பூ மேவும்- வனங்கள் செறிய புவி மீதிருக்கும்.
வார் மல்கும்- நீர் மிகுந்திருக்கும்; நேயமுறும்- நன்மை பயக்கும்; வார் ஆக் கால்- மழை ஆகும் காலத்தே; பே நிரையும்- நுரை உண்டாகும்;
சீர் மல்கும்- சிறப்பைத் தரும்/ சிறந்து இருக்கும்; சீத்து அரிக்கும்- புனிதமாக்கி கழுவிச் செல்லும்; தீஞ்சுழியால் பீடிக்கும்- கொடிய சுழிகளால் பாதிக்கும்;

முடி
கார் மல்கும்- கருமை நிரைந்து இருக்கும்; கீழ் சொரியும்- மிகுந்து கீழே தொங்கும்; கால் நிரைந்து பூ மேவும்- கால்களைப் பின்னி பூவினைப் பெற்றிருக்கும்;
வார் மல்கும்- வாருவதானால்/ நீராடுவதால் நன்கு வளரும்; நேயமுறும்- எண்ணெயை உட்கொண்டிருக்கும்; வாராக்கால்- வாராதிருந்தால்;
பேன் நிரையும்;
சீர் மல்கும்- ஈர் மிகுந்திருக்கும்; சீத்து அரிக்கும்- சொறிவதனால் நமைக்கும்; தீஞ்சுழியால் பீடிக்கும்- தீய சுழிகளிருத்தால் பாதிக்கும்.

Shrikaanth K. Murthy

unread,
Sep 16, 2013, 9:19:22 AM9/16/13
to santhav...@googlegroups.com
நான் எனது சிலேடைக் காவியைச் சில நாட்களுக்கு முன்னர் இட்டேன். அதனைப் பற்றித் தங்களில் யாரொருவரும் எதுவும் சொல்லவில்லை. தயவுசெய்து தவறுகளிருந்தால் தெரிவிக்கவும். பிழையில்லாவிடின் அதையும் சொல்லவும். புதிதாகத் தொடங்கியிருக்கும் எனக்குச் சொல்லாவிட்டால் சந்தேகம் தான் அதிகமாகின்றது :)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 16, 2013, 12:59:25 PM9/16/13
to சந்தவசந்தம்

சிலேடை நன்கு அமைந்துள்ளது. பாராட்டுகள்.

நதிக்கு வாராக்கால் பேனிரையும் என்பதும், முடிக்கு, தீஞ்சுழியால் பீடிக்கும் என்பதும் மற்ற ஒப்புமைகள் போல இடண்டிற்குமாகப் பொருந்தி அமையவில்லை என எனக்குப் பட்டது.

தொடர்ந்து எழுதுங்கள்.


அனந்த்




2013/9/16 Shrikaanth K. Murthy <drshri...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Sep 16, 2013, 1:04:42 PM9/16/13
to சந்தவசந்தம்
நீர்மையினால் முடிக்காறு நேர்-  தளை தட்டல்


2013/9/14 Shrikaanth K. Murthy <drshri...@gmail.com>

Shrikaanth K. Murthy

unread,
Sep 16, 2013, 4:32:05 PM9/16/13
to santhav...@googlegroups.com
ஆஹா. எப்படியோ பிழை நுழைந்துவிட்டது. சுட்டியதற்கு மிக்க நன்றி ஐயா

"நேர்மையால் கூந் தல்நதிக்கு நேர்" என மாற்றுகிறேன்.

It is loading more messages.
0 new messages