Rajja Gopalan
unread,Jul 13, 2026, 7:28:31 AM (22 hours ago) Jul 13Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Santhavasanthsm சந்தவசந்தம்
*பரமஹம்ஸர் துணை*
(பல்லவி)
பரம ஹம்ஸர்
பாதமே துணை -
ஶ்ரீ ராம க்ருஷ்ண - (பரம)
(அனுபல்லவி)
பரிவினாலே பணிவர் யார்க்கும்
பவித்ர ஞானம் அருளிடும் - (பரம)
(சரணம்)
சிரங் குனிந்து பணியும் போதென்
செருக்கு அழிந்து போகுதே!
சிந்தை யாவும் எந்தை நாமம்
சிந்தும் போதம் ஆகுதே!
வரங் கனிந்து அருள்க ! நானும்
நரேந் திரன் ஆகவே
வருகவே! குருபரா! நின்
வாசல் யானுன் தாசனே! (பரம)
—————-
🙏
*श्रीरामकृष्णगुरुस्तोत्रम्*
सर्वमार्गान् समास्थाय स्वयमेवानुभूतवान् ।
एकं सत्यमिति श्रीमान् रामकृष्णोऽवबोधितः ॥
तस्मात् तव पदद्वन्द्वे निश्चलोऽहं स्थितो गुरो ।
त्वत्प्रसादान्महामुक्तिं प्राप्नुयां भवबन्धनात् ॥
எப்பாதை ஆனாலும்
எத்திசையிற் போனாலும்
தப்பாது தனுள்ஒளிரும்
தத்வமென உணர்வித்த
அப்பா *ஸ்ரீ ராம
கிருஷ்ணா* என் ஞானகுரு!
எப்போதும் முக்தியருள்
இணயடியை சேவிப்பேன்!
(O revered Guru, Śrī Rāmakṛṣṇa! Having
followed and realized all the spiritual paths, you taught that they culminate in the one Truth. Therefore, O Guru, I remain unwavering at Your sacred feet. By Your grace, may I attain supreme liberation from the bondage of worldly existence.)
(2)
कः शक्तो मायाशक्तिं ब्रह्मज्ञानासिना छित्तुम् ।
यस्य विस्मितचित्तोऽभूत् तोतापुरीमहागुरुः ॥
शाक्तोऽपि ब्रह्मनिष्ठस्त्वं जीवन्मुक्तो निरञ्जनः ।
त्वत्पादाम्भोजमाश्रित्य मोक्षमेवाहमर्थये ॥
யாரே தன்னிஷ்ட
*தாய்* ஆன மாயவளை
வேராய்ந்து வீழ-பர
ஞானத்தால் வெட்டுவரே!
பேராயர் *தோத்தா*
*புரி* வியக்க அத்வைதச்
சாராகி மீண்டருளும்
சக்திவடி வானகுரு
சீரான *ஸ்ரீராம*
*கிருஷ்ணரருட்* சேவடியிற்
சேரேனோ? யான்முக்த
சீவனென ஆகேனோ!
தீரா! மெஞ் ஞானத்
திரள்பரம ஹம்ஸகுரு!
வாரீரோ! மலரடிகள்
வரமருளத் தாரீரோ!
(Who indeed possesses the courage and wisdom to sever even the mighty power of Māyā with the sword of Brahma-jñāna? Before such a feat, even the great preceptor Totāpuri stood amazed. Yet You remained the perfect worshipper of the Divine Mother, firmly established in Brahman, a stainless jīvanmukta. Taking refuge at Your lotus feet, I seek liberation alone.)
Rajja
13-7-2026
Dakshinēśvar / Bēlur