|
|
கவின்மிகு குறுஞ்சிநிலம் கண்கவர் மலைத்தொடர்கள்
... கருப்பொருள் தெய்வமெனக் கந்தனைக் காணு(ம்)மக்கள்
கவர்ந்திடும் மலர்களங்கே காந்தளும் குறுஞ்சியென்பர்
... காட்டினைப் போலுமங்கே கரடியும் புலியுமுண்டு
தவஞ்செயும் முனிவர்போல் சஞ்சலம் ஏதுமில்லாத்
... தண்மிகும் அருவியதைத் தழுவிடும் நீர்நிலைகள்
அவனியில் கண்டறியா ஆநிரைக் கூட்டமங்கே
... அழகுறப் பரந்துநிற்றல் விழிநிறை காட்சியென்பேன் (1)
|
|
அறிகிலேன் குறுஞ்சிதன்னில் ஆநிரை கண்டருண்டோ ... ஆயினென் மனத்திரையில் நிழலெனத் தோன்றுமதே
இறைவனின் கருணையென்பேன் இதமுடன் வருடு(ந்)தென்றல்
... எழிலொடு மயிலுமங்கே தோகையை விரித்தலாகும்
மறுபுறம் பார்வைசெல்ல மற்றொரு காட்சிகண்டேன் ... மருதமாம் மரக்கிளையில் மகிழ்ந்தவன் சாய்ந்திருந்தான்
சிறியவன் இடுப்புசுற்றிச் சிறியதாய் வேட்டியொன்று ... சிரமதைச் சூழ்ந்திருக்கும் துணியினால் மகுடமொன்று (2)
|
] |
|
|
முகமதில் எழிலொளிர மொய்த்திடு தரளமென ... முல்லையின் பூக்களவன் முகிழ்த்திடு புன்னகையே
மகபதி வந்தனனோ நிகழ்விதும் நிசமாமோ ... மனமொழி மெய்யதனால் வருணனை செயலாமோ
திகைத்திடு சமயமதில் சிறுவனின் குழலினிசை ... திரையெனத் திரளுமங்கே நெய்தலின் நீரையொப்ப
இகபரம் தேவையில்லை இவனிசை ஒன்றிருந்தால் ... இக்கணம் எனைமறந்தேன் ஈசனின் வலைவிழுந்தேன் (3)
|
|
இரவுடன் பகலெனவாய்ப் பொழுதினைப் படைத்தவனோ இன்புறும் குழலிசையில் இகத்தினை மறந்தனனோ
அருகினில் புல்மேயும் ஆநிரைக் கூட்டமதும்
அருஞ்சுவை எனவெண்ணி அதிகமாய் உண்டனவோ
வரிசையில் புறப்பட்டு வான்செலும் புட்கூட்டம்
மயங்கிடக் குழலிசைத்து மாதவன் வந்தனனோ
துரிதமாய்த் தண்டிக்கத் தூண்பிளந்(து) ஆட்கொண்டத்
.தூயவன் இவனென்ற துடிப்பினில் எனையிழந்தேன் (4)
|
|
|
|
இதுவரைக் குழலிசைத்தே இன்னிசை மழைபொழிந்தோன்
... இடுப்பினில் குழல்முடிந்தான் இருப்பவர் அறியான்போல்
செதுக்கிய சிலையைப்போல் சிந்தனை யற்றிருந்தேன்
... சிறியவன் எண்ணமறியாத் திகைப்பினில் மூழ்கிநின்றேன்
புதுநிலை அடைந்திடவோ புண்ணியன் விழியெறிந்தான்
... புன்னகை இதழ்விரித்தான், “புரிந்ததா” என்றதொப்ப
பதைத்திடும் உணர்வுமேவப் பாலையின் வறட்சிகொண்டேன்
... படைத்தவன் அருகிருந்தான் நடிப்பினில் மயங்கிநின்றேன். (5)
|
|
ஐவகை நிலங்கள்சூழ் அவனியை ஆள்பவனே ... ஆநிரை சூழவந்தான் அன்புடன் பண்ணிசைத்தான்
மெய்வழி அறிதலற்றேன் மென்மையாய் விதைவிதைத்தான்
... விண்வழி ஏகாதாய் என்மனம் ஆக்ரமித்தான்
கையிலே குழலெடுத்தான் கனிவுடன் பாட்டிசைத்தான்
... கடைவிழி காட்டியவன் திரும்பினான் வழிநடந்தான்
பையவே நிலையுமீள, படைத்தவன் உளத்தமைத்த
... பாத்தியில் உழதலானேன் பக்தியெனும் ஏரினாலே (6)
|
|
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtjnb_HTVafQbgvNjBFEM5WNGJ2NmnzcWr7x64t1nYuu4A%40mail.gmail.com.
On May 26, 2026, at 17:22, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
குலங்காக்கும் கண்ணன் குழல்காட்ட, ஐந்துநிலங்காட்டிப்
பண்ணிசைத்தீர் நீர்!
On Tue, 26 May 2026, 7:56 pm Ram Ramakrishnan, <ramr...@gmail.com> wrote:
“குழலோசை”
<image.jpeg>
கவின்மிகு குறுஞ்சிநிலம் கண்கவர் மலைத்தொடர்கள்
... கருப்பொருள் தெய்வமெனக் கந்தனைக் காணு(ம்)மக்கள்
கவர்ந்திடும் மலர்களங்கே காந்தளும் குறுஞ்சியென்பர்
... காட்டினைப் போலுமங்கே கரடியும் புலியுமுண்டு
தவஞ்செயும் முனிவர்போல் சஞ்சலம் ஏதுமில்லாத்
... தண்மிகும் அருவியதைத் தழுவிடும் நீர்நிலைகள்
அவனியில் கண்டறியா ஆநிரைக் கூட்டமங்கே
... அழகுறப் பரந்துநிற்றல் விழிநிறை காட்சியென்பேன் (1)
அறிகிலேன் குறுஞ்சிதன்னில் ஆநிரை கண்டருண்டோ
... ஆயினென் மனத்திரையில் நிழலெனத் தோன்றுமதே
இறைவனின் கருணையென்பேன் இதமுடன் வருடு(ந்)தென்றல்
... எழிலொடு மயிலுமங்கே தோகையை விரித்தலாகும்
மறுபுறம் பார்வைசெல்ல மற்றொரு காட்சிகண்டேன்
... மருதமாம் மரக்கிளையில் மகிழ்ந்தவன் சாய்ந்திருந்தான்
சிறியவன் இடுப்புசுற்றிச் சிறியதாய் வேட்டியொன்று
... சிரமதைச் சூழ்ந்திருக்கும் துணியினால் மகுடமொன்று (2)
]
<image.jpeg>)
<image.jpeg>முகமதில் எழிலொளிர மொய்த்திடு தரளமென
... முல்லையின் பூக்களவன் முகிழ்த்திடு புன்னகையே
மகபதி வந்தனனோ நிகழ்விதும் நிசமாமோ
... மனமொழி மெய்யதனால் வருணனை செயலாமோ
திகைத்திடு சமயமதில் சிறுவனின் குழலினிசை
... திரையெனத் திரளுமங்கே நெய்தலின் நீரையொப்ப
இகபரம் தேவையில்லை இவனிசை ஒன்றிருந்தால்
... இக்கணம் எனைமறந்தேன் ஈசனின் வலைவிழுந்தேன் (3)
இரவுடன் பகலெனவாய்ப் பொழுதினைப் படைத்தவனோ
இன்புறும் குழலிசையில் இகத்தினை மறந்தனனோ
அருகினில் புல்மேயும் ஆநிரைக் கூட்டமதும்
அருஞ்சுவை எனவெண்ணி அதிகமாய் உண்டனவோ
வரிசையில் புறப்பட்டு வான்செலும் புட்கூட்டம்
மயங்கிடக் குழலிசைத்து மாதவன் வந்தனனோ
துரிதமாய்த் தண்டிக்கத் தூண்பிளந்(து) ஆட்கொண்டத்
.தூயவன் இவனென்ற துடிப்பினில் எனையிழந்தேன் (4)
<image.jpeg>r
<image.jpeg>
இதுவரைக் குழலிசைத்தே இன்னிசை மழைபொழிந்தோன்
... இடுப்பினில் குழல்முடிந்தான் இருப்பவர் அறியான்போல்
செதுக்கிய சிலையைப்போல் சிந்தனை யற்றிருந்தேன்
... சிறியவன் எண்ணமறியாத் திகைப்பினில் மூழ்கிநின்றேன்
புதுநிலை அடைந்திடவோ புண்ணியன் விழியெறிந்தான்
... புன்னகை இதழ்விரித்தான், “புரிந்ததா” என்றதொப்ப
பதைத்திடும் உணர்வுமேவப் பாலையின் வறட்சிகொண்டேன்
... படைத்தவன் அருகிருந்தான் நடிப்பினில் மயங்கிநின்றேன். (5)
ஐவகை நிலங்கள்சூழ் அவனியை ஆள்பவனே
... ஆநிரை சூழவந்தான் அன்புடன் பண்ணிசைத்தான்
மெய்வழி அறிதலற்றேன் மென்மையாய் விதைவிதைத்தான்
... விண்வழி ஏகாதாய் என்மனம் ஆக்ரமித்தான்
கையிலே குழலெடுத்தான் கனிவுடன் பாட்டிசைத்தான்
... கடைவிழி காட்டியவன் திரும்பினான் வழிநடந்தான்
பையவே நிலையுமீள, படைத்தவன் உளத்தமைத்த
... பாத்தியில் உழதலானேன் பக்தியெனும் ஏரினாலே (6)
<image.jpeg>
அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtjnb_HTVafQbgvNjBFEM5WNGJ2NmnzcWr7x64t1nYuu4A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYjAx1DrZTr9i6UzziE9vOEdorxYFhZ6benKYHF-OTG3Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5CE6CE02-13CD-449E-83A1-F84F5C705FD2%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-LNd6XhP5wZQPjJma_9MU-hb6%2BaRLayUfHQbuf9guP%2BJA%40mail.gmail.com.
On May 26, 2026, at 23:07, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
அருமை!அனந்த்
On Tue, May 26, 2026 at 2:56 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
“குழலோசை”
<image.jpeg>
கவின்மிகு குறுஞ்சிநிலம் கண்கவர் மலைத்தொடர்கள்
... கருப்பொருள் தெய்வமெனக் கந்தனைக் காணு(ம்)மக்கள்
கவர்ந்திடும் மலர்களங்கே காந்தளும் குறுஞ்சியென்பர்
... காட்டினைப் போலுமங்கே கரடியும் புலியுமுண்டு
தவஞ்செயும் முனிவர்போல் சஞ்சலம் ஏதுமில்லாத்
... தண்மிகும் அருவியதைத் தழுவிடும் நீர்நிலைகள்
அவனியில் கண்டறியா ஆநிரைக் கூட்டமங்கே
... அழகுறப் பரந்துநிற்றல் விழிநிறை காட்சியென்பேன் (1)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2ON1tsuzTm92jq1dkpu4K_Ph22-K1ub_e6euw3UG_ecQ%40mail.gmail.com.
மேகராகக் குறிஞ்சி (நீலாம்பரி); அந்தாளிக் குறிஞ்சி (ஶாமா)
ஸௌந்தர்
On May 28, 2026, at 03:07, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D30CE1B1-9AC6-4FAA-9C74-149333B70DF2%40gmail.com.