ஐயம்: கருவி நூல் யாவை?

65 views
Skip to first unread message

வெண்கொற்றன்

unread,
Sep 17, 2021, 11:20:53 PM9/17/21
to சந்தவசந்தம்
அன்புடை சான்றீர்...

தமிழ்ப் படிப்போர் இலக்கியப் பயிற்சிக்கு முன் கருவி நூல்களைப் பாடங்கேட்பர், அக்கருவி நூல்களாவன இலக்கண நூல்கள் மட்டுமே என்று எண்ணியிருந்தேன்.

கருவி நூல்களுள் தருக்க சாத்திரமும் அடங்கும் என்று அண்மையில் அறிந்தேன்... 

தமிழில் உள்ள தருக்க சாத்திர நூல்கள் யாவை?

அல்லது,

இவைதான் கருவி நூல்கள் என்ற பட்டியல் இருந்தால் தந்தருள்க!

நன்றி
விசய் 

Ramamoorthy Ramachandran

unread,
Sep 18, 2021, 12:17:13 PM9/18/21
to Santhavasantham
திருக்குறள் பரிமேலழகர் உரையைப் படியுங்கள்! அதுவே கருவி நூல்  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4bde11c9-97a4-4661-a14d-fe03e957cf78n%40googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 18, 2021, 12:19:57 PM9/18/21
to Santhavasantham
மேலும் நம் கவிஞர்களின் கவிதைகளே  கருவிநூல். அவற்றுக்கான பின்னூட்டங்கள்
தர்காசாத்திரங்கள்! 

Ramamoorthy Ramachandran

unread,
Sep 18, 2021, 12:20:21 PM9/18/21
to Santhavasantham
திருத்தம் :தர்க்க 

Subbaier Ramasami

unread,
Sep 18, 2021, 5:46:22 PM9/18/21
to santhavasantham
தர்க்க சாஸ்திர நூல்கள் வேறு,  தர்க்க நூல்கள்  வேறு.
தர்க்கசாஸ்திரம் பற்றி அப்பளாச்சாரி என்பவ்ர் நாவீன தர்க்க நூல் எழுதியிருக்கிறார்.  தமிழ் டிஜிடல் லைப்ரரியில் கிடைக்கிறது.

தர்க்க நூல் என்பது 19ம் நூற்றாண்டில் அதிகம் வெளியாகியிருக்கிறது. ஒரு நூலுக்கு மறுப்பாக இன்னோரு நூல் எழுதப்படுவது

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.  பிரபஓத சந்த்ரோதயதற்கு மறுப்பு,  அதற்கு மறுப்பு என நூல்கள் வெளியாகிவுள்ளன.    ஆறுமுக நாவலர் கூட அப்படி ஒரு நூல் எழுதியிருப்பதாக அறிகிறேன். இணையத்தில் தேடினால் கிடைக்கும்.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 19, 2021, 9:40:09 AM9/19/21
to Santhavasantham
வெண்பாப் பாட்டியல், பாப்பாவினம்,
சிதம்பரப் பாட்டியல், வச்சணந்தி மாலை 
கிவாஜ -கவிபாடலாம், பசுபதி-  கவிதை இயற்றிக் கலக்கு
இலந்தை - விருத்தம் பாட வருத்தம் எதற்கு 
போன்ற நூல்களும் கருவி நூல்களே !
  

வெண்கொற்றன்

unread,
Sep 20, 2021, 1:01:25 AM9/20/21
to சந்தவசந்தம்
விடை(கள்) கொடுத்த இலந்தை ஐயாவிற்கும் rawmu அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்,
விசய்

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021அன்று பிற்பகல் 7:10:09 UTC+5:30 மணிக்கு rawmu...@gmail.com எழுதியது:

Siva Siva

unread,
Sep 28, 2021, 9:47:10 AM9/28/21
to santhavasantham
கர்வம் - கருவம் 
என்று வரும். அது போலக்
கர்வி - கருவி
என்று கொண்டால்,
தமிழில் கடந்த 75-80 ஆண்டுகளில் பல நூல்கள் "கருவி நூல்கள்".
ஆனால் அவை உதவா! :)

Reply all
Reply to author
Forward
0 new messages