தாலாட்டு

239 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 23, 2024, 8:31:19 PM7/23/24
to santhav...@googlegroups.com
ஸ்ரீவள்ளி தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

அல்லிமலர் தான்மலரும் அழகான மாலையிலே
மல்லிநிறை தொட்டிலிலே வந்துறங்கு வள்ளியம்மா 1

தரமான தந்தத்தில் தந்தைசெய்த தொட்டிலிலே
வரமாக வந்தவளே வந்துறங்கு வள்ளியம்மா 2

வள்ளிமலைக் காட்டினிலே வந்துதித்த கண்மணியே
பிள்ளைமதி வந்துதித்தான் பெண்ணரசி தாலேலோ 3

கனவினிலே வேலேந்தும் காங்கேய னைக்கண்டு
மனம்மகிழ வந்துறங்கு வள்ளியம்மா தாலேலோ 4

ஆராரோ ஆரிரரோ அழகான வள்ளியம்மா
ஆராரோ ஆரிரரோ ஆருயிரே தாலேலோ  5

சவ்வாது மணம்வீசும் சந்தனக் காட்டரசி
செவ்வாயில் பாலுண்டு செல்வமே வந்துறங்கு 6

நள்ளிரவில் கானகத்தில் நரியூளை இடும்முன்னே
வள்ளியம்மா வந்துறங்கு வான்நிலவே தாலேலோ 7

உனைக்காணத் தாரகைகள் ஒளியோடு வந்தனவே
தினைக்காக்க பிறந்தவளே திருமகளே தாலேலோ 8

தேன்மிகுத்த மலர்சூடும் தெய்வம்நீ வள்ளயம்மா
மான்வயிற்றி லேபிறந்த மாமயிலே தாலேலோ 9

ஆராரோ ஆரிரரோ அழேல்அழேல் வள்ளியம்மா
ஆராரோ ஆரிரரோ ஆணிமுத்தே தாலேலோ 10 

இன்னுமெனச் சிந்தனையே இன்னமுதே வள்ளியம்மா 
என்னுயிரே கண்வளராய் ஏந்திழையே தாலேலோ 11

கோலோடு தினைக்காக்கும் குறமகளே வந்துறங்கு
ஆலோல மேபாடும் ஆரமுதே தாலேலோ 12

கண்வளராய் கண்மணியே கானகத்து மான்மகளே
கண்வளராய் பொன்மயிலே கனியமுதே தாலேலோ 13

ஏட்டறிவே தானறியா ஏழைகளே வாழுகிற
காட்டினிலே வளரவந்த கனியமுதே தாலேலோ 14

ஆராரோ ஆரிரரோ அதிரூப சுந்தரியே
ஆராரோ ஆரிரரோ அஞ்சுகமே தாலேலோ 15


Kaviyogi Vedham

unread,
Jul 23, 2024, 8:39:54 PM7/23/24
to santhav...@googlegroups.com
சப்பாஷ்.. நன்று,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAEZ19QySQERw0wEGT32FgYsvQg8UyPiQezKEOv4Mg5AJwg2j%2BA%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jul 23, 2024, 8:50:13 PM7/23/24
to santhav...@googlegroups.com
சிறப்பு
      —தில்லைவேந்தன்


VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 23, 2024, 9:26:24 PM7/23/24
to santhav...@googlegroups.com
மிக அருமை. அழகிய கற்பனைகள். இதுவரை வள்ளியம்மைக்குத் தாலாட்டுப் பாடல் பாடக் கேட்டதில்லை. 
..அனந்த்

>இன்னுமென*ச்* சிந்தனையே, -  ஒற்று மிகை இன்னுமென்ன சிந்தனையே என்று இருக்கலாம்
தினை*க்*காக்க - ஒற்று மிகை;  காக்க* பிறந்தவளே - ஒற்றுத் தேவை  

On Tue, Jul 23, 2024 at 8:31 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
ஸ்ரீவள்ளி தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

அல்லிமலர் தான்மலரும் அழகான மாலையிலே
மல்லிநிறை தொட்டிலிலே வந்துறங்கு வள்ளியம்மா 1

தரமான தந்தத்தில் தந்தைசெய்த தொட்டிலிலே
வரமாக வந்தவளே வந்துறங்கு வள்ளியம்மா 2

வள்ளிமலைக் காட்டினிலே வந்துதித்த கண்மணியே
பிள்ளைமதி வந்துதித்தான் பெண்ணரசி தாலேலோ 3


Subbaier Ramasami

unread,
Jul 23, 2024, 11:17:23 PM7/23/24
to santhav...@googlegroups.com
தாலாட்டு என்னும் தலைப்பிலேயே சந்தவசந்தத்திகல் கவியரங்கம் நடத்தியிருக்கிறோம்

கவிதை சிறப்பாக இருக்கிறது

இலந்தை

Subbaier Ramasami

unread,
Jul 23, 2024, 11:19:39 PM7/23/24
to santhav...@googlegroups.com
தாலாட்டு என்னும் தலைப்பில்க் இங்கே ஒரு கவியரங்கம் ஆசாத் தலைமையில் நடத்தியிருக்கிறோம்.   தாலேலோ என்னும் அனந்தின் பாடல் பிரசித்தம்.  அந்தக்கவியரங்கில் நான் அளித்த பாடல்

காலையிலே கமலையொலி தாலாட் டுத்தான்

            கரையாற்றின் சலசலப்பும் தாலாட் டுத்தான்

சோலையிலே குருவிகளின் கிசுகி சுப்பும்

            சுகங்கொடுக்கும் குயில்பாட்டும் தாலாட் டுத்தான்

சேலையிலே தூளிக்குள் உறங்கும் சேய்க்குத்

            தென்றலிசை பாடுவதும் தாலாட் டுத்தான்

மாலையிலே பேசாத கண்ண சைப்பில்

            வருமழைப்பின் அமுதயிசை தாலாட் டுத்தான்

 

களத்து மேட்டுக்குப் பக்கத்திலே ஒரு செல்வருடைய மாளிகை அந்த வீட்டிலே ஒரு குழந்தை.

அணிமணிகள்

போட்டு அழகாக நடை பயில்கிறதுஅதன் அருகேயுள்ள வேப்பமரத்தில் தூளிகட்டித் தன்குழந்தையைத்

தூங்கவைக்கிறாள் களத்து மேட்டில் வேலை செய்யும் ஒருதாய்.  தன் குழந்தைக்கு அணிமணிகள் இல்லையே

என்று

வருந்தினாலும் அவளே அணிமணிகளக் கற்பனை செய்து குழந்தையைச் சமாதானப் படுத்துகிறாள்)

கண்ணுறங்கு கண்ணுறங்கு

கண்மணியே கண்ணுறங்கு

வண்ண மருக்கொழுந்தே

மல்லிகையே கண்ணுறங்கு

 

வேப்ப மரக் காத்துப்பட்டா

வேறுவினை சேராது

காப்பா மகமாயி

கண்ணுறங்கு என்மகனே

 

பஞ்சு மெத்தை சூடாகும்

பாளம்பாளம் கொப்புளிக்கும்

எஞ்சாமி பஞ்சுமெத்தை

ஏதுக்கடா நம்மளுக்கு?

 

மஞ்சள்வெயில் தங்கமடா

மரகதமாம் பச்சையிலை

பிஞ்சுக் குழந்தே -உன்

பேர்கூட மாணிக்கம்

 

உன்பல்லு நல்முத்து

உன்னுதடு செம்பவளம்

என்னருமைப் பொன்மகனே

எனக்கேத்த வைரமணி

 

தெக்கேருந்து காத்துவரும்

சீராமன் சன்னதிக்கே

மொக்குமல்லி தான்வெடிக்கும்

மூக்கெல்லாம் தான்மணக்கும்

 

தூக்கம் கலைஞ்சுபுட்டா

சுத்துமுத்தும் நீபாரு

மூக்கு மரங்கொத்தி

முன்கிளையில் தான்கொத்தும்

 

காக்கா கதைசொல்லும்

கருங்குயிலி தான்பாடும்

நேக்கா அணிற்பிள்ளை

நின்னு பருப்பொடைக்கும்

 

பாலுனக்கு வேணுமின்னு

பாடுபடப் போறேண்டா

காலுதைச்சு நீயழுதா

கண்ணீர் வருகுதடா

 

நாலெழுத்து நீபடிச்சு

நஞ்சை புஞ்சை வாங்கோணம்

பால்குடுத்த ஆத்தாவுக்குப்

பட்டுச் சேலை எடுக்கோணம்

 

நீசிரிச்சா நான்சிரிப்பேன்

நீயழுதா நானழுவேன்

ஆசைவச்சேன் உன்மேலே

அழாவேணாம் கண்மணியே

 

ஆத்தாடி நேரமாச்சு

அழைக்குறாக பொம்பளைக

ஆத்தாநான் போய்வாரேன்

ஆம்பளைநீ கண்ணுறங்கு

                        (கண்ணுறங்கு..)


On Tue, Jul 23, 2024 at 7:31 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Jul 23, 2024, 11:24:09 PM7/23/24
to santhav...@googlegroups.com

ராகி  தாலாட்டு

ஆராத அமுதே என் அன்பே தாலேலோ
      அழகுமிகக் கொண்டவளே அரசி தாலேலோ
வாராகி வார்த்தாளி வரமே தாலேலோ
       வராகமுகி வராகமுகி வடிவே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
        வாழ்விக்க வந்தவளே மகவே தாலேலோ
கூரான தந்தங்கள்  கொண்டோய் தாலேலோ
        குலம்விளங்க வந்தவளே கோவே தாலேலோ

 அன்னைலலி தாம்பிகையின் செல்லம் தாலேலோ
       ஆயுதங்கள் கையெடுக்கும் அருளே தாலேலோ
மின்னுமொளி கண்களிலே கொண்டோய் தாலேலோ
       வேகமுடன் காலுதைக்கும் மின்னே தாலேலோ
சின்னதொரு தூளிக்குள் சேர்ந்தாய் தாலேலோ
       திரிலோகம் வளர்சக்தி பெற்றோய் தாலேலோ
முன்னொளிரும் நெற்றிக்கண் கொண்டோய் தாலேலோ
        முக்கண்ணி மோகினியே முத்தே தாலேலோ

ஆனைபலம் கொண்டவள்நீ ஆனாலும் கைக்குள்
       அடங்கியொரு குழந்தையென ஆனாய் தாலேலோ
சேனைநடத் திடுவதென  பொம்மைகளை யெல்லாம்
       செப்பமுடன் அணிவகுக்கும் திருவே தாலேலோ
வானமழும் மண்ணுமழும் வளரண்ட மெல்லாம்
       வருந்தியழும் நீயழுதால் அழவேண்டாம் கண்ணே
ஆனவிந்தை அண்டத்தைக் கிலுகிலுப்பை ஆக்கி
       ஆட்டுகிறேன் நீகேட்டு மகிழ்வாய் என் கண்ணே!

 பால்தருவேன் பழந்தருவேன் பரமே தாலேலோ
       பாரடியில் கிழங்கெடுத்துத் தருவேன் தாலேலோ
கோல்தருவேன் உலக்கையென வைத்துக்கொள் பெண்ணே
       கொடுங்கலப்பை வில்லம்பு நான்தருவேன்  கண்ணே

மேல்சுழலும் சக்கரமும் கதையோடு பூவும்
       விளையாட நான் தருவேன் ஆடிடுவாய் கண்ணே
கால்விரித்து நீபடுத்தால் துணிகிழிந்து போகும்
       கால்மடக்கிப் படுத்துக்கொள் என்செல்லப் பெண்ணே!

உன்விழிகள் சிவப்பதுமேன் என்னருமைக் கண்ணே
       ஓங்குசினம் கொள்ளுவதேன் வாராகிப் பெண்ணே
உன்கழுத்தில் போடுதற்கு  நவரத்ன மாலை
      உனக்காக அனுப்பியுளாள் லலிதாம்பா தேவி
என்னயிது வரம்கொடுப்ப தென்ன உன்றன் கையை
        இப்படிவைத் துள்ளாயோ
, என் தெய்வம் நீயே
என்னரசி என் தெய்வம் இதமே தாலேலோ
        எங்கள்குல நாயகியே இறையே தாலேலோ

 தாலேலோ  தாலேலோ ஓ தண்ட நாதா

தாலேலோ தாலேலோ நீயெல்லாம் தாதா!

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 24, 2024, 11:50:28 AM7/24/24
to சந்தவசந்தம்
யோகியர் ஐயா அவர்களுக்கும், தில்லைவேந்தன் ஐயா அவர்களுக்கும்,,
 அநந்த்  ஐயா அவர்களுக்கும் , இலந்தை ஐயா அவர்களுக்கும். நன்றி மலர்கள் பல!

அநந்த் ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றி ஒற்றுப்பிழை சுட்டிக்காட்டியதற்கு.
சில மாற்றங்களுடன்
 
ஸ்ரீவள்ளி தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

அல்லிமலர் தான்மலரும் அழகான மாலையிலே
மல்லிநிறை தொட்டிலிலே வந்துறங்கு வள்ளியம்மா 1

தரமான தந்தத்தில் தந்தைசெய்த தொட்டிலிலே
வரமாக வந்தவளே வந்துறங்கு வள்ளியம்மா 2

வள்ளிமலைக் காட்டினிலே வந்துதித்த கண்மணியே
பிள்ளைமதி வந்துதித்தான் பெண்ணரசி தாலேலோ 3

கனவினிலே வேலேந்தும் காங்கேய னைக்கண்டு
மனம்மகிழ வந்துறங்கு வள்ளியம்மா தாலேலோ 4

ஆராரோ ஆரிரரோ அழகான வள்ளியம்மா
ஆராரோ ஆரிரரோ ஆருயிரே தாலேலோ 5

சவ்வாது மணம்வீசும் சந்தனக் காட்டரசி
செவ்வாயில் பாலுண்டு செல்வமே வந்துறங்கு 6

நள்ளிரவில் கானகத்தில் நரியூளை இடும்முன்னே
வள்ளியம்மா வந்துறங்கு வான்நிலவே தாலேலோ 7

உனைக்காணத் தாரகைகள் ஒளியோடு வந்தனவே
தினைகாக்கப் பிறந்தவளே திருமகளே தாலேலோ 8

தேன்மிகுத்த மலர்சூடும் தெய்வம்நீ வள்ளயம்மா
மான்வயிற்றி லேபிறந்த மாமயிலே தாலேலோ 9

ஆராரோ ஆரிரரோ அழேல்அழேல் வள்ளியம்மா
ஆராரோ ஆரிரரோ ஆணிமுத்தே தாலேலோ 10 

இன்னுமென்ன சிந்தனையோ? இன்னமுதே வள்ளியம்மா 

Ram Ramakrishnan

unread,
Jul 24, 2024, 12:26:16 PM7/24/24
to santhav...@googlegroups.com
அருமையான தாலாட்டுப் பாடல் திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 23, 2024, at 20:31, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 24, 2024, 9:57:50 PM7/24/24
to சந்தவசந்தம்
2.ஸ்ரீ கணபதி தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

பாசமிக்க பார்வதியின் பாலகனாய் வந்தவனே
தேசமெங்கும் வீற்றிருக்கும் தெள்ளமுதே தாலேலோ 1

பங்கயனும் தங்கத்தால் பளபளக்கும் தொட்டிலினை
ஐங்கரனே உனக்களித்தான் அதிலுறங்கு தாலேலோ 2

சரவணனும் தொட்டிலினைத் தானாட்டித் தாலாட்டச்
சுரபிதரும் பாலுண்டு சுகமாக நீயுறங்கு 3

தொட்டிலிலே சந்திரனைத் தொட்டுவிளை யாடிடவே
கட்டிவைத்தோம் கணபதியே கண்ணுறங்கு தாலேலோ 4

ஆராரோ ஆரிரரோ ஆனைமுக கணபதியே 
ஆராரோ ஆரிரரோ ஆரமுதே தாலேலோ 5

காமனவ னைக்கண்ணால் காய்ந்தவனின் திருமகனே
மாமனவன் சக்கரத்தை மகிழ்ந்தளித்தான் தாலேலோ 6

நாமகளும் வீணையினை நயமாக மீட்டுகிறாள்
பூமகளும் ஆடுகிறாள் புண்ணியனே தாலேலோ 7

அழகாக ஔவையவள் அருந்தமிழில் பாடுகிறாள்
பழம்பெற்ற பாலகனே படுத்துறங்கு தாலேலோ 8

அருகம்புல் மாலையினை ஆவலுடன் அணிபவனே
தெருவெங்கும் வீற்றிருக்கும் தெய்வமே தாலேலோ 9

ஆராரோ ஆரிரரோ அத்திமுக நாயகனே 
ஆராரோ ஆரிரரோ ஆண்டவனே தாலேலோ 10

காலகண்டன் சடையினிலே கங்கைநதி சிந்துகிற 
கோலத்தைக் கண்டுறங்கு கோமானே தாலேலோ 11

காகமென உருமாறிக் கமண்டலத்தைக் கவிழ்த்தவனே
நாகமணி மாலையணி நவமணியே தாலேலோ 12

வள்ளியுடன் வேலவனை வந்திணைத்த கணபதியே 
வெள்ளெருக்கை அணிந்தவனே விநாயகனே தாலேலோ 13

வாரண வடிவுடைய வள்ளலே தாலேலோ
பாரத மேஎழுதும் பாலகனே தாலேலோ 14

ஆராரோ ஆரிரரோ அகிலத்தை ஆள்பவனே 
ஆராரோ ஆரிரரோ ஐங்கரனே தாலேலோ 15



On Wednesday, July 24, 2024 at 9:56:16 PM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
அருமையான தாலாட்டுப் பாடல் திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
நன்றி ஐயா 🙏 

ஸ்ரீவள்ளி தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

அல்லிமலர் தான்மலரும் அழகான மாலையிலே
மல்லிநிறை தொட்டிலிலே வந்துறங்கு வள்ளியம்மா 1

திரு. ராம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி 🙏 


Ramamoorthy Ramachandran

unread,
Jul 25, 2024, 9:46:18 AM7/25/24
to santhav...@googlegroups.com

சந்த வசந்தத்தின் சிறப்பே அதுதான்!  எல்லாரும் எல்லாப் பாட்டுக்களையும் எழுதுவார்கள்; ரசிபாபாராகள்;வாழ்க!


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 25, 2024, 10:30:07 AM7/25/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ ஐயப்பன் தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

முழுமதியும் முளைத்தானே முக்கண்ணன் திருமகனே
கழுத்தினிலே மணியணிந்த கண்மணியே தாலேலோ  1

பம்பைநதிக் கரையினிலே பாலகனாய்க் கிடைத்தவனே
செம்பவள மேனிகொண்ட சீராளா தாலேலோ  2

பந்தள அரசனுக்குப் பாசமிக்க பாலகனே 
கந்தனின் சோதரனே கண்மணியே தாலேலோ 3

தேவாதி தேவரெல்லாம் திரண்டுவந்து வான்மீதில்
பூவாரி இறைத்தனரே புண்ணியனே தாலேலோ 4
 
ஆராரோ ஆரிரரோ அரியரனின் திருமகனே
ஆராரோ ஆரிரோ ஐந்துமலை அதிபதியே 5

அழகான மோகினியின் அன்புமிக்க திருமகனே
குழலோசை கேட்டுறங்கு கோமானே தாலேலோ 6

கலியுகத்தின் தெய்வமெனக் காட்சிதரும் பரம்பொருளே
புலிதனிலே ஏறிவரும் பூபதியே தாலேலோ 7

சந்தன தொட்டிலினைத் தாயவளும் தாலாட்ட
தந்தையும் மனம்மகிந்தான் சாஸ்தாவே தாலேலோ 8

மலைசூழ்ந்த அழகான வயல்சூழ்ந்த வளம்மிக்க 
மலையாள தேசத்தின் மன்னவனே தாலேலோ 9 

ஆராரோ ஆரிரரோ அரவிந்த மலர்ப்பாதா
ஆராரோ ஆரிரரோ ஆருயிரே தாலேலோ 10

பாலமணி கண்டனே பாலுண்டு கண்வளராய்
நீலமயில் ஆடுவதை நீகண்டு கண்வளராய் 11

சேவலது கூவும்வரை செல்வமே கண்ணுறங்கு 
காவலுக்கு நானிருக்கேன் கண்ணுறங்கு தாலேலோ 12

துளசிமணி மாலையணி தூயவனே 
தாலேலோ
களபமணி மேனியனே கண்ணுறங்கு தாலேலோ 13

சிவசுதனே தாலேலோ சீக்கிரம்நீ கண்ணுறங்கு
பவளநிற இதழ்கொண்ட பாலகனே தாலேலோ 14

ஆராரோ ஆரிரரோ ஐங்கரனின் சோதரனே
ஆராரோ ஆரிரரோ ஐயப்பா தாலேலோ 15

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 26, 2024, 10:47:57 AM7/26/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சீதாதேவி தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

உழுகின்ற நிலத்தினிலே உதித்தவளே தாலேலோ 
பழுதில்லா மாமணியே பாலகியே தாலேலோ 1

தனங்களை வறியவர்க்குத் தாராள மாயீயும்
சனகனின் திருமகளே சானகியே தாலேலோ 2

மதிமுகம் கொண்டவளே மான்விழியே தாலேலோ
மிதிலையை ஆளவந்த மின்மினியே தாலேலோ 3

பெட்டியிலே கிடைத்தவளே பெண்ணரசி தாலேலோ
தொட்டிலிலே துயில்கொள்வாய் தூமணியே தாலேலோ 4

ஆராரோ ஆரிரரோ அழகான தேவதையே
ஆராரோ ஆரிரரோ அல்லிவிழி கொண்டவளே 5

உனக்கென வேபிறந்த உத்தம புத்திரனைக்
கனவிலே காண்பதற்குக் கண்ணுறங்கு கண்மணியே 6

கண்ணாலே இராமனைத்தான் காதலிக்க வந்தவளோ
மண்மீதில் வந்துதித்த மாமயிலே தாலேலோ 7

கண்ணிமைக்கா காலமொன்று காத்திருக்குப் 
பொன்மயிலே
கண்வளராய் இப்போது கண்மணியே தாலேலோ 8

சங்கீத இசைகேட்டுச் சானகியே கண்ணுறங்கு
மங்காத புகழ்கொண்ட மரிக்கொழுந்தே தாலேலோ 9

ஆராரோ ஆரிரரோ ஆனந்த ரூபினையே
ஆராரோ ஆரிரரோ ஆணிமுத்தே தாலேலோ 10

ஆழியிலே துயில்கொண்ட அரிமாயன் துணையிவளோ ?
ஆழியிலே கண்டெடுத்த ஆரமுதே தாலேலோ 11

சீர்சிறக்கும் மேனியளே சீதையே தாலேலோ
தார்சூடும் அழகான தாரகையே தாலேலோ 12

இராவணனை வதைத்தஎங்கள் எழில்மிக்க வில்லேந்தும் 
இராகவனை மணக்கவந்த இலக்குமிமே தாலேலோ 13

வெண்ணிலவு வந்துவிட்டான் வேல்விழியே தாலேலோ
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே தாலேலோ 14

ஆராரோ ஆரிரரோ ஆதிரையே தாலேலோ
ஆராரோ ஆரிரரோ அம்புஜமே தாலேலோ 15


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 27, 2024, 12:48:27 PM7/27/24
to சந்தவசந்தம்
5.ஸ்ரீ தெய்வானை தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

தேவேந்தி ரன்மகளே சீர்தெய்வ யானையளே 
மாவேழ மேவளரத்த மாமணியே தாலேலோ 1

பொன்னுலகி லேயுதித்த பூங்குயிலே தாலேலோ
குன்றதனில் கோவில்கொண்ட குலவிளக்கே தாலேலோ 2

அயிராவ தம்வளர்த்த அழகான தேவதையே
அயிலேந்தும் வேலவனின் ஆருயிரே தாலேலோ 3

இந்திர லோகத்தின் இளவரசி யானவளே
சுந்தர வடிவுடைய தாரகையே தாலேலோ 4

ஆராரோ ஆரிரரோ அஞ்சனமை இட்டவளே 
ஆராரோ ஆரிரரோ அமுதுண்டு கண்ணுறங்கு 5

சிந்தனை செய்யாமல் சீக்கிரமாய்க் கண்ணுறங்கு 
கந்தனை மணக்கவந்த கண்மணியே தாலேலோ 6

ஆனந்தத் தாண்டவத்தை அரியன்று நினைக்கையிலே
ஆனந்தக் கண்ணீரில் அவதரித்த திருமகளே 7

அமரரைக் காக்கவந்த அரனாரின் திருமகனாம்
குமரனை மணக்கவந்த கோகிலமே தாலேலோ 8

அற்புதத் திருவுருவே அமரேசன் புத்திரியே 
கற்பகச் சோலைவளர் கண்மணியே தாலேலோ 

ஆராரோ ஆரிரரோ அமரேசன் திருமகளே
ஆராரோ ஆரிரரோ அழியாத ஓவியமே 10



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 28, 2024, 4:00:06 AM7/28/24
to சந்தவசந்தம்
6) ஸ்ரீ அனுமன் தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

அஞ்சனை மணிவயிற்றில் அவதரித்த திருமகனே  
அஞ்சன மையிட்ட அனுமானே தாலேலோ 1

ஆயகலை அத்தனையும் ஆதவனின் முன்சென்று 
நேயமுடன் கற்றவனே நித்திலமே தாலேலோ 2

கிட்கிந்தை மேவிவளர் கேசரியின் திருமகனே
மட்டற்ற மகிழ்ச்சியுடன் மாருதியே கண்வளராய் 3

மார்கழி மூலத்தில் வந்துதித்த பாலகனே 
வார்முலைப் பாலுண்டு மாருதியே கண்ணுறங்கு 4

ஆராரோ ஆரிரரோ அச்சமிலா அனுமானே 
ஆராரோ ஆரிரரோ ஆண்டவனே தாலேலோ 5

ஆடியது போதுமன்பே அனுமானே தாலேலோ
தோடியிசை பாடுகிறேன் தொட்டிலிலே கண்வளராய் 6

ஆழ்கடலைத் தாண்டுகிற அனுமானே எங்களுக்கு 
வாழ்வளிக்க வந்தவனே மாருதியே தாலேலோ 7

பழம்நிறைய கொண்டுவந்தேன் பாலகனே கண்வளராய்
அழகுமணி மாலையணி அனுமானே தாலேலோ 8

இங்கீத மாய்ப்பேசும் இறைவனே கண்ணுறங்கு 
மங்காத புகழ்கொண்ட மாருதியே தாலேலோ 9

ஸ்ரீராம ஜெயராம ஸ்ரீராம மந்திரத்தைத்
சீராக வேஜெபிக்கும் சீராளா தாலேலோ 10

பம்பரமாய்ச் சுற்றிவரும் பாலகனே தாலேலோ 
அம்புலியே வந்துதித்தான் அனுமானே தாலேலோ 11

பாலினை யேபருகிப் பக்குவமாய்க் கண்வளராய்
வாலினில் மணியணிந்த மாருதியே தாலேலோ 12

வெற்றிலை மாலையினை விருப்பமுடன் அணிபவனே 
வெற்பினைத் தூக்கிவந்த வித்தகனே தாலேலோ 13

கனவிலே இராமனைநீ காண்பதற்குக் கண்ணுறங்கு 
வனத்திலே வாழுகின்ற மாருதியே தாலேலோ 14

ஆராரோ ஆரிரரோ அழகான சுந்தரனே 
ஆராரோ ஆரிரரோ அனுமானே தாலேலோ 15




தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 29, 2024, 5:07:07 AM7/29/24
to சந்தவசந்தம்
7) ஸ்ரீ திருஞானசம்பந்தர் தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 

திங்களவன் உதித்தானே திருஞான சம்பந்தா
மங்கலமாய் கண்ணுறங்கு மன்னவனே தாலேலோ 1

சைவநெறி தழைத்தோங்கத் தரணிக்கு வந்தவனே 
மெய்யுருகத் தமிழ்பாடும் வித்தகனே தாலேலோ 2

சிவனாரின் புகழ்பாடும் திருஞான சம்பந்தா
சிவபாத இருதயரின் செல்வனே தாலேலோ 3

ஆடுகிற சிவனாரை அழுதழுது தமிழாலே
தொடுடைய செவியனெனத் தொடுத்தாய்நீ முதற்பாடல் 4

இமைமூடிக் கண்வளராய் என்னுயிரே தாலேலோ
உமைதந்த முலைப்பாலை உண்டவனே தாலேலோ 5

பகவதியின் மணிவயிற்றில் பாலகனாய் உதித்தவனே 
அகம்மகிழ கவிபாடும் ஆரமுதே தாலேலோ 6

செந்தமிழில் சந்தமுடன் சிவபெருமான் சிறப்புகளைச்
தந்தவனே திருஞான சம்பந்தா தாலேலோ 7

பொற்றாளம் பெற்றவனே பொன்னவனே தாலேலோ
சற்றேனும் கண்வளராய் சம்பந்தா தாலேலோ 8

திருமுருகப் பெருமானின் திருவுருவைப் பெற்றவனோ ?
தருமமிகு காழிவளர் சம்பந்தா தாலேலோ 9

ஆராரோ ஆரிரரோ அழகான ஆண்மகனே
ஆராரோ ஆரிரரோ ஆணிமுத்தே தாலேலோ 10

ஆண்டவனைத் தமிழாலே அற்புதமாய்க் கவிபாடிப்
பாண்டியனின் நோய்தீர்த்த பாலகனே தாலேலோ 11

பனைகாய்க்கப் பதிகத்தைப் பாடியருள் புரிந்தவனே
உனைக்காவல் செய்கிறேன் உத்தமனே கண்வளராய் 12

ஆம்பலது கூம்பியதே அழகான மாலையிலே
சாம்பலையே பெண்ணாக்கும் சம்பந்தா தாலேலோ 13

அழுதுலகை வாழ்வித்த அருள்ஞான சம்பந்தா
புழுகொழுகு காழிவளர் புலவோனே தாலேலோ 14

ஆராரோ ஆரிரரோ ஆளுடைய பிள்ளையே
ஆராரோ ஆரிரரோ ஆருயிரே தாலேலோ 15


இமயவரம்பன்

unread,
Jul 29, 2024, 5:42:19 AM7/29/24
to santhav...@googlegroups.com

மிக அருமை!

….

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 29, 2024, 11:16:23 AM7/29/24
to சந்தவசந்தம்
திரு இமயவரம்பன் அவர்களுக்கு நன்றி 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 30, 2024, 12:24:16 PM7/30/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ ஆண்டாள் தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

ஆடியிலே பூரத்தில் அவதரித்த திருமகளே
பாடிடவே வந்தவளே பாலகியே தாலேலோ 1

துளசியின்கீழ் கிடந்தவளே தூயவளே தாலேலோ
பளபளக்கும் மேனியளே பைங்கிளியே தாலேலோ 2

விஷ்ணுசித்தன் கண்டெடத்த மின்மினியே தாலேலோ
விஷ்ணுபிரான் கரம்பிடித்த விளக்கொளியே தாலேலோ 3

நேயமுடன் நோன்பிருந்து நீராடித் துதிபாடி
மாயவனை மணம்புரிய வந்தவளே தாலேலோ 4

ஆராரோ ஆரிரரோ ஆழ்வாரின் திருமகளே 
ஆராரோ ஆரிரரோ ஆண்டாளே தாலேலோ 5

கோதையெனப் பெயரிட்டுக் கொண்டாடி வளர்த்துவந்த 
தாதையிடம் கல்விகற்ற தாரகையே தாலேலோ 6

மனத்திலே நினைத்துறங்கு மாதவனைக் கேசவனை
கனவிலே கண்ணனைநீ காண்பதற்குக் கண்ணுறங்கு 7

சிங்காரக் கொண்டைகொண்ட சித்திரமே தாலேலோ 
மங்காத புகழ்கொண்ட மாணிக்கமே தாலேலோ 8

கரத்திலே கிளியேந்தும் கண்மணியே தலேலோ
சிரத்திலே பூச்சூடும் செண்பகமே தாலேலோ 9
 
ஆராரோ ஆரிரரோ அன்றலர்ந்த புதுமலரே
ஆராரோ ஆரிரரோ ஆண்டாளே தாலேலோ 10

மாலையினைச் சூடியபின் மாதவனுக் களித்தவளே
மாலையிலே மதியுதித்தான் மான்விழியே தாலேலோ 11

உலகளந்த உத்தமனை உளமார வேநினைத்து
மலர்நிறைந்த தொட்டிலுறை மாமணியே தாலேலோ 12

வில்லிப்புத்தூர் மேவிவளர் விஷ்ணுசித்தன் திருமகளே
மல்லிகைப்பூ மாலையிட்ட மாங்குயிலே தாலேலோ 13

தித்திக்கும் தெள்ளமுதாய்த் திருப்பாவை தந்தவளே
முத்துப்பல் கொண்டவளே முக்கனியே தாலேலோ 14

ஆராரோ ஆரிரரோ அலங்காரப் பொன்மயிலே
ஆராரோ ஆரிரரோ ஆண்டாளே தாலேலோ 15 


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Sep 12, 2024, 4:38:58 AM9/12/24
to சந்தவசந்தம்
9) மீனாட்சி அம்மன் தாலாட்டு 

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

மூண்டெழுந்த அக்கினியில்
   முளைத்தெழுந்து வந்தவளே
பாண்டியரின் குலவிளக்கே 
   பாலகியே  தாலேலோ (1)

தேமதுர மொழிபேசும்
    தேவதையே தாலேலோ
மாமதுரை யாளவந்த
    மாமயிலே தாலேலோ (2)

மலையத்து வசனுக்கு 
  மகளெனவே வந்தவளே
கலைமதுரை யாளவந்த 
   கயற்கண்ணே தாலேலோ (3)

தாரகைகள் சூழ்ந்திருக்க 
     தண்மதியும்  வந்தானே 
வீரமிக்க மதுரைவளர்
      மீனாட்சி தாலேலோ (4)

ஆராரோ ஆரிரரோ அழகான மீனாட்சி 
ஆராரோ ஆரிரரோ ஆருயிரே தாலேலோ(5)

காஞ்சியில் தவமிருந்த
  கண்மணியே தாலேலோ
காஞ்சன மாலைபெற்ற
  கயற்கண்ணே தாலேலோ (6)

நவரத்ன தொட்டியுறை
   நாயகியே தாலேலோ
புவனத்தைக் காக்கவந்த
  பொற்கொடியே தாலேலோ(7)

ஈசனையே மணம்புரிய 
   இவ்வுலகில் பிறந்தவளே 
வாசமலர் அணிந்தவளே 
    மாதுமையே தாலேலோ (8)

தமிழ்வளர்த்த மதுரைவளர்
    தடாதகையே தாலேலோ
அமிர்தமென வந்துதித்த 
    அம்பிகையே தாலேலோ (9)

ஆராரோ ஆரிரரோ அங்கயற் கண்ணியம்மா
ஆராரோ ஆரிரரோ ஆரமுதே தாலேலோ (10)

அழகருக்குத் தங்கையென 
    அவதரித்த மீனாட்சி 
மழலைமொழி நவில்பவளே
  மரகதமே தாலேலோ (11)

வெண்ணிலவு வந்துதித்தான் 
    மீனாட்சி தாலேலோ
கண்ணுறங்கு கண்மணியே 
    கயற்கண்ணே தாலேலோ (12)

வீணையிசை கேட்டபடி
   மீனாட்சி கண்வளராய் 
ஆணையிட வந்தவளே 
   அம்பிகையே தாலேலோ (13)

சொக்கேசப் பெருமானைத்
  துணையாகப் பெறவேண்டி
முக்கூடல் பதிவந்த
    முழுநிலவே தாலேலோ (14)
    
ஆராரோ ஆரிரரோ அழகான மீனாட்சி 
ஆராரோ ஆரிரரோ   அம்பிகையே தாலேலோ (15)


Kaviyogi Vedham

unread,
Sep 12, 2024, 11:54:06 AM9/12/24
to santhav...@googlegroups.com
அருமை. நல்ல  சந்தப்பாட்டு. கையில்   கோலாட்டக்கோல்  இருப்பின்  அடித்து  விளையாடி இருப்பேன்,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 12, 2024, 12:09:10 PM9/12/24
to santhav...@googlegroups.com

தாலாட்டு எல்லாரும் விரும்புவது. அருமை!


Ram Ramakrishnan

unread,
Sep 12, 2024, 12:52:37 PM9/12/24
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. தங்கவேல்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 12, 2024, at 12:09, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Sep 14, 2024, 4:38:31 AM9/14/24
to சந்தவசந்தம்
மதிப்பிற்குரிய யோகியர்,  புலவர் திருச்சி இரா இராமமூர்த்தி மற்றும் திரு ராம் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி மலர்கள் பல 💐💐💐

On Thursday, September 12, 2024 at 10:22:37 PM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
மிக அருமை, திரு. தங்கவேல்.


..

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Sep 16, 2024, 12:55:19 PM9/16/24
to சந்தவசந்தம்
10) ஸ்ரீ முருகன் தாலாட்டு 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

ஆதிசிவன் பெற்றெடுத்த 
     ஆறுமுகப் பெருமானே
சோதிவடி வானவனே 
     சுந்தரனே தாலேலோ (1)

கார்த்திகையர் பாலமுதை
    கனிவாயால் உண்டவனே 
 பார்த்திபனே மயிலேறும் 
    பாலகனே தாலேலோ (2)

வேலோடு விளையாடும் 
  வேந்தனே தாலேலோ 
மாலோனின் மனங்கவர்ந்த 
   மருமகனே தாலேலோ (3)

 பார்வதியின் திருமகனே 
     பாலகுகா தாலேலோ 
 ஏர்மருவு தண்டையணி
     இளையோனே தாலேலோ (4)

ஆராரோ ஆரிரரோ அழகான முருகோனே 
ஆராரோ ஆரிரரோ அயிலோனே தாலேலோ (5)

வள்ளியை மணம்புரிய 
   வந்தவனே தாலேலோ
புள்ளிமா மயிலேறும் 
     பூபதியே தாலேலோ (6)

தேவரிடர் தீர்க்கவந்த
   தெய்வமே தாலேலோ
 நாவலரின் குலங்காக்கும்
    நாயகனே தாலேலோ(7)

திருப்புகழைக் கேட்டபடி 
   சேயோனே கண்வளராய் 
குருபரனே சண்முகனே 
    குழந்தையே தாலேலோ (8)

அருணகிரிக் கருள்புரிந்த
    ஐயனே தாலேலோ
 திருமுருகப் பெருமானே
    சிவசுதனே தாலேலோ (9)

ஆராரோ ஆரிரரோ அம்பிகையின் திருமகனே 
ஆராரோ ஆரிரரோ ஆரமுதே தாலேலோ (10)

வைகாசி விசாகத்தில்
    வந்துதித்த வேலவனே 
தைமாதப் பூசத்தின் 
  தலைவனே தாலேலோ (11)

கடப்பமலர் மாலையினைக் 
    கழுத்தினிலே அணிந்தவனே 
குடமுனிக்குத் தமிழுரைத்த
    குருமணியே தாலேலோ (12)

கயிலாச பதியாரின்
   கண்மணியே தாலேலோ 
மயிலேறி விளையாடும் 
   மன்னவனே தாலேலோ (13)

கணநாதன் உனக்களித்த 
  கண்கவரும் தொட்டிலிலே 
 குணசீலா கண்வளராய் 
    குருபரனே தாலேலோ (14)
    
ஆராரோ ஆரிரரோ அடியாரின் ஆருயிரே 
ஆராரோ ஆரிரரோ அரிமருகா தாலேலோ (15)

Kaviyogi Vedham

unread,
Sep 16, 2024, 12:59:00 PM9/16/24
to santhav...@googlegroups.com
அபாரம்,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 16, 2024, 1:06:23 PM9/16/24
to santhav...@googlegroups.com

மிக அருமை!

- இமயவரம்பன்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Sep 17, 2024, 4:02:05 AM9/17/24
to சந்தவசந்தம்
யோகியார் அவர்களுக்கும், இமயவரம்பன் அவர்களுக்கும் நன்றி மலர்கள் பல 💐💐💐

சிவசதீஷ் குமார்.ர

unread,
Sep 18, 2024, 8:03:51 AM9/18/24
to santhav...@googlegroups.com

ThAlAttu arumai anna...


On Tue, 17 Sep, 2024, 1:32 pm தங்கவேல் காஞ்சிபுரம், <k.thanga...@gmail.com> wrote:
யோகியார் அவர்களுக்கும், இமயவரம்பன் அவர்களுக்கும் நன்றி மலர்கள் பல 💐💐💐

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 19, 2025, 6:58:49 PM2/19/25
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 
நான்காம் பாடலில் மாற்றம் செய்யவிழைகிறேன்.


ஆடுகிற சிவனாரை அழுதழுது தமிழாலே
தோடுடைய செவியனெனத் தொடுத்தவனே தாலேலோ 4

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jul 17, 2025, 12:58:30 AM7/17/25
to சந்தவசந்தம்
11) அலமேலுமங்கை ( அலர்மேல் மங்கை) தாலாட்டு 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  ( காய் காய் காய் மா அரையடிக்கு )

அலமேலு மங்கையே மகவே தாலேலோ
    ஆகாச ராஜனின் வாழ்வே தாலேலோ 
குலங்காக்க வந்தவளே கோவே தாலேலோ 
    குங்குமப் பொட்டிட்ட மணியே தாலேலோ 
நிலமீது கண்டெடுத்த நிலவே தாலேலோ 
   நித்திலமே நித்திரைநீ கொள்வாய் தாலேலோ
அலங்கார நாயகியே அருளே தாலேலோ
  ஆராத அமுதேஎன் அன்பே தாலேலோ

 திருச்சானூர் மேவிவளர் திருவே தாலேலோ 
   தித்திக்கும் கற்கண்டே தேனே தாலேலோ
திருமாலை மணக்கவந்த பெண்ணே தாலேலோ
   செல்வத்தை அளிக்கவந்த சேயே தாலேலோ 
கருவானில் தாரகைகள் மின்னியது பெண்ணே 
  கதைசொல்வேன் கண்வளராய் கண்ணான கண்ணே
பெருவாழ்வைத் தரவந்த பெண்ணே தாலேலோ 
    புன்னகைக்கும் பொற்கொடியே பூவே தாலேலோ

சிங்கார சித்திரமே இறையே தாலேலோ
    சிணுங்கிஅழ லாமோஎன் சேயே தாலேலோ
அங்கேபார் அம்புலிதான் வந்தானே பெண்ணே 
  அழவேண்டாம் அழவேண்டாம் என்னருமைக் கண்ணே
தங்கப்பொற் றாமரையில் வந்தோய் தாலேலோ
    தாலாட்டு பாடுகிறேன் கண்வளராய் கண்ணே
மங்காத புகழ்கொண்ட மலையப்பன் மார்பில் 
    மன்னிய மங்கையே மயிலே தாலேலோ

 ஆராரோ ஆரரிரோ பொன்னே தாலேலோ
  அல்லிவிழி கொண்டவளே மணியே தாலேலோ
ஆராரோ ஆரரிரோ அன்பே   தாலேலோ
    அஞ்சன மையிட்ட அழகே தாலேலோ
ஆராரோ ஆரரிரோ கண்ணே தாலேலோ
     அழகான அலைமகளே கனியே தாலேலோ
ஆராரோ ஆரரிரோ முத்தே தாலேலோ
     அலர்மேல் மங்கையே மணியே தாலேலோ

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 14, 2025, 5:23:11 AM8/14/25
to சந்தவசந்தம்
தாலாட்டு இசை தொகுப்பை ( audio only) இணைத்துள்ளேன். 
இதில் இலந்தை ஐயாவின் வராகி தாலாட்டும் உள்ளது. 
வெகு விரைவில் வீடியோவாகவும் வெளிவர உள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரானிசையில்
https://youtube.com/playlist?list=OLAK5uy_n0AjgA3WwBf6xQc2BVdogVYy55NasCKWM&si=00mZWkuIXP2QBof7

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 27, 2025, 9:24:40 AM8/27/25
to சந்தவசந்தம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட 
விநாயகர் தாலாட்டு 

Arasi Palaniappan

unread,
Aug 27, 2025, 12:14:00 PM8/27/25
to சந்தவசந்தம்
சிறப்பு தம்பி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 29, 2025, 7:38:18 PM8/29/25
to சந்தவசந்தம்
அற்புதமான ஜிப்ரான் இசையில் அனுமன் தாலாட்டு 
https://youtu.be/QyiwfO0moXs?si=S0SZTiTWICs8ifri

On Wednesday, August 27, 2025 at 9:44:00 PM UTC+5:30 Arasi Palaniappan wrote:
சிறப்பு தம்பி!

நன்றி ஐயா 
Reply all
Reply to author
Forward
0 new messages