. கூத்துப் பார்க்கப் போய்த் தூங்கியவன்
(ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையின் கருத்தையொட்டி எழுதிய கவிதை)
கூத்துப் பார்க்கப் பாயெடுத்துக்
கொண்டு போனான் ஒருமனிதன்.
காத்துப் பார்த்தும் தொடங்கவில்லை
கட்டாந் தரையில் பாய்விரித்தான்.
சேர்த்து விழிகள் தூங்கிவிட்டான்
தெளிந்து தூக்கம் விழித்துப்பின்
பார்த்தான் கூத்து முடிந்ததெனப்
பாயைச் சுருட்டி இல்சென்றான்
பிறப்பெ டுத்தும் வாழ்வுதரும்
பெரிய அரிய அனுபவங்கள்
சிறப்பாய் வாழ்ந்து பெறாதுசிலர்
சிக்கிக் கொண்டு மறுபிறவி
இறப்பின் பின்னர் எடுப்பபார்கள்
இவர்கள் கூத்தில் துயின்றவர்கள்.
குறிப்பாய்ச் சொன்னால் வினைப்பயன்தான்
கொண்டு சென்ற பாயாகும்!
(வினைப்பயன்— கர்மா)
—தில்லைவேந்தன்.
...