4 views
Skip to first unread message

Subbaraman NV

unread,
Sep 12, 2021, 5:19:56 AM9/12/21
to santhav...@googlegroups.com
12-09-2021-ல் நடைபெற உள்ள மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு-2021 உலக சாதனை நிகழ்ச்சி

சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா
11-9-2020முதல் மகாகவி பாரதியைப் போற்றும் விதத்தில் 100 தொடர் நிகழ்வுகளை நடத்தி

மகாகவி பாரதி
நினைவு நூற்றாண்டு - 2021ல் நிறைவு நிகழ்வை
வரும் செப்டம்பர் 12ம் தேதி குவியம் வழியாக
பத்துக்கும் மேற்பட்ட அமர்வுகளாக பிரித்து நடத்துகிறது.
பட்டியலில் மாற்றங்கள் வரலாம்.

பட்டியலில் உள்ளவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

அமர்வு-5பகல்13-30 மணி

நிகழ்ச்சி அமைப்பு:
நீலகண்ட தமிழன்

வரவேற்புரை:
கவிஞர் முத்துராஜா

தலைமை:
முனைவர் எம்.கே.ராஜ்குமார்
சென்னை .

பங்கேற்கும் கவிஞர்கள்

1  கவிஞர் ஜோ.லூசியா வேல்முருகன்

2  கவிஞர் சி.பாலகுமார் திருச்சி

3  கவிஞர் பழனிதுரை தருமபுரி

4  கவிஞர் வின்சென்ட் பிரபு

5  கவிஞர் வி.இலட்சுமி தி. மலை

6. கவிஞர் இரா.உமையாள் திண்டுக்கல் ✅

7. முனைவர்
தனராசு திண்டுக்கல் ✅

8 கவிஞர் வை.சிதம்பரம் ஆசிரியர்

9.கவிஞர் என்.வி.சுப்புராமன் சென்னை

10. கவிஞர் மா.வேல்முருகன் திருத்தங்கல்

11 கவிஞர் முத்துசாமி 4ஆம ஆண்டு பிஈ

12 கவிஞர் இரா.சதீஷ்குமார்

நன்றி உரை:

My poem.
சுற்றி நில்லாதே போ பகையே!
முனைவர் என் வி சுப்பராமன்
12/1045, ஜீவன் பீமா நகர்
சென்னை 600101-
9840477552

கடல்சூழ் உலகைத் தமிழால் இணைப்போம்
கவிதைச் சிறப்பால் வானம் அளப்போம்!
வெற்றிவடிவேலன் அவன் வீரந்தனைப் புகழ்வோம்
பகையைச் சுற்றிநில்லாமல் அகற்றியே வாழ்வோம்!
துள்ளிவரும் வேலதனை கரம்கூப்பி வணங்குவோம்
எள்ளிநகையாடும் வீணர்களைத் துறத்துவோம்! 6

எம் பாரதியை இறைவனாய் ஏற்றவன் நான்
வீட்டைவிட்டுப் புறப்படுகையிலே
என் கரம்பிடித்து அழைத்துச் சென்று
மீண்டும் அழைத்து வரும் அன்புத் தந்தை அவன்!
வேண்டும் நேரம் எனைக் காத்திடும் தோழன் அவன்!
அறிவை வளர்த்துவிடும் பெருமைமிகு ஆசான் அவன்!     12

தமிழன்னையின் காலடியில் வாழ்ந்தவன் என் பாரதி
தமிழன்னைக்கு மகுடம் சூட்டியவன் என் பாரதி!
தமிழ் மொழிப்பற்றை ஊட்டியவன் என் பாரதி!
தமிழ்நாட்டின் பெருமைதனை பறைசாற்றியவன் பாரதி!  16
 
பகைவனுக்கு அருளப் பாடியவன் பாரதி
துள்ளி வரும் வேலதனைக் கையில் பிடித்தவன் பாரதி
பள்ளி செலும் பாலனுக்கு கல்வி தருபவன் பாரதி
அள்ளிச்சென்றே அறிவை வளர்ப்பவன் பாரதி! 20

பகையெங்கு இருந்தாலும் மாய்ப்பவன் பாரதி
புகையகற்றி வெளிச்சம் தருபவன் பாரதி
நகைகளாய் அழகினை அளிப்பவன் பாரதி
மிகையெனும் சொல்லிற்கு இலக்கணமாம் பாரதி!       24
(மிகை=மேன்மை)

நாரணன் அளித்த கீதையின் சாரம்
பாரதிப் பாடலில் தீர்க்கமாய்ப் பார்த்தேன்
நாட்டைப் பாடினான், வீட்டைப் பாடினான்
நாளும் வாழும் முறைமையைப் பாடினான்
மண்ணைப் பாடினான் விண்ணைப் பாடினான்
மனிதம் சிறக்கும் மாண்பினைக் காட்டினான்
காக்கையைப் பாடினான் குருவியைப்பாடினான்
யாக்கையின் பெருமையைநிறைவுறப் பாடினான்.! 32
   
சூதும் வாதும்,
பொறாமையும், துராசையும் - எனைச்
சுற்றியுள்ளப் பகையெனக் கொண்டேன்!
நாட்டில் லஞ்சமும்  ஊழலும் பகையெனப் பார்த்தேன்
உலகில் வறுமையும், வேலை இன்மையும்
பகையெனக் கண்டோம்
சுற்றிநில்லாதே போ பகையே
துள்ளி வருகுது வேல்! 40

--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Kaviyogi Vedham

unread,
Sep 12, 2021, 11:02:38 AM9/12/21
to santhavasantham
அபாரம் ஸ்வாமி. வேகமும் எழுச்சியும் மின்னுகின்றன வாழ்க
 யோகியார்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHW_U06ufMJOs6V%2BQTyvcBT_KFoJxNYD5Oe51Q-UtLikLa69-g%40mail.gmail.com.

Subbaraman NV

unread,
Sep 12, 2021, 7:28:53 PM9/12/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி யோகியார்.
முனைவர் என் வி சுப்பராமன்
Reply all
Reply to author
Forward
0 new messages