சில வடமொழிச் சந்தங்கள்

13 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jan 1, 2026, 7:00:16 PM (7 days ago) Jan 1
to santhavasantham
https://www.youtube.com/watch?v=xwRshtxddRY

சில வடமொழிச் சந்தங்களுக்கு  எனது தமிழ்ப்பாடல்கள்

 

வித்யுன்மாலை

 

குகுகு குகுகு க: க:

8 எழுத்துகள் 16 மாத்திரைகள்

குன்றோ வெற்போ என்றே கூறும்
ஒன்றோ அங்கே வைக்கோல் போரே
அன்றோ இன்றோ என்றா னாலும்
வென்றே காட்டும் வேலன் சீரே!

 

இதனுடைய சற்றே நீண்ட வடிவம்

ராமானந்தம்

குகுகு  குகுகு குகுகு

9 எழுத்துகள்  18 மாத்திரைகள்

 முந்தும் வேலைச் சிந்தைக் கேட்கின்றாய்
செந்தீக் கொண்டைச் சேவல் கூவல் கேள்
கந்தா செந்தில் வேலா சீலா வா
செந்தேன் சிந்தும் சந்தப் பாடல்தா

வேலைச் சிந்து- கடல்பாடும் சிந்துப்பாடல்

 

ஸ்ரீ விருத்தம்

11/16

குலல குகுல லலல  க: க:

தாய்மன மோவோர் தனியெழி லாகும்
சேய்மன மோதாய் மொழியினி லாடும்
வாய்மன மோநா சொலுமுறை காட்டும்
பூமண மோயீர்ப் பதிலுள  தாமே

 

இந்த்ர வஜ்ரா

11/18

குகுல  குகுல லகுல க: க:

ஓயாது மேதாவி உலாவி வந்தான்
ஆயாது வாயாடு மராஜ கந்தான்
தேயாது வானேகு நிலாவு முண்டோ
தோயாது பாப்பாட வராது ஞானம்

 

சாலினி

11/20

குகுகு குகுல குகுல  க:க:

ஏராளம்பூ பூவையர் சூட மோகம்
பாராமல் நாம் அப்புறம் போக நோகும்
தாராளம் தான் வார்த்தைகள் கூற லாகும்
வாரா தெல்லாம் கூறுபா ராட்டு நல்கும்

 

ரதோத்தா

11/16

குலகு லலல குலகு  க க:

வண்ணமே எழிலை அள்ளுமே யடா
திண்ணமே கவிதை எண்ணமே யடா
பண்ணிலே இசையி னுன்னதம் வரும்
எண்ணியே பயனை நண்ணுவா னரோ!

 

ராமாதாரம்

10/17

குகுகு குகுகு  லலல  லலகு

காடோ மேடோ காய்ந்திடு களரதோ
ஓடோ குன்றோ குத்திடு மணலதோ
ஊடோ டும்புல்  ஒன்றிடு நிலையதோ
நாடே என்றன் தாயென உரைசெயே!

 

 

ப்ரமாவிலஸிதம்

குகுகு குலல லலல ல க:

11/16

வாராயோ மாய வடிவ ழகியே
தாராயோ பாத தரிசனமதே
பாராயோ நின்கடை விழியதனால்
தீராயோ தீய வினைபலவுமே

ஸ்வாகதம்

குலகு லலல குலல க; க:

 

வாருமும் வரவு வாழ்த்தென லாமே
பேரிலே பெரிய பேறுள, தாங்கள்
சீருடன் எளிய னேன்குடி சைக்கே
நேரிலே வருகை தந்தது பேறே!

 

உபேந்த்ர வஜ்ரா
11/17
லகுல குகுல லகுல க: க:

தயாள வாராகி பராவு கின்றேன்
வியாதி வாராத உதார மீயே
நியாய மில்லாத பதாகை வேண்டாம்
கியாதி மீதூர வரந்த ராயோ

 

 

 

 

 

 

ஸ்ரக்விணீ

12/20

குலகு குலகு குலகு குலகு

யாரடா மந்திரம் ஓதுகின் றாயிவண்
பாரடா உன்மனம் மேயுதே ஊரிலே
தேரடா தெய்வமுன் சித்தமே இல்லையே
ஓரடா ஒன்றிநீ ஓதடா உண்மையே!

 

த்ருத விளம்பிதம்

12/16

லலல குலல குலல குலகு

வருக வானர நாயக வாழியே
உருவி லோங்கிய உத்தம வாழியே
விரைவு கொண்டுள வீரிய வாழியே!
அருமை மாருதி ஆண்டவ வாழியே!

 

ப்ரமுதிதவதனா

12/16

லலல லலல குலகு குலகு

வசவு பொழிவ தேனடா மானிடா
இசைவு மொழியி லில்லையேல் வீணடா
அசைவு நினது நெஞ்சிலே இல்லையே
கசிவு கனிவு சேர்ந்திடில் நல்லதே!

 

ப்ரமிதாக்ஷாரா

12/16

லலகு  லகுல லலகு லலகு

 

வருவான் தயாள குணவான் வருவான்
புரிவான் பராவ நலமே புரிவான்
தருவான் நிதான முடனே தருவான்
ஒருபே ருதார ணமனோ லயனே

 

ஒரு பேர் உதாரண மனோ லயனே

 

ப்ரபா

லலல லலல லகுகு லகுகு

உதவி யதனை யினாமாத் தராதே
எதையு முனது புரட்டால் பெறாதே
பதவி யதனை விலைக்குத் தராதே
மதியை மமதை யினால்போக் கிடாதே!

 

குஸுமவிஸித்ரா

12/ 16

லலல  லகுகு   லலல   லகுகு

 வருவது தானா  வருவது தானா
ஒரு சிறிதேனும் முனைவது வீணா
வருவது தீதாய் வரவிடு வாயேல்
ஒருகுழி ஆழம் விழுவது திண்ணம்

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Jan 2, 2026, 8:26:10 AM (6 days ago) Jan 2
to santhav...@googlegroups.com
அற்புதம், தலைவரே.

வபமொழிச் சந்தங்களின் கோவையாகக்
கொண்டு, கவிஞர் பெருமக்கள் கவிதையாக்க
உதவும் அரிய வழிகாட்டேடு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 1, 2026, at 19:00, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAp9U0bZ0M88D_QuZ-AvrYMxpCJuqPntPu7F5yRotrHeA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jan 2, 2026, 9:53:29 AM (6 days ago) Jan 2
to santhav...@googlegroups.com
இவை சமீபத்தில் எழுதப்பெற்றவையா? முன்னர் எழுதிய பாடல்களா?

ரமணி என் நினைவில் வந்தார்.

வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Jan 2, 2026, 3:57:29 PM (6 days ago) Jan 2
to santhav...@googlegroups.com
முன்பு எழுதியவை

On Fri, Jan 2, 2026 at 8:53 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
இவை சமீபத்தில் எழுதப்பெற்றவையா? முன்னர் எழுதிய பாடல்களா?

இமயவரம்பன்

unread,
Jan 2, 2026, 5:37:33 PM (6 days ago) Jan 2
to santhav...@googlegroups.com, santhavasantham
மிகப் பயனுள்ள சந்தத் தொகுப்பு, தலைவரே!

ஓர் ஐயம்:
“ குகுல குகுல லகுல க: க:”
இங்கே கு என்பது குருவையும், ல என்பது லகுவையும் குறிப்பதை அறிகிறேன். அதுபோல், க: என்பது எதைக் குறிக்கிறது?

Siva Siva

unread,
Jan 2, 2026, 8:58:02 PM (6 days ago) Jan 2
to santhav...@googlegroups.com
In Sanskrit meters, the first letters of the 8 gaNam names are used to indicate the line vAybAdu. Any extra syllables at the end of the line are indicated by la (for laghu) and ga (for guru) letters.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jan 3, 2026, 7:56:30 AM (5 days ago) Jan 3
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you for the explanation.

GOPAL Vis

unread,
Jan 3, 2026, 11:03:46 AM (5 days ago) Jan 3
to santhav...@googlegroups.com

மிகப் பயனுள்ள இடுகை  நன்றி.

என் ஐயம்.

கீழ்க்காணும் பாடலில் இறுதி இரண்டு அக்ஷரங்கள் ல க வில் அமைந்துள்ளன அல்லவோ!

கோபால்


ரதோத்தா

11/16

குலகு லலல குலகு  க க:

வண்ணமே எழிலை அள்ளுமே யடா
திண்ணமே கவிதை எண்ணமே யடா
பண்ணிலே இசையி னுன்னதம் வரும்
எண்ணியே பயனை நண்ணுவா னரோ!

On Fri, Jan 2, 2026 at 5:30 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

சில வடமொழிச் சந்தங்களுக்கு  எனது தமிழ்ப்பாடல்கள்

 

வித்யுன்மாலை

குகுகு குகுகு க: க:

8 எழுத்துகள் 16 மாத்திரைகள்

குன்றோ வெற்போ என்றே கூறும்
ஒன்றோ அங்கே வைக்கோல் போரே
அன்றோ இன்றோ என்றா னாலும்
வென்றே காட்டும் வேலன் சீரே!

..............

ரதோத்தா

11/16

குலகு லலல குலகு  க க:

வண்ணமே எழிலை அள்ளுமே யடா
திண்ணமே கவிதை எண்ணமே யடா
பண்ணிலே இசையி னுன்னதம் வரும்
எண்ணியே பயனை நண்ணுவா னரோ!
 

.................

இலந்தை

--

Subbaier Ramasami

unread,
Jan 3, 2026, 11:41:17 AM (5 days ago) Jan 3
to santhav...@googlegroups.com
ஆமாம். ல, க என்றிருக்கவேண்டும்

இலந்தை

On Sat, Jan 3, 2026 at 10:03 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:

மிகப் பயனுள்ள இடுகை  நன்றி.

என் ஐயம்.

கீழ்க்காணும் பாடலில் இறுதி இரண்டு அக்ஷரங்கள் ல க வில் அமைந்துள்ளன அல்லவோ!

கோபால்


Reply all
Reply to author
Forward
0 new messages