இல்லா திருக்கும் எழில்

26 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 19, 2026, 11:38:02 AM (3 days ago) Mar 19
to santhavasantham
image.png

இந்தப் படத்திற்கு ஒரு வெண்பா எழுதுக!

இலந்தை

Siva Siva

unread,
Mar 19, 2026, 12:14:12 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com

2026-03-19

படம் பார்த்துப் பாடல் (dawn or dusk scene at a lake shore in winter)

----------------

(வெண்பா)

பாருமடி வானம் படர்சடையில் பாய்கங்கை

நீருடையான் கூடார்தம் நீள்மதிலெய் - மேருமலை

வில்லான் நிறம்காட்ட விண்ணுயர்ம ரத்திலிலை

இல்லா திருக்கும் எழில்.

பதம் பிரித்து:

பாரும் அடிவானம், படர்சடையில் பாய்கங்கை

நீர் உடையான், கூடார்தம் நீள்-மதில் எய் - மேருமலை

வில்லான் நிறம் காட்ட, விண் உயர்-மரத்தில் இலை

இல்லாதிருக்கும் எழில்.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Mar 19, 2026, 12:17:02 PM (3 days ago) Mar 19
to சந்தவசந்தம்
இலையுதிர்ந்த காலத்தும் ஏரிக் கரையில் 
நிலையுயர்ந்து  காணுமரம்  நேர்த்தி - கலையேதும் 
கல்லாத பேரின் கனிந்தநெஞ்சாய், மாசேதும் 
இல்லா திருக்கும் எழில்!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAwNB0F_HCFTVWHkLrTT2-2Q%3DSCi1qo0Xa2Cojx_ArXzQ%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Mar 19, 2026, 12:55:50 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
மலர்வானின் கீழ்ப்புறத்து மன்னு மரமும்
புலர்காலைப் போதில் பொலியக் - கலையார்வ
நீட்சி மனத்தே நிழற்படமாய்க் காண்கையில்
வேட்டுவ தொன்றுளதோ வேறு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 19, 2026, at 21:47, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Mar 19, 2026, 8:18:15 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com, santhavasantham
அலையற்ற ஏரி கலையற்ற ஞாயி(று)
இலையற்ற வான்மரங்கள் யாவும் - உலகத்தே
எல்லா இயல்பும் இழந்தும் குறைவொன்றும்
இல்லா திருக்கும் எழில்.

- இமயவரம்பன் 

Rajagopalan Soundararajan

unread,
Mar 19, 2026, 8:20:55 PM (3 days ago) Mar 19
to சந்தவசந்தம்

கான வெளியில் கருக்கல் விரிப்பினில்

மோனத் திரையில் மொழிந்ததோ- வானிலோர்

ஓவியமாய் ஒய்யார ஒற்றை மரமொன்றைக் 

காவியம் தீட்டிய கை!

ஸௌந்தர் 

Siva Siva

unread,
Mar 19, 2026, 8:57:30 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
/ கலையற்ற ஞாயி(று)  /

சந்திரனின் அமிசங்களைக் கலை என்பர்.
சூரியனுக்கும் அச்சொல் பொருந்துமா?

வி. சுப்பிரமணியன்

GOPAL Vis

unread,
Mar 19, 2026, 9:17:38 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
அன்றுநான் ஆர்ப்பரித்தேன் அத்தனைச் செல்வமுண்டே
இன்றுநான் பட்டறிந்தேன் எல்லாங்க ழன்றே
நிலைகுலைந் தில்லேன் நிமிருவேன் நாளை
இலையிலாக் காலம் இது! 

கோபால்
[20/03/2026]

GOPAL Vis

unread,
Mar 19, 2026, 9:38:50 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும்.முன்னிட்ட வெண்பாவில் ஒரு திருத்தம்.

அன்றுநான் ஆர்ப்பரித்தேன் அத்தனைச் செல்வமுண்டே
இன்றுநான் பட்டறிந்தேன் எல்லாங்க ழன்றே
நிலைகுலைந் தில்லேன் நிமிர்ந்தே இருப்பேன்
இலையிலாக் காலம் இது! 

கோபால்
[20/03/2026]

Parthasarathy S

unread,
Mar 19, 2026, 9:55:07 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
ஏரி அருகிருக்க எட்டும் வளமிருக்கப்
பாரில் இலையிழந்த பாடுகாண் - வேரில்
இருக்கும் வினையே எழுந்துமுகங் காட்டும்
பரிவுடன் பார்த்துப் பழகு

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி,பெங்களூர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Subbaier Ramasami

unread,
Mar 19, 2026, 9:57:59 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
சொல்லா திருக்கும் சுவட்டில் கவியுண்டு
நில்லாத ஓட்ட நிலையுண்டு  - வெல்லாமல்
வெல்லும் வகையுண்டு, வித்தகமாய்க் காண்கயிங்கே

இல்லா திருக்கும் எழில்

இலந்தை

--

Arasi Palaniappan

unread,
Mar 19, 2026, 10:16:51 PM (3 days ago) Mar 19
to சந்தவசந்தம்

Ram Ramakrishnan

unread,
Mar 19, 2026, 10:32:18 PM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
எல்லா வெண்பாக்களும் அருமை. முத்தாய்ப்பாகத் தலைவரின் வெண்பா மிக அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 20, 2026, at 07:28, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Parthasarathy S

unread,
Mar 20, 2026, 12:07:55 AM (2 days ago) Mar 20
to சந்தவசந்தம்
அருமை அருமை

Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 12:35:25 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

உதித்தும் மறைந்தும் ஒளிர்பரிதி ஓட

நதிபோல் ஒழுகுமே நாளும்- முதிர்வால்

இலையுதிர்ந் தாலும் எழிலாய்த் தொடரும்

வலையெனுமிப் பூவுலக வாழ்வு. 

—- சத்ய வேழன் H சாயி கணேசன்
20-03-2026

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 20, 2026, 1:20:04 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
சொல்லாம லின்பஞ் சுவைத்துப் பகிர்வதென்போற்
கல்லாருக் கெட்டாக் கலை!
கோபால்

On Fri, Mar 20, 2026 at 7:28 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
சொல்லா திருக்கும் சுவட்டில் கவியுண்டு
நில்லாத ஓட்ட நிலையுண்டு  - வெல்லாமல்
வெல்லும் வகையுண்டு, வித்தகமாய்க் காண்கயிங்கே
இல்லா திருக்கும் எழில்

இலந்தை

On Thu, Mar 19, 2026 at 9:38 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
மன்னிக்கவும்.முன்னிட்ட வெண்பாவில் ஒரு திருத்தம்.

அன்றுநான் ஆர்ப்பரித்தேன் அத்தனைச் செல்வமுண்டே
இன்றுநான் பட்டறிந்தேன் எல்லாங்க ழன்றே
நிலைகுலைந் தில்லேன் நிமிர்ந்தே இருப்பேன்
இலையிலாக் காலம் இது! 

கோபால்
[20/03/2026]

--

KKSR

unread,
Mar 20, 2026, 1:21:38 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
எண்ணக் கனவுகளில் எல்லை கடந்திட்டு
வண்ணம் பலகாணும் வாழ்விதனில் - தொல்லைமறக்க
நில்லாது நித்தம் நிமிருநடை கூட்டிடுதே
இல்லா திருக்கும் எழில்!

~ சுரேஜமீ
20.)3.2026 காலை 09:20

---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

On Thu, 19 Mar 2026 at 9:08 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
image.png

இந்தப் படத்திற்கு ஒரு வெண்பா எழுதுக!

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAwNB0F_HCFTVWHkLrTT2-2Q%3DSCi1qo0Xa2Cojx_ArXzQ%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Mar 20, 2026, 1:25:34 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
திருத்தப்பட்டது....!

எண்ணக் கனவுகளில் எல்லை கடந்திட்டு
வண்ணம் பலகாணும் வாழ்விதனில் - திண்ணமுடன்
நில்லாது நித்தம் நிமிருநடை கூட்டிடுதே
இல்லா திருக்கும் எழில்!

---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

Swaminathan Sankaran

unread,
Mar 20, 2026, 1:46:30 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
ஆழமான கருத்து,
அருமையான கவிதை.

சங்கரன் 

On Fri, Mar 20, 2026 at 7:28 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

--
 Swaminathan Sankaran

Govindaraju Arunachalam

unread,
Mar 20, 2026, 8:02:30 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

அழகின் சிறப்பு 

அழகின் சிறப்பை அறிவோர் சிலரே

பழகின் சிறப்பாய்ப் பருகிட லாகுமே

எல்லாம் அவன்செயல் என்க சிறுமாசும்

இல்லா திருக்கும் எழில்.

கருவூர் இனியன்.

இமயவரம்பன்

unread,
Mar 20, 2026, 5:25:03 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சூரியகலை என்று எங்கோ படித்ததுபோல் ஞாபகம்.

ஒளியற்ற ஆதவன் - என்று மாற்றுகிறேன்.

நன்றி!

Rajagopalan Soundararajan

unread,
Mar 20, 2026, 7:21:01 PM (2 days ago) Mar 20
to சந்தவசந்தம்

சூர்யகலா என்பது ஒரு பாரம்பரியமான வடநாட்டு  இனிப்பு வகையாகும். 

இது பார்ப்பதற்கு சோமாஸ் (ஸமோஸா) போன்றே இருந்தாலும், இதன் வட்டமான வடிவம் (சூரியனைப் போன்றது) மற்றும் சாறு நிறைந்த தன்மையால் தனித்துவம் பெறுகிறது. 

தேடியதில் கிடைத்தது. 

இமயவரம்பன்

unread,
Mar 20, 2026, 9:32:52 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு மிக்க நன்றி, திரு. ஸெளந்தர்! 

Ram Ramakrishnan

unread,
Mar 20, 2026, 10:52:45 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
சூரியகலா, சந்திரகலா என்ற இருவகை இனிப்புப் பண்டங்களையும் களிப்புடன் உண்டதாக நினைவு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 21, 2026, at 04:51, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages