உ
ஆதார மானசிவ போதம்நீ நாதம்நீ
அருள்வெளி யான ஒளியே
அபயகர வரமுநீ ஆனந்த வல்லிநீ
அடைக்கலந் தரும் அம்மணி
வேதாவி லாசினி மோதாதி காரணி
விடையருட் சுடருன் விழியே
விதவித மானவடி வானபுவ னாதியதி
காரிநீ மாயை எனவே
பூதாதி நாமகுண ரூபவிடயங் கடந்த
பூரணி ஞான மணியே
புத்திமனவ் யாபார சுத்தமருள் வாய்நீயே
புவனம் கடந்த கனியே
வாதாக ஏதுயினி தோதான வேளையே
வாழ்வுக் குகந்த வழியே
வாரிநீ திருப்பட்டூர் வாசினி ஸ்ரீசக்தி
வாணி விசா லாட்சியே
மீ. ரா
9-8-2025