கும்பகர்ணனைக் கும்பன் எனலாமா ?

25 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Oct 5, 2025, 10:13:05 PM (8 days ago) Oct 5
to Santhavasantham
அனைவருக்கும் வணக்கம்,

ராமாயணத்தில் , கும்பகர்ணனின் மகன்களில் ஒருவன் கும்பன்.

ஆனால் தமிழில் அல்லது தமிழ் மரபில் கும்பகர்ணனைச் சுருக்கமாக கும்பன் என்று அழைப்பதையும் பார்க்கிறேன்.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் தன்னுடைய "கம்பன் புதிய பார்வை" நூலில் கும்பகர்ணனைக் கும்பன் என்றே குறிப்பிட்டு எழுதுகிறார்.

இது சரியான பயன்பாடு தானா ?

நன்றி,
நிரஞ்சன் பாரதி 



Saranya Gurumurthy

unread,
Oct 5, 2025, 11:06:06 PM (8 days ago) Oct 5
to சந்தவசந்தம்
வணக்கம்.

சந்தனம் திமிர்ந்தணைந்து என்ற எண்கண் திருப்புகழில் இவ்வாறு வருகிறது.

அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே


சரியான பயன்பாடா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு எடுத்துக்காட்டு கிடைத்தது. பகிர்கிறேன்.

Regards,
Saranya

N. Ganesan

unread,
Oct 6, 2025, 6:34:17 PM (7 days ago) Oct 6
to santhav...@googlegroups.com
ஹரிகி "கம்பனின் கும்பன்" என்று 4 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

http://tamilconcordance.in தளத்தில் கம்பராமாயணத்தில் கும்பன் என்ற பெயரில் வரும் பாடல்களைத் தொகுத்து அளிக்கவும்.

NG

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAL0k%2BGJMe00piTPrDh4QnYHScxpm4ASR1DL%3DTGKXz7iteCxs0A%40mail.gmail.com.

Niranjan Bharathi

unread,
Oct 6, 2025, 8:49:57 PM (7 days ago) Oct 6
to Santhavasantham

Subbaier Ramasami

unread,
Oct 7, 2025, 9:55:24 AM (7 days ago) Oct 7
to santhav...@googlegroups.com
    கும்பன் (2)
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் - யுத்1:61 5 35/4
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு_இல் - யுத்4:641 42 43/1

 TOP
 
    கும்பனும் (2)
கும்பனும் குல சங்கனும் முதலினர் குரங்கின் - கிட்:4 12 22/1
குரங்கினுக்கு அரசும் வென்றி கும்பனும் குறித்த வெம் போர் - யுத்2:62 18 235/1

N. Ganesan

unread,
Oct 8, 2025, 7:44:17 PM (5 days ago) Oct 8
to santhav...@googlegroups.com
திருமங்கை ஆழ்வார் கும்பகருணனை கும்பன் என்று பெரிய திருமொழியில் (இரண்டாம் ஆயிரத்துள்) பாடியுள்ளார். இதுவே காலத்தால், தமிழில் கும்பன் என்ற பெயர்ப் பயன்பாட்டில் முதலாவது.

https://www.dravidaveda.org/1862/
செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்பு லாம்கடி காவில் சிறையா வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்
கும்ப னோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி
அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.

வாரீர்!, எங்கள் இராவணனுடைய பெருமை எப்படிப்பட்டது தெரியுமோ? பலதிசைகளிலுஞ் சென்று வெற்றி பெற்றுச் செம்பொன் முடிகவித்துக் கொண்டவன். அனைவரும் அவன் கீழே கைகட்டிக் காத்திருக்க வேண்டியவர்கள், அப்படி யிருக்கச் செய்தேயும், ஸீதாபிராட்டியாகிற ஒரு தெய்வப்பெண்ணைக் கவர்ந்துவந்து இவ்வசோகவனத்திலே சிறைவைத் திட்டதே அவனுக்குப் பெரிய அபராதமாகத் தலைக்கட்டிற்று. அதுவே காரணமாகக் கும்பன் நிகும்பன் முதலான பெரிய ரணவீரர்களும் மாண்டொழியலாயிற்று. இராவணன் கையிலே முன்பு தோற்றுக்கிடந்த ம்ருத்யுவானவன் அந்த வுருவத்துடன் இங்கு வரமாட்டாமல் இராமனென்னும் பெயராலே ஒரு மானிட வடிவு கொண்டுவந்து நின்று எங்கள்மேல் சரவர்ஷத்தை வர்ஷிக்கின்றான்; குற்றமற்றவர்களான எங்களது உயிரையும் கொள்ளை கொள்வீர்களோ வென்று அஞ்சுகின்றோம்; நாங்கள் எங்கள் தோல்விக்கும் உங்கள் வெற்றிக்கும் மேலெழுத்திட்டுக் கூத்தாடுகின்றோமாதலால் எங்களை விட்டொழிய வேணும் என்றார்களாயிற்று.

கூற்றம் மானிடமாய்த் தோன்றி – இராவணன் நெடுநாள் தவம்புரிந்து வரப்ரஸாதம் பெறும்போது மானிடரை ஒரு பொருளாகவே மதியாமல் அவர்களைத் தவிர்த்து மற்று யாராலும் தனக்குச் சாவு நேரிடாமை வேண்டினனாதலால் அவன் உபேக்ஷித்த மானிடத்தில் திருமால் வந்து தோன்றினனென்க. யமன்றானே இப்படி மானிடமாய் வந்து தோன்றினனாக இவர்கள் கூறுவது தங்கள் சாதி மொழிக்கு ஏற்றதாம். கூற்றம் – உடலையும் உயிரையும் வேறு வேறு கூறாக்குபவன் என்ற காரணப் பெயர். ~ ப்ர. அ.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZI0kuUy/page/16/mode/2up


On Tue, Oct 7, 2025 at 8:55 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
    கும்பன் (2)
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் - யுத்1:61 5 35/4
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு_இல் - யுத்4:641 42 43/1

 TOP
 
    கும்பனும் (2)
கும்பனும் குல சங்கனும் முதலினர் குரங்கின் - கிட்:4 12 22/1
குரங்கினுக்கு அரசும் வென்றி கும்பனும் குறித்த வெம் போர் - யுத்2:62 18 235/1
On Tue, 7 Oct, 2025, 4:04 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
ஹரிகி "கம்பனின் கும்பன்" என்று 4 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

http://tamilconcordance.in தளத்தில் கம்பராமாயணத்தில் கும்பன் என்ற பெயரில் வரும் பாடல்களைத் தொகுத்து அளிக்கவும்.

NG

On Sun, Oct 5, 2025 at 9:13 PM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
அனைவருக்கும் வணக்கம்,

ராமாயணத்தில் , கும்பகர்ணனின் மகன்களில் ஒருவன் கும்பன்.

ஆனால் தமிழில் அல்லது தமிழ் மரபில் கும்பகர்ணனைச் சுருக்கமாக கும்பன் என்று அழைப்பதையும் பார்க்கிறேன்.

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் தன்னுடைய "கம்பன் புதிய பார்வை" நூலில் கும்பகர்ணனைக் கும்பன் என்றே குறிப்பிட்டு எழுதுகிறார்.

இது சரியான பயன்பாடு தானா ?

நன்றி,
நிரஞ்சன் பாரதி 

N. Ganesan

unread,
Oct 8, 2025, 8:51:11 PM (5 days ago) Oct 8
to santhav...@googlegroups.com, Hari Krishnan
பெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி ராமாயணம் பார்த்தேன்.
" கொல்லைவிலங்கு பணிசெய்ய, மலையால் அணைகட்டி மறுகரையேறி, இலங்கை பொடிபொடியாகச் சிலைமலி செஞ்சரங்கள் செலவுய்த்து, கும்பனோடு நிகும்பனும் பட, இந்திரசித்தழிய, கும்பகரணன் பட, அரக்கராவி மாள, அரக்கர் கூத்தர்போலக் குழமணிதூரம் ஆட, இலங்கை மன்னன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிரச் சிலைவளைத்து, சரமழை பொழிந்து வென்றிகொண்ட செருக்களத்துக்"
கும்பனையும், கும்பகர்ணனையும் வெவ்வேறாகச் சொல்கிறார்.

கும்பன், நிகும்பன் : சகோதரர்கள், கும்பகர்ணன் மக்கள்.
எனவே, இந்த நான்கு பாடலில், எது நிகும்பனின் சகோதரன் கும்பன், எது கும்பகருணன் குறிக்கும் எனப் பார்க்கவேண்டும். வை.மு.கோ. போன்றோர் உரைகளின் வாயிலாக.

கொங்குவேளிர் தான் முதலில் கும்பன் என்பவனை அறிமுகஞ்செய்கிறார். பெருங்கதையில். பாஞ்சாலராயனின் நண்பன் கும்பன்.
பின்னர் திருமங்கையாழ்வார் கும்ப-நிகும்ப சோதரரைப் பாடியுள்ளார். இதே சகோதரர்களைக் கம்பரும் பாடியுள்ளார்.

கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,- உன்
செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்.

உம்பர்க்கும் வெலற்கு  அரியார்  உரவோர்  -  தேவர்களாலும்
வெல்லுவதற்கு  முடியாத   அருமையானவராகிய  பெருவலி  படைத்த;
கும்பக்   கொடியோனும்   -   கும்பன்   என்ற   பெயர்  படைத்த
கொடியவனும்;   நிகும்பனும்   -   நிகும்பன்   என்பவனும்; 


கீழே உள்ள நான்கு பாடல்களும் கும்பகர்ணனா? - ஆராய்ந்து எழுதி இருப்பர். தேடுவோம்.

On Tue, Oct 7, 2025 at 8:55 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Oct 8, 2025, 9:31:54 PM (5 days ago) Oct 8
to santhav...@googlegroups.com, Hari Krishnan

"மகன் அதிகாயன் சொன்னதைக் கேட்டு இராவணன் பெருஞ்சேனையுடன், அவனை போருக்கு அனுப்பி வைத்தான். மேலும் சிறந்த வீரர்களான, கும்பன் எனும் கொடுந்தன்மையானும், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் மகனுடைய தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்புகிறான். ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அதிகாயன் போருக்குச் செல்கிறான். அவனோடு கோடி யானைப் படையும், அதே அளவு குதிரைப் படையும் சென்றன. அதிகாயன் கவசத்தை அணிந்து கொண்டு, கையில் வில்லையும், உடை வாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்."

"இலக்குவனது ஆற்றலைக் கண்ட விபீஷணன், 'இவனால் இந்திரஜித் அழிவது உறுதி' என்று உணர்ந்து கொண்டான். தன் அண்ணன் அதிகாயன் இறந்த செய்தி கேட்டு நராந்தகன் வெகுண்டு, இலக்குவனோடு போர் செய்தான். அதைக் கண்ட அங்கதன், அவன் கையில் இருந்த வாளைப் பிடுங்கி அதனாலெயே நராந்தகனை வெட்டிக் கொன்றான். பிறகு போர்மத்தன் எனும் அரக்கன் நீலனோடு போரிட்டு இறந்து போகிறான். வயமந்தன் எனும் அரக்கனை இடபன் எனும் வானர வீரன் கொல்கிறான். கும்பன் எனும் அரக்கனோடு சுக்ரீவன் போரிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி இழுத்துக் கொன்றான். நிகும்பன் எனும் அரக்கன் அங்கதன் மீது சூலப்படையை ஏவியபோது, அனுமன் அங்கே வந்து நிகும்பனைத் தன் கையால் அறைந்து கொன்றான். மற்ற அரக்கர்கள் தோற்றுப்போய் பயந்து கொண்டு ஓடினர். இந்தச் செய்திகளையெல்லாம் கேட்டு இராவணன் எல்லையில்லாத கோபமும் வருத்தமும் அடைந்தான்."

"தந்தையிடம் கைகூப்பிக் கொண்டு சென்ற இந்திரஜித், "இங்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் நகரெங்கும் ஒரே அழுகுரல்?" என்று கேட்டான். அதற்கு இராவணன், "இந்திரஜித்! உன் தம்பிமார்களை எமன் உயிர் கவர்ந்தான். கும்பன், நிகும்பன் இவர்களோடு அதிகாயனும் விண்ணுலகுக்குச் சென்றான்" என்றான். இந்திரஜித் பற்களால் அதரத்தைக் கடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்தான். எல்லோரும் இறந்தார்களோ? என ஏங்கி நைந்தான். "கொன்றவர் யார்?" என்றான்.

"அதிகாயனைக் கொன்றவன் இலக்குவன். அடுத்து, கும்ப, நிகும்பர்களைக் கொன்றவன் அனுமன்." என்று சொல்லி, அதுவரை நிகழ்ந்தது அனைத்தையும் சொன்னான்."

பேரா. ப. பாண்டியராஜா தளம் தரும் 4 பாடல்களில், எப் பாடலில் கும்பன் என்றால் கும்பகருணன் எனப் பொருள் உள்ளது?

N. Ganesan

unread,
Oct 9, 2025, 4:03:55 PM (4 days ago) Oct 9
to santhav...@googlegroups.com
On Sun, Oct 5, 2025 at 9:13 PM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
(1) பெருங்கதையில் பாஞ்சாலராயனின் நண்பன் கும்பன். தமிழில் முதலில் கும்பன் என்ற சொல்லைக் கொங்குவேளிர் பயன்புடுத்துகிறார்.
(2) திருமங்கை மன்னன் பெரிய திருமொழியில் கும்ப-நிகும்ப சோதரரைப் பாடியுள்ளார்.
(3) கம்பர் 4 பாடல்களில் கும்பன் என்கிறார்.
ஒரு பாடல் மிகைப்பாடல், அதில் போருக்குப் பின் வந்து ராம லக்குவரைச் சந்திக்கும் ஒரு அசுரனாகக் கும்பன் உள்ளது. எனவே அதை விட்டுவிடலாம்.
ஏனை 3 பாட்டிலும், கும்பன் என்பவன் கும்பகர்ணன் மகன். எனவே, கம்பனின் கும்பன் இவன்.

மிகைப்பாடலில் கும்பன்:

கும்பன் - கம்பர் பாடல்கள்
எனவே, கும்பன் என கும்பகர்ணன் பெயரைச் சுருக்கிக் கம்பர் பாடவில்லை.

சரண்யா அவர்கள் குறிப்பிட்டதுபோல, திருப்புகழில் கும்பன் எனக் கும்பகர்ணன் வருகிறான்.
இவனை எதிர்த்து இராமனால் கொல்லப்பட்டான் என்றும் சொல்வதால், இவன் கும்பகன்னன்.
அம்ப கும்பனுங் கலங்க ... அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட
கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு

வெஞ்சினம்புரிந்து நின்று ... மிக்க கோபத்துடன் போர்க்களத்தில்
நின்று

அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே ... அம்புகளை
ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே,

20-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் போலப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

நா. கணேசன்

 

நன்றி,
நிரஞ்சன் பாரதி 



Niranjan Bharathi

unread,
Oct 9, 2025, 11:09:34 PM (4 days ago) Oct 9
to santhav...@googlegroups.com
Super Uncle.

Thanks a lot 😊🙏
Reply all
Reply to author
Forward
0 new messages