குடுமி என்பது இந்தியாவில் 20-ம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கல்லூரிக் கல்வி பெருகியதால் மறையலாயிற்று. பாரம்பரியமான உடை, தோற்றம் கடைப்பிடிப்போரிடம் இன்றும் காணலாம். 19-ம் நூற்றாண்டின் புகைப்படங்கள் தரும் செய்தியும் இதுதான். குடுமி என்னும் சொல்லினின்றும் தோன்றிய, மருவிய சொற்களே பாரதம் முழுமையும் திராவிட, இந்தோ-ஆரிய மொழிகள் பேசுவோரிடம் புழங்குகின்றன. The ancient custom of kuḍumi was seen amongst all Indians until the 20th century. kuḍumi and its derivatives are used all over India in both Dravidian and in Indo-Aryan language families. Hence, it is an ancient substratum element of Dravidian in India that makes "India as a Linguistic area" (M. B. Emeneau's concept). kuḍumi > cūḍā, CDIAL 4883 topknot/tuft on head.
There are several species of birds with long plumes on their heads. In sangam literature and in villages even now, their names starts with "kuḍumi" as a prefix. Here is Akananuru 290 poem which starts with "kuḍumik kokku" family. kuḍumik kokku = Little Egret (Egretta garzetta)
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது.
அகநானூறு 290
- நக்கீரர்
குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
இருஞ்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய
கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர்,
நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசையாது, [05]
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம்கண் பெண்ணை அன்புற நரலும்
சிறுபல் தொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்
கழிசேர் புன்னை அழிபூங் கானல்,
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் [10]
மணவா முன்னும் எவனோ, தோழி?
வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
தென்திரைப் பரப்பின் தொண்டி முன்துறைச்,
கரும்புஉண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணிஏர் மாண்நலம் ஒரீஇப், [15]
பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே?
பேரா. ப. பாண்டியராஜாவின் அடிநேர் உரை:
http://tamilconcordance.in/SANG-17A.html#290உச்சிக்குடுமியையுடைய பசிய காலையுடைய பெட்டைக் கொக்கானது,
கரிய குழைவான சேற்றில் விடியற்காலத்தில் வேட்டைக்குச் சென்ற
கொழுத்த மீன்களை உணவாகக் கொண்ட புன்மையான தலையையுடைய சிறுவர்களின்
நுண்மையான நூலிலாலான அழகிய வலையில் தனது சேவல் கொக்கு அகப்பட்டுக்கொண்டதாக,
தனியே இருக்கும் பொழுது மெல்லும் இரையினைத் தின்னாமல்
வருந்தியிருக்கும் தன் குஞ்சினைத் தழுவிக்கொண்டு விரைவாக
அழகிய இடத்தில் நிற்கும் பனைமரத்தில் இருந்துகொண்டு அன்புதோன்ற ஒலியெழுப்பும்
சிறிய பலவான தொன்மையான குடிகளைக் கொண்ட கடற்கரையையுடைய நம் தலைவன்
கழியைச் சேர்ந்த புன்னையின் மிகுதியான பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலையில்
அன்பு குறையாத நெஞ்சத்துடன் தனியாக வந்து
நம்மிடம் உறவுகொள்வதற்கு முன்பாக, இது எப்படி ஆயிற்று?
வெண்ணிறக் கொம்புகளையுடைய யானையையும் போரில் வெற்றியையும் உடைய குட்டுவனின்
தெளிவான அலைகளையுடைய பரப்பினையுடைய தொண்டி என்னும் துறைமுகத்தின் பக்கத்தில்
வண்டுகள் தேனை உண்ணுவதற்காக மலர்ந்த பெரிய குளிர்ச்சியான நெய்தல் பூவின்
நீலமணியைப் போன்ற மாண்புற்ற அழகிய நிறத்தினை நீங்கி
பொன் போன்ற நிறத்தினைக் கொண்டன என் கண்கள் - (இது எப்படி ஆயிற்று?)