தவழ்ந்து வந்த தண்முகில் - கண்ணன் துதி
(எழுசீர்ச் சந்த விருத்தம்)
சஞ்ச லத்தை வெல்ல லாகும் அஞ்சல் அஞ்சல் என்பபோல்
சஞ்ச லஞ்சல் என்று காற்ச தங்கை கள்மு ழங்கிட
மஞ்சின் அன்ன வண்ணன் மாத வன்ற வழ்ந்து வந்தனன்
மஞ்ச னைத்தொ டர்ந்த மாதர் நெஞ்செ லா(ம்)ம யங்கவே.
பதம் பிரித்து:
‘சஞ்சலத்தை வெல்ல லாகும், அஞ்சல்! அஞ்சல்!’ என்ப போல்,
‘சஞ்சலஞ்சல்’ என்று கால் சதங்கைகள் முழங்கிட,
மஞ்சின் அன்ன வண்ணன் மாதவன் தவழ்ந்து வந்தனன்,
மஞ்சனைத் தொடர்ந்த மாதர் நெஞ்சு எலாம் மயங்கவே.
சொற்பொருள்:
‘அஞ்சல்! அஞ்சல்!’ என்பபோல் = ‘அஞ்சவேண்டாம் அஞ்சவேண்டாம்’ என்று சொல்லி அன்பர்களுக்கு அபயம் அருள்பவை போல்;
‘சஞ்சலஞ்சல்’ என்று = ‘சஞ்சலஞ்சல்’ என்னும் ஓசையுடன்;
மஞ்சின் அன்ன = மேகத்தைப் போன்ற
மஞ்சனை = மைந்தனை
கருத்து:
‘சஞ்சலங்களை எல்லாம் வெல்லக்கூடிய வலிமை உங்களுக்கு வாய்க்கும் ; (எனவே) அஞ்சவேண்டாம் அஞ்சவேண்டாம்’ என்று சொல்வன போல் ‘சஞ்சலஞ்சல்’ என்னும் ஓசையுடன் கால் சதங்கைகள் ஒலிக்க, அவ்விசையினாலும் எழிலாலும் ஈர்க்கப்பட்ட மாதர்கள் அவனைப் பின்தொடர, மாதவன் தவழ்ந்து வந்தான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7941B076-785B-4017-8E98-630334AC5790%40gmail.com.
On 18 Nov 2025, at 7:01 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
On Nov 17, 2025, at 9:36 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமை, திரு. இமயவரம்பன்.
--